-
Tamil cine Talk -
வலைப்பூவில் படித்து பிடித்து பிடிக்கப்பட்ட பதிவு
http://www.tamilcinetalk.com/wp-cont...layaraja-2.jpg
ஈரோட்டில் நடந்த புத்தகக் கண்காட்சியை இசைஞானி இளையராஜா திறந்து வைத்தார். கண்காட்சி நடக்கும் பன்னீர்செல்வம் பூங்காவில் கட்டுக்கடங்காத கூட்டம். இளையராஜாவை பார்க்க அவரது ரசிகர்களும், புத்தகப் பிரியர்களும் ஒன்று சேர வந்திருந்ததால் கூட்டம் அலைமோதியது.
இளையராஜாவின் கார் மைதானத்திற்குள் நுழையக் கூட கஷ்டப்பட வேண்டியதாகிவிட்டது.. கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது சிரமமாக இருந்ததால், இளையராஜா நேரடியாக மேடைக்கு அழைத்து செல்லப்பட்டார். தொடக்க விழா மேடையில் பேசும்போது, நேரடியாக சென்று திறக்க முடியாததால், மானசீகமாக மேடையில் இப்போது இருந்தபடியே திறந்து வைப்பதாகக் கூறி அரங்குகளைத் திறந்து வைத்தார்.
பாட்டு பாடும்படி கோரஸாக மக்கள் மத்தியில் இருந்து குரல்கள் எழ.. இசைஞானியும் சிரித்துக் கொண்டே “பாடலைன்னா விடவா போறீங்க…” என்று சொல்லிவிட்டு ‘இதயம் ஒரு கோயில்’, ‘ஜனனி ஜனனி’ உள்பட நான்கு பாடல்களை மேடையில் பாடினார். ‘இதயம் ஒரு கோயில்’ பாடலைப் பாடும்போது, ‘நீயும் நானும் ஒன்றுதான்.. எங்கே பிரிவது?’ என கூடியிருந்த மக்களைப் பார்த்து கை நீட்டிப் பாட, அர்த்தம் புரிந்து கூட்டம் ஆர்ப்பரித்தது..!
பின்னர், ‘உங்களுக்காகத்தான் நான்… உங்களைப் பார்க்கத்தான் வந்திருக்கிறேன்’ என்று கூறி, தனக்கும் ஈரோட்டுக்கும் உள்ள நெருக்கமான தொடர்பைப் பகிர்ந்து கொண்டார்.
“கடந்த 1960 முதல் 1968-ம் ஆண்டுவரை ஈரோடு நகரில் எனது கால் படாத இடங்களே கிடையாது. இன்று இருக்கும் ஈரோடு நகரை அப்போது நான் கனவில்கூட சிந்தித்து பார்த்தது இல்லை. எனது சகோதர்களுடன் ஈரோடு நகரம் முழுவதும் பாடல் பாடி வந்திருக்கிறேன்.
எனது சகோதரர்களுடன் சென்னைக்கு கிளம்புவதற்கு முன் கடைசியாக கலை நிகழ்ச்சி நடத்திய இடம் கோவை மாவட்டம். வீட்டில் இருந்த ஒரு பழைய ரேடியோவை ரூ.400-க்கு விற்று அந்தப் பணத்தை எங்களுக்குக் கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்தார் எங்க அம்மா.
ஆர்மோனிய பெட்டி, தபேலா, கிதார் இதை மட்டும் எடுத்துக்கிட்டு சென்னைக்கு கிளம்பினோம்.. அங்கே அவைகளை வைத்துதான் இசை அமைத்தோம். தானாக இசை அமைத்து டியூன் போடும் கலைஞர்கள் இனிமேல் இக்காலத்தில் பிறக்கப் போவதில்லை. நான் இசையமைத்த திரைப்படங்களில் பல கவிஞர்களின் பெயரில் வந்த பல பாடல் வரிகள் எனக்குச் சொந்தமானவைதான்.
தன்னை மட்டுமே தம்பட்டம் அடிக்க வேண்டும். மற்றவர்களை திட்ட வேண்டும் என்பதற்காகவே இப்போது பொது நிகழ்ச்சி மேடைகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொது மேடை நிகழ்ச்சிகளை நான் தவிர்த்து வருகிறேன்.
