THE HINDU- CINIMA PLUS-27/3/2016
http://i66.tinypic.com/2ilj9lv.jpg
Printable View
THE HINDU- CINIMA PLUS-27/3/2016
http://i66.tinypic.com/2ilj9lv.jpg
ஆளுமை ஆளுமைதான். எம்ஜிஆர் போலவே அது எப்போதும் நிற்கும் கம்பீரமாக. யார் மறுக்கிலும். எம்ஜிஆரை பலவற்றுக்கும் ரசிக்கிறேன் இன்றும்; அவற்றில் சில: முறைப்படி நடனம் கற்காவிட்டாலும் அதில் காட்டிய திறமை; உ.ம்: ஆடலுடன் பாடலைக்கேட்டு பாடலுக்கான நடனம் தான் மக்களால் ஆராதிக்கப்படுவோம் என்று எதிர்பார்க்காத காலத்திலேயே தனது சினிமாக்களில் கவனத்தில் எடுத்துக்கொண்ட சில புத்திசாலித்தனமான நடவடிக்கைகள்; உ.ம்: புகை, மது தவிர்த்தது. நடிப்பில் பெரிய உச்சம் தொடாவிட்டாலும் அவ்வப்போது மிரட்டுவது. உ.ம். எங்கள் தங்கம் படத்தின் கதாகாலட்சேபம். எல்லாவற்றையும் விடுங்கள்; அரசகட்டளை போன்ற படங்களில் வெளிப்படும் அந்த தோற்ற அழகை ரசிக்காவிட்டால் வேறு எதை ஒருவனால் ரசிக்க முடியும்? இன்னும் பலப்பல................. இதற்கெல்லாம் நான் வெட்கப்பட்டுக்கொண்டா இருக்கமுடியும்?
courtesy - fb
வாத்தியார் பாடசாலையில் கல்வி மூன்றாம் வகுப்புவரையில் படித்திருந்தாலும், வாழ்க்கைப் பள்ளியில் நிறையவே படித்தவர். ஒருவரால் அவரைப் போல் உயர்ந்த நிலைக்கு வர முடியுமென்றால், இறந்த இத்தனை வருடங்களின்பின்னரும் மக்களின் மனதில் ஆட்சி செலுத்திக்கொண்டிருக்க முடியுமென்றால் அது ஒன்றும் சாதாரண விடயமல்ல. வாத்தியாரின் செயற்பாடுகளிலுள்ள + கள் மற்றும் - களுடன் அவரை அணுகுவது என் வழக்கம். உதாரணமாக நடிப்பில் மிகுந்த ஆளுமையுடைய கமலகாசன் , சிவாஜி கணேசன் போன்றவர்கள் எவ்வளவு உருக்கமாக 'இரத்தத்தின் இரத்தமே' என்று அழைத்தாலும் அசையாத, மக்களை குண்டடிபட்டுச் சீரழிந்த குரலுடன் வாத்தியார் 'இரத்தத்தின் இரத்தமே' என்ற இரண்டு வார்த்தைகள் அசைத்துவிடுவதொன்றும் சாதாரணவிடயமல்ல. நியூயார்க் மருத்துவ நிலையத்தில் இருந்துகொண்டு தேர்தலில் வெல்வதென்பதொன்றும் சாதாரண விடயமல்ல. அவரது சத்துணவுத்திட்டம், இறந்தபின் தன் சொத்துக்களை குருடர், செவிடர் நல்வாழ்வுக்காக ஒதுக்கிய பண்பு, ஈழத்தமிழர்கள் விடயத்தில் அவர் காட்டிய கரிசனை.. இது போன்ற பல விடயங்கள் முக்கியமானவை. அவரது திரைப்படங்களில் தொடர்ந்து வலியுறுத்தப்படும் வாழ்வின் முன்னேற்றத்திற்கான கருத்துகள் இவையெல்லாம் முக்கியமானவை.
Courtesy - fb
நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின் தயாரிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த "உலகம் சுற்ற்று வாலிபன்" காவியம் தற்போது புதிய பரிமாணத்தில், புதுப்பொலிவுடன், ரிஷி மூவிஸ் திரு. நாகராஜன் அவர்கள் உருவாக்கி வருவது மக்கள் திலகத்தின் அன்பர்கள் பலரும் அறிந்ததே !
நேற்று முன்தினம் ( 27-03-2016 - ஞாயிற்றுக்கிழமை ) திண்டுக்கல் மாநகருக்கு சென்று, அவரிடம் உரையாடிய பொழுது, அவர் தெரிவித்த அண்மைத்தகவல் :
தற்போது, பின்னணி இசை சேர்ப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன்,, டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன், விரைவில் திரையிடப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் சில செய்திகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.
மக்கள் திலகத்தின் அன்பர்களுக்கு இது குறித்து தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.
இது தொடர்பான டைரி மற்றும் விளம்பர காலண்டர்கள் அளித்து, திரு. நாகராஜன் அவர்கள், என்னை மகிழ்வித்தார்.
ரிஷி மூவிஸ் நாகராஜன் அவர்களுக்கு, புரட்சித்தலைவரின் பக்தர்கள் சார்பில் நன்றியினை இத்திர்யின் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.
நாட்குறிப்பிலிருந்து (டைரியிலிருந்து) நம் மக்கள் திலகத்தின் காவிய காட்சிகள் சில கிழே பதிவிடப்படுகிறது.
http://i65.tinypic.com/10mqxb4.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆருடன் நடிகை ஜெயலலிதா தொடர்ச்சியாக 1968 ல் ரகசிய போலீஸ் 115தேர்த்திருவிழா , குடியிருந்த கோயில் ,கண்ணன் என் காதலன் , புதிய பூமி , கணவன் , ஒளிவிளக்கு , காதல் வாகனம் ,அடிமைப்பெண் -1969, நம்நாடு , மாட்டுக்கார வேலன்-1970,என அண்ணன் என்று 12 படங்களில் நடித்தார் .
அடிமைப்பெண் ,மாட்டுக்கார வேலன் இரண்டு படங்கள் வெள்ளிவிழாவும் , ரகசிய போலீஸ் 115 குடியிருந்த கோயில்,ஒளிவிளக்கு , ,நம்நாடு, என அண்ணன் படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடியது