:) :)Quote:
Originally Posted by joe
VERY VERY VERY emotional.
I ACTUALLY had tears when I finished reading :)
Printable View
:) :)Quote:
Originally Posted by joe
VERY VERY VERY emotional.
I ACTUALLY had tears when I finished reading :)
Dear all,
I voted for Expression.
Cinemavil nadipu enru parkum podhu - Paarparvargaluku mudhalil manadhil padhivadhu
EXPRESSIONS dhan.
Sivaji in expressions are SOMETHING GREAT in all HIS CHARATCTERS......
Adhan pin dhan matra amsangal ellam...
Especially, HIS FACE EXPRESSIONS....
Chinna kangal dhan. Anal adhil pirakum bhavangal....
Ordinary face dhan - Anal adhil velipaduthum Unarchigal.....
Sivajiku FAce il irukum ANAITHU NARAMBUGALLLUM - Avar pechai ketkum.....
Adhanal dhan Avarai Inru varai SPECIAL aga feel pannugiren......
Dear Saradha,
Sivajin 2 bhagangalai Nanraga kondu senravargal list il ennai serthu irukireergal.
Unmaiyil, naan avvalavaga contribute pannavillai enbadhae ennam.
ingae ezhudhubavargal ellam migavum vishayam
therindhavargal (including you)
Enaku ungalai pola ellam vishayam avvalavaga theiryadhu.
Anal sivaji ai piditha oru rasigai.Adhanal enaku thonriyadhai dhan ingae solli irukiren.
Anyway, Indha list il ennai serthadhal, ennal mudindhadhai contribute seigiren....
Thanks for your listing.....
Dear hubbers,
I am extremely delighted to see the discussion going on in a rapid pace. Actually the juniors are the seniors and the seniors are juniors in the way analyses are made of NT. NT would not have asked for more. But he is not with us to see you all, particularly to see the youngsters analysing him. As a fan who had the golden opportunity of moving with him, I can definitely say, he would have transformed himself into a child to enjoy and appreciate the discussion of youngsters.Please carry on.Code:Oru kuzhandhaiyaai maari ungal paarattukkalaikkondaadi magizhvar. Appadippatta oru innocent manidharai udalaal izhandhuvittom enbadai ninaikkumbodu manadu ganakkiradhu. Ungalaiyellam sentimentaal touch panniuvadarkaaga idhai ezhudavillai. Aanal naan ezhudiyadellam nidarsanam. "Naan anuppuvadhu message alla. Ullam. Adhil ulladellam ezhuthum alla."
Please visit the orkut website which runs parallel to our hub. There are about 1400 hubbers in the communities of NT and the discussions there are equally astonishing. I am reproducing below a portion of the discussion from a hubber (by name Suvarna, who is a doctor it seems) and see for yourself.
Code:When the film schoolmaster was released ,there were big posters all over kerala showing sivaji Ganesan with a pen in his hands.The character is that of a boy who stole a pen ,and the schoolmaster instead of scolding,gave the boy his own pen saying that he should never commit the folly again.And in the end when the boy grow up as an honest truthful officer,he still carries the pen given by the teacher and cherishes it as his very best award.It was a touching episode ,and as a child I was moved by it.And ofcourse cried.Though the role was only for a short while he outshadowed all the other actors by that appearence.I think in Oru yathramozhi also his presence had a charismatic and thrilling overshadowing of whoever appears with him on scene and the malayalam actors who acted in those scenes definitely would have gained a cherished experience for acting with such a genius.I am a malayali who learned Tamil while I was 14,by reading the name sivaji Ganesan in Pesum padam.
:notworthy:Quote:
Originally Posted by joe
Orkut Community
http://www.orkut.com/Community.aspx?cmm=7140729
Dear all,
This was a small way of saying my admiration for my idol. I had written this poetry 3 years back on shivaji's death anniversary day in our HUB POETRY SECTION, later submitted in yahoo literary group.
I wish to post the same here.
_______________
ஷிவாஜிக்கு அஞ்சலி
----------------------------
நடிகனாய் இமயம்
உவமைக்குச் சிம்மம்
எளிய கவியும் எழுதித் தோற்கும்,
கவித்துவம் இல்லா சிறியவள் நான்.
வலிய சொல்லும் வீழ்ந்து துவள,
சொல்வளம் மிக்க கலைஞன் நீ.
இறைவன் அளித்த வரமோ?
கலையுலகச் சிகரமோ?
உன் திறமைக்கு உவமை
தேடித் தேடி சலித்தேனோ!!
எழுத்தின் வடியா உணர்வுகளையும்
எளிதில் காட்டிய கலைஞனே... -உன் மேல்
விவரிக்க முடியா பக்தியைக் கொண்டு
வார்த்தைகள் இன்றித் தவித்தேனே!
கவி புனையத் துணிந்து, பின்னே,
காவியம் அன்றோ நீ!...என உணர்ந்து,
வெட்கித் தலை தான் கவிழ்ந்தேனே.
உன் இமாலய வெற்றிக்கு,
என் பணிந்த சமர்ப்பணம்.
_____
என்றும் ஷிவாஜி ரசிகையாய்...
ஷக்திப்ரபா
சக்தி,
உள்ளத்து உணர்வை உள்ளபடியே சொல்லும் கவிதை ..மிக்க நன்று பாராட்டுக்கள். :D
ஜோ,
எதேதோ எழுத நினைத்து, எதுவுமே எழுத முடியவில்லை.
இவரை எழுத ஆரம்பித்தால் சிறு கவிதையில் முடித்து விட முடியுமா என்ன!
நன்றி. :)
சக்தியை தொடர்ந்து நான் முன்பு எழுதியதையும் இங்கே மீண்டும் பகிர்கிறேன்...
உனக்கு தேசிய விருது கிடைக்கவில்லையாம்!
குடகு மலையைக் கடந்தாயா என
இமய மலையைக் கடந்தவனிடம் கேள்வி!
பிரான்சுக்கும் எகிப்துக்கும் தெரிந்த உண்மை -இங்குள்ள
பீஷ்மர்களுக்கு மட்டும் தெரியாதாம்!
சிதம்பரனார் செல்ல மகன்
சினிமா என்பதையும் மறந்து
"ஐயோ அப்பா!" என்றரற்றினாராமே! -இந்த
சிறப்புக்கு முன் ஆஸ்கார் எந்த மூலைக்கு?
விண்ணுலகில் கூட...
சிவனும் ,சிதம்பரனாரும்
கட்டபொம்மனும் ,கர்ணனும்
அப்பரும் ,அம்பிகாபதியும்,
ஜார்ஜ்-ம் ,சாக்ரட்டீசும்
கண்ணாடி பார்ப்பதற்கு பதில்
உன் முன்னாடி தான் நிற்கிறார்களாமே?
- ஜோ
HOW TRUE HOW TRUE! :clap: :clap: :clap:Quote:
Originally Posted by joe
VERY WELL written JOE.
Loved ESP the last few lines.
சக்தி :thumbsup:Quote:
Originally Posted by Shakthiprabha
நடிப்புலக மேதை சிவாஜி
- அனுஷிராம்
அக்டோபர் 01, 2004
தமிழ்நாட்டில் நடிப்புக் கலைக்கு இலக்கணம் வகுத்த கோமகன் பிறந்து இன்றுடன் 77 வருடங்கள் பூர்த்தியாகின்றன. சினிமாதான் சகலமும் என்றாகி விட்ட தமிழ் சமுதாய சூழலில், ஒரு ஐம்பதாண்டு காலம் தனது நடிப்பால் அனைவரையும் கட்டிப் போட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
தீந்தமிழை வளர்த்தவர்கள், பரப்பியவர்கள் என்ற வகையில் சான்றோர் பலரை நம்மால் சுட்டிக்காட்ட இயலும். ஆனால் அமிழ்தினும் இனிதான தமிழை, தமிழ் மக்களுக்கு உச்சரிக்க கற்றுத் தந்தவர் என்றால் அந்தப் பெருமை சிவாஜி கணேசன் ஒருவரையே சாரும். கலைஞர் கருணாநிதியின் கன்னல் தமிழ் வசனங்களை தனது சிம்மக் குரலால் சாஸ்வதமாக்கியவர் சிவாஜி.
தமிழ் சினிமாவில் யாருக்கும் கிடைக்காத ஒரு அரிய அமைப்பு சிவாஜிக்கு வாய்த்தது. அவர் பராசக்தியில் அறிமுகமாகியபோது கோலிவுட்டில் கதாநாயகர்கள் பஞ்சம். அதை சிவாஜியும், அவரை திரையுலகினரும் நன்கு பயன்படுத்திக் கொண்டனர்.
ஆக்ஷன் படம் என்றால் எம்ஜிஆர், காதல் படம் என்றால் ஜெமினி என்று இருந்த நிலையில், தன் மீது எந்த முத்திரையும் விழாமல் பார்த்துக் கொண்டார் சிவாஜி. அதன் காரணமாக சரித்திரம், புராணம், நகைச்சுவை, வில்லன், காதல், குடும்பம் என்று சகலவிதமான ரோல்களில் அவரால் பிரகாசிக்க முடிந்தது.
