forget about duets... NT did not sing a single song in this film! :shock: I dont think this has happened to any other hero (disregarding songless movies).Quote:
Originally Posted by rangan_08
Printable View
forget about duets... NT did not sing a single song in this film! :shock: I dont think this has happened to any other hero (disregarding songless movies).Quote:
Originally Posted by rangan_08
Nov Sir,Quote:
Originally Posted by NOV
Super star Rajini has acted in Gayathri without any song. Probably you will say that he was a villain ?
Our own Nadigar Thilakam, the acting University has acted without any song in Andha naal. But this is a songless movie
Nov Sir,
Great Kamal Sir has acted without any song in Uyarndhavargal but his role was that of a speech impaired guy.
Again you know, he proved in Silent movie that he can act even without dialogues. In Pesum Padam
Muarli sir,Quote:
Originally Posted by Murali Srinivas
You are lucky fans to enjoy these excellent moments during the opening shows itself. But we started enjoying 'first day first show' experiences hardly from Dheepam (at Chennai Crown theatre).
I also enjoyed this song in Jaya TV thEn kinnam yesterday. What a song. In her first movie with NT itself Manjula more attached with NT. I also enjoyed the last song of yesterday t.k. 'mannikka vEndukirEn... undhan aasaiayai thoondukirEn' from Iru MalargaL.
Wow... what a lyric by Vali, what a music by MSV, what a picturisation by ACT, what expressions by NT & Padmini. Super.
On monday also, one music director gave a 'special thEn kinnam' in Jaya TV. He played 'pottu vaiththa mugamO' from SES, with the comment 'SPB ellOrukkum paadittaarE, nadigar thilagathukku innum paadalaiyEnnu naanga yEngikkondu irundhapOthu indha paadal vandhathu'.
Nowadays there are more channels playing hits of old and middle aged songs. Isaiyaruvi (a sub channel of kalaignar TV), Mega TV, Win TV etc. We are enjoying more old, mid old songs from them.
Ofcourse, lots of films came without songs after TM. In those days, when songs played a major role in both the leading heroes films, the director & NT had the guts to try it out with no songs for the hero - and that too in a musical subject !!!Quote:
Originally Posted by Billgates
As u said Pesum padam had no dialogues...
If Kamal had acted without a duet in a musical sub.like Ninaithale Inikkum or Enakkul Oruvan, then it can be appreciated.
புதிய பறவையை ரீமேக் செய்யப் போவதாக கூறுகிறார்களே என்று பிரபுவிடம் கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. அப்பாவின் எந்தப் படத்தையும் திரும்ப எடுக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.
http://thatstamil.oneindia.in/movies...ect-ajith.html
this is the happiest news for me.....not remaking another classic...Quote:
Originally Posted by raaja_rasigan
R_R ,Thanks..That is indeed a good news :)
KUNGUMAM DVD is also not available. "Chinnanjiriya vannaparavai" song mattumdhan TV-yil parthirukkiren. Is it a crime story...like to know more..
Rangan SirQuote:
Originally Posted by rangan_08
Kunguman has some brilliant acting by our Nadigar Thilakam. He will be on the run always being chased by Police Cop SSR . 2 terrific songs . You watch his body language while singing Chinnan siriya vannaparavai. He will put a Ghazal singer to shame ! positioning his legs across each other like a typical Hindustani singer . Magnificent performance.
Also watch Thoongadha kan indru ondru. Very casual acting but highly expressive ! The end of the song will show a shot he will casually remove his wig while walking . Wonderful acting by the University Sir !
Good that atleast you are bringing some worthwhile topics ! We need more people like you .
Many thanks for the appreciation BG. We need people like you too.Quote:
Originally Posted by Billgates
Dear Joe,
SES and NV - Enna aachu?
Mohan,
Congrats (!).
Sivan,
To be continued-nu pottutitu, appuram no post on TM. Please continue.
