http://i49.tinypic.com/n5kkkg.jpg
Printable View
பயத்தை போக்குவது எப்படி?
http://i47.tinypic.com/180hsx.jpg
முன்பு புரட்சி நடிகர் m.g.r நடித்த 'கலங்கரை விளக்கம்' என்ற சினிமாவில் கதாநாயகி சரோஜாதேவியைப் பார்த்து சொல்வார். பயம் என்பது 'சுவற்றில் ஒட்டிய சுண்ணாம்பு போல', பலமாக தட்டினால் பட்டென்று விழுந்துவிடும் என்பார். அது போல துணிச்சலுடன் எதிர் கொண்டால் பயத்தையும் வெல்லலாம். மனதில் தோன்றும் பயத்தை தடுமாற்றமின்றி, தன்னம்பிக்கை துணை கொண்டு, மன உறுதியுடன் செயல்பட்டால் பயத்தை வெல்வது நிச்சயம்.
MANI MAHAL, PEELAMEDU, COIMBATORE
http://i50.tinypic.com/2ia924l.jpg
கோவை டிலைட் திரை அரங்கில் ஒளி விளக்கு 17 நாட்கள் வசூல் 1,50,000.
இன்று முதல் பொள்ளாச்சி தங்கம் திரை அரங்கில் ரகசிய போலீஸ் 115.
தகவல் மக்கள் திலகத்தின் ரசிகர் திரு ஹரிதாஸ் அவர்கள்.
RAGASIYA POLICE 115- NON STOP SCREENING OF BHANDHULU'S MOVIE FROM 1968 ONWARDS .
NOW RUNNING AT POLLACHI - THANGAM
http://i1273.photobucket.com/albums/...6/52_2-2-1.jpg
THANKS FOR YOUR KIND INFORMATION ABOUT RAGASIYA POLICE AND OLIVILAKKU RECORDS
RAVICHANDRAN SIR.
hi jaisankar68 !
சர்வாதிகாரியின் தெலுங்கு வடிவம் தந்தமைக்கு நன்றி
சொந்தக்குரலில் இயல்பாக பேசி நடித்து இருப்பது :thumbsup::thumbsup:
http://i871.photobucket.com/albums/a...hikari1951.jpg
தெலுங்கு கன்னட மொழிகளில் அவரது திரைப்படங்களுக்கு வரவேற்பு இருந்த காரணத்தால்
அம்மொழிகளில் வெளியிடப்பட்டட போது அவரே பேசி நடித்தது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை
இன்னும் இது போல் அகப்பட்டால் மலையாளம் , இந்தி இன்னும் சிங்களத்தில் இருந்தாலும் லிங்க் தாருங்கள்
நன்றி
Regards
இந்த வாரம் அத்தனை எம்ஜிஆர் படங்களைப் பார்த்ததும், ஏற்கனவே தெரிந்திருந்த ஒன்று தீர்மானமானது.
சரோஜாதேவியே எம்ஜிஆருக்கு மிகப் பொருத்தமான ஜோடி. 'ஆயிரத்தில் ஒருவன்' மட்டும் விதிவிலக்கு.
பின்னாள் படங்களைப் பார்க்கையில் எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்குப் பலமா அல்லது ஜெ எம்ஜிஆருக்குப் பலமாக இருந்தாரா என்றக் கேள்வி அடிக்கடித் தோன்றியது.
பாடல் காட்சிகளில் சரோஜாதேவி சளைக்காமல் எம்ஜிஆரையே கணக்கு பண்ணுகிறார்! எம்ஜிஆர் பானுமதியிடம் பயந்து நடிக்கிறார். பத்மினி எம்ஜிஆர் படங்களில் அழகாக இருக்கிறார். சௌகார் ஜானகிக்கு அட்டகாசமான பாடல்கள் கிடைத்திருக்கின்றன. கேஆர்விஜயா ஜெயலலிதா இருவருடனும் எம்ஜிஆர் 'நெருங்கி' நடித்திருக்கிறார்.
வில்லன்களில் நம்பியாருக்குத் தனியிடம் கொடுத்திருக்கிறார்.
எம்ஜிஆரைப் போல் நடனமாட தமிழ்ச் சினிமாவில் யாரும் இல்லை. 'ஆடலுடன் பாடலைக் கேட்டு' போல் ஒரு வேக நடனக் காட்சியை நான் பார்த்ததில்லை என்றே நம்புகிறேன். விஜயலட்சுமியுடன் போட்டியாட்டம் சில நேரம் கேமரா ட்ரிக்கோ என்று நினைக்க வைத்தது. நடனத்தை ரசித்த இன்னும் சில பாடல்கள் 'பல்லவன் பல்லவி', 'நல்ல வேளை'.
ஜெமினி சிவாஜியைப் பார்க்கையில் எம்ஜிஆர், பாடலுக்கேற்ற உடையலங்காரத்தில் மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டிருக்கிறார். 'வனமேவும் ராஜகுமாரி' பாட்டில் ராஜேந்திரனுக்குத் துணைவரிகளைப் பாடுகிறார் என்றாலும் எம்ஜிஆரின் உடையும், நடன அசைவில் பெண் பாவனையும் மறக்கவே முடியவில்லை.
கேவிஎம் எம்ஜிஆருக்கு நிறைய ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். மிகவும் ரசித்த கேவிஎம் பாடல்கள்:'உன்னை அறிந்தால்', 'அழகுக்கு மறு பெயர்'. இரண்டு பாடல்களிலும் சவுன்டுக்கு ராஜன் சொக்க வைக்கிறார். எம்எஸ்வி எம்ஜிஆருக்கு உபரியாக உழைத்தார் என்றுச் சொல்வார்கள். உண்மைதானோ என்றுத் தோன்றியது. அனைத்து டூயட்களிலும் டிஎம்எஸ்-சுசீலா அனுபவித்துப் பாடியிருக்கிறார்கள். 'தஞ்சாவூரு சீமையிலே', 'நாங்க புதுசா' பாடல்களில் சுசீலா டிஎம்ஸை லபக் என்று விழுங்கியிருக்கிறார்.
சற்றும் எதிர்பாராமல் ரசித்த படம்: பெற்றால் தான் பிள்ளையா.
எம்ஜிஆர் டூயட்களில் நிறைய 'சிப்பி/முத்து' உவமை வருகிறது. அதற்கு ஏற்ற நடன அசைவுகள் தணிக்கைக்குத் தப்பியது ஆச்சரியம். மிகவும் ரசித்த டூயட்கள்: 'பாட்டு வரும்', 'நாணமோ'. விடாமல் திருப்பித் திருப்பிப் போட்டுப் பார்த்த டூயட்: 'வளர்வது கண்ணுக்குத் தெரியலே'.
தனிப்பாடல்களில் 'ஒரு கை பார்ப்பேன்' என்ற பொருள் அடிக்கடி வருகிறது. 'உலகம் பிறந்தது எனக்காக' 'நான் உங்கள் வீட்டுப் பிள்ளை' 'வெற்றி மீது வெற்றி' என எம்ஜிஆருக்கு அமைந்தாற்போல் கொள்கை/தனிப்பாடல்கள் பிறருக்கு அமையாதது ஆச்சரியம். பார்த்ததில் மிகவும் ரசித்தத் தனிப்பாடல்கள்: 'போயும் போயும்', 'தைரியமாகச் சொல்'.
கணக்கில்லாமல் எம்ஜிஆர் படம், பாட்டு, நட்புடன் அரட்டை என நாட்கள் போனதே தெரியவில்லை. நண்பரை நானும், இந்த விழாவை அவரும், எங்கள் மரணம் வரை மறக்கப் போவதில்லை
courtesy. Makkal thilagam fan from net-appadurai
தில்லையாடி சிவராமன்
பூமியை வெட்டித் தங்கத்தைப் புதைத்தோம்!
யானைக்கு ஒரு குணம் உண்டு. தன்னுடைய காதில் எறும்பைவிட நினைத்ததவனையும் நினைவில் வைத்திருக்கும். தன் நேசத்துக்குரிய கரும்பைக்கொடுத்தவனையும் நினைவில் வைத்திருக்கும். இந்த யானை குணம், இதிகாசத் தலைவன் எம்.ஜி.ஆருக்கும் பொருந்தும்.
அதனால்தான் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் மறைந்தபோது, “யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்!” என்றும்;
“இதுவரை பூமியை வெட்டித்தான் தங்கத்தை எடுத்தோம். ஆனால் இன்று பூமியை வெட்டி தங்கத்தை அல்லவா புதைக்கிறோம்!” என்றெல்லாம் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரைப் பற்றியே இதய வெளிப்பாட்டை எழுதிக் காட்டினார்கள் அறிஞர் பெருமக்கள்.
