http://i57.tinypic.com/28slvux.jpg
Printable View
http://i57.tinypic.com/2aexflc.jpgதர்மம் தலை காக்கும் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கத்தின் தலைவர்
கவிஞர் மின்னல் பிரியன் அவர்கள் தலைமையில் நடத்த உள்ள
புரட்சி தலைவரின் 97 வது பிறந்த நாள் விழா , சென்னை தேனாம்பேட்டை
காமராஜர் அரங்கத்தில் வரும் மார்ச் மாதம் 6-ஆம் நாள் நடைபெற
உள்ளது . அதன் சுவரொட்டியை காண்க.
ஆர். லோகநாதன்.
சென்னை மகாலட்சுமியில் ,இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு
சார்பாக வைக்கப்பட்டுள்ள பேனர்.
http://i61.tinypic.com/2dklnbp.jpg
சென்னை மகாலட்சுமியில் ,அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம்
சார்பாக வைக்கப்பட்டுள்ள பேனர்.
http://i60.tinypic.com/118ixl3.jpg
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. எஸ். ராஜ்குமார்
அவர்கள் நடத்த உள்ள புரட்சி தலைவரின் 97 வது பிறந்த நாள் விழா
வரும் மார்ச் 16-ஆம் நாள் (ஞாயிறு அன்று ) மாலையில்
காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது அதன் சுவரொட்டி சென்னை
மகாலட்சுமி அரங்கில் பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஆர். லோகநாதன்
http://i62.tinypic.com/28bgtpt.jpg
1968ல் வெளியான மக்கள் திலகத்தின் ''கண்ணன் என் காதலன் '' படம் பல முறை திரைக்கு வந்த பின்னரும்
46 ஆண்டுகள் கடந்த படம் - கோவை நகரில் இரண்டாவது வாரமாக ஓடுகிறது என்றால் உண்மையில் இது
எம்ஜிஆர் படங்களுக்கு ரசிகர்கள் - மக்கள் மத்தியில் கிடைத்த வெற்றியாகும் . தகவல் தந்த திரு ரவிச்சந்திரன்
அவர்களுக்கு நன்றி . என்னுடைய 7000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் வழங்கியமைக்கும் நன்றி .
மக்கள் திலகம் எம்ஜிஆர் வாரம் - 7 படங்களின் போஸ்டர்ஸ் பதிவுகள்
சென்னை - பிராட்வே - தனிப்பிறவி படங்கள்
சென்னை மக்கள் திலகம் எம்ஜிஆர் விழாக்கள் பதிவுகள் அருமை திரு லோகநாதன் சார் .
அரசகட்டளை - 1967 - மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் -1978
1967ல் மக்கள் திலகம் அவர்கள் சந்தித்த கொலை முயற்சியில் உயிர் பிழைத்து வந்தாலும் அவருடைய குரலில் பாதிப்பு ஏற்பட்டு எதிர்காலம் ஒரே கேள்வி குறியாக இருந்தபோது சற்றும்
மனம் தளராமல் - கடுமையாக பயிற்சி செய்து சொந்த குரலில் வசனம் பேசி ரசிகர்களும் மக்களும்
ஏற்று கொள்ளும் அளவிற்கு எம்ஜிஆர் உழைத்து வெற்றிகண்டார் .
அரசகட்டளை முதல் மதுரையை பாண்டியன் வரை அவருடைய படங்களில் குரலில் வித்தியாசம் இருக்கும் . ரசிகர்கள் குறையாக கொள்ளாமல் அவருடைய உச்சரிப்பை மகிழ்ச்சியுடன் ஏற்று
கொண்டார்கள் . சிலரின் கிண்டல் -கேலி இருக்கத்தான் செய்தது .மக்கள் திலகம் முன்பை விட
இளமையுடனும் சுறு சுறுப்புடன் தோன்றி 44 படங்களின் நடித்து பல சாதனைகள் புரிந்தார் .
மக்கள் திலகம் நமக்கு விருந்த தந்த 44 படங்களை பற்றிய தொகுப்பு .
