சாதனை பட்டியல்
இங்கே ஆண்டு வாரியாக நடிகர் திலகத்தின் சாதனைகள் பட்டியலிடப்படுவதை பார்த்து நமது ஹப்-ல் ஒரு உறுப்பினரும் பெங்களூரை சேர்ந்தவரும் நடிகர் திலகத்தின் பாரம்பரிய ரசிக குடும்பத்தை சேர்ந்தவருமான திரு.செந்தில் குமார் (அவரது தந்தையார் நடிகர் திலகத்தின் மிகப் பெரிய ரசிகராவார்), நடிகர் திலகத்தின் சில படங்கள் பெங்களூரில் மறு வெளியீட்டின் போது ஓடிய நாட்களை இங்கே நமக்காக அனுப்பியிருக்கிறார்.
மனோகரா
மறு வெளியீடு - 1988
அரங்கம் - ஸ்ரீ டாக்கீஸ்
நாட்கள் - இரண்டு வாரம்
புதிய பறவை
மறு வெளியீடு - 1989
அரங்கம் - ஸ்ரீ டாக்கீஸ்
நாட்கள் - மூன்று வாரம்
இதில் முதல் வாரம் நடை பெற்ற அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்த காட்சிகளாக புதிய பறவை ஓடியது.
பெங்களூரில் ஒரு தமிழ் படம் மறு மறு --- வெளியீட்டின் போது இப்ப்படி ஓடுவது என்பது ஒரு சாதனை என்கிறார் செந்தில்.
நன்றி செந்தில். நீங்கள் குறிப்பிட்டுள்ள பிற படங்களை பற்றிய சாதனைகள் இங்கே பட்டியலிடப்படும் போது அவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.
அன்புடன்
முரளியின் முன்னைய பதிவிலிருந்து