பொன்மனச் செம்மலின் யானை பலத்திற்கும், குணத்திற்கும் எடுத்துக்காட்டாய் நிகழ்ந்த நிகழ்வு இது.
அறுபதுகள் வரைமக்கள் திலகம் எம்.ஜி.ஆர் வெள்ளித் திரையில் மட்டுமல்லாமல் நாடக மேடைகளிலும் மின்னிக் கொண்டிருந்தார்.
அன்று தஞ்சை அரண்மனைத் தோட்டத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ‘இன்பக்கனவு’ நாடகம் நடந்துக் கொண்டிருக்கிறது அந்ந நாடக்க் குழுவிற்கு மட்டுமல்லாமல், மக்கள் திலகத்தின் அனைத்துக்ச் செயல்களுக்கும் ஆதாரமாக விளங்கியவர் ஆர்.எம். வீரப்பன் அவர்கள்.
திருவாரூரில் மக்கள் திலகத்தின் நாடகத்தை நடத்த, ஆர்.எம். வீரப்பனிடம், தேதி கேட்டு வருகிறார் தில்லையாடி சிவராமன் என்பவர். ஆர்.எம். வீ. அவர்கள் புரட்சித் தலைவரிடம் விஷயத்தைக் கூற, புரடிச்த்தலைவரும் சந்தோசமாக தேதி தருகிறார். நாடகத்திற்கென்று சல்லிகாசு வேண்டாம். போக்குவரத்து செலவு மட்டும் போதும் என்ற நிபந்தனையுடன் இதைக்கேட்டதும்,
ஆம்.எம்.வீக்கு மட்டுமல்ல தில்லையாடி சிவராமனுக்கும் அதிர்ச்சி. காரணம், வெளியூர் நாடகங்களுக்கு எம்.ஜி.ஆர் நாடக மன்றம் எட்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தது. அந்த வேளையில் நமக்குப் போக்குவரத்துச் செலவு மட்டும் கொடுத்தால் போதுமென்று சொல்லியிருக்கிறாரே மக்கள் திலகம். எப்படியோ தேதிகிடைத்துவிட்டதுஸ இதற்கான காரணத்தைக் கண்டுகொள்ளமுயற்சிக்கும் நேரமல்ல இது என்று அவசர அவசரமாக, ஆனந்தத்துடன் ஐநூறு ரூபாயை அட்வான்சாக ஆர்.எம்.வீ அவர்களிடம் கொடுக்கிறார் தில்லையாடி சிவராமன்.
இருந்தும், இந்த இன்பச் சலுகையைத் தனக்கு மட்டும்மக்கள் திலகம் அளித்ததற்கான காரணத்தைத் தேடுகிறார் தில்லையாடி. பிறகுதான் தெரியவருகிறது தில்லையாடி சிவராமனுக்கு.
‘இசை மணி’ என்றும் ‘இசை ஞானச் செம்மல்’ என்றும் கர்னாடக இசையுலகில் போற்றுவதற்குரியவராகத் திகழ்ந்தவர் தஞ்சையைச் சேர்ந்த இந்தத் தில்லையாடி சிவராமன். இன்றைய முதல்வர் கலைஞர் அவர்க்கின் அன்பையும், எம்.கே. தியாகராஜ பாகவதரின் நேசத்தையும் நிறைவாகப்பெற்று யிருந்தவர் என்பது ஊரறிந்த உண்மை.
ஒருசமயம் லாயிட்ஸ் ரோடு, முத்து முதலி தெருவில் உள்ள வீட்டில்மக்கள் திலகம் தங்கியிருந்த போது, அவரது நாடக் குழுவில் பாடுவதற்காக, டி.எஸ். துரைராஜ் மூலம் தில்லையாடி சிவராமன் வரவழைக்கப்பட்டார்.
தனது கம்பீரமான குரலில் பாடி மக்கள் திலகத்தைப் பரவசப்படுத்துகிறார் சிவராமன். அவரை ஒருநிமிடம் இருக்கச்சொல்லிவிட்டு உள் அறைக்ககுச் செல்கிறார் மக்கள் திலகம். அந்த நேரம்பார்த்து, அங்கு வேலை செய்யும் பசுபதி, தில்லையாடி சிவராமனை டீ சாப்பிட வெளியே அழைத்துச் சென்று, “இப்பொழுது எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பாடிக்கொண்டிருக்கிறார். இந்த வருமானத்தை வைத்துத்தான் அவர் தன்னுடைய ஐந்து குழந்தைகளையும் காப்பாற்றி வருகிறார். அவர் பிழைப்பில் நீங்கள் ஏன் மண் அள்ளிப்போடுகிறார்கள்?” என்று தில்லையாடி சிவராமனிடம் கேட்கிறார். அவ்வளவுதான்! தில்லையாடி அவர்கள் டீ சாப்பிட்ட கையோடு திரும்பிக் கூடப்பார்க்காமல் அப்படியேதன் வீடு வந்து சேர்ந்துவிட்டார்.
உள்ளே சென்ற வள்ளல்திரும்பி வந்தபோது தில்லையாடி சிவராமன் அங்கு இல்லை. பிறகுதான் தெரிய வருகிறது. தில்லையாடி சிவராமனின் இந்த மனித நேயம். மக்கள் திலகத்தின் மனதில் அப்படியே கல்வெட்டாய்ப் பதிவாகிப் போகிறார் தில்லையாடி சிவராமன்.
தில்லையாடி சிவராமனின் இந்த மனிதநேயத்தை மறக்காமல்நினைவல் வைத்துத்தான் இந்தச் சலுகை அளித்து கௌரவிக்க நினைத்திருக்கிறார் மக்கள் திலகம்.
திருவாரூர் முழுவதும் தெருத்தெருவாக, ‘தங்கவாள் பரிசு பெற்ற நாடோடி மன்னன் எம்.ஜி.ஆர் நடிக்கும் ‘இன்பக்கனவு’ நாடகம் என்று பெரிய அளவில் விளம்பரம் செய்கிறார் தில்லையாடி சிவராமன். அன்று, திருவாரூர் முழுவதும் மற்றும் திருவாரூரிலிருந்து வெளியூருக்குச் செல்லும், சக்தி விலாஸ் பஸ் கம்பெனியின் 150 பேருந்துகளிலும், இன்பக் கனவு நாடக விளம்பரம் காணப்படுகிறது.நாடகம் நடப்பதற்குச் சில தினங்களுக்கு முன், திருவாரூர் ஜமானுதீன் அச்சகத்தில் தன் நேசத்துக்குரிய கலைஞர் அவர்களைச் சந்திக்கிறார் தில்லையாடி சிவராமன். அப்பொழுது தில்லையாடி மீதுகலைஞர் வைத்திருக்கும் அன்பின் மிகுதியால், “இந்த ஊர்ல நாடகம் போட்டு உன்னை லாபத்தோடு அனுப்ப மாட்டாங்க…” என்று அந்த ஊரில் நிலவரம் குறித்து, தில்லையாடி சிவராமனிடம் சொல்லியிருக்கிறார் கலைஞர். ஆனாலும் நம்பிக்கையுடன் செயல்படுகிறார் தில்லையாடி.
அதிகாலையில் ப்ளைமவுத் காரில், திருவாரூர் வந்து சேர்கிறார் மக்கள் திலகம். கலைஞர் எச்சரித்துச் சொன்னது போலவே ‘புளிச்சகுடி கருணாநிதி’ என்பவரின் மிரட்டலால், சர்மா பங்களாவில் தங்கவேண்டிய மக்கள் திலகத்தை, பழக்கடை ராஜன் வீட்டில்தங்க வைக்கிறார் தில்லையாடி.
அது மட்டுமல்லாமல், நாடகம் துவங்குவதற்கு முன் புளிச்சக்குடி கருணாநிதி கலாட்டா செய்கிறார். தஞ்சை டி.எஸ்.பி. குழந்தைவேலு நிலைமையைக் கட்டுப்படுத்திகிறார்.
நடந்தது எதுவுமே மக்கள் திலகத்துக்குத் தெரியாமலேயே ‘இன்பக்கனவு’ நாடகம் முடிகிறது.
திருவாரூரில் நாடகம் முடிந்து ஒரு வாரம் கழித்து, சீர்காழியில்மக்கள் திலகத்தின் ‘அட்வகேட் அமரன்ய நாடகம் நடக்கிறது. அந்த நாடகத்தைப்பார்க்கத் தில்லையாடி சிவராமனும் செல்கிறார். தான் அமர்ந்திருந்த சேரில் சீர்காழி எம்.எல்.ஏ முத்தையாவை உட்கார வைத்துவிட்டு, தில்லையாடி சிவராமன் மேடைக்கே சென்று விடுகிறார்.
ஒரு காட்சியில் 250 பவுண்டு எடையுள்ள குண்டுமணியை அலேக்காகத் தூக்கிக் கீழே போடும் பொழுது, தவறித் தன் காலிலேயே அவரைப் போட்டுக்கொண்டு விடுகிறார். எழுந்து நிற்க முடியாத அளவுக்கு வள்ளலின் கால் எலும்பு முறிந்து விடுகிறது. உடனே தில்லையாடி சிவராமன், டாக்டர் சம்பத்திடம் அழைத்துச் சென்று முதலுதவி அளித்து, மக்கள் திலகத்தை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்.
சென்னையிலும் சில மாதங்களாக சிகிச்சை தொடர்கிறது. செய்தி அறிந்த தில்லையாடி சிவராமன், ‘சிங்கப்பூர் ஷா பிரதர்ஸ்’ மூலம் ‘அட்ஜஸ்பல் க்ரட்சர்’ ஒன்றை ஆர்டர் செய்து, அதை குமாரசாமி மூலம் மக்கள் திலகத்திற்குக்கொடுத்தனுப்பி இருக்கிறார். தில்லையாடி அவர்கள்தான் இதை வாங்கி அனுப்பினார். என்று விவரம் தெரியாத மக்கள் திலகம், ஷா பிரதர்ஸிக்கு நன்றிக் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
சில நாட்களுக்குப்பிறகுதான் இதை வாங்கிக்கொடுத்தவர் தில்லையாடி என்றும், அதற்கு விலையாக ஷா பிரதர்ஸிடம் வாங்கிக் கொடுத்த நண்பருக்குப் பத்து மூட்டை நெல் கொடுத்ததாகவும் தெரிய வருகிறது மக்கள் திலகத்துக்கு!
இந்த உண்மை தெரிந்த அடுத்த நிமிடமே தில்லையாடி சிவராமனை கௌரவப்படுத்தி நன்றி தெரிவிக்கு, தன் லாயிட்ஸ் ரோடு இல்லத்திற்கு அழைத்து வரக்கார் அனுப்புகிறார் எம்.ஜி.ஆர் வரும் வழியில்தான் மக்கள் திலகம் அழைத்த காரணம் தில்லையாடி சிவராமனுக்குப் புரிகிறது.
மக்கள்திலகம் வாசலில் கார் நின்றது. காரில் இருந்தவாறே வெளியில் எட்டிப்பார்க்கிறார் தில்லையாடி. அங்கே ஹாலில் அண்ணா, சி.பி. சிற்றரசு, நடிகை சரோஜாதேவி ஆகியோர் அமர்ந்திருக்கிறார்கள் அவர்களைப் பார்த்தவுடன் தில்லையாடிக்குக் கூச்சம்…. மக்கள் திலகத்தின் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக ’150 ரூபாய் விலை மதிப்புள்ள பொருள் வாங்கிக் கொடுத்ததற்காக அதற்கு விலையாக வெகுமதி பெறுவதா?’ என்று நினைத்த தில்லையாடி, காரைவிட்டு இறங்கியவுடன், மக்கள் திலகத்தின் வீட்டிற்குள் செல்லாமல், இரண்டாவது முறையும் தன் வீடு வந்து சேர்ந்துவிடுகிறார்
இப்படிப் பலமுறை தில்லையாடி சிவராமனின் உயர்ந்த பண்பைப்பாராட்டி, வாரிக் கொடுத்து மகிழ, தில்லையாடியைத் துரத்தி துரத்திப் பின் தொடர்கிறார் மக்கள் திலகம்.
ஆனால் மக்கள்திலகம் நிறைந்திருப்பதே போதும் என்று விலகி விலகிச்செல்கிறார் சிவராமன்.
சில ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ர் தமிழக முதல்வரான பிறகு, ஒருமுறை பூம்புகார் விருந்தினர் மாளிகையில் தங்கி இருக்கிறார். அப்பொழுது தில்லையாடியிலிருந்து பொறையார் வழியாகத் திருவாரூர் செல்ல பஸ் ரூட் வேண்டி- மனு ஒன்றை மக்கள் திலகத்திடம் சேர்க்கச் சொல்லி, அன்றைய எம்.எல்.ஏ வான விஜயராகவன்மூலம் கொடுத்தனுப்புகிறார் தில்லையாடி சிவராமன்.
மனுவைப்பார்த்த மக்கள் திலகம், அந்த நிமிடமே மாலைக்குள் பஸ்ரூட் விட உத்தரவு பிறப்பிக்கிறார்.http://i49.tinypic.com/2uol3d1.jpg
காலையில்மனுக்கொடுத்துவிட்டு, அதைப் பற்றிய நினைவே இல்லாமல் டீக்கடையில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருக்கிறார் தில்லையாடி சிவராமன். மாட்டு வண்டிகளும், சைக்கிள்களும் மட்டுமே சென்று கொண்டிருந்த அந்த ரோட்டில், பஸ் வந்து கொண்டிருந்ததை பார்த்து, சந்தோஷத்தல் திக்குமுக்காடிப் போகிறார் தில்லையாடி. அது மட்டுமில்லாமல் மறுநாள் வந்த தபாலில் உத்தரவு பிறப்பித்த நகலில் ‘காப்பி டூ சீப் என்ஜினியர், காப்பி டூ ஆர்.டி.ஓ. ‘காப்பி டூ தில்லையாடி சிவராமன்’ என்று வேறு குறிப்பிட்டுக் கௌரவித்து இருந்தது வேறு அவரை மகிழ்ச்சியின் உச்சிக்கே கொண்டு சென்றது.
அன்று மக்கள் திலகத்திடம் பொன்னோ, பொருளோ பெற்றிருந்தால், ஒருமந்திரியின் மனுவுக்குக்கிடைத்திருக்கும் மரியாதை தனக்குக் கிடைத்திருக்குமா என்று இன்னமும், மறைந்தும் மறையாமல் மக்கள் மனங்களில் குடியிருக்கும் மக்கள் திலகத்தை எண்ணி எண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கிறார் தில்லையாடி சிவராமன்.
Courtsy; puratchi nadigar .com
புரட்சித்தலைவரின் மனிதநேயம்:
1977 இல் எம்.ஜி.ஆர் தேர்தலில் நின்று வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவி ஏற்றிருந்த சமயம். எம்.ஜி.ஆருக்கு எல்லா மட்டங்களிலும் ரசிகர்கள் உண்டு. எம்.ஜி.ஆரின் உயர்மட்ட விசிறிகளில் குறிப்பிடத்தக்கவர் கர்நாடக மாநிலத்தில் அப்போது முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குண்டுராவ்.
பெங்களூரில் உள்ள தன் வீட்டுக்கு வரவேண்டும் என்று குண்டுராவ் எப்போதும் அழைத்துக்கொண்டே இருப்பார். குண்டுராவின் பிறந்த நாளன்று, பெங்களூருக்கு நேரில் சென்று, அவரை வாழ்த்தவேண்டும் என்று முடிவு செய்தார் எம்.ஜி.ஆர்.
பிற்பகலில் tmx 4777 என்ற எண்ணுள்ள பச்சை அம்பாசிடர் காரில் கிளம்பினார் எம்.ஜி.ஆர். அவருடன், அவரது மனைவி ஜானகி அம்மா, ஜானகி அம்மாவின் சகோதரர் நாராயணனின் மகள் லதா இருவரும் வந்தனர். மற்றொரு வேனில் நாங்கள் அவர் வண்டியை பின்தொடர்ந்தோம்.
பெங்களூரை அடைந்ததும் எம்.ஜி.ஆரும், அவரது குடும்பத்தினரும் அங்கு 'வெஸ்ட் எண்ட்' என்கிற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கினர். நாங்கள் அதற்க்கு அருகே வேறொரு ஹோட்டலில் தங்கினோம்.
மறுநாள் காலை ஒன்பது மணிக்கு கர்நாடக முதல்வர் குண்டுராவ் வீட்டுக்கு சென்றோம். பெரிய பார்சல் ஒன்றை அவருக்கு பரிசாக அளித்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் உதவியாளர் ஐ.ஏ.எஸ் அதிகாரி பரமசிவம், செக்யுரிட்டி ஆபிசர் கண்ணுசாமி உடன் இருந்தனர். பால் பாயாசத்தோடு எங்கள் அனைவருக்கும் நன்றாக சைவ சாப்பாடு அளிக்கப்பட்டது. சாஷ்டாங்கமாக எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து நமஸ்கரித்தார் குண்டு ராவ். அவரை மனதார வாழ்த்தினார் எம்.ஜி.ஆர்.
பத்து மணிக்கு மேல் அங்கிருந்து கிளம்பினோம். அப்போது எம்.ஜி.ஆர் தான் வரும் அம்பாசிடர் காரில் என்னை வரச் சொன்னார். 11 மணிக்கு மேல் ஓசூர் வரும்போது நல்ல வெயில். காரில் பயணம் செய்யும்போது எம்.கே.தியாகராஜ பாகவதர் படிய பாடல்களை எப்போதும் ரசித்துக் கேட்பார் எம்.ஜி.ஆர்.
ஓசூர் தாண்டியிருப்போம். இடது பக்கம் நெடுஞ்சாலை ஓரத்தில் வயதான கிழவி மற்றும் பத்து வயது சிறுமி இருவரும் தலையில் பெரிய புல்கட்டை சுமந்தவாறே காலில் செருப்பு இல்லாமல் வெயிலில் தவித்துக் கொண்டிருந்தனர். கொஞ்ச நேரம் நடந்து, பிறகு வெயிலுக்காக ஓரமாக நின்று மீண்டும் நடை.
'ராமசாமி, காரை நிப்பாட்டு...' என்று டிரைவர் ராமசாமியிடம் சொன்னார் எம்.ஜி.ஆர். 'ராமு, போய் அவங்களை விசாரித்துவிட்டு வா...' என்றார் என்னிடம். ராமகிருஷ்ணன் என்ற என் பெயரை பல நேரத்தில் 'ராமு' என்று சுருக்கியே அவர் கூப்பிடுவார்.
'கால் சுடுதய்யா நிற்கிறோம்...' என்றார் அந்தக் கிழவி. 'தூரத்திலிருந்து புல்லை அறுத்து, கட்டி சுமந்து சென்று விற்றால் தலைச்சுமைக்கு பன்னிரெண்டு அணா கிடைக்கும்...' என்றார். எம்.ஜி.ஆரிடம் சொன்னேன்.
தன் மனைவி ஜானகி அம்மா, லதா இருவரிடம் அவர்கள் அணிந்திருந்த செருப்புகளைக் கழற்றச் சொன்னார். காரில் பயணம் செய்யும்போது எப்போதும் ஒரு கருப்பு பேட்டியில் பணம் வைத்திருப்பார். அதிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து, 'அவர்களிடம் கொடு...' என்றார்.
இரு ஜோடி செருப்புகளையும் எடுத்துக் கொண்டுபோய் அவர்களிடம் கொடுத்து, எம்.ஜி.ஆர் கொடுக்கச் சொன்னார் என்று ஆயிரம் ரூபாயையும் கொடுத்தேன். அப்படியே நெகிழ்ந்து போயினர். எதிர்பாராமல் பணம் கிடைத்ததில் அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. நன்றிகூட சொல்லாமல் அப்படியே நின்றனர்.
காரின் கண்ணாடியை இறக்கி வணக்கம் தெரிவித்தார் எம்.ஜி.ஆர். அங்கிருந்து நாங்கள் புறப்பட்டோம்.
தன்னிடம் உதவி கேட்டவருக்கு மட்டும் என்று இல்லாமல், உதவி கேட்காதவர்களுக்கும் குறிப்பறிந்து உதவி செய்வதுதான் எம்.ஜி.ஆரின் குணம். இந்த மனிதநேயம் தான் அவரை உயரத்தில் வைத்தது. தனக்கு உதவியவர் தமிழக முதல்வர் என்று அந்த கிழவிக்குத் தெரியுமா, தெரியாதா? எனக்குத் தெரியவில்லை. எந்தப் பிரதிபலனும் பாராமல் செய்யப்பட்ட மனிதநேய செயல் அது.
தகவல்களுக்கு நன்றி: 'எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம்', விகடன் பிரசுரம்.
PROFESSOR SELVAKUMAR - SECRETARY - IRAIVAN MGR BHAKTHARGAL KUZHU - CHENNAI FORWARDED THIS PIC- PUBLISHED BY DECCAN CHRONICLE TO DAY.
http://i47.tinypic.com/11uyjdk.jpg
The banners were kept on the occasion of PUBERTY FUNCTION in respect of Ms. Hemavathy, Daugher of Mr. S. Rajkumar, President, Iraivan MGR Bakthargal Kuzhu, Tamil Nadu.
More Decorated Banners and Garlanded Portraits of our beloved God MGR will follow soon.
M.G. Ramachandran, K. Savithri, P.S. Veerappa, M.N. Rajam, O.A.K. Thevar, K.R. Ramsingh, J.P. Chandra Babu, T.P. Muthulakshmi, P. Susheela, A. Karunanidhi, S.M. Thirupathisami, ‘Master’ Murali, K.N. Venkataraman and N.S. Narayana Pillai
Ram Ganesh Gadkari was one of the leading playwrights of Maharashtra who created history within his short lifespan of 35 years. His most famous play was ‘Punya Prabhav,’ hailed as a classic of Indian theatre.
‘Punya Prabhav’ was adapted for the big screen by the cult figure of Tamil Cinema Kavignar Kannadasan as Mahadevi. The film was directed and produced by the sadly neglected figure of Indian Cinema, Sundar Rao Nadkarni.
Nadkarni, who hailed from Mangalore, was multi-faceted — an actor, editor, cinematographer, director, producer and more. His most successful film which created history is the M.K. Thyagaraja Bhagavathar-T.R. Rajakumari-starrer Haridas (1944), which ran uninterruptedly for 114 weeks in a single cinema ‘Broadway’ in Madras City, witnessing three Deepavali festivals….
Nadkarni made Mahadevi under his banner ‘Sri Ganesh Movietone,’ named after his father-in-law Ganesh Rao, a well-known medical practitioner in Bangalore decades ago, to whom the movie is dedicated. B. Radhakrishna, his brother-in-law, was the co-producer. He worked with Nagi Reddi-Chakrapani and the Vijaya-Vauhini unit as production executive.
http://i50.tinypic.com/15g9nwm.jpg
Mahadevi featured M.G. Ramachandran and Savithri in the lead roles. Actor-producer P. S. Veerappa played the villain. An interesting cloak-and-dagger romance about the intrigues in a royal family, Mahadevi proved a success. A Tamil king defeats his rival in battle, but impressed with his bravery, he treats him and his daughter (Savithri) as his guests. The king has an adopted daughter (Rajam) and a prince (‘Master’ Murali). His senior commander (Veerappa) lusts after the heroine (Savithri), who, however, chooses the junior commander (MGR).
The villain asks his sidekick (Chandra Babu) to kidnap the heroine at night, who makes a mess of it by kidnapping the other woman (Rajam). To cover up his folly, the commander marries her. The two women have children and the villain indulges in many subterfuges to seduce the heroine, but all his plans like blinding the hero and killing his child fail. In the process, he loses his own child. Shocked on learning the truth, he kills himself, and so does his wife.
The somewhat complicated tale was well narrated on screen by the talented filmmaker. Another contributing factor for the success of Mahadevi was its melodious music composed by Viswanathan-Ramamurthi and the lyrics were by Kannadasan, Thanjai Ramaiah Das, Marudhakasi and Pattukottai Kalyanasundaram.
Songs such as ‘Singara Punnagai,’ ‘Thanthana Paattu Padanum,’ ‘Kaa Kaa Mai Kondaa,’ ‘Thaayathu Amma Thaayathu,’ ‘Kurukku Vazhiyil’ and ‘Kamugar Nenjil’ became popular.
Remembered for the impressive performances by MGR, Savithri, Rajam and Veerappa, and the melodious songs.
Keywords: Mahadevi, Kavignar Kannadasan, MGR, Savithri, old tamil fim
COURTESY . THE HINDU .2.12.2012
யார் யார் பிறந்த நாள் எப்போது வருகிறது என்று எம்.ஜி.ஆர். டைரியில் எழுதி வைத்திருந்தார். ஹாங்காங்க்கில் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக அவள் ஒரு நவரச நாடகம் பாடல் எடுத்துக்கொண்டிருந்த போது நாகேஷ் பிறந்த நாள்.
http://i50.tinypic.com/33eqv13.jpg
6 மணிக்கு ஷூட்டிங் முடிந்ததும் எம்.ஜி.ஆர். எல்லோரையும் அழைத்து, ’இன்னைக்கு நைட் பத்து மணிக்கு சின்ன பங்சன் இருக்கு’ என்று சொன்னார். ’என்ன பங்சன்?’ என்று எல்லோரும் கேட்டுக்கொண்டோம்.
சலசலப்பு இருந்த போதே எம்.ஜி.ஆரே சஸ்பென்சை உடைத்தார். ’இன்று நாகேஷ் பிறந்தநாள்’ என்று சொன்னார்.
அதே மாதிரி இரவு 10 மணிக்கு பங்சன் நடந்தது. அது சின்ன பங்சன் இல்லை. உண்மையில் பெரிய பங்சன். ஒன்பது கல் வைத்த வைர மோதிரத்தை நாகேஷுக்கு பரிசளித்தார் எம்.ஜி.ஆர். அந்த மோதிரத்தை சாகும் வரை கையில் போட்டிருந்தார் நாகேஷ்.
courtesy; nakkeeran
The launch of a fan club
For an actor there can be numerous fan clubs. But a country's prime minister inaugurating an actor's fan club can happen only for Thalaivar. Yes, The late Lal Bahadur Shastri inaugurated, "Panathottam MGR Rasigar Mandram" in 1965 when he was touring Andaman and Nicobar Islands.