கல்வி என்பது புத்தகத்தில் இருந்து மட்டுமே கிடைப்பதல்ல. பரந்து கிடக்கிறது. எதில் இருந்தும் படிக்கலாம். வாழ்க்கையேகூட படிப்புதான். இதயம் ஒரு கோவில் போன்றது. ஆனால், நாம்தான் அதை சாக்கடையாக மாற்றி வைத்திருக்கிறோம். இதயம் என்னும் கோவிலை நல்ல நூல்கள் மூலம் சுத்தப்படுத்தப்படுத்தலாம்.
நான் பாடிய, இசை அமைத்த பாடல்கள் எல்லாம், நான் பாடுவதற்கு, இசை அமைப்பதற்கு முன்பே இருந்தவை. அதனால்தான் எனக்கு தானாக வருகிறது. சப்தம், நாதம் இல்லாமல் உலகம் இல்லை. உண்மையைச் சொன்னால் நமது நாத மண்டலம் நாசப்படுத்தப்பட்டுக் கிடக்கிறது. சுத்தமான இசை மூலம் நாத மண்டலத்தைச் சரிப்படுத்த முடியும். இப்போது வரும் இசை நமது மூளையை மழுங்கச் செய்யும் வகையில்தான் இருக்கிறது. எனவே, சுத்தமான இசையைக் கேட்க பொதுமக்கள் முன் வர வேண்டும்…” என்றார்.
-
ராமன் தேடிய சீதை 1972
பாடகர் திலகம் - ஈஸ்வரி இருவரின் அட்டகாசமான குரலில் இடம் பெற்ற பாடல் ''படார் .படார் ''
கலவையான பாடல்கள் - இனிமையான இசை .அதிகம் பிரபலம் ஆகாத பாடல் .என்னுடைய
விருப்பமாக இன்றைய பாடல் .
http://youtu.be/hPeBJNq1NJs
-
எஸ்வி ,
நிஜமாகவே இது உங்கள் விருப்பமா?
-
குமுதம் தீராநதி 2007 இதழ் ஒன்றை வாசிக்க அதில் கிடைத்த செய்தி.அனைவரும் அறிந்த ஒன்றே-இந்த இதழ் படிக்க வாய்ப்பு தந்த நண்பர் சரவணன் அவர்களுக்கும் என் நன்றி
'இ.பி.கோ. 326-வது பிரிவின் கீழும் மதுவிலக்கு சட்டத்தின் கீழும் புதுக்கோட்டையில் பிரபல நடிகர் கைது. மது அருந்தின குற்றத்திற்காகவும் தனது சொந்த வீட்டில் மதுவகை பாட்டில்கள் வைத்திருந்ததாகவும் மது அருந்திவிட்டு பக்கத்து வீட்டுக்காரர்களான செல்லையா, சந்தானம் பிள்ளை ஆகியோரிடம் சண்டைக்குச் சென்று அவர்களுக்குப் பலத்தக் காயத்தை ஏற்படுத்தியதாலும் கைது செய்யப்பட்டார்' என்று அன்றைய ஒரு சினிமா பத்திரிகையில் செய்தி வந்தது.
யார் அந்தப் பிரபலமான நடிகர்? அன்றைக்கு சூப்பர் ஸ்டாராக விளங்கிய பி.யூ.சின்னப்பாதான் அந்த பிரபல நடிகர்.
http://1.bp.blogspot.com/_Dcezi5xfsq...innappa555.jpg
மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் மாதம் 15 ரூபாய்க்கு வேலைக்குச் சேர்ந்தவர் பி.யூ.சின்னப்பா. பிறகு ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து டைரக்டர் பி.கே.ராஜா சாண்டோ இயக்கிய 'சந்திரகாந்தா' படத்தில் இணை கதாநாயகனாக சினிமா உலகத்திற்குள் வந்தவர் பி.யூ.சின்னப்பா. இந்தப் படத்தில் அவரது சொந்தப் பெயர் புதுக்கோட்டை சின்னச்சாமி.
