நினைத்தேன் இன்னும் போட வில்லையே என்று. உங்களுடைய அபிமானப் பாடலாயிற்றே! எத்தனை முறை செல்லில் இப்பாடலைப் பற்றி பேசி மகிழ்ந்திருப்போம். நன்றி வினோத் சார்.
Printable View
இன்றைய ஸ்பெஷல் (46)
மிக மிக அருமையான பாடல். இதுவும் மறக்கடிக்கப்பட்ட பாடல்தான். முற்றிலுமாகவே.
'மேஜர் சந்திரகாந்த்' திரைப்படத்தில் சுசீலா அவர்களின் 'கணீர்'க் குரலில் இளநுங்கு தொண்டையில் இலகுவாக இறங்குவதைப் போல மனதிலே இறங்கிக் குடிகொள்ளும் பாட்டு.
http://www.inbaminge.com/t/m/Major%2...andrakanth.jpg
'கல்யாண சாப்பாடு போடவா'
'ஒரு நாள் யாரோ'
'நேற்று நீ சின்னப் பப்பா'
என்று எல்லாப் பாடல்களும் மெகா ஹிட் அடிக்க, இந்தப் பாடல் அடிபட்டுப் போனது.
கல்லூரியில் படிக்கும் தன் தங்கை ஒரு கலை நிகழ்ச்சியில் நாட்டியமாடுகிறாள் என்று தெரிந்து அந்த நடனத்தைக் கண்டு களிக்கச் செல்கிறான் அவளுடைய தையல்கார அண்ணன். தங்கை நடனமாடி மற்றவர்கள் அவளைப் புகழ்வதைக் கேட்க அவ்வளவு ஆசை அவனுக்கு.
விழா தொடங்கி தங்கை நடனமாடி பாடத் துவங்குகிறாள். அந்த அரங்கத்தையே சுற்றி சுற்றி பெருமை பூரிக்க தன் தங்கையின் ஆட்டத்தை எல்லோரும் எப்படி ரசிக்கிறார்கள் என்று கவனிக்கிறான். ஆனால் அவன் எதிர்பாராதது நடக்கிறது. தங்கை சற்றே அரைகுறை ஆடையுடன் கலை நிகழ்ச்சியில் ஆட, பார்வையாளர்கள் முகம் சுளித்து அவளை மட்டமாக விமர்சனம் செய்கிறார்கள். அண்ணன் அதைக் கண்டு அளவு கடந்த வேதனை அடைகிறான்.
அந்த பருவக் குமரியோ எதைப் பற்றியும் கவலைப்படமால் மகிழ்ச்சியாக உள்ளம் பூரிக்க ஆடிப் பாடுகிறாள்.
டெய்லர் அண்ணன் நாகேஷ். நடனமாடும் அவர் தங்கை அழகுப் பதுமையாக ஜெயலலிதா.
மிக மிக என் உள்ளம் கவர்ந்த பாடல். வானொலியிலோ, அல்லது தொலைக்காட்சியிலோ போடப்படுவதே இல்லை.
ஜப்பான் நங்கை போலவும், சர்க்கஸ் சுந்தரி போலவும் (இதே போல 'குமரிக் கோட்டம்' படத்தில் 'நாம் ஒருவரையொருவர்' பாடலில் வருவார்) ஆடி ஜெயா மேடம் அசத்துகிறார்.
நாகேஷின் முகத்தில்தான் எத்தனை ஆனந்தம் தன் தங்கை ஜெயா ஆடுவதைப் பார்க்கும் போது! அப்படியே அது சோகமாக மாறும் போதும் அற்புதம்.
'மெல்லிசை மாமணி' வி.குமார் அற்புதமாக உழைத்திருப்பார் இப்பாடலில். படம் முழுக்கவும்தான்.
https://i.ytimg.com/vi/jIHt5NO8duQ/hqdefault.jpg
நானே பனி நிலவு
வருவேன் பல இரவு
நானே பனி நிலவு
வருவேன் பல இரவு
காணக் கண் கோடி வேண்டும்
கன்னிக் கனியல்லவோ
பாடக் கவி நூறு தோன்றும்
மாது மதுவல்லவோ
நானே பனி நிலவு
வருவேன் பல இரவு
ஓஹ்ஹஹ்ஹோஹொஹோஹோ
ஓஹ்ஹஹ்ஹோஹோஹோ (கோரஸ் அருமை)
பட்டுப் பூச்சி போல் சிட்டு மேனியாள்
வட்டம் போடுவாள் பார்
சொட்டும் தேனைப் போல் மொட்டு மாங்கனி
தொட்டுப் பேசுவாள் பார்
அழகே ஒரு பாதி நீ
பருவம் மறுபாதி நீ
அழகே ஒரு பாதி நீ
பருவம் மறுபாதி நீ
அழைத்தால் வரவேண்டும் நீ
அடிமை எனக்காக நீ
அழைத்தால் வரவேண்டும் நீ
அடிமை எனக்காக நீ
(ஜெயாவுக்காகவே எழுதப்பட்டது போன்ற வரிகள்)
நானே பனி நிலவு
வருவேன் பல இரவு
என்ன மேடையில் வண்ணக் காவியம்
மின்னல் ஓவியம் பார்.
