en raagangaL(mudhal iravu)
பாடல்: என் ராகங்கள்
திரைப்படம்: முதல் இரவு
இசை: இளையராஜா
என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
இவள் தாளங்கள் சம காலங்கள்
என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
பூஜைக்கேற்ற பூவெல்லாம் எந்தன் கோலங்கள்
ஆஆ ஆஆஆ...லால லல்ல லால லல்ல லல லலா
பூஜைக்கேற்ற பூவெல்லாம் எந்தன் கோலங்கள்
கிள்ளைகளே...பேசுங்களே
கிள்ளைகளே பேசுங்களே என் எண்ணங்களை
மின்னல்களை தேராக்குவேன்
கல்யாண ஊர்கோலம் கொண்டாட
என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
இவள் தாளங்கள் சம காலங்கள்
என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
மாலை சூடும் நேரங்கள் மஞ்சள் வானங்கள்
மாலை சூடும் நேரங்கள் மஞ்சள் வானங்கள்
காதல் மகள்...ராதை தந்தாள்
காதல் மகள் ராதை தந்தாள் என் மாங்கல்யம்
கண்ணன் தரும் பொன்னூஞ்சலில்
அம்மாடி அம்மாடி நான் ஆட
என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
அச்சம் நாணம் வெட்கங்கள் இன்றே ஓடுங்கள்
அச்சம் நாணம் வெட்கங்கள் இன்றே ஓடுங்கள்
அத்தானிடம்...பேசுங்களேன்
அத்தானிடம் பேசுங்களேன் என் ஆசைகளை
கட்டில் வரும் தொட்டில் வரும்
கண்ணான பிள்ளைக்கு தாலாட்டு
என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
இவள் தாளங்கள் சம காலங்கள்
என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
paarthEan pon manam paarthEan thalaivaa
பாடல்: பார்த்தேன் பொன் மனம் பார்த்தேன்
படம்: அக்னி பார்வை
ஆண்டு: 1992
இசை: இளையராஜா
பார்த்தேன் பொன் மனம் பார்த்தேன்
தலைவா நான் உன்னோடு ஒய்யா ஒய்யர ஒய்யா
வீணை பெண் எனும் வீணை
எடுத்தேனே பண்பாடு ஒய்யா ஒய்யர ஒய்யா
அந்த ராமனைப் போலே இந்த பூமியின் மேலே
இங்கு பார்த்தேன் பொன் மனம் பார்த்தேன்
தலைவா நான் உன்னோடு ஒய்யா ஒய்யர ஒய்யா
ஶ்ரீராமன் ஜானகி நீங்காத நாயகி நான் தான் அன்பே
பூர்வீக பந்தமும் தெய்வீக சொந்தமும் உன்னால் கண்டேன்
நேசம் எனும் காவியம் பேசும் உயிர் ஓவியம்
உனை நீங்குமா கண் தூங்குமா ஜீவன் நீயே
இங்கு பார்த்தேன் பொன் மனம் பார்த்தேன்
தலைவா நான் உன்னோடு ஒய்யா ஒய்யர ஒய்யா ஒய்யா ஒய்யர ஒய்யா
தாயாகும் ஓர் வரம் நான் கேட்க நீ தரும் நாள் தான் கூட
பேர் சொல்ல ஓர் மகன் சீர் கொள்ள ஓர் மகள்
தோள் மேல் ஆட
வாங்கும் உயிர் மூச்சிலும் பேசும் தமிழ் பேச்சிலும்
இளம் பாவை தான் உன் பேரைத் தான் நாளும் பாடும்
இங்கு பார்த்தேன் பொன் மனம் பார்த்தேன்
தலைவா நான் உன்னோடு ஒய்யா ஒய்யர ஒய்யா
வீணை பெண் எனும் வீணை
எடுத்தேனே பண்பாடு ஒய்யா ஒய்யர ஒய்யா
அந்த ராமனைப் போலே இந்த பூமியின் மேலே
இங்கு பார்த்தேன் பொன் மனம் பார்த்தேன்
தலைவா நான் உன்னோடு ஒய்யா ஒய்யர ஒய்யா ஒய்யா ஒய்யர ஒய்யா