படங்களில் நடிக்கும் போது, ஏற்று நடிக்கும் கதாபாத்திரமாகவே மாறிவிடுவது சிவாஜியின் வழக்கம். அதனால் தான் இன்றுவரை சிவபெருமான், வ.உ.சி., கட்டபொம்மன், கர்ணன், ராஜராஜ சோழன், அப்பர் ஆகியோரை சிவாஜியின் உருவில் தமிழ் மக்கள் கண்டு வருகிறார்கள். சிவாஜியை இந்த உயரத்திற்கு கொண்டு சென்றதில் அவரது நாடக அனுபவம், பாடி லாங்வேஜ், கர்ஜிக்கும் குரல் ஆகியவை முக்கிய காரணங்கள்.
சராசரி தமிழனின் உயரம்தான் சிவாஜிக்கும். ஆனால் தனது அற்புதமான பாடி லாங்க்வேஜ் மூலம் 6 அடிக்கும் அதிகமாக விஸ்வரூபம் எடுக்கும் திறன் அவருக்கு இருந்தது. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடித்ததற்காக ஆசிய- ஆப்ரிக்க திரைப்பட விழாவில் இரண்டு கண்டங்களிலும் சிறந்த நடிகர் விருதுக்கு சிவாஜி தேர்வு செய்யப்பட்டார். விருதை வாங்க சிவாஜி மேடைக்குச் சென்றபோது, தேர்வுக்குழுவினர் ஆச்சர்யப்பட்டனர்.
சிவாஜியின் உயரம் இவ்வளவுதானா? ஆனால் படத்தில் அதிக உயரமாகத் தெரிகிறாரே என்று கேட்டார்கள். அதனால் தான் நடிகர் கமல் ஒரு பேட்டியில், என்னிடம் சிவாஜியின் உயரம் எவ்வளவு என்று கேட்டால், ஐந்து அடியிலிருந்து ஆறரை அடி வரை என்று கூறுவேன். அவர் அப்பராக நடித்தால் 5 அடியில் இருப்பார். ராஜராஜ சோழனாக நடித்தால் 6 அடிக்கு மேல் இருப்பார் என்று கூறினார்.
சிவாஜி படிக்காதவர் என்றாலும் வக்கீல், போலீஸ், தொழிலதிபர் என்று எந்த வேடத்தில் நடித்தாலும் அந்த வேடத்திற்கு ஏற்ப நாகரீக நடை, உடை பாவனைகளிலும் ஆங்கில உச்சரிப்பிலும் கலக்குவார். தமிழ்நாட்டில் இருக்கும்போது வேஷ்டி, சட்டை அணியும் பழக்கமுடைய சிவாஜி, வெளிநாடு செல்லும்போது கோட், சூட் அணிந்து டீக்காக செல்வார். அப்போது அவருடைய தோரணை ஒரு சீமான் போல் இருக்குமாம்.
ஒரு முறை சிவாஜியும் அவரது மகன் ராம்குமாரும் அமெரிக்கா சென்றார்கள். அப்போது சிவாஜியின் தோரணையைப் பார்த்து, அவரை அமெரிக்க கஸ்டம்ஸ் அதிகாரிகள் அதிகம் சோதிக்காமல் விட்டுவிட்டார்கள். அவருக்குப் பின்னால் வந்த ராம்குமாரை குடைந்து விட்டார்களாம். இதை ராம்குமார் வியப்புடன் ஒரு பேட்டியில் கூறினார்.
சிவாஜியிடம் இன்னொரு சிறப்பம்சம், ஒவ்வொரு கேரக்டரிலும் அவர் காட்டும் வித்தியாசம். கிழவர் வேடத்தில் சிவாஜி எத்தனையோ படங்களில் நடித்துள்ளார். ஆனால் திருவருட்செல்வர் படத்தின் அப்பர் வேடம், நவராத்திரி டாக்டர் வேடம், தெய்வமகன் அப்பா வேடம், தேவர் மகன் அப்பா வேடம் என ஒவ்வொன்றிலும் பாடி லாங்குவேஜ், வசன உச்சரிப்பு ஆகியவற்றில் பெரும் வித்தியாசம் காட்டியிருப்பார். இதே வித்தியாசத்தை நாயகன் கமல், ஒரு கைதியின் டைரி கமல், இந்தியன் கமலிடம் காணமுடியாது.
பொதுவாக சிவாஜி மீது கூறப்படும் குற்றச்சாட்டு அவர் ஓவர் ஆக்டிங் பண்ணுகிறார் என்பது. இதற்கு பதிலளிக்கும் முன்பு, உலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராக மதிக்கப்பட்ட, மறைந்த ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ, நடிப்பிற்கு விளக்கமாக கூறியதை குறிப்பிட விரும்புகிறேன். அஞிணாடிணஞ் டிணாண்ஞுடூஞூ டிண் ணிதிஞுணூ என்றார் பிராண்டோ. இயல்பிலிருந்து திரிந்தது தானே நடிப்பு.
மேலும் சிவாஜி, நாடகத்துறையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர். நாடக மேடையில் மிதமிஞ்சிய நடிப்பு மட்டுமே வேண்டப்படும். அளவுக்கதிகமான பாடி லாங்வேஜ் மூலம் மட்டுமே கடைசி வரிசை ரசிகர்கள் வரை கதாபாத்திரத்தை கொண்டு சேர்க்க முடியும். அப்படி நடித்துப் பழக்கப்பட்டவர், சினிமாவில் நுழைந்தபோது அவரிடம் தேவையான அளவு நடிப்பை இயக்குநர்கள் பெற்றிருக்க வேண்டும். சிவாஜி ஒரு காட்டாறு. அதற்கு அணை கட்ட மறந்து விட்டு, வேகம் அதிகமாக இருக்கிறது என்று ஆற்றின் மீது குறை கூறுவது சரியில்லை.
எந்த வடிவிலும் குடம் செய்வதற்கு ஏதுவாக குழைவான மண்ணாக சிவாஜி இருந்தார். அவரிடம் இருந்து தேவையான அளவை தங்களுக்கு எடுத்துக் கொண்டு, சரியாகப் பயன்படுத்தியது பாரதிராஜாவும் (முதல் மரியாதை), கமலும் (தேவர்மகன்) தான். நடிக்கவே தெரியாதவர் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து, அதன் மூலம் அரியாசனத்தைப் பிடிக்கும் அவலம் எல்லாம் நேர்ந்த தமிழ்நாட்டில், ஓவர் ஆக்டிங் என்ற பெயரில் ஒரு உன்னத கலைஞனை குறைத்து மதிப்பது முற்றிலும் சரியானதில்லை.
இப்போது இருக்கும் நடிகர்கள் யாவரும், சிவாஜியின் பாதிப்பின்றி தங்களால் ஒரு படத்தில் கூட நடிக்க முடியாது என்று கூறுவதிலிருந்து அந்த மகாநடிகனின் சிறப்பு தெளிவாகும். இவர்கள் மட்டுமென்ன, இனி வரும் நடிகர்கள் கூட சிவாஜியைப் புறக்கணிக்க முடியாது. ஏனென்றால் அவர் நடிப்புலகின் அரிச்சுவடி.
http://thatstamil.oneindia.in/specia...ys/sivaji.html
நமது கலை மரபின் சிறந்த பிரதிநிதி
ஞாநி
நடிப்பில் மிகப் பெரிய வெற்றியையும், அரசியலில் மிகப் பெரிய தோல்வியையும் சந்தித்தவர் சிவாஜிகணேசன். −ரண்டுக்குமான காரணங்கள் நமது கவனத்துக்குரியவை.
அரசியலில் சிவாஜி தனது வழிகாட்டிகளாக முழுமையாக ஏற்றுக் கொண்ட தலைவர்களாக −ருவரை மட்டுமே குறிப்பிட முடிகிறது. ஒருவர் காமராஜர், மற்றவர் வி.பி. சிங். பெரியார், அண்ணா, நேரு, −ந்திராகாந்தி, ராஜீவ்காந்தி என்று பல அரசியல் தலைவர்களுடன் அவர் உறவாடிய போதும், காமராஜரை மட்டுமே தன் முழுமையான தலைவராக அவர் பல சமயங்களில் பிரகடனம் செய்து வந்தார்.
சிவாஜிகணேசன் ஓர் அனைத்திந்திய அரசியல் கட்சியின் மாநிலத் தலைமைப் பொறுப்பை ஏற்றுச் செயல்பட்டது என்பது ஒரே ஒருமுறைதான். வி.பி. சிங்கின் தலைமையில் −யங்கிய ஜனதாதளத்தின் தமிழகத் தலைவராக அவர் −ருந்தார். காமராஜர், வி.பி.சிங்க போன்றவர்களின் அரசியல் கொள்கைகளும் வழிமுறைகளும் வேறுவிதமான அரசியலால் ஓரங்கட்டப்பட்ட நிலையில், அவர்களை ஆதரித்த சிவாஜியும் அரசியலில் வேரூன்ற முடியாததில் ஆச்சரியமில்லை.
தமிழக ஜனதா தளத்தின் தலைவராக சிவாஜி −ருந்த போது (1991) தேர்தல் பிரசாரத்துக்கான ஆடியோ வீடியோக்களைத் தயாரித்துத் தரும் பொறுப்பு அக்கட்சி நண்பர்கள் சிலரால் எனக்குத் தரப்பட்டது.
