http://i1028.photobucket.com/albums/...psxvzunwks.jpg
Printable View
மனிதரில் மாணிக்கம்-1973.
என்னுடைய அத்தை கணவர் ,கன்னடத்தில் எடுத்த படம் அருணோதயா.(இவர்தான் பெல்லி மோடா படம் மூலம் புட்டண்ணா வை இயக்குனராக அறிமுகம் செய்தவர்)
இதை தழுவி தமிழில் எடுக்க பட்ட படம் மனிதரில் மாணிக்கம்.
படம் என்னவோ சோதனையே. ஆனால் கௌரவ நடிகரான ஜோடியில்லாத சிவாஜியை ,சி.வீ.ராஜேந்திரன் ஒரு surprise package ஆக பயன் படுத்தி படத்திற்கு புதிய ஒளி பாய்ச்சியிருந்தார். காமெடி கலந்த eccentric Doctor பாத்திரத்தில் நடிகர்திலகம் பின்னியிருப்பார்.
இந்த பாத்திரம் நான் நிஜமாகவே வாழ்வில் சந்தித்த மூன்று மருத்துவர்களை நினைவு படுத்தியது.(இதை என்னுடைய பத்து நண்பர்கள் அவர்கள் வாழ்க்கையோடு இணைத்து உறுதி படுத்தினர்).கதையின் இழையோடு பயணிக்கும் இந்த பாத்திரம் ,நடிகர்திலகத்தின் நடை முறை வாழ்க்கையில் வினோத மனிதர்களின் சாயலை சித்திரித்ததுடன். comedy sense &timing பிரமாதமாக கலந்திருக்கும். அவ்வளவு delightful &Enjoyable Character . அப்பப்பா என்ன மகா நடிகனையா !!!எங்கள் தங்கராஜா,கெளரவம்,ராஜபார்ட் ரங்கதுரை ,மனிதரில் மாணிக்கம் என்று ஒன்றுக்கொன்று தொடர்பேயில்லாத வேறு பட்ட பாத்திரங்கள்!!!!உலகில் இனி இப்படி ஒருவர் பிறக்க சாத்தியமேயில்லை.
ஆரம்ப அறிமுகமே ஜோர். கிறுக்கு தனமான ,பேஜார் நகைச்சுவை உணர்வுடன் மனிதாபிமானம் மிக்க டாக்டர்.
ஏழை நோயாளியிடம் காட்டும் எள்ளல் மிகுந்த அனுதாபம், ராஜனுடன் ஆரம்ப காட்சிகள்,பிரமிளாவுடன் (மனோரமா) I will sing for you என்று வித வித நடன கூத்தடிப்பு. (படு ஜாலியான performance .என்றும் ரசிக்கலாம்),கடைசி கடத்தல் காட்சியில் காமெடியன் இல்லாத குறையை போக்கி பின்னி விடுவார்.(இதே பாத்திரம் சற்றே மாற்றத்துடன் அபூர்வ ராகங்களில் நாகேஷ் செய்தார்).
என்ன சொல்ல? சிவாஜி என்ற நடிப்பு தெய்வம், வளர வளர என்னுள் வியாபித்து என்னை ஆச்சர்ய படுத்தி,பக்தியில் மேலும் மேலும் திளைக்கவே வைக்கிறது.
திரு முரளி சார்,
அமர்க்களமான ஆரம்பம்,அதிக இடைவெளி இல்லாமல் தொடரவேண்டும் என்பது எங்களது ஆசை
நடிகர்திலகம் நடிப்பை வித விதமாக அலசி ஆகி விட்டது. ஆனாலும் புதிது புதிதாக ஏதாவது தோன்றிய படியே இருக்கும். நண்பர் வாசுதேவனுடன் ,இதை பற்றி அடிக்கடி பேசியிருக்கிறோம்.
ஒரு எதிர்பாரா தன்மை ,அல்லது அசைவுகள் அல்லது நடிப்பின் பாணி ,கதாபாத்திரத்தை ஒட்டி அமையும்.
சிறு வயதில் தீபாவளிக்கு ராக்கெட் விட்டிருக்கிறீர்களா?
நாங்கள் பால் வாங்கும் கண்ணாடி குடுவையில் வைப்போம். அதில் வித விதமாக ராக்கெட் தன்னை நிறுத்தி கொள்ளும். சில நேரம் பற்ற வைத்த பிறகும். சில நேரம் எதிர்பார்த்தது போல செங்குத்தாக மேலே. சில நேரம் பக்கத்து வீட்டு ஜன்னல். சில நேரம் ,நம் முகத்திற்கு நேரே . என்று .கிட்டத்தட்ட ,நடிகர்திலகம் இதை போல நமக்கு கடைசி நிமிட ஆச்சர்யம் தந்த படங்களுக்கு குறைவேயில்லை.
ஆரம்ப உதாரணங்கள்--
1)பராசக்தி படத்தில் பாட்டில், கட்டி அழும் போது என்று ஒருவரை கட்டி அழுவது போல பாவித்து, நைஸ் ஆக மூக்கை சிந்தி துடைப்பார்.
