Originally Posted by
puratchi nadigar mgr
தினமலர் -26/7/2017
பெரம்பலூர் - முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு , அரசு பள்ளிகளை சார்ந்த 100மாணவியர், 10000 சதுரடியில் எம்.ஜி.ஆர். உருவப்படம் வரைந்து அசத்தினர் .
மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா ஆகஸ்ட் 5ல் பெரம்பலூரில் நடக்கிறது .விழாவில் முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார் .
இதையொட்டி பள்ளி மாணவ மாணவியருக்கான பல்வேறு போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன .
இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் , அரசு மேல்நிலை பள்ளிகளை சார்ந்த 100மாணவியர், 10 ஆயிரம் சதுரடி பரப்பளவில்
எம்.ஜி.ஆரின் உருவப்படத்தை நேற்று வரைந்தனர் .
முன்னூறு கிலோ உப்பு, ,/0 கிலோ கலர் போடி, /0கிலோ கோலமாவு ,, 200 கிலோ சுண்ணாம்பு , ஆகியவற்றின் மூலம் 100 அடி நீளம் , மற்றும் 100அடி அகலத்தில் படத்தை வரைந்து முடித்து பாராட்டு பெற்றனர் .