நன்றி நன்றி நன்றி சாரதா, ஆனா
:bow:
ஆனா,
வெளிநாட்டில் வசித்து வரும் உங்களுக்கெல்லாம் சுவை குன்றிவிடுமோ என்று அஞ்சித்தான் ஒருநாள் கழித்துப் பதிவைப் பதிக்கலாம் என்று நினைத்தேன்.
:)
நன்றி
Printable View
நன்றி நன்றி நன்றி சாரதா, ஆனா
:bow:
ஆனா,
வெளிநாட்டில் வசித்து வரும் உங்களுக்கெல்லாம் சுவை குன்றிவிடுமோ என்று அஞ்சித்தான் ஒருநாள் கழித்துப் பதிவைப் பதிக்கலாம் என்று நினைத்தேன்.
:)
நன்றி
நண்பர்களே,
நேற்றைய பதிவில், "கலைச்செல்வி"
என்று ஒரு பெண்ணின் பாத்திரப் பெயரைப் பதித்திருந்தேன். அது தவறு. அவள் பெயர் "கலையரசி". தவறுக்கு மன்னிக்கவும்.
பதிவிலும் திருத்தம் செய்துவிட்டேன்.
23.5.08
______
இன்றைக்கு சிவன், பார்வதி, சமேதர்கள் எல்லோருக்கும் ஓய்வு.
நடக்கும் நிகழ்ச்சி அனைத்தும் கலையரசி வீட்டிலும், வித்யாதரன்
வீட்டிலும் நடந்து முடிந்து விடுகிறது.
கலையரசி அவளை பெண்பார்க்க வந்திருப்பவரிடம், கேள்விகள்
கேட்க விழைகிறாள். பெண்பார்க்க வந்திருப்போர்கள் வெகுண்டு
வரனை ஒதுக்கிவிட்டுப் புறப்படும் நேரம், அந்த ஆண்மகன்
தான் கோழையல்ல என்று நிரூபித்து, அவள் கேள்விகளை சந்திக்கத் தயார் ஆகிறான்.
கலையரசியும் மூன்று கேள்விகளைத் தொடுக்கிறாள். மூன்றும்
விடுகதை போல் மூக்கைத் தலைவழி சுற்றித் தொடும் கேள்விகள்.
கேள்விகளைச் சரியாய் புரிந்து கொள்ளாமல், அவளின் ஒழுக்கத்தின்
பேரில் களங்கம் கற்பிக்கின்றனர். பின்னர் அவளே அந்த கேள்விகளுக்கு
விடையளிக்க, அவமானம் தாங்காமல் சென்றுவிடுகின்றனர். இவளின்
அறிவை அவள் தந்தை மட்டுமே பாராட்டிப் பெருமைக் கொள்கிறார்.
முதலாவதாக "எந்தத் திருமணத்தில் ஒரு பெண் திருப்தி அடைகிறாள்?"
என்று கேட்கிறாள். அதற்கு விடையாக அவள் தருவது "தனக்கு
பிடித்தமான அறிவில், ஒழுக்கத்தில், சிறந்த ஒரு நல்லவனை மணக்கும்
போது ஒருத்தி திருப்தி அடைகிறாள்" என்று கூறுகிறாள்
அடுத்ததாக அவள் கேட்கும் கேள்வி, "எத்தனையாவது திருமணத்தில்
அவள் மிகத் திருப்தி அடைகிறாள்" என்பது. இதற்கு ஆன்றோர்களோ
சான்றோர்களோ தேவையில்லை. தொடரைப் பார்த்துக் கொண்டிருக்கும்
நமக்கே விடை க்ஷண நேரத்தில் தெரிந்துவிடுகிறது. இருந்தாலும், சுற்றி
இருப்போர்கள் விழிக்கிறார்கள்! இவள் விடை பின்வருமாறு அளிக்கிறாள்
"தன் பிள்ளைகளளின் திருமணத்தில் அவள் மிகத் திருப்தி அடைகிறாள்.
பேரன்களும் பேத்திகளும் சூழ அவளுக்கு நடக்கும் அறுபதாவது திருமணத்தில்
அவள் மிக மிக திருப்தி அடைகிறாள்"
"எத்தனை ஆடவர் ஒரு பெண்ணைத் தொடலாம்" என்பது அடுத்த கேள்வி.
"பெற்றவனும், காது குத்தும் போது (அதாவது அவள் சின்னஞ்சிறு சிசுவாக
இருப்பதிலிருந்து) தட்டானும், கால் கொலுசு /வளையல்கள் அணிவிப்பவர்களும்,
ஆடைகள் தயாரிப்பவனும், மணாளனும், மகனும், பேரனும், இறுதியாக அவளை
சிதையில் இடுபவனும் தொடலாம்" என்கிறாள்
அடுத்து சொல்விளையாட்டு!
