மைதிலி : புதிய சீரியலின் முன்னோட்டம்
தனியார் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. அந்த வரிசையில் கலைஞர் டி.வி.யில் புதிதாக இடம்பிடித்திருக்கும் சீரீயல் மைதிலி. மீடியா மாஸ்டர்ஸ் வழங்கும் இந்த சீரியலை ஸ்ரீதர் நாராயணன், விஜயா ஸ்ரீதர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். கதை- திரைக்கதை- இயக்கம் எம்.விஸ்வநாத். சீரியலின் கதைப்படி பொறுமையில் பூமியாகவும், கருணையில் வானமாகவும் வாழ்பவர் மைதிலி. தன் இளம் வயதில் சித்தியின் கொடுமையில் வளர்ந்தவர். ஏழை குடும்பத்தில் பிறந்து தன் கடின உழைப்பால் உயர்ந்தவன் ராம் பிரசாத். ஒரு சந்தர்ப்பத்தில் ராம் பிரசாத் கடத்தப்பட்டு, தன் சுய நினைவை இழக்கிறார். மைதிலி தான் கற்ற சங்கீதத்தின் மூலம் மிகப்பெரிய திரைப்பட பாகியாகிறார். தன்னை அவமானப்படுத்திய தன் குடும்பத்தை ஒரு தாயாய் தாங்குகிறார். தன் கணவன் ராம் பிரசாத்தை தேட ஆரம்பிக்கிறார். பழைய நினைவுகளை மறந்த ராம்பிரசாத், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா சென்று புதிய வாழ்க்கை*யை வாழ ஆரம்பிக்கிறான். இருவரும் மீண்டும் எப்படி சந்திக்கிறார்கள் என்பதுதான் மைதிலி சீரியலில் சீரீயஸ் கதையாம்.
சீரியலில் அஜய், சுஜிதா, வடிவுக்கரசி, சண்முக சுந்தரம், தீபா வெங்கட், ஓ.ஏ.கே.சுந்தர், கிரி, சிலோன் மனோகர், எல்.ஐ.சி.,நரசிம்மன், பாரதி கண்ணன், சிலானி, ஸ்ரீதர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சி.பாலமுருகன் வசனம் எழுதியிருக்கிறார். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 1.20 மணி முதல் 2 மணி வரை மைதிலியை கலைஞர் டி.வி.யில் காணலாம்.
http://cinema.dinamalar.com/DetailNe...ம்