-
பொங்கும் பூம்புனல்
அடுத்து இடம் பெறுவது 1950ம் ஆண்டில் வெளிவந்த ராஜ விக்ரமா படத்திலிருந்து...
கெம்ப்ராஜ் அர்ஸ், ஜெயம்மா, எம்.வி.ராஜம்மா, கணபதி பட் மற்றும் பலர் நடித்த படம். யூனிட்டைப் பார்த்தால் கன்னட மொழி மாற்றப் படமாகத் தோன்றுகிறது. இசை எஸ்.ராஜம் ... எஸ்.பாலச்சந்தரின் மூத்த சகோதரர்.
இந்தப் பாடல் அப்படியே வாழ்க்கை படத்தில் இடம் பெற்ற உன் கண் உன்னை ஏமாற்றினால் பாட்டையும், எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே என்ற இன்னொரு பழைய பாடலையும் சேர்த்து அமைத்த மெட்டாக ஒலிக்கிறது.
எது எப்படியோ பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அலுக்கவே அலுக்காது.
http://www.inbaminge.com/t/r/Raja%20Vikrama/
இதில் இடம் பெற்ற இன்னொரு பாடலான பாழும் அடுப்பை ஊதி ஊதி பாடலைக் கேட்க மறக்காதீர்கள். மந்திரி குமாரி படத்தில் பிரபலமான எஸ்.ஏ.நடராஜனும் பி.லீலாவும் இணைந்த பாடல் நகைச்சுவையாகவும் யதார்த்தமான பேச்சு வழக்கில் பாடல் வரிகளும் இப்பாடலை சுவையாக அமைத்துள்ளன.
இதையும் கேட்டு மகிழுங்கள். பி.லீலா வின் குரலில் சென்னைத் தமிழைக் கேளுங்கள்.
இது மட்டுமின்றி எஸ்.ராஜம் அவர்களே பாடிய நாதோபாஸனையே பாடலையும் கேட்க மறக்காதீர்கள். பி.யு. சின்னப்பாவின் காதல் கனிரசமே பாடலின் மெட்டு.
-
பொங்கும் பூம்புனல்
சி.ஆர்.சுப்பராமனைத் தமிழ்த் திரையுலகம் மிகவும் மிஸ் பண்ணுகிறது. 1950ல் வெளி வந்த விஜயகுமாரி திரைப்படம் மிகச் சிறந்த உதாரணம். குறிப்பாக ஆணவத்தினாலே என்ற இந்த கோரஸ் பாடல் ... என்ன வெரைட்டி... மேற்கத்திய மெட்டையும் நம்முடைய இசையையும் கலந்து அருமையாக அளித்துள்ளார். நடுவில் கைதட்டல் ஒலியும் அவ்வப்போது இணைந்துள்ளது. அருமையான பாடல்..
http://www.inbaminge.com/t/v/Vijayakumari/
-
பொங்கும் பூம்புனல்
ஆசைக்கிளியே உன் ஜோடி எங்கே சொல் ...என்று கேட்கும் சாக்கில் தன் காதலனைத் தேடுகிறாளோ இவள்..
எப்படியெல்லாம் கிளியை தாஜா செய்கிறார் பாருங்கள்.. உன் கனிமொழி கேளாதாரே இந்த உலகினிலே தான் கிடையாதே...
நல்ல பெண்ணாய் தேடி பிடிக்க வேண்டுமாம் அந்தக் கிளி..
ரசிக்க வைக்கும் வரிகள்..
ஏழை படும் பாடு படத்திலிருந்து அருமையான பாடல்
http://www.inbaminge.com/t/y/Yezhai%20Padum%20Paadu/
-
குமரிமுத்து அந்த சிரிப்பே போதுமே
அவரை பல நாட்களுக்கு பிறகு பார்த்தபோது மகிழ்ச்சி
http://www.youtube.com/watch?v=67EqPFuXQR4
இதோ வினுச்சக்ரவர்த்தி .. கம்பீர குரலுக்கு சொந்தக்காரரை இப்படி பார்க்க கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது
http://www.youtube.com/watch?v=mk2N2u1XFP0
-
இன்றைய ஸ்பெஷல் (78)
பின்னாட்களில் வந்த ராட்சஸியின் பாடல்களில் மிகச் சிறப்பு வாய்ந்த பாடல்களில் இது ஒன்று.
http://i45.tinypic.com/2qx4vhy.jpg
எனக்கு மிக மிக பிடித்ததொரு பாடல். இப்பாடலைக் கேட்டு நான் சொக்கிப் போகாத நாளே இல்லை எனலாம். ஆனாலும் அவ்வளவாக சேனல்களிலோ, வெளியிடங்களிலோ கேட்க முடியாத பாட்டு. தீவிர நடிகர் திலகத்தின் ரசிகர்கள் வேண்டுமானால் ஓரளவிற்கு தெரிந்து வைத்திருக்கலாம் அல்லது மது அண்ணா, ராஜேஷ்ஜி போன்ற சிறந்த ஞாபக சக்தியாளர்களுக்கு தெரிந்திருக்கலாம்.
பொதுவாகவே ஈஸ்வரி அக்காவின் குரல் ஜெயலலிதா அவர்களுக்கு அப்படியே அருமையாகப் பொருந்தும். நீ, குமரக் கோட்டம், நம்நாடு, ஒளிவிளக்கு, நான், வந்தாளே மகராசி என்று நிறையப் படங்களை சொல்லலாம். அவ்வளவு ஏன். மேடத்தின் முதல் படமான 'வெண்ணிற ஆடை'யிலேயே 'நீ என்பதென்ன' என்ற ஒரு ஈஸ்வரியின் அட்டகாசமான பாடலுக்கு ஜெயலலிதா அற்புதமாக பாடி ஆடி நடித்திருப்பார். ஈஸ்வரி மிகக் கடினப்பட்டு அப்பாடலைப் பாடியிருப்பார்.
"எல்லோரும் 'சிவந்த மண்' படப் பாடலான 'பட்டத்து ராணி' பாடலுக்குத் தான் நான் ரொம்ப சிரமப்பட்டேன் என்று சொல்வார்கள் ஆனால் நான் மிகச் சிரத்தை எடுத்து சிரமப்பட்டு பாடிய ஒரு பாடல் எதுவென்றால் அது 'நீ என்பதென்ன' பாடல்தான்" என்று ராட்சஸியே ஒருமுறை பேட்டி அளித்திருந்தார்.
அப்படி அம்மாவும், அக்காவும் கூட்டணி அமைத்துக் கொண்டு நமக்கு அளித்த இன்னொரு காலத்தால் அழிக்கமுடியாத பாடல்தான் இன்றைய ஸ்பெஷலாக வரும் 'காலம் உண்டு பருவம் உண்டு' என்ற 'சித்ரா பௌர்ணமி' படப்பாடல்.
http://i1087.photobucket.com/albums/..._000113957.jpg
நடிகர் திலகம் ஹீரோவாக, செங்கோடனாக அட்டகாசம் செய்ய அவரது காதலியாக மேடம். படத்தில் ஜெயலலிதா அறிமுக சாங் இது. 'உத்தமன்' படத்தில் 'படகு படகு' பாடலின் ஸ்கேட்டிங் போல ஸ்கேட்டிங் பண்ணியபடியே ஜெயலலிதா பாடுவது போல் அமைந்த ஒரு பாடல்.
'மெல்லிசை மன்னர்' இசை. அருமை என்று சொல்வது எளிதான வார்த்தை. அவ்வளவு அட்டகாசமான கோரஸ். அவ்வளவு அருமையான இடையிசை. டிரம்பெட் கலக்கல். பாடலின் ஆரம்ப இசையும், முடிவிசையும் அற்புதம். ஈஸ்வரியை இன்னும் அலட்சியமாகப் பாட வைத்திருப்பார். மாதவன் இயக்கம்.
இனி பாடலின் வரிகள்.
