-
நடிப்புலகச் சக்கரவர்த்தி பற்றி பல்துறை விற்பன்னர் 'சோ'
வரலாற்று ஆவணம் : துக்ளக் : 12.11.1997
http://i1094.photobucket.com/albums/...EDC4639a-1.jpg
தனித்தனிப் பக்கங்களாக...
http://i1094.photobucket.com/albums/...EDC4640a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4641a-1.jpg
[தனது 'துக்ளக்' வார இதழில் திரு.சோ அவர்கள் எழுதிய இந்த 'அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்' கட்டுரைத் தொடர் இதே பெயரில் சென்னையில் உள்ள 'அல்லயன்ஸ் பப்ளிகேஷன்ஸ்' வெளியீட்டில் புத்தகமாகவும் வெளிவந்துள்ளது].
அன்புடன்,
பம்மலார்.
-
வாழ்வியல் திலகத்தின் "வசந்த மாளிகை"
Countdown : 7
வரலாற்று ஆவணம் : பொம்மை : 1972
http://i1094.photobucket.com/albums/...EDC4642a-1.jpg
பக்திப்பெருக்கில்,
பம்மலார்.
-
-
வசந்த மாளிகை அணிவகுப்பு ஆரம்பமாகி விட்டது... பம்மலாரின் கருணையினால்....
கோடானு கோடி நன்றிகள் சார்... துக்ளக் பக்கங்களுக்காக.....
செப்டம்பர் இறுதியில் வெளியான வசந்த மாளிகை திரைக்காவியம், சென்னையில் 1973 பொங்கல் சமயத்தில் சென்னையில் கிரிக்கெட் டெஸ்ட் பந்தயம் நடந்து கொண்டிருக்கும் போதும் தன்னுடைய வெற்றி நடையினைத் தொய்வின்றித் தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் சென்னையில் 100வது நாளை அப்போது தான் கடந்திருந்த சமயம். டெஸ்ட் மாட்ச் நடக்கும் ஸ்டேடியமாகட்டும், பெட்ரோல் பங்குகளாகட்டும் எங்கும் வசந்த மாளிகை விளம்பரம் கொடி கட்டிப் பறந்தது. பல விதமான டிசைன்களில் துண்டுப் பிரசுரங்களில் வசந்த மாளிகை விளம்பரம் வெளியிடப் பட்டது. அந்த விளம்பரங்களில் ஒரு சிலவற்றை ஓடிச் சென்று வாங்கி இன்று வரை பத்திரப் படுத்தி வைத்திருக்கிறேன். அவற்றில் ஒன்று...
http://i872.photobucket.com/albums/a...pamphlet01.jpg
மற்றவை தொடரும்...
-
இந்த வசந்த மாளிகை திரைக்காவியத்தையும் பம்மலாரையும் பிரிக்க முடியாது. வசந்த மாளிகை வெளியான வாரத்திற்கு முந்தைய வாரம்தான் பம்மல் சுவாமிநாதன் என்ற நடிகர் திலகத்தின் உயரிய சீடர் இப்புவியில் அவதரி்த்தார். 21.09.1972 ....எனவே இவரை வசந்த பம்மலார் என்றும் அழைக்கலாம்...
(உங்கள் பிறந்த தேதியை வெளியி்ட்டு விட்டேன் என்று நீங்கள் உங்கள் பற்களை நறநற வெனக் கடிப்பது எங்கள் காதில் விழுகிறது. இன்னும் கொஞ்சம் கடியுங்கள்.) இருந்தாலும் அந்த வசந்த மாளிகை போலவே நீங்கள் என்றும் இளமையாக பசுமையாக திகழ்வீர்கள் என்பதற்காகவே இந்த பதிவு.
அன்புடன்
-
-
எங்கள் வசந்த பம்மலாரே! countdown கலக்கல் களேபரங்கள் தொடங்கியாச்சா?... ஜமாய்க்க வாழ்த்துக்கள். ஜமாய்க்க ஆரம்பித்திருப்பதற்கும் வாழ்த்துக்கள்.
உங்கள்
வசந்த மாளிகையில் நுழையக் காத்திருக்கும்,
அன்பு வாசுதேவன்.
-
திரு.பம்மலார் அவர்களே,
இதைத் துக்ளக்கில் வந்தபோதே படித்து ரசித்தவன் நான், அதே புத்தகமும் என்னிடம் உள்ளது.அடிக்கடி படித்து ரசிப்பேன். 'சோ' அவர்கள், நடிகர் திலகத்தை எத்தனையோ ஆங்கில திரை உலக ஜாம்பவான்களை விட உயர்வாக எழுதி இருப்பார்; அஹ்தே உண்மையுங்கூட.அதனாலே, அவர் ஒரு உலகில் உள்ள எல்லா நடிகர்களிலும் ஒரு திலகம்தான்.
'யாமறிந்த நடிகரிலே, நடிகர் திலகத்தைப் போல் இனி ஒரு நடிகரைக் கண்டதில்லை;"
என்னுடைய பத்து வயது முதல் நடிக திலகத்தின் படங்களைக் கண்டு வருபவன், இன்று வரை அவரது தாக்கத்திலிருந்து விடுபடமுடியவில்லை.
அங்கள் ஊரில் எனது ஒரு நண்பர், அவருக்கு அப்போது ஒரு 25 வயது இருக்கும், அதிக ஆங்கில மோகம் உள்ளவர், ஹிந்தி, ஆங்கில சினிமாவைத்தான் அதிகம் விரும்புவார்.ஆங்கில அறிவு ஜீவி. எனக்கு வயது அப்போது ஒரு 13 இருக்கும்;அதிகமாக வெளி உலகம் தெரியாத வயது;என்னை ஹிந்தி, இங்கிலீஷ் படங்களுக்கு கூடி செல்வார்; 'ராஜா' படம் வந்த சமயம்;எனக்கு சிவாஜி படம் பார்க்கத்தான் பிரியம்;நம்மிடம் காசில்லாத வயது.எனது நண்பர் என்னைக் கூட்டி சென்றார்.நமக்கோ 'ராஜாவை'ப் பார்த்து நடிகர் திலகத்தின் புதிய ஸ்டைலைப் பார்த்து பிரமிப்பு;என் நண்பரின் விமரிசனமோ, 'தேவ் ஆனந்த்தைப் போல் இல்லை; தேவ் ஆனந்தின் ஸ்டைல்வேறு, என்றார்.எனக்கு அப்போது அது புரியாத வயது; அவரிடம் வாக்குவாதம் செய்யும் அளவுக்கு;
என் பாம்பே வாசம் 1979 இல் தொடங்கியது;அப்போதுதான் தேவ் ஆனந்த் முதல் சஞ்சீவ் குமார் வரை எல்லா ஹிந்தி நடிகர்களின் படங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
'தேவ் ஆனந்த்' க்கு என்று ஒரே ஒரு ஸ்டைல்தான் உண்டு; அதைத்தவிர அவருக்கு வேறு ஒன்றும் தெரியாது;
திலீப் குமாரிடமும் ஒரே ஒரு வகையான நடுப்புத்திறன்தான் உண்டு;
புகழ் பெற்ற 'ராஜ்குமார்' ஒரு திறமையானவர் வசன உச்சரிப்பில் மட்டுமே;அதுவும் ஒரே ஸ்டைல்தான்.
இப்படி எண்ணற்ற நடிகர்களைக் கண்டும் இது வரை இந்த மாமேதையைபோல் ஒருவரை இன்று வரைக் காணவில்லை!!!!
அன்புடன்,
anm
-
ஆனந்த் அவர்களே உங்களுடைய அனுபவம் மிகச் சரியானதே! இதே மாதிரியான அனுபவங்களை நான் உட்பட பல ரசிகர்களும் அனுபவித்திருக்கிறோம்.
-
நடிகர்திலகத்தைப் பற்றி சோ அவர்களின் கட்டுரை அருமை. திரையுலகில் பலரது ஏற்றத்திற்கு சிவாஜி உதவியிருந்தாலும் சோ போன்ற மிகச் சிலரே இந்த உண்மையை வெளியுலகிற்கு சொல்லும் நன்றி உணர்வுமிக்கவர்களாக இருக்கிறார்கள். பம்மலார் அவர்களே, பதிவிற்கு நன்றி.
-
நேற்று விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் பட்டத்தை வென்ற சாய் சரண் குறித்து எனக்கு ஒரு அவதானிப்பு உண்டு . பழைய பாடல்கள் பாட வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அநேகமாக நடிகர் திலகம் தோன்றிய பாடல்களையே பாடி வந்தார் ..நேற்று இறுதிப்போட்டியில் கூட ‘பாட்டும் நானே’ பாடினார் ..அனேகமாக அவரின் தாயார் நடிகர் திலகம் ரசிகராக இருக்க வேண்டும் ..அவருக்கு வாழ்த்துகள்!
-
ராகவேந்திரன் அவர்களே! தங்களின் வசந்த மாளிகை போன்ற அனுபவங்கள்தான்தான் இன்று நடிகர்திலகத்திற்கான இணையதளத்தை சிறப்பாக நடத்துவதற்கும், இந்தத் திரியின் வசந்தமான பதிவுகளுக்கும் உதுவுகிறது என்றால் அது மிகையாகாது. தங்களின் மேலும் பல சிறப்பு அனுபவங்களை எதிர்பார்க்கிறோம். நன்றி.
-
-
-
திரு.பம்மலார், திரு.ராகவேந்திரன், திரு.வாசுதேவன் ஆகியோரின் வசந்த மாளிகை டிரைலரே - கலக்கலாக இருக்கிறது - என்னென்ன பொக்கிஷத் தகவல்கள் வசந்த மாளிகை இதழ் ஆசிரியரிடமிருந்து வரப்போகிறது என்ற எதிபார்ப்புடன்
-
பிரேம் நகர் (தெலுங்கு) படத்தில் சிறு வயது நாகேஸ்வராக ஒரு சிறு பையன் நடித்தார். அந்த சிறுவனே , தமிழில், வசந்த மளிகை
படத்திலும் சிறு வயது நடிகர் திலகமாக நடித்தார். அந்த சிறுவன் தான், தெலுங்கு திரை உலகில், நான்கு முன்ணணி நடிகர்களில் ஒருவர். அவர் தான், இப்படங்களை தயாரித்த Dr .D .ராம நாய்டுவின் இரண்டாம் புதல்வர் - " விக்டரி" வெங்கடேஷ்
-
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்
மிருதங்க சக்கரவர்த்தி
[24.9.1983 - 24.9.2011] : 29வது ஜெயந்தி
ஆவர்த்தனங்களின் ஆவணங்கள்
கலைச் சக்கரவர்த்தி எழுதிய கட்டுரை : பொம்மை : ஆகஸ்ட் 1983
http://i1094.photobucket.com/albums/...EDC4643a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4645a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4646a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4647a-1.jpg
வாசிப்பார்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்
மிருதங்க சக்கரவர்த்தி
[24.9.1983 - 24.9.2011] : 29வது ஜெயந்தி
ஆவர்த்தனங்களின் ஆவணங்கள்
அரிய துணுக்கு : ஆனந்த விகடன் : 1983
http://i1094.photobucket.com/albums/...EDC4656a-1.jpg
வாசிப்பார்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்
மிருதங்க சக்கரவர்த்தி
[24.9.1983 - 24.9.2011] : 29வது ஜெயந்தி
ஆவர்த்தனங்களின் ஆவணங்கள்
முதல் வெளியீட்டு விளம்பரம் : சினிமா எக்ஸ்பிரஸ் : 1983
http://i1094.photobucket.com/albums/...EDC4657a-1.jpg
வாசிப்பார்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
Sivaji sir - A true legend from Indian film industry. Even now I feel sad for min to think that he is no more with us.
You are all doing an excellent job in passing on the info about the legend to next generation.
-
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்
மிருதங்க சக்கரவர்த்தி
[24.9.1983 - 24.9.2011] : 29வது ஜெயந்தி
ஆவர்த்தனங்களின் ஆவணங்கள் : மிக அரிய நிழற்படம் : Shooting Spot Still
நடிப்புச் சக்கரவர்த்தியுடன் மிருதங்க சக்கரவர்த்தி
[நடிகர் திலகத்துடன் திரு. உமையாள்புரம் சிவராமன்]
http://i1094.photobucket.com/albums/...mSivaraman.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
-
அன்பு பம்மலார் அவர்களே!
நடிப்புலகச் சக்கரவர்த்தி பற்றி பல்துறை விற்பன்னர் 'சோ' அவர்கள் எழுதியிருந்த 'நடிகர் திலகத்தின் நட்பு' கட்டுரை வெகு ஜோர். 'சோ' அவர்களுக்கும் நடிகர்திலம் அவர்களுக்கும் இருந்த அன்னியோன்யமான நட்பை இக்கட்டுரையின் மூலம் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. சோ' அவர்களுக்காக தன் ரசிகர்களை 'வாழ்க' கோஷம் போட வைத்த நடிப்புக் கடவுளின் பெருந்தன்மையை என்னவென்று புகழ்ந்துரைப்பது! அற்புதமான கட்டுரையை வழங்கியதற்கு பாராட்டுக்கள்.
வசந்த மாளிகை countdown 7 ஸ்டில் கலக்கல். 'வருகிறார்' மிருதங்கச் சக்கரவர்த்தி ஸ்டில் சூப்பர்.