மக்கள் திலகத்துடன் பணியாற்றியவர்கள் மற்றும் அவரது மன்ற பொறுப்பில் இருந்த பலருக்கு பதவிகள் அவரது ஆட்சியில் வழங்கி கௌரவ படுத்தப்பட்டனர் .
மேலும் சில தகவல்களை சென்னை பேராசிரியர் செல்வகுமார் அனுப்பிய செய்தி .
தெய்வத்திரு திரு. அங்கமுத்து அவர்கள் சட்ட மேலவை உறுப்பினர் மட்டுமல்லாமல் குடிசை மாற்று வாரிய தலைவரகாவும் இருந்தார்.
திருப்பூர் மணிமாறன் அவர்கள் வீட்டு வசதி வாரிய தலைவரகாவும் பணியாற்றினார்.
இராமநாதபுரம் எம்.ஜி. ஆர். மன்ற மாவட்ட செயலாளர் பொ. அன்பழகன் அவர்கள் பாராளு மன்ற உறுப்பினராக இருந்தார்.
அவ்வாறே சேலம் மாவட்ட எம்.ஜி. ஆர். மன்ற செயலாளர் திரு. சேலம் கண்ணன் அவர்கள் பாராளு மன்ற உறுப்பினராக இருந்தார்.
கோவை மாவட்ட எம்.ஜி. ஆர். மன்ற செயலாளர் கே. மருதாசலம் அவர்கள், நமது புரட்சி தலைவர் காலத்தில் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தார்.
புதுவை மாநில எம்.ஜி. ஆர். மன்ற செயலாளர் உருளையன்பேட்டை மணிமாறன் மற்றும் திரு. பி. கே. லோகநாதன் அவர்கள் சட்ட மன்ற உறுப்பினர்களாக திகழ்ந்தார்கள்.
கவர்ச்சி வில்லன் கே. கண்ணன் அவர்கள் அனைத்துலக எம்.ஜி. ஆர். மன்ற பொருளாளராக நியமிக்கபட்டார்.
நமது இதய தெய்வம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தன்னுடன் பணியாற்றிய கலைஞர்களை மட்டும் அல்லாமல் மன்ற
நிர்வாகிகளையும் மறவாமல் பல வகையிலும் கௌரவித்தது என்றும் நினைவில் கொள்ளத் தக்கது.
நடிகை பானுமதி அவர்களும் தமிழ் நாடு இயல் இசை நாடக மன்ற தலைவராக இருந்தார் .
மேலும் தகவல்கள் தொடரும்.
- நன்றி செல்வகுமார் சார் .
நமது இதய தெய்வம் எம்.ஜி. ஆர். அவர்கள் நடிக்க ஒப்பந்தம் ஆகி, அரசியல் உலகில் வெற்றி உலா வந்து தமிழக முதல்வராக ஆன
காரணத்தினால் நின்று போன திரைப்படங்களின் பட்டியலில் விடுபட்டவை :
1. மண்ணில் தெரியுது வானம் ..... உதயம் புரடக்ஷன்ஸ் தயாரிப்பு
2. புரட்சிப் பித்தன் ...... டி ஆர். ராமண்ணாவின் ரங்கநாயகி பிக்சர்ஸ் தயாரிப்பு
3. அமைதி ......
4. தியாகத்தின் வெற்றி ...... எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தயாரிப்பு
5. மர்மப் பெண்களிடம் சி.ஐ.டி 117 ..... தாமஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு
6. தங்கத்திலே வைரம் ..... கே. எஸ். கோபாலகிருஷ்ணனின் கே.எஸ்.ஜி புரடக்ஷன்ஸ் தயாரிப்பு
7. அண்ணா பிறந்த நாடு .... ஒப்பனை கலைஞர் நாராயண சாமீ அவர்களின் தயாரிப்பு
8. நானும் ஒரு தொழிலாளி .... புரட்சி இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் சித்ரயுகா தயாரிப்பு
9. மக்கள் என் பக்கம் ..... எம்.எம். மூவிஸ் சார்பில் முசிறிப்புத்தன் மற்றும் என்.எஸ். மணியம் இணைந்த தயாரிப்பு
இது தவிர பிரபல ஆஸ்திரேலிய இயக்குனர் ஜான் மெக்காலம் அவர்களுடன் இனைந்து தயாரிக்க விருந்த ஆங்கிலப் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
ஒரு நடிகர் தனது 60 வயதில் கதாநாயகனாக நடித்ததும், கைவசம் சுமார் 18 படங்களை கொண்டிருந்ததும் உலக சாதனையே.
உலக சாதனையை படைக்க உத்தம தலைவன் எம்.ஜி. ஆர். அவர்களால் மட்டுமே முடியும் .
நன்றி.
அன்புடன்
சௌ. செல்வகுமார்
courtesy -MGR FAN GOODWIN
What is that makes every human, think he is waking up on the wrong side of the ‘luck’ couch. Well as Woody allen says ‘Life is full of misery loneliness and sorrow, and its allover quite too soon’ . That holds true . We need sorrow to cherish the happiness.
Blue is the color my friends,the yellow sunshine should last for a glimpsing moment and so it does. And if you do have that moment, relish in it, for it lasts then and then only .
http://i46.tinypic.com/2qaiozp.jpg
Very few personalities can give us those moments to relish,makkal thilagam M.G.Ramachandran former chief minsiter of Tamil Nadu ( most urbanised state in India) being one such personality.
No kidding, but whenever i used to be hearing classic tamil songs on TV my mom used to make me hear to his songs. I developed a taste to his songs from her. Today i do realize why his songs transcend generations, its bcoz it quenches the thirst amongst all of us to have the moment of hope and fullfillment .His songs do give us those moments to relish. I call the songs MGR acted in as his songs, because its a well know factor that MGR took extra care in the lyrics department which is out of bounds for the actor. However MGR understood the importance .
http://i46.tinypic.com/2nkjvgm.jpg
தனக்காக மட்டுமே வாழும் மனிதர்களை, காலவெள்ளம் சுவடுகள் அற்றுப் போகுமாறு செய்திருக்கிறது. பிறருக்காக வாழ்ந்தவர்கள் உடல் மறைந்தாலும் அவர்களின் புகழ் குன்றாமல் என்றென்றும் நிலைத்து நிற்கின்றது. அந்த வகையில் அரசியலிலும் சரி, சினிமா துறையிலும் சரி, தமிழக வரலாற்றிலிருந்து ஒரு நபரை மறக்கவோ மறைக்கவோ முடியாது. மக்களால் ‘புரட்சித் தலைவர்’ என்று அழைக்கப்பட்ட அந்த நபர் எம்.ஜி.ராமச்சந்திரன். தன்னிடம் வந்து உதவி கேட்டவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் வழங்கியது; சினிமா துறையில் சிறுசிறு வேடங்கள் ஏற்று நடித்து பின் ஹீரோவானது; தமிழக அரசியலில் பிரவேசித்து, பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தது; மக்களின் மனங்களில் இடம்பிடித்து பதிமூன்று ஆண்டுகள் தொடந்து ஆட்சி செய்தது; ரசிகர்களிடமும் தொண்டர்களிடமும் அவர் காட்டிய பரிவு என எம்.ஜி.ஆரின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களை, அவருக்கு மெய்காப்பாளராக முப்பது ஆண்டுகள் இருந்து பெற்ற அனுபவங்களை சரித்திரக் கதை சொல்வது போல கே.பி.ராமகிருஷ்ணன் இந்நூலில் சொல்லியிருக்கிறார்.
டைரி எழுதும் பழக்கம் கே.பி.ராமகிருஷ்ணனிடம் இருந்ததோ என்னவோ தெரியவில்லை, எம்.ஜி.ஆர் பயன்படுத்திய கார் எண் தொடங்கி எந்தெந்த நபர்களை எந்த தேதியில் சந்தித்தார், அவர்களுடன் எம்.ஜி.ஆர் என்ன பேசினார் என அத்தனை செய்திகளையும் விவரமாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.
எம்.ஜி.ஆரின் சரித்திரத்தைச் சொல்லும் இந்த அரிய பொக்கிஷத்தை நூலாகத் தருவதில் பெரும் உழைப்பை நல்கி பங்காற்றியவர் எஸ்.ரஜத். கே.பி.ராமகிருஷ்ணன் மனதில் கிடந்த புதையலை, எம்.ஜி.ஆர் இறந்து பத்தொன்பது ஆண்டுகள் கடந்த பின்பு, பேட்டி கண்டு சுவைபட விறுவிறுப்புடன் எழுதியிருக்கிறார்.
