ஞான ஒளி
என்ன அற்புத படம்.. நடிகர் திலகமும் சரி, சாரதாவும் சர் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள்
சொல்ல வார்த்தை இல்லை
வாசு ஜி, பால கோபாலா உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி
கிருஷ்ணா ஜி, நிச்சயமாக இன்னும் பாடல்கள் தருகிறேன்
Printable View
ஞான ஒளி
என்ன அற்புத படம்.. நடிகர் திலகமும் சரி, சாரதாவும் சர் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள்
சொல்ல வார்த்தை இல்லை
வாசு ஜி, பால கோபாலா உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி
கிருஷ்ணா ஜி, நிச்சயமாக இன்னும் பாடல்கள் தருகிறேன்
இருளும் ஒளியும் திரையில் வானிலே மன்னிலே பாடல் மிகவும் அற்புதம்
http://www.youtube.com/watch?v=22TU__YgGic
இதன் ஒரிஜினல் கன்னட வடிவம் அதுவும் இசையரசியின் குரலில்
http://www.youtube.com/watch?v=jNW8FluwKvA
அந்தப் பாட்டு முடியற வரைக்கும் புரியாது..அம்மாக்குத் தான் பாடறாங்கன்னு நினைக்கத் தோணும்..அப்புறம் தான் நெஞ்சுக்குள்ற பல்ப் எரிஞ்சு இயற்கைன்னு தெரியும்.. ரொம்ப தாங்க்ஸ் ராஜேஷ் ஜி.. படி வெச்சாச்சா..என்ன சுண்டல்..(எங்காத்துல சுண்டல் மட்டும் தான்.. நேத்துககு ப்ரோ லாக்காட்டமா குட்டி வடை)
ACTRESS PADMINI - NINAIVU NAAL
http://i62.tinypic.com/346qrlu.jpg
http://youtu.be/vN4CNRtAy70
நன்றி: ஈகரை தமிழ்க் களஞ்சியம்.
நன்றி: 'டாக்டர்' எம்கே ஆர் சாந்தாராம்
பாகவதர் - சின்னப்பா - இவர்கள்
எப்படிப்பட்டவகள் ?
எம் கே டி பாகவதர் :
https://www.filepicker.io/api/file/0...Q+DSC07119.JPG
1. பொன்னிற சட்டை, கழுத்தைச் சுற்றி ஜொலிக்கும் அங்கவஸ்திரம்,
காதில் மின்னும் வைரக் கடுக்கன் கள்,
கையில் வைர மோதிரம் !
நெற்றியில் அழகான ஜவ்வாதுப் பொட்டு சகிதம்,...
வெற்றிலையை மென்ற வாறு நடப்பார் !
2. அவர் சாப்பிட பயன்படுத்துவது தங்கத் தட்டுதான் !
அந்த தட்டு எப்படியும் 100 பவுன் கள் இருக்கும் !
இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத் தட்ட ரு. 2.25 கோடி
இருக்கலாம் !
3. பாகவதர், தன் பாடும் திறமையாலும், அழகினாலும்
அந்த கால ரசிகர்களை - குறிப்பாக ரசிகைகளை மிகவும் கவர்ந்தார் !
4. இவரின் திரைப்படப் பயணம் 1934 ஆம் ஆண்டில்
தொடங்கியது ! ( பேசும் சினிமா வந்ததே 1931 ஆம் ஆண்டில் தான் -
தமிழில் ! )
" பவளக் கொடி " - கே . சுப்பிரமணி , நாடகத்தில் நடித்து வந்த
பாகவதரை முதன் முதலாக இந்த திரைப்படத்தில் அறிமுகம்
செய்தார் !
5. 1934 ஆம் ஆண்டில் தொடங்கிய பாகவதரின் சினிமா
வாழ்க்கை தொடர்ந்து ஏறுமுகம் தான் !
அவர் நடித்த எல்லா படங்களும் 'ஹிட்' ஆயின!
பாடல்களும் 'ஹிட்' ஆயின!
எதுவரை ?
1944 ஆம் ஆண்டு - ' ஹரிதாஸ்' வெளியாகி , பாகவதர்,
'லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் '
கைதாகும் வரை !
6. " சரி, அது என்ன . " லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு ? "
என்கிறீர்களா ?
சொல்றேன்.......ஆனா.......அதைப் பற்றி விரிவாக சொல்லப் போனால்
இந்த கட்டுரையின் தலைப்பையே மாற்ற வேண்டி வரும் !