Regards
Thillaana Mohanaambaal----
I enjoyed the movie very much. Canīt recall when I enjoyed a film so much lately. right from the beginning there was something in this film which I found very nice. As Mohana enters the temple in azhagar malai NT and Balaiya will look at each other for a fraction of second. Just that look will tell us the love he felt for Mohana. Let us go over the characters/actors one by one:
NT as Sikkalaar, no need to say something new. He lived in this role. Even though he just acted as a Nadaswara Vidwan his facial and body language shows how hard he must have trained to imitate the real Vidwan. The shy love he feels for mohana from the beginning. The short tempered proudness which comes from the absolute surity of his talent and his dedication for his music are lessons for actors who wants to act. The scenes with Manorama in Nagapattinam are really worth mentioning. The mixture of feelings which were shown by NT is again great. I could write more and more but I simply donīt find words
Padmini as Mohana gave a very good prfomance. She infact brought the typical Mohana of the book. Even though she was about 34 or 35 as the film came she performed her dances very good. Still I feel that the dance which was performed for such a fast thillana was not adequate. She showed her acting skills as she confronts NT as he angrily goes back from Mohanaīs home wrongly assuming a relationship with Singapuram Minor. Showed her dancing prowess during the song Maraindhirundhe Paarkum Marmam enna where she shows the navarasam during her dance.
Manorama as Karuppaayi aka Jill Jill Ramaamani aka Rosaaraani was the real heroine of the film. Her way of talking in Madurai slang is really unforgettable. In certain scenes she even made NT looks second to her. Even though her role was shorter than others she really stole the show
Nagesh as Vaithy. If I said Manorama being the secret heroine of the film Nagesh is the secret hero of this film. To play a role like this needs a high amount selfconfidence and to play as a parasite through out the film is something only Nagesh can do. Once somebody in this thread mentioned that one must be careful with Nagesh, if you give a litle space he will steal the show, exactly thatīs what happened here. The way he could adapt to situations, finding always new patrons was very enjoyable.
(contd.)
Dear Sivan,
Good! Keep going.
ஒரு பெரிய இசை விருந்து. அதிலும் கிட்டத்தட்ட எல்லாமே நடிகர் திலகத்தின் பாடல்கள். இன்றைய முன்னிரவு நேரம் முழுக்க இதில் நனைந்து கொண்டிருக்கிறேன், குறிப்பாக சிவன் உங்கள் போஸ்ட்-ஐ படிக்கும் போது மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன பாடல் ஒளிப்பரப்பாகியது.
இன்றைய தினம் ஒளிப்பரப்பான பாடல்கள்
ஜெயா மாக்ஸ்
1. வெயிலுக்கேற்ற நிழல் உண்டு - கள்வனின் காதலி
2. நாளை இந்த வேளை பார்த்து - உயர்ந்த மனிதன்
3. தண்ணிலவு தேனிரைக்க - படித்தால் மட்டும் போதுமா
விஜய்
1. கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா - ஆலய மணி
2. கண்ணான கண்ணனுக்கு அவசரமா - ஆலய மணி (NT இல்லையென்றாலும் கூட)
ஜெயா டிவி
1. பொன்மகள் வந்தாள் - சொர்க்கம்
மெகா டிவி
1. நான் தன்னந்தனி காட்டு ராஜா - எங்க மாமா
2. நான் நாட்டை திருத்த போறேன் - மன்னவன் வந்தானடி
3. நான் அனுப்புவது கடிதம் அல்ல - பேசும் தெய்வம்
4. பாட்டும் நானே - திருவிளையாடல்
இசையருவி
1. யாருக்காக - வசந்த மாளிகை
2. புஷ்பங்கள் பால் பழங்கள் - வா கண்ணா வா
3. கேளாய் மகனே - உத்தமன்
4. நீல சேலை கட்டி வந்த - திருவிளையாடல்
5. மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன - தில்லானா மோகனம்பாள்
6. பார்வை யுவராணி கண்ணோவியம் - சிவந்த மண்
7. ராணி மஹா ராணி - சரஸ்வதி சபதம்
8. ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து - சொர்க்கம்
9. ஜிஞ்சினுக்காம் சின்ன கிளி - ராஜபார்ட் ரங்கதுரை
10. மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு - கந்தன் கருணை
சுருக்கமாக சொன்னால் NT விருந்து
அன்புடன்
முரளி சார்,
'நெஞ்சிருக்கும் வரை' பற்றி முழுவதும் எழுதப்போவதில்லை என்றாலும் ,ஒரு சின்ன விவாதம் நடத்தலாம் என நினைகிறேன்.