சிறு வயது முதல் சிவாஜியின் படங்களின் ரசிகனாக −ருந்து வந்த எனக்கு அவரை −யக்கும் வாய்ப்பாக அது −ருந்தது. மண்டல் கமிஷன் என்பது என்ன? ஏன் −ட ஒதுக்கீடு தேவை? மண்டல் எப்படி அறிவியல் பூர்வமாகத் தனது அறிக்கையைத் தயாரித்திருக்கிறார் முதலிய விவரங்களைத் தெரிவிக்கும் ஓர் உரையையே பிரசார ஆடியோ கேசட்டாகத் தயாரித்தோம். சுமார் 40 நிமிட உரையை சிவாஜி பதிவு செய்தார். வீடியோ கேசட்டின் தொகுப்பு உரையையும் அவரே கேமரா முன்பு வழங்கினார்.
−ந்தப் பதிவுகளைச் செய்வதற்கு முன்பு அவர் காட்டிய தொழில் பூர்வமான அக்கறை, உழைப்பு என்னால் மறக்க முடியாதவை. நான் எழுதி வந்த முழு உரையையும் பல முறை தனக்குப் படித்துக் காட்டச் சொன்னார். பிறகு அவர் எனக்குப் படித்துக் காட்டினார். குரல் ஏற்ற −றக்கங்கள், சொற்களுக்கான அழுத்தம், உச்சரிப்புத் தெளிவு ஒவ்வொன்றும் சரியாக −ருக்கிறதா? நான் விரும்பியபடி அமைகிறதா என்று நடுநடுவே கேட்பார். சில −டங்களில் கரடுமுரடான சொற்சேர்க்கையைத் தானே மாற்றி அமைத்து, அப்படி மாற்றி வைத்துக் கொள்ளலாமா என்று அனுமதி கேட்பார்.
ஐம்பதாண்டு கால அனுபவத்துக்குப் பிறகும், அவர் முதல் நாள் நடிக்க வந்தவனைப் போல அன்று காட்டிய சிரத்தையும், உழைப்பும்தான் அவருடைய கலையுலக வெற்றியின் ரகசியம்.
சிவாஜிக்குப் பிறகு, திரையுலகுக்கோ, நாடக மேடைக்கோ நடிக்க வந்த எந்த நடிகரிடமும் அது வர்த்தக சினிமாவானாலும் சரி, நவீன நாடக −யக்கங்களானாலும் சரி, அவருடைய பாதிப்பு −ல்லாமல் −ருக்கவே முடியாது. அந்த அளவுக்குப் பல தலைமுறைகளைப் பாதித்தவர் அவர். ஆனால் அவருக்கு முன்னோடி என்று ஒருவரும் −ல்லை.
சிறுவயதிலேயே நாடக மேடைக்கு வந்து விட்டார். அங்கு பயின்ற தமிழ், கடைசி வரை அவருடைய தெளிவான உச்சரிப்புக்கு ஆதாரமாக அமைந்தது. ஏராளமான ஆங்கிலப் படங்களை ரசிகராக அவர் பார்த்திருக்கிறார். ஆனால் அதில் எந்த நடிகரையும் அவர் பிரதி செய்தது கிடையாது. தன்னுடைய பாணி நடிப்பை அவர் தாமாகவேதான் உருவாக்கிக் கொண்டவர்.
சிவாஜியின் நடிப்பு மிகைநடிப்பு, செயற்கையானது என்ற விமர்சனம் அவர் கோலோச்சிய காலம் முதல் −ன்று வரை பல தரப்புகளில் கூறப்பட்டு வருவதுதான். ஆனால் அந்த விமர்சனங்கள் எல்லாம் தமிழ்க் கலையை, −ந்தியக் கலையை, −வற்றின் மரபுகளின் அடிப்படையில் பார்காமல், ஐரோப்பியக்கலை மரபின் ஊடாகப் பார்ப்பதிலிருந்து எழுபவை.
தமிழக, −ந்தியக் கிராமியக் கலை மரபுகள் மேற்கத்திய யதார்த்த பாணிக்கு முரண்பட்டவை. −ங்கு தெருக்கூத்தானாலும், யட்சகானமானாலும், ஜாத்ராவானாலும், எல்லாமே ஆங்கிலத்தில் Stylisation எனப்படும் அலங்காரபாணியைச் சேர்ந்தவை.
நமது புராணங்கள் எப்படி யதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட கற்பனைகள் மூலம் யதார்த்த வாழ்க்கை உண்மைகளை விளக்குகின்றனவோ, அதேபோல, கலைகளிலும், நடிப்பு என்பது யதார்த்தம் மீறிய பாணி மூலம் அசல் வாழ்க்கையைத் தரிசிக்கச் செய்வதாக −ருப்பதே நமது மரபு.
அந்த மரபின் மிகச் சிறந்த பிரதிநிதியாக, ஒப்பாரும் மிக்காரும் −ல்லாத கலைஞனாக விளங்கியவர் சிவாஜி. அவருடைய மிகச் சிறந்த படங்களைப் பார்த்த பிறகும் கூட என் மனதில் எஞ்சும் முக்கியமான வருத்தம் சிவாஜியின் முழு ஆற்றலையும் பயன்படுத்திக் கொள்ளப் போதுமான கதாசிரியர்களும், −யக்குநர்களும், வர்த்தகச் சூழலும் கடைசி வரை அவருக்கு வாய்க்கவில்லையே என்பதுதான்.
சிவாஜிக்கு வாய்க்காமல் போன −ன்னொன்று அவருக்கு உரிய அனைத்திந்திய அங்கீகாரத்தைப் பெற்றுத்தரக்கூடிய அரசியல் செல்வாக்கு. பத்மஸ்ரீ, பத்மபூஷன், மாநிலங்களவை உறுப்பினர் பதவி அவருடைய அவ்வப்போதைய காங்கிரஸ் சார்பின் அடிப்படையில் தரப்பட்டிருந்தாலும், −ந்திய அரசு அவருடைய பிரதான தொழிலான நடிப்பில் அவருக்கு உரிய அங்கீகாரத்தை நீண்ட காலம் அளிக்கவே −ல்லை. வியட்நாம் வீடு, எதிரொலி, எங்கிருந்தோ வந்தாள், எங்க மாமா, சவாலே சமாளி என்று பலவகைப் படங்களை அவர் தந்த அதே சமயத்தில் −தில் எந்தப் படத்துக்கும் ஈடாக −ல்லாத ஒரு ரிக்ஷாக்காரனுக்காக எம்.ஜி.ஆருக்கு தில்லியின் 'பாரத்' விருது தரப்பட்டது. (எம்.ஜி.ஆரே அந்தப் படத்தை விட வேறு பல படங்களில் சிறப்பாக நடித்திருந்த போதும் அப்போது அந்த விருது கிடைக்க அரசியலே காரணம்).
சிவாஜியைவிட மிகக் குறைவான பங்களிப்பைச் செய்தவர்களுக்கெல்லாம் தாதா சாகிப் பால்கே விருது கொடுத்துத் தீர்ந்த பிறகுதான் அவருக்கு பால்கே விருது கிட்டியது.
பிரெஞ்ச் அரசு செவாலியே விருது கொடுத்த பிறகு தான் சிவாஜிக்கு −ந்தியாவில் அரசின் உலகத் திரைப்பட விழாவைத் தொடங்கி வைக்கும் வாய்ப்புத் தரப்பட்டது.
சிவாஜிக்குக் கிடைத்த விருதுகள், கிடைக்காத விருதுகள், எல்லாவற்றை விடவும் முக்கியமானது திரைப்படச் சரித்திரத்தில் அவருக்குக் கிடைத்துள்ள −டம்தான். உலக அளவில், நடிப்பு முறைகளில், ஸ்டானிஸ்லாவ்ஸ்கி பாணி என்றெல்லாம் பல வகைகள் பேசப்படுகின்றன. தமிழ் சினிமாவைப் பொறுத்தமட்டில் என்றென்றைக்கும் சிவாஜி பாணி என்ற ஒரு வகை −னி நிரந்தரமாகிவிட்டதுதான் அவருடைய பெருமை.
நன்றி : தினமணி
சிவாஜி விட்டுச் சென்ற தடம்
தெ.மதுசூதனன்
1931 அக்டோபர் 31 செலுலாயிட் ·பிலிம் தமிழ் மொழியிலும் பேசவும் பாடவும் ஆரம்பித்தது. முதல் பேசும்படம் காளிதாஸ். −தன் பின்னர் உருவான படங்கள் பேசவும் பாடவும் தொடங்கி நூறு சதவிகிதம் தமிழ்பேசும் படம் என்ற விளம்பரங்களுடன் 1935க்கு பின்னர் பல்வேறு படங்கள் வெளிவந்தன. தியாகராஜபாகவதர், பி.யூ. சின்னப்பா போன்ற நட்சத்திர அந்தஸ்து மிக்க கதாநாயகர்கள் தோன்றினர்.