அந்த 'மேட்டர்' அத்தனை பெரியது...அது மட்டுமல்ல...மிகவும்
ஆவலைத் தூண்டக்கூடியது !
எனவே அதனை " ஓரம் கட்டி " தனியே 5 அல்லது 6 பகுதிகளை
உடைய தொகுதிகளை வைத்து எழுதுகிறேன் !
இப்போது நான் சொல்ல வந்தது...
'லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் ' பாகவதர் கைதான போது
அவரின் திரைப்பட வாழ்க்கையில் " இறங்கு முகம் " தான் !
பி . யு . சின்னப்பா .:
https://www.filepicker.io/api/file/0...-1916-1951.jpg
1. 'அந்த கால கருப்பு நாயகன் பி யு சின்னப்பா !
கருத்த மேனி, குண்டு உருவம் , 'பீடி' குடிக்கும் பழக்கம்
உடையவர் !
குட்டையான உருவம் !
2. ஆனால் பாடினால் ?
மிக மிக நன்றாக பாடுவார் !
நடிப்பில் ?
சிவாஜி கணேசனுக்கும் முன்னோடி !
" நவராத்திரி' யில் சிவாஜிக்கு 9 வேடங்கள் - 1965 ஆம் ஆண்டு !
" ஆர்ய மாலா " படத்தில் சின்னப்பா வுக்கு 10 வேடங்கள் - 1941 ஆம் ஆண்டு !
சண்டைக் காட்சியில் ?
எம்ஜிஆருக்கும் சீனியர் !
மல்யுத்தம், குஸ்தி, வாட்சண்டை, சுருள் பட்டை வீச்சு,
கம்பு சண்டை - இவைகளில் வல்லவர் !
3. இவரின் சினிமா வாழ்க்கை 1936 ஆம் ஆண்டில்
தொடங்கியது ! ' சந்திரகாந்தா ' என்கிற படம் !
" சுண்டூர் இளவரசன் " என்கிற வேடத்தில் வெளுத்துக் கட்டினார்!
4. 1936 ஆம் ஆண்டில் தொடங்கிய இவரது சினிமா
வாழ்க்கை 1951 ஆம் ஆண்டு அவர் அகால மரணம் அடைந்த
பிறகு முடிவடைந்தது !
சரி, பாகவதர் - சின்னப்பா
ரசிகர்கள் எப்படி ?
பாகவதரின் ரசிகர்கள் !
1 .. 1934 ஆம் ஆண்டு 'பவளக் கொடி ' தொடங்கி பாகவதருக்கு ரசிகர்கள்
பட்டாளம் தான் !!
' பாகவதர் முடி ' - இது பற்ற்றி உங்க்களுக்குத் தெரியுமா ??
அது என்ன்ன ' பாகவதர் முடி ? "
ஒண்ணும் பதில் சொல்ல ' முடி'யாட்த கேள்வி அல்ல இது !
" சலூன் " க்கு போகாமல் இருந்தால் உங்கள் முடிக்கு
நேரும் " கதி " தான் ' பாகவதர் முடி ! "
பாகவதார் 'பீல்ட்' டுக்கு வந்த போது நிறைய தமிழர்களுக்கு
பாகவதர் முடிதான் !
2. ஒரு தடவை ஓர் ஊரில் நாடகம் நடத்த போனார் பாகவதர்.
நாடகம் முடிந்து வெளியே வந்த பின்னர் ,, ஒரு ரசிகரை சந்தித்தார்.
அவர் பையில் இருந்து புத்தம் புதிய சீப்பு ஒன்றைக் பாகவதரிடம்
கொடுத்து, :
" பாகவதரே ! உங்களின் தலையை இந்த புதிய சீப்பால்
வாரிக்கொள்ளுங்கள்ள் ! "
என்று கேட்டுக்கொண்டார் !
"" சரி ! நம்ம தலைமுடி கலைந்திருக்கிறது போலும் !
எனவே இந்த ரசிகர் நம் தலை முடியை இந்த புதிய
சீப்பால் வாரச் சொல்கிறார் ! "
என்று நினைத்து எம்கேடி பாகவதர் தன் தலை முடியை அந்த
புதிய சீப்பால் வார்ர்ர்ர்ர்ரிக்கொண்டார்!
அப்புறம் நடந்ததுதான் தமாஷ் !
