-
Thanks to Mr Dhanusu
1. பாட்டும் – நடிப்பும்
நாடகம் என்பது நடிப்பும் – பாட்டும் ஆகும். அதுவே கூத்து. சிலபத்திகார் கூறும் சாந்திக்கூத்து மற்றும் வினோதக் கூத்துகள் பாடல் கலந்து ஆடப்பெற்றவைகளே என்பதை மூன்றாம் இயலில் விரிவாகக் கண்டோம். கதை தழுவாது பாட்டின் பொருள்பற்றி அபிநயிக்கும் கூத்து ‘அபிநயக்கூத்து’. ஒரு கதையைத்தழுவி நடிக்கும் கூத்து ‘நாடகக்கூத்தாகும்.
ஆக, திரைப்படம் என்பது நம்மைப் பொறுத்தவரை ‘அபிநயமும் – நாடகமும் இணைந்து ‘நாடகக்கூத்து’ என்ற பெயர் கொண்ட ஒன்று என்று கொண்டால் தவறாகாது.
உலகின் முதல் நாகரீகம் கண்டவன் தமிழன் என்ற இறுமாப்புடன் மகிழ்ச்சியுடனும், இசையிலும் பாட்டிலும் சிறந்தவன் தமழனே எனக் கூறலாம். சிலப்பதிகாரக் காலத்தில் தனித்தமிழ் இசை வழங்கியது. அவ்வாறே, கடைச் சங்கத்தில் நாட்டியக் கலை அடைந்திருந்த பெருமையை சிலப்பதிகாரத்தின்’ ‘அரங்கேற்றுக்காதை’ நன்கு விளங்கும்.
நடனமாதின் இலக்கணம், ஆடலாசிரியன் அமைதி, இசையாசிரியன் அமைதி, முழவாசிரியன் அமைதி, முழலோன் அமைதி, அரங்கின் அமைதி, கூத்திலக்கணம் ஆகியவற்றை அரங்கேற்றுக் காதை விளக்குகிறது. அமைதி என்ற சொல்லுக்குத் தன்மை என்று பொருள்.
“உள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற ஐயா” என்று இறைவனை வாழ்த்துகிறார் மாணிக்கவாசகப் பெருமாள். அந்த ஓங்காரத்தின் விரிவே நாதயோகமான இசைக்கலை. உயிரும் உலகும் நாதக் கடலிலே மிதக்கின்றன. ஓமே எல்லாம்ந அதுவே உள்ளொலி; அதனின்றும் சத்தம் பிறந்தது; அதனின்று எழுத்து; அதனின்று சொல் தொடர்; மொழிகள், நூல்கள், காவியம், சங்கீதம் எல்லாம் உண்டாயின.
கீதம், வாத்தியம், நிருத்தம் (நடனம்) ஆகிய மூன்றும் சேர்ந்தது சங்கீதம்.
நாததிலிருந்து இசையொலி (சுருதி) இசையொலியிலிருந்து இசை (ஸ்வரம்); இசையிலிருந்து பண் (இராகம்); பண்ணிலிருந்து பாட்டு(கீதம்) உண்டாகிறது.
சங்கீத்ததிற்கு தாய் இசையொலி; (சுருதி அல்லது அலகு); தந்தை தாளம் ஆகும்.
ஆன்மாவிலிருந்து பாட்டு வருகிறது. அதுவே பொறிகளை (காணங்கள், இந்திரியங்கள்) ஏவி, ஒரு தீயை, ஓர் ஆர்வத்தை உண்டு பண்ணுகிறது. அந்த ஆர்வத் தீ காற்றை உந்துகிறது. காற்று, நாபி, இதயம், பண்டம், உச்சி, மூக்கு, இதழ், நா, பல், அண்ணம் (உண்ணாக்கு, மேல்வாய்) இவற்றைத் தொழிற்படுத்துகிறது. அதனால் உயிர்மெய் ஆகிய எழுத்துக்கள் உண்டாகின்றன.
உயிரெழுத்துக்களும், இடையின எழுத்துக்களும் கழுத்திற் பிறக்கும். மெல்லெழுத்துக்கள் மூக்கையும், வல்லெழுத்துக்கள் மார்பையும் இடமாகக் கொண்டு பிறக்கும். எழுத்துக்கள் அளபெடுத்து ஆலாபனமாய் நீண்டு இசையாகிப் பண்ணாகும்.
