கடவுளும் காதலும் வேறு இல்லை
இது வரை பார்த்தவர் யாரும் இல்லை
முதல் முதல் இரண்டையும் பார்த்தவன் நான் தானே ....
தலை கீழ் தெரியுதே வானம்
தலை மேல் உருளுதே பூமி
கலராய் தெரியுதே காற்று
...எல்லாம் காதலே ....
ஆடைகள் அணிந்து அருவியும் நடந்தால்
உன்னை போல் இருக்கும் என்றுணர்ந்தேன் ...முதல் முறை உன்னை நான் பார்த்ததிலிருந்து
இது வரை என்னை நான் பார்த்ததில்லை ...உன் நிழலிலும் வர்ணங்கள் தெரியுதே
இது என்ன அதிசயம் சொல்லிடு
இரவெல்லாம் பகலாய் தோன்றுதே
இது என்ன ரகசியம் சொல்லிடு
நீ புன்னகை சிந்திடும் நொடிகளில்
நான் சிதறி போகிறேன் அள்ளிடு .....அழகிய வன்முறை செய் செய்
அதில் கொஞ்சம் இம்சைகள் வை வை
அது தான் காதலில் மெய் மெய்
அதில் இல்லை பொய்யடி .......