நெஞ்சிருக்கும் வரை படத்தில் பாடல்கள் ,நடிப்பு அனைத்தும் அருமை .ஒப்பனை இன்றி நடித்திருக்கும் நடிகர் திலகம் ,முத்துராமன் ,நண்பராக வரும் இன்னொருவர் (பெயர் மறந்து விட்டது) கே.ஆர்.விஜயா அனைவரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளார்கள்.
தொடக்கத்திலிருந்து முத்துராமன் நடிகர் திலகத்தையும் ,கே.ஆர்.விஜயாவையும் சந்தேகப்பட ஆரம்பிக்கும் வரை படம் குறை சொல்ல முடியாத வகையில் மிக நிறைவாக அமைந்துள்ளது ..ஆனால் அதற்கு பின்னர் ஸ்ரீதர் எங்கோ கோட்டை விட்டது போன்ற உணர்வு.
மிக அரிய குணங்கள் கொண்டவராகவும் ,நட்பை பெரிதாக மதிப்பவராகவும் காண்பிக்கப்படும் முத்துராமனின் காதலை நடிகர் திலகம் மனமார ஏற்றுக்கொண்டதை முத்துராமன் அறிவார் ..ஆனால் யாரோ ஒருவர் சுவரில் கிறுக்கி வைத்ததை பார்த்து ,யாரோ ஒருவர் சொல்வதைக் கேட்டு ,நடிகர் திலகமும் கே.ஆர்.விஜயாவில் ஒன்றாக வீட்டிலிருந்து வருவதை பார்த்தவுடன் முத்துராமன் தீர்க்கமான முடிவுக்கு வருவது ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது .
முன்பின் விசாரிக்காமல் இருவரிடமும் ஒரு வார்த்தை கூட கேட்காமல் கடைசி வரை வன்மத்தோடும் எதிர்மறையாக இந்த அளவு மோசமாக நடந்து கொள்வதற்கு வலு சேர்க்கும் காரணங்களோ ,காட்சி அமைப்புகளோ சரியாக இல்லை என்பது என் கருத்து .
பல முறை நடிகர் திலகமும் கே.ஆர்.விஜயாவும் முன்பு போலவே துளியும் சலனமின்றி பேசும் போது கூட முட்டாள் தனமாக நடந்து கொள்வது முதலில் சொல்லப்பட்ட முத்துராமனின் பாத்திரப்படைப்போடு கொஞ்சமும் ஒட்டவில்லை.
70% படத்தை அற்புதமாக கொண்டு சென்ற ஸ்ரீதர் மீதி படத்தில் கொஞ்சம் சொதப்பி விட்டார் என்பது என் கருத்து .இது பற்றி உங்கள் கருத்து? :wink: :D
'நெஞ்சிருக்கும் வரை' திரைப்படம் பின்னால் வந்த 'வறுமையின் நிறம் சிவப்பு' படத்துக்கு பாலசந்தருக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கலாமோ என தோன்றுகிறது.
Wud like to share an info about TM as told by my f-in-law.
Before trying to kidnap Mohana & her mother, Nagalingam's men bring them to a big ground where you can find huge Iyyanar statues. This scene was shot in Pachayamman Templs @ Tirumullaivoil, Chennai
During their first Kutchery @ Madurai, when people begin to leave to see the cracker display, NT will get angry and stop playing the Nagaswaram. Now AVM Rajan will say, "Azhagana inda kalaya kodutha Aandavan konjam kobathayum serthu koduthuttan", to which NT will reply, "Aamampa, kasukke adimai ayidatheda pavi, konjam un kalaikkum mariyadi kodu". This dialogue reflects his real life dedication to the art.Quote:
Originally Posted by sivank
Came to know that TM is the first film for Padmini after giving birth to her first child. She worked in this film 6 months after her delivery !! What a commitment.Quote:
Originally Posted by sivank
Yes..Splendid performance indeed. The way she treats NT when he comes to see her, "Yenna Sikkalare, sohamayirukkegala ? Enna sappudareega, galaru ? joda (soda !) ?? Then she will call the servant, " Yelei, Rasuuu.. Rasappppa.... Typical attakkari !!Quote:
Originally Posted by sivank
Yes. You love this man - You hate this man for being Vaithy.. Nagesh really rocked as the one and only Vaithy...Quote:
Originally Posted by sivank
Though he comes late in the film, he completely steals your heart, particularly in scenes where he talks with Vadivamba. "Evlo periya nethi, adula evlo periya pottu..adu sari, koduthu vachava, irukku vechikira...." Many more scenes like this....
Madhanpur Maharani (who is that lady ? ) will say in one of the scenes, " I don't like that man..he is a Jackal " . That's a perfect word to describe his character.
Another person, who definitely not to be missed is Balaiah. What a great artiste... Look at his incredible performance while playing the Thavil. His entire body will act. Original Thavil vidhvan kettar ponga.
On the whole, TM is a thorough family entertainer with excellent performances & lovely music . Not to be missed by NT fans and a true lover of good cinema.
மதன்பூர் மாளிகையில் தங்கியிருக்கும்போது சிக்கலாருக்கும் வைத்திக்கும் நடக்கும் ஒரு சுவாரஸ்யமான உரையாடல்:Quote:
Originally Posted by rangan_08
"சண்முகசுந்தரம், எல்லாரும் அவா அவா வாத்தியங்கள எடுத்த்க்கிட்டு புறப்படுங்கோ"
"யோவ் வைத்தி, எங்கேயா கிளம்ப சொல்றே?"
"மகாராஜா உறங்கப்போறார். எல்லாரும் அவரை சுத்தி நின்னு வாசிங்கோ. அதைக்கேட்டுண்டு மகாராஜா ஆனந்தமா உறங்கனும்"
"உம்... இன்னும் எது எதுக்கெல்லாம் வாசிக்கணும்?"
"ராத்திரி அவர் உறங்கறச்சே வாசிக்கணும். காலைல அவர் கண்முழிக்கும்போது திருப்பள்ளியெழுச்சி வாசிக்கணும்"
"யோவ் திருப்பள்ளியெழுச்சியெல்லாம் கோயில்லேதான்யா வாசிப்பாங்க".
"உனக்காக மகாராஜா கோயில்லே போய் படுப்பாரா?"
(இந்த கடைசி வசனம் ஏ.பி.என் எழுதாதது என்றும், நாகேஷ் தானாக சேர்த்துக்கொண்டது என்றும் சொல்வார்கள்).
கொஞ்சம் அசந்தால் போதும், எதிரில் இருப்பவரை தூக்கி சாப்பிட்டு விடுவார் நாகேஷ்.
Another Great Actor.
நாகேஷ் :lol: :clap:Quote:
Originally Posted by saradhaa_sn
Make-up was also good in TM (sila extra nadigargalukku mugathil appi irukkum color maavai thavira).
NT looked good in that get-up. Avar vasikkumbodhu, thooki vaarappatta thalai mudiyum, meesai illadha mugamum, kaadil minnum kadukkangalum, andha vetru maarbum, adhil anindulla vaira nagaigalum, tholil porthiya pattu angavasthramum, kai viralgalil palapalakkum kal modirangalum - avarai oru vasadiyulla nagaswara vidhwan enbadai namakku unarthividum.
Another similar one with Singapura minor :Quote:
Originally Posted by saradhaa_sn
Minor : Yov vaithy, Nagapattinathila...
Vai : Enna, puyal varudha - theriyume, adhan varusha varusham varudhey, adukkenna ??
Vanakkam Rangan Sir
That dialogue of yours will be initiated by Vadivu no ? :roll:
Another Gem from vaithy as he tries to get inside auditorium to see the dance of Mohana.
Gatekeeper: Yov, nilluya enga pora ulla nee
Vaithy : ( looking up and down) yei, naan yaar theriumaa?
