http://s3.postimg.org/6vc4c5krn/75858859.jpg
Printable View
கவிஞர் வாலியும் பொன்மனச்செம்மலும்
உலகம் சுற்றும் வாலிபன்’ படம் ரெடியாயிட்டிருந்த நேரம். பல பரபரப்புகளுக்கு நடுவுல எம்ஜியார் படத்தை ஆரம்பிச்சிருந்தார்.
பாட்டு எழுத கவிஞர் வாலியை கூப்பிட்டிருக்காங்க. வாலி வழக்கம்போல வார்த்தைகளால ஜாலம் காட்ட, எம்ஜியாருக்கு ரொம்ப சந்தோஷம்.
அமர்க்களமான ட்யூனோட வாலியோட வரிகளும் சேர, ரெக்கார்டிங் முடிஞ்சுது.
பல பிரச்னைங்க இருந்தாலும், எப்படியோ கஷ்டப்பட்டு வெளிநாட்டுக்கு போய் ஷூட்டிங்க முடிச்சுட்டு வந்தார் தலைவர்.
எடிட்டிங் முடிஞ்சு, இறுதிகட்ட வேலைங்க எல்லாம் முடிச்சு படம் கிட்டத்தட்ட ரெடி.
படத்துல இருக்க அத்தனை பாட்டும் சூப்பர் ஹிட்டாகும்னு எம்ஜியார் கூட இருந்தவங்க கிட்ட சொல்லிட்டிருந்தார்.
எம்ஜியாருக்கு வாலி ரொம்ப செல்லம். “என்ன ஆண்டவரே..”ன்னு தான் கூப்பிடுவார்.. சரி.. வாலி கொஞ்சம் வெறுப்பேத்தலாம்னு, எம்ஜியார் வாலிய கூப்பிட்டு, “இந்த படத்துல பாட்டு எல்லாம் நல்லா வந்திருக்கு.. ஆனா உங்க பேரை நான் டைட்டில்ல போட போறதில்லை.. ” அப்டீன்னாராம்.
வாலி சிரிச்சுகிட்டே கம்முனு இருந்திருக்கார்.
“அட.. நிஜமா தான் சொல்றேன்.. உங்க பேர் வராது..”
“என் பேரை போடாம உங்களால படத்தை ரிலீஸ் பண்ண முடியாது.”
“அப்டியா..? நான் ரிலீஸ் பண்ணிட்டா..?”
“எப்டிங்க ரிலீஸ் பண்ணுவீங்க..? படத்தோட பேரு ‘உலகம் சுற்றும் வாலிபன்’.. இதுல ‘வாலி’ங்கறத எடுத்துட்டா.. ‘உலகம் சுற்றும் பன்’ ஆயிடும்.. மக்கள் திலகம் நடிக்கும் ‘உலகம் சுற்றும் பன்’ அப்டீனா போஸ்டர் ஒட்டுவீங்க..?”
எம்ஜியார் பலமாக சிரிச்சுகிட்டே வாலியை முதுகில் தட்டி, கட்டி பிடிச்சுகிட்டாராம்..!
இன்று நமது தலைவரின் 27 ஆம் ஆண்டு நினைவுநாள் அஞ்சலி படங்கள் உங்கள் பார்வைக்கு
வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் வைக்கப்பட்டுள்ள அஞ்சலி காட்சிகள்
நம் தலைவனின் தலைவனுக்கு முதலில்
இடம் சத்துவாச்சாரி வேலூர்
http://i61.tinypic.com/20qe3ie.jpg