-
நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு,
என்னைப் பற்றிய உங்கள் அர்த்தமற்ற, உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை.
‘நான் என்றைக்காவது திரு.எம்.ஜி.ஆரைப் பற்றி தவறாக எழுதியிருக்கிறேனா’ என்று கேட்பீர்கள். ஆனால், ‘யாரை, எப்படி, எப்போது பயன்படுத்திக் கொள்வது என்பதில் தேர்ந்தவரான எம்.ஜி.ஆர் ’என்று விஷத்தை கக்குவீர்கள்.
தகவல்களிலும் கூட உண்மைகள் இல்லை. உங்களது திரியில் 260வது பக்கத்தில் திரு.சிவாஜி கணேசனும் ஆனந்த விகடனும் என்ற கட்டுரையின் ( பழைய பதிவு மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது) இரண்டாவது பாகத்தில் (part II) மூன்றாவது பத்தியில் கடைசி வரியில் உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு விஷயமாக ‘அவரும் (மணியனைக் குறிப்பிட்டுள்ளீர்கள்) அவருடன் சக்தி கிருஷ்ணசாமியும் சென்றனர்’ என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
சக்தி கிருஷ்ணசாமி என்பவர் சக்தி நாடக சபாவில் நாடகங்கள் எழுதியவர். படகோட்டி, பறக்கும் பாவை படங்களுக்கு வசனம் எழுதியவர். அவர் மணியனுடன் செல்லவில்லை. மணியனுடன் சென்றது சித்ரா கிருஷ்ணசாமி என்பவர். அவர் படத் தயாரிப்புக்கான பணிகளில் ஈடுபடுபவர். தலைவருக்கு நெருக்கமானவர். சகோதரர் செல்வகுமார் சமீபத்தில் பதிவிட்ட ஒரு புகைப்படத்தில் தலைவருக்கு இளையராஜா வணக்கம் தெரிவிக்கும் காட்சியில் அவர் அருகே நின்று கொண்டிருப்பவர்தான் சித்ரா கிருஷ்ணசாமி.
சக்தி கிருஷ்ணசாமிக்கும் சித்ரா கிருஷ்ணசாமிக்கும் வித்தியாசம் தெரியாத உங்களை வரலாற்றுச் சுரங்கம் என்று உங்கள் நண்பர்கள் புகழ்ந்துள்ளனர். அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால், நீங்கள் எழுதும் தகவல்கள் உண்மையானவை என்று அதைப் படிக்கும் மக்கள் நம்பி விடக்கூடாதே. அதற்குத்தான் இதை குறிப்பிடுகிறேன். இனிமேலாவது உண்மையான தகவல்களை எழுதுங்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
பட்ரோடு ஜெயந்தியில் , 07/11/2014 முதல் மக்கள்திலகம் எம்ஜிஆர் அவர்களின் தர்மம் தலைகாக்கும் தினசரி மூன்று காட்சிகள் நடைபெறுகிறது அதன் சுவரொட்டி நண்பர்களின் பார்வைக்கு
http://i59.tinypic.com/w85bi0.jpg
-
சென்னை சரவணாவில் புரட்சி நடிகர் எம்ஜிஆர் அவர்களின் விவசாயி 07-11-2014 முதல் தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது அதன் சுவரொட்டி நண்பர்களின் பார்வைக்கு
http://i58.tinypic.com/59ye0m.jpg
-
-
சென்னை சைதாபேட்டை,கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு உணவகத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள் நண்பர்களின் பார்வைக்கு
http://i57.tinypic.com/rvx9ae.jpg
-
-
-
-
-
தொலைக்காட்சியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் படங்கள்
---------------------------------------------------------------------
04-11-2014 சன் லைப் இரவு 7 மணி தாய்சொல்லைதட்டாதே
08-11-2014 ஜெயா காலை 10-30 மணி இதயவீணை
08-11-2014 வசந்த் மதியம் 2 மணி தனிப்பிறவி
பாலிமர் மதியம் 2 மணி நல்லநேரம்
சன்லைப் இரவு 7 மணி தேடிவந்த மாப்பிள்ளை
09-11-2014 சன்லைப் இரவு 7 மணி சபாஷ் மாப்ளே