"அப்பாவை ஒருத்தியும் அக்காளை ஒருவனும் மணந்தால் தவறா?"
"அப்- பாவை ஒருத்தியும் அக் - காளை ஒருவனும் மணந்தால் என்ன தவறு"
இப்படி வினாக்களை அடுக்கியதோடல்லாமல், அவள் சித்தி, மற்ற பெரியவர்களை
மரியாதையுடன் நடத்தத் தவறுகிறாள். ஆக, அவளுக்கு அறிவின் தாகம்
இருப்பது தவறல்ல, அதனால் கூடவே சேர்ந்து அகந்தையும், அடக்கமின்மையும்
சேர்ந்தே இருப்பது தான் தவறு.
கேள்விகள் இன்னும் சுவாரஸ்யமாய் இருந்திருக்கலாம். நடைமுறை வாழ்விற்கு
ஒத்துப் போவதாய் இருந்திருக்கலாம். உப்பு சப்பில்லாத கேள்விகள், அதற்கு
எல்லோருக்கும் தெரிந்த உப்பு சப்பில்லாத பதில்கள்!
அறிவில் சிறந்தவள் ஒருத்தி வாதிடுகிறாள் என்றால், இன்னும் கேள்விகள்
பயனுள்ளதாய், வித்தியாசமாய், புத்திசாலித்தனமாய் இருப்பது அவசியம்.
பார்க்கும் நமக்கே எரிச்சல் வந்தால், கூட இருக்கும் சித்திக்கு எப்படி
இருக்கும் யோசித்துப் பாருங்கள்!
அதனால் கோபத்தில் உச்சியில் இருக்கும் அவள் சித்தி பழி வாங்க முற்படுகிறாள்.
சந்தையில் ஒரு நாள் வித்யாதரனின் அறிவை கண்கூடாய் கண்டு விட்டு,
இவன் தான் தன் மகளுக்கு ஏற்றவன் என்று முடிவு செய்து, அவன் தாயை
சந்தித்து, மறுநாள் பெண்பார்க்க வருமாறு அழைப்பு விடுக்கிறாள். தன்
கணவனை, பெண்பார்க்க வரும் மறுதினம் வீட்டில் இருக்கக் கூடாது, என்று
மிரட்டுகிறாள். இறுதியாக ஒரு வரனை அழைத்து வரப்போவதாகவும், இதிலும்
இவர்கள் புகுந்து தலையிட்டு கலைத்து விட்டால், அவர்களையும் கொன்று,
தானும் தற்கொலை செய்து கொள்வதாய் மிரட்டுகிறாள். செய்வதறியாது நிற்கிறார்
அந்தத் தந்தை.
(இனி அடுத்த வாரம் தொடரும்)
வித்யாதரனின் தாயாரிடம், "இப்படிப் பட்ட அறிவாளியை பெற்ற நீங்கள்
பாக்கியசாலி" என்கிறாள் சித்தி. அவளும் புரியாமல் முதலில் விழிக்கிறாள்.
பிறகு "ஒரு பொருள் தன்னை விட்டுப் பிரியும் போது தான் அதன் அருமை
தெரியும்" என்று மகனை நினைத்து கண்ணீர் சிந்துகிறாள்! அவன் மூடன்
என்று தெரிந்தும் அந்தத் தாய்க்கோ வந்தவளை நம்பிவிடும் வெகுளி மனம்!
இவ்வளவு வெகுளியாகக் கூட சிலர் இருக்க முடியுமா என்ற கேள்விகள்
எல்லாம் நம் மனதுள் வைத்து பூட்டிவிடுவது நலம்.
சந்தைக் கடைகளும் அதன் அமைப்புகளும் ப்ரமாதமாய் இருந்தன.
அவர்கள் வைத்திருக்கும் அடுக்குகள், அளக்கும் மரக்கால்கள் என
கவனம் செலுத்தி சுற்றுப்புற அமைப்புகள் படு கச்சிதமாய் அமைந்திருந்தது! :clap: :clap:
சந்தைக்கடையில் வித்யாதரனின், முட்டாள்தனத்தை எடுத்துக் காட்ட,
நகைச்சுவையாக சில காட்சிகளை அமைத்திருந்தார்கள்.
