நினைப்போம் மகிழ்வோம்-111.
"பாலும் பழமும்."
"என்னை யாரென்று" பாடல்.
கண்பார்வையற்றவனாய்க்
காட்டிக் கொள்ள, ஒப்பனையை
மீறி அவர் செய்யும் பொருத்தமான கண் சிமிட்டல்.
Printable View
நினைப்போம் மகிழ்வோம்-111.
"பாலும் பழமும்."
"என்னை யாரென்று" பாடல்.
கண்பார்வையற்றவனாய்க்
காட்டிக் கொள்ள, ஒப்பனையை
மீறி அவர் செய்யும் பொருத்தமான கண் சிமிட்டல்.
நினைப்போம்.மகிழ்வோம்-112
"பாரத விலாஸ்."
'இந்திய நாடு' பாடல்.
'மேஜர்' பாடுவதாக வரும்
பஞ்சாபிப் பாடல், "யாஹூ,யாஹூ" என முடிந்த பிறகு
வரும் தாளத்தில் ஆழ்ந்து
லயித்து செய்யும் தோள் குலுக்கல்.
நினைப்போம்.மகிழ்வோம்-113
"வியட்நாம் வீடு."
"பாலக்காட்டுப் பக்கத்திலே"
பாடல்.
அந்தக் கதாபாத்திரத்தின் ஒழுங்கைக் குறிக்கும் விதமாய்
கழுத்திறுக்கும் சட்டையின்
முதல் பொத்தானைக் கூட
போட்டிருப்பதும்,
கொஞ்சம் கூச்சம் தெளிந்ததைக் குறிக்கவும், புழுக்கம் தவிர்க்கவும் அந்த முதல் பொத்தானைக் கழற்றுவதும்.
நினைப்போம்.மகிழ்வோம்-114
"திருவிளையாடல்."
'பாத்தா பசுமரம்' பாடல் முடிந்தவுடன், உடன் ஆடும்
ஆடல் அழகி காதலுடன் கைபிடித்திழுக்க, "ஏற்கனவே
ரெண்டு மனைவி. உன்னோடு
வர முடியாது" என்று சைகையிலேயே பதில் சொல்வது.
நினைப்போம்.மகிழ்வோம்-115
"பொன்னூஞ்சல்".
'ஆகாயப் பந்தலிலே' பாடல்.
"பால் வண்ணம்" என்கிற வரியை இரண்டாம் முறை
பாடுகையில் வாய் கொள்ளாச்
சிரிப்போடு பாடும் அழகு.
Due to an emergency, கடந்த ஒரு வாரமாக திரியை பார்வையிட முடியவில்லை. இதற்கிடையில் நடிகர் சங்க விவகாரம் தொடர்பாக திரு விகேஆர் அவர்கள் தன் சுய சரிதையில் எழுதிய ஒரு சில விஷயங்களை மேற்கோள் காட்டி மற்றொரு இணையதளத்தில் வெளியான ஒரு கட்டுரையை நண்பர் சிவா இங்கே பதிவு செய்ய அது நமது நண்பர்கள் சிலர் மனதை புண்படுத்தியிருப்பதாக அறிந்தேன். திரியின் அனைத்து பக்கங்களையும் படிக்கவில்லையென்றாலும் அந்த குறிப்பிட்ட பதிவை படித்தேன். அது நண்பர்களின் மனதை காயப்படுத்தியிருக்கும் பட்சத்தில் அதை நீக்கி விடலாம் என முடிவு செய்து நீக்கி விட்டேன்.
அதே நேரத்தில் இந்த பதிவு வருவதற்கு முன்பே மாற்று திரியில் வந்த ஒரு பதிவில் பிராப்தம் படம் பற்றியும் சாவித்திரி பற்றியும் அதன் தொடர்பாக நடிகர் திலகம் பற்றியும் தேவையற்ற சில வரிகள் இடம் பெற்றதாக நண்பர் ஆர்கேஎஸ் அவர்களின் பதிவின் மூலமாக அறிந்தேன் அதே போன்று விகேஆர் பதிவு வந்த பிறகு தனிப்பட்ட முறையில் நடிகர் திலகத்தை தாக்கியும் தரம் தாழ்த்தியும் ஒரு சில பதிவுகள் அங்கே இடம் பெற்றதாகவும் அறிகிறேன்.
அவற்றை பற்றி நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அது அவரவர்களின் மனசாட்சியை பொறுத்த விஷயம்.
இன்னும் சில நாட்களுக்கு திரியை ரெகுலராக பார்வையிடவோ பங்களிக்கவோ முடியாத சூழல். எனவே நண்பர்கள் அனைவரும் சர்ச்சைக்குரிய விஷயங்களை தவிர்த்து நடிகர் திலகம் பற்றிய தகவல்களை மட்டும் பதிவ்டுமாறு அன்போடு வேண்டுகிறேன்.
அனைவரின் ஒத்துழைப்பிற்கும் முன்கூட்டியே நன்றி சொல்கிறேன்.
அலைபேசியில் அழைத்து தகவல்களை சொன்ன நண்பர் ஆர்கேஎஸ் அவர்களுக்கு நன்றி!
அன்புடன்
Dear Selvakumar Sir,
Just now noticed your post. Since you people said that the particular post hurt you, I have removed the same. So hope you will also remove yours because I don't want to edit your posts as I have always allowed MGR fans to post here even when they were harsh, unless and otherwise it bordered on individual attack.
Thanks for your understanding
Regards
நடிகர் திலகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகத்தனம் கழுத்தறுப்பு என்பன மற்றவர்கள் தெரிந்து
கொள்ளவே vkr எழுதியஅப்பதிவை இங்கே பதிவிட்டேன்.
vkr எழுதிய விடயம் வெளிவந்த இணைய சுட்டிஉட்பட பதிவிட்டிருந்தேன்
பதிவிலுள்ள விடயத்திற்கு பதிலளிக்காமல் எம் ஜீ ஆர் ரசிக நண்பர்கள்
தனிமனித தாக்குதல் செய்கிறார்கள் தனிமனித தாக்குதல் கொண்ட
தாங்களே வெளியிட்ட மொட்டை கடிதத்தை பிரசுரிக்கிறார்கள். எனவே vkr சொன்னவிடயங்கள்
அனைத்தும் உண்மை என்பது புலனாகிறது.
பச்சையாக புழுகினாரா சிவப்பாக புழுகினாரா என்று பொதுமக்கள் புரிந்துகொள்வார்கள்Quote:
கல்லுக்கும் கருணை காட்டும் தங்கமனம் கொண்ட நம் தலைவர் மீது வி(வரம் தெரியாத). கே (கேனையர்கள் என்று மக்களை நினைத்த) ராமசாமி என்ற நன்றி கெட்ட, பொறாமை கொண்ட பொய்யன், நடிகர் சங்க கட்டிடம் கட்டியதால் ஏற்பட்ட கடனை அடைக்க, புரட்சித் தலைவர் நட்சத்திர இரவு நடத்தச் சொன்னதாக பச்சையாக புளுகியிருக்கிறார்.
