Originally Posted by
esvee
இனிய நண்பர் திரு பம்மலார் சார்
''மலைக்கள்ளன்''- படம் சென்னை நகர காசினோ-பிரபாத் - சரஸ்வதி அரங்குகளில் ஓடிய நாட்கள் குறித்து விரிவான பதிவுகள் செய்த உங்களுக்கு பாராட்டுக்கள் .
மலைக்கள்ளன் படத்தில் பெற்ற இடம் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் என்ற பாடல் நேற்றும் - இன்றும் - நாளையும் எல்லோருக்கும் என்றும் பொருந்தும் காவிய பாடல் .
கணவன் படத்தில் இடம் பெற்ற ''உண்மையின் சிரிப்பை ''
பாடல் மிகவும் அருமை .
இதயக்கனியில் மக்கள் திலகம் பாடும் பாடலில்
காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன்
காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே
உலகில்
பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே
அமைதி நிலவுமே- என்ற இந்த வைர
வரிகளுக்கு உங்கள் பதிவுகள் மூலம் மனமகிழ்வு நிலவும் என்று நம்புகிறேன் .