−வர்கள் செல்வாக்கும் மதிப்பும் மிக்க கலைஞர்களாக தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்தனர். பின்னர் எம்.ஜி.ஆர். சிவாஜி என்னும் நட்சத்திர திலகங்கள் தமிழ்ச்சினிமாவின் திசைப்போக்கை வழி நடத்தினர். சினிமா பார்க்கும் பார்வையாளர்கள சிவாஜி, எம்.ஜி.ஆர். ரசிகர்கள் குழாம் என பிளவுபட்டு நிற்கும் போக்கும் உருவாகியது.
1952−ல் பராசக்தி படத்தில் சிவாஜி கதாநாயகனாக அறிமுகமானார். −தைத் தொடர்ந்து சினிமாவில் பல்வேறு வேடங்களில் நடித்து 'சிவாஜிபாணி' என தனியே அடையாளப்படுத்தும் தனித்தன்மை துலங்கும் வகையில் நடிப்புக்கு ஓர் −லக்கணம் வகுத்துக் கொடுத்தார்.
பகவத்சிங், திருப்பூர்குமரன், வ.உசி. சிதம்பரம்பிள்ளை, வீரபாண்டிய கட்டப்பொம்மன், ராஜராஜசோழன் போன்ற வரலாற்று நாயகர்களாகவும்; அப்பர், சிவன், நாரதர் என்று கடவுள் பாத்திரமாகவும்; தொழிலாளி, விவசாயி, ரவுடி, கொள்ளைக்காரன், வக்கீல், நீதிபதி, காவல்துறை அதிகாரி, குருக்கள், பாதிரியார், குடும்பத்தலைவன் என பல்வேறு வேடங்களில் நடித்து வந்தார். −துவரை சிவாஜி ஏற்று நடித்திராத பாத்திரங்கள் எவை எவை என்றே கணக்கிட வேண்டும். அந்தளவிற்கு அவர் ஏற்றுள்ள பாத்திரங்களின் எண்ணிக்கை உள்ளது.
சமுதாயத்தின் பல்வேறு பிரதிநிதிகளை - பாத்திரங்களை ஏற்று தனது நடிப்பினால் உயிரூட்டி வந்த நடிகர். அசல் நன்றாகவும் உண்மையானதாகவும் −ருக்கும்படி தன்னை ஒவ்வொரு படத்திலும் மெருகூட்டிக் கொண்ட கலைஞன் சிவாஜி. −துவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனைச் சக்கரவர்த்தியாக நடிப்புலகில் வரலாற்றுச் சுவடுகள் பதித்துள்ளார்.
தமிழ்மண்ணின், தமிழ்க்கலாசாரத்தின் உயிர்ப்பின் ஆழத்துக்குள் உள்நுழைந்து மீண்டும் மீண்டும் தனக்கான பிறவியை எடுத்து வந்த மகா கலைஞன். அந்த நடிப்புச் சுடர் தனது 74வது வயதில் (21 ஜூலை 2001) அணைந்துவிட்டது.
1.10.1927 −ல் பிறந்த சிவாஜி தஞ்சையை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் விழுப்புரத்திலேயே −வரது குடும்பம் வாழ்ந்து வந்தது. பள்ளிக்கு கல்வி கற்க அனுப்ப பெற்றோர் எவ்வளவோ முயன்றனர். ஆனால் சிவாஜிக்கு படிப்பில் அவ்வளவு ஆர்வம் −ருக்கவில்லை. மாறாக நாடகத்தில் நடிப்புத்துறையில் ஆர்வமாக −ருந்தார்.
1935ல் தனது ஏழாவது வயதில் நாடகஅரங்கில் நடிக்கத் தொடங்கினார். யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளை நாடகக் கம்பெனி, எம்.ஆர்.ராதா கம்பெனி, என்.எஸ்.கே. சபா, கே.ஆர்.ராமசாமி நாடகக் கம்பெனி, சக்தி நாடக சபா ஆகியவைகளில் தனது நடிப்புத் திறமையால் பிரகாசித்தார். −ந்த நாடகப் பள்ளிகளில் நன்கு தேர்ந்து பட்டை தீட்டப்பட்ட நல்ல கலைஞராக, நடிகராக சிவாஜி வெளிப்பட்டார்.
1945ல் தந்தை பெரியார் முன்னிலையில் அறிஞர் அண்ணாவின் சிவாஜி கண்ட −ந்துராஜ்யம் நாடகத்தில் சிவாஜி வேடத்தில் நடித்தார். அவருடைய சிறப்பான நடிப்பைக் கண்டு பாராட்டி, ''வி.சி. கணேசன் −ன்று முதல் சிவாஜிகணேசன்'' ஆகிறார் என்று பெரியார் கூறினார். அன்று தொடங்கிய சிவாஜி கணேசன் உச்சரிப்பு தமிழ்ச் சமூகத்தின் முக்கிய குறியீடாக, உயிர்ப்பு மையமாக மாறிற்று.
1951ல் ஏவிஎம் படப்பிடிப்பு நிலையத்தில் காலடி எடுத்து வைத்தார். பராசக்தி படம் மூலம் அறிமுகமாகி தமிழ்த்திரை உலகில் தனக்கென்று தனித்த முத்திரை பதித்து தமிழ்ச் சினிமா வரலாற்றில் ஓர் சகாப்தமானார். அவரது பாதிப்பு −ன்றி நடிப்புத்துறையில் யாரும் நுழைந்துவிட முடியாதளவிற்கு சிவாஜிபாணி நடிப்பு பலரது நடிப்பில் வெளிப்பட்டிருந்தது.
−துவரை தமிழ்த்திரை உலகம் கண்டிராத ஒரு நடிகனின் உருவாக்கம், ஆளுமை தமிழ் மரபின் ஊடாக வெளிப்பட்டு அந்த மரபின் தலைமுறைக் கையளிப்பின் பிரதிநிதியாகவும் சிவாஜி விளங்கினார். ஆழ்மனதும், உள்ளுணர்வும் ஒருங்கிணையும் போது வெளிப்படக்கூடிய படைப்பு உந்துதல், பாத்திரப் பிரக்ஞை −துவரையிலான நாடகப் பயிற்சியால் மேலும் மேலும் மெருகு பெற்று 'கதாபாத்திரமாக வாழ்தல்' சிவாஜிக்கு −யல்பாகியது. −துவே நடிப்பின் −லக்கணம் கண்ட −லக்கியமாக சிவாஜி பரிணமிப்பதற்கும் காரணமாயிற்று.
சிவாஜி நடிப்பு −லக்கணம், நடிப்பு முறைமை சார்ந்த சிந்தனைப் பள்ளி தமிழில் உருவாவதற்கும் சாதகமான சூழல் உருவாகியது. தெளிவான வசன உச்சரிப்பு, உடல்மொழி சிவாஜியின் தனித்தன்மையாயிற்று. ஒரு நடிகனின் உருவாக்கம், அதனூடு வெளிப்படும் ஆளுமைச்சக்தி யாவை என்பதையெல்லாம் உணர்ந்து கொள்ள சிவாஜியின் தடங்கள் ஆழமானவை அகலமானவை.
''நீ நன்றாக நடிக்கலாம். நீ மோசமாக நடிக்கலாம். ஆனால் முக்கியமானது என்னவென்றால் நீ உண்மையாக நடிக்க வேண்டும்'' .
''உண்மையாக நடிக்க வேண்டுமென்பதன் பொருள் சரியாக தர்க்கரீதியாக முரண்பாடற்று சிந்தித்து கடினமாக உழைத்து உணர்ந்து பாத்திரத்தோடு ஒன்றி நடிப்பதாகும்''.
''−த்தகைய உளவியல் போக்குகளை எடுத்துக் கொண்டு நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற பாத்திரத்தின் ஆன்மீக மற்றும் புறவாழ்க்¨க்கு ஏற்றாற் போல பொருந்தச் செய்ய வேண்டும். அதைத்தான் கதாபாத்திரமாகவே வாழ்தல் என்கிறோம்.''
''படைப்புத் தொழிலில் −துவே தலையாய முக்கியத்துவம் பெற்றது. உள்ளுணர்வுத் தூண்டுதலை ஏற்படுத்தும் பல வழிகளைத் திறப்பதோடு கதாபாத்திரமாகவே வாழ்வதால் நடிகரின் ஒரு முக்கிய குறிக்கோளையும் நிறைவேற்ற உதவுகிறது. பாத்திரத்தின் புறவாழ்க்கையை மட்டும் வெளிப்படுத்துவது அவருடைய வேலை அல்ல. அவருடைய சொந்த மானுடப் பண்புகளை அந்த −ன்னொரு மனிதனின் வாழ்க்கைக்கு ஏற்றாற் போல் மாற்ற வேண்டும். ஆத்மார்த்தமாக அதில் தன்னை அர்ப்பணிக்க வேண்டும். நமது கலையின் அடிப்படை நோக்கமே மனித ஆன்மாவின் அகவாழ்வைப் படைப்பதும் கலைவடிவாக அதை வெளிப்படுத்துவதும் ஆகும்.''
−வ்வாறு ரஷ்யக் கலைஞர் ஸ்டனிஸ்லவீஸ்கி ஒரு நடிகனின் உருவாக்கம் பற்றிய சிந்தனையாக முன்வைக்கின்றார். −தனை சிவாஜி தன் −யல்பான நடிப்பில் நன்கு வெளிப்படுத்தியுள்ளார். சிவாஜி ஸ்டனிஸ்லவீஸ்கி யாரென்பதைக்கூட அறியார். ஆனால் சுயம்புவாக தான் கண்டடைந்த நடிப்பு முறைமை அதற்கான −லக்கணம் ஸ்டனிஸ்லவீஸ்கியின் நடிப்பு முறைமையுடன் ஒத்துப்போவது ஆச்சரியமாக −ருக்கிறது.