சுமார் 22 லட்சம் ரூபாய் செலவில் கட்டிடம் உருவானவுடன் எம்.ஜி.ஆரே. அதனை திறந்து வைத்தார். பெரும் மகிழ்ச்சியும் உற்சாகமும் நம்பிக்கையுமான நாட்கள் அவை. எப்படியும் நடிகர் சங்கம் இனி ஒரு நல்ல நிலைக்கு உயர்ந்துவிடும் என்று தீவிரமாக நம்பினோம்.கட்டிடம் உருவாகி இயங்க ஆரம்பித்தவுடன் எங்கள் முன் இருந்த முதல் பிரச்சினை அந்த 22 லட்சம் ரூபாய்க் கடன்தான். அதனை அடைத்தால் ஒழிய பிற வளர்ச்சிப் பணிகள் சாத்தியமில்லை என்கிற நிலையில் நாங்கள் மறுபடியும் எம்.ஜி.ஆரை சந்தித்து ‘என்ன செய்யலாம்..?’ என்று யோசனை கேட்டோம்.
எம்.ஜி.ஆர். சற்று யோசித்த பின், ‘ஒன்று செய்யுங்கள்.. தமிழ்நாட்டின் நான்கு பெரிய நகரங்களைத் தேர்ந்தெடுத்து அங்கு நட்சத்திர இரவு நடத்துங்கள்.
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக அந்த நிகழ்ச்சிகள் நடப்பதாக இருக்கட்டும்.
அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து நான் உங்கள் கடனை அடைத்துவிடுகிறேன்..’ என்றார்
நடுநிலையானபொது மக்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள்
வெறும் கேலிக்கூத்தான நட்சத்திர நிகழ்ச்சிகளாக இல்லாமல் அற்புதமான நாடகங்கள்.. இசை நிகழ்ச்சிகள்.. நகைச்சுவை காட்சிகள், நடனங்கள் என்று கண்டவர் உள்ளங்களைக் கொள்ளை கொண்டு போனது அந்த நிகழ்ச்சிகள்.அன்றைக்குத் திரையுலகில் கொடி கட்டிப் பறந்த பல நட்சத்திரங்கள் பங்கு பெற்று சிறப்பித்த அந்த நிகழ்ச்சிகளின் மூலம், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்குச் சுமார் ஒரு கோடியே எண்பது லட்சம் ரூபாய் வசூலானதாகக் கேள்வி.நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட கலைஞர்களுக்கான போக்குவரத்து, உணவு, பிற வசதிகளைத் தாமே செய்து தந்து அரசாங்கம் நிதியையும் தாமே நேரடியாக வசூலித்த்து.
நண்பர்களே,
கடந்த காலங்களில் நடந்தவற்றை இனிமேலும் விவாதிக்க வேண்டாம். எந்த உண்மையாக இருந்தாலும் அது ஒரு நாள் வெளியே வந்து சேரும்.
அரசியலால் வரக்கூடிய வெற்றியோ, தோல்வியோ, புகழோ இழுக்கோ, நிரந்தரமானது அல்ல. சிவாஜி, எம்.ஜி.ஆர். இருவருமே தங்கள் ரசிகர்களை, அவர்களின் சக்தியை, நல்ல வழியில் தான் கொண்டு சென்றிருக்கிறார்கள். இருவருமே அரசியலில் வெவ்வேறு பாதையில் சென்றாலும் ரசிகர்களிடம் ஒழுக்கம், நாணயம், நேர்மை, இவற்றையெல்லாம் விதைத்துத் தான் சென்றிருக்கிறார்கள். இருவரின் சக்தியையுமே அவர்களுடைய கட்சிகள் பயன்படுத்திக்கொண்டு தூக்கி எறிந்து விட்டன.
இவ்வாறு பல ஒற்றுமைகள் அவர்களிடையே நிலவி வந்தாலும். சில சுயநல சக்திகளின் தந்திரத்தால் இவர்கள் இருவருக்குமிடையே இருந்த தொழில் போட்டியைப் பகைமையாகத் தூண்டி விட முயற்சிகள் நடந்தன. இதையெல்லாம் தாண்டி இருவருமே தங்களுடைய பரஸ்பர நட்பைப் பாராட்டியே வந்துள்ளார்கள்.
கடந்து போன காலங்களில் நடைபெற்ற சில கசப்பான விஷயங்களை மீண்டும் கிளறுவதில் பயனேதுமில்லை.
சிவாஜியாகட்டும், எம்.ஜி.ஆராகட்டும், இவர்களின் புகழ் சினிமாவின் மூலமாக மட்டுமே நிரந்தரமாக நிற்க வல்லது. அரசியலால் வரக்கூடிய புகழும் பெருமையும் நிலையானதல்ல. காலமாற்றங்களில் அறிவியலின் துணையில் நிர்வாகம் இயந்திரமயமாக, கணினி மயமாக வெல்லாம் மாறக் கூடிய நிலைவந்தால் அதன் மூலம் நிர்வாகம் சீரான நிலைக்குத் திரும்பினால், அப்போது அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் மறக்கடிக்கப்புட்டு விடுவார்கள்.
ஆனால் கலை மூலம் பெற்ற புகழ் சாகாவரம் பெற்றது. இன்னும் ஐம்பது நூறு ஆண்டுகள் கழித்து சிவாஜி எம்.ஜி.ஆரும். இருப்பார்கள். அவர்கள் பெயரை அவர்களுடைய திரைப்படங்கள் சொல்லிக்கொண்டிருக்கும். ஆனால் அந்த நேரத்தில் எந்த அரசியல்வாதியின் பெயரும் மக்கள் மனதில் நிலைத்திருக்காது.
இனிவரும் காலங்களில் இவர்கள் இருவரின் புகழையும் திரைப்படங்களில் இவர்களின் பங்களிப்பை சொல்வதன் மூலம் நாம் அடுத்தடுத்த பல தலைமுறைகளுக்கு வரலாற்றை சரியான முறையில் கொண்டு செல்லமுடியும்.,
இந்த அடிப்படையிலேயே நம் அணுகுமுறையை நாம் பின்பற்றுவோமே..
பேராசிரியர் செல்வகுமார் அவர்களே,
தங்களுடைய உணர்வு புரிகிறது. நமது நடிகர் திலகம் நெறியாளர் அவர்களும் அதைப் புரிந்து கொண்டு செயல் படுத்திவிட்டார்.
தங்களுக்கு மட்டுமல்ல, நமது நண்பர்கள் அனைவருக்குமே ஒன்று மட்டும் நான் பணிவோடு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
நடிகர் திலகம் என்பது தமிழ்நாட்டின் பொக்கிஷம். அவர் யாருக்குமே போட்டியாக மாட்டார். அவருடைய புகழைப் போற்ற வேண்டியது, ஒவ்வொரு தமிழனின் கடமையுமாகும். யாரோ தங்கள் சுயநலத்திற்காக சிவாஜி எம்.ஜி.ஆர். ரசிகர்களிடையே பகைமையுணர்ச்சியைத் தூண்டி விட்டு தாங்கள் ஆதாயம் பெற்றார்கள் என்பது தான் உண்மை. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நடிகர் திலகம் என்பது தமிழ்நாட்டிற்குக் கிடைத்த விலை மதிப்பில்லா கலைச்செல்வம். இதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். அவர் காலத்தில் நாமெல்லாம் வாழ்ந்ததே நமக்குக் கிடைத்த மிகப் பெரிய பேறு. அதனைத் தாங்களும் தங்கள் நண்பர்களும் உணர வேண்டும். அரசியல் அடிப்படையில் அணுகுமுறை அமைத்துக் கொண்டால் நம் பார்வையைப் பகைமை உணர்ச்சி என்கிற பனி மூட்டம் மறைத்து விடும். எனவே இதனைப் புரி்ந்து கொண்டு நடிகர் திலகம் என்கிற தமிழ்த் தாயின் கலைப்பொக்கிஷத்தின் அருமையைப் பாருங்கள்.
