http://i1065.photobucket.com/albums/...psdwgejvy6.jpg
Printable View
என் தெய்வம்-அம்ஜத்கான்
http://i1065.photobucket.com/albums/...psorl6lfoc.jpg
Page Filler Trivia : Nail biting habit!
நகம் கடிக்கும் பழக்கம்!! பக்க நிரப்பு பல்சுவை சேதி1
நமக்கு டென்ஷன் எகிறும்போது பெரும்பாலும் நகத்தைக் கடித்துத் துப்பிக் கொண்டிருப்போம்! இது ஒருவகையான பயம் கலந்த கூச்ச உணர்வே !!
https://in.images.search.yahoo.com/i...kaoi&fr=mcafee
இந்த உணர்வு பூர்வமான நடிப்பை ஒரு நளினம் கலந்து தெய்வமகன் படத்தில் கலக்கியிருப்பார் நடிக வேந்தர் !! தங்க பதுமை திரைப்படத்தில்நகத்தைக் குறித்து பாடியிருப்பார் !!
இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் மிகப் பிரபலமான நகக் கடிஞர் என்று படித்திருக்கிறோம்!
https://www.youtube.com/watch?v=xYORrd_6ZtU
https://www.youtube.com/watch?v=V_Ntwjckp6o
https://www.youtube.com/watch?v=-DY19Vp784Q
Gauravam song different style of video: http://youtu.be/-TGNctnJb-w
அருமை நண்பர் செந்தில்வேல் பதிவிட்டிருக்கும் ஒரு பருவ இதழில் வெளிவந்த கட்டுரையை படித்தபோது மனதில் மற்றொரு மின்னலடித்தது. நண்பர் பதிவிட்டிருந்தது 1993 -ம் ஆண்டு இறுதியில் கல்கத்தாவில் நடைபெற்ற திரைப்பட விழாவை துவக்கி வைக்க மத்திய அரசின் செய்தி மற்றும் ஒலிப்பரப்பு அமைச்சகம் நடிகர் திலகம் அவர்களை அழைக்க அதற்கு மேற்கு வங்க மாநில அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்திருந்தைப் பற்றியும் அதன் பிறகு நடந்த நிகழ்வுகளைப் பற்றியும் அதற்கு நமது தமிழ்த்திரையுலகமோ அல்லது தமிழக அரசோ எதுவும் செய்யவில்லை என்பதைப் பற்றிய பதிவு.
மேற்கு வங்க அமைச்சர் என்றதும் முதல் பாராவில் சொன்னது போல் மற்றொன்று நினைவிற்கு வந்தது. 1991-ம் ஆம் ஆண்டு. இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்) கட்சியின் சென்னை அலுவலகம் தி.நகரில் வைத்தியராமன் தெருவில் கட்டப்பட்டது. வைத்தியராமன் தெரு என்பது நமது செவாலியே சிவாஜி சாலையில் அன்னை இல்லத்தை தாண்டி சென்றால் வலது கைப் பக்கம் வரும் தெரு. [பாரதிய ஜனதாவின் தமிழ்நாட்டு தலைமை அலுவலகமான கமலாலயம் கூட அதே தெருவில்தான் அமைந்திருக்கிறது].
தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்பகால்ம் முதலே பாடுபட்டவரும் பின்னாட்களில் அதாவது 1964-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி பிளவுப்பட்டபோது மார்க்சிஸ்ட் கட்சி உதயமான போது கேரளத்தில் ஈ.எம்.எஸ், ஆந்திரத்தில் சுந்தரையா போன்றவர்கள் அதை முன்னெடுக்க தமிழகத்தில் அதன் தளகர்த்தவாக செயல்பட்டவருமான தோழர் பி. ராமமூர்த்தி அவர்கள் நினைவாக பி.ஆர். நினைவகம் என்று அந்த அலுவலகத்திற்கு பெயரிடப்பட்டது. அந்த மார்க்ஸிஸ்ட் கட்சி அலுவலகத்தை திறந்து வைக்க அழைக்கப்பட்டிருந்தவர் அன்றைய மேற்கு வங்க முதல்வராயிருந்த தோழர் ஜோதிபாசு அவர்கள்.
