naan oru vilayattu bommaiya (Papanasam Sivan)
Ragam: Navarasa kanada Papanasam sivan krithi
நான் ஒரு விளையாட்டு பொம்மையா ஜகன் நாயகியே உமையே
உந்தனுக்கு
நானிலத்தில் பல பிறவி எடுத்து திண்டாடினது போதாதா தேவி உந்தனுக்கு (நான்)
அருளமுதைப் பருக அம்மா அம்மா என்று அலறுவதைக் கேட்பதானந்தமா
ஒருபுகலின்றி உன் திருவடி அடைந்தேனே திருவுள்ளம் இறங்காதா தேவி உந்தனுக்கு (நான்)
http://www.youtube.com/watch?v=k3T5YKSkh1I
http://www.musicindiaonline.com/musi...s/composer.16/
Srinivasa Thiruvenkatamudaiyai (Papanasam Sivan)
Ragam: Hamsa Nandhi Papanasam sivan krithi
ஸ்ரீநிவாச திருவேங்கட முடையாய்
ஜெயகோவிந்த முகுந்தா அனந்தா
தீனஷரண்யன் எனும்பெயர் கொண்டாய்
தீனன் எனைப் போல் வேறெவர் கண்டாய் (ஸ்ரீனிவாச)
ஜகம்புகழும் ஏழுமலை மாயவனே
திருமகள் அலர்மேல் மங்கை மணாளனே
ஜகன்னாதா சங்கு சக்ர தரணே
திருவடிக்கபயம் அபயம் ஐயா (ஸ்ரீனிவாச)
http://www.musicindiaonline.com/musi...s/composer.16/
http://www.sendspace.com/file/dwypq8
enna thavam seithanai(Papanasam sivan)
Ragam: kaapi -- Papanasam sivan krithi
என்ன தவம் செய்தனை யசோதா எங்கும்நிறை பரப்ரம்மம்
அம்மா என்றழைக்க (என்ன தவம்)
ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையில் ஏந்தி சீராட்டி
பாலூட்டி தாலாட்ட நீ (என்ன தவம்)
ப்ரம்மனும் இந்த்ரனும் மனதில் பொறாமை கொள்ள
உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்சவைத்தாய் தாயே (என்ன தவம்)
ஸனகாதியர் தவ யோகம் செய்து வருந்தி
சாதித்ததை புனித மாதே எளிதில் பெற (என்ன தவம்)
http://www.youtube.com/watch?v=988uDoD1Ins
athirum kazal(Thirupugazh)
அதிருங் கழல் பணிந்து அடியேனுன்
அபயம் புகுவதென்று நிலைகாண
இதயந் தனிலிருந்து க்ருபையாகி
இடர்சங்கைகள் கலங்க அருள்வாயே
எதிரங் கொருவரின்றி நடமாடும்
இறைவன் தனது பங்கி லுமைபாகா
பதியெங் கிலுமிருந்து விளையாடிப்
பலகுன்றிலும் அமர்ந்த பெருமாளே.
http://www.kaumaram.com/thiru/nt0303.html
http://www.sendspace.com/file/pp9wxm
sung by MS