http://i1039.photobucket.com/albums/...psy5saasmx.jpg
Printable View
ஓரிரு நாட்களுக்கு முன், ஒரு திருமண விழாவிற்காக கோவை செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சந்தர்ப்பத்தில் கிடைத்த சமயத்தில் திரு செந்தில்வேல் அவர்களை சந்தித்தேன். என்ன ஒரு அருமையான நிகழ்வு. அவருடைய சகோதரர் மற்றும் அவருடைய நட்பு வட்டாரத்தைப் பற்றியும் அவர்கள் நடிகர் திலகத்தின்பால் கொண்ட ஆழ்ந்த அன்பையும் பற்றி அருமையாகச் சொன்னார். தன்னிடமிருக்கக் கூடிய ஆவணங்களை எடுத்துக் காட்டி வியப்பில் ஆழ்த்தினார். பெரும்பாலானவற்றை அவர் முன்னமே பகிர்ந்து கொண்டு விட்டார். இன்னும் சில உள்ளன.
அவருடைய முனைப்பும் இளம் வயதில் அவர் நடிகர் திலகத்தின் பால் வைத்திருக்கும் அளவற்ற பாசமும் அனைவருக்குமே ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கின்றன.
திரு கோவை செந்தில்வேல் அவர்களுக்கு என் உளமார்ந்த நல்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கூறிக்கொள்கிறேன்.
அன்புடன் உபசரித்தமைக்கு உளமார்ந்த நன்றி செந்தில்வேல்
http://i1028.photobucket.com/albums/...psxvyh5fd7.jpg
"தங்கைக்காக"
பார்த்து வந்தேன்-
தலைவனுக்காக.
மதியம் என்ன சாப்பிட்டோம்?
என்று இரவில் மறந்து போகிற
மனித மறதி யதார்த்தம் தகர்த்து, மாசற்ற கலைஞனை
ஒரு நொடியும் மறவாத
மக்களின் கடல் அலையடித்தது
மதுரை சென்ட்ரலில்-
தலைவனுக்காக.
அரங்கத்தின் உள்ளிருந்து
ஆர்ப்பரிக்கும் கூட்டத்திற்கு
இணையாக, அரங்கத்தின்
வெளியிலிருந்து ஒரு கூட்டம்
பாடுபட்டதெல்லாம்-
தலைவனுக்காக.
கலையை உயரத்திற்குக்
கொண்டு போன
காவியக் கலைஞனின்
உருவப் படத்தில்
மாலைகள் சூட்ட
உயிர்ப் பயம் மறந்து
உயரத்தில் ஏறி நின்ற
ரசிகனின் துணிச்சல்-
தலைவனுக்காக.
கலையின் மறுவடிவத்தைத்
தமது கந்தகக் குரலால் சத்தமாய் வாழ்த்தி, அரங்க வாசலில் வெடிகள் பேசியதெல்லாம்-
தலைவனுக்காக.
நடிகர் திலகம் பால்
கொண்ட அன்பால், பருத்திப்பால் வியாபாரி ஒருவர்
தனது தள்ளுவண்டியை
அய்யனின் படங்களாலேயே
அலங்கரித்து, அய்யனின் படப்
பாடல்களையே அதனுள்
ஒலிக்கச் செய்து, உண்மை
ரசிகனுக்கு உதாரணமாய்
அரங்கத்தின் எதிரே நின்றது-
தலைவனுக்காக.
திரைப்படம் துவங்குவதைத்
தெரிவிக்க மணிச்சத்தம்
ஒலித்ததும், ஓங்கிக் குரலெடுத்து கூட்டம் மகிழ்ந்தது-
தலைவனுக்காக.
"நடிகர் திலகம் சிவாஜி கணேசன்" என்று
திரையில் ஓடிய எழுத்துக்களை
எல்லோரும் இதயத்துக்குள்
ஒரு முறை ஓட விட்டது-
தலைவனுக்காக.
மிக எளிமையான, அடுத்தடுத்து
எப்படி காட்சிகள் அமையுமென்று எவரும்
யூகித்து விட முடியும் ஒரு
திரைப்படம், ஒரு பிரம்மாண்ட
ரசாயனம் பூசிக் கொண்டது-
தலைவனுக்காக.