அரசியல் என்பது ஒரு நிர்வாகத்தின் அமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு வழிமுறை, நெறிமுறை. ஆட்சியாளர் என்பது ஒரு குடும்பத்தலைவனைப் போன்றவன். தன் குடும்பத்தில் எவ்வளவு கருத்து வேறுபாடுகளிருந்தாலும் தான் உழைத்து தன் குடும்பத்தைப் பாதுகாக்கிறான். ஒரு பிள்ளை நல்லவனாக இருக்கலாம். ஒரு பிள்ளை தறுதலையாக இருக்கலாம். ஆனால் ஒரு தந்தை என்கிற முறையில் அவன் எல்லோரையும் சமமாக பாவித்து குடும்பத்தை நடத்திச் செல்லக் கடமைப்பட்டவன். அது போலத் தான் அரசியலில் ஆட்சி அதிகாரங்களெல்லாம்.
இதையெல்லாம் தாண்டி ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை கலையில் சிறந்து விளங்கி மிகப் பெரிய புகழ் பெறும் போது, தாயார் என் பிள்ளை எனப் பூரிக்கிறாள். தகப்பன் என் பிள்ளை என நண்பர்களிடம் மார் தட்டிச் சொல்கிறான். தங்கை என் அண்ணன் எனப் பெருமை கொள்கிறாள். சகோதரன் என் தம்பி, என் அண்ணன் என பெருமை கொள்கிறான்.
நடிகர் திலகம் என்கிற கலைப்பொக்கிஷத்தை இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பமும் கொண்டாட வேண்டும்.
சாதி மத மொழி,என்ற பேதங்களனைத்தையும் தூக்கி எறிந்து நடிகர் திலகம் என்கிற கலைப் பொக்கிஷத்தைக் கொண்டாடுவோம்.
தங்களுக்கும் இந்த உணர்வு உள்ளது என்பதும் தாங்களும் நடிகர் திலகத்தின் மேலும் அவருடைய நடிப்பின் மேலும் ஈர்க்கப்பட்டவர் என்பதையும் நானறிவேன்.
நினைப்போம்.மகிழ்வோம்-116
"வியட்நாம் வீடு."
"பாலக்காட்டுப் பக்கத்திலே"
பாடல்.
"அந்த பரமகுரு ரெண்டு பக்கம்
தேவியை வைத்தான்."
-என்கிற வரியின் போது, இரண்டு பக்கமும் இரண்டு
தேவியர் இருப்பின் எப்படி
அவர்களைத் தோளோடு அணைத்து நிற்பாரோ.. அதையே கற்பனையில் செய்து
காட்டும் தத்ரூபம்.
நினைப்போம்.மகிழ்வோம்-117
"இரு மலர்கள்."
"மாதவிப் பொன்மயிலாள்."
பாடல்.
பாடலினூடே, நின்று கொண்டிருக்கும் பத்மினியின்
தோள்பட்டையில் தனது வலது
முழங்கையை ஊன்றி நிற்பார்.
பத்மினி ஆடிக் கொண்டே விலகி விட,
ஊன்றிய கையை மட்டும்
அழகாக அந்தரத்தில் வைத்திருப்பார்.
நினைப்போம்.மகிழ்வோம்-118
"அந்தமான் காதலி".
"அந்தமானைப் பாருங்கள்"
பாடல்.
"இது ஏக்கம் தீர்க்கும் தனிமை"
எனும் வரி பாடி வருகையில்,
ஒரு பக்கக் கோட்டு முழுக்க
முற்றிலுமாய் காற்றில் விலக..
நடந்து வரும் கம்பீரக் காதல் நடை.
உயர்திரு செல்வகுமார் சார்
முதற்கண் இதுபோல SENSITIVITY உள்ள செய்திகளை அதுவும் உயிருடன் இல்லாதவர்கள் பற்றிய செய்திகளை... செய்தி கூட அல்ல...தனி நபர் எண்ணங்களை......பதிவிடுவது அவசியம் அற்றது. காரணம் எந்த ஒரு தகவலும் அதற்க்கு தகுந்த ஆதாரம் இல்லாமல் அவர் சொன்னார்...இவர் சொன்னார் ...அந்த புத்தகத்தில் உள்ளது...இந்த புத்தகத்தில் உள்ளது என்று அதை பதிவு செய்வது ஏற்புடைய விஷயம் அல்லவே அல்ல !
காரணம் நடிகர் சங்க இடம் இந்த விலை கொடுத்து இத்தனை சென்ட் வாங்கியது என்பது அதன் பத்திரமோ அல்லது கட்டப்பட்ட ரசீதோ பார்க்காமல் எதுவும் சொல்லமுடியாது. அதுதான் உண்மையான ஆதாரம். அந்த ஆதாரத்தை பதிவிடவேண்டிய அவசியம் நடிகர் சங்கத்திற்கு கிடையாது ஏனெனில் இது அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். அவர்களுக்கே அதில் குழப்பம் இல்லாதபோது நமக்கு ஏன் ?
2. நீங்கள் பதிவு செய்த அந்த நடிகர் சங்க இணைபிலயே ஏகப்பட்ட முன்னுக்கு பின் முரணான தகவல்கள் உள்ளது நன்றாக நிதானமாக படித்து பார்பவர்களுக்கு நன்கு விளங்கும். முதல் PAGE மொத்த இடம் 22 சென்ட் என்றும் கட்டிடம் கட்ட வாங்கிய கடன் ருபாய் 22,00,000 லட்சம் என்று எழுதியுள்ளனர்.
ஆனால் அதே நடிகர் சங்க இணையதளத்தில் http://nadigarsangam.org/index.php/sifa/நிகழ்வுகள்
இந்த இணைப்பில் பணம் பற்றாகுறையால் 20 சென்ட் நிலம் வாங்கியது என்றும் கட்டிடம் கட்ட கடனாக ருபாய் 18,00,000 லட்சம் என்று எழுதியுள்ளனர்....நீங்கள் அதை பகிர்வும் செய்துள்ளீர்கள்....
20 சென்ட் நிலமா அல்லது 22 சென்ட் நிலமா மற்றும் 22 லட்சம் கடனா அல்லது 18 லட்சம் கடனா என்ற கேள்வி எழுகிறது இதை படிக்கும்போது...
அப்படி உள்ளபோது இதில் எது உண்மை ...எது பொய் என்பது எதை வைத்து முடிவு செய்வது ?
நடிகர் சங்க இனைய தளத்திலயே முன்னுக்கு பின் முரணான தகவல்.
அதை AUDIT செய்வது நம்முடைய வேலையும் அல்ல...நமக்கு சமந்தமும் அதில் துளி கூட இல்லை.
நம்மை பொருத்தவரை ..இந்த நடிகரை நமக்கு பிடிக்கும்...இந்த படம் பிடிக்கும்....அபிமான நடிகர் படம் வரும்போது..பார்க்கலாம்..பாராட்டலாம்...அதன் அடுத்த நிலையாக பரவசம் அடையலாம் ...சற்று வசதி இருந்தால் போஸ்டர் அடிக்கலாம் ...இவ்வளவே !