நெஞ்சு, கழுத்து, நாக்கு, மூக்கு, மேல்வாய் (அண்ணம்), உதடு, பல, தலை ஆகியவை நாதம் பிக்கும் எட்டுப் பெருந்தானங்களாகும் (இடங்கள்)
எனவே, பாட்டு நம் திரைப்படங்களில் இடம் பெறுவது நமது கலாச்சாரத்தின், இலக்கியத்தின் நீண்ட வரலாற்றுப் பின்னணியோடு பிணைந்த ஒன்று. பாட்டு பிறக்கும் இடம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் எதனை அடிப்படையாகக் கொண்டு பாட்டுபிறக்கிறதோ அவ்வாறு பிறந்த பாட்டு அந்தச் சூழலில் பாடப்படுவது இயல்பான ஒன்றா என்ற ஆய்வுக்குள் செல்லாது இடம் பெற்ற ஆடல் காட்சிகளில் நடிகர்திலகத்தின் நடிப்பிலக்கணத்தை எவ்வாறு வரையறை செய்து தர வேண்டும் என்பதே நோக்கம்.
பாடகன்
பண்டைய நிருத்தங்களில், கூத்துகளில் பாடகன் ஒருவன் இசைப்பதற்கென்றே இருந்திருக்கிறான் என்பதை சிலப்பதிகாரத்தின் ‘அரங்கேற்றக் காதை’யிலிருந்து நம்மால் அறிய முடிகிறது அவன், யாழ், குழல், தாளம், ணீர், வாய்ப்பாட்டு, சன்னக்குரலுடன் அமைப்பாக வாசிக்கும் மத்தளம், முன்னே சொன்ன கூத்தின் வகை – இவற்றுடன் இசைந்த பாடலை இனிமையாக, இசையொலி (சுருதி) தாளங்களுடன் (லயம்) பொருந்தப் பாடவேண்டும். வரிப்பாட்டிற்கும், ஆடலுக்கும் உரிய பொருளை இலக்கி (விளக்கி) இயற்சொல், திரிசொல், திசைசொல், வடசொல், ஆகிய சொற்களின் ஓசைகளைச் சுத்தமாகக் கடைப்பிடித்து, அந்த ஓசையின் இலக்கணங்களையெல்லாம் குற்றமறத்தெரிந்த அறிவாளியாயிருக்க வேண்டும் பாடகன், என்பது இசையாசிரியன் தன்மை.
ஒவ்வொரு நடிகனுக்கும் ஏற்றபடி தன் குரலை மாற்றி மாற்றிப் பாடிய ஒரு பாடல் கலைஞனைக் கூடத் தமிழகமேதான் கண்டிருக்கிறது ஒரு பாடல் சங்கம் வைத்துத் தமிழ்வளர்த்த மதுரையிலே பிறந்த டி.எம். சௌந்தர்ராஜன் என்ற திரைப்படப் பாடகர். ஆரம்பகாலங்களில் இவர் தம் வளமான – இனிமையான – காந்தம் போன்ற குரலால் பொதுப்படையாகப் பாட ஆரம்பித்தாலும் நடிகர் திலகதின குரல் வளமும், இவரின் குரள்வளமும் ஒன்றாக அமைந்தது விந்தையிலும் விந்தை. ச்ற்று மிகைப்படுத்திச் சொல்வதென்றால் இப்படித்தான் சொல்ல வேண்டும். இவர் குரலால் நடித்து நடிகர் திலகத்தை உடலால் நடிக்கச்செய்தார். பாடலுக்கு நடிப்பது என்ற பகுதியில் இருவரையும் தனித்தனியே பிரித்துப் பார்ப்பதென்பது இயலாத செயலாகும்.
மேலும் இவர் மட்டுமல்ல. சிதம்பரம் சி.எஸ். ஜெயராமன், சந்திரபாபு, கண்டசாலா, ஏ.எம். ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், மலேசியா வாசுதேவன், என்ற தமிழகத்தின் அருமையான பாடற் கலைஞர்களின் பாட்டுக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அவரவர்களின் குரல்வளத்திற்கேற்ப, தன் முகத்தோற்றத்தை மாற்றி மாற்றி நடித்திருக்கிறார்.
இவருக்குப் பின்னும், இவர் திரையுலகில் சுறுசுறுப்பாக நடித்துக் கொண்டிருந்த காலங்களிலும், பாட்டுக்கு ஏற்ப வாயை அசைப்பது, பாடலின் பொருளுக்கேற்ப, காட்சியின் தன்மைக்கேற்ப நடிக்கும் நடிகர் எவரும் இன்னும் தோன்றவில்லை. இன்னும் சொல்லப்போனால், இவ்வகையான நடிப்புத்திறனை ஒரு நடிகன் வெளிப்படுத்த உதவும் வண்ணம், இப்பொழுதெல்லாம் காட்சிகளும் அமைக்கப்படுவதே இல்லை. பாடலை உருவாக்கும் போதே இது வாயசைப்பிற்கு அல்ல, இது வாயசைப்பிற்கு என்று இருவகைப் பாடல் கட்சிகளைப் பிரித்துவிட்ட நிலையில், இது வாயசைப்பிற்உக (For Lip Movement) என்று உருவாகும் பாடல்களே தற்போது இல்லை என்று திட்டவட்டமாகக் கூறலாம்.
