https://scontent-a-mad.xx.fbcdn.net/...22438968_n.png
Printable View
Simbhu looks so young. Next superstar. Waiting for Vaalu
STR @iam_str 1h
More
#vaalu trailer on the way :)
T.S.Suresh @editorsuresh 1h
More
Get Ready Folks! :-)
#Vaalu Trailer On The Way! @iam_str @vijayfilmaker @artilayaraja @dhilipaction @iam_sath
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...08189347_n.jpg
Shedding yeng superstar title? maanasthan and good timing.
Good to see Simbu back in form. Hope he does what he is best in doing. Trailer looks like a mash up or rather a random draw from the déjà-vu basket, have to see how Simbu holds the movie.
Wish the whole team, esp. Simbu, a leaping sucess through Vallu.
Release pushed to SEPTEMBER 2014 for August 2014 - THE HINDU
What a mokka trailer. Flop on the way.
'வாலு' பாடலைப் பாராட்டிய ரவி தேஜா!
ரவி தேஜா தனது 'பவர்' படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் சென்னையில் தமன் ஸ்டுடியோவில் தனது பட வேலைகளை மேற்பார்வையிட வந்திருந்தார்.அப்போது ரவி தேஜாவை ‘வாலு’ பட இயக்குநர் விஜய் சந்தர் சந்தித்தார்.
''சார். நான் உங்க ரசிகன் '' என்று கூறிய விஜய் சந்தர் தனது ‘வாலு’ படத்தின் ’நயன்தாரா வேணாம் ஆண்ட்ரியா வேணாம்’ பாடலை ரவி தேஜாவுக்கு போட்டுக் காண்பித்தார்.
http://cinema.vikatan.com/uploaded/Bw22a5BCIAA2ruQ.jpg
பாடல் வரிகளில் இருக்கும் சுவாரஸ்ய பெப்பை ரசித்த ரவி தேஜா ''இந்தப் பாடல் கண்டிப்பாக வெற்றி பெறும்.படம் வெளியானதும் கண்டிப்பாக இந்தப் பாடல் மாஸ் ஹிட்டாகும்'' என கூறிவிட்டு பாடலை மீண்டும் போடச்சொல்லி கேட்டிருக்கிறார்.
இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் விஜய் சந்தர், ட்விட்டர் தளத்தில் ரவி தேஜாவுடன் எடுத்த புகைப்படத்தை ட்வீட் செய்து ’மாஸ் மகாராஜா’ என ரவி தேஜாவை குறிப்பிட்டுள்ளார்..
வாலு, இது நம்ம ஆளு எப்போ ரிலீஸ்? - சிம்பு பதில்
2012ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு சிம்பு நடித்த 'போடா போடி' படம் ரிலீஸ் ஆனது. அதற்குப் பிறகு கடந்த இரண்டு வருடங்களாக சிம்புவின் படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை.
'வாலு' படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தன்னுடைய படங்கள் குறித்து சிம்பு சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
'' ’வாலு’ மற்றும் ’வேட்டை மன்னன்’ ஆகிய இரண்டும் படங்களுக்கும் ஒரே தயாரிப்பாளர்தான். தற்போது 'வாலு' படம் ரிலீஸ் ஆக உள்ளது. நவம்பரில் 'வாலு' ரிலீஸ் ஆகும்.‘இது நம்ம ஆளு’ படத்தின் படப்பிடிப்புகள் முடியும் நிலையில் உள்ளன. டிசம்பரில் 'இது நம்ம ஆளு' ரிலீஸ் ஆகும்.
என் ரசிகர்களைப் போலவே நானும் என் படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளேன் '' என்று சிம்பு தெரிவித்துள்ளார்.
'வேட்டை மன்னன்' படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை. 30 நாட்கள் ஷூட்டிங் நடக்க வேண்டி இருப்பதால். 'வேட்டை மன்னன்' குறித்து சிம்பு எதுவும் சொல்லவில்லை.
Str ippa than unga teaser parthan nalla varuvenga...this views gonna break I views for sure
avaru thaane ?? avanga athe costume-la irukkura photo vera onnu irukku ..
i think that he is living off Ajith and his fans in recent years .. ivanayum nambi support panraanga .. :lol:
btw, when the majority of tamil cinema fans were seeing I teaser and vijay fans going gaga over Kaththi teaser, Simbu rendayum ippidi orey video-la kavuthuttaare ..
Feeling bad for this guy. Ivarukku apparam vandha Arya, Dhanush, Vishal, Vijay Sethupathy, Siva Karthikeyan ellaarum ivara overtake pannittaanga. Vandha pudhusa enga irundhaaro adhey edathula innum ukkaandhuttirukaaru. Matha hero ellaam saadharanama Hit kuduthu 6 maasam aachu, 1 varusham aachunnu solvaanga. Ivaru padam release aagiye 2 varusham aachu. Adhuvum out. Adhukku munnaadi vandha Osthiyum gaali. Idhula Gautam Menon padam postponed, Kettavan dropped vera. Enakku therinju rendu varusham munnaadi announce pannina padam Vettai Mannan. Indha gapla adhoda 2nd hero Jai oru anju padam pannirupaapla. Awardu padam kuduthaalaavadhu ivvalo periya gapla oru nyaayam irukku. He must be either too troublesome or too demanding for producers.
http://timesofindia.indiatimes.com/e...w/42394061.cms
intha ponnu maathiri thaan irukku
Haha.. Loved the last line of that article
If he was in relationship with that girl, what's wrong with kissing her? intha makkal valara innum kaalam irukku
டிசம்பர் 24ல் 'வாலு' ரிலீஸ்!
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு சிம்புவின் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த வருடம் டிசம்பர் 24ல் 'வாலு' படம் ரிலீஸ் ஆகிறது என்று சிம்பு ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.
2012 தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 13ல் சிம்பு நடித்த 'போடா போடி' படம் ரிலீஸ் ஆனது. அதற்குப் பிறகு சிம்பு ஹீரோவாக நடித்த எந்தப் படமும் ரிலீஸ் ஆகவில்லை. சிம்பு கௌரவத் தோற்றத்தில் நடித்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா', 'இங்க என்ன சொல்லுது' படங்கள் மட்டும் வெளிவந்தன.
'வேட்டை மன்னன்' , 'வாலு', 'இது நம்ம ஆளு', கௌதம் மேனன் இயக்கும் படம் என நான்கு படங்கள் சிம்புவின் வசம் உள்ளன. இதில் 'வாலு' படம் முதலில் ரிலீஸ் ஆக உள்ளது. அதற்கான டப்பிங் பணியில் சிம்பு தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
அறிமுக இயக்குநர் விஜய் சந்தர் 'வாலு' படத்தை இயக்குகிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். சந்தானம், விடிவி கணேஷ், பிரம்மானந்தம், 'ஆடுகளம்' நரேன், மந்த்ரா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
'' 'வாலு' படம் டிசம்பர் 24ல் ரிலீஸ் ஆகிறது. இதை ட்விட்டரில் டிரெண்டாக்கிய ரசிகர்களுக்கு நன்றி. கண் கலங்க வெச்சிட்டீங்க '' என்று சிம்பு ட்விட்டரில் ட்விட் செய்துள்ளார்.
@iam_str press note - #Vaalu postponed to February 2015, Will follow it up wit #IdhuNammaAalu as a mid summer treat!
Attachment 3752
you can watch latest tamil movies like pisaasu and kayal in HD quality at http://www.ytamil.com
check it out girls and guys
Vaalu-Darling Song Teaser
https://www.youtube.com/watch?v=tNauaUPbsPI&feature=youtu.be
https://pbs.twimg.com/profile_images...MK_normal.jpeg Sreedhar Pillai @sri50 · 26m 26 minutes ago
Happy Birthday @iam_str. Peppy number @MusicThaman. #Vaalu confirmed on Mar 27.
வாலு மீண்டும் ரிலீஸ் தேதி மாற்றம்!
சிம்பு - ஹன்சிகா நடிப்பில் பல வருடங்களாக வெளிவர காத்திருக்கும் திரைப்படம் வாலு. இப்படத்தினை விஜய் சந்தர் இயக்க தமன் இசையமைப்பில் நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் சக்கரவர்த்தி இப்படத்தினை தயாரித்துள்ளார்.