அரசகட்டளை - எம்ஜிஆரின் வீரம் -அருமையான கதாபாத்திரம் -சிறந்த நடிப்பு .
காவல்காரன் - 1967ல் சிறந்த படமாக விருது பெற்ற படம் .
விவசாயி - கருத்துள்ள படம் .இனிய பாடல்கள் - எம்ஜிஆர் மிகவும் இளமையாக இருப்பார் .
ரகசிய போலீஸ் 115- சிறந்த பொழுதுபோக்கு வெற்றி படம் .
குடியிருந்த கோயில் - சிறந்த படம் - சிறந்த நடிகர் -1968.
தேர்த்திருவிழா - எம்ஜிஆரின் பாசமிகு நடிப்பில் வந்த படம் .
கணவன் - அடக்குமுறை மனைவியை திருத்திய படம் .
புதிய பூமி - அன்பு வழியில் கொள்ளையர்களை திருத்திய படம் .
கண்ணன் என் காதலன் - இனிய பாடல்கள் கொண்ட இன்னிசை சித்திரம் .
ஒளிவிளக்கு - 100வது படம் - 100க்கு இன்றும் பெருமை சேர்க்கும் படம் .
காதல் வாகனம் - புதிய முயற்சியில் ரசிகர்களை கொண்டு சென்ற புதுமை படம் .
அடிமைப்பெண் -ஹாலிவுட் அளவிற்கு தயாரிக்கப்பட்ட வெள்ளிவிழா காவியம் .
நம்நாடு - முக்காலத்திற்கும் ஏற்ற சமூக காவியம் .
மாட்டுக்கார வேலன் - சிறந்த நடிப்பு - சிறந்த படம் - வெள்ளிவிழா காவியம் .
என் அண்ணன் - இமாலய வெற்றி பெற்ற பாசமிகு படம் .
தலைவன் - மக்கள் திலகத்தின் துப்பறியும் படம் - ரசிகர்களின் படம் .
தேடி வந்த மாப்பிள்ளை - எம்ஜிஆர் வித்தியாசமாக நடித்த படம் .
எங்கள் தங்கம் - உலகமே சொல்லுகிறது இவரை எங்கள் தங்கம் .. என்று
குமரிகோட்டம் - ஆணவக்காரியை அடக்கிய படம் .
ரிக்ஷாக்காரன் - இந்திய அரசாங்கமே எம்ஜிஆரை சிறந்த நடிகராக அறிவித்த படம் .
தொடரும் ...........
நீரும் நெருப்பும் - பிரமாண்ட படம் . மக்கள் திலகத்தின் நடிப்பு - சண்டை -எல்லாமே சூப்பர்
.
ஒருதாய் மக்கள் - மென்மையான பாத்திரம் - சிறப்பாகவே நடித்திருப்பார் .
சங்கே முழங்கு - அட்டகாசமான நடிப்பு - பஞ்சாபி வேடம் அற்புதம் .
நல்ல நேரம் - ரசிகர்களை வசீகர நடிப்பினால கவர்ந்த படம்
.
ராமன் தேடிய சீதை - எம்ஜிஆரின் அழகும் - நடிப்பும் கண்களுக்கு என்றென்றும் விருந்து
.
நான் ஏன் பிறந்தேன் - சிறந்த குடும்ப சித்திரம் . எம்ஜிஆர் நடிக்கவில்லை .. வாழ்ந்து காட்டினார் .
அன்னமிட்டகை - 5 சூப்பர் பாடல்கள் போதுமே .+ கம்பு சண்டை + வாத்தியார் வாத்தியார்தான்
இதய வீணை - மணியனின் நாவல் . எம்ஜிஆர் சுந்தரமாக நடித்து வெற்றி கண்ட படம் .
உலகம் சுற்றும் வாலிபன் - உலகமே இவரை திரும்பி பார்த்து வியந்து பாராட்டியது
பட்டிக்காட்டு பொன்னையா - இரட்டை வேடம் - ரசிகர்கள் அளவோடு ரசித்த படம்
.
நேற்று இன்று நாளை - நீதியை போதித்த படம்
.
