thanks Ravichandran Sir. நானும் ஒரு பச்சையப்பன் கல்லூரி மாணவன் என்று சொல்லி கொள்வதில் பெருமை அடைகிறேன்.
Printable View
பாடகி திருமதி எஸ் ஜானகி அவர்கள் பல பாடல்களை மக்கள் திலகத்தின் படங்களில் பாடியுள்ளார். அதில் அவருக்கு மிக பிடித்த பாடல்.
பாடல் - கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
படம் - சிரித்து வாழவேண்டும்
உடன் பாடியவர் - திரு t m s அவர்கள்
இசை - மெல்லிசை மன்னர் m s விஸ்வநாதன் அவர்கள்.
பாடல் எழுதியவர் - கவிஞர் வாலி
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்
மக்கள் திலகத்தின் படங்களின் பாடல் புத்தகத்தில் இடம் பெற்ற அனைத்து தகவல்களை தொகுத்து இதயக்கனி படம் மூலம் துவங்கி இருக்கும் உங்களின் பரந்த மனப்பான்மைக்கு மக்கள் திலகத்தின் திரியின் சார்பாக உங்களுக்கு அன்பு நன்றி .
இனிய நண்பர் சைலேஷ் சார்
மக்கள் திலகம் திரியில் மின்னல் வேக வீடியோ பதிவுகள் சூப்பர்.மக்கள் திலகத்தின் பல படங்களில் இடம் பெற்ற முக்கிய வசனங்கள் தொகுத்து நமது திரிக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள் .
அனைத்து வீடியோ தொகுப்பு -கண்டு களிக்க சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் ஆகும் .
மேலும் பல மக்கள் திலகத்தின் படங்கள் - வீடியோ என்று தொடர்ந்து பதிவிடவும்
இனிய நண்பர் ரவிச்சந்திரன் சார்
மிக அபூர்வமான மக்கள் திலகத்தின் படங்கள் - செய்திகள் அருமை .குறிப்பாக திருப்பூர் குமரன் துணைவியார் படம் .
சிரித்து வாழ வேண்டும் படத்தில இடம் பெற்ற கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் என்ற கனவு பாடலில் தான் மக்கள் திலகம் அவர்கள் மிக அதிகமான உடைகளில் பிரமாதமாக தோன்றி இளமையுடன் காட்சி அளிப்பார் .
மக்கள் திலகத்தின் கனவு பாடல்களில் மறக்க முடியாத பாடல் இது .