mr. Esvee sir's photos, documents are so super... and also prof. mr. Selvakumar's postings are so fine... mr. Lokanathan's registers so good... Kindly update the interview @Imayam TV programme in our thread mr. prof. sir...
Printable View
mr. Esvee sir's photos, documents are so super... and also prof. mr. Selvakumar's postings are so fine... mr. Lokanathan's registers so good... Kindly update the interview @Imayam TV programme in our thread mr. prof. sir...
தின இதழ் -13/11/2015
http://i63.tinypic.com/25ji2ib.jpg
இயக்குனர் திரு கோபால கிருஷ்ணன் அவர்களின் மறைவிற்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை வைத்து ''தங்கத்திலே வைரம் '' படம் தயாரிக்க உள்ளதாக முழுப்பக்கம் விளம்பரம் வந்தது .
சங்கே முழங்கு படத்திற்கு திரு கே.எஸ். ஜி அவர்கள் வசனம் எழுதினார் .படத்தில் இடம் பெற்ற காட்சிகள் எல்லாமே மிகவும் பிரமாதமாக இருந்தது .குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் மக்கள் திலகம் எம்ஜிஆர் நீதி மன்றத்தில் வாதாடும் காட்சிகள் , குறுக்கு விசாரணை காட்சிகள் மறக்க முடியாதது .
https://youtu.be/GUL62HGORog
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் "பரிசு " திரைப்படம் வெளியான நாள் :
15/11/1963. திரைப்படம் வெளியாகி 52 ஆண்டுகள் நிறைவு பெற்றது.
சிறு வயதில் , கிரௌன் திரை அரங்கில் , முதல் வெளியீட்டில் பார்த்துள்ளேன்.
பின்பு 1974 ஆண்டு முதல் பல அரங்குகளில் கண்டு களித்த அனுபவமும் உண்டு.
திரை இசை திலகம் கே.வி. மகாதேவன் இசையில் தேனான பாடல்கள் நிறைந்த படம்.
1. ஆளைப் பார்த்து அழகைப் பார்த்து
2. பட்டு வண்ணச் சிட்டு
3. எண்ண எண்ண இனிக்குது
4. கூந்தல் கருப்பு. குங்குமம் சிவப்பு
5. பொன்னுலகம் நோக்கி போகின்றோம்
6. காலமெனும் நதியினிலே
மக்கள் திலகம் துப்பறியும் அதிகாரியாக திறம்பட நடித்த படம்.
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நடிகை சாவித்திரி நடித்த காதல் காட்சிகள்
இந்த படத்தில் சற்று வித்தியாசமான கோணங்களில் படமாக்கப்பட்டிருக்கும்.
நாகேஷ் தன் பாணியில் நகைச்சுவையில் கலக்கலாக நடித்துள்ளார்.
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள் இந்த படத்தில் புதுமையான வடிவத்தில் டி ஷர்ட்டுகள் அணிந்து ரசிகர்களை பரவசப்படுத்தினார். படத்தில் வரும் "வி " கட் டி ஷர்ட்டுகள் அப்போது பிரபலம்.
அந்தக் காலத்தில் இருந்தே , இந்த திரைப்படத்திற்கு பெண்கள் ஆதரவு சற்று
அதிகம் உண்டு. எப்போது திரையிடப்பட்டாலும் கணிசமான பெண்கள் கூட்டம்
வருவதுண்டு.
நடிகை ராகினிக்கும் ஒரு சோகப் பாடல் உண்டு. ஆனாலும் அதில் சோபித்து
ஆடிப் பாடி நடித்துள்ளார்.
அந்தக் காலத்தில் , இலங்கை வானொலியில், ஐந்து ருபாய் பொருள் வாங்கும் விளம்பரத்திற்கு, எண்ண எண்ண இனிக்குது, ஏதோதோ நினைக்குது, வண்ண வண்ண தோட்டங்கள் அஞ்சு ருபாய் என்ற இந்த படப் பாடலின் வரிகளை அதிகம் பயன்படுத்தி உள்ளனர்.
1963ல் மக்கள் திலகம் நடித்து 9 படங்கள் வெளியாகின. 1963ல் தீபாவளி
வெளியீடாக வந்து வெற்றிக் கொடி நாட்டிய படம்..
http://i64.tinypic.com/2e3shn9.jpg