கல்தோன்றாக்காலத்தே முன்தோன்றினாலும், கண்டகண்ட மொழிகளின் பாதிப்புக்கு ஆளாகி கன்னித் தமிழாகவே இருந்துவரும் நம் தமிழுக்கு, சமீபகாலமாக திரைப்படங்களின் மூலம், அதன் பாடல்களில் மூலம் , ஆங்கிலேயர் நம்மை அடிமை கொண்டிருந்தபோது கூட அடிமையாகாத தமிழும் – அதன் கவிதையும் இன்று ஆங்கில மயமாக்கப்பட்டு வருவது ஆபத்தானது என்பதை அறிஞர்கள் ஒப்புக்கொள்வர்.
தமிழ் அதன் இளமை, அதன் இனிமை உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்பதில் எந்தத் தமிழரும் ஆர்வமே கொள்வர். ஆனால் ஆர்வம் என்பது தவறானு முறையைத் தேர்வுசெய்யும் முறையாக அமைந்துவிடக்கூடாது.
ஒரு மொழியை, அதன் இலக்கியத்தை, அதன் இசையை அதன் இயல்பான வழியில் நின்று பேசி, படித்துப்,பாடினால்தான் அது அம்மொழிக்குச் செய்யும் பெருமையாகும். மாறாக, ஒரு மேலைநாட்டு தாளகதியில் (Rhythm) நம் தமிழ்ப்பாடலொன்றை அமைத்து, அதை வேற்று மொழியினர் எளிதாகப் பாடக் கொற்றுவிடுகின்றனர். என்று வைத்துக்கொள்வோம். அது…. ‘பார்த்தீர்களா என் இசையால் உலக மக்கள் அனவரும் நம் தமிழைப்பாடும் வண்ணம் செய்துவிட்டேன் என்று பெருமை பேசினால் அதனினும் அறியாமை, அறிவீனம் வேறொன்றுமிருக்க முடியாது. மாறக தமிழை இப்படித்தான் பேசவேண்டும் – பாட வேண்டும் போலிருக்கிறது’ என்று எண்ணி புதிதாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுபவனுக்கு, அது ஒரு தவறான வழிகாட்டுதலாகும்.
இந்த நிலையில், பாடல் காட்சிகளிலும், தொல்காப்பியம் கூறிய ஒன்பான் சுவைகளின் வழியே பாடல் வடிவங்கள் நடிகர்திலகம் எவ்வாறு உருவாக்கித் தந்துள்ளார் என்பதைக் கண்டு வழங்கினால் எதிர்காலக் கலைஞர்களுக்கு அதுவே ‘இலக்கணமாக’ அமையும்.
1. நகைச்சுவைப் பாடல் நடிப்பு
அ. எள்ளல் (பிறரை இகழ்ந்து பாடல்)
தன் ஒரே தங்கையின் திருமணம், தாய்நாட்டைக் காணப்போகிறோம் என்ற தனியாத ஆவலில் கனவுகள் தரைமட்டமாகிப் போகின்றன. படுக்க இடமும் பசிக்கு உணவும் தர மறுக்கிறது பாசமுள்ள தாய்நாடு. ஏமாற்றுபவனுக்கு இடமென்று தெரிந்து கொள்கிறான். பைத்தியக்காரனாக வேடம் புனைந்து தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறான். அப்போது பிறக்கும் பணம் பற்றிய பாடலில் பணம் என்று அலைவோரை எள்ளி நகையாடுகிறான். பாடல்மூலம். அது…
“தேசம் ஞானம், கல்வி, ஈசன் பூசையெல்லாம்
காசு முன் செல்லாதடி – குதம்பாய்
காசு முன் செல்லாதடி
ஈசனும் ஈசனார் பூசையும் – தேசத்தில்
காசுக்குப் பின்னாலே ….
……………………………………” என்று
கேலி செய்யும் பாடலில், அப்பாடலின் ஒவ்வொரு வரியின் பொருளும் அவன் முகத்தில் அவ்வப்போது மாறிமாறத் தோன்றி மறையும். நடிகர் திலகத்திற்கு முதன் முதலில் குரல் கொடுத்துப் பெருமை பெற்றவர். சிறந்த இசையறிஞரான சிதம்பரம் சி.எஸ். ஜெயராமன்
அவ்வாறே……
“சாப்பாடு இல்லாம தவிக்குதுங்க
ஜனம்
கூப்பாடு போட்டுமனம் குமுறுதுங்க
உயிர்
காப்பாத்த கஞ்சி தண்ணி ஊத்துங்க
என்றால்
தாப்பாளைப் போடுறாங்க பாருங்க
அந்தச் சண்டாளர் ஏங்கவே
தன்னலமும் நீங்கவே
தாரணி மீதிலே பாடுங்க
ராகம் கா.. கா….”
