கார்த்திக்,
பிரமாதமான வைர நெஞ்ச அலசல்கள். உங்களால் மட்டுமே முடிந்த ஒன்று. மனநிறை பாராட்டுக்கள்.
Quote:
ஸ்ரீதரின் படங்களிலேயே நடிகர்திலகம் விக் வைத்து நடித்த ஒரே படம் இது.
வை.நெஞ்சத்திற்குப் பிறகு வந்த ஸ்ரீதரின் மோகனப் புன்னகை படத்தில் நடிகர் திலகத்திற்கு விக் உண்டு.
Quote:
ஸ்ரீதருக்கு கிரைம் சப்ஜக்டில் அனுபவமின்மை. (அவர் சிஷ்யரான சி.வி.ஆர். இதில் கில்லாடி).
கிரைம் படங்களில் சி.வி.ராஜேந்திரன் கில்லாடிதான். ஆனால் அவர் நடிகர் திலகத்தை வைத்து இயக்கிய கிரைம் படங்கள் இந்தியிலிருந்து இறக்குமதியானவை. (ராஜா, நீதி, என்மகன், உனக்காக நான், சங்கிலி, தியாகி ) எனவே அவர் அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. அதுவும் பாலாஜியின் ஈயடித்தான் காப்பி விருப்பத்திற்கு ஏற்ற நபர் சிவிஆர்.
பிற்போக்கான இன்னும் ஒரு சில விஷயங்கள்
சிவாஜி அவர்களுக்கு சில இடங்களில் அவர் சொந்தக் குரல் இல்லை. டப்பிங் எனப்படும் பின்னணிக் குரல் கொடுத்து சொதப்பியிருந்தார்கள்.
அப்படியே இருந்தாலும் பின்னணி கொடுத்தவரின் குரலும், நடிகர் திலகத்தின் உதட்டசைவும் கொஞ்சமும் பொருந்தவில்லை. தெலுங்கு மாற்று மொழி படம் போல சில காட்சிகள் அமைந்திருந்தது வேதனை.
சண்டைக்காட்சிகளில் பங்கு பெற்ற நபர்கள் பெரும்பாலும் இந்தி ஸ்டன்ட் நடிகர்கள். எனவே சில இடங்களில் இந்திப் படத்திற்கு வந்து விட்டோமோ என்ற எண்ணம் ஏற்படும்.
ஸ்ரீதர் சிவந்த மண்ணிலேயே சண்டைகாட்சிகளில் நடிகர் திலகத்தை கேவலம் தேங்காய் சீனிவாசன், ஹரி கிருஷ்ணன் போன்ற துண்டு துக்கடாக்களோடு மோத விட்டு வயிற்றெரிச்சலைக் கிளப்பினார்.