பாகவதர் வாரி முடித்தவுடன் அந்த சீப்பை பாகவரிடம் பிடுங்காத குறையாக
வாங்கி தன் பையில் போட்டுக்கொண்டார் !
அப்புறம், அந்த ரசிகர் தன் பையில் இருந்து
தன் கைகளைத் துழாவி இன்னொரு
" கேவலமான " ' பொக்கை ' மற்றும் ' மொக்கை ' சீப்பு
எடுத்து பாகவதரிடம் காட்டினார் !
" இது என்ன தெரியுமா, பாகவதரே ? " என்றாராம் அந்த ரசிகர் !
திரு. பாகவதர் , " திரு " திரு" என்று முழிக்க அந்த ரசிகரே பதில் சொன்னாராம் !
........சொல்லட்டுமா.... !
" இந்த பழைய சீப்பு போன வருடம் நீங்கள்
பொள்ளாச்சிக்கு வந்த போது வாரின சீப்பு ! "
இப்படி " சீப்பா" ன ரசிகர்கள் அப்போது பாகவதருக்கு உண்டு !
3. பெண் ரசிகைகள் ?
என்ன அப்படி கேட்டு விட்டீர்கள் !
பாகவதருக்கு வரும் ' காதல் கடிதங்கள் ' ஏராளம் !
பாகவதர் வருகிறார் என்றால் அவருக்காக மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும் பெண்கள் ஏராளம் !
பாகவதர் நடந்து போன பாதையின் மண்னைத் தொட்டு கும்பிடும்
ரசிகைகள் ஏராளம் ! பாகவதரை எப்படியாவது
சந்தித்துவிட வேண்டும் என்று 'கங்கணம் ' கட்டி
வீட்டை விட்டு ஓடி வந்த பெண்கல் ஏராளம் !
4. பாகவதர் நாடகங்களைக் காண பல நூற்றுக்கணக்கான
'மைல்' களைக் கடந்து ( அப்போது 'மைல்' தான், கிலோ மீடர் கிடையாது ! )
வண்டிகளைப் பூட்டி வருபவர்கள் ஏராளம் ! நாடகங்களைப் பார்க்க
உட்கார இடம் அல்லது 'டிக்கட்' கிடைக்க வில்லை என்றால்
......' நோ டென்ஷன் ! ' ........மரங்களில் ஏறி நின்று
தேள்கள் , கட்டெறும்புகள் கடித்து ..பல்லைக் கடித்து .
..பாகவதரின் நாடகங்களை காணுவார்கள் !
அப்படி மரங்களில் ஏறி மாண்டவர்கள் ஏராளம் !
4. பாகவதர் ரயிலில் போகிறார் என்றால்.....போகும் வழியில் இருக்கும்
அனைத்து ரயில் நிலையங்களிலும் ' பிளார்பார டிக்கட்' கள்
விற்று தீர்ந்துவிடும் ! அனைத்து ரயில் நிலையங்களிலும்
ஒரு கூட்டம் நின்று கொண்டு டிரைனில் பயணம் செய்யும் பாகவதரை
'தரிசனம் ' செய்து மகிழ்வர் ! அப்படிப் பார்த்தால்
கூடுவாஞ்சேரி போன்ற சிறிய ஸ்டேஷன் களில்
'பிளாட்பார்ம் டிக்கட் ' வாங்கி காத்திருக்கும் மக்களின்
கதி எப்படி ? டிரைன் அங்கே நிற்காதே !
அந்த "ப---பு " அங்கே வேகாது ! தண்டவாளத்தில் நின்று கைகளை
ஆட்டுவார்கள் ! டிரைன் நிற்கும் !
பாகவதர் ' காட்சி -கம் - தரிசனம் ' தருவார் ! பின்னரே டிரைன் நகரும் !
மகாத்மா காந்தி க்குப் பிறகு
பாகவதருக்குத்தான்
இந்த வரவேற்பு !
5. கீழே எழுதியதையும் படித்து விடவும் !
.......ஆனாலும் கொஞ்சம் 'ஓவர்' தான்
சார், இந்த சம்பவம் !
இந்த இடத்தில் பாகவதரின் அன்றைய செல்வாக்கு
எந்த உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது என்பதை
இப்போது அடியேன் சொல்லப்போகும் சம்பவத்தில்
இருந்து தெரிந்து கொள்ளலாம்!