கொடுப்பதற்கென்று பிறந்த மக்கள் திலகம் கொடுத்து உதவியதை பற்றி நான் இங்கு கேட்கவில்லை ! மக்கள் திலகம் ருபாய் 40,000 கொடுத்தது பற்றி மட்டும் எழுதியுள்ள பக்கங்கள் ஞ்யாப்படி எந்த நடிகர் எவ்வளவு கொடுத்தார் என்பதையும் இதில் எழுதியிருக்கவேண்டும் !
அநேகம் பேர் கொடுத்த தொகை சிறிது ...என்பதை போல பதிவு செய்தது ஏற்புடயதாகுமா பொதுவானவர்களுக்கும், நடுநிலை வகிப்பவர்க்கும் ?
எப்படி எழுதுவார்கள் உள்ளதை உள்ளபடி ...தமக்கு எது வேண்டுமோ, தமக்கு எது பிடித்த விஷயமோ அது மட்டும் எழுதுவது, அதனை மட்டும் சிறப்பித்து தூக்கி வைப்பதுதானே நம் தமிழகத்தின் தொன்றுதொட்டு விளங்கி வரும் பண்பாடு !
இதில் எழுதப்பட்ட விதம் அனைவருக்குமே சந்தேகத்தை வரவழைக்கும்...காரணம் இந்த வரிகள் -
திரு சரத்குமார் அவர்களும், பொது செயலாளர் திரு ராதாரவி அவர்களும் எடுத்த இமாலய முயற்சியால் மலேசியாவில் 21.12.2007 அன்றும், சிங்கப்பூரில் 23.12.2007 அன்றும் மிகச் சிறப்பாக கலை விழாக்கள் நடத்த பட்டன . இந்த விழாக்களை சன் டி வி நிறுவனத்தின் மூலமாக ராடான் மீடியா ஒர்க்ஸ் இணைந்து நடத்துவதற்கு சங்கத்தின் உறுப்பினர் திருமதி ராதிகா சரத்குமார் வடிவமைத்து நடத்தி கொடுத்தார்.
பாகிஸ்தான் யுத்தம் நடந்தபோது நடிகர் திலகம் ஸ்ரீதர் குழு அனைத்து நடிகர்களை கொண்டு ஜவான்களை மகிழ்வித்து அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியிடம் கோடிக்கும் அதிகமான பொன்னும் பொருளும் அனைவரும் கொடுத்தார்களே அதை குறிப்பிட்டு எழுதவேண்டியதுதானே ?
பல நிவாரண நிதிகள் நடிகர் திலகம் அவர்கள் தலைமையில் நட்சத்திர கிரிகட், ஆக்கி ஆகிய பல நடத்தி அதில் தென்னிந்திய நடிகர்கள் NTR ANR PREMNAZIR RAJKUMAR இப்படி பலர் கலந்துகொண்டு சிறப்பித்து நன்கொடை வழங்கியதை எழுதியிருக்கலாமே ?
ஏன் அதனை எழுதவில்லை ? அதெல்லாம் என்ன ஒரு ருபாய் ..ரெண்டு ருபாய் நன்கொடையா ?
ஆக தமக்கு எது சாதகமோ....எது வேண்டுமோ அதை மட்டும் தூக்கி வைப்பது...மற்ற சிறப்பான விஷயங்களை மறைப்பது இருட்டடிப்பு செய்து நடிகர் சங்க இனைய தளத்தில் வந்துள்ள செய்தி மட்டும் எப்படி என்ன விதத்தில் எந்த கௌரவத்தில் உண்மை என்று பொதுமக்களால் ஏற்றுகொள்ள முடியும் என்று நினைக்க முடியும் ?
சமீப நடிகர் சங்க தேர்தல் மீடிங்கில் பலவற்றில் SV சேகர் அவர்கள் நடிகர் திலகம் கட்டிடம் கொண்டுவந்த சூழல் அவர்களுடைய கஷ்டங்கள், தியாகம் உழைப்பு பற்றி எடுத்து சொன்ன நாள் வரை , அதன் கண்ணொளி YOUTUBE தரவேரிய வரை நடிகர் சங்கம் இனைய தளத்தில் இப்போது பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை தாங்கி நடிகர் சங்க இனைய தள பக்கங்கள் இல்லவே இல்லை.
அதற்க்கு பின்னர்தான் அவசரம் அவசரமாக சங்கத்தின் இணையதளத்தில் இப்போதுள்ள CONTENT வந்துள்ளது என்பது உங்களுக்கு கூடுதல் தகவல் !
நான் ஏன் கூறுகிறேன் என்றால் காரணம் நடிகர் சங்க தேர்தல் விஷயங்கள் அதில் பதிவு செய்கிறார்களா என்று நான் தொடர்ந்து பார்த்தவன் ...அப்போதெல்லாம் இது இல்லவே இல்லை !
3. 1971 முதல் 1981 வரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் சங்க தலைவராக இருந்துள்ளார்.
14 வருடங்கள் பலர் தலைவர்களாக நடிகர் சங்கத்தில் கோலோச்சினார்கள் !
அவர்கள் சிவாஜி கணேசன் அவர்கள் தலைவராக வரும்வரை என்ன செய்தார்கள் நடிகர் சங்க கட்டிடம் கொண்டுவருவதற்கு ?
நான் நம்புவதெல்லாம் ...சிவாஜி கணேசன் வந்தால் எப்படி எல்லாம் அவரை சிக்க வைக்கலாம் என்று 14 அம்ச திட்டம் மட்டுமே தீட்டியிருப்பார்கள் என்று !
அந்த நாடகம் தானே சிவாஜி கணேசன் அவர்களை பொருத்தவரை அரங்கேறி உள்ளது ! அரங்கேறிகொண்டிருக்கிறது !
ஸ்டேட் பேங்க் மூலம் கட்டிடம் கட்ட கடன் வாங்கியது ஒரு புறம் இருக்கட்டும்.
ஆனால் ஸ்டேட் பேங்க் மூலம் கடன் பெறப்பட்டதாக கூறப்படுவது எந்த வருடம்?
எத்துனை பகுதிகளாக பெற பட்டது என்று எந்த தகவலும் நடிகர் சங்க இணையதளத்தில் இல்லை.
இப்படி அரை குறை சம்பவங்களை தொகுத்து பதிவு செய்துள்ளதை பொதுவாக படிப்பவர்கள் என்ன நினைப்பார்கள் ?
கடன் 1971 இல் பெறப்பட்டதாகதானே நினைப்பார்கள் ?
கட்டிடத்தை 1979 வரை ஏன் கட்டாமல் சிவாஜி இருந்தார் என்று சிவாஜி கணேசன் அவர்களை அல்லவா தவறாக நினைப்பார்கள் ?
என்னமோ சிவாஜி கணேசன் அவர்கள் நடிகர் சங்க கட்டிடத்திற்கு வாங்கிய பணத்தை சும்மா வைத்துகொண்டு கட்டாமல் வட்டி மேல் வட்டி ஏறியது என்று தான் தவறாக நினைப்பார்கள் !
நீங்களே என்ன எழுதினீர்கள் சிவாஜி அகலக்கால் வைத்தார் என்று தானே ?
இந்த அரைகுறை மற்றும் முக்கிய விழுங்கப்பட்ட, மறைக்கப்பட்ட தகவல் பதிவு செய்யாதவரை , சங்க இனைய தளத்தில் அவசர கதியில் வெளிவந்துள்ள அரை குறை தகவல் படிப்பவர்கள் அப்படி நினைக்க மட்டுமே வாய்ப்புண்டு !
அப்போது சிவாஜி பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கதிலயே இந்த பதிவு அரை குறையாக, சம்பவத்தை மட்டும் கோர்த்து ஜோடிக்கப்பட்டு நடிகர் சங்க இனைய தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது..என்பது தெளிவாக தெரிகிறது....
கடன் பெறப்பட்ட ஆண்டை ஏன் இவர்கள் பதிவு செய்யவில்லை ? அரை குறை தகவலை இணையதளத்தில் ஏன் சங்கம் பதிவிடவேண்டும் ? -
தாங்கள் உட்பட இந்த திரி நண்பர்கள் என்ன உரைப்பீர்கள் ? அதை நீங்கள் அவர்களிடம் தான் போய் கேட்கவேண்டும் என்று ! இதுதான் பதிலாக வரும் அதுவும் எனக்கு புரிகிறது.
நீங்கள் உட்பட அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் இனி வருவன !
ஸ்டேட் பேங்க் நுங்கம்பாக்கம் கிளையில் கடன் பெற விண்ணப்பமும் அதனை எப்படி செலுத்துவோம் என்ற கடிதமும் சங்கம் சார்பாக கை எழுத்திட்டு கொடுக்கப்பட்ட வருடம் 1976 ஏப்ரல் மாதம் (NEW FINANCIAL இயர்).
இந்த முயற்சி 1974 வருடம் தீபாவளி சமயத்தில் நடந்த சங்க பொதுக்குழு கூடத்தில் ஆலோசிக்கப்பட்டு, பேசப்பட்டு, 1975 இல் முடிவெடுத்து சங்க நிலத்தை அடமானம் வைக்காமல் இதனை செய்யவேண்டும்என்ற முக்கியமான விஷயத்தை நடிகர் திலகம் அவர்கள் தமிழகத்தை சேர்ந்த LEADING TRIBUNAL ADVOCATE திரு RAMAN , கேரளா மாநிலத்தை சேர்ந்த திரு HARISH SALVE, TTK மற்றும் INDIA CEMENTS குழும உயர் வக்கீல் குழுக்களின் அறிவுரையின் பேரில் ஸ்டேட் பேங்க் நிர்வாகத்திடம் நடிகர் சங்க கட்டிட நிதிக்கு அணுகினார்.
அதுவும் பொதுக்குழு தீர்மானம் கலந்தாலோசனை பெற்ற பிறகு ...இதுபோல கடிதம் கொடுக்கலாம் என்று அனைவரும் ஒருமனதாக ஒத்துகொண்டபிறகு மட்டுமே கொடுக்கமுடியும்...காரணம் இது நடிகர் சங்க கட்டிட விவகாரம்...தனிச்சை முடிவு அல்ல ! ஆகவே இன்னது கொடுக்கபோகிறோம் வங்கிக்கு....இப்படி கொடுக்கப்போகிறோம் வங்கிக்கு என்று அனைவரும் ஒத்துகொண்ட பிறகே இது நடந்திருக்க முடியும்....அவருக்கு தெரியாது...இவருக்கு தெரியாது...என்பதெல்லாம் ஒத்துகொள்ளவே முடியாத விஷயம் வங்கி விஷயத்தை பொருத்தவரை !!!
நடிகர் திலகம் நினைத்திருந்தால் நடிகர் சங்க இடத்தினை COLLATERAL ஆக ஸ்டேட் பேங்க் இடம் வைத்து நிலத்தின் பெயரில் கடன் வாங்கி இருக்கலாம்...! 1950உகல் மத்தியில் வாங்கிய நிலம் 1976 கால கட்டங்களில் நல்ல ஒரு தொகை கொண்ட சொத்தாக மாறி இருந்தது ! இந்த சுலபமான முறையை நடிகர் திலகம் கையாளவில்லை...
காரணம் ....
அனைவரும் கஷ்டப்பட்டு வாங்கிய இடம்...அதற்க்கு இம்மி அளவு கூட எந்த வகையிலும் பிரச்சனை வரக்கூடாது என்ற மிக உயர்ந்த நல்ல எண்ணம் மட்டுமே ஆகும்...!
அவருடைய அந்த நல்ல எண்ணத்தின் பிரதிபலிப்பால் தான்...ஸ்டேட் பேங்க் CASE போட்டபோது ...ராதாரவி அவர்களால் " நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கவில்லை...கட்டிடம் கட்ட மட்டும் தான் கடன் வாங்கப்பட்டது " என்று கேஸ் ஜெயிக்க முடிந்தது !
முதலில் அதனை உணர்ந்து கொள்ளவேண்டும் !
ஸ்டேட் பேங்க் சட்ட திட்டங்கள் கடுமையானவை என்பது உலகறிந்த விஷயம். அவ்வளவு எளிதில் பணம் பட்டுவாடா பண்ண மாட்டார்கள் ! அன்றும் இன்றும் !
போதிய RECOMMENDATIONS இருந்தும் COLLATERAL SECURITY இல்லாத காரணத்தால், மேலும் 1976 LOAN DISBURSEMENT பட்ஜெட்இல் கேட்கப்பட்ட தொகை இல்லாத காரணத்தால் அந்த வருடம் தர இயலாது...1977 புதிய FINANCIAL YEAR வரும்போது நிச்சயம் ஏதாவது செய்வதாக கூறினார்கள் STATE BANK OF INDIA அதிகாரிகள்.
அதன்படி APRIL மாதம் பேச்சு வார்த்தை தொடங்கி கேட்கப்பட்ட தொகை கடனாக வழங்க முறையீடு தலைமை அலுவலகத்தில் அனுப்ப (WRITTEN CONSENT ) வங்கியின் கிளை மேலாளரால் பரிந்துரைக்கப்பட்டது !
அதன் பிறகு நடிகர் திலகம் அவர்களுடைய தனிப்பெரும் செல்வாக்கினை பயன்படுத்தி கோரிக்கை எழுப்பி ....காட்டமான விதிமுறைகள் சற்று தளர்த்தப்பட்டு கடன் கொடுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஆக சிவாஜி கணேசன் அவர்கள் நடிகர் சங்க தலைவராக வந்தவுடன் (1971 இல்) பணம் பட்டுவாடா செய்யப்பட்டதா அல்லது கட்டிடம் கட்டப்பட்ட காலத்தில் பட்டுவாடா செய்யப்பட்டதா என்பது இதில் இருந்தே நன்கு விளங்கும். பணம் கடனாக 1971 பெறவில்லை என்பது இதில் இருந்து அனைவருக்கும் வெளிச்சமாகிறது !
VKR புத்தக பதிவு ஒருபக்கம் இருந்தாலும் ... கட்டிடம் குறித்த நேரத்தில் கட்டிமுடிக்க மிக மிக முக்கிய காரணம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், திரு மேஜர் சுந்தர்ராஜன் அவர்கள் மற்றும் திரு VKR அவர்கள். இவர்கள் மூவரும் மாறி மாறி கட்டிடம் கட்டும்போது கூடவே பெருமளவு இருந்ததால் தான் நடிகர் சங்கம் பெருமை பட இன்று பேசும் நடிகர் சங்க கட்டிடம் துரிதமாக கட்டிமுடிக்கப்பட்டது ....அப்போதைய முதலமைச்சராக இருந்த திரு மக்கள் திலகம் அவர்களால் 1979 இல் திறந்து வைக்கப்பட்டது !