உரிமைக்குரல் -200 நாட்கள் ஓடிய வசூல் காவியம் .எம்ஜிஆர் + ஸ்ரீதர் =விருந்து
சிரித்து வாழ வேண்டும் - பிரமாண்ட படம் + எம்ஜிஆரின் இரட்டை வேட நடிப்பு சூப்பர் .
நினைத்தை முடிப்பவன் - சொன்னார் - செய்தார் - நிறைவேற்றினர் .
நாளை நமதே - சொன்ன நேரம் ...2014 எல்லோரும் உச்சரிக்கும் ''நாளை நமதே ''
இதயக்கனி - எல்லோரின் இதயங்களிலும் வீற்றிக்கும் இதயக்கனி .
பல்லாண்டு வாழ்க - புதுமை கதை . ஜெயிலராக வாழ்ந்து காட்டினார் .
நீதிக்கு தலை வணங்கு - வித்தியாசமான படம் . அருமையான நடிப்பு .
உழைக்கும் கரங்கள் - மான் கொம்பு சண்டை ஒன்று போதுமே .. எம்ஜிஆரின் வீரம் .
ஊருக்கு உழைப்பவன் - இரட்டை வேடம் - யதார்த்தமான நடிப்பு .
நவரத்தினம் - மக்கள் திலகத்தின் தனி சிறப்புகளை வழங்கிய படம் .
இன்று போல என்றும் வாழ்க - 77 தேர்தல் நேரத்தில் வந்த ம் வெற்றி காவியம் .
மீனவநண்பன் - முதல்வராக பதவி ஏற்ற பின் வந்த வசூல் காவியம் .
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - மக்கள் திலகத்தின் கடைசி காவியம் .மறக்க முடியாத
படம் .
அரசகட்டளை - எம்ஜிஆரின் வீரம் -அருமையான கதாபாத்திரம் -சிறந்த நடிப்பு .
http://www.youtube.com/watch?v=WyC6jsWyljo
காவல்காரன் - 1967ல் சிறந்த படமாக விருது பெற்ற படம் .
http://www.youtube.com/watch?v=NLXGf8hSqCw
விவசாயி - கருத்துள்ள படம் .இனிய பாடல்கள் - எம்ஜிஆர் மிகவும் இளமையாக இருப்பார் .
http://www.youtube.com/watch?v=yVrc1KVSUS4
ரகசிய போலீஸ் 115- சிறந்த பொழுதுபோக்கு வெற்றி படம் .
http://www.youtube.com/watch?v=KJobbwySqRI
குடியிருந்த கோயில் - சிறந்த படம் - சிறந்த நடிகர் -1968.
http://www.youtube.com/watch?v=Pf5gastKv68
தேர்த்திருவிழா - எம்ஜிஆரின் பாசமிகு நடிப்பில் வந்த படம் .
http://www.youtube.com/watch?v=ulyTDmZDd9E
தேர்தல் காரணமாக எம்ஜியார் சமாதி முகப்பில் உள்ள இரட்டை இலை சின்னத்தை மறைக்க வேண்டும்: திமுக நீதிமன்றத்தில் புகார்
---------------------------------------------------------------------------------
தேர்தல் காலத்தில் மரங்களில் இலைகள் இருந்தால் அது இரட்டை இலையை குறிக்கும் , அதனால் மரங்களை எல்லாம் மறைக்க வேண்டும் ....
தேர்தல் காலத்தில் யாரும் வாழை இலையில் சாப்பாடு பரிமாறக் கூடாது எல்லோரும் மண் சோறு சாப்பிடுவதைப் போல தரையில் போட்டுத் தான் சாப்பிட வேண்டும் , வாழை இலை இரட்டை இலையை குறிக்கும்
தேர்தல் காலத்தில் யார் வீட்டு விசேஷங்களுக்கும் வீட்டு வாசலில் மாவிலை தொங்க விடக் கூடாது , மாவிலை இரட்டை இலையை குறிக்கும் ....