உள்ள ஓடையில் மெல்ல நீந்திடும்
வெள்ளிக் கெண்டை மீன் பார்
(கலக்கல் இடையிசை)
ஒருநாள் முகம் பார்க்கலாம்
மறுநாள் சுகம் சேர்க்கலாம்
ஒருநாள் முகம் பார்க்கலாம்
மறுநாள் சுகம் சேர்க்கலாம்
இளமை செலவாக்கலாம்
இன்பம் வரவாக்கலாம்
இளமை செலவாக்கலாம்
இன்பம் வரவாக்கலாம்
(ஜெயாவின் கவுன் எதிபாராமல் தோள்பட்டையில் கழன்று விட, அதை ஜெயா சிரித்தபடியே அட்ஜஸ்ட் செய்ய, நாகேஷின் முகத்தில் அதிர்ச்சி ஏற்பட நாகேஷின் அருகில் அமர்ந்து நாடகம் பார்க்கும் ஒருவர் 'குட்டி ரொம்ப ஷோக்கா இருக்கு இல்லே... யாரது?' என்று நாகேஷிடமே கேட்கும்போது நாகேஷ் அமர்க்களப்படுத்துவார் அவமான முகபாவங்களில்)
நானே பனி நிலவு
வருவேன் பல இரவு
காணக் கண் கோடி வேண்டும்
கன்னிக் கனியல்லவோ
பாடக் கவி நூறு தோன்றும்
மாது மதுவல்லவோ
நானே பனி நிலவு
வருவேன் பல இரவு
ஓஹ்ஹஹ்ஹோஹொஹோஹோ
ஓஹ்ஹஹ்ஹோஹோஹோஹோ
ஓஹ்ஹஹ்ஹோஹோஹோஹோ
https://www.youtube.com/watch?v=jIHt...yer_detailpage
http://antrukandamugam.files.wordpre...73-2.jpg?w=428
திரையிசை என்றால் : எம் பி ஸ்ரீநிவாசன் -(1987ல் மலையாளத்தில் வழங்கிய நேர்காணல்)
திரையிசை என்றால் : எம் பி ஸ்ரீநிவாசன்
(1987ல் மலையாளத்தில் வழங்கிய நேர்காணல்) தமிழில் : ஷாஜி
கேள்வி : சினிமாவுக்கு ம்யூசிக் தேவையா? சினிமாவில் ம்யூசிக் டைரக்டரின் பங்கு எவ்வளவு முக்கியமானது?
எம் பி எஸ் : ம்யூசிக் டைரக்டர் என்கிற சொல்லாடலே தவறு. இந்திய சினிமாவில் அப்படித்தான் சொல்லப்பட்டு வருகிறது என்றாலும். ம்யூசிக் கம்போஸர் என்றுதான் சொல்லவேண்டும். இசையமைப்பாளரை இசை இயக்குநர் என்று சொல்லல் ஆகாது. சினிமாவில் வேறு வேறு முறைகளில் ஓரளவு இசை தேவை என்றே சொல்லுவேன். ஆனால் எந்த அளவுக்கு என்பது தான் கேள்வி. திரைப்படத்தின் கதை, அதன் பண்பாட்டுப் பின்புலம் போன்றவற்றை கணக்கில் கொண்டுதான் அதன் இசை அமைய வேண்டும். நான் இசையமைத்த மலையாளப் படங்களான யவனிகா, உள்க்கடல் போன்றவற்றுக்கு இசை இன்றியமையாதது.
ஆனால் அடூர் கோபாலகிருஷ்ணனின் கொடியேற்றம் போன்ற படத்திற்கு இசையே தேவையில்லை. ’இந்தியாவின் ஏழை எளிய மக்கள் திரைப்படங்களை நாடுவது பாடல்கள், நகைச்சுவை மற்றும் சண்டைக்காட்சிகளுக்காகத் தான்’என்று சத்யஜித் ரே ஒரு முறை சொல்லியிருக்கிறார். அது ஒரளவுக்கு உண்மையும் தானே? ஆனால் திரைப்படத்துக்கு இசை தேவையா என்று கேட்டால் அது அந்த படத்தை பொறுத்தது என்றே சொல்வேன்.
கேள்வி : அறுபது எழுபதுகளின் திரை இசைக்கும் இன்றைய திரை இசைக்கும் இருக்கிற வேற்றுமைகளைப்பற்றி சொல்லுங்கள்.
எம் பி எஸ் : மலையாளத் திரையிசையில் பாபுராஜ், ராகவன், தட்சிணாமூர்த்தி, தேவராஜன் போன்றவர்களின் இசையும் யேசுதாஸின் குரலும் வயலார், பி பாஸ்கரன், ஓ என் வி குருப் போன்றவர்களின் பாடல் வரிகளும் சேர்ந்து உருவாக்கிய ஒரு பொற்காலம் இருந்தது. அவர்களின் அசாத்தியமான திறமைகள் ஒன்றிணைந்தபோது அப்பாடல்கள் தரத்திலும் வெகுஜெனப் புகழிலும் பரவலாக வெற்றியடைந்தது.
நான் அதிகமாக இன்றைய படங்களைப் பார்ப்பதுமில்லை பாடல்களை கேட்பதுமில்லை. இன்று பெரும்பாலும் இயக்குநர்கள் சொல்வதற்கேற்ப எதாவது ஒன்றை உருவாக்கி வழங்குவாத மாறிவிட்டது இசையமைப்பாளர்களின் வேலை. இருந்தும் திறமைவாய்ந்த இசையமைப்பாளர்கள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.
கேள்வி : படத்தின் இசை உருவாக்கத்தில் இயக்குநரின் பங்கு தேவயற்றது என்கிறீர்களா?
எம் பி எஸ் : நான் அப்படி சொல்ல வரவில்லை. இயக்குநரின் பங்கு மிக முக்கியமானது தான். தனது படத்தில் பாடல்கள் வேண்டுமா வேண்டாமா, அப்படத்தின் இசை எந்த மனநிலையில், உள உணர்வில் அமைய வேண்டும் என்பதை தீர்மானிப்பவர் இயக்குநர் தான். ஆனால் அவரது தேவையை, கருத்தை புரிந்துக்கொண்டு இசை அமைப்பது என்பது இசையமைப்பாளரின் வேலை. அதிலும் இயக்குநர் பங்காற்ற வேண்டும் என்றால் அப்படத்தின் இசையை அவரே அமைக்கலாமே! அதற்கு ஒரு இசையமைப்பாளன் தேவை இல்லையே. என்னிடம் இசை கேட்டு வந்த அனைத்து இயக்குநர்களுடனும் எனக்கு சுமுகமான உறவுதான் இருந்திருக்கிறது. அவர்கள் அனைவருமே எனது இசையையும் எனது அலைவரிசையயும் புரிந்துகொண்டவர்கள்.
கேள்வி : இசையமைப்பாளர்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் இடையே ஒரு நெருக்கமான தொடர்பு இருக்கவேண்டும் என்று நினைக்கிரீர்களா?