இதை எவராலும் மறுக்க முடியாது எப்போதும் போல மறைக்க வேண்டுமானால் முயற்சித்தால் முடியும் சில காலங்கள் வரை !
இந்த உண்மை வரலாற்றை எல்லாம் நடிகர் சங்க இனைய தளத்தில் மிக சௌகர்யமான முறையில் மறந்து என்னமோ 1971 இல் நடிகர் சங்க தலைவராக சிவாஜி கணேசன் பதவி ஏற்றவுடன் ஸ்டேட் பேங்க் போய் கேட்டவுடன் பல லட்ச ருபாய் கொடுத்ததுபோல...பத்திகளை சங்க இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
ஆனால் இவர்கள் நடத்திய நட்சத்திர இரவு நடத்த மட்டும் என்னமோ இவர்கள் மட்டுமே படாத பாடு பட்டு வியர்வை சிந்தி உழைத்து வந்தது போல எழுதியுள்ள பத்தியை பார்த்தாலே தெரிகிறது.
சிங்கபூர் மலேசியா நகரங்களில் நடந்த அந்த நட்சத்திர இரவு நிகழ்ச்சியில் விளம்பரம் மூலம் மட்டுமே பல நூறு கோடி ருபாய் சம்பாதிக்கும் வாய்ப்பு போனது யாருக்கு ?
தனியார் தொலைகாட்சிக்கு !!
இதனை, மிகவும்.????..கஷ்டப்பட்டு நடத்திகொடுத்த நிறுவனம் எந்த நிறுவனம் என்று சங்க இணையதளத்தில் பதிவு செய்துள்ளது ? - RADAN TV NETWORKS!!!
இது யாருடைய நிறுவனம் ?
உலகிற்கே தெரியும் !
ஆனால் அதனை, ரஜினி, கமல் உட்பட அனைத்து கலைஞர்களும் பங்குகொண்ட மிக மிக பிரபலமான ஒரு நட்சத்திர நிகழ்ச்சிக்காக வெறும் 2.5 கோடி ருபாய் மட்டுமே தான் இவர்கள் வாங்கியிருக்கிறார்கள் ..அதாவது கணக்கில் காட்டி இருக்கிறார்கள் ....! இதுவும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு விஷயமாகும் !
நேரிடையாக டிக்கெட் விநியோகம் ஒரு குழு அமைத்து வசூல் செய்து இருந்தால் நடிகர் சங்கத்தில் இன்று வந்து சேர்ந்திருக்க வேண்டிய தொகை பல கோடி !
கடன் கேட்கும்போது எந்த வங்கியும் நீங்கள் எப்படி கடனை திரும்ப செலுத்துவீர்கள்...உங்களால் மாதம் எவ்வளவு செலுத்த முடியும்...எவ்வளவு வருடம் TENURE வேண்டும் என்ற கேள்வி நிச்சயம் உண்டு... !
அது Thiru. சிவாஜி கணேசன் என்றாலும் சரி ...Thiru. MGR அவர்கள் என்றாலும் சரி..! மத்திய அரசு செயல்பாட்டில் உள்ள வங்கி சட்டதிட்டங்கள் அந்த பதிலில் திருப்தி அடைந்தால்ஒழிய ஐந்து பைசா கூட கிடைக்காது !
ஆகவே நடிகர் சங்கத்திடம் கேட்கப்பட்ட அந்த கேள்விக்கு பதிலாக தான் மாதா மாதம் குறிப்பிட்ட தொகையை EMI ஆக வும் , வருடத்தில் ஒரு முறை நட்சத்திர இரவு நடத்தி அதில் இருந்து 1 லட்சம் ருபாய் PRINCIPLE ADJUSTMENT கொடுக்கிறோம் என்றும் ஸ்டேட் பேங்க் சட்ட திட்டம் எழுத்து மூலம் கடனை எப்படி அடைப்பீர்கள் என்று கேட்ட விளக்கத்தை எழுத்து மூலம் நடிகர் திலகம் நடிகர் சங்க தலைவராக இருக்கும் பட்சத்தில் கொடுத்தார்...
NOT AT AN INDIVIDUAL CAPACITY AS V.C. GANESAN என்பதை அனைவரும் உணரவேண்டும் !
பணம், கட்டிடம் கட்ட, கட்ட STAGE WISE ஸ்டேட் பேங்க் பட்டுவாடா செய்தது. அனைத்து வங்கிகளும் பட்டுவாடா இப்படிதான் செய்யும் ! இதையும் புரிந்துகொள்ளவேண்டும் !
ஆகவே செல்வகுமார் சார் .....நடிகர் திலகம் 1977-78 இல் வாங்கிய நடிகர் சங்க கடன் அகலக்கால் வைக்கும் அளவிற்கு ஒரு COMPLEX கட்டுவதற்கு அல்ல !
1952 இல் தொடங்கப்பட்ட துணை நடிகர்கள் சங்கம்...தென் இந்தியா நடிக சங்கமாக மாறி....நடிகர் திலகம் அவர்கள் பதவி ஏற்ற 1971 ஆம் ஆண்டு வரை கட்டிடத்தை சாரி...கூரை கொட்டகையாக தான் வைத்திருந்தார்கள் அதாவது சுமார் 18 ஆண்டு காலம் !
நடிகர்களுக்கு அமர உருப்படியான ஒரு இடம் வேண்டும் என்ற சிந்தனை நடிகர் திலகம் அவர்களுக்கு வர காரணம் அதனை செயல்படுத்தி காட்டிய வேகம் ..இதற்க்கு காரணம் ...கலையை , கலைஞர்களை அவர் தம் உயிரை விட அதிகம் நேசித்ததால் மட்டும்தான் !
அதற்க்கு தமிழகத்தில், சங்கத்தில் இருந்தவர்களாலும், அவருக்கு பிறகு சங்கத்தில் வந்தவர் மூலம் கிடைத்த பரிசு ?
வெட்க்கி தலை குனியவேண்டும் சார் ...துரோகம் இழைத்தவர்கள்..இவர் மூலம் பயன் அடைந்தவர்கள், இவரையும் தவறாக எழுதுபவர்கள், எள்ளி நகயாடுபவர்கள் !
திரு அக்பர் அவர்கள் பகிர்ந்த பதிவில் ஒரு பெயரற்ற மனிதன் மனம் குழம்பி மதிகெட்டு எழுதி இருந்தாரே ...ஒரு நடிகன் நடிக்காமல் வேறு என்னதான் செய்யவேண்டுமாம் என்பது கூட தெரியாமல் ...தனி மனித ட்வேஷத்துடன்....அவர் இப்படி நடித்தார்...அப்படி நடித்தார்..நடிப்பில் இப்படி ஓடினார்...அப்படி ஆடினார்...ஐயோ என்று அழுதார்...உய்யோ என்று விழுந்தார் என்றெல்லாம்...காழ்புணர்ச்சி மட்டுமே பொருமி விம்மி வெதும்பி அவர் இருக்கும் இடமே பொசுங்கி போகும் அளவுக்கு வயிதெரிச்சல் கொண்டு பதிவு செய்தாரே...அவரைப்போல உள்ளவரும் தான் !
சிவாஜி கணேசன் என்கிற நடிப்புக்கலைதெய்வம் இல்லை என்றால் எந்த நடிகருக்கும் ஒரு உந்துதல் ஒரு MOTIVATION , ஒரு DEDICATION , சாதிக்கவேண்டும் என்கிற வெறி ...நிச்சயம் தோன்றி இருக்காது ! இது தான் உண்மை !