இப்பாடல்களையும், கதை – வசனத்தையும் தந்தவர் கலைஞர் மு. கருணாநிதி – படம் பராசக்தி (1952).
-
Thanks to Mr Dhanusu
ஆ. இளமை
(இளமை கண்டு எள்ளல்) தன்மை ஒரு ஓட்டுநர் எனத் தவறாகப்புரிந்து கொண்ட பெண்ணை அவள் அறியாமையை எண்ணி அவள் இளமையை (அறிவு முதிரா தன்மையை) எள்ளிப் பாடும் பாடலின் வடிவத்தை அன்னை இல்லம் (1963) படத்தில்,
“நடையா – இது நடையா
ஒரு
நாடகமன்றோ நடக்குது
இடையா – இது இடையா
அது
இல்லாத்து போல் இருக்குது(நடையா)
……………………..
என்ற பாடலில் காணலாம். கண்ணதாசனின் கவிதை இது. குரல் தந்தவர். டி.எம். சௌந்தர்ராஜன்.
இ. பேதமை (அறிவின்மை)
சட்டாம்பிள்ளையின் மகன் விரித்த வலையில் விழுந்த அரண்மனைப் பெண்கள், நடுராத்திரியில் கோவிலுக்கு வந்து அவனுக்காகக் காத்திருக, அவர்கள் அறியாமையை எண்ணி எள்ளிப்பாடும் பாடல் தூக்குத்தூக்கி (1954)யில் டி.எம். எஸ். குரலில் -
“ஏறாத மலைதனிலே
ஜோரான கௌதாரி ரெண்டு
தாராளமா இங்கே வந்து
ததிங்கிணத்தோம் தாளம் போடுதய்யா
ததிங்கிணத்தோன் தாளம் போடுதய்யா.
தொகையறா
கல்லான உங்கள் மனம்
கனிஞ்சு நின்று ஏங்கையிலே
கண்கண்ட காளியம்மா
கருணைசெய்வ தெக்காலம்.?!
கோமாளி உடையுடன் , தனது குண்டு குண்டான கண்களை உருட்டி உருட்டி பாடலுகேற்றவாறு ஒரு சின்ன நடனமு ஆடும் இடமே பேதமையின் பாடல் வடிவம்.
ஈ. மடன் (தன் மடமை பற்றித் தோன்றுவது)
தற்கொலைக்கு முயன்றவனைத் தடுத்து நிறுத்தி ‘வாழ நினைத்தால் வாழலாம். ஆசையிருந்தால் நீந்திவா’ என்று அழைத்தவளின் காதலுக்குத் தந்தை ஒரு தடையாக இருக்கிறார். வீரம் விவேகம், கலையில் விற்பன்னாக உள்ளவனுக்கே தன் மகள் என்ற தந்தை, சங்கீதப் போட்டியில் தன்னோடு பாட அழைக்கிறார்.
“நீயே என்றும் உனக்கு நிகரானவன்” – என்று பாட்தொடங்கி அவர் இசையில் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடி அவரை மகிழ்விக்கிறாள். அவர் தந்தையின் இசை வெறியைக் கண்டவன் பாடப்பாட தன் தலையில் அடித்க்கொள்கினாற் பாண்டியன்; தன் மடமையை எண்ணி. நடிகவேள் எம்.ஆர். ராதா நடிகர் திலகத்திற்கு இப்பாடல் காட்சியில் துணையாக வருவது பலேபாண்டியாவில். (1962).
2. அவலச் சுவை பாடல் நடிப்பு
அ. இளிவு (இகழப்பட்டதால் வந்தது)
‘பறவைகள் பலவிதம் – அவை ஒவ்வொன்றும் ஒருவிதம்’ எனப் பாடித்திரிந்தவனின் பார்வையில் மாடப்புறாவொன்று படுகிறது. மணமாலை சூட்டுகிறேன் என்கிறான். கறை படிந்த உன் காதலைக் குப்பையிலே போடு என்கிறான். ஆனால் உண்மையான மனமாற்றத்திற்கு உள்ளனவன், தான் திருந்தி வாழ மாடப்புறாவை மனையாளாக்குமாறு பெற்றவளை வேண்டுகிறான். மகனின் வாழ்வை எண்ணி, விரும்பாத அவளை மகனுக்குமணம் முடித்து வைக்கின்றனர். ஆனால் அவள் உள்ளமோ அவன் கடந்த காலக் கறைபடிந்த வாழ்வை எண்ணி எண்ணி இகழ்ந்து அவனோடு ஒட்டாது உறவாடாது வாழ்கிறது. வீணானது வாழ்வு என்று விழிநீர் சிந்துகிறது மாடப்புறா. முற்றிலுமாக மாறிய கணவன் கேட்கிறான்……
“ஏனழுதாய் ஏனழுதாய்
என்னுயிரே ஏனழுதாய்
நானழுது ஓய்ந்ததற்கு
நன்றி சொல்லவோ அழுதாய்.!…ஆனவரை சொல்லி விட்டேன்
அழுதழுது பார்த்து விட்டேன்
தாய்மொழியில் வார்த்தையில்லை
வாய்மொழிக்கும் வலிமையில்லை. (ஏனழுதாய்)
என்வழக்கில் சாட்சியில்லை
எனதுபக்கம் யாருமில்லை
சட்டம் தரும் சலுகைகூட
சமுதாயம் தரவில்லையே!…..(ஏனழுதாய்)
………………..”
