பறக்கும் பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
அது சிரித்தோடி வரும் மாது
Printable View
பறக்கும் பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
அது சிரித்தோடி வரும் மாது
அழகு சிரிக்கின்றது ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது பக்கம் வருகின்றது
பழக தெரிய வேணும் உலகில் பார்த்து நடக்க வேணும் பெண்ணே
பெண்ணே பெண்ணே அலைகிறேன் அன்றில் ஆகி அழுகிறேன்
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே என்றே தேடி திகைக்கிறேன்
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது
வாசல் இது வாசல் தலைவாசல் வாழ்க்கை சொல்லும் வாசல் முதல்வாசல்
இரவுக்கு விடியல் தலைவாசல் எங்களுக்கு உலகே தலைவாசல்
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
இன்றல்ல நாளை சூடட்டும் மாலை
கேட்டதைத் தருவேன் நான் தானே
Enga Veettu Pillai | பாடல் வரிகள்
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை
நல்லவர்க்கெல்லாம்...
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத் தேடு
தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு
ஓடும் மேகங்களே
ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே
ஆறுதல் தாரீரோ
மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதைக் கேட்டு
இது பூபாளம் புது ஆலோலம்
விழிப் பூவும் மலரும் காலை நேரம்
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்
மயங்குகிறாள் ஒரு மாது தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
ஒரு பொன் மானை நான் காண தக்கதிமித்தோம்
ஒரு அம்மானை நான் பாட தக்கத்திமித்தோம்
சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
காண வந்த காட்சி என்ன
வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே ஏனடி
முல்லை மலரே முல்லை மலரே உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி
மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன உன் மனதில் மனதில் மனதில் உள்ள முதல் வரி என்ன
முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ மறந்ததே
மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு மடிமேல் விளையாடி
நாம் மனம் போல் உறவாடி
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே உறங்காமலே கண்ணும்
கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே
எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது
ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால்
அதில் சுகமில்லை கண்ணா
ஒன்றல்ல இரண்டல்ல ஒரு கோடி
எண்ணங்கள் நெஞ்சோடு போராடுது
என்ன சொல்ல நான் என்ன சொல்ல
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரைச்
உன் கைகள் கோர்த்து உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே தினம் உயிர் வாங்குதே
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள்நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில் பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
பன்னீர் புஷ்பங்களே கானம் பாடு உன்னைப்போலே எந்தன் உள்ளம் ஆடுது புது தாளம் தொட்டு
தொட்டுத் தொட்டுப் பாடவா
தொடர்ந்து வந்து பாடவா
கட்டிக் கொண்டு பாடவா
கன்னம் பார்த்துப் பாடவா
பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை
என் வாழ்விலே ஒரே பொன் வேளை
என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம்
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம் ஊரார்க்குச் சொல்லுங்கள் ஒன்று
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
உண்மை சொன்னால் நேசிப்பாயா மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா