அண்மையில் மெகா டி.வி.யில் நமது இதய வேந்தர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்கள் ஒரு தகவலை சொன்னார் பலர் கேட்டிருக்கக் கூடும். சிவந்த மண் படத்தில் இடம் பெற்ற ஒரு நாளிலே பாடலைப் பற்றிய தகவல். அந்த் பாடலை பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் முதலில் பாடி பின்னர் டி.எம்.எஸ். பாடி பதிவு செய்யப் பட்ட செய்தியைப் பற்றியது. இது தொடர்பாக என் நினைவிலுள்ள சில செய்திகளை பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.
இந்த செய்தி அந்தக் காலகட்டத்திலேயே ஒரு சினிமா இதழில் வெளிவந்தது, பொம்மை, பேசும்படம் போன்ற பிரபல இதழல்ல. அந்த இதழின் பெயர் நினைவில்லை என்றாலும் செய்தி நினைவிலுள்ளது. மெல்லிசை மன்னரிடமும் ஸ்ரீதரிடமும் நடிகர் திலகம் அவர்கள் இது பற்றி விவாதித்ததாக அந்த பத்திரிகையில் படித்த நினைவு. தமிழ் வார்த்தைகள் சிலவற்றின் பிரயோகத்தில் சில கருத்து வேறுபாடுகள் வந்ததாகவும், மேலும் டி.எம்.எஸ். அவர்களின் குரல் நடிகர் திலகத்தின் படங்களுக்கு பயன் படுத்தப் பட்டு வந்ததில் வினியோகஸ்தர்களின் பங்கு பெருமளவு இருந்ததாகவும் செய்தி. பாலமுரளி கிருஷ்ணா அவர்களைப் பற்றி நடிகர் திலகம் மிகமிக உயர்ந்த அளவில் மதிப்பு வைத்திருந்தார்கள். ஆனால் அந்தப் பாடல் பல தரப்பினரின் வற்புறுத்தல் காரணமாக மீண்டும் டி.எம்.எஸ். அவர்களின் குரலில் மீண்டும் பதிவு செய்யப் பட்டது. இதை சொல்ல காரணம் நடிகர் திலகம் மட்டுமே பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் பாடல் வேண்டாம் என்று சொன்னது போல் ஒரு கருத்து நிலவிவிடக் கூடாதே என்கின்ற காரணத்தால் தான். அந்த தமிழில் இருந்த சில பிரயோகங்களைப் பற்றிய கருத்தையே கவியரசர் கண்ணதாசன் அவர்கள் சுட்டிக் காட்டியதாகவும் அதன் பின்னரே இருவரும் சேர்ந்து மீண்டும் டி.எம்.எஸ். அவர்களைப் பாடவைத்ததாகவு்ம் அந்த பத்திரிகையில் செய்தி வெளிவந்திருந்தது.
அந்தப் பத்திரிகையின் பிரதியோ அல்லது பெயரோ நினைவில் இல்லை. இருந்திருந்தால் அதனை இப்போது இங்கே நாம் பதித்திருக்கலாம்.
அன்புடன்
ராகவேந்திரன்