என்று மனைவியின் இகழ்ச்சிக்கு ஆளானதை எண்ணிப் புலம்பும் இச்சுவையின் வடிவம், இருவர் உள்ளம் (1963) படத்தில் கண்ணதாசன் கவிதையை டி.எம். எஸ். குரலில் பாடுகையில கிடைக்கும்.
-
Thanks to Mr Dhanusu
ஆ. இழிவு (உயிராவது பொருளாவது இழத்தல்)
கட்டிய மனைவியைத்தவிக்க விட்டு, பரத்தையின் பஞ்சணையில் படுத்துப் புரண்டு, முடிவில் கண்ணைப் பறிகொடுத்து விட்டு வந்து கட்டிய மனைவியின் காலடியில் விழுகிறான். மனைவி தவிக்கிறாள்.
தொகையறா
“ஈடற்ற பத்தினியின் இன்பத்தைக்கொன்றவன் நான்
அவள்
இதயத்தில் கொந்தளித்த எண்ணத்தைக் கொன்றவன் நான்
வாழத்தகுந்தவனை வாழாமல் வைத்துவிட்டு
பாழும் பரத்தையினால் பண்பதனைக் கொன்றவன் நான்
அந்தக் கொள்கைக்கே ஆளாய் இருந்து விட்டேன்
இனி
எந்தக் கொலை செய்தாலும் என்னடி என் ஞானப் பெண்ணே!
பாடல்
“தவறுக்கும் தவறான தவறைப் புரிந்து விட்டு
தனிப்பட்டுப் போனவன் ஞானப்பெண்ணே
பதறிப் பதறி நின்று கதறிப்புலம்பினாலும்
பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே”
(“ஐயோ… அத்தான்! உங்கள் கண்கள் எங்கே அத்தான்… எங்கே?” கதறுகிறாள் மனைவி.)
“கண்ணைக் கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி
மானே வளர்த்தவனே வெறுத்துவிட்டாண்டி”
- என்று கதறிப்புலம்பும் வடிவத்தை மக்கள் கவிஞன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கவிதைவரிகளுக்கு சி.எஸ். ஜெயராமன் குரல்கொடுக்கும் தங்கப்பதுமை (1959)யில் காணலாம்.
இ. அசைவு (தளர்ச்சி)
தாயோடு அறுசுவை போகும்;
தந்தையோடு கல்வி போகும்
சேயோடு இன்பம் போகும்;
நல்ல
மனைவியோடு எல்லாம் போகும்!;
மனைவி இறந்துவிட்டாள். மகனோ குற்றவாளி தானோ…. கடமையே கண்ணெனக்கருதும் காவலதிகாரி. அடிமேல் அடி விழுந்தால் ஆடாதார் யார்?
“சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கையென்றால்
தாங்காதுபூமி (சோதனை)
…………………………………………….
…………………………………………….
தானாடவில்லையம்மா சதையாடுது
அது
தந்தையென்றும் பிள்ளையென்றும் உறவாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பதை
அதற்குள்
பூநாகம் புகுந்துகொண்டு உறவென்றது
அடிதாங்கும் உள்ளமிது இடிதாங்குமா
இடிபோல பிள்ளை வந்தால் மடிதாங்குமா”
வீரமான உள்ளத்தின் தளர்ச்சியைப் படம்பிடித்துக் காட்டும் வரிகள், குரல் வளம், குணச்சித்திர நடிப்பு. கண்ணதாசன், டி.எம். எஸ். கணேசன் இவர்கள் பின்னணியில் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் இணைந்தளித்த இவ்வடிவம் தங்கப்பதக்கம (1974).
