மேலமாசி வீதியில் ஒரு மிதி மிதித்து
ஆரியபவன வ்ந்த்தும் இடம்திரும்பி
நேரே சென்றால்
மேங்காட்டுப் பொட்டல்..
ஜான்சி ராணிபூங்கா எதிரில் ஒய் எம் சி ஏ..
நடுவில் குதிரைவண்டிகளின் வரிசை..
சில வண்டிகளில் குதிரைகள்
பூட்டப் பட்டு
சாதுவாய்
புதிதாய் வீட்டிற்கு வந்திருக்கும்
நாட்டுப் பெண்போல தலை குனிந்து
கொஞ்சம் ஆடிய படி நின்றிருக்கும்
சில வண்டியிலிருந்து
அவிழ்த்து விடப்பட்டு
குனிந்து இரும்பு வாளியில்
வைக்கப்பட்டிருக்கும்
புல், கொள் எதையாவது
உண்டு கொண்டிருக்கும்
அருகில் சென்று தொட்டாலோ
முனிவர் போல அருட்பார்வை பார்த்து
மறுபடி குனியும்..
சிகப்பு.
மங்கிய வெள்ளை,
கறுப்பு வெள்ளை என
கலந்து கட்டிய நிறங்களில்
அழுக்காகவும்
அதைவிட அழுக்காக
வண்டிக்காரன்..
உலகத்தில் மற்ற விஷயங்களை விட
குதிரைவண்டிக்காரனிடம் தான்
மக்கள் பேரம்செய்வர்..
எட்டணா அவனிடம் குறைத்தால்
ஏதோ இமயத்தைத் தொட்டாற்போல்
பெருமிதம் கொள்வோரும் உண்டு..
காலப் போக்கில்
கொஞ்ச்ம் கொஞ்சமாய்
அந்த குதிரை வண்டி நிலையம் மாறி
குதிரைகளும்
காணாமற் போயின..
இப்போது
அந்த இடம் கடந்தால்
கண்டிப்பாய் வரும்
குதிரை வாசனை..!
**
பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம்
இனிய பாடல் இளமை துள்ளும் ஸ்ரீ தேவி.. இளைஞ விஜயகுமார் கண்ணதாசனின் அழகிய வரிகள். சூப்பர் லொகேஷன் அண்ட் பிக்சரைஷேஷன்.. அப்புறம் என்னன்னாக்க..
கடோசில்ல இந்தப்பாட்டுல குதிரை வருதுங்க்ணா..!
https://www.youtube.com/watch?v=yF58...yer_detailpage
இந்தப் படத்தையும் பாடல்களையும் வாசு அலசினார்னா நல்லா இருக்கும் ம்ம்
இத ஒரு பொண் பாடறதாவும் வச்சுக்கலாம்
தேருத் திருவிழாக்கு திரும்பத்தான் வாரேன்னு
…தெக்குத் திசைபக்கம் போகத்தான் போனீக
கார்கா லம்முடிஞ்சு வெயிலடிக்க ஆச்சுதுங்க
…கனவ நனவாக்க எப்பவந்து சேர்வீங்க
நீரும் இல்லாம நிலம்வெடிச்சு போகுதுபோல்
..நீரும் இல்லாம நாந்துடிச்சுத் தானிருக்கேன்
வேராய் இருந்தவரே வெரசாகத் தான்வாரும்
..வெறிக்கும் பார்வையதில் பன்னீரைத் தூவுமய்யா..
கடைசி ரெண்டுவரிய மாத்தினா வாசு சாருக்காகவும் வச்சுக்கலாம்
தேருத் திருவிழாவுக்கு திரும்பத்தான் வாரேன்னு
…தெக்குத் திசைபக்கம் போகத்தான் போனீக
கார்கா லம்முடிஞ்சு வெயிலடிக்க ஆச்சுதுங்க
…கனவ நனவாக்க எப்பவந்து சேர்வீங்க
நீரும் இல்லாம நிலம்வெடிச்சு போகுதுபோல்
..நீரும் இல்லாம நாந்துடிச்சுத் தானிருக்கேன்
கார்ஷெட் டெல்லாமே கட்டித்தான் ஆச்சாங்க
..கனக ஜோராக கலந்துகொள்ளத் தான்வாங்க..
வருவாக வருவாக.வெய்ட் கண்ணா..
**