மிருதங்க சக்கரவர்த்தி பற்றி பொம்மை இதழில் கலைக்குரிசில் எழுதிய 'சக்கரவர்த்தியின் சவால்' கட்டுரை அருமையிலும் அருமை. "உமையாள்புரம் சிவராமன் வாசிப்புக்கு ஏற்ப என் கைகள் மிருதங்கத்தில் வாசிக்கவில்லை என்று யாராவது சொல்லட்டும்.நான் தோற்றேன் என்றால் நான் என் கைகளை வெட்டிக் கொள்ளத் தயார்" என்று நம்மவர் கூறியிருப்பதை படித்தவுடன் என் கண்கள் குளமாகி விட்டன. என்ன ஒரு அசாத்தியமான தன்னம்பிக்கை! அதனால் தான் அவர் மகான்
தலைவர் கட்டுரையை வெளியிட்டு தூள் கிளப்பி விட்டீர்கள்.
சினிமா எக்ஸ்பிரஸ் முதல் வெளியீட்டு விளம்பரம்,ஆனந்த விகடன் M.S.V பற்றிய அரிய துணுக்கு அனைத்தும் அற்புதம்.நன்றி! பாராட்டுக்கள்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
டியர் ராகவேந்திரன் சார்,
துண்டுப் பிரசுர வசந்த மாளிகை விளம்பரம் மிக மிக அரிதான ஒன்று. அதைப் பத்திரப் படுத்தி தக்க சமயத்தில் வெளியிட்ட தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சார். டெஸ்ட் மாட்ச் சமயங்களில் கூட பிய்த்து உதறிய மகா மெகா காவியமாயிற்றே நம் வசந்த மாளிகை.
என்றும்,
தங்களின் வாசுதேவன்.
-
டியர்
ஆனந்த்
அவர்களே! தேவ் ஆனந்த் ஸ்டைல் மன்னர்தான். ஆனால் அவருக்கெல்லாம் சக்கரவர்த்தி நம் அருமை ஸ்டைல் சக்கரவர்த்தி. ராஜா ஒரு படம் போதும். பங்களிப்புக்கு பாராட்டுக்கள்.
அன்புடன்
வாசுதேவன்.
-
நாளை 25.9.2011 ஞாயிறு மாலை திண்டுக்கல் நகரில் சிறந்த முறையில் நடைபெற உள்ள தேசியத் திருவிழாவை முன்னிட்டு அந்நகரில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளின் வடிவங்கள்
http://i1094.photobucket.com/albums/...ivaji5x3-1.jpg
http://i1094.photobucket.com/albums/.../Sivaji5x3.jpg
இந்த அரிய பொக்கிஷங்களை மின்னஞ்சலில் அனுப்பி வைத்த அன்புள்ளம் திரு.வைரவேல் அவர்களுக்கு பொன்னான நன்றிகள் !
பக்தியுடன்,
பம்மலார்.
-
'வசந்த மாளிகை' யில் நகைச்சுவைக் கொடி நாட்டிய நாகேஷ் மற்றும் ரமாபிரபா http://icdn.raaga.com/Catalog/CD/T/T0000221.jpg
.
http://www.tamilpix.com/uploads/26fce1b7aa.jpg
'வசந்த மாளிகை' யில் ஸ்ரீகாந்த் மற்றும் குமாரி பத்மினி.
http://www.tamilpix.com/uploads/d76f49b2b5.jpg
(வசந்த மாளிகையில் பங்களித்தோர் பட்டியல் தொடரும்)
அன்புடன்,
வாசுதேவன்.
.
-
டியர் வாசுதேவன் அவர்களே,
அதைத்தான் நானும் சொல்ல வந்தேன், நம்முடைய நடிகர்திலகம் நூறாயிரம் ஸ்டைல் செய்து காட்டியவர்; அவர்கள் எல்லோரும் ஒரே ஸ்டைலில் கடைசி வரை வாழ்ந்தவர்கள்!!!
அன்புடன்,
anm
-
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களது அன்பான பாராட்டுக்களுக்கும், பாசம் நிறைந்த பதிவுகளுக்கும் எனது பணிவான பவ்யமான நன்றிகள் !
"வசந்த மாளிகை" குறும்பிரசுரம் பெரும் பொக்கிஷம் ! கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக மிக பத்திரமாகப் பாதுகாத்து தற்பொழுது அள்ளி வழங்கியமைக்கு வளமான நன்றிகள் !
அன்புடன்,
'வசந்த' பம்மலார்.
-
டியர் வாசுதேவன் சார்,
சரமாரியான பாராட்டுதல்களுக்கு சிரம் தாழ்த்திய நன்றிகள் !