எம் பி எஸ் : மலையாளத்தில் எனது தொடக்கமே பி பாஸ்கரனின் வரிகளுக்கு இசையமைத்து தான். ஸ்வர்க ராஜ்ஜியம் என்கிற படம் வழியாக. தொடர்ந்து வயலார் மற்றும் ஓ என் வீயின் பாடல் வரிகளுக்கு இசையமைத்தேன். அவர்களுடன் எனக்கு எப்போதுமே நேரடித்தொடர்பு இருந்தது. பாடல்வரிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தது தான் மலையாளத்தின் சிறப்பு. வரிகளின் பொருளை புரிந்துகொண்டுதான் இசையமைக்க வேண்டும்.
சிறந்த கவிதைகளாக வரிகளை எழுதும் ஒரு பாடலாசிரியரும் அதைப் புரிந்துகொண்டு இசையமைக்கும் ஒரு இசையமைப்பாளரும் இணையும்போது சிறந்த பாடல்கள் பிறக்கின்றன. தமிழிலும் தெலுங்கிலும் இதே முறைதான் நான் கடைப்பிடித்தேன். சிறந்த பாடல்களை உருவாக்க சிறந்த கவிதை வரிகள் வேண்டும். ஒருமுறை வயாலார் என் விருப்பத்திற்கேற்ப எதாவது ஒன்றை தேர்ந்தெடுக்கட்டும் என்கிற எண்ணத்துடன் ஒரு பாடலின் முதல் வரியை இரண்டு விதமாக எழுதி என்னிடம் கொடுத்தார். ஆனால் நான் அவ்விரண்டுமே ஒன்றுக்கடுத்து ஒன்று என்று தவறாக புரிந்துகொண்டு இசையமைத்து விட்டேன். பாடல் வெகுசிறப்பாக வந்தது! அது தான் சிறந்த வரிகளின் வல்லமை.
கேள்வி : மின் இசைக்கருவிகள் இசைக்கு நல்லதா கெட்டதா?
எம் பி எஸ் : மின் இசைக்கருவிகள் வர ஆரம்பித்து பலகாலம் ஆகிவிட்டது. யூணிவோக்ஸ், க்ளாவயலின் போன்றவை இருபதாண்டுகளாக இருக்கிறது. அவற்றின் தாக்கத்தால் ஷெஹ்னாய், க்ளாரினெட், ஃப்ளூட் போன்ற மரபான இசைக்கருவிகளுக்கு நம் திரையிசையில் வேலை கொஞ்சம் காலம் இல்லாமலாகிவிட்டது. தொடர்ந்து காம்போ ஆர்கன், ஸிந்தஸைசர்கள், அவற்றின் பற்பல இணைப்புகள் போன்றவை வந்தது. ஸ்ட்ரிங்ஸ் என்கிற ஸிந்தஸைசர் வந்தபோது இனிமேல் வயலின், ஸிதார் போன்ற கருவிகளுக்கு வேலையே இருக்காது என்று சொன்னார்கள். ஏன் என்றால் அதில் ஒரே சமையம் நூற்றுக்கணக்கானw வயலின்களின் ஒலியையோ ஸிதார்களின் ஒலியையோ கொண்டுவர முடியும். ஆனால் நம் திரையிசையில் இன்றைக்கும் வயலின், சிதார் போன்ற கருவிகள் பெருவாரியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஸ்ட்ரிங்ஸ் ஸிந்தஸைசரோ இன்று காணக்கிடைப்பதேயில்லை!
மின் இசைக்கருவிகளை செம்மையாக இசைக்கத் தெரிந்தவர்கள் இங்கு மிகக்குறைவே. சில சத்தங்கள் எழுப்புவதற்காகத்தான் இங்கு அவை பயன்படுகிறது. ஆனால் அவற்றை சிறப்பாக வாசிக்கத்தெரிந்த இசைக்கலைஞர்கள் இடம்பொருள் பார்த்து அவற்றை பயன்படுத்துமானால் அது நன்றாக அமையலாம். செலவும் குறைக்கலாம்.
அடூர் கோபாலகிருஷ்ணனின் எலிப்பத்தாயம் என்கிற படத்தில் ஒரு முக்கியமான கதைத்தருணத்திற்கு வெகுநேரம் யோசித்து இரண்டு தன்புரா ஒரு கடம் என சில மரபான கருவிகளை பயன்படுத்தி ஒரு இசையை உருவாக்கினேன். அந்தபடம் பார்த்த ஒரு வெளிநாட்டுக்காரர், அவ்விசை எந்த மின் இசைக்கருவியில் உருவானது என்று அடூரிடம் கேட்டாராம்!
கேள்வி : நமது பழைய நாடக இசையின் கூறுகள் நமது சினிமா இசையில் இன்றளவும் காணக்கிடைக்கிறதா?
எம் பி எஸ் : உலகத் திரை இசையின் அடிப்படை கூறுகளில் ஒன்று தான் ஓபெரா இசை என்பது. எல்லாவற்றையும் விட இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு நாடக வடிவம் தானே ஓபெரா. அதேபோல் நமது நாடக இசையும் நம் சினிமா இசையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.
கேள்வி : வெளிநாடுகளில் இசையை மட்டும் மையமாகக் கொண்ட மை ஃபெயர் லேடி, சௌண்ட் ஆஃப் ம்யூசிக் போன்ற ‘ம்யூசிக்கல்’ என்கிற திரைப்பட வகை மிகப் பிரபலமாக இருக்கிறது அல்லவா? அவ்வைகையறா படங்களுக்கு நம் நாட்டில் ஏன் இடமில்லை?
எம் பி எஸ் : தெரியவில்லை. அவ்வகை திரைப்படங்கள் இந்தியாவில் இனிமேல் பிரவியெடுக்கலாம். வராமலும் போகலாம்!
கேள்வி : பிறமொழிக்காரர்கள் மலையாளத்தில் இசையமைப்பது சரியா? ஒரு மொழியில் இசையமைப்பதற்கு அந்த மண்ணின் பண்பாட்டுப் பின்புலம் தேவையே இல்லையா?