முல்லா நசுருதீன்/தெனாலி ராமன் கதைகளில் வருவது போல் நன்கு
அமைந்திருந்தது. குறிப்பாக, முட்டை வாங்கப் போனவன்,
"இது யார் போட்ட முட்டை" என்று கேட்க,
"அது கோழி போட்ட முட்டை"
"இதுக்குள்ள என்ன இருக்கு!"
"ஹ்ம்ம் அதுக்குள்ள கோழி இருக்கு"
"உள்ள இருந்தே கோழி எப்படி முட்டை போட்டுச்சு"
ரசிக்கும்படி இருந்தது!
அடுத்த இரு தினங்கள் (திங்கள் / செவ்வாய்)
நான் தொடரைப் பார்க்க முடியாது. ஆகவே புதன்கிழமைத் தொடரிலிருந்து தொடர்கிறேன். :wave:
ஒரு சின்ன வேண்டுகோள். இந்த இருதினம் என்ன நடந்தது என்று வேறு யாராவது எழுதுங்களேன். :ty:
நன்றி சக்திபிரபா
----------
ஊரிலிருந்து....
பொன் கிடைத்தாலும் புதன் கிடையாது என்பார்கள்.
ம்ம்ம்ம்ம்
புதனும் வந்து போகின்றது....
ஆனா,
இதோ புதன் (சற்றுத் தாமதமாக) வந்து விட்டது !
:)
28. 5. 08
_______
இரண்டு நாள் பார்க்காத குறைக்கு, கதையும் சில கட்டங்கள் முன்னேறி
இருந்ததால், திடீரென படுக்கையில் அரசர் படுத்திருக்கும் காட்சியமைப்பு
திக்குமுக்காடச் செய்தது. பழைய சரஸ்வதி சபதத்தை நினைவு கூர்ந்து,
அரசர் இறந்தால் புதிய ராணி (ஏழை ஒருத்தியை செல்வ சீமாட்டியாக்கும்
திருமகள் சபதம்) வரவிருக்கும் அடுத்த கட்டத்தை நாம் உணர முடிந்தது.
அரசர் இவ்வாறு படுத்திருக்க, வாரிசு இல்லாத அரசாட்சிக்கு இனி தானே
அரசன் என்று மகிழ்கிறார் அமைச்சர்.
இன்னொரு இடத்தில், இப்படிப் பட்ட மூடனை தன் மணாளனாக்கித்
தன்னை பழி வாங்கி விட்டாளே சித்தி என்று சித்தியிடம் குமுறுகிறாள்
கலையரசி. "உன் மகளாக இருந்தால் இப்படிச் செய்திருபாயா" என்று
கேட்கிறாள். சித்தியும் தன் பங்குக்கான காரணத்தை கூறுகிறாள். கலையரசி
ஆணவத்தால் தன்னை எடுத்தெறிந்து பேசியதற்கு பழி தீர்த்துக் கொண்டதைக்
கூறுகிறாள். மூடனுடன் தனக்கு வாழ உடன்பாடு இல்லை என்று கூறுகிறாள்
கலையரசி. இருவருமாக செர்ந்து, தங்கள் வெறுப்பை மூடன் மேலும்
அவனின் அபார பசி மேலும் காண்பிக்க, சுடு சொல் பொருக்காமல் வித்யாதரனின்
தாய், தன் பங்குக்கு அவனை நிந்தித்து அடித்து விரட்டி விடுகிறாள்.
வித்யாதரன், மிகுந்த மனவேதனையுடன், புலம்பிக்கொண்டே திக்கு தெரியாமல்
மனம் போன போக்கில் அலைகிறான். இங்கே இவன் சொல்லும் சில வசனங்கள்
யோசிக்க வைக்கிறது.
"நான் என்ன திருடினேனா, கொள்ளை அடித்தேனா, கொலை செய்தேனா, பிறர்
மனம் நோகச் செய்தேனா, நான் என்ன தவறு செய்தேன் என்று என்னை எல்லோரும் இகழ்கிறார்கள்" என்று சிறு பிள்ளை போல் அழுகிறான்.
உண்மை தான். இந்த மண்ணுலகில், பெருந்தவறு செய்த ஒருவன் கூட மன்னிக்கப்பட்டு விடுகிறான். அவன் தவறுகள் மறக்கப்பட்டு / மறைக்கப்பட்டு விடுகின்றன. பிழைக்கத் தெரியாத மூடர்களுக்கும், முட்டாள்களுக்கும், மென்மையுள்ளம் கொண்ட சாதுக்களுக்கும் இப்பூவுலகம் தன் கோர ஸ்வரூபத்தை காண்பித்து அவர்களைப் பாடாய் படுத்துகிறது.
