https://scontent.fyto1-1.fna.fbcdn.n...7c&oe=5EC18901
Printable View
நடிகை தேவிகா!
கலை மகளின் அருளினால் தமிழ் மண்ணிற்கு கிடைத்த மாணிக்கமே! வற்றாத நடிப்பினால் பார் போற்ற வாழும் கலைமகனும் அவரே!
அவரிடம் இனிய பண்பும் உண்டு, இல்லை என்போருக்கு கொடுக்கும் ஈகை குணமும் உண்டு.எல்லோரும் புகழ் பெற வேண்டும் என்ற பெருந்தன்மையான குணம் உண்டு. ஆனாலும் அவரிடம் முன் கோபம் உண்டு. மனதில் பட்டதைப் படறென்று உரைத்திடும் முன் கோபம் அவரிடம் இருக்கிறது.
தாமதமாக வந்தாலும், சரியாக நடிக்கா வீட்டாலும், வசனங்களை மறந்து விட்டாலும், அவர் கோபப்படுவார். ஆனால், அது ஒரு குறைபாடல்ல, அவருடைய கோபம் எங்களுக்கு எல்லாம் யோகம்.
சாந்தி,கர்ணன், ஆகிய படங்களில் நான் அவரோடு நடித்த போது படப்பிடிப்புகளுக்கு தாமதமாக வருவேன். இதற்க்காக சிவாஜி என்னை பல முறை திட்டி இருக்கிறார். ஆனால் அவருடைய கோபம் யாரையும் பாதிக்காது என்பது அவருடன் பழகியவர்களுக்கு புரியும்.
நான் நடிகர் திலகத்துடன் பத்து திரைப்படங்களில் நடித்து இருக்கிறேன். அதற்கு முன்பு பம்பாய் மெயில், பராசக்தி ஆகிய நாடகங்களில் நடித்திருக்கிறேன்.நான் நாடகங்களில் நடிக்கும் போது அவருடன் கதாநாயகியாக நடிப்பேன் என்று நிச்சயமாக நம்பினேன்.
ஒருநாள் நான் கண்ட கனவில் கூட, பீச் ரோட்டில் சிவாஜி சென்று கொண்டிருப்பதை போலவும், திடீரென்று அவர் காரில் அடிபட்டு கீழே விழுவதை போலவும், உடனே அங்கு வந்த நான் என் மடியில் அவரை படுக்க வைத்து மருந்து போடுவது போலவும், கனவு கண்டேன்.
அந்த கனவை நான் வேடிக்கையாக தான் எண்ணினேன். ஆனால் பாவ மன்னிப்பு படத்தில் அதைப் போலவே நான் சிவாஜியை என் மடியில் கிடத்தி மருந்து போடுகிற காட்சி இடம் பெற்றிருந்தது. அதில் நானும் அவரும் நடித்தோம்.இதையெல்லாம் எண்ணிப் பார்த்து கொள்வேன்.
நான் சிவாஜியுடன் நடித்த படங்கள் குறைவு தான், என்றாலும் 100 படங்களில் நடித்ததை போன்ற நிறைவு எனக்குள் இருக்கின்றது.
சிவாஜியின் நடிப்பு முடிவு காணாத சிகரம், அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம். அவர் யாருக்கும் மனத்தால் கெடுதல் நினைத்தது இல்லை.
இத்தகைய பிறவி நடிகர் பல்லாண்டு வாழ பிராத்திக்கின்றேன்.
நடிகை தேவிகாவின் பத்திரிக்கை பேட்டியிலிருந்து...
நன்றி! திரு. வாசுதேவன் அச்சின் விஜயராகவன் அவர்கள்....
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...a4&oe=5EBEEEF0
Thank Ganesh Pandian