சிவாஜியின் நடிப்பு மிகை நடிப்பு, செயற்கையானது என்ற விமரிசனம் பலராலும் −ன்றுவரை முன்வைக்கப்பட்டு வருகிறது. −ந்தப் பார்வை மேற்கத்திய அளவுகோள்கள் ஊடாக பார்க்கும் பார்வையினால் வெளிப்படுவது. கீழைத்தேச −ந்தியக் கலை தமிழ்க் கலைமரபுகளின் செழுமையின் தொடர்ச்சியில் −ருந்து −தனைப் பார்க்கும் போது 'யதார்த்தம் மீறிய பாணி' −ந்த மரபுகளின் விளைச்சலாகவே உள்ளது.
ரஷ்ய கலாச்சாரம் பின்புலத்தில் −ருந்து கண்டடைந்த நடிப்பு முறைமை பற்றிய ஸ்டனிஸ்லவீஸ்கியின் பாணி உலகளவில் −ன்று பரவலாக பேசப்படுகிறது. அதுபோல் தமிழில் சிவாஜி பாணி என்பதாக பேசக்கூடிய அத்தனை சாத்தியங்களையும் தன்னளவில் தமிழ்க் கலாசாரம் வெளிப்படுத்தி உள்ளதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
தமிழ்ச் சமூகமும் அதன் சினிமாவும் என்னும் ரீதியில் நாம் சிந்திக்கும் பொழுது சிவாஜி பற்றிய சிந்தனையாக அது திசை திருப்புவதும் தவிர்க்க முடியாது. அந்தளவிற்கு தமிழ்ச் சினிமாவின் திசைப் போக்கின் வழிநடத்தலில் 'சிவாஜி பாணிக்கு' −ன்றுவரை ஒரு மவுசு −ருப்பதை கண்டு கொள்ள முடிகிறது.
உலக அளவில் நடிப்பு முறைமைகளில் பல்வேறு நடிப்பு பாணி −ருப்பது போல், தமிழில் 'சிவாஜி பாணி' என்ற ஒருவகை 'சிந்தனைப் பள்ளி'யாக மாறிவிட்டது. −துவே தமிழ் சினிமாவின் வரலாற்றின் சிவாஜி விட்டுச் சென்ற தடம்.
http://archives.aaraamthinai.com/spe...vaji/pg-04.asp
நடிகர் திலகம் மறைவுற்றபோது தொலைக்காட்சியில் திரையுலகப் பிரமுகர் ஒருவர் (சிவகுமார் என்று நினைவு) சொன்னது:
தில்லானா மோகனாம்பாள் எடுக்க ஏ.பி. நாகராஜனுக்கு மிகுந்த தைரியம் தேவைப்பட்டது. காரணங்கள்: 1. அந்தச் சமயத்தில் கதநாயகன் மீசையில்லாமல் இருக்கவே முடியாது. மக்கள் ஒதுக்கிவிடுவார்கள். சிக்கலாருக்கு மீசை கிடையாது.
2.சமகாலப் படங்களே வரவேற்கப்படும் நிலை. புராணக்கதையில்லாவிட்டாலும், சமீந்தார்காலக் கதையாயிற்றே.
3. போதாக்குறைக்கு முழுக்க முழுக்க கருநாடக இசையையும் பரத நாட்டியத்தையும் அடிப்படையாய்க் கொண்டது. பொதுசனம் வரவேற்குமா என்ற பெரிய கேள்வி.
எல்லாவற்றிற்கும் துணிந்து எடுத்த நாகராஜனின் வெற்றி இசரித்திரமானது. தயாரிப்பாளர்களும், விநியோகிப்போரும் சில சமயம் இயக்குநருமேகூட மக்களின் ரசனைக்குக் கட்டளைக்கல்லல்ல.
கொசுறு செய்தி: படம் முதலில் வந்தபோது ஸ்ரீவைகுண்டம் பெருமாள் கோவில் நாதஸ்வரக்காரர் என்னிட்ம் சொன்னது: "சிவாஜி உண்மயாவே அதை வாசிக்கறாருங்க. நடிக்கலை". இசை தெரியாத என்னளவே இசைக்கத்தெரிந்த அவரும் பிரமித்துப் போயிருந்தார்.
அவன்தான் மேதை.
அன்புடன்
மதுரபாரதி
http://www.treasurehouseofagathiyar.net/13900/13975.htm
நடிப்புத்தலைவன் மேல சக நடிகர்கள் வைத்திருந்த மதிப்பு:
"நான் ஒன்றும் சினிமாவில் பெரிதாக சாதித்து விடவில்லை. என் நடிப்பு முழுக்க அப்படியே சிவாஜி சாரை காப்பியடித்துதான் நடிக்கிறேன். நான் மட்டுமல்ல. எல்லா நடிகர்களும் அப்படித்தான். ஆனால் ஒன்னு, என்னைப்போல சிலபேர் பகிரங்கமா சொல்லிக்கொள்வோம். மற்றவர்கள் சொல்லாமல் காப்பியடிப்பார்கள். அவருடைய நடிப்பில் பத்தில் ஒரு பங்கு கூட என்னால் நடிக்க முடியவில்லை என்பது இன்னொரு உண்மை"
- நடிகர் விஜயகுமர்.
*********************************************
நிருபர்: "அன்புள்ள அப்பா படத்தில் உங்க ரோல் ரொம்ப சின்னதாக இருந்ததே. அது உங்களுக்கு வருத்தமாக இருந்ததா?"
நடிகர் ரகுமான்: "அட நீங்க என்ன சார்...!, சிவாஜி என்ற இமயத்தின் பக்கத்தில் நின்று ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள முடியுமா என்று ஏங்கியவன் நான். இப்போ எனக்கு அவரோட நடிக்கவே வாய்ப்பு கிடைச்சிருக்கு. இதுல சின்ன ரோலாவது, பெரிய ரோலாவது?. எதிர்காலத்தில் எல்லோரிடமும் 'நானும் சிவாஜி சார் கூட நடிச்சேன்'னு பெருமையா சொல்லிக்குவேன்".
*************************************************
நிருபர் : "படிக்காதவன் படத்தில் ரஜினி சார் கூட நடிக்கும்போது பயமாக இருந்ததா?"
நடிகர் விஜய் பாபு: "ஒருவேளை நானும் ரஜினி சாரும் மட்டும் நடித்திருந்தால் அவர் மேல பயம் இருந்திருக்கும். ஆனால் அந்தப்படத்தில் பெரிய சிங்கமாக சிவாஜி சார் இருந்தார். அதனால். அவர் மேல் இருந்த பய பக்தியில் ரஜினிசார் மேல் எனக்கு பயம் வரவில்லை"
naan idhai vazhi mozhigiraen.Quote:
Originally Posted by saradhaa_sn
ippadi pottu sangadapada vakkareengale Joe :D
Joe, great poem. There is one line I need to check. I will PM you.
As for the poll, I voted for Versatility. Yellarum all of the above option keetkuraangga. I think Versatily means all of the above. If you can do all that, then you are versatile. Ambuduthe!
Joe,
With Balaji and groucho promising to do reviews often, saradhaa would come out again with top posts,karthik,jilaba would be contributing, dhanusu would link us to all about NT in the net and you without saying would be as active as ever, I am enjoying and hope to sit back and enjoy the unfolding. I am very happy that this thread is very active. Hope this continues.
Regards
PS: SP! Nice lines. It could have been bit longer.
நேற்று இன்று என்றும் நடிகர் திலகத்தின் பரம ரசிகன் நான்.Quote:
Originally Posted by Murali Srinivas
பள்ளிப்பருவத்தில் எங்கள் ஊரில் மூங்கிலில் பாதி கதவு அளவு பட்டம் செய்து கடற்கரையில் பறக்க விடுவோம் .அப்போதே பட்டம் முழுவதும் நடிகர் திலகத்தின் படங்களை ஒட்டி பறக்க விடுவேன் நான் :)
சிவாஜிகணேசனுக்கு பிரியாவிடை கூறல்
ஒரு பண்பாட்டாற்வியற் குறிப்பு
கார்த்திகேசு சிவத்தம்பி
சிவாஜிகணேசன் காலமாகி விட்டார் என்ற செய்தி தொலைக்காட்சி வழியாக வந்தபொழுது (21.07.2001) அது தமிழகத்தின் கடந்த மாத காலத்தின் அசாதாரண நிகழ்வுகள் பற்றிய நினைப்புகளுக்குள் அமிழ்ந்து விடும் போலவே இருந்தது.
ஆனால், வந்த நிகழ்ச்சிகள் அப்படி அமையவில்லை. மரணம் இயற்கை மரணம் என்றாலும், இழப்பு திடீரென வந்தது போலவும், அத்ந இழப்பு சின்னதொன்றல்ல, மிகப் பெரியது, முழுத் தமிழகம் தழுவியது என்ற தொனியில் ஊடகங்கள் எடுத்துரைக்கத் தொடங்க அந்த எடுத்துரைப்பு தமிழுணர்வில் படியத் தொடங்க, அந்த மனிதன் மறைவுக்குள் தமிழ்ப் பண்பாட்டின் 'இனங்காணல்கள்' சில தொக்கி நிற்கின்றன என்பது புரியத் தொடங்கியது.
அரசியல் தன்னை ஒதுக்கியது கண்டு ஒதுங்கிப் போய் தன் நடிப்பும் தானும் என்றிருந்த சிவாஜிகணேசனுக்கு இறுதி மரியாதையாக வீரர்களுக்கு வழங்கப்படும் இறுதி கெளரவம் (துவக்குவேட்டு மரியாதை, 'லாஸ்ற்போஸற்' இசைப்பு) வழங்கப்பட்டது. சோகம் தமிழகத்தையும் தமிழ் பேசும் உலகத்தையும் தாண்டியது. அனைத்திந்திய சோகம் ஆயிற்று.
சென்னையில் நடந்த இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாத ¦ளிமாவட்டத்தினர் தங்கள் தங்கள் மாவட்ட நகரங்களில் இறுதிமரியாதைச் சடங்குகளை மீளுருப்படுத்திக் கொண்டாடினர். பெண்கள் அழுதனர். ஆண்கள் மொட்டை அடித்தனர்.
உண்மையான ஆச்சரியம் என்னவென்றால் இந்த உணர்வு வெளிப்பாடுகள், போலியானவையாக இருக்கவில்லை. சினிமாத்தனம் என்று சொல்வோமே அந்தப பண்பினவாக இருக்கவில்லை.
இந்த 'நிகழ்ச்சி' (நிகழ்வு அல்ல) தமிழ்நாட்டின் பண்பாட்டுச் சமூகவியலில் ஈடுபாடு கொண்டுள்ளவர்கள் ஆய்வுக்கான ஒன்றாகும்.
அரசியற் பலமும், சமூக அதிகாரமும் இல்லாதிருந்த சிவாஜிகணேசனுக்கு இத்தகைய நெஞ்சுருக்கும் இறுதி மரியாதை ஏன் கிடைத்தது என்பது ஒரு முக்கியமான வினாவாகும்.
அதற்கான விடை காணும் பணியினை மேற்கொள்வதற்கு முதல் இந்த நிலைமையை உருவாக்கியது ஊடகத் தொழிற்பாடு தான் என்பதை மறுக்கமுடியாது. தொலைக்காட்சி அலைவழிகளும் வானொலிச் சேவைகளும் சிவாஜிகணேசன் எதனைச் 'சுட்டி' நின்றார் என்பதை மீளமீளச் சொல்லின. இவையாவற்றையும் தொகுத்துக் கூறுவது போல் அமைந்து, சன் தொலைக்காட்சியினர் அளித்த ஒரு ஒன்றரை நிமிட நேர சிவாஜித் தொகுப்பு. சிவாஜி நடித்த பிரதான பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் ஒன்று மாறி ஒன்றாக நம் கண்முன்னேயோட விட்டனர்.
அப்பொழுது தான் அந்த உண்மை பளிச்சிட்டது.
தமிழகத்திலும், தமிழ் பேசும் நாடுகளிலும், தமிழுணர்வு, தமிழ் பாரம்பரியம் பற்றிய சிரத்தை சமூக அரசியற் பிரக்ஞையில் முக்கிய இடம் வகித்த இருபதாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் தமிழர் தொன்மைகளிலும், வரலாற்றிலும் முக்கிய இடம் பெறும் பலரை 'மீள் உருவப்படுத்தியவர்' சிவாஜிகணேசனே.
காப்பிய பாத்திரங்கள் - கர்ணன், பரதன்; சமய பாத்திரங்கள் - அப்பர்; அரசியற் பாத்திரங்கள் - இராஜராஜன் , கட்டபொம்மன், வ.உ. சிதம்பரனார்.
சிவாஜியின் ஆளுமைக் கூடாகவே நாம் இந்தப் பாத்திரங்களைக் கண்டோம். அவர்களை மனிதர்களாகச் சந்தித்தோம்.
தமிழ்ப் பண்பாட்டு உணர்வு விருத்தியில் இந்த 'மீள் உருவாக்கம்' மிகமிக முக்கியமாக அமைந்தது. இந்த உருவாக்கங்களுக்கான அரசியல் இலாபத்தைப் பெறும் ஆற்றல் விழுப்புரம் சின்னையா கணேசனிடத் திருக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், அந்த நடிகன் மூலமாகவே நாம் தமிழனின் அசாதாரணத் திறன்களைக் கற்பனை செய்தோம், கண்முன் நிறுத்தினோம்.
அந்த வகையில் சிவாஜி தமிழ்ப் பண்பாட்டின் 'உருவத் திருமேனிகளில்' ஒன்றாகிறார்.
சிவாஜி பற்றிய ஊடக மீள நோக்குகள் தமிழ் சினிமா மூலம் நாம் பெற்றுக் கொண்ட 'உணர்வு அகற்சி'களை காட்சிப்படுத்திய - காணபியப்படுத்திய கலைஞனை, அவன் திறனை முதனிலைப்படுத்தின.
அந்த உணர்வின் படிப்படியான ஆழப்பாடுதான் சிவாஜியின் செயற்பாடு மூலம் நாம் எவ்வகை உருவாக்கங்களைப் பெற்றோம் என்பதை வெளிப்படுத்தத் தொடங்கிற்று.
சிவாஜியின் பாத்திரங்கள் பற்றிய சிந்தனை சமகாலத் தமிழ்ப் பண்பாட்டின், அந்த பண்பாட்டின் வாழ்வியலில், ஆள்நிலை உறவுகளில், சமூக அலகு உறவுகளில், குறிப்பாக குடும்ப உறவுகளில் எவையெவை மோதுகை அமிசங்களாக அமைகின்றன என்பது பற்றிய உணர்வை வலுப்படுத்தும்.
நாடகத்தின் - அரங்கின் - பிரதான பயன்பாடுகளில் ஒன்று மனிதர்களை அவர்களின் மோதுகை நிலையிலே காட்டுவது தான். இது நாடகம் (அரங்கு) பற்றிய உலகப் பொதுவான விதி. அரங்கின் விஸ்தரிப்பாக அமைந்த சினிமாவும் இந்த மோதுகைகளை மிகச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது.
தமிழ் நிலையில் இந்த மோதுகைகளை சிவாஜிகணேசனைப் போன்று எவரும் சித்தரிக்கவில்லை. பாத்திரத்தொகையிலும், சித்தரிப்பு ஆழத்திலும் சிவாஜியின் சாதனை மிகப் பெரியது.
மிக மேலோட்டமாகப் பார்த்தாலே இந்த உண்மை புலனாகும். பாசமலர், படிக்காத மேதை, பாகப்பிரிவினை, மங்கையர் திலகம், தங்கப்பதக்கம், வசந்தமாளிகை, முதல்மரியாதை, தேவர் மகன் முதலிய திரைப்படங்களில் பிரதான கதாபாத்திரங்களின் (சிவாஜி சித்தரித்தவை) மோதுகை நிலைகளைப் பார்த்தால் இந்த உண்மை நமக்கு புலப்படும். இந்த அம்சத்தைப் பற்றி சற்று உன்னிப்பாக ஆராய முனையும் பொழுதுதான், சிவாஜியின் நடிப்பு வரலாற்றின் ஒரு முக்கிய உண்மை தெரியவரும். சிவாஜி சித்தரித்த பாத்திரங்கள் பெரும்பாலும் (ஏறத்தாழ எல்லாமே) இந்த மோதுகைகளின் 'பாடு'களை தாங்குகின்றனவாக - துன்பத்தையேற்றுக் கொள்கின்றனவாக அமைந்தன என்பது தெரியும்.
சிவாஜிகணேசன் பற்றிய நினைவுகள் நமக்கு, நமது பண்பாட்டு வட்டத்து வாழ்வியலின் 'மனிதத்துவப்பாடுகளை', 'மனித நிலை சோகங்களை' எடுத்துக் காட்டுகின்றனவாக அமையும்.
சிவாஜிகணேசனுக்குள் இருந்த நடிப்புத் திறன் பிறர் இன்ப, துன்பங்களை தன் உணர்வு நிலைக்குள் உள்வாங்கிச் சித்தரிப்பவன் - இந்த மனித மோதுகைச் சித்தரிப்புக்கான தேடலை ஊக்குவித்தது.
'நடிகனுக்கான சவால்' என்பது இந்தச் சித்தரிப்புக்குள் தான். தனது இந்தப் பணி நன்கு நிறைவேறுவதற்கு அந்த நடிகரோடு 'ஊடாடும்' மற்றைய பாத்திரம் முக்கியமாகும். இதனால், சிவாஜியோடு நடிக்கும் நடிகையர், துணைப் பாத்திரங்கள் மிக முக்கியமாகினர். தான் மதித்த நடிகையர் என பானுமதி, பத்மினி, சாவித்திரியின் பெயர்களை சிவாஜிகணேசன் எடுத்துக் கூறியுள்ளார். (இலங்கை வானொலி 22.07.2001 அன்று இ.தயானந்தா அளித்த நினைவு நிகழ்ச்சி) சிவாஜிகணேசன் 'சுட்டி'நிற்கும் பண்பாட்டுத் தொழிற்பாடுகளைப பற்றி ஆராயும் பொழுது தான் சிவாஜிகணேசனின் சினிமா வருகையும், அதன் பின்புலமும் உற்றுநோக்கப்பட வேண்டியவையாகின்றன.
