-
அன்பு இராகவேந்திரர்,
திரி தொடங்கியவர் - தங்களின் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்.
------------------------
'' பார்த்த'' சாரதியின் சடுதிவேகம் அசத்துகிறது.
ஆதிராம் அவர்கள், பிரபுராம் (p-r)) போன்ற முன்னோடிகளின் பதிவுகள் கண்டால் உற்சாகம் கூடுகிறது..
-
டியர் கண்ணன்,
தங்கள் ஆதரவிற்கு என் உளமார்ந்த நன்றி.
-
SIVAJI GANESAN FILMOGRAPHY SERIES
14. MANOHARA (TELUGU) மனோஹரா (தெலுங்கு)
15. MANOHAR (HINDI) மனோஹர் (ஹிந்தி)
http://v020o.popscreen.com/eGp1MXNuM...lugu-movie.jpg
RELEASED ON 03.06.1954
VIDEO FOR MANOHARA TELUGU MOVIE
http://youtu.be/ilqaPDbGBnw
-
நாங்களே கவனிக்கத் தவறிய காரியத்தை கவனித்து ரசிக வேந்தருக்கு மரியாதை செலுத்திய வினோத் சாருக்கு நன்றி!
-
நான் ரசித்த காட்சி. (தொடர்) 1
'மனோகரா'
http://i1087.photobucket.com/albums/...c1a4db2740.jpg
தாயின் ஆணைப்படி பாண்டியன் முத்துவிஜயன் மேல் போர் தொடுத்து, பகை முடித்து, களம் வென்று, பாண்டியனைக் கொன்று திரும்புகிறான் மனோகரன். இரவில் கூடாரத்தில் உறங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில் அவனை பழிதீர்க்க வருகிறாள் பாண்டியன் பெற்ற பைங்கிளி விஜயாள். அதுவும் ஆண்வேடம் தரித்து போர் வீரனாக. மஞ்சத்தில் துயில் கொண்டிருக்கும் காந்தர்வன் மனோகரனின் சுந்தர வதனத்தைக் காணுகிறாள். கொல்ல கத்தியை ஓங்கியவள் மனோகரனின் மனோகரமான ஒளி வீசும் அழகை கண்டு ஒருகணம் ஸ்தம்பித்து நிலைதடுமாறுகிறாள். பின் சுதாரித்து மறுபடியும் அவனைக் கொல்ல எத்தனிக்கையில், ஏதோ அரவம் கேட்க சட்டென அங்கு ஒளிந்து கொள்கிறாள். வஞ்சகி வசந்த சேனை மனோகரனைக் கொல்ல ஒரு கைக்கூலியை அதே இடத்திற்கு அனுப்ப அதைக் கவனித்து விடுகிறாள் விஜயாள். அந்த கைக்கூலி மனோகரனைக் கொல்ல முயல்கையில் தன்னையுமறியாமல் வீறிட்டு அலறுகிறாள் விஜயாள். கொல்ல வந்த கொடியவனோ விஜயாளின் அலறல் கேட்டு ஓடிவிடுகிறான். அலறல் கேட்டு கண் விழிக்கும் மனோகரனிடம் கத்தியுடன் கையும் களவுமாகப் பிடிபடுகிறாள் விஜயாள். அவளை ஆண் என்று முதலில் நினைக்கும் மனோகரன் "நீ யார்?" என்று வினவ அதற்கு விஜயாள்.தான் பாண்டிய நாட்டுபோர் வீரன் என்று பதிலுரைக்க அதற்கு மனோகரன்,
"பாதி ராத்திரியிலே பதுங்கிப் பாயும் பட்டாளப் பயிற்சிக்கு முத்து விஜய ஆட்சியிலே முதலிடம் போலும்"
என்று கேலி பேசுகிறான். விஜயாள் கோபமுற்று கத்தியை எடுக்க கத்தியின் கைப்பிடி விஜயாள் தலையில் உள்ள தலைப்பாகையில் பட்டு தலைப்பாகை கீழே விழ, கூந்தல் அதனால் அவிழ்ந்துவி(ழ)ட, அவள் பெண்ணென தெரிந்து விட மனோகரன் முகத்தில் காட்டும் அதிர்ச்சி!
"அற்புதமான காட்சி! வளையலேந்தும் கைகளிலே வாள்" என்று அதிர்கிறான் மனோகரன்.
"நீர் வீரரானால் என்னை ஜெயித்த பிறகு பேசும்" என்று பரிதாபமாக சவால் விடுகிறாள் விஜயாள்.
அதற்கு நம் மனோகரன் பதிலுரைப்பதைப் பாருங்கள்.
"வேல்விழி மாதரிடம் வீரர்கள் ஜெயித்தார்கள் என்பதற்கு சரித்திரமே கிடையாது இளவரசி!"
ஆஹா! அற்புதமான வசனம். அதைவிட அற்புதமான நடிப்பு. வீரத்தில் காதல் விளைந்த காட்சி. சோகத்திலும் காதல் மலர்ந்த காட்சி. பெண் என்றால் பேயும் இரங்கும்போது மனோகரன் எம்மாத்திரம்! பகைவனின் பெண்ணானாலும் பச்சாதாபம் கொள்கிறான். பச்சாதாபம் பாசமாக மாறுகிறது. அதுவே காதலாகிக் கனிகிறது.
மனோகரனாக நம் மனத்தைக் கவர்ந்தவர். கேட்கணுமா ஆர்ப்பாட்டத்திற்கு!
'மனோகரா' வில் நான் ரசித்த மகோன்னதமான காட்சி.
உங்களுக்கும் பிடிக்கும்தானே!
-
Mr Raghavendra Sir,
It is a really a Pokkisham in uploading the telegu version of Manohara
Mr Vasudevan Sir,
Not only this entire movie is a watchabale one.
-
வாசுதேவன் சார், சூப்பர், உண்மையிலே அதி அற்புதமான காட்சி. அதுவும் அவள் தலைப்பாகை விலகி பெண்ணென்று தெரிந்தவுடன் சட்டென்று பின்சென்று முகத்தில் காட்டும் வியப்பு,
nt ... You are really great ...
-
'நான் ரசித்த காட்சி' என்ற தலைப்பில் நடிகர் திலகத்தின் காவியங்களிலிருந்து தங்களுக்குப் பிடித்த காட்சியை நண்பர்கள் எழுதலாம். அதன் தொடக்கமாக முதல் பதிவாக மேற்கண்ட தலைப்பில் தொடர் தொடங்கியுள்ளேன். திரியின் நாயகர் அனுமதியையும், மற்ற நல்லுலங்களின் கருத்தினையும் நாடுகிறேன். நன்றி! நான் ரசித்த காட்சி என்று அவரவர்களும் தங்களுடைய பதிவுகளில் 1,2,3 என்று நெம்பர் போட்டுக் கொள்ளும்படி தாழ்மையுடன் வேண்டுகிறேன். நம் உறுப்பினர்கள் ரசித்த காட்சிகளை பின்னாளில் ஒன்றாகத் தொகுத்து அதை புத்தகமாகக் கூட வெளியிடலாம்.
-
நன்றி ராகவேந்திரன் சார்!
இந்த அதிர்ச்சிதானே நீங்கள் சொன்னது. இன்ப அதிர்ச்சியும் கூட.
http://i1087.photobucket.com/albums/...b1ca69832f.jpg
-
மூவாயிரம் பதிவுகள் காணுமுன்பே முத்தான வாழ்த்துக்கள் அளித்த சித்தூர் வாசுதேவனுக்கு என் அன்பு நன்றி!