இந்தியாவில் எந்த சூபர் ஸ்டாருக்கும் இந்த மாதிரியான
சம்பவம் நடந்திருக்காது !
" பாகவதரின் நணபர் ஒரு பணக்காரர்.
திருவாரூர்காரர்.பாகவதர் திருவாரூர் வந்தால் இவரின்
பங்களாவில்தான் தங்குவார்.
பாகவதருக்கென்று :
ஒரு குதிரை சாரட் வண்டி அவருக்கென்று தயார்
நிலையில் இருக்கும்! அந்த வண்டி பாகவதருக்கு
மட்டும்தான் ! யாருக்கும் கிடையாது !
அது மட்டுமா !
பாகவதருக்கென்று ஒரு தனி " பாத் ரூம்" ஒன்று இவர்
கட்டினார் ! அந்த பாத் ரூம் அந்த மாளிகையின் பின்
கோடியில் தனியாக கட்டப்பட்டிருக்கும் . அதனை பயன்
படுத்த முடியாத அளவுக்கு பூட்டு ஒன்று தொங்கிக் கொண்டு
இருக்கும் !
" பாத்ரூம் " என்றால் " பார்ரிவேர்" கம்பனியில் வாங்கி
சலவைக் கல்லால் " பள" பள " என்று கட்டப்பட்டது
அல்ல ! அவை எல்லாம் அப்போது கண்டுபிடிக்கப்
படவில்லை ! வெறும் ஓலைத் தடுப்புக்களால்
வேயப்பட்டது.
அன்று........
பாகவதார் திருவாரூர் வந்தார், நண்பர் பங்க்களாவுக்கு
வந்தார். அங்கே தங்கியிருந்தார். அவருடன் அந்த பணக்காரர்
வீட்டு மக்களும்- பெரிய தட்டு - மேல் தட்டு வர்க்கங்கள்-
குடும்பத்துடன் வந்திருந்தினர் !
காலை உணவு முடித்து பேசி விட்டு வெளியே கிளம்பும்
முன் "' பாத்ரூம் " போய்விட்டு வருகிறேன் ! "
என்று பின் பக்கம் போன பாகவதர் வெகு நேரம் கழிந்தும்
திரும்பி வரவில்லை !
அவருக்கு சர்க்கரை வியாதி அப்போது இல்லை !
எனவே பாத் ரூம் போனவர் ஏன் இன்னும் வர வில்லை
என்று அனைவரும் கலக்கத்தில் இருக்க, .......
திடீரென்று..........கூச்சல் ! கூச்சல்!
" என்னை விட்டுவிடுங்கள் ! என்னை விட்டுவிடுங்கள்! "
யார் குரல் அது ?
பாகவதரின் குரல்தான் அது !
என்ன ஆச்சு ?
நண்பர்கள் எல்லோரும் கொல்லைப் பக்கம்
ஓடினார்கள் !
அங்கே அவர்கள் கண்ட காட்சி !
பாகவதரின் சில்க் சட்டை கிழிந்திருந்தது........
வேஷ்டி பயங்கரமாக கிழிக்கப்பட்டு, தன்
" மானத்தைக் " காப்பாற்ற இரண்டு கைகளால்
வேஷ்டியை மூடிக்கொண்டு ஓடி வர,
அவரின் " பாகவதரின் 'கிராப்" கலைய
தன் நண்பர்களைப் பார்த்து ஓடிவந்தார் !
நண்பர்கல் அதிர்ச்சியில் நிலை குலைய....
என்ன ஆச்சு பாகவதருக்கு ?
பின்னால்............
மேல்தட்டு அழகிய பெண்கள் ! நண்பர் பங்களாவில்
விருந்துக்கு வந்த பணக்காரப் பெண்கள் !
மகாபாரததில் ' கெளரவர்கள் " ஆண்கள் !
இங்கே பெண்கள் !
அங்கே பாஞ்சாலி பெண் !
இங்கே " பாஞ்சாலன் " -- பாகவதர் !
இப்போது பாகவதர் உயிருடன்
இருந்து , இப்போது அந்த சமாச்சாரம் நடந்தி
ருந்ததால, பாகவதர் என்ன பாட்டு பாடியிருப்பார்?
" வொய் திஸ்
கொல வெறி, கொல வெறி,
கொல வெறி டீஸ் ! "
என்றுதானே பாடியிருப்பார் !
பி . யு . சின்னப்பா வின் ரசிகர்கள் !