ஜோதிபாசு அவர்களைப் பற்றி பெரும்பாலானோர் அறிந்திருக்கக் கூடும். சுதந்திர இந்தியாவில் மிக நீண்ட காலம் ஒரு மாநிலத்தில் முதல்வர் பதவி வகித்த பெருமை உடையவர். 1977 ஜூன் முதல் 2000 நவம்பர் வரை முதல்வர் பதவி வகித்த அவர் ஐந்து (5) பொது தேர்தல்களை எதிர்கொண்டு அனைத்திலும் வெற்றி பெற்றவர். எந்த அனுதாப அலையிலும் ஜெயிக்காமல் தன் ஆட்சியின் மேன்மையால் மக்கள் ஆதரவைப் பெற்று ஜெயித்தவர். இன்னும் சொல்லப் போனால் 1991-ல் ராஜீவ் காந்தியின் படுகொலையால் எழுந்த அனுதாப அலையையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றவர்.
அவர் கட்சி அலுவலகத்தை திறக்க வருகை தரும் வேளையில் செவாலியே சிவாஜி சாலை வழியாக வருகிறார். அந்நேரம் அந்த தெருவில்தான் நடிகர் திலகம் அவர்களின் வீடு இருக்கிறது என்ற விவரம் ஜோதிபாசு அவர்களுக்கு சொல்லப்பட உடனே வண்டியை திருப்பி நேரே அன்னை இல்லத்திற்குள் செல்கிறார். ஜோதிபாசு அவர்கள் வந்திருக்கிறார் என்றவுடன் அனைவருக்கும் வியப்பு. நடிகர் திலகம் அவரை விரைந்து வந்து வரவேற்கிறார்.
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின் தான் வந்த விவரத்தை குறிப்பிட்டு கட்சி அலுவலக திறப்பு விழாவிற்கு நடிகர் திலகத்தையும் அழைக்கிறார் ஜோதிபாசு. நடிகர் திலகத்திற்கு ஒரே வியப்பு. நடப்பது கம்யூனிஸ்ட் கட்சி விழா அதில் தான் கலந்துக் கொள்வது சரியாக இருக்குமா என்று ஒரு சிந்தனை. இத்தனைக்கும் காலம் காலமாக கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்த காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் நடிகர் திலகம். ஆனால் ஜோதிபாசு அவர்களோ நடிகர் திலகத்தை தமிழ் கலாச்சாரத்தின் அடையாள சின்னமாக கருதி அவரையும் அழைத்துக் கொண்டு அந்த விழாவிற்கு சென்றார்
அரசு உயர் பதவி வகிப்பவர்கள் Protocol என்ற முறையை அனுசரிக்க வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டிருக்கும் அந்த பட்டியலில் குடியரசு தலைவர், பிரதமர், மாநில முதல் அமைச்சர் போன்ற பலரும் இடம் பெறுவார். இந்த Protocol -படி ஒரு மாநில முதல்வர் சட்டென்று ஒரு இடத்திற்கு சென்றுவிட முடியாது. ஆனால் அவற்றையெல்லாம் புறந்தள்ளி ஜோதிபாசு அவர்கள் நடிகர் திலகம் வீட்டிற்கு சென்றார் என்றால் அவர் நடிகர் திலகத்தை எந்த இடத்தில வைத்துப் பார்த்தார் என்பது தெளிவாகும்.
Protocol என்றதும் நினைவு வருகிறது. ஒரு மாநில முதல்வர் என்ன இந்தியப் பிரதமரே நடிகர் திலக்ம் வீடு தேடி வந்தாரே அதைப் பற்றி அடுத்த பதிவில்.
அன்புடன்
New Series on NT's Beard Connection : தாடி நடிப்பில் நாடி துடிப்பு
Part 3:திருவிளையாடல்/தேனடை தாடி
எல்லாம் தெரிந்த எம்பெருமானின் திருவிளையாடல்கள் நன்மை பயக்கும் விளைவுகள் வேண்டியே. தருமிக்கு உதவிட புலவர் திலகமாக வடிவெடுக்கும் சிவபெருமான் கம்பீரமான நடைக்கு கனம் கூட்டும் விதமாக ஒரு தேனடை போன்ற அடர்தாடி ஒட்டப்பில் வருகிறார். இந்தப் பாத்திரப் படைப்புக்கு உயிர் அளிக்கிறார் நடிகர்திலகம் மறக்கவே இயலாத காட்சியமைப்பில். பலநூறு முறை பார்த்து ரசித்ததுதான். ஆனால் இம்முறை அவருக்கு தாடி எவ்வளவு அற்புதமாகபொருந்தி அவர் நடிப்பின் வல்லமைக்கு மெருகு ஏற்றுகிறது என்பதே மையக்கரு!!Quote:
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா இல்லையா என்னும் விஞ்ஞான மெய்ஞான ஆராய்ச்சியில் எம்பெருமானையே பிராக்கெட் போட்டார் நக்கீரன் !!
அது கிடக்கட்டும்..... சிவபெருமானுக்கு மீசை உண்டா இல்லையா ...a Million Dollar Question?
தென்னிந்திய சிவனுக்கு மீசை உண்டு வட இந்திய சிவனுக்கு மீசை இல்லை ....another Million Dollar apprehension?
இந்த குழப்பத்தில் சிவபெருமானே தாடியும் வைத்துக்கொண்டு தி(தருமி)ருவிளையாடல் செய்வதை ரசிப்போமே ...
வெண்பஞ்சு தாடி வேந்தராக வரும் ஏ பி நாகராஜனும் அடர்ந்த தேன்கூடு தாடியில் வரும் நடிகர்திலகமும் ! நெற்றிக்கண்ணைத் திறந்ததும் வெளிப்படும்தீப்பொறியில் வெண்பஞ்சு பற்றி எரிந்து சாம்பலாகி விடுகிறதே !!
https://www.youtube.com/watch?v=ozgQLP3o6gY
விஸ்வநாத பிரதாப் சிங். அனைவருக்கும் புரியும்படி சொன்னால் வி.பி.சிங். உத்தர பிரதேசத்தில் ராஜ வம்சத்தில் பிறந்த இவர் அரசியலில் நுழைந்து காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றியவர். 1977 தேர்தலில் தோல்வியுற்ற பின் சிறிது காலம் அமைதியாக் இருந்து 1978-ல் காங்கிரஸ் (ஐ) என்ற அடையாளத்தோடு அன்னை இந்திரா அவர்கள் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட்டபோது அந்த இயக்கத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு பணியாற்றினார் வி.பி,சிங். சஞ்சய் காந்தி அவர்களுக்கு மிக நெருக்கமானவராக அறியப்பட்டார். 1980-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் பொறுப்பு ஏற்றார் இந்திரா. அதே வருடம் உத்தர பிரதேச சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சி அமைக்க முற்படும்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக சஞ்சய் காந்தி அவர்களை முதல்வராக தேர்ந்தெடுத்தனர். [சஞ்சய் காந்தி அந்நேரம் சட்டமன்ற உறுப்பினர் இல்லை. அவர் அமேதி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்] சஞ்சய் காந்தி அந்தப் பதவியை ஏற்க மறுத்து அதற்கு பதிலாக வி பி சிங் அவர்களை முதல்வராக்கினார். [இது நடந்து இரண்டு வாரத்தில் ஜூன் 23 அன்று டெல்லியில் விமான விபத்தில் சஞ்சய் காந்தி உயிரிழந்தார். அவர் உத்தர பிரதேச முதல்வராக பதவியேற்றிருந்தால் இந்த விபத்திலிருந்து தப்பித்திருக்கலாமே என்று கூட ஒரு சாரார் அந்த நேரத்தில் பேசினார்கள். எழுதினார்கள்]