எம் பி எஸ் : நான் ஒரு தமிழன். தமிழை தாய்மொழியாகக் கொண்டவன். ஆனால் இசைக்கும் கலைக்கும் மொழி ஏது? அதே நேரத்தில் பண்பாட்டுப் பின்புலம் தெரிந்து கொண்டுதான் ஒரு உண்மையான கலைஞன் பணியாற்றவேண்டும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். எந்த ஒரு விஷயத்தை கையாளும்பொழுதும் அதன் ஆழத்துக்குப்போய் அதை தெரிந்துகொள்ள முயற்ச்சிப்பவன் நான். ஆரம்பத்தில் மலையாளத்தில் கால்ப்பாடுகள்* படத்திற்கு இசையமைப்பதற்காக பல மாதங்கள் நான் கேரள கிராமங்களில் அலைந்து திரிந்திருக்கிறேன். அங்குள்ள நாட்டுப்புற இசையை நன்றாகப் புரிந்து கொண்டேன். மலையாள மொழி கற்றுக்கொண்டேன்.
மலையாள இலக்கியங்களில் எனக்கு புலமை இல்லையென்றாலும் ஆழ்ந்த பரிச்சயம் உண்டு. அங்குள்ள இலக்கியவாதிகள், கேரளப் பண்பாட்டில் ஆழ்ந்த புரிதல்கொண்ட இயக்குநர்கள் போன்றவர்களுடன் எனக்கு எப்போதுமே தொடர்பிருந்திருக்கிறது. தனக்குத் தெரியாத ஒரு மொழியில் இசையமைக்கும்பொழுது அந்த மொழியையும் பண்பாட்டையும் புரிந்துகொள்ள வேண்டும் என்பது தான் என் கருத்துமே. அதற்கு பாடுபடத்தயங்காத ஒரு இசையமைப்பாளர் எந்த மொழியிலும் சென்று இசை அமைக்கலாம்.
கேள்வி : உங்கள் இசையில் உங்களுக்குப் பிடித்த படங்கள்?
எம் பி எஸ் : நான் அறுபதுக்கும் மேற்பட்ட மலையாளப் படங்களுக்கும் பத்து தமிழ்ப் படங்களுக்கும் எட்டு தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்திருக்கிறேன். ஸ்வர்க்க ராஜ்ஜியம், இனி ஒரு ஜன்மம் தரூ, கடல், அள்த்தாரா, புத்ரி, புதிய ஆகாசம் புதிய பூமி, வேனல், சில்லு, உள்க்கடல், யவனிகா, வளர்த்து மிருகங்கள், பரஸ்பரம் போன்ற படங்களின் பாடல்கள் எனது விருப்பத்துக்குறியவை. ஸ்வயம்வரம், யவனிகா, எலிப்பத்தாயம், முகாமுகம் போன்ற படங்களின் பின்னணி இசையும் திருப்தி அளித்தவை. முகாமுகத்தின் பின்னணி இசையில் கம்யூனிஸ்ட் இண்டெர்நாஷணல் இசையின் சுரபேதங்கள் மட்டும் தான் பயன்படுத்தினேன். பாதை தெரியுது பார் என்கிற எனது முதல் தமிழ் படத்தின் பாடல்களும் நிமஜ்ஜனம் என்கிற தெலுங்கு படத்தின் இசையும் எனக்கு பிடித்தமானவை.
* யேசுதாஸுக்கு அவரது முதல் திரைப்பாடல் வாய்ப்பை எம் பி எஸ் வழங்கியது இப்படத்தில் தான்.
(நன்றி. திரு. பி கெ ஸ்ரீநிவாஸன், ஃபிலிம் மாகசின்)
http://mmimages.maalaimalar.com/Arti...9_S_secvpf.gif
பெரிய போராட்டத்துக்குப் பின், சினிமாவில் பாட்டு எழுதும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்தது. அந்தப் பாடலை சுசீலா பாடினார்.
மிஸ் மாலினி, ஏழைபடும்பாடு, மகாத்மா உதங்கர் முதலிய படங்களில் நடித்தவர், வி.கோபாலகிருஷ்ணன். படங்களில் நடனம் மட்டும் ஆடிக்கொண்டிருந்த லலிதா -பத்மினி சகோதரிகள், முதன் முதலில் கதாபாத்திரம் ஏற்று நடித்த "ஏழைபடும்பாடு'' படத்தில், இவர்தான் பத்மினிக்கு ஜோடி.
கடிதப் போக்குவரத்து மூலம் கோபியின் நட்பை பெற்ற வாலி, ஒருமுறை ரேடியோ நாடகத்தில் நடிக்க திருச்சிக்கு வந்த கோபியிடம், "நான் சென்னைக்கு வந்து சினிமாவில் பாட்டு எழுத முயற்சிக்கலாம் என்று நினைக்கிறேன்'' என்றார்.
"வாங்க, வாலி! நான் இருக்கிறேன். எதற்கும் கவலைப்பட வேண்டாம்'' என்று ஊக்கம் அளித்தார், கோபி.
1958 டிசம்பர் முதல் வாரத்தில், வாலி சென்னைக்கு வந்தார். திருவல்லிக்கேணியில் இருந்த ஸ்ரீரங்கத்து நண்பர் செல்லப்பாவின் அறையில் தங்கினார்.
அப்போது தியாகராய நகரில், சின்னையாப்பிள்ளை ரோட்டில் உள்ள வீட்டில் வி.கோபாலகிருஷ்ணன் வசித்து வந்தார். தன்னைத்தேடி வருவோருக்கு, முடிந்த உதவிகளை எல்லாம் செய்பவர் அவர்.
தினமும் திருவல்லிக்கேணியில் பஸ் பிடித்து, தி.நகர் வாணி மஹாலில் இறங்கி கோபாலகிருஷ்ணன் வீட்டுக்குப் போவார், வாலி. தன்னைப் பார்க்க வரும் திரை உலகப் பிரமுகர்களிடம் வாலியை கோபி அறிமுகப்படுத்துவார்.
அதுமட்டும் அல்ல. தன்னுடைய ஸ்கூட்டரின் பின்னால் வாலியை உட்கார வைத்துக்கொண்டு தினமும் யாராவது பட அதிபர்கள், டைரக்டர்கள், இசை அமைப்பாளர்களிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவார். "இவர் நல்ல கவிஞர். சினிமாவுக்கு பாட்டெழுத வாய்ப்பு தந்தால், பிரமாதமாக எழுதுவார்'' என்று கூறி, சான்ஸ் கேட்பார்.