GK: ( Konjam thayakatoda) theriyaadhu
Vaithy: Naan Maharaaja kooda vandhavan
GK: (with atmost meekness) sorry sie , neenga ulla ponga
Vaithy : (victorius) seri, enna thaduthu niruthinadha yaar kittayum sollaadha, unakku vela poidum
இதுக்கு நடுவுல இன்னொரு வசனமும் வரும்.Quote:
Originally Posted by saradhaa_sn
காலைல எழுந்ததும் பூபாளம், ராத்திரி படுக்கும் போது நீலாம்பரி இதெல்லாம் கூட உனக்கு தெரியாதா
avanga thurathum podhu odi poittu ange irundhe thirumbi thirumbi gudhippar. NT ennaya nu kettadhum , en thundu en thundu sollra azhage thani. Simply Nagesh style
Tks BG Sir !! :)Quote:
Originally Posted by Billgates
Engey neenga idhai kekkama poiduveengalonnu ninaichen. Very good that a "Theevira NT (University of acting) rasigar like you has pointed out this. :ty:
திரு ஜோ அவர்கள் எனது அபிமான படங்களின் ஒன்றான நெஞ்சிருக்கும் வரை படத்தைப் பற்றி எழுதியுள்ளார். இதைப்பற்றி சில சம்பவங்கள். இடம் சென்னை கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில். நடிகர் திலகம், முத்துராமன் மற்றும் வீ. கோபாலகிருஷ்ணன். பாடல் காட்சி. கூட்டமான கூட்டம். அத்தனையும் மெய் மறந்து லயித்துள்ளனர். ஆனால் ஒருவர் மட்டும் தடுமாறுகிறார். அவர் கோபாலகிருஷ்ணன். மற்ற அனைத்துக் காட்சிகளிலும் தன் திறமையை வெளிக்காட்டியவர் அப்பாடல் காட்சியில் மட்டும் நடிகர் திலகத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. சில முறை அவரால் படப்பிடிப்பு டேக் வாங்கியது என்றால் சில முறை ரசிகர்கள் மற்றும் பொது மக்களால் சில டேக் வாங்கியது. இருந்தாலும் நடிகர் திலகத்தின் வேண்டுகோளை ஏற்று அனைவரும் அமைதி காத்தனர். அந்த படப்பிடிப்பு இரண்டு மூன்று நாட்களுக்கு நீடித்தது. அந்த ஸ்டைலான நடையை நேரில் பார்க்க ரசிகர்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டம் செஇதிருக்க வேண்டும். அப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலி பள்ளி மாணவர்களில் நானும் ஒருவன். இது எந்த ஜென்மத்திலும் மறக்க முடியாது. மற்றபடி அந்த படத்தில் சிறீதர் அவர்கள் சிறிது தடுமாற்றம் அடைந்தார் என்று தோன்றுவது இயற்கையே. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.Quote:
Originally Posted by joe
ராகவேந்திரன்.
ஜோ,
நெஞ்சிருக்கும் வரை படத்தை பொறுத்தவரை நீங்கள் சொல்வது உண்மையே. அதாவது ஒரு உயர்ந்த தளத்தில். தமிழில் அபூர்வமாகவே நாம் பார்த்திருக்கக்கூடிய ஒரு யதார்த்தமான தளத்தில் பயணிக்கக்கூடிய இந்த படம் இடைவேளைக்கு பிறகு மாறுபட்டு சஞ்சரிக்க தொடங்கும். இதை ஸ்ரீதர் அவர்களே வருத்தப்பட்டு எழுதியிருந்தார். " அதுவரை என் சொந்த கண்ணோட்டத்தின்படி எடுத்து வந்த நான் இடைவேளைக்கு பிறகு வரும் காட்சியமைப்புகளை விநியோகஸ்தர்கள் விருப்பப்படி மாற்றாமல் இருந்திருந்தால் ----" என்று வாக்கியத்தை முழுமையாக்காமல் விட்டிருந்தார். ஆனால் முத்துராமனின் பாத்திர படைப்பை பற்றிய உங்கள் பார்வையுடன் முற்றிலுமாக ஒத்து போக முடியவில்லை.
நீங்கள் சொல்ல வருவது என்னவென்றால் தன்னுடன் பழகிய நண்பனையும் நேசித்த காதலியையும் எப்படி புரிந்து கொள்ளமால் இப்படி சந்தேகப்படலாம். அது அந்த பாத்திர படைப்பை ஊனப்படுத்தி விடுகிறது என்பது உங்கள் வாதம். கொஞ்சம் யோசித்தால் அது வெளியே இருந்து பார்க்கும் ஒரு மூன்றாவது மனிதன் கருத்தாக உங்களுக்கு தோன்றவில்லையா? என்னதான் நட்பின் புனிதமும் காதலின் ஆழமும் தெரிந்தவனாக இருந்தாலும் தனக்கு என்று வரும் போது அவன் மனதில் ஒரு சந்தேகம் தோன்றுவது மனித இயல்பு, பலவீனம். மனோதத்துவ முறையில் பார்த்தாலும் முதலில் பழகும் போது தன் காதல் வெற்றி பெறுமா என்ற மனோநிலையிலே இருப்பவன் பெங்களுர் சென்று வேலை கிடைத்தவுடன் தான் கல்யாணம் செய்து கொள்ளப்போகும் பெண் என்று தன் மனதில் அந்த பெண் மேல் ஒரு உரிமையை ஏற்படுத்திகொள்கிறான். தனக்கு சொந்தமான பொருளை வேறொருவன் உரிமை கொண்டாடி விட்டான் என்று கேள்விப்பட்ட போது ஒரு சராசரி ஆணாகத்தான் அவனால் சிந்திக்க முடிகிறது.
மேலும் அவன் அந்த வீட்டை விட்டு கிளம்பும்போது காதலியின் தந்தை (வி.எஸ்.ராகவன்) மற்றும் நண்பன் பீட்டர் (வி.கோபாலகிருஷ்ணன்) உயிரோடு இருக்கின்றனர். ஆனால் திரும்பி வரும் போது காதலியின் தந்தையும் இல்லை, நண்பனும் இல்லை. நடிகர் திலகமும் விஜயாவும் தனியாக அந்த வீட்டில் வசிக்கின்றனர் என்பதை கேள்விப்படும்போதும் நேரில் பார்க்கும் போதும் அவனால் நிதானமாக சிந்திக்க முடியவில்லை. சந்தேகம் அவனை ஆட்கொண்டு விடுகிறது.
ஜோ, நாம் வேறொன்றையும் நாம் நினைத்து பார்க்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கை முறைகளே மாறி போன சூழ்நிலையில்,ஆண் பெண் நட்பு பற்றிய கண்ணோட்டங்களும் மாறுதல்கள் அடைந்திருக்கின்றன. படம் நடக்கும் கால கட்டம் 1966 -67. இன்றைய நமது சமூக பார்வையோடு அன்றைய மனிதர்களை எடை போடுவது என்பதும் முழுக்க சரியாக இருக்காது என்பது என் எண்ணம்.
ஒன்றை வேண்டுமானால் சொல்லலாம். முத்துராமன் விஜயாவிடமோ நண்பனிடமோ பேசி தெளிவுபடுத்தி கொண்டிருக்கலாம் என்பதே அது. ஆனால் இப்படிப்பட்ட விஷயத்தை வெளிப்படையாக பேச எல்லோராலும் முடியாது. மேலும் பேசி விட்டால் கதை முடிந்து விடும்.
அன்புடன்
PS: ஜோ படத்தை பற்றி உங்கள் பார்வையை மேலும் தொடருங்கள்
Groucho, come out with a post atleast for this, one of your top drawer favourites.
டியர் முரளி.
ஜோ அவர்கள் முத்துராமனின் பாத்திரப்படைப்பின் குறைபாடுபற்றிக் குறிப்பிட்டபோது, அவருடைய கோணத்தில் அது சரியென்று பட்டது. உங்கள் விளக்கம் படித்தபின் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டது. எனினும், தான் அடைய விரும்பிய ஒருத்தியோடு திருட்டுத்தனமாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பதாக தன்னால் சந்தேகிக்கப்படும் தன் நண்பன், மனமுவந்து அவளைத் தனக்கு வலிய வந்து திருமணம் செய்து வைக்க நினைப்பானா, அத்துடன் அதற்காக வாதாடுவானா என்று முத்துராமன் ஏற்ற பாத்திரம் நினைத்திருக்க வேண்டும். அதுவும் அவளுடைய அண்ணன் ஸ்தானத்தில் இருந்து அவளை தனக்கு திருமணம் செய்து வைத்த பின்னும் நண்பனையும், மனைவியையும் சந்தேகக் க்ண்ணோடு பார்ப்பது கொடுமை. (ஆனால் அப்படிப்பட்ட அவலங்கள் இன்னும் கூட சமுதாயத்தில் நடந்துகொண்டிருக்கின்றன என்பது நிதர்சன உண்மை என்பதை தினந்தோறும் பத்திரிகைச் செய்திகள் சொல்கின்றன). இந்த இடத்தில் இயக்குனர் சற்று சறுக்கி விட்டார் என்றாலும் கூட, அதுதானே மீதிப்படத்தை இழுத்துச்செல்ல உதவுகிறது?.
'நெஞ்சிருக்கும்வரை' படம் பற்றி ஒருமுறை இயக்குனர் SREEDHAR சொன்னபோது "நான் எடுக்க நினைத்த கதை வேறு, ஆனால் எடுத்து முடித்த கதை வேறு" என்று சொல்லியிருந்தார். (1981ம் ஆண்டில் வெளியான 'பொம்மை' மாத இதழில் வந்திருந்த அவரது பேட்டி)
நான் நினைத்ததை அப்படியே சொல்லிவீட்டீர்கள்.Quote:
Originally Posted by saradhaa_sn
முரளி சார் ,
உங்கள் கருத்துக்கு நன்றி ..சில தெளிவு ஏற்பட்டது .ஆனால் முத்துராமன் அப்படி மாறவே கூடாது என்பதல்ல என் எதிர்பார்ப்பு .ஆனால் முத்துராமன் ஒரேடியாக தலைகீழாக மாறிவிடுவதற்கு நியாயமான பின்புலமும் காட்சியமைப்புகளும் (60-களின் சமூக நிலையை கணக்கிலெடுத்துக்கொண்டாலும்) வலுவாக அமைக்கப்படவில்லை என்றே நினைக்கிறேன்.
What a beautiful song...
செல்லக் கிளிகளாம் பள்ளியிலே - எங்க மாமா
http://youtube.com/watch?v=sC2pTtBRv6o&feature=related
venmadhi venmadhiyE nillu :lol2:Quote:
Originally Posted by m_23_bayarea
wow... very nice discussions going on about 'thillaanaa mOhanambaal' and about 'nenjirukkum varai'.
all are worthful points by everyone..
we can say the first half of n.v. is in poetic form, whether the second half as usual melodrama. I strongly hope that, sridhar has compromised the second half for somebody (may be for distributors?)
nice to see the admiration for nagesh in t.m.
bayarea..
thanks for the link of the song 'chella kiLikaLaam', beautiful melody by MSV in the beautiful movie.
mr-karthikQuote:
இன்னொரு சொதப்பல் கிளைமாக்ஸ் 'பாபு'. கல்யாண விருந்தில் யாரோ ஒருவர் போல பிச்சைக்காரகளோடு போய் அமர்வதும் (அங்கே அத்தனை பேரும் அவர் மேல் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும்போது தாழ்வு மனப்பான்மை ஏன்?) கடைசியில் 'என்னைச்சுற்றி இத்தனை அன்பு உள்ளங்களா?' என்று டயலாக் பேசுவதும்... ஊகும்.
Babu was directed by ACT . No Sridhar :oops: You are so knowledgeable . How you are making mistakes !
The annual cultural festival at SRM college is going on and on the concluding day tomorrow (March 16th), the best drama and artist would be felicitated. About 45 colleges had participated and the best artist receives a trophy sponsored in the name of NT and is presented by the Sivaji - Prabhu trust. This is the first time the trust is involving itself in the culturals and this award would hereafter be a regular affair every year. Asha Bhonsale, NT's "udanpirava" sister is flying down from Mumbai to give away the prize.
Regards
Irene,Quote:
Originally Posted by Irene Hastings
When you are finding mistakes, you avoid mistake.
It was not posted by me.
Dear Sarada mam,
நல்ல அமசங்கள் இருந்தும்,சுமாராக ஓட்ய பொண்னூஞ்சல், நிரைகுடம்,தங்கசுரங்கம், etc, படங்களை பற்றி எழுதிணீர்கள். அந்த வரிசையில் அடுத்து என் ண ? :?:
காத்திருக்கிறோம்.
டியர் மோகன்,Quote:
Originally Posted by rangan_08
பொன்னூஞ்சல், நிறைகுடம் படங்கள் பற்றி நான் எழுதவில்லை. அது நம்முடைய மற்ற நண்பர்கள் எழுதியவை.