"வசந்த மாளிகை" வண்ணப்படங்கள் அற்புதம் ! நிழற்படங்களிலேயே முழுப்படத்தையும் காண்பிக்கும் தங்கள் திறனுக்கு ஒரு Special Salute !
அன்புடன்,
'வசந்த' பம்மலார்.
-
டியர் Mr.anm,
தங்களின் நினைவலைகள் பிரமிக்க வைக்கின்றன ! தாங்கள் பதிவிட்ட கருத்துக்கள் 100/100 உண்மை. நான் இதே கருத்துக்களை எனது உறவினர்களிடமும், நண்பர்களிடமும ஆணித்தரமாக அடித்துக் கூறுவதுண்டு.
அதாவது, நமது நடிகர் திலகம், THE GREATEST ACTOR OF THE UNIVERSE என்று.
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் சந்திரசேகரன் சார்,
மிக்க நன்றி ! இயன்ற அளவு எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறேன் !
Dear action_hero,
Thanks for your compliments !
அன்புடன்,
பம்மலார்.
-
சிவாஜி கணேச பெருமானார் பற்றி திருமுருக. கிருபானந்தவாரியார்
வரலாற்று ஆவணம் : சிவாஜி ரசிகன் : 1.10.1972
http://i1094.photobucket.com/albums/...GEDC4658-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
-
-
டியர் பம்மலார்,
வசந்த மாளிகை ஆவண அணிவகுப்பு அட்டகாசம்.. பொம்மை கவரேஜ் இன்னும் முடியவில்லை. இன்னும் மற்ற பத்திரிகைகள் இருக்கலாமே...ஆவலை அதிகரிக்கிறீர்கள்.
நன்றியும் பாராட்டும்
அன்புடன்
-
டியர் வாசுதேவன்,
வசந்த மாளிகையில் பங்கேற்ற மற்ற கலைஞர்களைப் பற்றியும் தாங்கள் தகவல்களையும் ஆவணங்களையும் நிழற்படங்களையும் அளித்து வருவது சிறப்பு. நிச்சயம் பாராட்ட வேண்டியவை. வாழ்த்துக்கள்.
தனிப்பட்ட முறையில் வசந்த மாளிகை திரைக்காவியத்திற்கு திருஷ்டி போல் விளங்குவது நாகேஷ்-வி.கே.ராமசாமி-ரமாப்பிரபா நகைச்சுவை என்ற பெயரில் விரசத்தையும் ஆபாசத்தையும் கலந்து விட்டது தான். அதுவும் நாகேஷ் என்ற உலக மகா கலைஞனுக்கு இந்தப் படம் சற்று மாற்று கம்மி தான். அவருடைய பாத்திரத்தை சற்றே மேம்படுத்தி நகைச்சுவைப் பகுதிகளை மெருகேற்றி யிருந்தால் படம் முழுமையான காவியமாகியிருக்கும்.
இந்தப் படத்தைக் காவியமாக்கிய பெருமை நடிகர் திலகம் - வாணிஸ்ரீ இருவரையே சாரும். இந்தப் படத்திற்குப் பின் தேவிகாவின் இடத்திற்கு வாணிஸ்ரீ போட்டி போட்டது உண்மை.
அதே போல் இத்திரைப்படத்திற்காக டி.எம்.எஸ்.-சுசீலா டூயட் பாடல்கள் மேலும் இரண்டு பதிவு செய்யப் பட்டன. அதில் ஒரு பாடல் பட்டிக்காட்டுப் பொன்னையா படத்திற்குப் பயன்படுத்தப் பட்டதாகவும் செய்தி உண்டு. மற்றொரு பாடல் அனைவரும் அறிந்தததே. அடியம்மா ராசாத்தி சங்கதி என்ன பாடல்...
அப்பாடலை இது வரை கேட்காதவர்களுக்காக இதோ
அடியம்மா ராசாத்தி
அன்புடன்
-
-
-
சிவாஜி இல்லையென்றால்... - இயக்குனர் சி.வி. ராஜேந்திரன் பேட்டி! வாரமலர்
அக்., 1 சிவாஜி பிறந்த நாள்!