இபப்டியே சொல்லிட்டு திரிய வேண்டியது தான் .... ஆனால் மக்கள் திலகம் என்கிற மாபெரும் மனிதர் இன்றைக்கும் உங்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் பாருங்கள் ... அது தான் அந்த மாமனிதரின் சாதனை
கவிஞர் கண்ணதானுக்கு உதவி
இதை போல் பிரபல சினிமா பாடல் ஆசிரியர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ஒரு சமயத்தில் குடும்ப சூழ்நிலையில் மிகவும் சிரமப்பட்டார். யாரிடம் உதவிகேட்டால் கிடைக்கும் என்று யோசித்து கொண்டு இருக்கும் போது அவருக்கு வேண்டிய ஒருவர் நம்ம மாதிரி ஆள்களுக்கு உதவி செய்ய கரங்கள் கொண்ட வள்ளல் ஒருவர் பரங்கிமலையில் இருக்கிறார். அவரிடம் உங்கள் குறைகளை சொல்லுங்கள் அவர் உதவி செய்வார். இதை கேட்ட கண்ணதாசன் அவர்கள், அய்யய்யோ வேண்டவே, வேண்டாம் அவரை நான் மிகவும் ஏசி பேசியுள்ளேன். நான் அவரிடம் போகமாட்டேன் என்று அவர் சொல்ல, இவர் சொல்கிறார், மக்கள் திலகம் அவர்கள் பெரிய வள்ளல் குணம் படைத்தவர், மறப்போம் மன்னிப்போம் என்ற குணம் உள்ளவர் அவரை தவிர உங்களுக்கு வேறு ஆளும் இல்லை எனவே எதையும் யோசிக்காமல் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில்விழுவோம் என்ற எண்ணத்தோடு போய் பாருங்கள் என்று அவர் சொல்லி முடித்துவிட்டார்.
இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பலவிதமான யோசனைக்குப் பிறகு ஒரு நாள் மக்கள் திலகம் அவர்களை சந்தித்து தன்னுடைய நிலமைகளை சொன்னார். அதை கேட்ட மக்கள் திலகம் அவர்கள் சரி, உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார். இதை கேட்ட கவிஞருக்கு ஒன்றும் புரியாமல் சற்று நேரம் திகைத்து போய் மவுனமாக இருந்துவிட்டார். ஏன் யோசிக்கிறீங்க என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கேட்க அவர் ரொம்பவும் தாழந்த குரலில் எனக்கு தற்போது இவ்வளவு பணம் இருந்தால் என் சிரமங்களை ஓரளவுக்கு முடித்துகொள்வேன் மன்னிக்க வேண்டும் என்று சொல்லி முடித்தார். இதை கேட்ட மக்கள் திலகம் அவர்கள் எதையும் யோசிக்காமல் சரி நீங்க போங்க நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தார். அவரும் அரை குறை மனதோடு வீட்டிற்கு சென்று விட்டார். அடுத்த நாள் மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய மேனேஜர் குஞ்சப்பன் என்பவரை அழைத்து இந்த பணத்தை கண்ணதாசன் அவர்களிடம் நேரில் கொடுத்து விட்டு வாருங்கள் என்று சொல்ல அதன்படி அவரும் பணத்துடன் கண்ணதாசன் அவர்களை சந்தித்து பையில் இருந்து ஒரு பணம் பொட்டலத்தை எடுத்து இதை சின்னவர் உங்களிடத்தில் கொடுத்து வரசொன்னார் என்று பணத்தை கொடுக்க அவர் திகைத்து போய் அந்த பணம் பொட்டலத்தை அதே இடத்தில் பிரித்து பார்க்கிறார். பார்த்த உடனே, எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று யோசித்த வண்ணத்தில் பணத்தை பெற்று கொண்டு குஞ்சப்பன் அவர்களுக்கு நன்றியை சொல்லி அனுப்பி விட்டு உடனடியாக மக்கள் திலகம் எங்கே இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு அங்கு சென்று, மக்கள் திலகம் அவர்களைப் பார்த்து இரு கரங்களையும் பிடித்து கண்ணில் வைத்து கொண்டு தேம்பி ஆழ ஆரம்பித்துவிட்டார். தான் கேட்ட தொகையைவிட 10 ஆயிரம் ரூபாய் அதிகமாக கொடுத்துள்ளதை சொல்லி கொண்டே நான் இவ்வளவு தொகை தான் கேட்டேன். ஆனால் நீங்கள் மேற்கொண்டு அதிகமாக 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து உள்ளீர்களே நானும் என் குடும்பமும் என்றென்றும் கடமை பட்டவர்களாக இருப்போம் நீங்கள் எப்போதும், எந்த குறையும் இல்லாமல் இது போன்ற விஷயத்தில் வள்ளலாக வாழ வேண்டும் என்று கடவுளை வணங்குகிறேன் என்று சொன்னார்.