adhikaalai sugavELai(natpu)
பாடல்: அதிகாலை சுகவேளை
திரைப்படம்: நட்பு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.ஜானகி & கே.ஜே.யேசுதாஸ்
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
காதல் சொன்ன காகிதம் பூவாய் போனது
வானில் போன தேவதை வாழ்த்து சொன்னது
ஒரு தத்தை கடிதத்தை தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
அன்பே வா வா அணைக்க வா
நீ நிலவுக்கு பிறந்தவளா
போதை வண்டே பொறுத்திரு
இன்று மலருக்கு திறப்புவிழா
உன்னை வந்து பாராமல் தூக்கம் தொல்லையே
உன்னை வந்து பார்த்தாலும் தூக்கம் இல்லையே
ஒரு பாரம் உடை மீறும் நிறம் மாறும் கனியே
இதழ் ஓரம் அமுதூறும் பரிமாறும் இனியே
அடி தப்பிப் போகக்கூடாதே
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
தென்றல் வந்து தீண்டினால்
இந்த தளிர் என்ன தடை சொல்லுமா
பெண்மை பாரம் தாங்குமா
அந்த இடை ஒரு விடை சொல்லுமா
என்னை சேர்ந்த உன் உள்ளம் ஈரம் மாறுமா
தங்கம் என்ன சுட்டாலும் சாரம் போகுமா
இளங்கோதை ஒரு பேதை இவள் பாதை உனது
மலர்மாலை அணியாமல் உறங்காது மனது
இது போதும் சொர்க்கம் வேறேது
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
காதல் சொன்ன காகிதம் பூவாய் போனது
வானில் போன தேவதை வாழ்த்து சொன்னது
ஒரு தத்தை கடிதத்தை தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
அதிகாலை சுகவேளை உன் ஓலை வந்தது
madhukkadalO(kumarippeNNin uLLaththilE)
பாடல்: மதுக்கடலோ
திரைப்படம்: குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
இசை: ஷங்கர் கணேஷ்
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & எஸ்.ஜானகி
மதுக்கடலோ மரகத ரதமோ
மதன் விடும் கணையோ
மழை முகில் விழியோ
கனி இதழ் சுவைதனில்
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை நீயே சீதை
மதுக்கடலோ மரகத ரதமோ
மதன் விடும் கணையோ
மழை முகில் விழியோ
கனி இதழ் சுவைதனில்
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை...நீயே சீதை
கண்ணாலே உனைப்பார்த்த நேரம்
இன்று என் வாழ்வில் ராஜ யோகம்
உன் வாசல் நான் தேடி வந்தேன்
நெஞ்சில் பொன்வீணை மீட்ட வந்தேன்
உன்னைப் பார்த்தாலே உண்டாகும் வேகம்
உன்னை பார்த்தாலே உண்டாகும் வேகம்
உந்தன் பார்வை புது மோஹ ராகம்
மதுக்கடலோ மரகத ரதமோ
மதன் விடும் கணையோ
மழை முகில் விழியோ
கனி இதழ் சுவைதனில்
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை நானே சீதை
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை நானே சீதை
கள்ளூறும் ரோஜாவை பாராய்
தொட்டு விளையாட ஓடி வாராய்
உன் கூந்தல் நிழலோரம் நானே
கொஞ்சம் இளைபாற வேண்டும் மானே
உந்தன் தோள்மீது கிளியாக வேண்டும்
உந்தன் தோள்மீது கிளியாக வேண்டும்
உந்தன் மார்பில் உறவாட வேண்டும்
மதுக்கடலோ மரகத ரதமோ
மதன் விடும் கணையோ
மழை முகில் விழியோ
கனி இதழ் சுவைதனில்
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை நானே சீதை
போதை ஊட்டும் கோதை
மனம் கவர் ராதை நானே சீதை
ponvaanam panneer thoovuthu(indRu nee naaLai naan)
பாடல்: பொன்வானம் பன்னீர் தூவுது
திரைப்படம்: இன்று நீ நாளை நான்
இசை: இளையராஜா
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு
மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இந்த ஜோடி வண்டுகள் கோடு தாண்டிடுமா
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
தங்கத் தாமரை மலர்ந்த பின்பு மூடுமோ
பட்டுப் பூங்கொடி படர இடம் தேடுமோ
மலர்க்கணை பாயாதோ மதுக்குடம் சாயாதோ
மலர்க்கணை பாயாதோ மதுக்குடம் சாயாதோ
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
மழை காமன் காட்டில் பெய்யும் காலமம்மா
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
idhu kanavugaL viLaindhidum(nizhal thEdum nenjangaL)
பாடல்: இது கனவுகள் விளைந்திடும் காலம்
திரைப்படம்: நிழல் தேடும் நெஞ்சங்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: தீபன் சக்ரவர்த்தி & எஸ்.ஜானகி
இது கனவுகள் விளைந்திடும் காலம்
மனக்கதவுகள் திறந்திடும் மாதம்
என் பாதையில் ஒரு தேவதை
வந்து நிரந்தர வரம் தரும் நேரம்
நீதானா நீதானா இது நீதானா நீதானா
பாருங்கள் விழி ஓரங்கள் அங்கு நாணங்கள் குளிக்கும்
பாருங்கள் விழி ஓரங்கள் அங்கு நாணங்கள் குளிக்கும்
பூபாளமே இசை பாடுதோ பூமாலையே பூச்சூடுதோ
இனி என் தேகம் பன்னீரில் நீராடும்
உனைக்கண்டாலே நெஞ்சோரம் தேனூறும்
இது ரகசிய அனுபவம் ஆகும்
எந்தன் விழிகளில் மிதந்தது நாணம்
தொலை தூரத்தில் அந்தி நேரத்தில்
அந்த கடலோடு கலந்தது வானம்
நான்தானா நான்தானா இது நான்தானா நான்தானா
பூமேகம் இன்று தேன் தூவும் இனி ஆகாயம் அருகே
பூமேகம் இன்று தேன் தூவும் இனி ஆகாயம் அருகே
என் பாதையோ வேறானது உன் பார்வையால் வேறானது
ஒரு பெண் மாலை என் தோளில் ஆடாதோ
இனி உன் பாதம் என் கோயில் ஆகாதோ
தன னன னன தன னன னன
இது கனவுகள் விளைந்திடும் காலம்
மனக்கதவுகள் திறந்திடும் மாதம்
தொலைதூரத்தில் அந்தி நேரத்தில்
அந்த கடலோடு கலந்தது வானம்
நீதானா நீதானா இது நான்தானா நான்தானா
இது நீதானா நீதானா இது நான்தானா நான்தானா
mugam senthaamarai endRaanE(vEdikkai manidhargaL)
பாடல்: முகம் செந்தாமரை என்றானே
திரைப்படம்: வேடிக்கை மனிதர்கள்
இசை: ஷங்கர் கணேஷ்
முகம் செந்தாமரை என்றானே
இதழ் ரோஜாவென சொன்னானே
முகம் செந்தாமரை என்றானே
இதழ் ரோஜாவென சொன்னானே
முகம் தாமரை மலரா
இதழ் ரோஜா நிறமா
அடியே நீயே சொல்லு
முகம் செந்தாமரை என்றானே
இதழ் ரோஜாவென சொன்னானே
முகம் தாமரை மலரா
இதழ் ரோஜா நிறமா
அடியே நீயே சொல்லு
மானாட்டம் விழியென்றான்
மயிலாட்டம் ஒயிலென்றான்
மானா மயிலா நானா அறியேனே
மானாட்டம் விழியென்றான்
மயிலாட்டம் ஒயிலென்றான்
மானா மயிலா நானா அறியேனே
மான் கூட்டம் என்னாட்டம் பேசுமோ
பெண்ணாட்டம் மயிலாடுமோ
முல்லைக்கொடியே முத்துக்கிளியே
இந்த சந்தேகம் தீருங்களேன்
முல்லைக்கொடியே முத்துக்கிளியே
இந்த சந்தேகம் தீருங்களேன்
முகம் செந்தாமரை என்றானே
இதழ் ரோஜாவென சொன்னானே
முகம் தாமரை மலரா
இதழ் ரோஜா நிறமா
அடியே நீயே சொல்லு
இனி ஒரு முறை அவன் வரும் வரை
மனம் தவிப்பதை உடல் கொதிப்பதை
யாரிடம் போய் நான் சொல்வது
இனி ஒரு முறை அவன் வரும் வரை
மனம் தவிப்பதை உடல் கொதிப்பதை
யாரிடம் போய் நான் சொல்வது
அவன் மீண்டும் வருவானா
மலர் மேனி தொடுவானா
அவன் கூட மனம் ஓட
அவன் பார்வை விழி தேட
உறங்காமல் பொழுதோடுது
அவன் கூட மனம் ஓட
அவன் பார்வை விழி தேட
உறங்காமல் பொழுதோடுது
முகம் செந்தாமரை என்றானே
இதழ் ரோஜாவென சொன்னானே
முகம் தாமரை மலரா
இதழ் ரோஜா நிறமா
அடியே நீயே சொல்லு
அவன் என்னைத் தாலாட்ட
நான் கொஞ்சிப் பாராட்ட
புதுநாள் திருநாள் சுபநாள் வர வேண்டும்
அவன் என்னைத் தாலாட்ட
நான் கொஞ்சிப் பாராட்ட
புதுநாள் திருநாள் சுபநாள் வர வேண்டும்
அவன் மார்பில் பொன்னூஞ்சல் ஆடுவேன்
ஆனந்த நீராடுவேன்
இன்ப நினைவும் இந்த சுகமும்
இனி என்றேன்றும் நிலையாகுமே
இன்ப நினைவும் இந்த சுகமும்
இனி என்றேன்றும் நிலையாகுமே
முகம் செந்தாமரை என்றானே
இதழ் ரோஜாவென சொன்னானே
முகம் தாமரை மலரா
இதழ் ரோஜா நிறமா
அடியே நீயே சொல்லு
அடியே நீயே சொல்லு
அடியே நீயே சொல்லு
dEvalOgam azhaiththaalum(vasantha azhaippugaL)
பாடல்: தேவலோகம் அழைத்தாலும்
திரைப்படம்: வசந்த அழைப்புகள்
இசை: டி.ராஜேந்தர்
தேவலோகம் அழைத்தாலும் காமதேனு கிடைத்தாலும்
மோகனம் பாடிடவா தேவனை தேடிடவா
ராகங்கள் நாடிடும் தலைவா நான் உங்கள் கனவினில் நிலவா
ஆஆ ஆ ஆஆ ஆ ஆஆ ஆ...ஆஆ ஆஆ ஆஆ ஆ
தேவலோகம் அழைத்தாலும் காமதேனு கிடைத்தாலும்
மோகனம் பாடிடவா தேவனைத் தேடிடவா
மல்லிகைப் பூவாகி மாமல்லன் சிலையாகி
மல்லிகைப் பூவாகி மாமல்லன் சிலையாகி
மரகத தேராகி...மன்னனுக்கு கவியாகி
மொழியது மௌனம்...கலைமகள் சரணம்
மொழியது மௌனம் கலைமகள் சரணம்
உனக்கும் எனக்கும் உறவில் நெறுக்கம்
இதுபோல் தொடரும் இதுபோல் தொடரும்
இது போல் தொடரும்
கொத்துப்பூக்கள் எட்டிப் பார்க்கும்
தத்தை பார்த்து வெட்டிப்போகும்
கொத்துப்பூக்கள் எட்டிப் பார்க்கும்
தத்தை பார்த்து வெட்டிப்போகும்
நிலையைக் கண்டால் உனக்கோர் வசந்தம்
உனக்கோர் வசந்தம் உனக்கோர் வசந்தம்
தேவலோகம் அழைத்தாலும் காமதேனு கிடைத்தாலும்
மோகனம் பாடிட வா தேவனைத் தேடிடவா
சித்திரப்பூ ஓடம் சிக்கிட தினம் வாடும்
சித்திரப்பூ ஓடம் சிக்கிட தினம் வாடும்