சிவாஜியுடன் நீண்ட காலம் நெருங்கிப் பழகியவரும், சிவாஜி நடித்த கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்திரி, ராஜா, சந்திப்பு உள்பட, 14 வெற்றிப் படங்களை இயக்கியவருமான, இயக்குனர் சி.வி.ராஜேந்திரன், நடிகர் திலகம் பற்றிய சுவையான அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:
இயக்குனர் சி.வி.ஸ்ரீதர் என்னுடைய சொந்த அண்ணன். ஸ்ரீதர் போன்ற மிகச் சிறந்த டைரக்டரிடம் உதவியாளராக, பிறகு அசோசியேட் டைரக்டராக நிறைய விஷயங்கள் கற்று, பின்னர் டைரக்டரானதற்கு, பெருமைப்படுகிறேன். உலகின் தலைசிறந்த நடிகர் சிவாஜியோடு, அதிக படங்கள் டைரக்ட் செய்தது, நான் செய்த பெரிய புண்ணியம்!
கடந்த, 1957ல், "கேளீர் விக்ரமாதித்தியரே' என்ற தலைப்பில் நான் எழுதிய சிறுகதை, குமுதம் பத்திரிகையில் வெளிவந்தது, இதை படித்த ஸ்ரீதர், "பரவாயில்லையே... உனக்கு நல்ல ஸ்டோரி சென்ஸ் இருக்கே...' என்று பாராட்டினார். 1960ம் ஆண்டிலிருந்து, 1967ம் ஆண்டு வரை, மீண்ட சொர்க்கம், நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற பல படங்களில், அவரிடம் உதவியாளராக இருந்து, பின், "காதலிக்க நேரமில்லை' படத்தில், அசோசியேட் டைரக்டரானேன்.
நான் இயக்கிய முதல் படம், "அனுபவம் புதுமை!' அந்தப் படத்தில், சிவாஜி நடிக்கவில்லை என்றாலும், சிவாஜிக்கும், அந்தப் படத்திற்கும் சம்பந்தம் உண்டு. அருணாச்சலம் ஸ்டுடியோ அதிபர் வேலன் தயாரித்த, அனுபவம் புதுமை படத்தில், முத்துராமன், ராஜஸ்ரீ நடித்தனர். அப்படத்தில் இடம் பெற்ற, "கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்...' என்ற, பாடல் காட்சிகளை என் சகோதரர் ஸ்ரீதருக்கும், நடிகர் திலகத்திற்கும் திரையிட்டுக் காண்பித்தேன்.
"ரொம்ப நல்லா எடுத்திருக்கேடா...' என்று சிவாஜி, என்னை கட்டி அணைத்து பாராட்டினார். ஸ்ரீதரும், பாராட்டினார். சிவாஜியிடம் நான் பெற்ற முதல் பாராட்டு அது.
இயக்குனர் ஸ்ரீதரும், அவரது நெருங்கிய நண்பரும், கதாசிரியருமான கோபுவும் இணைந்து, போர் நிதிக்காக, சினிமா நட்சத்திரங்களின் கலை விழாவிற்கு ஒரு நாடகம் எழுதினர். நாடகத்தின் பெயர், "கலாட்டா கல்யாணம்!' மேடையில் சிவாஜி, ஜெமினி, வி.கே.ராமசாமி, நாகேஷ், முத்துராமன், சவுகார் ஜானகி, கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா, அவர் அம்மா சந்தியா உள்பட, ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்தது; சூப்பர் ஹிட்டானது.
சில ஆண்டுகள் கழித்து, அந்த நாடகத்தை, திரைப்படமாக தயாரிக்க, சிவாஜியின் ஆடிட்டர்களான, சம்பத்குமார் மற்றும் நாக.சுப்பிரமணி இருவரும் விரும்பினர். சிவாஜியின் மூத்த மகன் பெயரில், "ராம்குமார் பிலிம்ஸ்' என்ற நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. படத்திற்கு யாரை டைரக்டராக போடுவது என்ற விவாதம் வந்த போது, சிவாஜியின் இளைய சகோதரரும், அவரது நிர்வாகம் முழுவதும் கவனித்து வரும் ஷண்முகம், ஒரு சில டைரக்டர்கள் பெயர்களை சொன்னார்; ஆனால், சிவாஜியோ, "ராஜி பண்ணட்டும்...' என்றார். சிவாஜியும், சில நெருக்க மானவர்களும், என்னை ராஜி என்றே அழைப்பர்.
ராம்குமார் பிலிம்சின் முதல் தயாரிப்பான, "கலாட்டா கல்யாணம்' திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு, சிவாஜி அளித்த உத்தரவாதத்தால், எனக்கு கிடைத்தது.
இந்தப் படத்திற்கு பல சிறப்புகள் உண்டு. சிவாஜி, ஏ.வி.எம்.ராஜன், நாகேஷ், கோபி, சோ, ஜெயலலிதா, ஜோதிலட்சுமி, சச்சு, மனோரமா என்று பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்தது.