இப்போது 'சூபர் ஸ்டார் ' ரஜினிக்கு இருக்கும் 'இமேஜ் ' ஐ விட
பல மடங்கு பெரும் புகழ் மற்றும் 'இமேஜ் ' கொண்டவர் சின்னப்பா !
என்னதான் இவத சின்னப்பா கரிய நிறத்தவராக இருந்தாலும் அவருக்கும்
பெண் ரசிகர்கள் ஏராளம் !
ஒரு முறை சின்னப்பா நடிப்பதை நிறுத்திக்கொண்டு ....
( இப்போது சமீபதித்தில் நடிகை ரஞ்சிதா போல் ! )
ஆன்மீகத்தில் ஈடுபட்ட போது சின்னப்பா மெளன விரதம்
மேற்கொண்டார் !
அப்போது இந்த செய்தியை கேள்விப்பட்டு ...
இரு ரசிகைகள் தற்கொலை செய்து கொண்டார்களாம் !
' முக்கூடல் பிராண்ட் ' பீடி !
" இந்த பீடியை புகைத்தீர்களா ? "
என்று விளம்பரம் பண்ண இதைக் கேட்க வில்லை !
" பிண்ணே எதுக்குய்யா ? "
என்றா கேட்கிறீர்கள் !
சொல்றேன் !
இந்த பீடித் தயாரிப்பாளர் ஹரிராம் சேட் என்பவர் ,
பி யு சின்னப்பாவின் தீவிர ரசிகர் !
இவருக்காகவே ' கிராம போன் பெட்டியையும் எக்கசக்க மான
சின்னப்பாவின் இசைத்தட்டுக்களை வாங்கி கேட்டு மகிழ்ந்தார் !
என் எஸ் கிருஷ்ணன் , இவருக்கு நண்பர் !
( ஒரு வேலை கலைவாணரும் கூட " முக்கூடலில் "
சங்கமம் தானா ! )
ஒரு முறை திருநெல்வேலியில் பாகவதர் கச்சேரி நடந்த போது ,
கிருஷ்ணன் , ஹரி ராம் சேட் ஐ அந்த கச்சேரிக்கு அழைத்தார் !
நம்ம ( ! ) சேட் வும் வேண்டா வெறுப்பாக பாகவதரின் கச்சேரிக்கு
சென்றார் !
பாகவதரின் கச்சேரியைக் கேட்டவுடன் , அந்த சேட் என்ன செய்தார்
தெரியுமா !
நேரா தன வீட்டுக்கு சென்றார், சின்னப்பா வின் இசைத்தட்டுக்களை
ஒன்னொன்றாக வெளியெ போட்டு சுத்தியால் உடைத்தார் !
என்ன காரணம் ?
ஒண்ணும் இல்லே !
பாகவதரை விட சின்னப்பா சரியாக பாடவில்லையாம் !
அப்போது பாகவதரும் கிருஷ்ணனும் அவர் வீட்டுக்கு வந்தனர் !
இசைத்தட்டுக்கள் உடைந்து கிடந்ததைப் பார்த்து கிருஷ்ணன்
" 10 ஷன் " - அத்தான் - " டென்ஷன் " - Tension - ஆகி விட்டார் !
" ஏன்னா ஓய செய்கிறீர் , சேட்டு ? "
- கிருஷ்ணன் !
" இந்த பாகவதர் கச்சேரியை இப்போதுதான் முதன் முறையாக
கேட்கிறேன் !
இவர் கச்சேரியைக் கேட்ட பிறகு சின்னப்பா வின் பாட்டுக்களை
கேட்க பிடிக்கவில்லை ! "
பாகவதவர் , சேட் ஐ தீர்க்கமாக பார்த்தார் , பின்னர்
அவரைப் பார்த்து கேட்டார் :
" அப்போ , சின்னப்பா கச்சேரியை நீங்கள் நேரில் கேட்டால்
என்னுடைய பாடல்களைக் கொண்ட இசைத்தட்டுக்களை இப்படித்தான்
சுத்தியலால் போட்டு உடைப்பீர்கள ? "
சேட் வாயடைத்து நின்றார் !
இப்போது அந்த சேட் உயிருடன் இருந்திருந்தால்
என்ன செய்திருப்பார் ?
என்ன செய்வார் .........
இசைத்தட்டுக்களுக்குப் பதில் :
" Hard Disc " களை 'சகட்டு மேனி'க்கு போட்டு
நொறுக்கி இருப்பார் !