ஈ. வறுமை(பொருளின்மை)
ஏற்கனவே குறிப்பிட்டதுபோல், நடிகர் திலகம் வறுமையில் வாடும் நாயகனாக வேடமேற்றது ஒன்றிரண்டு படங்கள்தான். செல்வம். அதன் மதிப்பு குறித்து தன் மகனை முன்னிலைப்படுத்திப் பாடி வறுமையை வெளிப்படுத்திய வடிவம் ‘நான் பெற்ற செல்வம்’ (1956) படத்தில் கிடைக்கும். பாடலுக்குக் குரல்தந்தவர் டி.எம்.எ. , பாடல்,
“வாழ்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா.(வாழ்ந்தாலும்)
வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்
தாழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும்
இல்லாது போனால் ஏளனம் செய்யும்
இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும்”
-
Thanks to Mr Neyveli Vasudevan
"உன்னை ஒன்று கேட்பேன். உண்மை சொல்ல வேண்டும்"..
புதிய பறவை திரைக் காவியத்தில் இரண்டாவது முறையாக வரும் 'உன்னை ஒன்று கேட்பேன்' பாடலில் தான் எவ்வளவு மென்மை! எவ்வளவு இனிமை! என்ன ஒரு மனதை வருடும் மெல்லிசை! மிக அழகாக நகரும் உணர்வுபூர்வமான காட்சிகள். தன்னையே மறந்து, காதல்வயப்பட்ட உணர்வுகளின் சங்கமத்தால் தவிக்கும் நடிகர் திலகம்.. அதே மனநிலையில் அபிநய சரஸ்வதி. கப்பலில் பாடிய அதே பாடலை அவர் விரும்பிக் கேட்க, காதல் உணர்வுகளை அற்புதமாய் சரோஜாதேவி அவர்களும் பாடலின் மூலம் பிரதிபலிக்க ....மனதில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் காதல் தீயை அங்கே குளிர் காய்வதற்காக எரிந்து கொண்டிருக்கும் விறகுக் கட்டைகள் சாட்சியமாய் சொல்ல, நாற்காலியில் தலை சாய்த்தபடியே பாடலின் இனிமையில் நடிகர் திலகம் உறங்கிப்போக ஒரு காதல் உருவாகி காவியமாக ஆகத் தொடங்கும் அந்த அமைதியான அழகான இரவுப் பின்னணிக் காட்சி...அற்புதத்திலும் அற்புதம்.
முதல்பாடல் ஆர்ப்பாட்டமும்,அளப்பரையும் என்றால் பின்னது அமைதியும் மென்மையும் குடி கொண்டது.
மெல்லிசை மன்னரின் மிக மெல்லிய மனதை வருடிக் கொடுக்கும் மெல்லிசையும், இசைக்குயிலின் இன்னிசைக் குரலும் நம்மைத் தென்றலாய்த் தாலாட்டுகின்றன.
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
Thanks to Mr Raghavendar
இளமை வேகத்தில் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்று வாழ்க்கையை அவசர கதியில் துவக்குவது, பின் குழந்தைகள் வளர்ப்பு, அவர்களுக்கு வாழ்க்கை அமைத்துக் கொடுப்பது போன்று கடமைகளை முடித்த பின்னரே தம்பதிகள் தங்களுடைய வாழ்க்கையின் பொருளை புரிந்து கொள்ளத் துவங்குகின்றனர். அப்படிப் பட்ட காலத்தில் தான் அந்நியோன்யம் என்றால் என்ன என்று புரிகிறது. கணவன் மனைவி இருவருமே தாங்கள் அப்போது தான் ஒருவரை ஒருவர் ஆழமாக அன்பு செலுத்தத் துவங்குகிறார்கள். உண்மையான காதல் வாழ்க்கையில் புரியும் வயது ஐம்பதிற்குப் பிறகு தான். Romance என்பதன் பொருளே புரிந்து கொண்டவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைக்கும் அன்பைத் தான். காதலர்களிடம் வருவது புரிந்து கொண்ட அன்பு அல்ல. இதனை வித்தியாசப் படுத்தாமலே நடித்தவர்கள் தான் காதல் மன்னர்கள் என்றும் காதல் இளவரசர்கள் என்றும் அழைக்கப் படுகிறார்கள். வாழ்க்கையில் எப்படிப் பட்ட குணம் கொண்டவர்களும் காதல் வசப் பட்டதுண்டு. அவர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தும் போது அது நிச்சயம் அவரவர் குணாதிசயங்களுக்கேற்றவாறே இருக்கும். மென்மையான இசையும் மென்மையான பாடலும், மென்மையான குரலும் காதலை மென்மையாக காட்டுமே தவிர உண்மையாக சித்திரித்து விடாது. இப்படி பாத்திரமறிந்து பிச்சையிடு என்பதற்கேற்ப, காதலை அந்த பாத்திரத்திற்கேற்றவாறு உருவகப் படுத்தி உயிர் கொடுத்தவர் நடிகர் திலகம்.