அடுத்து வந்த 'ராஜமோகன்', 'அனாதைப் பெண்',' ய்யாதி', 'பஞ்சாப் கேசரி', 'மாத்ருபூமி' போன்ற எல்லாப் படங்களும் ஹிட். அதனால் புதுக்கோட்டை சின்னச்சாமி, 'பி.யூ.சின்னச்சாமி' என்று பெயர் மாறுகிறது.
1940-ல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து வெளிவந்த 'உத்தமபுத்திரன்' என்ற படம் சூப்பர் ஹிட். இதனால் சின்னப்பாவும் சூப்பர் ஹிட்டானார். சின்னப்பாவிற்கு சினிமாவிற்குள் வந்த காலத்திலிருந்தே மதுப் பழக்கம் இருந்திருக்கிறது. பிறகு அவரது புகழ் வளர வளர மதுப் பழக்கமும் வளர்ந்துவிட்டது.
முடிவு, புதுக்கோட்டையில் தனது நண்பர்களுடன் 'மணமகள்' படத்தைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிய பி.யூ.சின்னப்பா அன்றிரவே சென்னைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தபோது மயக்கமாக வருகிறது என்று ரத்தம், ரத்தமாக வாந்தியெடுத்து மயக்கமடைந்தார். அடுத்த அரை மணி நேரத்தில் அவரைப் பரிசோதித்த டாக்டர், கையை விரித்து விட்டார். ஆமாம், மிதமிஞ்சிய குடியால் பி.யூ.சின்னப்பா இறந்து போனார்.
இதேபோல், 1948-ல் 'குண்டூசி' என்ற இதழில் ஒரு செய்தி. 'நாதஸ்வர வித்வான் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை திருமலையில் சென்ற பிப்ரவரி மாதம் 15-ம் தேதி மதுவிலக்கு விதிகளை மீறி நடந்து கொண்டதற்காக சித்தூர் அடிஷனல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டால் இம்மாதம் 17-ம் தேதியன்று ரூபாய் 500 அபராதம் விதிக்கப்பட்டார்..'
1947 ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. இதை நாட்டு மக்களுக்கு பிரகடனப்படுத்த பிரமாண்டமான சுதந்திர விழா டெல்லியில் நடந்தது. அந்த விழா மேடையில் சுமார் 10 நிமிடம் மட்டுமே தனது நாதஸ்வரத்தை வாசித்துக் காட்டினார் ராஜரத்தினம் பிள்ளை. இதைக் கேட்டு இந்திய முதல் பிரதமர் நேரு அசந்து போனார். இவரது நாதஸ்வர இசைக்குப் பிறகுதான் இந்திய சுதந்திரப் பிரகடனத்தை நேரு வாசித்தார்.
'சினிமா ராணி' என்று போற்றப்பட்ட டி.பி.இராஜலட்சுமிதான் முதன் முதலில் இயக்கிய 'மிஸ் கமலா(1936)' படத்தில் கடைசியில் வரும் ஒரு திருமண நிகழ்ச்சியில் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வரம் வாசித்தார். இதுதான் சினிமாவுக்கு அவர் அறிமுகமான விதம்.
பிறகு 1940-ல் அமெரிக்கரான எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய 'காளமேகம்' படத்தில் டி.என்.இராஜரத்தினம் கதாநாயகன் அந்தஸ்து பெற்றார்.
இப்படி புகழ் பெற்றிருந்த டி.என்.இராஜரத்தினம் ஒரு மணி நேரத்தில் ஒரு கேஸ் அதாவது 12 பாட்டில்கள் மதுவை அருந்தும் அளவுக்கு மதுவிற்கு அடிமையாக இருந்தார். 1930-லிருந்து 1950-வரை அவர் சம்பாதித்த தொகை 5 கோடி. முதலில் கார் வாங்கிய நாதஸ்வர வித்வான்.
ஆனால் மிதமிஞ்சிய குடியினால் 1956 டிசம்பர் மாதம் 12-ம் தேதி மாரடைப்பால் இறந்து போனார். தன் வாழ்நாளில் 5 கோடி சம்பாதித்த டி.என்.இராஜரத்தினம் இறந்தபோது அவரது ஈமச்சடங்கு செலவை என்.எஸ்.கிருஷ்ணன்தான் செய்தார்.
http://3.bp.blogspot.com/_Dcezi5xfsq...0/krishnan.jpg
மதுவிலக்குப் பிரச்சாரத்தைப் பற்றி மக்களுக்கு புத்திமதி சொல்லி படம் எடுத்த என்.எஸ்.கிருஷ்ணன், அதிக மது அருந்தி வந்ததன் காரணமாக ஏற்பட்ட மஞ்சள் காமாலை, குலை வீக்கம் நோயினால் 1957 ஆகஸ்ட் 30-ம் தேதியன்று சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் இறந்து போனார்.