தமிழ்த் திரையுலகத்தின் 'அமர' கதாநாயகன் சிவாஜி ஒருவர் தான் என்று கூறவே முடியாது. அவர் காலத்து வாழ்ந்த மதனபள்ளி கோபால் இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) முக்கியமானவர். எம்ஜிஆர் தமிழ் சினிமாவை பயன்படுத்தியது போலச் சிவாஜியால் பயன்படுத்த முடியவில்லை. வளப்படுத்தியதுடன நின்று விடவேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இங்கு முக்கியமாக பார்க்க வேண்டுவது, சிவாஜியின் சமகாலத்தவர்களிலும் பார்க்க, சிவாஜியின் வருகைக்கு முன்னர் இருந்தவர்களே.
தியாகராஜ பாகவதருக்குச் சிவாஜியை விட கவர்ச்சி இருந்தது. கே.ஆர். ராமசாமி 'வேலைக்காரி' மூலம் மிகப் பெரிய புகழை ஈட்டியிருந்தார். சிவாஜிக்கு முன்னர் வந்தவர்களுக்கும் சிவாஜிக்குமிருந்த முக்கிய வேறுபாடு, அவர்கள் பிரதானமாக பாடகர்களே (பாடகர்கள் அல்லாதவர்கள் பிரசித்தமடைவது 1950 களின் பின்னரே - எம்ஜிஆர், ஜெமினிகணேசன் முதலியோர்) சிவாஜி உச்சரிப்புச் செம்மையையே தனது பிரதான ஆஸ்தியாகக் கொண்டிருந்தார்.
சிவாஜியின் நடிப்பு அங்க அசைவுகளில் மாத்திரம் நம்பியிருக்கவில்லை. அது 'சொற்ப சீரமை'யிலும் தங்கியிருந்தது.
இந்தச் சொற் சீரமை ஓர் அரசியல் பின்புலத்தோடு வந்தது. அண்ணாதுரை, கருணாநிதி தமிழ்நாட்டின் அரசியல் மேடையையும், அரங்கையும், சினிமாவையும், தமது சொற்பொழிவு முறையாலும், எழுத்து முறையாலும் மாற்றிய காலம் அது. அரங்கில் பாட்டுப் போய் வசனம் முக்கியமான காலம். கதையிலும் பார்க்க வசனத்துக்கு முக்கியத்துவம் வரத்தொடங்கிய காலம்.
சினிமாவுக்குள் இந்தப் போக்கை ஸ்திரப்படுத்திய பாரசக்தி மூலம் சிவாஜிகணேசன் அறிமுகமானார். தமிழ்ச் சினிமாவில் நடிப்பு, இப்படத்துடன் ஒரு புதிய பரிமாணத்தை பெறுகின்றனது.
சிவாஜிகணேசனின் இந்த வருகை இவரை மற்றச் சினிமா நாயகர்களிலிருந்து வேறுபடுத்துகின்றது.
தமிழ்ச் சினிமாவுக்கான நடிப்புக் கலைஞர் வருகை ஸ்பெர்ல் நாடக மரபு வழியாகவே நிகழ்ந்தது. இதனால், ஆரம்ப காலத் தமிழ்ச் சினிமா அமைப்பிலும், எடுத்துரைப்பிலும் அந்த நாடக அரங்கின் இயல்புகளையே கொண்டிருந்தது.
சிவாஜிகணேசனின் நடிப்பு முறைமை இந்திய நாடக மரபின் 'நாட்டிய தர்ம'முறை வழியாக வருவது (இது பற்றி மூன்றாவது மனிதன் ஜூலை இதழில் வந்த எனது கட்டுரையைப் பார்க்கவும்) சிவாஜிகணேசன் 'நாடக வழக்கு'க்கான ஆற்றுகையை தெருக்கூத்து மரபுக்குரிய 'அகல்வீச்சு' ஆங்கில வழியாகச் செய்தார்.
அப்படித் தொடங்கியவர் பின்னர் படிப்படியாக சினிமா என்ற ஊடகத்தின் தனித்துவமான 'காமரா வழிப்பார்வை எடுத்துரைப்பு' என்ற அம்சத்தினால் உள்வாங்கப்பட்டு அதற்குரிய நடிப்பிலே கவனம் செலுத்தத் தொடங்குகிறார்.
நடிகர் முதன்மைக்குப் பழக்கப்பட்டுப் போன தமிழ் சினிமா படிப்படியாக 'டைரக்டர் முதன்மை'க்கு வரத்தொடங்கியது. இந்த மாற்றத்தில் பாலச்சந்தர் பெயர் பெரிதும் அடிபட்டாலும் உண்மையில் கட்புலநிலை, நின்று நோக்கும் பொழுது தமிழ்ச், சினிமாவின் தமிழ் மண்வாசனை பாரதிராஜாவுடனேயே முனைப்புப் பெறுகின்றது.
பாலச்சந்தர், பாரதிராஜா வருகைக்கு முன்னர் எம்ஜிஆர், சிவாஜி 'கோலோச்சி' நின்ற காலத்தில் படப்பிடிப்பின் பொழுது கமராவின் அசைவியக்கத்தையும், கோணங்களையும் இந்தப் பெரும் நடிகர்களே தீர்மானித்தார்களாம். (இது பற்றி சத்யஜித்ரே கூட ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்) அந்த அமைப்பு 'மேடைத்தன்மை' யானதாக விருந்தது.
நெறியாளர்கள் முக்கியமாகத் தொடங்க சிவாஜியின் நடிப்பில் புதிய ஒரு விகசிப்பு ஏற்படுகின்றது. 'முதல் மரியாதை' சிவாஜியின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.
நாடக மரபின் சிசுவாக இருந்த சிவாஜிகணேசன், சினிமாவுக்கேற்ற நடிப்பின் விற்பன்னராகினார். சிவாஜியின் சினிமா வாழ்க்கை தமிழ்ச் சினிமாவின் இந்த வரலாற்றுக் கட்டத்தை எடுத்துக் காட்டுகின்றது.
சினிமா படிமங்களின் கலை - அசையும் படிமங்களின் கலை. அதனால்தான் அதை 'மோர்ன் பிக்சர்' (அசையும் படம்) என்பர்.
சமகால ஊடக உலகின் படிமத் தயாரிப்பில் சினிமாவுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. உலக நிலையில் தொழிற்பட்ட இந்த உண்மை தமிழ்ப் பண்பாட்டினுள்ளும், தமிழ்ச் சினிமாவின் ஊடாகத் தொழிற்படத் தொடங்கியது.
பணபாட்டுப் பிரக்ஞை பிரதானப்படத்தொடங்கிய சமூக அரசியற் சூழலில் அதற்கான ஆள்நிலைப் படிமங்களும் தோன்றின. அந்த நடைமுறையில் தனது சித்தரிப்பு திறனாலும், பல்வேறு பாத்திரத் தேர்வினாலும், நமது பண்பாட்டு வாழ்வியலின் ஒரு 'உருவத்திருமேனி'யாக சிவாஜிகணேசன் என்ற வி.சி. கணேசன் திகழ்ந்தார்.
அவர் மறைவுதான் அவரின் பாரிய படிம வாக்க முக்கித்துவத்தை நமக்கு உணர்த்திற்று.
தமிழ்ப் பண்பாட்டில் நாடக ஆற்றுகையாளர்களை விதந்து கூறும் பண்பு நவீன காலத்திலேயே ஆரம்பிக்கின்றது. இவர்களின் பங்களிப்பு தமிழ்ப் பண்பாட்டின் நவீன கால இயக்கத்துக்கு முக்கியமாகிற்று. என்.எஸ். கிருஷ்ணன் எம்.ஜி. இராமச்சந்திரன் என வரும் அப்பட்டியலில் சிவாஜிகணேசனுக்கு நிரந்தரமான இடமுண்டு.
தினகுரல் 29.07.2001
நன்றி: ஆறாம்திணை.காம்
The poll needs another option... 'All of the above!'
Cant vote until then... :P
4 da record...i voted fr versatility..bt were s da 'all da above' option?
Quote:
Originally Posted by joe
Beautiful work Joe. Especially the last stanza made me shed tears.
I am stunned and stumped by the spate of links/articles provided by Joe. Someone had said that Dhanusu out-joed (of course I didnt take it seriously) but once again Joe has proved what he is capable of. Great work Joe.
Danusu,
Thanks ! Infact you inspired me to find more about NT :D
Let us together "திக்கெட்டும் சென்று நம் திலகத்தின் சிறப்புகளை கொணர்ந்திங்கு சேர்ப்போம்" :D
Dear all,
Kalainyar Karunanidhi and Sivaji kalandhu konda vizhavil Sivajin speech ai solla mudiyuma ?
Nadipai patri thannudaiya feelings ai miga
azhgaga solli irupar Sivaji....
