Originally Posted by
Gopal,S.
என்னதான் மாஞ்சு மாஞ்சு எழுதினாலும் ஒரு ஆவணம் தரும் உணர்வே தனி. இதன் பின் உள்ள உழைப்பு ,மேனகெடேல் இவை அசாத்திய ஒரு தனி மனித அர்பணிப்பு. பம்மலார், வாசு, வேந்தர் ஆகியோருக்கு என் வணக்கங்கள்.
ஒரு பழைய ஆவணம் ரசிப்பது ஒரு மோனலிசா,தாஜ் மஹால் அழகை பருகி கால யந்திரத்தில் பின்நோக்கி சென்று nastalgic உணர்வை அடையும் பரவசம். அதற்கு regress ஆகும் மனநிலை வேண்டும். அது சிவாஜி பக்தர்களின் சொத்து. ஏனென்றால் NT எல்லா காலங்களிலும் நடிப்பால் பயணித்தவர். நாம் அவர் கூட பயணித்தவர்கள்.
அதனால்தானோ என்னவோ, இந்த புதிய திரி ,என் பரவச நிலையை மேன்மையாக்கும் ஒன்றாகும்.