http://i501.photobucket.com/albums/e...ps12bedb3e.jpg
Printable View
நடிகர் திலகம் அவர்களை மட்டுமே பெரியார் அவர்கள் ஒரு நல்ல கலைஞனாக ஒத்துக்கொண்டு பல சந்தர்பங்களில் பாராட்டியுள்ளார் !
தன்னுடைய கொள்கையிலிருந்து வேறுபட்டு எப்போது தங்களுடைய சொந்த நலனுக்காக தனியாக அண்ணா தலைமையில் திமுக உருவானதோ, அப்போதிலிருந்தே தந்தை பெரியார் அவர்கள் திமுகவின் தவறான போக்கை பலமுறை சாடியுள்ளார். உதாரணம் திமுகவின் ஹிந்தி எதிர்ப்பு ..!
நடிகர் திலகத்தின் நடிப்பு திறமை என்பது இந்த தந்தை பெரியாரையே அசைத்துபார்த்ததால் தானே இன்று முதல் நீ வெறும் கணேசன் அல்ல ...சிவாஜி கணேசன் என்று கூறி வாழ்த்தி அன்றுமுதல் கூத்தாடி என்று கூறுவதையே வெகுவாக தவிர்த்துவந்தார் ! உண்மையான புரட்சி என்பது இதுதான் !
பெரியார் நடிகர் திலகத்தை எவ்வாறு பாராட்டினார் என்று மையம் திரிக்கு வருகை தரும் மக்களுக்கும், நடிகர் திலகத்தை பற்றி பொறாமை கொண்ட கயவர்களால் தவறாக சித்தரிக்கப்பட்டு அதை உண்மையாக இருக்குமோ என்று எண்ணும் அனைத்து கால நண்பர்களும் இதை நிச்சயம் படித்து பார்த்தால் உண்மை விளங்கும்.
எது அசல் எது போலி என்று !
http://i501.photobucket.com/albums/e...psfdb01a0e.jpg
நடிகர் திலகத்தை "நடிப்பு களஞ்சியம்" என்று மனதார பாராட்டும் பெரியார் !
http://i501.photobucket.com/albums/e...psa68c5a29.jpg
முரளி சார்,
இப்போது நடந்து கொண்டிருக்கும் நீயா நானாவில் "தீவிர சிவாஜி ரசிகரா? நீயா நானாவில் கலந்து கொள்ள விருப்பமா? " என விளம்பரம் இட்டு ஒரு தொடர்பு எண் போட்டிருக்கிறார்கள் .. நம் நடிகர் திலகம் ரசிகர்களை வைத்து ஒரு நீயா நானா நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக தெரிகிறது .. நீங்கள் உட்பட தமிழகத்தில் இருக்கும் நம் உறுப்பினர்கள் நிச்சயம் இதில் கலந்து கொண்டு நம்மை பிரதிநிதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
Attachment 3423