RKS
திரு. ரவிகிரன் சூர்யா
https://en.wikipedia.org/wiki/Nadigar_Sangam
நடிகர் சங்க கட்டிடம் சம்பத்தப்பட்ட இந்த விடயங்கள் இந்த இனைய தளத்தில் தெரிவித்தல் நலம்
தற்போது தகவல் முழுமையாக இல்லை
Dear Sir,
The information contained in Wikipedia is editable by anybody.
Already the information mentioned there are not correct.
1952-55 - Mr. T.V.Sundaram
1956 - Mr. V. Nagiah
1957 - Mr. NSK
1958-62 - Mr. MGR
1959 - Mrs. Anjalidevi
1960 - Mr. R. Nagendra Rao
1963-64 - Mr. SSR
1982-1985 - Mr. SSR
1965 - 66 Mr. M.V. Swaminathan
1967 - 1971 Mr. KRRamaswamy
1971 - 1981 Mr. Sivaji Ganesan
If you check the details there...you would know about it
Regards
RKS
நினைப்போம்.மகிழ்வோம்-119
"உயர்ந்த மனிதன்."
"அந்த நாள் ஞாபகம்" பாடல்.
"உயர்ந்தவன்..தாழ்ந்தவன்"
என்று பாடுகிற இடம்.
'உயர்ந்தவன்' எனும் சொல்லுக்கு வாக்கிங் ஸ்டிக்கால் வானத்தைக் காட்டுவதோடு, முகத்தில்
காட்டும் கர்வமிகு பாவனை.
'தாழ்ந்தவன்' எனும் சொல்லுக்கு வாக்கிங் ஸ்டிக்கால் பூமியைக் காட்டினாலும், முகத்திலும்
காட்டும் சோர்வான பாவனை.
நினைப்போம்.மகிழ்வோம்-120
"இரு மலர்கள்."
"மன்னிக்க வேண்டுகிறேன்"
பாடல்.
"தித்திக்கும் இதழ் உனக்கு"
என்கிற வரியைப் பாடத் துவங்கும் முன், ஏற்கனவே
முகம் நம்மை நோக்கித்தான்
இருக்கும். இருப்பினும் முகத்தை வேறு புறம் திருப்பிக்
கொண்டு, சரியாக பாடல் வரி
துவங்கும் போது நம்மை
நோக்கி சிரித்த முகம் காட்டுவார்.
( வேறு யாரும் இது போன்ற
வித்தியாசமான முயற்சிகளை
செய்திருக்கிறார்களா.. தெரியவில்லை? )
நினைப்போம்.மகிழ்வோம்-121
"சொர்க்கம்."
'அழகு முகம்' பாடல்.
"அவன் போருக்கு வருவதுண்டு. இடம்
போர்க்களம் ஆவதுண்டு"
-எனக் பெண்கள் கூட்டம்
கேலியாய்ப் பாட...
புன்னகை, வெட்கம்.. எல்லாம்
முகத்தில் தவழ..
உதடு கடித்துச் சிரிக்கும்
சிரிப்பு.
My Dear Brother Mr. Murali Srinivas,
Thank you for removal of the posting made by Mr. Siva, in connection with NADIGAR SANGAM ISSUE.
You know pretty well I usually and normally I never interfere in the postings, praising your beloved Nadigar thilagam Sivaji Ganesan. When any post commenting with adverse remarks with baseless, against my beloved God M.G.R. it not only provokes me to write with emotions but also irritate other Hubbers of the Makkal Thilagam Thread, and thus give way to comment sensitively.
Of late it is noticed that a few Hubbers of the Nadigar Thilagam Thread, with the intention of making themselves to be important and derive the pleasure on their irrelevant postings attacking my beloved God M.G.R. , either directly or indirectly, rather than admiring their beloved Actor Late Sivaji Ganesan .
They fail to accept one basic concept that each person somehow or other may have his own attachment towards specific great personality and understand the feelings.
Mr. Siva is standing on his Statement and claims that it is Right, despite the proof from Nadigar Sangam Website is posted. It clearly indicates he is a person deriving the pleasure, as stated above.
I respected your Words by deleting my post appeared in Page No.116. It is sad to note that even after your earnest appeal, the controversial statement, comes from Mr. Siva.
I, in turn, request you to please ensure such malicious posts are not made in the N.T. Thread, in order to maintain a cordial, harmonious and peaceful relation amongst us.
However, kindly note that the Hubbers of the Makkal Thilagam Thread will React / Respond / Reflect to the proof-less postings, if any, made in the N.T. Thread, without hurting the feelings.
I will be the first person to come forward for Unity and for maintaining Good Relations, so far as non-controversial postings are made.
My Dear Brother Mr. Raghavendra
THANK YOU VERY MUCH FOR UNDERSTANDING MY FEELING AND RESPECTING IT. AS ASSURED IN MY EARLIER POSTING, I WILL BE THE FIRST PERSON TO COME FORWARD FOR UNITY AND FOR ENSURING THE SMOOTH RELATIONSHIP TO PREVAIL BETWEEN BOTH THE THREAD HUBBERS WHEN NO CONTROVERSIAL POSTING IS MADE.
THANKING YOU ONCE AGAIN,
நினைப்போம்.மகிழ்வோம்- 122
"பாட்டும் பரதமும்."
"மழைக்காலம் வருகின்றது"
பாடல்.
கலைச் செல்வியின் அற்புத
நாட்டியத்தில் கொஞ்சமும்
லயிக்காத ஒரு பணக்கார
வியாபாரியாய் தன்னைக்
காட்டிக் கொள்ளும் பாவனையில்...
நடனம் எப்போது முடியும்
என்கிறாற்போல் கை வளைத்து மணி பார்ப்பது..
அருகிலமர்ந்து ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்
விஜயகுமாரை அலட்சியமாய்ப்
பார்ப்பது...
நாட்டியம் நிகழும் கொஞ்ச
நேரத்திற்குள்ளே கூட, சின்ன நோட்டுப் புத்தகம் எடுத்து,
யோசித்து, ஏதோ வியாபாரக்
கணக்குகள் எழுதுவது.
நினைப்போம்.மகிழ்வோம்-123
"கௌரவம்."
"நீயும்,நானுமா" பாடல்.
"அவன் மேல் தொடுத்ததோ
அர்ஜூனன் கௌரவம்" என்கிற
வரி பாடும் போது, தன் மீது
அம்பு தொடுக்கப்படுகிற
பாவனையில், கையை வளைத்து தன் பக்கம் திருப்புவதில் நாமுணரும்
ஒரு அம்பின் வேகம்.
அன்புள்ள ரவிச்சந்திரன் சார் அவர்களுக்கு,
மதுரை - சென்டரல் திரையரங்கில் ஒளிவிளக்கு படத்தின் ஞாயிறு வசூல் 30,000 என்று தவறான தகவலைத் தந்துள்ளீர்கள்.
ஒவ்வொரு முறையும் மதுரை வசூல் பற்றி தவறான தகவல்களே தரப்படுகின்றன. ஏற்கனவே இதயக்கனி படத்திற்கு தவறான தகவல் வந்தபோது உண்மையான வசூல் விபரங்கள் தெரிவித்திருந்தேன்.
மதுரையில் இருந்து வசூல் சொல்பவர்களிடம் உண்மையா என கேட்டுவிட்டு உறுதிபடுத்தி விட்டு எழுதுங்கள் என்று கேட்டிருந்தேன்.