அந்த ஐம்பது வயதில் வரும் புரிந்துணர்வின் அடிப்படையிலான உண்மையான அன்பினையும் காதலையும் வெளிப்படுத்த இந்தப் பாடல் மிகச் சிறந்த உதாரணம். இளைய ராஜா ஒருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இந்தப் பாடலின் போது ஐம்பது வயதைத் தாண்டியவர்கள். ஆனால் இந்தப் பாடலின் ஜீவன் ... அதற்கு வயதே இல்லை.
ROMANCE என்ற வார்த்தைக்கு விளக்கமே இந்தப் பாடல் தான் ...
ஐம்பதிலும் ஆசை வரும்,
ஆசையுடன் பாசம் வரும் - இதில்
அந்தரங்கம் கிடையாதம்மா
நாள் செல்ல நாள் செல்ல
சுகம் தானம்மா
பாடல் வரிகளைப் பாருங்கள். கவியரசரின் வரிகளில் ... அந்த ஐம்பது வயதில் மனிதன் உடலில் ஏற்படக் கூடிய மாற்றத்தை இரண்டே வார்த்தைகளில் சொல்லி விட்டார். அந்தரங்கம் கிடையாதம்மா..
ஒரு ஐம்பது வயதில் மனிதன் காதல் வசப்படும் போது ... கணவன் மனைவி இருவருக்கிடையில் வெளிப்படக் கூடிய அந்நியோன்யத்தை இதைவிட சிறப்பாக இது வரையில் தமிழ்த் திரைப்படத்தில் சித்தரித்ததாக எனக்குத் தோன்றவில்லை. ஸ்கூல் மாஸ்டர் படத்தில் தன்னந்தனிமையிலே பாடல் ஓரளவிற்கு இந்தக் கருத்தைக் கூறலாம் ஆனால் முழுமையாக அல்ல, காரணம், அந்தப் பாடலில் அந்தப் பாத்திரத்தின் பொருளாதார நிலை, குடும்ப சூழ்நிலை போன்ற துன்பங்களையும் துயரங்களையும் சேர்த்து வெளிப்படுத்தும்.
ரிஷிமூலம் படத்தில் இடம் பெற்ற இப்பாடலை பார்ப்போமா..
குரல் சௌந்தர்ராஜன்
வரிகள் கண்ணதாசன்
இசை இளையராஜா
நடிப்பு நடிகர் திலகம், கே.ஆர்.விஜயா
-
When the picturaisation of this song to take place in Singapore during the month of May and they are waiting for for the kavignar to give the song so that
they can finish the shooting in the month of May. When they are pointing out to this to kavignar that the song to be shooted in the month of May because of
the sun light and for that the kavignar replied how many May you want and now we are watching this wonderful song from the movie
Avan Than Manithan. This was the story behind the birth of this Superb Song.
http://youtu.be/twb3fk1FMlw
-
Sivaji Ganesan - Definition of Style - 1
Style என்கிற வார்த்தை இடத்திற்கு இடம் Contextஐப் பொறுத்து பல்வேறு விதமான Interpretationகளில் அர்த்தம் செய்து கொள்ளப்படுகிறது. சரியாக சொன்னோமானால் BAணி என்பதைக் கொள்ளலாம். ஆனால் நடிப்பைப் பொறுத்தவரையில் நடிகர் திலகம் தனக்கென எந்த ஒரு பாணியும் கடைப்பிடிக்கவில்லை. தொலைக்காட்சிகளிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் செய்யப்படும் மிமிக்ரியில் நடிகர் திலகத்தைப் போல் செய்ய முயன்று தோல்வி கண்டவர்களே அதிகம். வெற்றி பெற்றோர் ஒருவர் கூட இல்லை என்பதே உண்மை. அதிக பட்சம் அவருடைய குரலை வேண்டுமானால் செய்திருக்கலாம்.
இவ்வாறு யாராலும் கடைப்பிடிக்க முடியாத ஸ்டைலை செய்ததினால் தான் இன்று வரை அவர் இமயமாய் உயர்ந்திருக்கிறார்.
அவருடைய உடல் மொழியில் அவர் செய்து காட்டும் ஒய்யாரங்கள் மக்களிடம் மிகப் பெரிய ஈர்ப்பையும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளன. அவரைப் போல் உடையலங்காரம், நடை, பார்வை கையசைவு போன்றவை அவருடைய ரசிகர்களால் இன்றளவும் பின்பற்றப்படுகின்றன. இதை மிமிக்ரி என கொச்சையாகக் கொள்ள முடியாது. அவருடைய பாதிப்பின் விளைவே இதைப் போன்ற செய்கைகளில் ரசிகர்களின் ஈடுபாடு.
இந்த உடல் மொழியில் அவருடைய ஒய்யாரங்களே மக்களிடம் சிவாஜி ஸ்டைல் என்று மிகப் பரவலாக சென்றடைந்து, கலாச்சாரத்தின் இலக்கணமாகவே மாறியுள்ளன என்றால் மிகையில்லை.