‘வாலு’ 2012ல் படம் தொடங்கப்பட்ட நாள் முதலே தீபாவளி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டு தீபாவளி கடந்தும் படம் மட்டும் வந்தபாடில்லை. படம் ட்ராப்பாகும் வாய்ப்பு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
http://cinema.vikatan.com/uploaded/c...photocat_2.jpg
படம் வெளிவராததற்கு பல்வேறு காரணங்களும் பல தடைகளும் ஏற்பட்டன என்று பல அறிக்கைகள் வெளியிட்டது ‘வாலு’ டீம். இறுதியில் படமும் முடிந்து வெளியிடுவதற்காக காத்திருக்கின்றது. தள்ளிக் கொண்டே சென்ற 'வாலு' படம் நேற்று (பிப்ரவரி 3) சிம்புவின் பிறந்த நாளுக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. இறுதியில் சிம்புவின் பிறந்தாளுக்காக ‘வாலு’ பாடல் டீஸர் மட்டும் முன் தினம் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் இம்மாத கடைசியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இறுதியில் ‘வாலு’ ரிலீஸ் தேதி சில நாட்கள் தள்ளப்பட்டு படம் மார்ச் 27ல் வெளியாகும் என்று படத்தின் இயக்குநர் விஜய் சந்தர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமான தெரிவித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் தினமும் டிரெண்ட் செட்டில் இருக்கும் அஜித் நடிக்கும் “என்னை அறிந்தால்” படம் வெளியாகவிருப்பதால் படம் தள்ளி வைத்திருக்கலாம் எனவும் இம்மாதம் ஏற்கனவே தனுஷின் ‘
MARCH- this time cleverly year not mentioned...
Attachment 4002
For the last two years, all that he has been doing is watching Ajith movies FDFS at Kasi
https://pbs.twimg.com/media/B_ygVUvVEAAKs4C.jpg
Ramesh @rameshlaus 3h3 hours ago Glad to know today is #VaaluCensorDay - Best wishes to @iam_str and @ihansika and their fans :-)
https://pbs.twimg.com/profile_images...ur_normal.jpeg Johnson PRO @johnsoncinepro · 12m 12 minutes ago
Congrats 2 #Vaalu team. Censor certifies 'U'. Releasing as a summer treat. @iam_str @ihansika @MusicThaman
“சிம்புவும் ஹன்சிகாவும் காதலிக்கிற மாதிரி நடிக்கலை!" வாலு பட இயக்குநர் விஜய் பேட்டி! - vikatan
''பொண்ணு அழகா இருக்காளேனு ஆசைப்படுறதுக்கு பேர் காதல் இல்லை; நம்ம வாழ்க்கையை அழகாக்குவானு நம்பவைக்கிறதுதான் காதல்’ - இப்படி படம் முழுக்க சிம்பு ஸ்பெஷல் பன்ச்தான். திரும்பிப் பார்த்தா சமீபத்தில் தமிழ் சினிமாவுல காதல் சினிமா வரவே இல்லை. சாப்பிட, தூங்க மறந்தாலும் காதலிக்க மறக்காதவங்க நாம. அதான் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் காதலும் காதல் சார்ந்த விஷயங்கள் மட்டுமே இருக்கணும்னு பிளான் பண்ணி அடிச்சிருக்கோம். செம வெயிட்டான காதல் பொக்கேவா படம் இருக்கும்'' - அடித்துப் பேசுகிறார் 'வாலு’ பட இயக்குநர் விஜய் சந்தர். பிரசித்திபெற்ற 'சிம்பு - ஹன்சிகா காதல்’ தருணங்களை உடன் இருந்து பார்த்தவர்.
http://img.vikatan.com/av/2014/12/ywqmdd/images/50.jpg
''டிரெய்லர் பரபர பட்டாசா இருந்துச்சுனு ஏகப்பட்ட லைக்ஸ், கமென்ட்ஸ். படம் அதைவிட சூடா இருக்கும். சிம்பு அடிப்பார்னு நினைக்கும்போது அடிக்கமாட்டார்; அடிக்க மாட்டார்னு நினைக்கும்போது அடி தூள் கிளப்புவார். ரொம்ப சிம்பிளா சொல்லணும்னா, கிட்டத்தட்ட ரஜினி சார் படம் மாதிரி இருக்கும். அந்த அளவுக்கு சிம்பு ஹீரோயிசம், காமெடி, ரொமான்ஸ், டான்ஸ், சென்ட்டிமென்ட்னு எல்லா ஏரியாவிலும் புகுந்து புறப்பட்டிருக்கோம். சிம்புவைப் பிடிக்காதவங்களுக்கும் இந்தப் படத்தில் அவரைப் பிடிக்கும்!''
