புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அரிய புகைப்படங்களில் சில
நண்பர்களின் பார்வைக்கு
http://i68.tinypic.com/zojc6u.jpg
Printable View
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அரிய புகைப்படங்களில் சில
நண்பர்களின் பார்வைக்கு
http://i68.tinypic.com/zojc6u.jpg
அனைவருக்கும் "விஹாரி" தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக............ எப்பொழுதும் வாழ்க... வளர்க....... மக்கள் திலகம் அரும் புகழ்....
தலைவரின் முதல் தயாரிப்பான எம்.ஜி.யார் பிக்சர்ஸின் நாடோடி மன்னன் காவியத்தில் முதலில் டைட்டிலில் ஒலிக்கும் தமிழ் பெருமையை போற்றும் பாடலான " செந்தமிழே வணக்கம் ஆதி திராவிடர் வாழ்வினை சீறோடு காக்கும்.. செந்தமிழே வணக்கம் " பாடல் தமிழுக்கு புகழ் மகுடம் சூட்டிய பாடலாகும்...நன்றி உரிமைக்குரல் ராஜு....... Thanks wa.,
புரட்சித்தலைவரின் வண்ணப்படைப்பான 13.04.1972 ல் வெளியான ஜெயந்தி பிலிம்ஸின் 2 வது படம் மக்கள் திலகத்தின் ராமன் தேடிய சீதை இன்றுடன் வெளியாகி 47 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. மாட்டுக்கார வேலன் வெள்ளிவிழா காவியத்திற்கு பின் வெளியான வெற்றித் திரைப்படம். சென்னையில் மிட்லண்ட் கிருஷ்ணா சரவணா வெளி வந்தது. மதுரை திருச்சி சேலம் 12 வாரங்களும் இலங்கையில் கெப்பிட்டல் வெலிங்டன் என இரு அரங்கில் 100 நாள் ஒடியது. 1972ல் சென்னை(.3 அரங்கு) மதுரை திருச்சி சேலம் கோவை ஈரோடு தஞ்சாவூர் நெல்லை நாகர் கோவில் தூத்துக்குடி திண்டுக்கல் விருதுநகர் கும்பகோணம் வேலூர். புதுச்சேரி பட்டுக்கோட்டை கரூர் மயிலாடுதுறை திருவண்ணாமலை திருப்பூர் 22 அரங்கில் 50 நாட்கள் ஒடியது. அதே வருடத்தில் வெளியான ராஜா திரைப்படம் 12.திரையரங்கில் மட்டுமே 50 நாள். அன்று தொடங்கிய வெள்ளித்திரையின் வரலாறு இன்று வரை ஒடிக்கொண்டு வரும் திரைப்படமாகும். பாடல்கள், .வெளிபுற படப்பிடிப்பு , தலைவரின் அற்புத இயற்கை நடிப்பு, உடையாலங்காரம், கதையமைப்பு, சண்டைக்காட்சிகள், அரங்கமைப்பு ,நடித்த நடிக, நடிகையர்கள், இயக்கம் யாவும் சிறப்பு பெற்றது. அன்பே வா திரைப்படத்திற்கு பின் ஒரு பொழுது போக்கு திரைப்படம் தான் புரட்சித்தலைவரின் ராமன் தேடிய சீதை ஆகும். 47 ஆண்டுகளில் பல வெளியீடுகளை தொடர்ந்து பெற்ற காவியம். நன்றி உரிமைக்குரல் ராஜு....... Thanks wa.,
தங்கத்தலைவர் புரட்சித்தலைவர் கொண்டாடிய தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை எப்படி கொண்டாடுவாரோ அப்படித்தான் நம் தமிழ் புது வருடபிறப்பான சித்திரை மாதத்தையும் சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்.அன்றும் தலைவரை பார்க்க வருபவர்களுக்கு தலைவர் தன் இல்லமான இராமாபுரத்தில் மகிழ்ச்சி பொங்க விருந்தளிப்பார். பலருக்கு பரிசும் வழங்குவார். 1953.ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நாடக மன்றம். அன்று முதலில் இருந்து நாடகத்தில் பணி புரியும் 50.க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு புத்தாடை வழங்குவார்.. சாலிகிராமத்தில் உள்ள தன்னுடைய பள்ளியில் படிக்கும் பள்ளி பிள்ளைகளுக்கு புத்தாடை இனிப்புகள் வழங்குவார். அதுப்போல் திரைப் படத்துறை, அரசியல் துறை என வருபவர்களுக்கும் உணவளித்து பரிசு வழங்குவார். தலைவரின் தோட்டத்தில் தமிழ் புத்தாண்டு தினவிழா பல நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடக்கும். தமிழுக்காக தமிழர்களுக்காக தமிழ் இனத்திற்காகவே தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த உண்மை தமிழர் புரட்சித் தலைவர்.தமிழன் என்று போலி வேஷம் போட்டு நடமாடியவர்களின் மத்தியில் நல்ல மாமனிதராக மனிதநேயத்தின் சின்னமாக, உழைக்கும் வர்க்கத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக, தமிழுக்கு பல்கலைக் கழகம் கண்ட எங்கள் தமிழினத்தின் ஒப்புயர் மிக்க தீர்க்கதரிசி பொன்மனச்செம்மலே! தமிழ் புத்தாண்டு தினம் முதல் பழைய செய்தியை, துயரங்கள் யாவும் மறந்து நாமும் நல்ல மனிதராக. தமிழைப்போற்றி தமிழகத்தில் நல்ல ஆரோக்கிய வாழ்வுடன் குடும்பத்துடன் வாழுங்கள் பல்லாண்டு... உரிமைக்குரல் ராஜு.......... Thanks wa.,
தினச்செய்தி -14/04/19
http://i65.tinypic.com/2v0d5jr.jpg