‘எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்’ எனும் இந்த நூல் எம்.ஜி.ஆரின் பல்லாயிரம் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் உற்சாகம் தருவதோடு, எம்.ஜி.ஆர் வாழ்ந்த காலகட்ட சினிமா துறையையும் அரசியல் நிலவரத்தையும் அறிய உதவும் ஆவணப் பெட்டகமாகவும் விளங்குகிறது.
Jaafna news
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே' என்று மேடையில் பாடிக்கொண்டிருந்த பாடகரின் ஒலிவாங்கியினை பறித்தகாவல்துறையினர்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த படத்தில் பாடலைப் பாடிய பாடகர் சுகுமாரிடமிருந்து சிறிலங்கா காவல்துறையினர் ஒலிவாங்கியைப் பறித்தெடுத்தனர். இதனால் இசைக்குழு நிகழ்வைக் கண்டுகளித்த பார்வையாளர்களிடையே பெரும் பதட்டமும் விரக்தியும் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணத்திலுள்ள சுழிபுரம் பெரியபுலோ என்ற இடத்திலுள்ள ஆலயமொன்றில் கடந்தஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மேற்படி ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு கட்டமாக சுகுமார்குழுவினரின் இன்னிசை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு இரவு 11 மணியளவில் ஆரம்பமாகிநடைபெற்றது. இந்த நிகழ்வு இடம்பெற்ற ஆலயச் சுற்றாடலில் படையினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
இங்கு ஆரம்பத்தில் பல பக்தி கானங்களைப் பாடிய சுகுமார் பின்னர் சினிமாப் பாடல்களையும்
பாடினார். இதில் எம்.ஜி.ஆர் இன் திரைப்படமொன்றில் இடம்பெற்ற என்னதான் நடக்கும்
நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே என்ற பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்.
இதன்போது திடீரென மேடைக்குள் பாய்ந்த சிறிலங்கா காவல்துறையினர் சுகுமாரிடமிருந்த ஒலிவாங்கியைப் பறித்தனர். அத்துடன் பால் திரட்டுக்கள் அடங்கிய கொப்பியையும் பறித்தெடுத்தனர். இந்தப் பாடல்புலிகளின் கருத்துக்களைக் கொண்டிருக்கிறது. இளைஞர்களை தூண்டுகிறது. தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகஉள்ளது. எனவே இந்தப் பாடலைப் பாட முடியாது என்று கூறி சுகுமாரிடன் முரண்பட்டனர்.இது இவ்வாறு நடந்துகொண்டிருந்த போது அங்கிருந்த பார்வையாளர்கள் பெரும் கடுப்பாகினர். புரட்சித் தலைவர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பாடலைப் பாடுவதற்கு ஏன் சிறிலங்கா காவல்துறையினர் தடைவிதிக்கின்றனர் என்று கூறி கொதித்தெழுந்தனர். எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி அதிகமாக அறிந்துகொண்டிருந்த வயதானவர்கள் சிறிலங்கா காவல்துறையினரின் செயல் தொடர்பாக கடும்விரக்தியடைந்தனர்.
இதனிடையே சுகுமாரிடம் வாக்குவாதப்பட்ட காவல்துறையினர் மேடையை விட்டு இறங்கிச் சென்ற பின்னர்அங்கிருந்த மக்கள் மத்தியில் கருத்து தெரிவித்த சுகுமார், இந்தப் பாடல் மிக நீண்ட காலத்திற்கு முன்னர்வெளிவந்தது. அன்று தொடக்கம் இன்று வரை நான் பல மேடைகளில் இந்தப் பாடலைப் பாடி வருகின்றேன்.ஆனால், இன்று ஏன் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது என்று எனக்குத் தெரியவில்லை என்றுதெரிவித்தார்.
மேலும், அரங்கை விட்டு இறங்கிய காவல்துறையினர் இந்த இசை நிகழ்வை ஒழுங்கு செய்த ஆலய அறங்காவலர்சபையிடம் விசாரணைகளை மேற்கொண்டதுடன் அவர்களில் சிலரைக் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றனர்.
இதேவேளை மேற்படி பாடகர் தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடகராக இருந்து பல எழுச்சிப்பாடல்களைப் பாடியிருந்தார். சாந்தன் உட்பட ஏனைய எழுச்சிப் பாடகர்களுடன் இணைந்து பல மேடைகளில் எழுச்சிப்பாடல்களைப் பாடி மக்களுக்கு எழுச்சியை ஏற்படுத்தியவர் வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தைத் தொடர்ந்துவவுனியா நலன்புரி நிலையத்தில் தஞ்சமடைந்த சாந்தன், சுகுமார் உள்ளிட்ட பாடகர்கள் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது இவர்கள் சேர்ந்தும் தனியாகவும் இன்னிசை நிகழ்வுகளைஅரங்கேற்றி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
UNRELEASED MAKKAL THILAGAM MOVIES ADVERTISEMENT .
http://i50.tinypic.com/2dmcyys.jpg
courtesy -net-
ஆலடிப்பட்டிக்கு அருகில் இருக்கும் புகழ் பெற்ற மலைக் கோவில் என சொல்லி ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்றார்கள் .போன நேரம் மதியம் பன்னிரண்டு .கடும் வெயில் .மலைக்கு மேல் ஏறி முருகனை பார்ப்பது பற்றி நினைக்கக் கூட முடியவில்லை .கீழிருந்த ஒரு ராமர் கோவிலில் வழிபட்டு திரும்பினோம் .
அந்த ராமர் கோவிலில் அந்த நேரத்திலும் நல்ல கூட்டம் .வெளியில் முறுக்கு ,ஐஸ் ,அண்ணாச்சி பழம் (இதை தோல் சீவி அழகாய் தந்தார்கள் ,அத்தனை சுவை )இவற்றுடன் சுண்டலும் விற்றுக் கொண்டிருந்தார்கள் .உள்ளே சாமிக்கான அலங்காரத்தில் இளநீர் ,ஈந்தங் குலை போன்றவையும் இடம்பெற்றிருந்தன .
ஒரு பக்கம் ராமர் கதையும் காதில் விழுந்துக் கொண்டிருந்தது .குரலையும் சொல்லும் பாங்கையும் வைத்துப் பார்க்கும் போது திருமுருக கிருபானந்த வாரியாரின் உரையை ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றே தோன்றியது .ஆனால் ஒரு பெரியவர் ,(அவரை ஒட்டிய சாயல் கூட )ஒரு நாற்காலியில் அமர்ந்து கதை சொல்லிக் கொண்டிருந்தார் .
அதில் ராமர் ஆட்சியின் பெருமைகளைப் பற்றி சொல்லி விட்டு ,".நீங்கள் ஏதோ நான் எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சியைப் பற்றி சொல்வதாக எண்ணிக் கொள்ளக் கூடாது . நான் சொல்வது அந்த ஸ்ரீ ராமச்சந்திரனின் ஆட்சியை பற்றி .ஆனால் இந்த ராமச்சந்திரன் ஆட்சியும் அந்த ராமச்சந்திரன் ஆட்சியைப் போல் தான் இருந்தது .அவர் இருந்தப்ப விலை ஏறியதா ,மக்கள் இப்படி கஷ்டப்பட்டார்களா ?
அந்த ஸ்ரீ ராமச்சந்திரனைப் போலவே இந்த ராமச்சந்திரனும் மக்களுக்கு நன்மையே செய்தார் ,"என்று முடித்தார் .
"மலைக்கள்ளன்" - தமிழ்த் திரை உலக வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத இடத்தைப் பிடித்த திரைப்படம். தமிழில் மட்டும் அல்ல. இந்தியத் திரை உலக வரலாற்றிலேயே இந்தப் படத்திற்கு ஒரு தனி இடம் உண்டு என்றால் அது மிகை அல்ல.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் நாடகத்தை சுவை குன்றாமல் வேகமும், விறுவிறுப்பும் சற்றும் குறையாமல் படத்தை தயாரித்து இயக்கி இருந்தார் ஸ்ரீராமுலு நாயுடு.
ஆறு மொழிகளில் இந்தப் படத்தை தயாரித்து இயக்கி இருந்தார் அவர். பொதுவாக ஒரு மொழியில் மாபெரும் வெற்றி பெற்ற படம் இன்னொரு மொழியில் படமாக்கப் படும் பொழுது ஏற்கனவே பெற்ற வெற்றியை பெரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
ஆனால் - எடுக்கப் பட்ட அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றியைப் பெற்று வசூலை அள்ளிக்குவித்த படம் " மலைக்கள்ளன்" ஒன்றுதான்.
ஆரம்பத்தில் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே சமயத்தில் படமாக்கப் பட்ட படம், அதன் பிறகு ஹிந்தி, கன்னடம், மலையாளம் மட்டும் அல்லாமல் சிங்கள மொழியிலும் ஸ்ரீராமுலு நாயுடுவால் தயாரித்து பெருவெற்றி அடைந்த படம்.
