கலைக்கு சூரியன் உண்டு ,நட்சத்திரங்கள் ஏராளம்,
நிலவாக வந்தவன் நீ ஒருவனே,
தமிழர்கள் சராசரி வயதை நாற்பதிலிருந்து ஒரே நாளில்
இருபதாக்கிய விந்தை வாலிபனே,
உன்னுடன் சேர்ந்து எங்கள் மனமும் குதித்து பயிற்சி செய்து
இளமையாகி இளைத்து வண்ணமாக்கியது வாழ்வை.
கவலைகள் எங்கள் வீட்டு ஆணி சுவர்களில் , மகிழ்வு
மட்டுமே நீ வருகை தந்த கொட்டகையில்
எங்களுக்கு பாடம் சொல்ல ஆசிரியர்கள் மட்டுமே
இருந்த போது ,விடுமுறை நண்பன் நீ.
காதலிக்க நேரமில்லை என்ற முகவரி அட்டையுடன் வந்து,
நேரமிருந்த எங்களை காதலிக்க வைத்தாய்,
எங்கள் இதய கமலங்களில் குமரி பெண்கள்,அதே கண்கள்,
துள்ளி ஓடும் புள்ளி மான்களின் மீது,
நீ தண்ணீரை மட்டுமே குடித்திருந்தால், உன் நலத்தோடு,
எங்கள் நலமும் இன்னும் நீடித்திருக்குமே.
நீ தொலைத்தது உன் வாழ்வை மட்டுமா? எங்கள் இன்ப
நிலவு கண்டு மகிழ்ந்த மாலைகளையும்தான்.