அண்ணன்- தங்கை பாசக் கதை
என்றாலே அழத் தயாராகும்
கண்களில், இந்தப் படம் பார்த்து
மகிழ்ச்சி துளிர்க்கிறது-
தலைவனுக்காக.
கண்களை மூடிக் கொண்டு,
கைநீட்டி நம்மவர் நடந்து
வரும் அறிமுகக் காட்சியை,
கண்கொட்டாமல் ரசிக்கும்
கூட்டத்தின் சந்தோஷம்-
தலைவனுக்காக.
ஓட்டுநர் சீருடை அணிந்து,
பூட்ஸ் சப்திக்க, நம்பியாரை
நோக்கி நடக்கும் அந்த ராஜநடை கண்ட ரசிகர்கள்
கூவல்-
தலைவனுக்காக.
தன்னைத் தாயாகவும், தந்தையாகவும் பாவித்துத்
தங்கை பாட, இதழ்களும்,
கண்களும் சிரிக்க, கன்னத்தில்
கை பொருத்திக் காட்டும்
பேரழகை, கலையன்னை
ஒருவருக்குத்தான் தந்தாள்-
தலைவனுக்காக.
"உன்னோட பொன்னான
கைக்கு தங்க வளையல்
போடப் போறேம்மா" மிகச்
சாதாரண தமிழ் வார்த்தைகள்,
தம்மைப் பேசிக் கௌரவப்படுத்தக் காத்திருந்தன-
தலைவனுக்காக.
------------------------
பாலையாவிடம் ஒரு காட்சியில் சொல்கிறார்..
"எனக்கு வண்டி ஓட்டத் தெரியும்..வாங்க." என்று.
ஒரு வசனமாக ஒப்பிக்காமல்,
தனக்குத் தெரிந்ததை,தெரியும்
என்று சொல்லும் மனிதராய்
வாழ்ந்து நகரும் போது
எனக்குள் நிகழ்ந்த ரசனை
மேம்பாட்டை..
ஆயிரம் அலைச்சல்களுக்கும்,
அலுப்புக்குமூடே என்னையும்,
என் கவிதையையும் நலம்
விசாரித்த திரு.சுந்தரராஜன்,
அன்பு மாறாத திரு.V.C.S,
எப்பவும் போல் சுறுசுறுப்பாய்
திரு.வெங்கடேஷ், முதன்முறையாய் நேரில்
சந்தித்த திரு.கார்த்திகேயன்,
அருகிருந்து அன்பு பாராட்டி,
பின்னிரவில் சிற்றுண்டியோடு
என்னை உடன் வந்து வழியனுப்பி வைத்த
திரு.குமார்..
இவர்கள் காட்டிய அப்பழுக்கற்ற பேரன்பை..
நன்றிகளோடு
சமர்ப்பிக்கிறேன்..
நம் தலைவனுக்காக.
மாலை மயங்கும் நேரம். மாநகரிலே மிகப் பெரிய அரங்கம். அரங்கத்தினுள்ளில் நீள மேடை. ஒளிர்ந்து கொண்டிருக்கும் விளக்குகள் அணைகின்றன. மேடையின் நடுவில் ஒரு வெண் திரை உயிர் பெறுகிறது.
பனிமலைகள் மூடிய இமயம். தங்கள் தவ வலிமையினால் ஈசனை நேரில் காணும் பாக்கியம் பெற்ற சிவனடியார்கள் ஓர் இடத்தில குழுவாக நின்று சிவன் நாமத்தை உச்சரிக்க, மற்றொரு இடத்தில சுடுகாட்டு புலையனின் தொண்டர் படையாம் பூதகணங்கள் தாளத்திற்கேற்றவாறு ஆடிக் கொண்டே மத்தளம் வாசிக்கிறார்கள். இந்த தாள லயங்களின் ஓசைக்கு நடுவே ஒரு தம்பூரா ஒலி உரத்துக் கேட்க பிரம்மபுத்திரன் தன் கம்பீரக் குரலில் சம்போ மகாதேவனை விளிக்க நந்தி தேவன் மிருதங்கம் வாசிக்க அங்கே பக்தி பரவச நிலை.
