-
தனது முகநூலில், நம் இதய தெய்வம் பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவர் அவர்களை, அவரது பிறந்த நாளில் போற்றி மகிழ்ந்த ஹிந்தி பிரபல நடிகர் திரு. அமிதாப் பச்சன் அவர்களை பெருமைப்படுத்தும் விதத்தில், கீழ்கண்ட புகைப்படத்தை பதிவிடுவதில் பெருமிதம் கொள்கிறேன்.
http://i61.tinypic.com/fyepaw.jpg
-
கல்லூரி விழாவொன்றில் , மாணவ சமுதாயத்துடன், மாசிலா மன்னவன் நம் மக்கள் திலகம்
http://i61.tinypic.com/qyzgk3.jpg
-
-
"அன்பே வா " படப்பிடிப்பில், சிம்லா மக்கள் நம் எழில் வேந்தன் அவர்களை ஏக்கத்துடன் பார்க்கும் காட்சி :
http://i62.tinypic.com/33madtl.jpg
-
கர்நாடக மாநிலம் - பெங்களூர் நகர திரையரங்கு ஒன்றில், நம் ஒப்பற்ற தலைவரின் ஒய்யார தோற்றம் :
http://i59.tinypic.com/24d0mt1.jpg
-
-
தனக்கென்று ஒரு கொள்கை இருந்தாலும், தமிழக மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு, அண்டை மாநில முதல்வர்களுடன் சுமுக உறவு கொண்டதின் பலனாக, நாட்டு மக்களின் வாட்டம் போக்கிட்ட பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்கள், கேரளா முன்னாள் முதல்வர் கே. கருணாகரன் அவர்களுடன் :
http://i61.tinypic.com/2cdy71i.jpg
-
என்னுடைய 4000 பதிவுகளுக்காக வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கு கோடி நன்றி
Quote:
Originally Posted by
puratchi nadigar mgr
-
சாலிவாகனன் படத்தின் கதாநாயகன் ரஞ்சன் , விக்ரமாதித்யன் வேடம் எம்.ஜி.ஆருக்கு.
எம்.ஜி.ஆருக்கும் ரஞ்சனுக்கும் கத்திச்சண்டை நடப்பதாக
படப்பிடிப்பு.ரஞ்சன் கதாநாயகன் என்பதால் காட்சிப்படி ரஞ்சன் கை ஓங்கி இருக்க வேண்டும் . ஆனால் எம்.ஜி.ஆரின் கத்தி வீச்சு வேகமாக இருந்தது.
ரஞ்சனால் எம்.ஜி.ஆருக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. ஆத்திரமுற்ற ரஞ்சன் இயக்குநர் பி.என்.ராவிடம் புகார் செய்தார். எம்.ஜி.ஆரை கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொன்னார்கள்,
மனம் நொந்து போன எம்.ஜி.ஆர் சின்னப்பாதேவரிடம் " நம் உண்மையான திறமையை எப்படித்தான் வெளிப்படுத்துவது
? " என்று கூறிய போது தேவர் " உங்கள் திறமையை இந்த உலகம் அறிந்து வியந்து பாராட்டும் நாள் வரத்தான் போகிறது , கலக்கம் அடையாதீர்கள் என்று சமாதானம் செய்திருக்கிறார்.
0
ஜூபிடர் பிக்சர்ஸில் தேவரும் எம்.ஜி.ஆரும் மாத சம்பளத்திற்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்நேரம் ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிக்க இருந்த ராஜகுமாரி படத்தில் பி.யூ. சின்னப்பா , டி.ஆர் ராஜகுமாரி தான்
முதலில் நடிப்பதாய் இருந்தது. குறைந்த பட்ஜெட்டில் எடுத்து விடலாம் எனஎண்ணிய இயக்குநர் எஸ்.ஏ.சாமி , ஸ்ரீமுருகன் படத்தில் எம்.ஜி.ஆரும், மாலதியும் பரமசிவன் பார்வதியாக நடித்ததைக் கண்டு அவர்கள் இருவரையுமே நடிக்கவைத்தார். படத்திற்கு கதை வசனம் கலைஞர்.
கதைப்படி ஒரு மகாராணியின் மெய்க்காப்பளனிடம் ,கதாநாயகன் சண்டையிட்டு ஜெயிக்க வேண்டும். ஸ்டண்ட சோமு பிரபல கமால்தீன் பயில்வானை மெய்க்காப்பளனாக நடிக்க வைக்க விரும்பினார் .
ஆனால் எம்.ஜி.ஆரோ இயக்குநரிடம் , " தேவரை மனதில் வைத்து நமது கம்பெனியிலேயே இதற்கு பொருத்தமான நடிகர் இருக்கிறாரே , வெளியிலிருந்து ஏன் அழைக்க வேண்டும் " எனக் கேட்டிருக்கிறார்.
உடனே சாமி " தேவர் மாதச்சம்பளம் வாங்கும் நடிகர் , பிரபலமானவரைப் போட்டால் தான் நன்றாக இருக்கும் " என கூறியிருக்கிறார் சாமி.
உடனே எம்.ஜி.ஆர் " சின்னப்பாவின் திறமை உங்களுக்குத் தெரியவில்லை , நன்றாக சண்டை போடுவார் " என பிடிவாதமாகக் கூறியிருக்கிறார்.
உடனே சோமு " நீங்கள் கதாநாயகனாக நடிப்பது இதுதான் முதல் படம் , உங்களுடன் சண்டை போடுபவரும் பிரபலாமனவராக இருந்தால் தானே நன்றாக இருக்கும் " எனக்
கூறியிருக்கிறார்.
இதில் சின்னப்ப தேவர் நடிக்கவில்லையென்றால் இந்த சண்டைக் காட்சியே வேண்டாம் என உறுதியாகக் கூறி தனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த சின்னப்பாவையே அந்த வேடத்தில் நடிக்க வைத்தார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆருக்கும் தேவருக்கும் அப்படி ஒரு நட்பு !
பின்னாளில் தேவர் திரைப்படத் தயாரிப்பாளராகி எம்.ஜி.ஆரை நடிக்க வைத்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்தார்.
-
தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு சென்று, அன்னை ஜானகியுடன் அஞ்சலி செலுத்தும் அற்புத நாயகன் எம். ஜி. ஆர்.
http://i59.tinypic.com/30az6mx.jpg