அது மட்டும் அல்ல . முதன்முதலாக ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்கம் வென்ற படம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.
தமிழ்த் திரைப்பட உலகில் எம்.ஜி.ஆர் அவர்கள் அடைந்த மாபெரும் வெற்றிக்கு அடித்தளமிட்ட படம் மலைக்கள்ளன் தான்.
அதனால் தான் "மலைக்கள்ளன் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிட்டாதிருந்தால், எனது சினிமா வாழ்க்கையென்னும் கப்பல் தரை தட்டியோ, பாறைகளில் மோதியோ விபத்துக்குள்ளாகிய நிலையை அடைந்திருக்கும்" என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தப் படத்துக்கு கதாநாயகனாக யாரைப்போடுவது என்ற பேச்சு எழுந்தபொழுது எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரை பலமாகச் சிபாரிசு செய்ததே இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்கள் தான் என்றும் கூட ஒரு தகவல் உண்டு. சுப்பையா நாயுடுவிடம் எம்.ஜி.ஆர் அவர்கள் வைத்திருந்த பெருமதிப்பையும், பாசத்தையும் பார்க்கும் பொழுது இந்தக் கருத்தில் உண்மை இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது.
எம்.ஜி.ஆர் முதன் முதலில் கதாநாயகனாக நடித்த "ராஜகுமாரி"க்கு இசை அமைத்த சுப்பையா நாயுடுவே "மலைக்கள்ளன்" படத்திற்கும் இசை அமைத்தார்.
"கர்நாடக இசையா, ஜனரஞ்சகமான மெட்டா - எதுவானாலும் தன்னால் சிறப்பாகக் கொடுக்கமுடியும் என்று இந்தப் படத்தின் மூலம் நிரூபித்தார் சுப்பையா நாயுடு.
பழம்பெரும் பாடகி பி.ஏ. பெரியநாயகியும், படத்தின் கதாநாயகி பி. பானுமதியும் பெண் குரலுக்கான பாடல்களைப் பாடினார்கள்.
"நீலி மகன் நீ அல்லவோ"- பி.ஏ. பெரியநாயகியின் கணீரென்ற குரலில் ஒலிக்கும் ஒரு நடனப் பாடல். சாய்-சுப்புலட்சுமி இருவரின் நடனத்துக்கான இந்தப் பாடலை கரஹரப்ரியா" ராகத்தில் வெகு அற்புதமாக அமைத்திருந்தார் சுப்பையா நாயுடு.
"உன்னை அழைத்தது யாரோ அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ" - பி. பானுமதி பாடி ஆடுவதாக அமைந்த இந்தப் பாடல் கல்யாணி ராகத்தில் அமைந்தது. நடனத்தில் பானுமதிக்கு அவ்வளவாக பெயர் கிடையாது என்றாலும் இலகுவான அசைவுகளில் பாடலுக்கே ஒரு அழகை அவர் ஏற்படுத்தியிருந்தார்.
"பெண்களாலே உலகிலே" "நல்ல சகுனம் நோக்கி செல்லடி" ஆகியவையும் பானுமதி பாடியவை.
ஆனால் இவை அனைத்தையும் ஓரம்கட்டி விட்டு இன்றளவும் காலத்தை வென்று நிலைத்திருக்கும் பாடல் ஒன்றே ஒன்று தான்.
எம்.ஜி.ஆர். பாடுவதாக அமைந்த பாடல் அது. பாடலுக்கான பல்லவியை கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் எழுதினார். அதன்பிறகு தயாரிப்பாளருடன் எழுந்த மனஸ்தாபம் காரணமாக அவர் விலகிக்கொள்ள சரணங்களை கோவை அய்யாமுத்து என்ற திராவிட இயக்க கவிஞர் எழுதினார்.
அதுவரை எம்.ஜி.ஆருக்கு எம்.எம். மாரியப்பா பாடிக்கொண்டிருந்தார். சற்றேறக்குறைய அதே காலகட்டத்தில் எம்.ஜி.ஆர்.-சிவாஜி இணைந்து நடித்த "கூண்டுக்கிளி" படம் தயாரிப்பில் இருந்த நேரமோ அல்லது வெளிவந்த சமயமோ ஏதோ ஒன்று.
அந்தப் படத்தில் கே.வி. மகாதேவன் இசையில் "கொஞ்சும் கிளியான பெண்ணை" என்ற பாடலை சிவாஜிக்காக பாடிய பாடகரின் குரல்வளம் எம்.ஜி.ஆர். அவர்களை மிகவும் கவர்ந்திருந்தது. அந்த இளம் பாடகரை தனக்கு பாடவைத்தால் நன்றாக இருக்கும் என்று அவர் அபிப்ப்ராயப்பட்டு இசை அமைப்பாளரிடம் தனது விருப்பத்தை தெரிவிக்க அந்த இளைஞரை எம்.ஜி.ஆருக்கு பாடவைத்தார் சுப்பையா நாயுடு.
பின்னாளில் எம்.ஜி.ஆர் அவர்களின் குரலாகவே பரிமளித்த திரு. டி.எம். சௌந்தரராஜன் தான் அந்தப் பாடகர்..
டி.எம். எஸ். அவர்கள் எம்.ஜி.ஆருக்காக முதன்முதலாகப் பாடிய அந்தப் பாடல் - அதுவும் எம்.ஜி.ஆரின் முதல் தத்துவப் பாடல் என்ற இரட்டிப்பு பெருமைக்குரிய பாடல்தான் "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே - நம் நாட்டிலே - சொந்த நாட்டிலே ".
மலைக்கள்ளன் படத்தில் இடம் பெற்ற மற்ற பாடல்கள் அனைத்தையும் பின்னுக்கு தள்ளிவிட்டு இன்றுவரை இளமை மாறாத பாடலாக - எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய ஒரு பாடலாக அல்லவா இந்தப் பாடல் அமைந்துவிட்டிருக்கிறது
"சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தரைப் போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி - இன்னும்
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே."
- கற்பனை வரிகளா இவை?. நடப்பு நிலையை அப்படியே படம் பிடித்துக்காட்டியிருக்கும் அற்புத வரிகள் அல்லவா இவை!. பாடலை காட்சியுடன் கண்டு கேட்க இணைப்பு :
http://www.youtube.com/watch?v=iw3zAZn_iss. ஆபேரி ராகத்தில் (பீம்ப்ளாஸ்) ஜனரஞ்சகமாக இசை அமைத்து இந்தக் கருத்தாழம் மிக்க பாடலை அற்புதமாக கொடுத்திருக்கிறார் சுப்பையா நாயுடு.
மலைக்கள்ளன் படமும் பாடல்களும் பெற்ற மாபெரும் வெற்றி எம்.ஜி.ஆர் அவர்களை வெற்றிப்பாதையில் மிடுக்கோடு நடைபோட வைத்தது. தன்னை ஒரு மக்கள் திலகமாக அறிமுகப் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு சொந்தப் படத் தயாரிப்பில் அவர் இறங்கினார். "எம்ஜியார் பிக்சர்ஸ்" - பானரில் அவரது கனவுப் ப்ராஜெக்ட் ஒன்று படமாக தயாராகத் தொடங்கியது. நடிகர் நடிகையர் தேர்வுக்காக அவர் சற்று யோசித்தே செயல்பட்டிருக்கலாம். எந்த வேடத்துக்கு யாரை ஒப்பந்தம் செய்வது, இவரைப் போட்டால் சரியாக வருமா - இரண்டாவது கதாநாயகியாக ஒரு புதுமுகத்தை தேர்வு செய்யலாமா என்றெல்லாம் கூட அவர் யோசித்திருக்க கூடும். ஆனால் இசை அமைப்புக்கு - அப்படியெல்லாம் செய்யவே இல்லை.
"எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்" - பாடல் மூலம் தனக்கு ஒரு தனியான அடையாளம் ஏற்படுத்திக் கொடுத்திருந்த எஸ்.எம். சுப்பையா நாயுடுவையே இசை அமைப்பாளராக தேர்வு செய்து தனது "கனவு ப்ரொஜெக்ட்" படத்தை ஆரம்பித்தார்.
ஆம். "நாடோடி மன்னன்" படம் தயாராகத் தொடங்கியது.
courtesy' sigaram thoduvom
அறுபதுகளின் பிற்பகுதி முதல் எழுபதுகளின் முற்பகுதி வரை எஸ்.எம். சுப்பையா நாயுடு
அவர்களின் இசையில் வெளிவந்த படங்கள் ஒவ்வொன்றும் அதுவரை அவரது இசை அமைப்பில் வெளிவந்த படங்களிருந்து முற்றிலும் மாறுபட்டவையாக இருந்தன.