சுற்றிலும் புகை சூழ ஒரு குழுவாய் கூடி தேவ கன்னியர் நடனமாட, புகை விலக, உலகாளும் உமையவள் அன்னை மலைமகள் பச்சை நிற மேனி கொண்ட சக்தியவள் கண் மூடி கரம் குவித்து பூவிதழ்கள் எடுத்து நமச்சிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க என்று உலகநாதனை தன் சரிபாதியை பூஜிக்க,
சிவனடியார்களும் பூதகணங்களும் நந்தி தேவரும் மகரிஷி நாரதனும் பார்வதி தேவியோடு சேர்ந்து உருகி தாழ் பணிய எங்கும் புகை சூழ்ந்து அனைவரையும் மறைக்க புகை விலக அங்கே புலித்தோல் ஆசனத்தில் அமர்ந்த உலகாளும் ஐயன் சர்வேஸ்வரன், கழுத்திலே நாகத்தை ஆபரணமாய் அணிந்து, கங்கையை தலையிலே சுமந்த பரம்பொருள் பரமசிவன் தன் கரம் உயர்த்தி உலக மக்களுக்கு ஆசி கூற அப்படியே திரை நிச்சலனமாக, மேடையிலும் புகை சூழ " உங்களையெல்லாம் 1965 ஜூலை மாதம் 31-ந் தேதிக்கு கூட்டிக் கொண்டு போய் விட்டோம் பார்த்தீர்களா" என்று அசரிரீயாய் ஒரு குரல் ஒலிக்க தங்கள் நாதனை கண்ட அபிமானிகள் கைத்தட்டலால அதை ஆமோதிக்க, அவர்களில் பக்தி முற்றிய சிலர் கைலாயம் சென்று தங்கள் சிவா[ஜி] பெருமானை நேரில் கண்ட ஆனந்தத்தில் கண்களில் கண்ணீர் நிறைந்து நிற்க,
இப்படியாகத்தானே தமிழ் திரையுலகத்தின் வரலாற்றை புரட்டிப் போட்ட புராண இதிகாச காவியமாம் திருவிளையாடல் திரைக்காவியத்தின் 50-வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம் இனிதே துவங்கியது!
(தொடரும்)
அன்புடன்
http://i1028.photobucket.com/albums/...psnpbpllv2.jpg
Dear all,we are glad to inform you,2nd movie of SIVAJI FILM CLUB is LOVE THRILLER "PUDHIYA PARAVAI"on 14.02.2016 at 5pm at Sruthi hall,sankaranpillai road near SRC. Annadurai,akila indhiya sivaji mandram.
இன்று மாலை, என் அலைபேசிக்கு இப்படி ஒரு குறுஞ்செய்தி...
"சிவாஜி ஃபிலிம் கிளப்"பின்
இரண்டாம் திரைப்படமாக,
வருகிற 14.02.2016 அன்று
திருச்சியில் "புதிய பறவை"
என்று.. அகில இந்திய சிவாஜி
மன்றத்தின் சிறப்பு அழைப்பாளர் திரு.அண்ணாதுரை அவர்களிடமிருந்து.
குறுஞ்செய்தி அனுப்பிய
கொஞ்ச நேரத்தில் அவரே
தொடர்பு கொண்டு பேசினார்.
திருச்சி மாநகரில்
சீரும் சிறப்புமாய் சிவாஜி ஃபிலிம் கிளப் துவக்கி,
கௌரவமான முதல் படமாய்
"கௌரவம்" படத்தையே
திரையிட்டு பதினான்கு நாள்
இடைவெளியில் அடுத்த
படத்தை திரையிட ஆயத்தமாகி
விட்டவரின் குரலில் கொஞ்சமும் அலுப்பில்லை.
உழைக்கத் தயங்காத அவரிடம்
ஒரு துளி சலிப்பில்லை.
அய்யன் நடிகர் திலகத்தின்
மீதான அவரது பக்தி அவரது
ஆர்வக் குரலில் தொனிக்கிறது.