இந்த அளவிற்கு தாக்கம் ஏற்படுத்திய அவரது ஒய்யாரமான உடல் மொழிகளடங்கிய காட்சிகள், குறிப்பாக பாடல் காட்சிகளை இத்தொடரில் நாம் கண்டு மகிழலாம். ரசிக்கலாம்... மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளலாம்.
மங்களமான குங்குமத்துடன் துவங்குவோமே...
அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை எந்தக் காலமானாலும் சரி, இரு கைகளையும் பாக்கெட்டுகளில் நுழைத்து வைத்துக் கொண்டு ஒய்யாரமாய் நடந்து வந்தால் பாருய்யா, சிவாஜியாட்டம் ஸ்டைல் காட்டுகிறார் என்று கமெண்ட் வருவது சகஜம். இந்த ஸ்டைலை அவர் தன் முதல் படத்திலேயே காட்டி விட்டார். என்றாலும் இது மிக மிக பிரபலமானது இந்தப் பாடலுக்குப் பிறகு தான்.
பருத்திக் காட்டில் பழம் கிடைக்கும் பசி தீரும் என்று எண்ணி... இந்த வரிகளில் அவர் காட்டும் ஸ்டைல் இருக்கிறதே.. இன்றும் தியேட்டர் இரண்டு படும் அளவிற்கு அளப்பரை எழும். ஸ்டைல் என்றால் சிவாஜி என்பதற்கு இன்னொரு உதாரணமாய்த் திகழும் இப்பாடலை என்றும் ரசிகர்கள் விரும்பிப் பார்ப்பார்கள்..
சூப்பர் ஸ்டைல் மன்னன். நடையைப் பாருங்களேன்.. கண்ணடிப்பதும் தலையை ஒய்யாரமாய் ஆட்டி வருவதும்..
வர்ணித்துக் கொண்டே இருக்கலாம்.. பார்த்து மகிழுங்கள்..
https://www.youtube.com/watch?v=FN-foH6RGOo
-
Sivaji Ganesan - Definition of Style - 2
ஸ்டைல்.. இது உருவத்தில் மட்டுமல்ல... உடல் மொழியில் மட்டுமல்ல. தன் குரலிலும் கூடகொண்டு வர முடியும் என்பதற்கு ஒரு சான்று.. இப்பாடல் காட்சிக்கு முன் வரும் உரையாடலைக் கேளுங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள்.. கேட்கும் போதே மனம் நெகிழும் காதல் உணர்வு... இதுவும் யாராலும் இமிடேட் செய்ய முடியாத அசல் ஸ்டைல்... அந்த முகத்திலுள்ள வசீகரம்... அந்த முகத்திற்கு ஈடு செய்யும் அந்த நாயகியின் Reciprocation...அந்த உடையலங்காரம் அந்த சூழலை மிகவும் தத்ரூபமாக பிரதிபலிப்பதும் ஒரு ஸ்டைல் தான்.. The body language is reflective of the inner self...இரு கைகளையும் இருபுறமும் விரித்து அனாயாசமாக அந்த சூழலை அனுபவித்து ஒரு காதலின் மனோநிலையை அருமையாக பிரதிபலிக்கும் இந்த ஸ்டைல்.. காதலர்களின் அடையாளச் சின்னமாக இப்பாடலை காட்டுகின்றன.
ஆஹா... எங்கள் தேவிகா அண்ணிக்குப் பிறகு ரசிகர்களின் நெஞ்சில் கூடாரம் போட்டு அமர்ந்து மற்றவர்கள் அனைவரையும் துரத்தியடித்து விட்ட நாயகி வாணிஸ்ரீ..
அது என்னமோ சிவாஜி வாணி என்றாலே எனக்கு முதலில் பிடித்தது சிவகாமியின் செல்வன் தான்.. மாளிகை அப்புறம் தான்..
போதும் போதும் என்கிறீர்களா..
பார்த்து மகிழுங்கள் பாடல் முழுதும் ஸ்டைலின் இலக்கணத்தை..
https://www.youtube.com/watch?v=YUxky21-Ybk
முக்கியமான பின்குறிப்பு..
வழக்கமான ஸ்டைலான நடை பற்றி நாம் சிலாகித்து எழுதக் கூடிய பாடல்களுக்கான தொடரல்ல இது ... நடிகர் திலகத்தின் நடிப்பில் அமைந்துள்ள பல்வேறு பாத்திரங்கள் அவற்றின் குணாதிசயங்கள் அவற்றில் அவர் பிரயோகித்துள்ள ஸ்டைலையே இது குறிக்க உள்ளது. எனவே பாப்புலரான பாடல்களை அதிகம் எதிர்பார்க்க வேண்டாம்.