அடுத்து என்.எஸ்.கிருஷ்ணனின் மனைவி டி.ஏ.மதுரம். என்.எஸ்.கிருஷ்ணன் சினிமாப் பிரவேசம் செய்தது 1935-ம் ஆண்டு ன்றால், அதே வருடம் வெளியான 'ரத்னாவளி' படத்தின் மூலம்தான் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த மதுரமும் சினிமா நடிகையானார்.
'வஸந்தசேனா' என்ற படத்தில் நடிக்கும்போதுதான் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும், டி.ஏ.மதுரத்திற்கும் பழக்கம் ஏற்பட்டது. பிறகு, இந்தப் படத்தின் ஷ¥ட்டிங்கிற்காக பீகார் சென்றபோதுதான் அங்கே டி.ஏ.மதுரத்தை என்.எஸ்.கிருஷ்ணன் திருமணம் செய்து கொண்டார். கலைவாணர் இறந்த பிறகு ஒரு சில படங்களில் நடித்த டி.ஏ.மதுரம், அவருக்கும் ஏற்பட்ட குடிப்பழக்கத்தால் உடல் நலிவுற்று இறந்து போனார். அவர் இறந்தது 23.05.1974-ல்.
அடுத்ததாக நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி. அன்றைய காலத்தில் புகழ் பெற்ற நாடக சபாக்களில் ஒன்றான மங்கள கான சபா பெரும் நஷ்டத்தில் யங்கி வந்தது. இதை என்.எஸ்.கிருஷ்ணன் விலைக்கு வாங்கி, என்.எஸ்.கே. நாடகசபா என்று பெயர் மாற்றி கே.ஆர்.ராமசாமியிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்தார். கே.ஆர்.இராமசாமி குடிப்பழக்கத்திற்கு ஆட்பட்டிருந்ததால், கம்பெனி மீண்டும் அதே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தது.
இந்த நாடக சபா மூலமாகத்தான் அண்ணாவின் 'வேலைக்காரி' நாடகம் பிரபலமடைந்தது. இந்த நாடக சபாவிற்காக காஞ்சிபுரத்தில் 'திராவிட நாடு' ஏட்டை நடத்தி வந்த அண்ணாவிடம் ஒரு நாடகம் எழுதித் தருமாறு கே.ஆர்.இராமசாமி வேண்டினார். அண்ணாவைச் சந்திக்கும்போதுகூட கே.ஆர்.இராசாமி போதையிலேயே இருந்திருக்கிறார். இதைப் பார்த்து அண்ணாவே அப்பவே கண்டித்திருக்கிறார்.
பிறகு அண்ணா 'ஓர் இரவு' என்ற நாடகத்தை எழுதிக் கொடுத்தார். கே.ஆர்.இராமசாமி, என்.எஸ்.கிருஷ்ணன் சிபாரிசில் 'சிவசக்தி' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். பிறகு 1969-ல் வெளிவந்த எம்.ஜி.ஆர் நடித்த 'நம் நாடு' படம்வரையிலும் நடித்துப் பெரும் புகழைப் பெற்று வந்தார். அடுத்த இரண்டு வருடத்திலேயே அதாவது 1971 செப்டம்பர் மாதத்தில் தனது அதிகப்பட்ச குடியினால் இறந்து போனார்.
சரி அடுத்த நபர் யார்..? சாவித்திரி..
தமிழில்-85, தெலுங்கில்-92, இந்தியி-3, கன்னடத்தில்-1, மலையாளத்தில்-1. இதெல்லாம் அவர் நடித்தப் படங்கள்.
'·பாரின் ஸ்காட்ச்', 'வாட் 69', 'ஜின்', 'விஸ்கி', 'ரம்', 'பிராந்தி', 'பீர்', 'சர்க்கார் சாராயம்', 'ஜிஞ்சர் பிரிஸ்'.. இதெல்லாம் அவர் குடித்து முடித்த மதுவகைகள்.
