Quote:
வணக்கம் இன்று மதிபிற்குரிய நடிகர் திலகம் மின் நினைவு நாள் ஆகும் ... எல்லோருக்கும் தெரியும் அவர் எவ்ளோ பெரிய சிறந்த நடிகர் என்று .... ஆனால் ஒரு சில பேருக்கு தெரியுமோ தெரியாதோ .எனக்கு தெரிந்த வகையில் நான் அவரை பற்றி சொல்ல விரும்புகிறேன் ,,, அவரை நான் நேரிலே பார்த்தவைகளில் மிகவும் அறிய விஷயம் ஒன்று நான் சொல்ல விரும்புகிறேன் ... நடிகர் திலகம் அவர்கள் வசனம் பேசுவதிலும் .. அவரது கூர்மையான நடிப்பையும் நீங்கள் பார்த்திருக்கலாம் ஆனால் நான் பார்த்து ரசித்து விஷயம் ஒன்று நேரில் நடந்தவைகள் ஒன்று நீண்ட நாள் ஆசையாக இருந்தது .. அத்தட்கான நேரம் இப்போது வந்திருகிறது . அவர் தினமும் அதிகாலை 6 மணிக்கே வந்துவிடுவார் ஸ்டுடியோவுக்கு ...அது கலை உலகத்தில் சேர்ந்தவர்களுக்கு நன்றாக தெரியும் அனால் அவர் ஒரு சிறந்த ஒப்பனையாளர் என்று எனக்கு பெரும் ஆச்சரியத்தை கொடுத்தது நான் நேரில் கண்டது .. 1975 தெலுகு படத்தில் என் டி ராமாராவ் அவர்கள் ஸ்டுடியோவில் iruntha சமயம் .நடந்த சுவையான சம்பவத்தை கண்டு நான் ரசித்தேன் .
இது வாகினி ஸ்டுடியோவில் நடந்த சம்பவம் .. அதே ஸ்டுடியோவில் நடிகர் திலகம் இன்னொரு ஸ்டுடியோவில் இருந்தார் ... அந்த நேரத்தில் சும்மார் மதியம் 2 மணி இருக்கும் என்று நினைக்கிறன் ... நடிகர் திலகமும் என் டி ராமராவும் சந்தித்தார்கள் .. அப்போது நடிகர் திலகம் என் டி ராமராவ்வின் உடையை அதாவது (folklore pictures ) சில் நடித்திருந்த என் டி ராமராவ் வை பார்த்து அசந்து பொய் நின்றார் என் டி ராமராவ் வின் டிரெஸ்ஸை பார்த்ததும் அதிர்ந்து போனதும் .. நடிகர் திலகம் ஒரு குறையை கண்டார் என் டி ராமராவ்வின் புருவத்தை பார்த்து ஒப்பனையாளர் சரியாக வரைய வில்லை என்று, அவர் தெரிந்ததும் உடனே நடிகர் திலகம் என் தந்தையாரை அழைத்து வேணு இங்கே ரமா வை அவசரப்பட்டு கேமரா முன் நிக்ட்கவைகாதே . கொஞ்சம் பொறு என்று சொல்ல .. அப்பவோ சரி என்று சொல்ல சரி ,, நீங்கள் பெசிகொண்டிருங்கள் நான் செட் lighttai சரி செய்கிறேன் என்று சொல்ல .. அங்கு நடந்த ஒரு விபரீதமான சம்பவத்தை கண்டு அப்பவே மெய் சிலிர்த்து போனார் , அது என்ன என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும் .பதினைந்து நிமிடம் என் டி ராமராவ்வை நாற்காலியில் உட்காரவைத்து ,, நடிகர் திலகம் eyebrow பென்சிலை எடுத்து அழகாக என் டி ராமராவின் புரவத்தை மிக அழகாக வரைந்து அதை கச்சிதமாக என் டி ராமராவ்வின் கேமரா முன் நின்று பார்த்து பிறகு தான் அவர் டெஸ்ட் செய்த பிறகு தான் நடிகர் திலகம் அவர்கள் அவருது ஸ்டுடியோவுக்கு சென்றார் செட்டில் இருக்கும் அத்தனை பெரும் நடிகர் திலகத்தின் சுறுசுறுப்பை கண்டு ஆச்சரியமாக கண்டு ரசித்தார்கள் போவதற்கு முன் நடிகர் திலகம் அப்பாவை பார்த்து கேட்டார் வேணு இப்போது நீ தைரியமாக கேமரா வை தொடங்கலாம் என்று சொல்ல அப்பவோ ,,, அன்னி நீங்க யாரு சும்மாவா சொலமுடியும் உங்களை என்று சொல்ல உடனே நடிகர் திலகம் அப்பாவின் கன்னத்தை செல்லமாக தட்டி சென்றார் என்ன ஒரு மனிதர் நடிகர் திலகம் இவரை போல் இனி யாரால் வரமுடியும் ..... அதன் அவரது குணம் சிவாஜி ராஜாவை போல் கடவுள் படைத்தார் என்று நினைக்கிறன் கலையுலகத்தில் ... கடைசியாக என் தந்தையரை பார்த்து லதாவை ஒரு naaluku வீட்டுக்கு கூட்டிகிட்டு வா என்று செர்ன்று விட்டார் அவரசரமாக ...
இப் பகிர்வு இடம் பெற்ற முகநூல் பக்கத்திற்கான இணைப்பு -