இந்தத் திரைத் திருவிழாவை
அவர் தொடர்ந்து நடத்துவார்
எனும் நம்பிக்கை நமக்குப்
பிறக்கிறது.
---------------------------
இக்காலத் திரையரங்குகள்
புதிய தொழில்நுட்பத்தின்படி அமைக்கப்பட்டுள்ளதால், நடிகர் திலகத்தின் திரைப்படங்களை
ஆளும்,பேருமாய் திரையரங்குகளில் போய்ப்
பார்த்து மகிழ்கிற பொன்னான
வாய்ப்பை நாம் இழந்திருக்கிறோம்.
திரு.அண்ணாதுரை, திருச்சி வாழ் ரசிகர்களுக்கு அந்த பொன்னான வாய்ப்பை
மீட்டுக் கொடுத்திருக்கிறார்.
ரசிகர்களெல்லோரும் ஓரிடத்தில் சேர்ந்து மகிழவும்,
எண்ணங்கள் பரிமாறவும்,
நடிகர் திலகத்தைக் கொண்டாடவும் அவர் பேருதவி
செய்திருக்கிறார்.
-------------------------
காதலர் தினத்தன்று, காதலைக்
கலையோடு பேசி வென்ற
"புதிய பறவை"யைத் திரையிடும் "சிவாஜி ஃபிலிம்
கிளப்" தொடர்ந்து வெல்லட்டும்.
உலகம் முழுசும் கேட்கும்படி,
உத்தமரின் புகழை அது உரக்கச்
சொல்லட்டும்.
Unsung talent behind the screen singing for NT!! The mimicry artiste Sadhan graced by NT!!
Watch from 6:45 to 10:15Quote:
திறமை உள்ளவர் எவரெனினும் தன்னுடன் இணைந்து பணியாற்றும்போது தகுந்த விதத்தில் அவர்களைப் பெருமைப் படுத்துவதில் பெருந்தன்மையாளர் நடிகர் திலகமே ! சதன் அந்தக் கால கட்டத்தில் ஒரு பலகுரல் விற்பன்னராக(Mimicry artiste and yodelling expert like singer Kishore Kumar!) வலம் வந்தவர். நிறைய நடிகர் திலகத்துடன் பணியாற்றும் வாய்ப்பு பெற்றவர்!!
நீலவானம் திரைக்காவியத்தில் ஒரு நீச்சல்குள பாடல் காட்சியில் பெண்மைக் கீச்சுக் குரலில் சதன் பாடும் ஓ லக்ஷ்மி ஓ மாலா ஓ நீலா .. பாடலுக்கு வாயசைத்துபெருமைப் படுத்துகிறார் நடிகர்திலகம்!
https://www.youtube.com/watch?v=Ju_EXaGVg6g
இருமலர்கள் திரைப்படத்திலும் வென்ட்ரிலாக்கிசம் என்னும் பொம்மை வழியே பேசும் பாடும் காட்சியில் நடிகர்திலகத்திற்கு சதன் குரல்கொடுத்திருப்பார்.
ராமன் எத்தனை ராமனடி சதனின் பங்களிப்பு மகத்தானது சொர்க்கம் திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் கார் டிரைவராக தோன்றுவார் படித்தால் மட்டும் போதுமாவில் இவ்வகைக் கலைஞர்களுடன் சதனுக்கும் ஒரு முழுநீள ஆடல் பாடல் காட்சியில் வாய்ப்பளித்து பெருமைப்படுத்தினார் நடிகர்திலகம் !
https://www.youtube.com/watch?v=s0Qt6uD8CZQ
https://www.youtube.com/watch?v=Eeod3MiL-YQ
http://www.thehindu.com/multimedia/d...601_51679e.jpg
எங்கிருந்தாலும் வாழ்க என்று அண்ணா நடிகர் திலகத்தை வாழ்த்தினார். எங்கிருந்தால் என்ன நான் உன்னை மறவேன் என தானும் வாழ்நாள் முழுதும் அண்ணாவைப் போற்றினார் நடிகர் திலகம்.
உண்மையான நட்பின் அடையாளச் சின்னங்கள்...