அறிவு என்பது எத்தகைய இன்றியமையாத ஒன்று என்று விளங்குகிறது. வித்யாதரனாக குழந்தையைப் போல் புலம்பும் ராம்ஜி மிக நன்றாக தன் கதாபாத்திரத்தைச் செய்திருக்கிறார். அழுது புலம்பி வீட்டை விட்டு வெளியேறும் போது சித்தியாக நடித்தவரின் முகத்தில் சற்று பரிதாபம் தெரிந்தாலும், கலையரசி,
கர்வத்துடனே அலட்சியமாய்த் தான் நிற்கிறாள்.
( இனி நாளை வியாதியில் பாதியில் விட்டு விட்ட
அரசர்க்கு என்ன ஆயிற்று என்று பார்ப்போம்)
நன்றி சக்திபிரபா!
பலசாலி மட்டும் வாழகின்ற காடு தான் இதுவும்.Quote:
Originally Posted by Shakthiprabha
அதே நியதி
என் வீட்டில் மின்சாரம் மிகுந்த சதி செய்ததால், ஆங்காங்கே
தொடர்பு விட்டுப் போன தொடராய்த் தான் பார்க்க முடிந்தது.
ஒருவழியாக மின்சார வாரியம் தன் திருவிளையாடலை நிறுத்தி
தொலைக்காட்சி பெட்டி கருணைகூர்ந்து ஒளிபரப்பிய போது,
வித்யாதரன், அம்சமாய் பட்டுடுத்தி, பலர் முன்னிலையில் புலவர்
தருமிக்கு ஈசன் பதிலுறுத்ததைப் போல் வினாவிடைகளுக்கு பிறர்
வியக்க பதிலுறுத்துக்கொண்டிருந்தார். உலகில் சிறந்தது என்பதற்கு
"அறிவு" என்று பதிலளித்தார். அவர் கண்ணிலும் முகத்திலும்
அறிவின் தேஜஸ் சிரித்தவண்ணம் இருந்தது. சோர்வுடன் ஏதோ
நினைவில் மூழ்கியபடி சென்று கொண்டிருந்த கலையரசியை ஒரு பெண்
தடுத்து நிறுத்தி, மூடனை ஒரே இரவில் அறிவாளியாக்கிய அவளை
பாராட்டி விட்டு செல்கிறாள். மலங்க மலங்க விழித்தபடி நின்ற கலையரசியை
சென்று பார் உன் கணவர் அறிவே உருவாய் கோவலில் ஆன்றோர்
சான்றோர்களிடையே உரையாற்றிக் கொண்டுருப்பதை என்று கூறிச் செல்கிறாள்.
கோவிலிற்கு சென்ற கலையரசிக்கு பெரும் பேரின்ப அதிர்ச்சி.
கண்ணில் நீர் சொரிந்தபடி வித்யாதரனை பார்த்துக் கொண்டு நிற்கிறாள்.
தன்னை மன்னிக்குமாறு வேண்டி கைகூப்புகிறாள்.
வித்யாதரன் புன்னகையுடன், அறிவில் சிறந்த அவள் அந்நிலையில் அப்படி
நடந்து கொண்டது தவறே இல்லை என்று கூறி, தனக்கு எவ்வாறு கலைவாணியின்
அருள் கிட்டியது என்று விளக்குகிறான். சாகப் போன தன்னை, கலைவாணி
தடுத்தி நிறுத்தி அருளிச்சென்றதை மகிழ்வுடன் தெரிவிக்கிறான். கலையரசி
உவகைக் கொள்கிறாள். இருவரும் மகிழ்ச்சியுடன் மனை செல்கின்றனர்.
அரசவையில், மன்னருக்கு இன்னுமா நேரம் நெருங்கவில்லை என்ற
நினைப்புடன், தன்னுடைய ராஜ்ஜிய போகத்தை குறியாய்க் கொண்டு
சுற்றிவந்துகொண்டிருக்கிறான் தளபதி.
முன்பே கூறியதைப் போல், வித்யாதரனின் நடிப்பு நன்று. "அறிவில்
சிறந்த நீ அப்படி நடந்து கொண்டது தவறில்லை, எனினும் அறிவுடன்
ஆணவம் சேரும் போது, அந்த அறிவே கசந்து போகிறது" என்று கூறியிருக்கலாம்.
அவள் நடந்து கொண்டது முழுவதும் சரி என்று ஏற்றுக்கொண்டது
ஏனோ மனதை நெருடியது.
(தொடரும்)
(இன்றும் தொடரை பார்க்க முடியாமல் போகும். அதற்குள் அரசன் இறந்து
ராணி வந்து விடுவாள் என்று எண்ணுகிறேன்)