மணிரத்னம் படத்தின் தமிழ்நாடு உரிமையை கைப்பற்றியது ஸ்டுடியோ க்ரீன்! - VIKATAN
மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், கனிகா நடித்திருக்கும் படம் ‘ஓ காதல் கண்மணி’. படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம். இந்த படத்தின் டீஸர், மற்றும் டிரெய்லர் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
இதுவரையில் படத்தின் டீஸரை 10 லட்சம் பேர் பார்த்து வைரலாக்கியுள்ளனர். ஏப்ரலில் வெளியாக உள்ள இப்படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை ஸ்டூடியோ க்ரீன் கே.இ.ஞானவேல் பெற்றுள்ளார்.
http://cinema.vikatan.com/uploaded/ok_2.jpg
துல்கர் சல்மான் , நித்யா மேனன் இருவரும் நடித்து கேரளாவில், ‘பெங்களூரு டேஸ்’, மற்றும் ’உஸ்தாத் ஹோட்டல்’ என இரு படங்களும் மெகா ஹிட் ஆனதால், இந்த படம் மலையாள மக்கள் மத்தியிலும் வரவேற்பு பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.
எனவே தமிழ்நாடு உரிமையை அடுத்து கேரள உரிமை பெரும் தொகைக்கு விலைப்போகும் என எதிர்ப்பர்க்கப்படுகிறது.