திரைப்படம் மேனகா, நடிகை மேனகா என்று அந்த இந்திரலோகமே இங்கு வந்தது போலவே உணர்ச்சி கொடுத்துட்டீங்க...
பெண்ணே நீ வாழ்க படத்தின் கதை கொஞ்சம் வித்தியாசமானது. கல்லூரியில் ஒன்றாகப் படித்த ஜெய்சங்கர் வீட்டுக்கு குழந்தையுடன் வரும் விஜயா அது அந்த வீட்டின் வாரிசு என்று சத்தியம் செய்ய ஜெய்சங்கரோ தான் தவறே செய்ய்வில்லை என்று வாதாடுவார்.
பல விஷயங்களில் சான்றை நிரூபிக்கும் விஜயா வீட்டோடு தங்க வைக்கபட்டு இறுதியில் உண்மை வெளியாகிறது. அதாவது ஜெய்சங்கரின் அண்ணனால் ஏமாற்றப்பட்ட விஜயாவின் அக்காவுடைய குழந்தைதான் அது என்பது.
இப்போது பாடல் வரிகளை மீண்டும் கவனித்தால் இருவரது வார்த்தைகளுக்கும் அர்த்தம் நன்றாகவே புரியும். தாங்க்ஸ் வாசுதேவன் ஜி !