வாலி, தன்னுடைய பாடல்கள் சிலவற்றை ஒரு நோட்டில் எழுதி வைத்திருப்பார். சிலர் அந்த நோட்டுப் புத்தகத்தை வாங்கி படித்துப் பார்த்துவிட்டு, புன்னகை புரிவார்கள். சிலர் படித்துப் பார்க்காமலேயே புன்னகை செய்வார்கள்.
இந்த புன்னகைகளால் வாலிக்கு எந்த பயனும் ஏற்படுவதில்லை.
அந்தக் காலக்கட்டத்தில், "பாதை தெரியுது பார்'' என்ற படத்தை, குமரி பிலிம்சார் எடுத்துக்கொண்டு இருந்தனர். இசை அமைப்பாளர் எம்.பி.சீனிவாசன்,, பொதுவுடமைக் கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம் எழுதிய "சின்னச் சின்ன மூக்குத்தியாம்'' என்ற பாடலை ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார்.
எம்.பி.சீனிவாசனிடம் வாலியை அறிமுகப்படுத்திய கோபாலகிருஷ்ணன், பாதை தெரியுது பார் படத்தில் ஒரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
"கோபி! கே.சி.எஸ்.அருணாசலம், ஜெயகாந்தன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகிய மூன்று பேரும்தான் இந்தப் படத்துக்கு பாட்டு எழுதுகிறார்கள். புதிதாக வேறு பாட்டை பயன்படுத்தக்கூடிய கட்டம் எதுவும் படத்தில் இல்லை. ஆனாலும், பொதுவுடமை கருத்தையும், சமூக விழிப்புணர்வையும் எடுத்துக் காட்டக்கூடிய பாட்டு எதுவும் இருந்தால், "டைட்டில் சாங்'' ஆகப் பயன்படுத்த முயற்சி செய்கிறேன்'' என்றார், சீனிவாசன்.
உடனே வாலி, தான் எழுதி வைத்திருந்த பாட்டை, அதற்கான மெட்டுடன் பாடிக்காட்டினார்.
பாட்டை கேட்ட சீனிவாசன், "மிஸ்டர் வாலி! இப்போது நீங்க பாடிக்காண்பித்த பாட்டு நன்றாக இல்லை என்று நான் சொல்லமாட்டேன். ஆனால், என்னை பெரிதாக கவரவில்லை. சாரி!'' என்று கூறிவிட்டு, உள்ளே போய்விட்டார்.
"கவலைப்படாதீங்க, வாலி! வேறு இடத்தில் முயற்சி செய்யலாம்'' என்று ஆறுதலாகக் கூறிவிட்டு, வாலியை வீட்டுக்கு அழைத்துச் சென்றார், கோபி.
(1958-ல் எம்.பி.சீனிவாசனால், நிராகரிக்கப்பட்ட பாடல், 1967-ல் எம்.ஜி.ஆர். படத்தில் இடம் பெற்று, மகத்தான வெற்றி பெற்று பட்டி தொட்டி எல்லாம் எதிரொலித்தது. அதுதான், "கொடுத்ததெல்லாம் கொடுத்தான், அவன் யாருக்காகக் கொடுத்தான்?'' என்ற பாடல். இந்தப் பாடல் இடம் பெற்ற படம் "படகோட்டி.'')
"மெல்லிசை மன்னன்'' எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைப்பில், ஏராளமான பாடல்கள் இயற்றி இருக்கிறார், வாலி.
ஆனால், முதன் முதலாக இவர்கள் சந்தித்துக் கொண்டபோது, வாலியின் பாடல் விஸ்வநாதனைக் கவரவில்லை.
அதுபற்றி, வாலி எழுதியிருப்பதாவது:-
"ஒருநாள், அதிகாலை என்னை ஒரு இசையமைப்பாளர் வீட்டுக்கு கோபி தன் ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றார். எனக்கு அந்த இசையமைப்பாளரிடம் ஏற்கனவே அளவு கடந்த அபிமானமும், மரியாதையும் உண்டு. அவர் மூலம் எனக்கு எப்படியும் படத்துறையில் பாட்டெழுதும் ஒரு வாய்ப்பைப் பெற்று தந்து விடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவர் வீட்டுக்கு என்னைக் கூட்டிப் போனார், கோபி.
அந்த இசையமைப்பாளருக்கு கோபியிடம் மிகுந்த பிரியமுண்டு. கோபியை ஆரத்தழுவி அவர் வரவேற்றார். என்னை அவரிடம் கோபி அறிமுகப்படுத்திவிட்டு, என் ஊர், என் கல்வி இவை பற்றியெல்லாம் ஒரு சிறிய முன்னுரையை வழங்கிவிட்டு, என் பாட்டு நோட்டை என் கையிலிருந்து வாங்கி, அந்த இசையமைப்பாளரிடம் கொடுத்தார்.
அவர் அதை ஆர்வத்தோடு, வாங்கி, சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்து, நின்று நிதானமாகப் படித்தார். பிறகு, என் பாட்டு நோட்டை என்னிடம் திருப்பித் தந்துவிட்டு, காபி வரவழைத்து எங்கள் இருவருக்கும் வழங்கினார்.
பிறகு, கோபியை தனியாக அழைத்து அந்த இசையமைப்பாளர் சன்னமான குரலில் காதோடு காதாக ஏதோ சொன்னார்.
"வாங்க வாலி போகலாம்...'' என்று கோபி என்னை அழைத்து வந்துவிட்டார்.
ஸ்கூட்டரில் போகும்போது என்னைப் பற்றி அந்த இசையமைப்பாளர் என்ன சொன்னார் என்று கோபியைக் கேட்டேன். அவர் சொன்னதை கோபி அப்படியே என்னிடம் சொன்னார்:
"கோபி, இவர் எழுதியிருக்கிற பாட்டெல்லாம் ரொம்ப சுமாரா இருக்கு. சினிமாவில் முன்னுக்கு வர்றதுக்கான வாய்ப்பே இவருக்கு இருக்கிற மாதிரி தெரியவில்லை... பாவம்! மெட்ராசில் இவர் இருந்து கஷ்டப்படறதை விட, படிச்சவரா இருக்கிறதனாலே, சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு ஏதாவது வேலைக்குப் போகச் சொல்லுங்க...''
