-
அன்பு பம்மலார் சார்,
பிள்ளைக்கு தாய் பாசத்துடன் சோறு ஊட்டும் போது அளவு கடந்த அன்பினால் அந்தப் பிள்ளை பதிலுக்கு ஒரு முறையாவது தனது தாய்க்கு ஒருவாய் சோறு ஊட்டி மகிழ்வதைப் போல அள்ளி அள்ளித் தந்த தங்களுக்கு ஒருவாய் சோறு போல லிட்டில் மாஸ்டரைத் தந்தேன்.நீங்கள் பதிலுக்கு தாய் போல
மாணிக்கத்தைத் தந்து மகிழ்வூட்டி விட்டீர்கள். பல சவால்களை சமாளித்த திரியின் மாணிக்கமான தாங்கள் 'சவாலே சமாளி' மாணிக்கத்தைப் அடியேனுக்கு பரிசாக அளித்திருப்பது அழகு.
சிலை திறப்பு விழா பதிவுக்கான தங்கள் அன்புப் பாராட்டிற்கு மிக்க சந்தோஷமடைகிறேன்.
திருவிளையாடல் புரியும் நம் சிவபெருமானார் நிழற்படம் அம்சம். அழகாக அருள் பாலிக்கிறார். திருவிளையாடல் வீடியோக்களும் அருமை!
மொத்தப் பதிவுகளுக்கும் அன்பு நன்றிகள்.
-
டியர் வினோத் சார்,
வாழ்த்துக்கள். மக்கள் திலகம் திரி பாகம் இரண்டு இருநூறாவது பக்கத்தை தொட்டிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. அதுவும் தாங்கள் திரிக்கு வந்தது முதல் விர்ரென திரி ராக்கெட் வேகத்தில் பறக்க ஆரம்பித்து விட்டது. காணக்கிடைக்காத போட்டோக்களும், பல்வேறு அற்புத பதிவுகளும் தங்கள் மூலமாகவும், மக்கள் திலகத்தின் சாதனை விவரங்கள், விளம்பர கட்டிங்குகள் நண்பர் ராஜாராம் மூலமாகவும் திரி பெற்று வெற்றி பவனி வருகிறது.
திரியின் வெறிக்காக பாடுபட்டு வரும் தாங்கள், இருதிலகங்களின் ரசிகர்களும் ஒற்றுமையோடு செயல்பட்டு அந்த அற்புத மனிதர்களின் புகழை உலகம் முழுதும் பரவச் செய்யவேண்டும் என்ற உயரிய கொள்கையை கொண்ட நீங்கள் மென்மேலும் வெற்றிகளைக் குவித்து மக்கள் திலகம் திரியை மேலும் மெருகேற்றப் போவது உறுதி. திரியின் பங்களிப்பில் என்னையும் மறக்காமல் குறிப்பிட்டிருந்தது தங்கள் அன்பு உள்ளத்தைப் பறைசாற்றுகிறது. அதற்காக என் ஆத்மார்த்தமான நன்றிகள்.
-
http://i49.tinypic.com/s1p4ev.jpg
அன்புள்ள இனிய நண்பர் திரு . வாசு தேவன் சார்
தங்களின் பாராட்டுக்கு நன்றி . 1972 பொம்மை இதழிலிருந்து .... நடிகர் திலகம் கட்டுரை .. வசந்த மாளிகை பட செய்திகள் .... உங்கள் பார்வைக்கு .
அன்புடன்
esvee
-
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் : 9
நடிகர் திலகத்தின் 21வது காவியம்
முதல் தேதி [வெளியான தேதி : 12.3.1955]
பொக்கிஷாதி பொக்கிஷம்
முதல் வெளியீட்டு விளம்பரம் : தென்றல் திரை : 15.3.1955
http://i1110.photobucket.com/albums/...GEDC6168-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
-
டியர் esvee சார்,
"ஞான ஒளி" விளம்பரம், "பிரேம்நகர் & வசந்த மாளிகை" புகைப்படங்கள் மற்றும் செய்திகள், 'புதுமுகங்கள் வர வேண்டும்' என்ற நடிகர் திலகத்தின் கருத்துரை என ஆவண வரிசை அமர்க்களம்..! பாராட்டுக்கள்..!
[தேசிய திலகத்தின் கொடைக்கரம், யுத்த நிதிக்கு ரூ.10000/- அளித்துள்ள செய்தி ரியலி சூப்பர் நியூஸ்..!]
தொடர்ந்து தூள் கிளப்புங்கள்..!
அன்புடன்,
பம்மலார்.
-
"முதல் தேதி" சிறப்புப் பாடல்
கலைவாணரின் கலக்கல் குரலில்
'ஒண்ணுலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்...'
http://www.youtube.com/watch?v=7iyKReUPxNQ
பக்தியுடன்,
பம்மலார்.
-
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் அபரிமிதமான அன்பிற்கும், அளவு கடந்த பாசத்திற்கும் மீண்டும் மீண்டும் தலைவணங்குகிறேன்..!
தங்களின் குதூகலமான பாராட்டுக்கள் என் உள்ளத்தைக் குளிர்வித்தது. தங்களுக்கு எனது குளிர்ச்சியான நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
-
http://t1.gstatic.com/images?q=tbn:A...iEG5ZhxhS30rw1
அன்பு கார்த்திக் சார்,
1973-இல் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் விழாவை இத்தனை வருடங்கள் கழித்து புத்தம்புதிய பொலிவுடன் தங்கள் வர்ணனை மூலம் வெளுத்து வாங்கியுள்ளீர்கள்.தெளிந்த நீரோடை போன்ற எளிமையான தங்கள் நடை எளிய புரிதல் நடையிலேயே இருப்பதால் படிக்க அருமையாக உள்ளது. அதுவும் ஸ்டேடியத்தை நம்மவர் வலம் வந்த அழகை வர்ணித்திருப்பது தனிச் சிறப்பு. கட்டுரை படித்து முடித்தவுடன் ஏதோ அந்தக் காலத்தில் பயணித்தது போன்ற ஒர் உணர்வு. அற்புதமான வர்ணனைக் கட்டுரைக்கு மனமுவந்த பாராட்டுக்கள், நன்றிகள்.
-
டியர் ராகவேந்திரன் சார்,
நமது திரி நல்ல வரவேற்பை பெற்றுவருவதை தாங்கள் புள்ளிவிவரங்களுடன் பதிவுகளைத் தருவது மிக்க சந்தோஷமளிக்கிறது. தில்லானா மோகனாம்பாளின் நிழற்படங்களை சரியான நேரத்தில் பதிப்பித்து அசத்தி விட்டீர்கள். அன்பு பம்மலாரின் அளப்பரிய சேவைகளை தாங்கள் சுட்டி காட்டியுள்ளது நிச்சயமாக பாராட்டுக்குரியது. ஏற்றுக்கொள்ளக் கூடியதும் கூட. உங்கள் கருத்தை அப்படியே நான் வழிமொழிகிறேன்.
'திருவிளையாடல்' நூறாவது நாள் மற்றும் வெள்ளிவிழாக் கட்டிங்குகள் கண்களுக்கும், கருத்துக்கும் விருந்து.
'திருவிளையாடல்' கல்கி விமர்சனமும் அருமை.
-
டியர் வினோத் சார்,
நடிகர் திலகத்தின் 'ஞானஒளி' காவியம் தான் அவர் நடித்த காவியங்களிலேயே எனக்கு நெம்பர் 1.
அப்படிப்பட்ட காவியத்தின் பொம்மை இதழ் விளம்பர நிழற்படத்தைத் தந்து உள்ளம் குளிரச் செய்து விட்டீர்கள். அதற்காக என் வாழ்நாள் நன்றிகள் தங்களுக்கு.