இவர் காதல் மன்னன் ஜெமினிகணேசனின் மூன்றாவது மனைவி. 1951-ல் நடிகையான சாவித்திரி தனது சொந்த நிறுவனமான ஸ்ரீசாவித்திரி புரொடெக்ஷன்ஸ் சார்பில் 'குழந்தை உள்ளம்' என்ற படம் எடுத்தார். ஜெமினிகணேசன் கதாநாயகன். சவுகார்ஜானகி, வாணிஸ்ரீ ஆகியோர் கதாநாயகிகள். படம் படு தோல்வி.
இரண்டாவதாக சிவாஜியை வைத்து 'ப்ராப்தம்' (1971) என்ற படத்தைத் தயாரித்தார். இந்தப் படமும் படு தோல்வி. இதனால் தனது சொத்து பெரியளவிற்குத் தொலைந்தன. துக்கம் தாளாமல் எப்போதும் மதுவுடனேயே இருந்தார் நடிகையர் திலகம் சாவித்திரி.
வாழ்வின் ஒட்டு மொத்த நிம்மதியும் இழந்த சாவித்திரி, 1981 டிசம்பர் 26 நள்ளிரவில் இறந்து போனார்.
தனது உழைப்பால் வெற்றி முகத்தில் இருந்த சமயத்தில்தான் சொந்தப் படம் எடுத்து அதில் தனது சொத்துக்களையெல்லாம் இழந்து, கடைசியில் குடியில் மூழ்கி கல்லீரல் வீங்கி இறந்து போனார் சந்திரபாபு.
குடியினால் அழிந்த சினிமா பிரபலங்கள் இவர்கள் மட்டுமல்ல, கவியரசு கண்ணதாசன், கவிஞர் வயலார், ராமவர்மா, கம்பதாசன் இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
- தமிழ் உத்தம்சிங்
-
திரு கோபால் அவர்கள் கனகாங்கி என்ற ராகத்தை பற்றி குறிப்பிட்டு இருந்தார்கள்
http://upload.wikimedia.org/wikipedi...airavi_dvd.jpg
இந்த ராகத்தில் அமைந்த ஒரு மிக சிறந்த பாடல் சிந்து பைரவி படத்தில் ஜேசுதாஸ் குரலில் இடம் பெற்ற
மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்.
வானம் எங்கும் அந்தப் பிம்பம் வந்து வந்து விலகும்.
மோகம் என்னும் மாயப் பேயை நானும் கொன்று போட வேண்டும்.
இல்லை என்றபோது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும்.
தேகம் எங்கும் மோகம் வந்து யாகம் செய்யும் நேரம் நேரம்.
தாயே இங்கு நீயே வந்து தண்ணீர் ஊற்ற வேண்டும் வேண்டும்.
மனதில் உனது ஆதிக்கம்,
இளமையின் அழகு உயிரை பாதிக்கும்.
விரகம் இரவை சோதிக்கும்,
கனவுகள் விடியும் வரையில் நீடிக்கும்.
ஆசை என்னும் புயல் வீசி விட்டதடி!
ஆணி வேர் வரையில் ஆடிவிட்டதடி...!
காப்பாய் தேவி...! காப்பாய் தேவி...!
தானம்த தானத்தம்தம்தம்...! தானம்த தானத்தம்தம்தம்...!
ஆனந்தம்...!
தானம்த தானத்தம்தம்தம்...! தானம்த தானத்தம்தம்தம்...!
ஆனந்தம்...!
தொம்த தொம்தனன தொம்த தொம்தனன தொம்த தொம்தனன
தொம்தன தனனன....
தொம்த தொம்தனன தொம்த தொம்தனன தொம்..!
தொம் தொம் தொம் தொம் தொம் தொம் தன தொம்...!
தொம்தன தன தொம்...!
தொம்த தொம்தனன தொம்த தொம்தனன தொம்..!
ஆ......!
http://www.youtube.com/watch?v=peaoPaRwiKs
-
1963- CINE DAIRY
PLAY BACK SINGERS
http://i59.tinypic.com/19pnh2.jpg
-
-
-
-