சேலை தனில் இடை ஆடும்
சிந்தை தனில் உனை நாடும்
விழிமலர் மடல்கள்...வேதனையில் இதழ்கள்
விழிமலர் மடல்கள் வேதனையில் இதழ்கள்
தயங்கும் மயங்கும் பருவம் உருவம்
மழைபோல் குளிரும் மழைபோல் குளிரும்
மழைபோல் குளிரும்
மஞ்சள் வானம் கொஞ்சும் மேகம்
நெஞ்சம் காணா தஞ்சம் தேடும்
மஞ்சள் வானம் கொஞ்சும் மேகம்
நெஞ்சம் காணா தஞ்சம் தேடும்
வடிவைக்கண்டால் உயிரே பாவம்
உயிரே பாவம் உயிரே பாவம்
தேவலோகம் அழைத்தாலும் காமதேனு கிடைத்தாலும்
மோகனம் பாடிடவா தேவனைத் தேடிடவா
galeer galeer endRE(dEvadhai)
பாடல்: கலீர் கலீர் என்றே
திரைப்படம்: தேவதை
இசை: ஷ்யாம்
கலீர் கலீர் என்றே
காலம் தன்னால் இங்கே முன்னேறுது
நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது
வண்ணங்களே எந்தன் எண்ணங்களே
சொல்லுங்களே வாராதோ இன்பங்களே
கலீர் கலீர் என்றே
காலம் தன்னால் இங்கே முன்னேறுது
நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது
வண்ணங்களே எந்தன் எண்ணங்களே
சொல்லுங்களே வாராதோ இன்பங்களே
மங்கல்ய பெண்ணாக
மணவாளன் முன்னாலே
வந்தாயோ பெண்ணே நீ
வண்டை நாடி பூ வரலாமா
தானாக இன்பங்கள் தேடி வராது
நாமாக தீண்டும்வரை நம்மை தொடாது
சுக லோகங்களை காண வேண்டுமா
சில தியாகங்களை செய்து பாரம்மா
கலீர் கலீர் என்றே
காலம் தன்னால் இங்கே முன்னேறுது
நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது
வண்ணங்களே எந்தன் எண்ணங்களே
சொல்லுங்களே வாராதோ இன்பங்களே
மாசியிலே நெல் விதைத்து
பங்குனியில் போனவன்
மார்கழியில் வந்தானா
அறுவடைக்கு நாள் குறித்தானா
ஊரெல்லாம் உன் பேரை உச்சரிக்காதோ
வானாளும் தெய்வம் உன்னை வாழ்த்துரைக்காதோ
நீ மதரில் ஓர் தேவதையம்மா
உன் வாழ்க்கை எல்லாம் வேதமம்மா
கலீர் கலீர் என்றே
காலம் தன்னால் இங்கே முன்னேறுது
நூலாய் என் வாழ்க்கைதான் தள்ளாடுது
வண்ணங்களே எந்தன் எண்ணங்களே
சொல்லுங்களே வாராதோ இன்பங்களே
கலீர் கலீர்...கலீர் கலீர்...கலீர் கலீர்
idhayavaasal thiRandhabOdhu(thoongAdha kaNNinRu ondRu)
பாடல்: இதய வாசல் திறந்த போது
திரைப்படம்: தூங்காத கண்ணின்று ஒன்று
இசை: K.v.மகாதேவன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியன் & எஸ்.ஜானகி
இதய வாசல் திறந்த போது உறவு வந்தது
உறங்கும் போது கனவு நூறு பருவம் தந்தது
மலர் மீதிலே பனி சிந்துதே
மனம் என்னும் தேனாற்றில் அலைமோதுதே
இன்று இதய வாசல் ஹா திறந்த போது ம்ம் உறவு வந்தது
மலராய் மலர்ந்தேன் மனதில் கலந்தேன்
மனதில் கலந்தேன் விருந்தாய் அமர்ந்தேன் உன் கையிலே
எனையே கொடுத்தேன் மனதை இணைத்தேன்
சிறகை விரித்தேன் பொன் வானிலே
மலராய் மலர்ந்தேன் மனதில் கலந்தேன்
விருந்தாய் அமர்ந்தேன் உன் கையிலே
எனையே கொடுத்தேன் மனதை இணைத்தேன்
சிறகை விரித்தேன் பொன் வானிலே