அந்த இசையமைப்பாளர் சொன்னதை ஒருவரி விடாமல் கோபி என்னிடம் சொல்லிவிட்டு மவுனமாக ஸ்கூட்டரை ஓட்டினார்.
அந்த இசையமைப்பாளர் வேறு யாருமல்ல. பிற்காலத்தில் என் முன்னேற்றத்திற்கு முழு முதற்காரணமாக விளங்கிய மெல்லிசை மன்னர் எமë.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்தான், அன்று என்னை வேறு வேலை தேடிப்போவது உசிதம் என்று தன் மனதில் பட்டதை வெளிப்படையாகக் கோபியிடம் சொன்னவர்.
நான் ஸ்ரீரங்கம் திரும்பிவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன். ஓரிரு நாளில் மூட்டை முடிச்சோடு நான் ஊருக்குத் திரும்ப இருந்தபோதுதான், படத்தில் முதன் முதலாகப் பாட்டு எழுதும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது.
இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகத்தைச் சேர்ந்த பட அதிபரும், நடிகருமான கெம்பராஜ், "நளதமயந்தி'', "கற்கோட்டை'', "ராஜவிக்கிரமா'' ஆகிய படங்களைத் தயாரித்துவிட்டு, 1958-ல் "அழகர் மலைக்கள்ளன்'' என்ற படத்தைத் தயாரித்தார்.
ஒருநாள் காலை, கோபாலகிருஷ்ணன் காரில் வாலியை அவரிடம் அழைத்துச் சென்றார். தெலுங்கு இசை அமைப்பாளர் கோபாலம், ஆர்மோனிய பெட்டியுடன் அமர்ந்திருந்தார். வாலி அவருக்கு வணக்கம் செலுத்தினார்.
பாட்டுக்கான மெட்டை ஆர்மோனியத்தில் இசை அமைப்பாளர் வாசித்துக்காட்டினார். "ஒரு தாய் பாடும் தாலாட்டுப்பாட்டு இது'' என்று வாலியிடம், காட்சியை விளக்கினார்கள்.
உடனே வாலி, காகிதத்தை எடுத்தார். "நிலவும், தாரையும் நீயம்மா; உலகம் ஒரு நாள் உனதம்மா'' என்ற பல்லவியை எழுதிக் காட்டினார்.
அதைப் பார்த்துவிட்டு, இசை அமைப்பாளர் அசந்து போனார். இசையுடன் வார்த்தைகள் வெகுவாகப் பொருந்தின.
முக்கால் மணி நேரத்தில் முழுப்பாடலையும் எழுதி முடித்தார், வாலி. பட அதிபர் கெம்பராஜ் வந்து, பாட்டைக்கேட்டார். அவருக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. வாலியைத் தட்டிக்கொடுத்தார்.
"நாளை ரிக்கார்டிங். கார் அனுப்புகிறேன். வந்துவிடுங்கள்'' என்று சொன்னார். மகிழ்ந்து போனார், வாலி.
மறுநாள் கோல்டன் ஸ்டூடியோவில் சுசீலா பாட, வாலியின் முதல் பாடல் ஒலிப்பதிவு ஆகியது.
http://mmimages.maalaimalar.com/Arti...9_S_secvpf.gif
வாலியின் முதல் பாடல் வெற்றிகரமாக திரையில் ஒலித்தபோதிலும், இரண்டாவது பாடல் வாய்ப்பு சுலபமாகக் கிடைத்து விடவில்லை.
அப்போது வி.கோபாலகிருஷ்ணன் நாலைந்து படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார். அவரும், சவுகார் ஜானகியும், எம்.ஆர்.ராதாவும் நடித்த "தாமரைக்குளம்'' படத்தின் படப்பிடிப்பு, கோல்டன்ஸ் ஸ்டூடியோவில் நடந்து கொண்டிருந்தது. படத்தின் டைரக்டர் `முக்தா' சீனிவாசன்.
படப்பிடிப்பை பார்க்க வாலி சென்றிருந்தார். அவருக்கு ஒரு புதுமுக நடிகரை கோபாலகிருஷ்ணன் அறிமுகப்படுத்தி வைத்தார்.
அதுபற்றி வாலி கூறுகிறார்:-
"நானும் அந்தப் புதுமுக நடிகரும் மரத்தடியில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். மிகமிக ஒல்லியான உருவம். சினிமாவிற்கே அவசியமான கவர்ச்சி என்பது சிறிதளவும் இல்லாத முகம். ஆயினும் படித்தவராக இருந்ததால், அவர் விழியிலும், வார்த்தையிலும் ஓர் அறிவு தீட்சண்யம் இருந்தது. அவருடைய உருவ அமைப்பை வைத்து, இவர் எதை நம்பி சினிமாவில் தன் எதிர்காலத்தைத் திட்டமிடுகிறார் என்ற எண்ணத்திலேயே அவரிடம் பேச்சைக் கொடுத்தேன். அறிமுகமாகி ஒரு நிமிடமே ஆகியிருந்தும் அவர் என்னிடம் மனம் விட்டுப் பேசினார்.
"மிஸ்டர் வாலி, என் சொந்த ஊர் தாராபுரம். என் பெயர் குண்டுராவ். நான் ரெயில்வே டிபார்ட்மெண்டுல கைநிறைய சம்பளத்தோட ஆனந்தமா இருந்தவன். இருந்தாலும் இந்த நடிப்பு ஒரு பித்தாகவே மாறி, என்னுடைய சிந்தனையை முழு நேரமும் ஆக்கிரமிச்சுடுச்சு. நாடகங்களிலேயும் நடிச்சிக்கிட்டிருக்கிறேன். இந்தத் தாமரைக்குளம் படத்தின் தயாரிப்பாளர் என் நாடக நடிப்பைப் பார்த்து எனக்கு இந்தப் படத்துல ஒரு சின்ன வேஷம் கொடுத்திருக்காரு. நடிச்சு முடிச்சா சம்பளமா தொண்ணூறு ரூபா தர்றேன்னாரு. எனக்குப் பணம் முக்கியமில்லை, என் திறமையை நிரூபிக்க விரும்புகிறேன். இதை நம்பி தைரியமா, ரெயில்வே வேலையை ராஜினாமா செஞ்சுட்டேன்.''