டாக்டர் எம்.ஜி.ஆர். நடித்த நாடகக் குழுக்களின் பட்டியல்...
மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி
கிருஷ்ணன் நினைவு நாடக சபா
உறையூர் முகைதீன் நாடக கம்பென
எம்.ஜி.ஆர். நாடக மன்றம்
டாக்டர் எம்.ஜி.ஆர். நடித்த சரித்திர நாடகப் பாத்திரங்கள் மற்றும் நாடகங்கள்
கதாபாத்திரங்கள்
இராமாயணம்
அகத்தியர்
மகாபாரதம
விகர்ணன், சத்ருகணன், அபிமன்யு, சத்ருகணன்.
ரத்னாவளி
நடனக் காட்சி
நல்லதங்காள்
ஏழாவது குழந்தை
இராசேந்திரன்
லட்சுமி
சந்திரகாந்த
ஆங்கிலேயப் பெண்
சத்தியவான் சாவித்திரி
தவில் சுண்டுர் இளவரசன்
மனோகரா
மனோகரன் சந்திரகாந்தா
தசாவதாரம்
சத்ருகன், பரதன், இலட்சுமணன்
பக்தராமதாஸ்
நவாப்
கபீர்தாஸர்
முதியவர், மாறுவேடத்தில் ராமர்
சக்குபாய்
பெண்வேடம்
மார்க்கண்டேயா
மேனகா
மற்ற நாடகங்கள்
கோவலன்
கற்பின் வெற்றி
பவளக்கொடி
வள்ளித்திருமணம்
ராசாம்பாள்
கதர்பக்தி
கதரின் வெற்றி
பதிபக்தி
தேசபக்தி
தேசியக்கொடி
கவர்னர்ஸ்கப்
பம்பாய் மெயில்
அரிச்சந்திரா
லீலாவதி
மோகனசுந்தரம்
ராஜேந்திரா
இன்பக்கனவு
சுமைதாங்கி
இடிந்தகோவில்
அட்வகேட்அமரன்
கள்வனின் காதலி ஆகிய நாடகங்களில் பல வேடங்கள்.
கணவன் - அடக்குமுறை மனைவியை திருத்திய படம் .
http://www.youtube.com/watch?v=UemUJDlF-Ic
புதிய பூமி - அன்பு வழியில் கொள்ளையர்களை திருத்திய படம் .
http://www.youtube.com/watch?v=Hih-i1_cJmo
இவ்வளவு காலத்திற்கு பிறகும் இரட்டை இலை - வெற்றியின் சின்னமானது எவ்வளவு பேருடைய தூக்கத்தை கேள்வி குறியாக மாற்றியுள்ளது? என்பதை தேர்தல் நேரம் உணர்த்துகிறது...அவரின் திரைப்படங்களுக்கு பதில் சொல்லி விட்டல்லவா அவரிடம் வர வேண்டும்...
மக்கள் திலகத்தின் ''ஆயிரத்தில் ஒருவன் '' மார்ச் 14ந் தேதி திரைக்கு வருவது மகிழ்ச்சியான தகவல் .
1965ல் வெளிவந்து 2012 வரை 47 ஆண்டுகள் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து பலமுறை வெளியீடுகள்
செய்யப்பட படம் . ஊடகங்களில் கணக்கில்லாமல் ஒளிபரப்ப பட்ட படம் .