மலராய் மலர்ந்தேன் மனதில் கலந்தேன்
விருந்தாய் அமர்ந்தேன் உன் கையிலே
எனையே கொடுத்தேன் மனதை இணைத்தேன்
சிறகை விரித்தேன் பொன் வானிலே
வானத்து வில்லாலே பாலம்
மேகம் சொர்க்கத்தை நாம் காண போடும்
வானத்து வில்லாலே பாலம்
மேகம் சொர்க்கத்தை நாம் காண போடும்
நிலவென்னும் பெண்தோழி விண்மீனை பூவாக்கி
வழிமீது தெளிப்பாளோ அங்கே அங்கே
இதய வாசல் திறந்த போது உறவு வந்தது
உறங்கும் போது கனவு நூறு பருவம் தந்தது
விழிகள் பொழியும் கவிதை மழையில்
மனதில் மலரும் சங்கீதமே
இளமை கரையில் இவளின் மடியில்
கதைகள் தினமும் உருவாகுமே
விழிகள் பொழியும் கவிதை மழையில்
மனதில் மலரும் சங்கீதமே
இளமை கரையில் இவளின் மடியில்
கதைகள் தினமும் உருவாகுமே
எழிலான உன் கூந்தல் ஓரம்
நெஞ்சம் இளைப்பாறும் திருநாளும் தோன்றும்
எழிலான உன் கூந்தல் ஓரம்
நெஞ்சம் இளைப்பாறும் திருநாளும் தோன்றும்
முப்பாலில் மூன்றாம் பால் இப்போது நீதானே
எப்போது படித்தாலும் இன்பம் இன்பம்
இதய வாசல் திறந்த போது உறவு வந்தது
உறங்கும் போது கனவு நூறு பருவம் தந்தது
மலர் மீதிலே பனி சிந்துதே
மனம் என்னும் தேனாற்றில் அலைமோதுதே
இன்று இதய வாசல் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ம்ம்
aasaigaLO oru kOdi(arththangaL aayiram)
பாடல்: ஆசைகளோ ஒரு கோடி
திரைப்படம்: அர்த்தங்கள் ஆயிரம்
இசை: ஷங்கர் கணேஷ்
ஆசைகளோ ஒரு கோடி ஆசைகளோ ஒரு கோடி
புது மோக ராக அலை மோதும் வேளைதனில்
ஆசைகளோ ஒரு கோடி
நீ வராமல் தொடாமல் விடாது அந்த
ஆசைகளோ ஒரு கோடி
புது மோக ராக அலை மோதும் வேளைதனில்
ஆசைகளோ ஒரு கோடி
மல்லிகைப்பூ வாசனை இந்நாளில் எனை வாட்டும் வேதனை
மல்லிகைப்பூ வாசனை இந்நாளில் எனை வாட்டும் வேதனை
நிலவென்னும் பொன்மேனி நெடுந்தூரம் இருந்தாலும்
ஒளியென்னும் கையாலே மலரைத்தழுவி மயங்கும் நிலையைக்கண்டு
ஆசைகளோ ஒரு கோடி
புது மோக ராக அலை மோதும் வேளைதனில்
ஆசைகளோ ஒரு கோடி
நீ வராமல் தொடாமல் விடாது அந்த
ஆசைகளோ ஒரு கோடி
கண்ணில் இருந்து அம்பு பறந்து
எந்தன் நெஞ்சில் வந்து புகுந்து
தாபக்கனலை வாரிப் பொழிய
தாவி வந்தேன் சரணம் அடைய
கண்ணில் இருந்து அம்பு பறந்து
எந்தன் நெஞ்சில் வந்து புகுந்து
தாபக்கனலை வாரிப் பொழிய
தாவி வந்தேன் சரணம் அடைய
கங்கை போல மங்கை எந்தன் அருகில் வருவாய்
ஆசைகளோ ஒரு கோடி
புது மோக ராக அலை மோதும் வேளைதனில்
ஆசைகளோ ஒரு கோடி
நீ வராமல் தொடாமல் விடாது அந்த
ஆசைகளோ ஒரு கோடி
முகிலில் இருந்து குளிர்ந்த பனியும் வீசும்
தரையில் இருக்கும் மலரை தடவிப் பேசும்
உனையே நினைந்தேன் மலர்ந்தேன் மலர்ந்தேன்
அழகிய கனி உடல் நீ தொடும் புது மடல்
அழகிய கனி உடல் நீ தொடும் புது மடல்
இருவரும் கலந்தொரு சுகநிலை பெறவே
அருகினில் நெருங்கிட உனக்கென்ன பயமோ
இணைவோம்...கனிவோம்...மகிழ்வோம்!