நண்பர் குண்டுராவ் இப்படிச் சொன்னதும் எனக்குப் பொறி கலங்கிப் போய்விட்டது.
"என்ன சார், ரெயில்வே உத்தியோகம் லேசுல கிடைக்குமா? சினிமாவை நம்பி அதை நீங்க விட்டது ரொம்பத் தப்பு'' என்று என் உண்மையான வருத்தத்தை அவரிடம் எடுத்துச் சொன்னேன்.
"வாலி சார், எனக்கு நம்பிக்கையிருக்கு. ஒரு நாள் நான் கண்டிப்பா `ஸ்டார்' ஆவேன்; அப்ப ரெயில் நான் வரவரைக்கும் நிற்கும்'' என்று சொல்லிவிட்டு குண்டுராவ் ஒரு சிகரெட்டைப் புகைத்தார்.
பிற்காலத்தில் குண்டுராவ், பிரபல நட்சத்திரமாகி கோடம்பாக்கத்தையே தன் கைக்குள் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் வைத்திருந்தார். நானும் அவரும் பின்னாளில் `வாடா... போடா...' என்று அழைத்துப் பேசிக்கொள்ளும் அளவிற்கு ஆப்த நண்பர்களானோம்.
அந்த `குண்டுராவ்' வேறு யாருமல்ல. நாகேஷ்தான் அவர்!''
இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது பட வாய்ப்பு உடனே கிடைக்காததாலும், உடல் நலம் சரியில்லாததாலும், மீண்டும் ஸ்ரீரங்கத்துக்குப் போனார், வாலி.
அப்போது, அவர் தந்தை காலமானார்.
வாலியின் அண்ணன் மும்பையில் இருந்தார். "பாட்டு எழுதும் வேலை சரிப்படாது. மும்பை சென்று ஏதாவது வேலை தேடவேண்டியதுதான்'' என்ற முடிவுக்கு வந்தார், வாலி. தாயாருடன் மும்பை சென்றார்.
மும்பையில் சில காலம் இருந்து விட்டு மீண்டும் சென்னை திரும்பினார். தியாகராய நகரில் சிவா- விஷ்ணு கோவில் அருகே இருந்த கிளப்ஹவுசில் தங்கினார். அங்கு 20 அறைகள் இருந்தன. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் அங்கே தங்கியிருந்தனர். ஒருவருக்கு வாடகை 15 ரூபாய்.
அங்கே தங்கியிருந்தவர்களில் பெரும்பாலோர் பிரம்மச்சாரிகள். நாகேசும் அப்போது அங்கு தங்கியிருந்தார். ஏற்கனவே அறிமுகமாகியிருந்த நாகேசும், வாலியும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.
அமெரிக்க தூதர் அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த வெங்கடராமன் என்ற இளைஞரும், அங்கு தங்கியிருந்தார். அவரும் வாலிக்கு நண்பரானார்.
இவர்தான் பிற்காலத்தில் "வெண்ணிற ஆடை''யில் கதாநாயகனாக அறிமுகமாகி, ஏறத்தாழ 20 ஆண்டு காலம் கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்த ஸ்ரீகாந்த்.
கிளப் ஹவுசில் தங்கியிருந்தவர்கள் ஒவ்வொருவராக திரை உலகில் நுழைந்தார்கள். வாலிக்குமë நல்ல காலம் பிறந்தது.
ஒரு நாள் காலை, முன்பின் தெரியாத ஒருவர் வாலியைத் தேடி வந்தார். "நாளை காலை பத்து மணிக்கு நீங்கள் `அரசு பிக்சர்ஸ்' அலுவலகத்துக்கு வாருங்கள். அங்கு டைரக்டர் ப.நீலகண்டனை சந்தியுங்கள். அவர் படத்துக்கு பாட்டு எழுத வேண்டும்'' என்றார், அவர்.
வாலிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. நாகேஷ் வந்ததும், இந்தத் தகவலைச் சொன்னார். "அரசு பிக்சர்ஸ் ஆபீஸ், நுங்கம்பாக்கத்திலே இருக்குடா. எனக்குத் தெரியும். நானும் உன் கூட வர்றேன்'' என்றார், நாகேஷ் மகிழ்ச்சி பொங்க.
மறுநாள் வாலியும், நாகேசும் `அரசு பிக்சர்ஸ்' அலுவலகத்துக்கு சென்றனர். திரை உலகில் நாகேஷ் புகழ் பெறாத காலம் அது.
ப.நீலகண்டன் அறைக்குள் இருவரும் நுழைந்தனர். "உங்கள் இருவரில் யார் வாலி?'' என்று கேட்டார், ப.நீலகண்டன்.
"நான்தான் சார்! இவர் என் நண்பர். நாகேஷ்னு பேரு. படங்களில் எல்லாம் நடித்துக்கொண்டு இருக்கிறார்'' என்று பவ்யமாக பதில் அளித்தார், வாலி.
"பாட்டு நீங்கதானே எழுதப்போறீங்க?''
"ஆமாம் சார்!''
"அப்ப, அவரை வெளியே இருக்கச் சொல்லுங்க!''
ப.நீலகண்டன் இவ்வாறு கூற, நாகேஷ் அந்த அறையை விட்டு வெளியேறினார்.
வாலியைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார், நீலகண்டன். பின்னர் துணை இயக்குனரை அழைத்து, "பாடல் காட்சி பற்றிய விவரங்களை இவருக்கு விளக்குங்கள்'' என்று கூறிவிட்டு, "நீங்கள் நாளை பாடலின் பல்லவிகளை எழுதிக்கொண்டு வாருங்கள்'' என்று வாலியிடம் தெரிவித்தார்.
வாலி, நாகேசுடன் கிளப் ஹவுஸ் திரும்பினார்.