ஒரு வருடம், டயட்டில் இருந்து, உடல் எடை குறைத்து, ஸ்லிம்மாக, ஸ்டைலிஷ்ஷாக, இப்படத்தில் சிவாஜி இருப்பார்.
சிவாஜி, ஜெயலலிதா இருவரும் இணைந்து நடித்த முதல் படம் இது.
அப்போது நடந்து முடிந்த சர்வதேச கண்காட்சியை ஓட்டி, அண்ணா நகரில் ஒரு டவர் கட்டினர். அந்த டவரில், முதலில் படப்பிடிப்பு நடந்ததும், அந்த டவரை சினிமாவில் முதல் முறையாக காட்டியதும் நாங்கள் தான்.
சிவாஜி நடித்த காமெடி படங்களில், அவருக்கு பிடித்த படம், "கலாட்டா கல்யாணம்!' இப்படம் சூப்பர் ஹிட்டானது. 15 சென்டர்களில், நூறு நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடியது.
அடுத்து, "சுமதி என் சுந்தரி!' சிவாஜி - ஜெயலலிதா மீண்டும் இருவரும் இணைந்து நடித்த காமெடி படம். அதிலும், பல புதுமைகள். கேரளாவில், தேக்கடியில், 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்திய முதல் தமிழ் கலர் படம். பசுமையான அவுட்டோர் படப்பிடிப்பு. எனக்கு பெருமை சேர்த்த இன்னொரு படம் இது.
பிறமொழிப் படங்களை தமிழில், ரீ-மேக் செய்து, வெற்றிப் படங்களாக தருவதில், நிகரற்றவர் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான கே.பாலாஜி. அவரை,"ரீ மேக் கிங்' என்றே சொல்வர். அவர், ரீ-மேக் செய்த படங்களில் அதிகமாக நடித்திருப்பவர் சிவாஜி தான்.
அவருக்கு முதலில் ரீ-மேக் படங்களை தொடர்ந்து இயக்கிக் கொடுத்தவர், பிரபல இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர். "ஜானி மேரா நாம்' என்ற இந்தி சூப்பர் ஹிட் படத்தை, தமிழில் ரீ-மேக் செய்ய ஆரம்பித்த போது, ஏதோ சொந்த காரணங்களால், திருலோகசந்தர், அந்தப் பணியை ஏற்க விரும்பவில்லை. தயாரிப்பாளர், சிவாஜியிடம் மூன்று டைரக்டர்கள் பெயர்களை குறிப்பிட்டு, யாரை போடலாம் என்று கேட்டார்.
"சி.வி.ராஜேந்திரன் பண்ணட்டும்...' என்று சொன்னார் சிவாஜி. ராஜா படத்தில் மீண்டும் சிவாஜி, ஜெயலலிதா இணைந்து நடித்தனர். ராஜா படம் சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து மீண்டும் சிவாஜி, ஜெயலலிதா நடித்த, மற்றொரு ரீ-மேக் படம், நீதி. அதுவும் சூப்பர் ஹிட்டானது. சிவாஜி - மஞ்சுளா நடித்த, "என் மகன்' படமும் வெற்றிகரமாக ஓடியது.
சிவாஜி - ஜெமினி இருவரும் சேர்ந்து நடித்த ரீ-மேக் படம், உனக்காக நான். இந்தியில் சூப்பர் ஹிட்டான, ஆராதனா (ராஜேஷ் கன்னா, ஷர்மிளா தாகூர் நடித்தது) படத்தை, சிவகாமியின் செல்வன் என்று ரீ-மேக் செய்தோம்; எதிர்பார்த்த அளவு வெற்றி அடையவில்லை.
சென்னையில் ஒரு வருடமும், தமிழகத்தில் பல இடங்களில் வெற்றிகரமாக ஓடிய இந்தி படத்தை, ரீ-மேக் செய்ய எடுத்த முடிவு சரியானதல்ல என்று உணர்ந்தோம்.
சிவாஜி- ஸ்ரீதேவி, பிரபு -ராதா நடித்த, "சந்திப்பு' என்ற படத்தை சிவாஜி பிலிம்சுக்காக இயக்கினேன். படம் சூப்பர் ஹிட்டாக, 25 வாரங்கள் ஓடியது.