முதல்வராக பணியாற்றியபோது அன்றைக்கு அரசுக்கு பெரும் சவாலாக இருந்த Armed Dacoits எனப்படும் ஆயுதமேந்திய கொள்ளைக்கூட்டங்களை தைரியமாக எதிர்கொண்டு அவர்களை அடக்கினார். அரசுக்கு எதிராக போராட முடியாமல் அப்பாவி கிராம மக்களை அந்த கொள்ளைக்கூட்டங்கள் கொன்று பழி வாங்கினர். 1982-ல் ஒரு கிராமத்தில் இது போன்ற ஒரு mass massacre நடக்க அதற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் பதவியை விட்டு விலகினார். அதன் பிறகு இந்திரா காந்தி அவர்களின் மத்திய அமைச்சரவையில் பணியாற்றிய வி பி சிங் இந்திரா அவர்களின் மறைவிற்கு பின் நடந்த 1984 பொது தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரான ராஜீவ் காந்தி அமைச்சரவையில் நிதி அமைச்சராக பொறுப்பேற்றார். அங்கே அவர் காட்டிய வீரமும் தீரமும் மெச்சப்பட வேண்டியவை. நிதி அமைச்சகத்தின் ஒரு பாகமான Enforcement Directorate என்ற அமைப்பிற்கு அவர் கொடுத்த அதிகாரத்தின் காரணமாகத்தான் அன்றைக்கு சரி இன்றைக்கும் சரி பெரும் தொழிலதிபர்களின் மீது நடவடிக்கை எடுக்க ஏதுவாக அமைந்தது
இதனால் அவர் தொழிலதிபர்களின் கோவத்திற்கு காரணமாக, ராஜீவ் இவரை பாதுகாப்பு துறை அமைச்சரவைக்கு மாற்றினார். அங்கே வைத்துதான் Bofors பீரங்கிகள் மற்றும் Submarines வாங்குவதில் நடைபெற்ற முறைகேடுகளை குறித்து விசாரிக்க தொடங்க அது அவர் அமைச்சர் பதவியை விட்டு விலகவும் பின் காங்கிரஸ் கட்சியிலிருந்தே விலகவும் காரணமாக அமைந்தது. ஜனமோர்ச்சா அமைப்பை அவர் தொடங்கியதும் பின்னர் அது ஜனதாதள் ஆக மாறியதும் 1989 -ல் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஜனதாதள் தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற, இந்திய அரசியலில் முதலும் கடைசியுமாக பாரதிய ஜனதாவும் இடது சாரிகளும் சேர்ந்து வி பி சிங் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்ததும் வரலாற்று நிகழ்வுகளாகும். [அந்த பொது தேர்தலுக்கு முன்னரே வி பி சிங் என்றாலே வருங்கால பிரதமர் சிங் என்றுதான் அர்த்தம் என பிரச்சாரம் செய்யப்பட்டது நினைவிற்கு வருகிறது].
இங்கே நமது தமிழகத்தில் நடிகர் திலகம் தான் நடத்திக் கொண்டிருந்த தமிழக முன்னேற்ற முன்னணி இயக்கத்தை ஜனதாதள் இயக்கத்தில் இணைக்க அதன் மூலம் தமிழக ஜனதாதள் தலைவராக நடிகர் திலகம் பொறுப்பேற்றார். அந்த பொறுப்பில் அவர் திறம்பட செயலாற்றிக் கொண்டிருக்கும்போதுதான் பிரதமராக இருந்த வி பி சிங் சென்னை வருகிறார். நடிகர் திலகம் அவரை தன் வீட்டிற்கு அழைக்க Protocol முறையை சுட்டிக்காட்டி அரசு அதிகாரிகள் தடை சொல்ல அதை புறந்தள்ளி விட்டு வி பி சிங் அன்னை இல்லத்திற்கு விஜயம் செய்தார்.