மகிழ்ச்சி மிகுதியால், இரவெல்லாம் வாலிக்கு தூக்கம் இல்லை.
காரணம் அவர் பாடல் எழுதும் அந்த காதல் காட்சியில் நடிக்கப்போகிறவர், எம்.ஜி.ஆர்! படத்தின் பெயர் "நல்லவன் வாழ்வான்.'' எம்.ஜி.ஆருடன் நடிக்கப் போகிறவர் ராஜசுலோசனா.
`எம்.ஜி.ஆர். படத்துக்கு பாட்டெழுதப் போகிறோம்' என்ற மகிழ்ச்சியில் மனம் பூரிக்க, விடிய விடிய விழித்திருந்து 50 பாடல்களுக்கான பல்லவிகளை எழுதிக் குவித்தார், வாலி!
நானே பனி நிலவு
வருவேன் பல இரவு // நல்ல பாட்டு வாசு சார்.. நன்றி..
வாலி - நாகேஷ் சுய சரிதைகளில் இதைப் படித்திருக்கிறேன் கிருஷ்ணா ஜி. மறுபடி படிக்கவும் நன்றாக உள்ளது..
ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் காதல் கொள்ள, அந்தப் பெண்ணும் அவன் மேல் உயிராகி விட..அப்புறம் என்ன டும் டும் டும் சுபம் தான் எனச் சொல்லி விடலாமா..ம்ம் அதானே முடியாது..
இந்தப் பெண் ஜன்மம் இருக்கிறதே என்றுமே ஆண்களுக்கு ஒரு புரியாத புதிர்..
விதிசெய்த மாயமோ வேறோ அறியேன்
புதிர்தானே என்றென்றும் பெண்
என ஆன்றோர் (?!) வாக்கு தான் நினைவிற்கு வருகிறது..
அதுவும் காதல் வசப்பட்ட பெண்ணுக்கு என்ன தான் ஆகிறது..
நல்லாத் தான்யா இருக்கான்..மனசுல பச்சக்குன்னு போஸ்ட் ஆஃபீஸ் ஸ்டாம்ப் மாதிரி வந்து உட்கார்ந்துட்டான்..நாமும் லவ்விட்டோம்...ஆனா இந்தப் பய புள்ள இருக்கானே லைஃப் லாங்கா நம்மோட சந்தோஷமா இருப்பானா..சரீஈ ஏதோ நாம அக்ரீ பண்ணினதால புதுசா சாம்சங்க் எஸ் 3 நோட்புக் வாங்கிக் கொடுத்திருக்கான்..ஆனாக்க அசடு..கொஞ்சமாவது வர்ணிக்கறானோ..ம்ஹீம்..மரமண்டை..என்னோட ப்ளூ ஜீன்ஸும் பிங்க் ஸ்பாகெட்டி டாப்ஸூம் நல்லா இருக்குதா இல்லியா சொல்லேண்டா இவனே..
அவன் மனசுல என்ன ஓடுது..
ஆஹா நல்லாத் தான் இருக்கா இவளை இப்படியே ஹேய் நீ ரொம்ப அழகா இருக்கேன்னு சொன்னா டபக்குன்னு மிரண்ட கன்னுக்குட்டி மாதிரி ஒரு பார்வை பார்த்துடுவா..ஸோ வாட் ஐ கேன் டூ.. யெஸ்.. இருக்கவே இருக்கு.. மேலே காயற நிலா..அதவச்சு நல்ல தமிழ்ல பாடிக் காட்டலாமா குட்டிப் பெண்ணுக்கு..
அப்படின்னு சொல்லிட்டுப் பாடறமாதிரியான பாட்டு தான் கீழே நீங்க பார்க்கப் போற பாட்டாக்கும்..
*
கேள்வி பதில் என்ற டைப்பில் அமைந்தாலும் கொஞ்சம் சிரி சிரி எனப் போய்க் கொண்டிருக்கும் அந்தப் படத்தில் டபக்கென ஹீரோ ஹீரோயின் இருவரும் ராஜா ராணி உடைகளில் பாடுவது போல் வரும்..
பூத்துச் சிரிக்கும் அழகிய போன்சாய் மலர்களைப் போல சற்றே உயரம கம்மியான ஹீரோயின்.. ரேவதி.. கம்பீரமாகவும் கொஞ்சம் கண்களில் சிரிப்புடனும் தோற்றமளிக்கும் பிரபு..பின் பாடல்..படம்..அரங்கேற்ற வேளை..
*
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளை தானோ!
மலர்சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய் கூட
உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட.
தேவார சந்தம் கொண்டு தினம்பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்று.
தென் பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு
மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று
இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்.
கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்
கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட
நடு ஜாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட
தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
ஆதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்
வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி பேச்சை கேட்கக் கூடும்
அடியாளின் ஜீவன் மேனி அதிகாரம் செய்வதென்ன?
அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்ன?
இசை வீணை வாடுதோ? இதமான கைகளில் மீட்ட!
ஸ்ருதியோடு சேருமோ? சுகமான ராகமே காட்ட!
*
ஜேசுதாஸ் உமாரமணன் அண்ட் இளைய ராஜா..ஒரு ஆஹா பாட்டு இது..அப்படித் தானே..:)
உமாரமணணின் குரல் எனக்கு ரொம்பப் பிடிக்கும்..பூங்கதவே தாழ் திறவாய் கொஞ்சம் மனதில் ஒலிக்கிறது..
https://encrypted-tbn2.gstatic.com/i...tBv2pUBmCURw57
வாசு சார்
உங்கள் மோஹம் முப்பது வருஷம் படத்தின் 'சங்கீதம் ராகங்கள் இல்லாமலா ' பாடலின் சிறப்பு இன்று படித்தேன் .அந்த படத்தில் ஜேசுதாஸ் குரலில் வரும் பின் பாடல் மிகவும் பிடித்த ஒன்று
'எனது வாழ்கை பாதையில்
எரியும் இரண்டும் தீபங்கள்
என்ன இல்லை ஒன்றிலே
எண்ணெய் இல்லை ஒன்றிலே '
https://www.youtube.com/watch?v=ygSJ...A&noredirect=1