பிரபுவை சங்கிலி படத்தில் அறிமுகப்படுத்திய பெருமை, எனக்கு கிடைத்தது. இந்தி படத்தில், பிரபல வில்லன் டேனி டென்சோகப்பர் நடித்த பாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று தேடிக் கொண்டிருந்தோம். அப்போது எனக்கு அந்த ரோலுக்கு பிரபு பொருத்தமாக இருப்பார் என்று பட்டது. "டேய்... பிரபுவை போலீஸ் ஆபீசராக ஆக்கணும்ன்னு நான் பிளான் போட்டிருக்கேன். நடிப்புன்னா சரியாக வருமா?' என்று சந்தேகப்பட்டார் சிவாஜி.
"பிரபு பெரிய நடிகனாக வர முடியும் என்று எனக்கு மனதில் படுகிறது...' என்றேன்.
சிவாஜி நடித்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது, கவுரவம். "அண்ணே... இந்தப் படத்திலே ரொம்ப சூப்பராக பண்ணியிருக்கீங்க... ஆறு மாதம், எட்டு மாதம் எந்தப் படமும் பண்ணாதீங்க... ஜனங்க இந்தப் படத்தை மறக்க மாட்டாங்க...' என்று சொன்னேன்.
சினிமாவில் எல்லா துறைகளிலும் சாதனை புரிந்த சிவாஜி, அரசியலில் மட்டும் ஏன் ஜெயிக்க முடியவில்லை என்பது, எனக்கு புரியாத புதிராக இன்றும் இருக்கிறது.
"சிவாஜி மீது எனக்கு அபரிமிதமான பக்தி. என் வாழ்வில் எனக்கு கிடைத்த வெற்றி, திருப்பு முனைகள் எல்லாமே, அவரால் தான் கிடைத்தது. அவர் இல்லையென்றால், சி.வி.ராஜேந்திரன் திரைப்பட வாழ்க்கை இல்லை...' என்றார் சி.வி.ராஜேந்திரன்.
***
* சிவாஜியை வைத்து அதிகமான படங்கள் டைரக்ட் செய்திருக்கும் இயக்குனர்கள் நான்கு பேர். ஏ.பீம்சிங், ஏ.சி.திருலோகசந்தர் இருவரும் தலா, 18 படங்கள்; பி.மாதவன், சி.வி.ராஜேந்திரன் இருவரும் தலா, 14 படங்கள் இயக்கி உள்ளனர்.
* நாவலாசிரியர், நா.பார்த்தசாரதி எழுதிய பிரபலமான, "குறிஞ்சி மலர்' நாவலை, தூர்தர்ஷனுக்காக, 13 வாரங் கள், "டிவி' நாடகமாக சி.வி.ராஜேந்திரன் இயக்கினார். ஹீரோ அரவிந்த் ஆக நடித்தது, மு.க.ஸ்டாலின்.
*சிறிய நடிகரோ, பெரிய நடிகரோ, நடிகையோ, யார் நன்றாக நடித்தாலும், அவர்களை மனதார பாராட்டுவார் சிவாஜி.
*பல இயக்குனர்கள் கேட்டும், படங்களில் சொந்தக் குரலில் பாடு வதற்கு சிவாஜி ஒப்புக் கொள்ளவில்லை.
* 1954 முதல், 1970 வரை விடுமுறை நாட்கள் தவிர, படப்பிடிப்பு நடக்கும் நாட்களில், சிவாஜியைப் போல வேறு யாரும் வேலை செய்திருக்க முடியாது. காலை, 7:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, மதியம், 2:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, இரவு, 10:00 மணி முதல், நள்ளிரவு, 2:00 மணி வரை படப்பிடிப்பில் ஈடுபடுவார். ஒரு நாளைக்கு மூன்று கால்ஷீட்கள். விடியற்காலை, 3:00 மணிக்கு வீட்டில் சூடாக இட்லி சாப்பிட்டு, சோபாவிலே உட்கார்ந்து, ஒரு மணி நேரம் தூங்குவார். கோழி தூக்கம் என்று சொல்வரே, அதுபோல். 5:00 மணிக்கு எழுந்து, குளித்து, 6:30 மணிக்கு, மீண்டும் செட்டில் ரெடியாக இருப்பார்; அசுர சாதனை!
* பிற மொழிகளிலிருந்து, தமிழில் ரீ-மேக் ஆகும் பல படங்களில் சிவாஜி நடித்து, நூறு நாட்கள் வெற்றிப் படங்களாக ஓடி இருக்கின்றன. ரீ-மேக் படங்களில் நடிக்கும் போது, அந்த ஒரிஜினல் படங்களை, சிவாஜி பார்க்கவே மாட்டார். பிற நடிகர்களுடைய சாயல், பாதிப்பு வந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை இதற்குக் காரணம்.
***
-
-