http://i1087.photobucket.com/albums/..._000092039.jpg
காலம் உண்டு
பருவம் உண்டு
மனம் போல் ஆடல் பாடல்
அதிகம் உண்டு
காலம் உண்டு
பருவம் உண்டு
மனம் போல் ஆடல் பாடல்
அதிகம் உண்டு
வான் கொண்ட மேகம்
நான் கொண்ட கூந்தல்
தேன் கொண்ட செவ்வாய்
மீன் கண்ட கண்கள்
எவர் கண்ட போதும்
கவி வந்து மோதும்
எவர் கண்ட போதும்
கவி வந்து மோதும்
கன்னித்தேன் ஊரில் ஒன்று
உலவும் இன்று
காலம் உண்டு
பருவம் உண்டு
மனம் போல் ஆடல் பாடல்
அதிகம் உண்டு
(அருமையான கோரஸ்)
ரோம் நாட்டு ராணி
பால் போன்ற மேனி
கலை கொஞ்சும் வாணி
கரை கண்ட ஞானி
ரோம் நாட்டு ராணி
பால் போன்ற மேனி
கலை கொஞ்சும் வாணி
கரை கண்ட ஞானி
கதை இந்தக் கண்ணில்
சுகம் இந்தப் பெண்ணில்
புள்ளி மான் ஊரில் ஒன்று
உலவும் இன்று
(அந்த
'ரோம் நாட்டு ராணி
பால் போன்ற மேனி'
வரிகளில் ஈஸ்வரி காட்டும் அலட்சிய பாவம் நம்மை வியக்க வைக்கிறது. அடுத்து வரும் 'புள்ளி மான்' வரிகளில் 'மா...ன்' என்று 'மா'வுக்கு ஒரு அழுத்தம் கொடுத்து தூக்குவது இன்னும் இன்னும் வியப்பு)
காலம் உண்டு
பருவம் உண்டு
மனம் போல் ஆடல் பாடல்
அதிகம் உண்டு
ஆண்டாண்டு காலம் நாடாண்ட மன்னன்
தான் சாய்ந்த மஞ்சம்
பெண் கொண்ட நெஞ்சம்
மலர் எங்கள் தேகம்
மனம் கொண்ட யோகம்
நான் பெண்மை என்னும் பெருமை உண்டு
காலம் உண்டு
பருவம் உண்டு
மனம் போல் ஆடல் பாடல்
அதிகம் உண்டு
http://www.youtube.com/watch?v=fA0o1...yer_detailpage
-
வாசு ஜி வருக வருக
காலை வணக்கம்
-
ராஜேஷ்ஜி
வணக்கம்.
விருந்தினர் பக்கம் குமரிமுத்து, வினு பேட்டிகளை இங்கு பதிப்பித்ததற்கு நன்றி!
மறைந்து போனவர்களையும், மறந்து போனவர்களையும், மறக்கடிக்கப் பட்டவர்களையும் நமது திரி எவ்வளவு அழகாக நினவு கூறகிறது!
-
ராகவேந்திரன் சார்,
இன்றிலிருந்து வாக்கிங் மறுபடியும் போகிறேன்.
-
கிருஷ்ணா சார்,
'காதல் கனி ரசமே' சின்னப்பாவின் சிகரப் பாடலுக்கு நன்றி!
சந்திரசேகர் ரங்கநாதன் கிடாரிஸ்ட் பற்றிய வெளியே தெரியாத தகவல்களைத் தந்து அந்த கலைஞனுக்கு பெருமையும், புகழும் சேர்த்து விட்டீர்கள். உன்னதமான உங்கள் பணி பாராட்டுக்குரியது மட்டுமல்ல போற்றுதலுக்கும் உரியது.
ராஜரிஷியின் அருமையான பாடலான மாதவம் ஏன் பாடலின் வரிகளுக்கு உங்களுக்கு ஒரு 'ஓ'
-
மதுஜி!
'பெண்ணே நீ வாழ்க' கதை சுருக்கத்தை சிறப்பாக அளித்து என் நெடுநாளைய சந்தேகத்தைப் போக்கி விட்டீர்கள். நான் அந்தப் படம் இன்னும் பார்க்க வில்லை. பாடல் வரிகளை வைத்து ஒருவேளை இப்படித்தான் கதை இருக்குமோ என்று சந்தேகத்துடன்தான் நேற்றைய ஸ்பெஷலை எழுதினேன். அதற்கு மணிமகுடம் சூட்டியது போல அற்புதமான விளக்கம் அளித்து விட்டீர்கள். தங்கள் கதைச் சுருக்கத்தைப் படித்தவுடன் பாடல் வரிகளின் அர்த்தம் அழகாகப் புரிகிறது.
'ராகங்கள் மாறுவதில்லை' படத்தின் 'விழிகள் மீனோ' பாடலும் அற்புதம். எனக்கு இன்னொரு பாடல் ரொம்பப் பிடிக்கும். ஜானகி அம்பிகாவுக்காக கோரஸுடன் பாடுவார்.
'வான் மீதிலே அதிகாலை நேர ராகம்
நான் பாடுவேன் மனதோடு இன்ப ராகம்
அருமையோ அருமை. ராஜா பின்னல்.
https://www.youtube.com/watch?featur...&v=fBPENj0q_Iw
அதே போல வாழ்நாள் கீதமான 'ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை' பாடலை அளித்து ஆசையை தீர்த்து வைத்ததற்கு நன்றி!
இப்போது பாடலை விட ஸ்ரீப்ரியா அதிகம் கவர்கிறார்.:) ம்.. எல்லாம் நம் சி.கா கூட்டினால் வந்த வினை.:) ஆனால் சி.காவுடன் நட்பு இதே போலத் தொடர இன்னும் விருப்பம்.:)