வி பி சிங் அவர்கள் அன்னை இல்லத்திற்கு விஜயம் செய்தபோது நண்பர் சந்திரசேகர் அவர்களும் உடனிருந்தார். அந்த சந்திப்பைப் பற்றி மேலதிக விவரங்களை அவர் அளிப்பார் என எதிர்பார்க்கிறேன்.
அரசு பொறுப்பில் இருப்பவர்களை கூட அவர்கள் வீட்டில் சென்று பார்க்காமல் இருந்தவர்கள், Protocol போன்றவற்றை தள்ளி வைத்துவிட்டு பாரதப் பிரதமர் பதவியிலிருந்தவர்களும் மாநில முதல்வர்களும் ஒருவர் வீட்டிற்கு செல்கிறார்கள் என்றால் அந்த கெளரவம் கிடைத்தது கலைத்தாயின் தலைமகன் கலையுலக முதல்வர் நமது நடிகர் திலகம் அவர்களுக்கு மட்டும்தான்.
வி பி சிங் அவர்களைப் பற்றியும் ஜோதிபாசு அவர்களைப் பற்றியும் விரிவாக இங்கே பதிவுகளில் குறிப்பிட காரணம் ஒன்று இருக்கிறது. நமது நாட்டில் பதவியில் இருந்தவர்கள் இருப்பவர்கள் பெரும்பாலானோர் அந்த பதவியை கெட்டியாக பிடித்துக் கொண்டு இறங்க மறுப்பார்கள். ஆனால் பதவியை துச்சமாக மதித்து தூக்கி எறிந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பதவியை பெரிதாக் எண்ணாமல் பதவி விலகிய நமது பெருந்தலைவரைப் போல் அதே பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்கள் வி பி சிங் அவர்களும் ஜோதிபாசு அவர்களும். அவர்களின் அரசியல் கருத்துகளோடு நிலைப்பாடுகளோடு நமக்கு முரண்பாடு இருக்கலாம். ஆனால் நேர்மையாளர்கள். அப்படிப்பட்ட நேர்மையை கடைப்பிடித்தவர்கள் அதே போன்று நேர்மையை கடைப்பிடித்த நடிகர் திலகம் அவர்களை தேடி வந்தார்கள் என்ற செய்தியை பதிவு செய்வதற்குத்தான் இத்துணை விளக்கமாக எழுத வேண்டி வந்தது. .
அன்புடன்
New Series on NT's Beard Connection : தாடி நடிப்பில் நாடி துடிப்பு
Part 4:வெண்தாடி வேந்தராக / எங்க ஊர் ராஜா, பாபு, காத்தவராயன்.........
Quote:
வாழ்வின் அந்திமப் பகுதி நெருங்கும்போது அதுவரை வாங்கிய அடிகளால் மனவலி, முதுமையின் அயர்ச்சி, மனப்பக்குவம்......மனிதனை பழுத்த பழமாக்குகிறது. பழுத்த மரம் கல்லடி வாங்கத்தானே செய்யும்!!
தென்னையைப் பெத்தா இளநீரு பிள்ளையைப் பெத்தா கண்ணீரு .....இந்த ஞானோதயத்தின் அடையாளமே வெண்தாடி!!
https://www.youtube.com/watch?v=gqIX9OQHxUU
Quote:
தனக்கு மிஞ்சியே தானமும் தர்மமும் .....தனது சுயபாதுகாப்புக்கு ஏதும் செய்யாது பாசவலையில் சிக்கி நாம் செய்யும் உதவிகள்....பெரும்பாலும் விழலுக்கு இறைத்த நீரே நமக்கு ஒரு தேவை வரும்போது நமக்கு கவனிப்பு இல்லையே ....கவலை வெண்தாடியில் முடிகிறதே!!
https://www.youtube.com/watch?v=EwmSnVZSfO8
[COLOR="#800080"]https://www.youtube.com/watch?v=FHZmebZDwQwQuote:
மீசை நரைத்து தாடி நுரைத்தாலும் ஆசை நரைத்து நுரைப்பதில்லையே!! வயது முதிர் தோற்றம் ஒரு பாதுகாப்பே!!