http://img.vikatan.com/av/2014/12/yw...mages/p50b.jpg
''பில்ட்-அப் நல்லாத்தான் இருக்கு. ஆனா, அதுக்காக படம் ரிலீஸ் ரெண்டு வருஷமாவா தாமதம் ஆகும்?''
''நம்புங்க... அதுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் காரணம். கேமராவுக்கு முன்னாடியும் பின்னாடியும் ஏகப்பட்ட சிக்கல்கள். ஹைதராபாத் ரயில்வே ஸ்டேஷன்ல செட் போட்டு ஒருhttp://img.vikatan.com/av/2014/12/yw...mages/p50v.jpgமாஸ் ஃபைட் எடுக்கணும். கம்பிகளை உடைச்சு சண்டை நடக்கும். அதுக்கான திட்டம் என்ன, எங்கேலாம் பொக்லைன் பயன்படுத்துவாங்க, அடிவாங்குறவங்க எந்த அளவுக்குப் பறப்பாங்கனு மொத்த ப்ளூபிரின்ட்டும் கொடுத்து, ரயில்வேல அனுமதி வாங்கினோம். ஆனா, அந்த நேரம்தான் ஹைதராபாத்தில் குண்டு வெடிச்சது. அதனால மூணு மாசம் அனுமதி தரலை. வேற ரயில்வே ஸ்டேஷன்ல ஷூட் பண்ணலாம்னு சொன்னாங்க. ஆனா, படம் முழுக்க வரும் அந்த ஸ்டேஷன்லதான் சண்டைக் காட்சியும் இருக்கணும்னு காத்திருந்து படம்பிடிச்சோம். இப்போ ரஷ் பார்க்கிறப்போ அந்தக் காத்திருப்புக்கு அர்த்தம் இருக்குனு தோணுது. இப்படி பல காரணங்களால் பட ரிலீஸ் தாமதம் ஆச்சு. ஆனா, அதுக்காக மேக்கிங்ல எந்தச் சமரசமும் பண்ணிக்கலை!''
'''வாலு’ ஷூட்டிங்லதான் சிம்புவும் ஹன்சிகாவும் காதலிக்க ஆரம்பிச்சாங்க. ஆனா, படம் ரிலீஸ் ஆகுறதுக்குள்ள பிரிஞ்சிட்டாங்களே?''
''படத்துக்கு வெளியே எப்படினு தெரியலை. ஆனா, படத்துல சிம்புவும் ஹன்சிகாவும் நிஜமான காதலர்கள் மாதிரியே வாழ்ந்தாங்க. 'மேட் ஃபார் ஈச் அதர்’ ஜோடினு தைரியமா சொல்லலாம். மத்தபடி காதல், பிரிவு எல்லாம் அவங்க பெர்சனல். நிஜ வாழ்க்கையில் சிம்புவும் ஹன்சிகாவும் காதலிச்சுட்டு இருந்தப்ப படத்துக்காக காதல் காட்சிகளைப் படம் பிடிச்சுட்டு இருந்தோம். அதேமாதிரி நிஜத்தில் அவங்க பிரிஞ்சிருந்தப்ப, படத்திலும் எமோஷனல் காட்சிகளைப் படம்பிடிச்சுட்டு இருந்தோம். ஏதோ ஒருவிதத்தில் ரீலும் ரியலும் ஒரே அலைவரிசையில இருந்தது. நிஜத்துல சிம்புவும் ஹன்சிகாவும் திரும்ப சேர்வாங்களானு படம் பார்த்தா, உங்களுக்கே தெரியும்!''
''சிம்புவுடன் காதல் தோல்வியால் ஹன்சிகா இந்தப் படத்துக்கு கால்ஷீட் கொடுக்க முடியாதுனு சொல்லிட்டாங்கனு ஒரு தகவல் வந்ததே உண்மையா?''