pagalilE oru nilavinai kaNdEn(ninaivE oru sangeetham)
பாடல்: பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன்
திரைப்படம்: நினைவே ஒரு சங்கீதம்
இசை: இளையராஜா
பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா
பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா
அது உலவும் எந்தன் மனம் ஒரு வானம் பூங்காவனம்
புது மேகம் இவள் தேகம் அதில் மோதும் தினம் பலவித சுகம் தரும்
பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா
சேரும் காலம் தேடி தேகம் சிந்து பாடும்
தேவன் வந்து சேர தேவை சொல்லக் கூசும்
தோளில் ஒன்று கூட சோகம் மெல்ல ஓடும்
மேளம் தாளம் போட மோகம் மேலும் கூடும்
அங்கங்கள் உந்தன் சொந்தம் இன்பம் சிந்தும் அன்புசங்கம்
பாடல் ஒன்றைப் பாடும் நேரம் பாவை எண்ணம் வாடுதே
மாற வேண்டும் காதல் பாரம் மாலை ஒன்று மலரடி விழுந்திட
பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா
காற்றில் ஆடும் கூந்தல் காதல் சொல்லி ஆட
காதல் கொண்ட காமன் கைகள் வந்து கூட
தேகம் என்ற கோவில் பூஜை நேரம் தேட
தாகம் மோகம் பாட தாளம் ராகம் பாட
ஏதேதோ எண்ணம் வந்து சொல்லிச்சொல்லி என்னை கிள்ளி
ஏற்றும் இன்பம் கோடி கோடி ஏக்கம் தன்னை காட்டுதே
காற்றும் என்னை கூடி கூடி காதல் எனும் கனவுகள் கலந்திட
பகலிலே...பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா
அது உலவும் எந்தன் மனம் ஒரு வானம் பூங்காவனம்
புது மேகம் இவள் தேகம் அதில் மோதும் தினம் பலவித சுகம் தரும்
பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன் அது கறுப்பு நிலா
naan irukkum antha naaL varaikkum(azhiyaadha kOlangaL)
பாடல்: நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
திரைப்படம்: அழியாத கோலங்கள்
இசை: இளையராஜா
நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
நெஞ்சில் வாழும் பந்தமே சிந்து பாடும் சொந்தமே
வான் வரைக்கும் எண்ணமும் பறக்கும்
நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
காலங்கள் யாவும் உன்னை கண்குளிர காணும்
கோலங்கள் தானே எந்தன் நிம்மதிக்கும் போதும்
காலங்கள் யாவும் உன்னை கண்குளிர காணும்
கோலங்கள் தானே எந்தன் நிம்மதிக்கும் போதும்
நீ வாழும் இதயம் முழுதும் ஏக்கங்கள் இல்லை தூக்கங்கள்
இனி என்னோடு...உன் எண்ணம்...ஒன்றாகும்
இனி என்ன...நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
என் வாழ்வின் இன்பம் எல்லாம் நீ கொடுத்த எண்ணம்
ஏங்காமல் ஏங்கும் இங்கே பெண்மை என்ற வண்ணம்
என் வாழ்வின் இன்பம் எல்லாம் நீ கொடுத்த எண்ணம்
ஏங்காமல் ஏங்கும் இங்கே பெண்மை என்ற வண்ணம்
எங்கெங்கோ எனது மனது ஓடட்டும் இன்பம் பாடட்டும்
இனி ஏதோ...என் நெஞ்சில்...கூடட்டும்
இனி என்ன...நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
நெஞ்சில் வாழும் பந்தமே சிந்து பாடும் சொந்தமே
வான் வரைக்கும் எண்ணமும் பறக்கும்
நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்