2)நிறை குடம் படத்தில் கண்ணொரு பக்கம் பாட்டில் ,மேலே நிற்கும் வாணிஸ்ரீயை அணுக ஒரு படிகட்டு வழியாக போவார் என்று நினைக்கும் போது ஸ்டைல் ஆக திரும்பி,இன்னொரு படிகட்டு வழி மேலேருவார்.
3)அன்னையின் ஆணை படத்தில் கட்டி போட பட்டிருக்கும் ரங்கா ராவ் ,தன்னை அவிழ்த்து விட சொல்லி ,தனிக்கு தனி மோதலாம் என்று சொல்ல ,கைகளை நெட்டி முறிக்கும் போது ,அதை ஏற்பதாக தோன்ற வைக்கும். ஆனால் அம்புகளை ,வேடம் ஏன் துறக்க வேண்டும் என்று கிண்டலாக முடிப்பார்.
4)வசந்த மாளிகை படத்தில் அருகருகே சிவாஜி முன் புறம் திரும்பியிருக்க ,வாணிஸ்ரீ பின் புறம் காட்டி நிற்க ,மயக்கமென்ன பாட்டில் , இடது கையை சிறிதே வளைத்து ,இடையை இழுப்பார்.
5)அதே படத்தில் குடிமகனே பாட்டில், கீழே கிடக்கும் சகுந்தலாவை கை கொடுத்து தூக்கு முன் ஒரு செல்ல உதை காலால்.
இன்னும் எல்லோரும் தனக்கு தெரிந்ததை எழுதுங்கள்.சுவாரச்யமாக்கும்.
அண்ணா.
எங்கள் இதயங்களில் நீங்காத இடம் பெற்ற தலைவர். இன்னும் கொஞ்ச நாட்கள் உயிரோடு இருந்திருந்தால் , காமராஜர் மறக்கடிக்க படும் அளவு சாதித்திருப்பார்.
இவரிடம் நான் மதிக்கும் அம்சங்கள்.
1)அழகாக தன்னை புதிப்பித்து முன்னேறிய அரசியல்வாதி.பெரியாரின் யூத பாணி (முதல் உலக போர்)கொள்கையிலிருந்து அழகாக கழட்டி கொண்டது (பெரியார் அரசியலில் நேரடியாக ஈடு படாமல்,எந்த அரசு வதாலும் தன கொள்கைகளை சாதிக்க நினைத்தவர். ), திராவிட நாடு கொள்கையில் இருந்து மாற்றம், ராஜாஜியிடம் உறவு,பதவிக்கு வந்ததும் பெரியாருடன் நெருக்கம்)இப்படி.
2)அரசியல் ,நிலசுவாந்தாரர்கள்,உயர்ஜாதி மக்களால் பீடிக்க படாமல் ஜனநாயக படுத்தியவர்.
3)சிறந்த சிந்தனையாளர் ,படிப்பாளி,பேச்சாளர் என்று ஆயிரம் இருந்தும்,பாமரர்கள் நாடி பிடித்து அரசியல் நடத்தியவர்.உண்மையான மக்கள் தலைவர்.
4)தமிழை உரிய பீடத்தில் அமர்த்தி ,ஹிந்தி பேயை விரட்டியவர்.
5)அவர் அரசு நடத்தியவரை, அதிகார மட்டத்தில் தலையீடோ,பெரும் ஊழலோ அண்டாமல் பார்த்து கொண்டார். குடும்பத்துக்காக கூட எதையும் சேர்த்ததில்லை.
6)நடிகர்திலகம் இவர் ஆதரவில்தான் ,நாடக ,சினிமா துறைகளில் வளர்ந்தார். சிவாஜிக்கு தென்னக மார்லன் பிராண்டோ பட்டம் கொடுத்தவர். திமுகவிலிருந்து விலகிய பின்னும் அன்பு காட்டியவர். நடிகர்திலகத்தின் படங்களை எங்கேயிருப்பினும் முதல் நாளே பார்க்கும் அளவு ஆத்மார்த்த ரசிகர். அண்ணா கலந்து கொண்ட இறுதி கூட்டம் சிவாஜியின் 125 ஆவது பட விழா.(காமராஜரின் கடைசி சிவாஜி வீட்டுக்கு சென்று பிறந்த நாள் வாழ்த்து கூறியது)
7)நடிகர்திலகம் தான் நடித்த தில்லானா மோகனாம்பாள் படத்தில் கண் பட்டதால் வரிகளை ,மருத்துவமனையில் போராடி கொண்டிருந்த அண்ணாவை நினைத்தே ஐடம் பெற செய்தார் .அண்ணா இறந்த பிறகு தெய்வ மகனில் ,தெய்வமே பாட்டில் அண்ணா என்று கதறி உருகியதும் இந்த மக்கள் தலைவனுக்காகவே.
From facebook