நான் எழுதியவை என்னைப்போல் ஒருவன், ராஜா, எங்க மாமா, மூன்று தெய்வங்கள். சவாலே சமாளி, அன்பைத்தேடி, இளைய தலைமுறை, எங்கிருந்தோ வந்தாள், நீதி, தங்கச்சுரங்கம், சுமதி என் சுந்தரி போன்ற படங்கள்தான்.
அடுத்து 'வைர நெஞ்சம்' படம் பற்றி எழுதி வருகிறேன். படம் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், அதிக முறை பார்க்காததாலும், கதையும் சம்பவங்களும் கோர்வையாக நினைவில் கொண்டு வர முடியவில்லை. விரைவில் முடித்து இங்கே தருகிறேன்.
I join you in this arai-kooval: " Groucho where art thou !"Quote:
Originally Posted by Murali Srinivas
Sivan, nice posts about the peerless Thillana Mohanambal.
:rotfl:Quote:
Originally Posted by saradha_sn
நாகலிங்கம்: ஷண்முகசுந்தரம் வாசிக்கிர தில்லானாவுக்கு மோஹனா ஆடக்கூடாது
வைத்தி: நீர் ஆடப்போரீரா ?
நாகலிங்கம்: எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை
வைத்தி: நாட்டியம் கத்துக்கத்தான் போரீரா ? :lol:
P1: அந்த சேர்...கிருஷ்ணமூர்த்திக்கு ரிசர்வ் பண்ணிருக்குQuote:
Vaithy : (victorius) seri, enna thaduthu niruthinadha yaar kittayum sollaadha, unakku vela poidum
வைத்தி: ஷட் அப்....ஐ ஆம் கிருஷ்ணமூர்த்தி
(in a few secs....a person appears)
P2: ....
வைத்தி: நீங்க..
P2: கிருஷ்ணமூர்த்தி
வைத்தி: (gets up and sits on the floor) வாங்கோ.....ஏன் கொழந்த ஆடறா....நான் எங்க உக்காந்து பார்த்தா என்ன ? :rotfl:
And the killer:
ஏண்டா அம்பி... முத்துராக்கு :rotfl2:
TM is Nagesh at his best.
Actually TM is everyone at their respective bests.
எஸ்.ஆர்.எம். பல்கலையில் சிவாஜி பெயரில் பிலிம் இன்ஸ்டிடியூட்
சென்னை: சென்னை அருகே உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரில் ரூ. 10 கோடி செலவில் புதிய திரைப்பட பயிற்சிக் கழகம் உருவாக்கப்படவுள்ளது.
சென்னை காட்டாங்கொளத்தூரில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு மிலன் 08 என்ற 3 நாள் கலை நிகழ்ச்சி நடந்தது.
இதன் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து பேசுகையில், ரூ. 10 கோடி செலவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரில் திரைப்படக் கழகம் உருவாக்கப்படும். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பத்தாருடன் இணைந்து இந்த திரைப்பட கழகம் உருவாக்கப்படும்.
வருகிற கல்வியாண்டு முதல் இந்த திரைப்படக் கழகம் செயல்படும். ஒரு கல்வி நிறுவனத்தில், திரைப்படக் கழகம் தொடங்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என்றார் பச்சமுத்து.
இந்த திரைப்படக் கழகத்தின் ஆலோசனைக் குழுவில் திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் இடம் பெறவுள்ளனராம். வெளிநாடுகளைச் சேர்ந்த திரைத்துறை பிரபலங்களும் இங்கு வந்து மாணவர்களுக்குப் பாடம் நடத்தவுள்ளனர்.
திரைப்படத் தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து வசதிகளுடன் கூடியதாக இந்த திரைப்படக் கழகம் செயல்படும்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவாஜி கணேசனின் மூத்த மகனும், சிவாஜி புரடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான ராம்குமார் பேசுகையில், நானும், எனது தம்பி நடிகர் பிரபுவும் இந்த திரைப்படக் கழகத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம்.
சர்வதேச தரத்திலான திரைப்படத் தொழில்நுட்ப வசதியுடன் கூடியதாக இந்த கழகம் செயல்படும் என்றார்.
http://thatstamil.oneindia.in/news/2...institute.html
Good news Joe. சந்தோஷம்.Quote:
Originally Posted by joe