Andha vayadhana kalathilum, nadipai patri pesum podhu dhan mugathil ethanai bhavangal!!!!!
Nadipai NESITHA oru GEM ....... CINEMAVIL MATTUM.....
Yesterday (05/07/07) Raj digital plus telecast the eternal "Paasamalar". But watching the movie was a disappointment. There were so many cuts. The huge cut was, after the meeting of NT and GG after the later gives him a job in his firm, after much reluctance, the next scene shown was NT leaving his house with wife MNR after the domestc problems reached a flashpoint. Almost 40-50 minutes of the movie was deleted, with two beautiful songs, described by Balaji.
Balaji has beautifully described the song sequences. The one shot which I like in "Vaarayo yen thozhi" is that during the rendition of the stanza "malaraadha penmai malarum" describing the events that would be unfolded during the ensuing night, the mates of Savithiri would make fun of her, while climbing down the stairs, accompanying the bride. On listening this NT would display a smile with shyness and slowly move out of the place, lowering his head. What a splendid scene!!
Another of my favourite scene was also edited yesterday, which was described by Balaji {the arguments between NT and GG while GG speaks on NT sharpens the pencil}.
Dance is not only jumping and fast moving ,it is more on Expression.
Traditional koothu ..Nadigar Thilagam and Nadigaiyar Thilagam trying to beat one another in hilairious koothu song in Navarathiri.
Enjoy..
http://www.youtube.com/watch?v=PTV77pK_z38
நடிகர் திலகமே !
பராசக்தியிலே நீ படுக்கையிலிருந்து எழுந்த போது
உன்னோடு தமிழ் சினிமாவும் எழுந்தது !
அது ஒரு சரித்திரத்தின் ஆரம்பம்
புதிய வகை பூகம்பம்
கலைஞரின் கனல் மொழிகள் -உன் குரலால்
கவிதையாய் பொழிந்தது
நீதிமன்றம் ..விசித்திரம் நிறைந்த பல வழ்க்குகளை சந்தித்திருக்கிறது.- ஆனால்
தமிழ் சினிமா -உன்னைப் போல ஒரு நடிகனை கண்டதில்லை.
http://www.youtube.com/watch?v=yl8rhexutJg
நடை ,உடை ,கம்பீரம் ,நளினம் ...
Any challenge?
Watch out 'Devane Ennai Paarungal" from Gnana OLi
http://www.youtube.com/watch?v=i7reU...elated&search=
Joe and Others,
Thanks for the links :)
Will check it out tonight :D
My uncle is a big fan of NT. He has actually watched most of NT movies first day first show and has seen them repeatedly.
He has actually stopped visting theatres after NT stopped acting. he rarely comes to movies, just to accompany us.
whenever there is a Nt movie in TV, he never moves an inch.
His opinion about NT, his last few years in acting were his worst.
Awesome Song! And a GREATT movie, too! 8-) 8-) 8-)Quote:
Originally Posted by joe
Thailak,Sriranga,
Thanks for your visit :D
Don't miss the song 'Devane ennai paarungal' ..Summa kalakkiyiruppar NT :D
No challange to Sivaji in terms of any expressions.. Each and every cell in his body acts perfect to the scene.. GREAT!! :clap:Quote:
Originally Posted by joe
Dear JoeQuote:
Originally Posted by joe
Nice Poem
One Suggestion on the above Poem. This can be written as
Ulaga Cinema - Unnai pola Oru Nadiganai Kandathilai.
Unnai Thirayil Vendravaragal Yaaram Illai. (World Cinema has never seen a actor like you. Nobody has won you in the Screen)
Not sure whether this was posted here already.
An analysis by our ex-hubber Jai Ganesh on ANDHA NAAL !
____________________________________
http://passionforcinema.com/andha-naal-thamizh-1954/
Andha Naal - Thamizh (1954)
By: V.P. Jaiganesh
Andha Naal (that day) was a different movie attempt by S.Balachander(Trivia: He played the part of a person in hiding in the Sivaji movie - Maragadham - now available in Moser Baer VCD), who followed it up with a much interesting Bommai(the doll) and “Edhirpaaradhadhu”(Unexpected). S.Balachander must have been an international movie follower and must have caught the glory behind the script of Kurosowa’s “Roshomon” much earlier. Here he weaves a similar murder mystery involving the murer of Rajan played by a Suave and stylish Sivaji Ganesan. There are obvious suspects like enemies in business and house servants. There is also a demure and coy housewife Usha played excellently by the Kannada star Pandari Bhai.
Balachander(not to be confused with K.Balachander who came much later) was known to be an uncompromising film maker and that was evident (markedly) for avoiding songs in this movie to keep the plot tension strong and audience always on the edge of their seat. Contrast this with a much modern movie on similar lines “Raam” by Ameer who had to make compromises to add songs so as to sell the movie. This is clearly indicative of how thin a line of freedom is there for an innovative director in Indian movie scenario. Coming back to Andha Naal, the lack of songs was more revolutionary those days because it was a norm to have a minimum of 25 songs in 1950s in a movie.
The success of the director in this movie has to be credited on three major counts. Firstly for taking a recent historic setting as a backdrop to generate the much needed plot tension, namely that of World War 2 and an imminent fear that lay over Madras(Chennai as it was called then) - possibility of Japanese bombing. Secondly, the conscious decision to place the story withing the four walls of the crime scene. Third and most important aspect being the controlled performance offered on screen to audiences that were fed prominently on either non stop song train or non stop dialogue train ( sivaji himself notorious for continuous flowing and thundering dialogue delivery in earler movies like Parasakthi and Manohara). There was no over emoting and the lighting and cinematography(I dont know much about this, however this film was much different from its contemporaries) was done to accentuate slight twitches in the face of the actor so that the tension of running thought in the character’s mind could be aptly conveyed to the audience.
Music too was used in a minimal way. I guess the music was by Balachander himself for this movie. In later movies he used the genius M.B.Srinivasan. (Trivia: Legendary K.J.Yesudas sang his first thamizh song for the title track of Bommai (the doll))
Coming to performances, the movie was known far and wide for Sivaji’s foray into a different style of acting, more modelled on Hollywood. The urban city slicker with negative shades was brought alive to legendary proportions by this actor who is rightly hailed as the “Varsity of Acting”. The same actor would have played the same character in a totally different manner had it been a stage play. In the movie and that too helmed by Balachander, Sivaji knew exactly how to present himself in the frame. Be it a menacing glance or total arrogant carelessness and casual attitude to his wife, he presented a new way to me frigthening without straining too much. His performance in this movie would be perfected further by him in his later movie “Pudhiya Paravai” , which incidentally was a murder mystery too.
Pandari Bhai had almost nothing to do in Sivaji’s first movie “Parasakthi”. she was more familiar to audience as a Hari katha artiste from Mysore. In this movie she had the major bulk of the acting and emoting to do as the grieving widow of Rajan (as mentioned earlier played by Sivaji). She too being a stage artiste knew what to do and how much. The result was one of the earliest restrained performances by a leading lady in south indian screen those days who had to shed bucketful of glycerines regularly.
In short this was one movie that wasn’t aimed at any particular audience and still was successful in winning over all. the success was unexpected as many thought that the director was a crazy guy to do movie without songs and the actors stupid to put their career on the line by opting for the movie. 53 years later, still everyone in Thamizh nadu remember this movie as one of the earliest murder mysteries (and one of the very few) shot and told in a way that would have made a hitchcock proud. Did I mention Roshomon in the start of my post? Yes, this movie was very much similar in the way the character of the dead man and the events of the day in which he died were gradually pieced together by an Inspector by interviewing various characters. There were many twists and turns in the plot and I don’t want to reveal the surprising climax(It was for me). Go ahead grab a VCD or a VHS tape from Raj Video Vision (I donno if there was a DVD of this one) or wait for Sun TV to telecast this movie and enjoy the fun of seeing a vintage story recreated by one of the most underrated genius of Indian movie industry, the great S.Balachander.
Jai Ganesh's reply in the same page on why KH praises Sivaji !
Kamal praises sivaji becoz Sivaji is behemoth of an actor, who can cater to the audiences soaked in theater and stage effect with loud non-stop dialogues, with stylish underplayed mannerisms, with slapstick comedy, with very subtle pathos, with dollops of understated romance, with loads of menacing villainy or for the matter stuff of art house acting. His “loud” performances were in the days where subtlety had no space. He introduced subtle acting in movies like Andha naal, pudhiya paravai, annayin aanai so on and so forth. Sivaji’s mythological movie acting is something unequalled and unparalleled in Indian movie history. For his subtle and not so subtle acting glimpse, please watch “Thiruvarutchelvar” a devotional movie of Saivism saints. That is why Kamal thought that the role of Periya Thevar must be done by none other than Sivaji in Thevar Magan. The same reason why Rajinikanth wanted Sivaji for his padayappa. If SIvaji didn’t work on art movie kinds, there were his own personal reasons. Had he done couple of offbeat roles, he would have bagged couple of golden lions atleast. Trivia: The intial cast of Bala’s Nandha was Ajith and Sivaji Ganeshan. When I saw Nandhaa, I wished how it would have been to see Sivaji for Raj Kiran (not to say that Raj Kiran did a bad job). Sivaji unfortunately couldn’t act due to health reasons and passed away subsequently.