நன்றி. இந்த ஒரு வரிக்காகவே படத்தை பாத்தேன். கமலஹாசன் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய காட்சி.
- அது மட்டும் இல்லாமல் Hollywood photo studio வில் ஒவ்வொரு முறை முனிஸ்காந்த் வரும்பொழுதும் அவருக்கு பின் தெரிவது கமலின் பெரிய size சிகப்பு ரோஜாக்கள் still.
- ஆரம்ப காட்சியில் கமல் படம் வெளியீடு என்று சொல்லாமல் "தலைவர்" படம் என்று சொல்வது அற்புதம்.
- தியேட்டரில் "இளமை இதோ இதோ" பாடலின் பொழுது விசில், அலப்பரை
மற்றபடி படம் ஓரளவுக்கு நன்றாக இருந்தது. ஒரு ஹீரோ, அவருடன் வலுக்கட்டாயமாக வந்து மாட்டிகொள்ளும் நண்பன், காதல், முறை மாமன் என்று பல முறை பார்த்த கதை தான். காதல் கட்சிகள், பாடல்கள் அனாவசியம். குறும்படத்தை முழு நீள படம் ஆக்குவதற்காக இவை அனைத்தையும் சேர்த்திருக்கிறார்கள். ஒரு அரை மணி நேரம் சுருக்கி இருக்கலாம்.
முனிஸ்காந்த் - ஆரம்பத்தில் மொக்கை போடுவாரோ என்று பயந்தேன் ஆனால் படத்தில் Highlight இவர்தான். இரண்டு வேடங்களில் கலக்கியிருக்கிறார்.
படத்தை 1982 கதையாக படமாகியிருக்கிரார்கள். சகல கலா வல்லவன் ரிலீஸ், Bell bottoms pant, அடர்த்தியான முடி, மீசை போன்ற வழக்கமானவற்றை தவிர 1980 களில் நடந்த வேறு எந்த சம்பவமும் சொல்லப்படுவதோ காட்டப்படுவதோ இல்லை. ரொம்பவும் Safe ஆகா தான் படம் எடுத்திருக்கிறார்கள்.
ஆனந்தராஜிற்கு பெருசாக காமெடி வராது என்றாலும் பூனை ஜாமீன் காட்சிகள் நன்றாக அமைந்துள்ளது.
ஆனால் சாமியார்-மீசைக்காரர் sequences ultimate!