"கொஞ்சும் சலங்கை" வரை அவரது இசையில் கர்நாடக இசையின் தாக்கம் சற்றே மேலோங்கி நின்றாலும், அதன் பிறகு வந்த படங்களில் மெல்லிசையின் தாக்கம் பரவலாக இருந்து வந்தது.
வாத்தியக் கருவிகளை - குறிப்பாக வயலின்களை அவர் பயன்படுத்திய விதம் பாடலைக்
கேட்டவுடனேயே இது சுப்பையா நாயுடுவின் பாடல் என்று "பளிச்" சென்று கண்ணை
மூடிக்கொண்டு சொல்லக்கூடிய வகையில் அமைந்திருந்தது.
"ஆசை முகம்" தொடங்கி "குல கெளரவம்" வரை வந்த படங்களின் பாடல்களைக் கேட்டோமானால் இதனை நன்றாக உணர முடியும்.
"ஆசை முகம்" படத்தில் இடம் பெற்ற ஒரு டூயட் பாடல் " நீயா இல்லை நானா. நெஞ்சக் கதவை கொஞ்சம் திறந்தது நீயா இல்லை நானா" - கண்ணதாசன் எழுதி டி.எம்.சௌந்தரராஜனும், பி. சுசீலாவும் பாடிய ஒரு இனிமையான பாடல் இது. இந்தப் பாடலின் சரணத்தில் ஒவ்வொரு அடிகளுக்கும் இடையில் வயலின்களை இணைப்பிசையாக சுப்பையா நாயுடு பயன்படுத்தி இருக்கும் விதம் ஒரு தனித்துவத்தை அவருக்கு கொடுத்தது.
இந்தப் படத்தில் இடம் பெற்ற டி.எம். சௌந்தரராஜன் தனித்து பாடிய பாடல் "இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை" என்று தொகையறாவாக துவங்கி.. “எத்தனை பெரிய மனிதருக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு. எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு" - என்ற பல்லவியோடு ஆரம்பமாகும்.
courtesy- sigaram thoduvom
இந்தப் பாடலின் சரணத்திலும், குறிப்பாக இரண்டாவது சரணத்தில் "கோழியைப் பாரு காலையில் விழிக்கும். குருவியைப் பாரு சோம்பலைப் பழிக்கும்" என்ற முதலடியை அடுத்து வயலின்களின் இணைப்பிசை - ஒரு நிமிடத்துக்கும் குறைவான கால அளவில் கொடுத்திருப்பார். பாடல் வெளிப்படுத்த நினைக்கும் கருத்துக்கு இந்த இணைப்பிசை ஒரு தனி அழகைக் கொடுக்கிறது. பாடல் பெருவெற்றி பெற்றுவிடவே இந்த உத்தியை மெல்லிசையில் தனது தனிப்பாணியாக அடுத்து வந்த படங்கள் ஒவ்வொன்றிலும் கையாள ஆரம்பித்தார் சுப்பையா நாயுடு. ஆசை முகம் படத்தில் "நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு" என்ற டி.எம். எஸ். சின் பாடலும் ஹிட் பாடல் வரிசையில் சேர்ந்தது.
தாயின் மடியில்" படத்தில் சுப்பையா நாயுடு அவர்கள் இசையில்
அமைந்த மறக்க முடியாத பாடல்களைப் பற்றி நான் குறிப்பிட மறந்துவிட்டதாக கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். அந்தப் படத்தை நான் மறந்துவிடவில்லை. ஆனாலும் வேகமாக எழுதிக்கொண்டு வந்தபோது விடுபட்டுப் போய்விட்டது. என்றாலும் தவறைச் சுட்டிக்காட்டிய நண்பர் திரு. ரவி அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு இந்த இடுகையை தாயின் மடியில் பாடல்களில் இருந்தே தொடங்குகிறேன்.
******
1964ஆம் ஆண்டு வெளிவந்த "தாயின் மடியில்" படத்தில் எம்.ஜி.ஆர். - சரோஜாதேவி இணையுடன் பண்டரிபாய், எம்.ஆர். ராதா, டி.எஸ். முத்தையா, எம்.என். நம்பியார், ஜி. சகுந்தலா, நாகேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். வெற்றி அடையத் துடிக்கும் ஒரு பந்தயக் குதிரையை ஓட்டும் "ஜாக்கி"யாக எம்.ஜி. ஆர். நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் - பி. சுசீலா இணைந்து பாடிய "என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் நானாகும்" என்ற டூயட் பாடல் எம்.ஜி. ஆர் அவர்களின் வெற்றிப்பாடல்கள் வரிசையில் இடம்பிடித்து இன்றும் செவிகளை நிறைக்கும் பாடல்.
"ராஜாத்தி காத்திருந்தா ரோஜாப்போலே பூத்திருந்தா" - டி.எம்.எஸ். - சுசீலா பாடிய இந்தப் பாடல் ஒரு பொய்க்கால் குதிரை ஆட்டப் பாடல். எஸ்.எம். சுப்பையா நாயுடு தனது வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு அமைத்திருந்த இந்தப் பாடலும் செவிகளுக்கு இனிமையையும், கிராமிய மணத்தையும் கொண்டு வந்து சேர்க்கத் தவறவில்லை.
அடுத்து பி. சுசீலாவின் தேன்குரலில் "பார்வையிலே பந்தல் கட்டி" என்று ஒரு சோக கீதம். சோகப் பாடல் என்றாலும் கேட்பதற்கு சுகமான பாடல்.
இவற்றை எல்லாம் விட இன்று வரை நிலையான இடத்தைப் பிடித்திருக்கும் பாடல் டி.எம்.எஸ். தனித்துப் பாடியிருக்கும் "தாயின் மடியில் தலைவைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை" என்ற பாடல் தான். பாடலின் இணைப்பிசையில் தனது முத்திரையைப் பதித்து காட்சியின் விறுவிறுப்பையும் சோகத்தையும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார் இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்கள்.
courtesy- sigaram thoduvom.
அடுத்து எழுபதுகளில் அறிமுகமான எஸ்.பி. பாலசுப்ரமணியம் எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்கள் இசையில் பாடிய முதல் பாடல் இடம் பெற்ற படம் என்ற பெருமையைத் தாங்கி வந்த படம் தாமஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த "தலைவன்" என்ற படம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். - வாணிஸ்ரீ இணைந்து நடித்த இந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு அருமையான டூயட் பாடல் தான் வாலி அவர்கள் எழுதிய -
"நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்திவரும் நள்ளிரவில் தலைவன் வாராமல் காத்திருந்தாள்.
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்" என்ற பல்லவியுடன் தொடங்கும் பாடல். இந்தப் பாடலைத்தான் இசை அரசி பி. சுசீலா அவர்களுடன் இணைந்து எஸ். பி. பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார். ஆரம்ப எஸ்.பி.பி. யின் குரலில் தென்படும் இனிமை இந்தப் பாடலுக்கு மெருகேற்றுகிறது. கண்டிப்பாக அனைவரும் கேட்கவேண்டிய ஒரு அருமையான பாடல் இது. இந்தப் பாடலின் இணைப்பிசையில் வரும் வயலின்களின் துரிதகாலப் பிரயோகம் இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்களை அடையாளம் காட்டிவிடுகிறது.
இதே படத்தில் இடம் பெற்ற இன்னொரு டூயட் பாடலை டி.எம். சௌந்தரராஜனும் எல்.ஆர். ஈஸ்வரியும் இணைந்து பாடியிருந்தனர்.
"ஓடையிலே ஒரு தாமரைப்பூ. நீராடையிலே அதைப் பார்த்தீங்களா. விழி ஜாடையிலே அது சிரிக்கையிலே
அந்த விவரத்தை என்னான்னு கேட்டீங்களா?" என்ற பாடல் டி.எம்.எஸ். - எல்.ஆர். ஈஸ்வரியின் வெற்றிப்பாடல்களில் ஒன்றாக அமைந்து விட்டிருக்கிறது.
"தலைவன்" படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு தத்துவப் பாடல் (எம்.ஜி.ஆர். படமல்லவா!) "அறிவுக்கு வேலை கொடு. பகுத்தறிவுக்கு வேலை கொடு" - டி.எம்.எஸ். பாடியிருக்கும் ஒரு அருமையான பாடல்.
courtedy- sigaram thoduvom
இன்று பகல் 12 மணிக்கு கோவை டிலைட் திரை அரங்குக்கு சென்று அங்கு ஒட்டப்பட்டிருந்த தாழம்பூ பட வண்ண சுவரொட்டிகளை படம் பிடித்தேன் அவைகளின் அணிவகுப்பு இதோ நமது திரி நண்பர்களுக்காக.
http://i49.tinypic.com/2ck4fr.jpg