''அப்படியெல்லாம் இல்லை. ஹன்சிகா ரொம்ப டெடிகேட்டிவ் ஆர்ட்டிஸ்ட். நான் முதல்முறை படம் பண்றேன்னு நிறையத் தடவை எனக்காக கால்ஷீட் தேதிகளை அட்ஜஸ்ட் பண்ணினாங்க. ஆனா, எதிர்பார்க்காத சிக்கல்களில் சிக்கிட்டு அடுத்தடுத்து படப்பிடிப்பு கேன்சல் ஆச்சு. அதனால ஹன்சிகா வேற படங்களில் நடிச்சுட்டு இருந்தப்ப, நாங்க எங்க படத்துக்காக தேதி கேட்டோம். அப்போ அவங்களால ஒருநாள்கூட ஒதுக்கித் தர முடியலை. 'என் கால்ஷீட் இருந்தப்பலாம் வேஸ்ட் பண்ணிட்டீங்க. ஆனா, நான் ஆசைப்பட்டாலும் இப்போ என்னால தேதி கொடுக்க முடியாது’னு சொல்லிட்டாங்க. அது ரொம்ப நியாயமான கோபம்தான். எனக்கும் கஷ்டமாத்தான் இருந்தது. ஆனா, அப்புறம் எப்படியோ தேதி அட்ஜஸ்ட் பண்ணி, பாங்காக்ல ஷூட் பண்ண டூயட்டுக்கு வந்து நடிச்சுக்கொடுத்தாங்க!''
http://img.vikatan.com/av/2014/12/yw...mages/p50a.jpg http://img.vikatan.com/av/2014/12/yw...mages/p52a.jpg''ரியல் காதல், பிரிவு பத்தி சிம்பு எதுவும் ஷேர் பண்ணிக்கிட்டாரா?''
''அவரின் முதல் காதலி சினிமாதாங்க. ஷூட்டிங் ஆரம்பிச்சுட்டா எல்லா கவலைகளையும் மறந்துட்டு செம ரேஸிங்ல இருப்பார். அந்த எனர்ஜிதான் சிம்பு ப்ளஸ். அதே எனர்ஜியோடு எல்லாரையும் கலாய்ப்பார். அவரோட அந்த ஜாலி கேலி தாங்காமதான், 'உயிரைக் கொடுத்து லவ் பண்றவனைப் பார்த்திருக்கேன்; ஆனா, உயிரை எடுத்து லவ் பண்றவனை இப்பத்தான் பார்க்கிறேன்’னு ஒரு பன்ச் பிடிச்சார் சந்தானம்!''
Yet Again....
நான் மன்னித்தாலும் அவர்களை கர்மா மன்னிக்காது - சிம்பு!
இரண்டு வருடங்களாக படங்களே இல்லாமல் இருந்த சிலம்பரசன் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ‘வாலு’. படத்தின் ரிலீஸ் மார்ச் 27 என அறிவிக்கப்பட்டு மீண்டும் மே 1ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
படத்திற்கு சென்சார் ‘யு’ சான்றிதழ் கொடுத்தும் கூட மீண்டும் சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் சற்றே சங்கடத்துடன் ட்வீட் செய்துள்ளார்.
http://cinema.vikatan.com/uploaded/s...-is-a-rage.jpg
’கடினமான காலம், நான் கடவுளிடம் சரணடைந்துவிட்டேன், சிலர் என் மீதுள்ள வெறுப்பு மற்றும் பொறாமை காரணமாக எதிர்மறையாக செயல்படுகிறார்கள், என்னை கிண்டல் செய்பவர்களை நான் மன்னித்தாலும், கர்மா மன்னிக்காது என ட்வீட் செய்துள்ளார்.
இதற்கு சிலர் சிம்புவின் படங்கள் ஏதும் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகாததை கிண்டலடித்து வருவதாகவும், அதற்காகவே இப்படி ஒரு ட்வீட்டை சிம்பு வெளியிட்டுள்ளார் எனவும் கோலிவுட்டின் நெருங்கிய வட்டங்கள் தெரிவித்துள்ளன.
New Release date MAY 9th ...
Attachment 4047