திவ்யா பிலிம்ஸ் திரு சொக்கலிங்கம் அவர்களின் முயற்சியால் தற்போது புதுமை யான , கண்ணுக்கு விருந்தான
மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவனை காண உள்ளோம் . இந்த நேரத்தில் திரு சொக்கலிங்கத்திற்கு வாழ்த்துக்களை
தெர்வித்து கொள்வோம் . ஆயிரத்தில் ஒருவனை வரவேற்போம் .
1965 பெங்களுர் நகரில் முதல் வெளியீட்டில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் மூன்று அரங்கில் 8 வாரங்கள் ஓடியது .
விளம்பர ஆவணங்கள் இங்கே மீண்டும் பதிவிடுகிறேன் .
http://i60.tinypic.com/10y3ozn.jpg
http://i62.tinypic.com/2hptw0y.jpg
இரட்டை இலை - வெற்றியின் சின்னம் .எம்ஜிஆரின் சின்னம்
1973 இடை தேர்தல் முதல் பின்னர் நடந்த எல்லா தேர்தல்களிலும் பிரதான சின்னம் இரட்டை இலை . நாயகன்
மக்கள் திலகம் எம்ஜிஆர் .
2014 நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலிலும் மக்கள் திலகத்தின் இரட்டை இலை சின்னம் பற்றிய பயம் எதிர்
அணிக்கு வந்துவிட்டது .
நினைத்தை முடிப்பவன் - இதயக்கனி இரண்டு படங்களை அவர்கள் தொலைக்காட்சியில் ஒளி பரப்பும் போது
டைட்டில் காட்சி [இரட்டை இலை ] மற்றும் எம்ஜிஆர் இரட்டை இலை சின்னத்துடன் தோன்றும் பாடல் காட்சி
நீக்கிய அவலம் அறிந்ததே .
இதை அறிந்ததுதான் நம் மக்கள் திலகம் அன்றே பாடிவிட்டார் .
http://youtu.be/p1Bf7d2EFwE
ஆயிரத்தில் ஒருவன் படம் - 1965ல் வந்த நேரத்தில் ரசிகர்கள் மத்தியில் நிலவிய நினைவலைகள் .
மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை படம் வெள்ளிவிழா தொடர்ந்து பல இடங்களில் ஓடிக்கொண்டிருந்தது . பணம் படைத்தவன் 11 வாரங்கள் வரை ஓடிய நேரம் .
9.7.1965 அன்று ஆயிரத்தில் ஒருவன் தென்னகமெங்கும் வெளியானது .முதல் நாள் முதல் காட்சியிலே படத்தின் வெற்றி என்பதை அறிய முடிந்தது .
மக்கள் திலகத்தின் புதுமையான பாத்திரத்தில் ஆங்கில படங்களுக்கு நிகரான காட்சிகள் - வெளிப்புற கடல் மத்தியில்
படமாக்கப்பட்ட பிரமாண்ட காட்சிகள் - இனிய பாடல்கள் - அருமையான வசனங்கள் - மக்கள் திலகத்தின் உடைகள்
மெல்லிசை மன்னர்களின் இசை ராஜ்ஜியம் - எம்ஜிஆரின் விறுவிறுப்பான சண்டை காட்சிகள் - அறிமுக நாயகி
ஜெயாவின் - மக்கள் திலகத்திற்கு பொருத்தமான ஜோடி என்று ரசிகர்கள் ஏற்று கொண்ட படம் .
திரை உலகை சேர்ந்த பலரும் ஆயிரத்தில் ஒருவனின் வெற்றியினை பாராட்டினார்கள் .பத்திரிகைகள் மனம் திறந்து
பாராட்டினார்கள் .படத்தின் வெற்றியை தொடர்ந்து எம்ஜிஆர் - ஜெயா ஜோடியை தேவர் பிலிம்ஸ் - சரவணா பிலிம்ஸ்
மற்றும் பல முன்னனி நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு ஒப்பந்தம் செய்தார்கள் .
மக்கள் திலகத்தின் இயல்பான நடிப்பில் ...நெஞ்சை அள்ளும் காட்சி .
http://youtu.be/LoM8q61v6kQ#aid=P-Ytwydbg88