திரு.மதுரை குமார் அவர்கள் வசூல் சொன்னவரை மதுரை பற்றி உண்மையான வசூல் வந்து கொண்டிருந்தது. தற்போது தங்களுக்கு தவறான வசூல் விபரங்களே தரப்படுகிறது.
ஞாயிறு வசூல்
மாலைக்காட்சி 14750
மொத்த வசூல் 24000 இதில் 100 ரூபாய் குறையலாம் அல்லது கூடலாம்.
ஆனால் தாங்கள் 30000 என்று எழுதியுள்ளீர்கள்.
வெள்ளியன்று வசூல் 18300
சனியன்று வசூல் 12500
சாா் என்னைப் பொறுத்தவரை மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் படம் என்பதற்காக வசூலைக் குறைத்தோ எங்கள் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் படம் என்பதற்காக வசூலை அதிகப்படுத்தியோ சொல்லமாட்டேன்.
உங்களுக்கு என் மேல் நம்பிக்கை இல்லையென்றால் தியேட்டர் அல்லது படவிநியோகஸ்தர் போத்தீஸ் கணேசன் அவர்களிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
மதுரை - சென்டரலில் ஞாயிறு மாலைக் காட்சி அதிக வசூலில் முதலிடத்தில் இருப்பது ரஜினிகாந்த் அவர்களின் பாயும் புலி படம் 16500, இரண்டாவது உள்ளது மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் பாவமன்னிப்பு 15500 என்பதைத் தங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
நினைப்போம்.மகிழ்வோம்-124
"பாசமலர்".
"மலர்களைப் போல்" பாடல்.
"மருமகள் கண்கள் தன்னில்
மாமன் தெய்வம் கண்டான்."
என்கிற வரியின் போது,
மருமகப் பெண்ணை வாரி
அணைத்துக் கொஞ்சுகையில்
தெய்வத்தையே பார்த்து
விட்டதாய் முகத்தில் காட்டும்
பரவசம்.
https://scontent.fdel1-1.fna.fbcdn.n...2f&oe=56DE98A6
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
My Dear Brother Ravi Kiran Suriya,
When such controversies are there in the Nadigar Sangam, why the Posting was made by Mr. Siva ? Before posting it, he should have gone through the related Web Site(s) or collected information fully and factually.
Whatever the contents stated in the Nadigar Sangam Website. I mentioned in my Posting without any alteration or modification.
Please understand that I had not raised this Nadigar Sangam Issue in the Thread. I have just replied to the baseless and proofless statements, written by V.K. Ramaswamy and posted by Mr. Siva.
Anyhow, at the request of the Moderator of N.T. thread, I deleted my Post, to make a full-stop and close the issue.
Hope you will understand the reasons behind it.
Thank you.
Affectionately Yours
நினைப்போம்.மகிழ்வோம்-125
"திருவிளையாடல்".
"பாட்டும் நானே" பாடல்.
"நான் அசைந்தால் அசையும்
அகிலமெல்லாமே" எனும் வரி
இரண்டாம் முறையாக வரும்
போது, அற்ப மானிடனின்
ஆணவம் ஒடுக்கும் தெய்வத்தின் ஒரு செயலாய்..
உடல் குலுங்கச் சிரிக்கும்
சிரிப்பு.
Resp.Sir,
I do understand the sensitivity of the post and that's precisely why i casted my vote against posting any such things in thread.
100% am not refuting your views on the NEED OF SUCH POSTING. You can be 200% confident and assured about that.
This post especially i wanted to publish because, like both of us, many think that Nadigar Sangam website would provide clarity on grey areas.
Again, it all depends on how neutral people are when it comes to such things.
Without the consent of the earlier president, am sure, this article would not have got published. I mean, needless to say, both of us know how politics play behind such things.
As an ardent devotee of Nadigar Thilagam, I had to seek the help of few officials related to get into the skin of the Building Debt gossips.
The people whom i had spoken, though retired now, did not want me to quote their name due to obvious reasons were kind enough to explain me the procedure followed to disburse that amount. The confidentiality part requested by them am sure, you are a super senior caliber professional and would accept and understand the spirit of it.
else there is nothing i this sir....end of the day, no general public like us was directly affected or had gained by this debt or by construction of this building or demolition of this building.
Thanks for your reply sir :-D
Affectionate as always,
RKS
https://scontent.fdel1-1.fna.fbcdn.n...d7&oe=56E8F868
தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களுக்கு வின் ஸ்டார் விக்ரம் பிரபு அவர்கள் வெள்ள நிவாரண நிதியாக ரூபாய்.5,00,000 லட்சத்தை தமிழக முதல்வர் அவர்கள் நடிகர்சங்கம் பொற்காலமாக திகழ்ந்தது நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் தலைவராக இருந்த போது தான் என்பதை நினைவு படுத்தும் வகையில், நடிகர்சங்கத்திலும் பொற்காலத்தை உருவாக்கிய தலைவர் சிவாஜி அவர்களின் படத்திற்கு முன்னால் தற்போதைய நடிகர்சங்க தலைவர் நாசர் அவர்களிடம் வழங்கினார்.
தமிழக முதல்வர் கூறியது போல் திரு.நாசர் அவர்கள் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் கீழ் நடிகர்சங்கம் இருந்த பொற்காலத்தை மீண்டும் கொண்டு வருவார் என்று நம்புவோமாக.
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
நடிகர் திலகம் மற்றும் அவருடைய புதல்வர் இளைய திலகம் பிரபு அவர்கள் பல நல்ல காரியங்கள் செய்துள்ள விஷயம் அவர்களுடைய பெருந்தன்மை காரணமாக வெளியில் தெரியாமல் இருந்தது. அதன் பலன், விஷயம் தெரியாமல் சிலர், அவர்கள் என்னென்ன செய்தார்கள் என்பதை நன்றாக தெரிந்த பலர் .... அவர்கள் என்ன செய்தார்கள் மக்களுக்கு என்ற ஒரு கேள்வியை, ஒவொரு கட்டத்திலும் கேடிருக்கின்றனர்..கேட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
நல்ல காரியங்கள் செய்ய விளம்பரம் தேவை இல்லை அது மனதையும் ஆத்மத்ரிப்தியை பொறுத்த விஷயம் என்பதை உணர்ந்ததால் நடிகர் திலகம் மற்றும் இளைய திலகம் விளம்பர படுத்திகொன்டதும் இல்லை..அதனால் ஆதாயமும் தேடியதில்லை.
நடிகர் திலகம் சிவாஜி பிரபு டிரஸ்ட் மூலமாக இப்போது சுமார் 170 பிள்ளைகள் படிப்பறிவு பெறுவது யாருக்கு இதுவரை தெரியும் ? எவருக்கும் தெரியாது...ஆனால் கல்விக்கண் நடிகர் திலகம் சிவாஜி பிரபு டிரஸ்ட் 170 பிள்ளைகளுக்கு திறக்க வகை செய்தது எந்த சுயநலமும் பாராமல் முக்கியமாக விளம்பரம் செய்யாமல், செய்த ஒரு நல்ல காரியம் ! விஷயம் !
ஆனால்...இப்போது நடப்பது கலிகாலம் !
தாய் தந்தையருக்கு செய்தால் கூட அதை ஆதாரத்துடன் செய்யவேண்டிய சூழலில் உலகம் இயங்கி கொண்டு இருக்கிறது !
இந்த தருணத்தில் இனிய திலகம் விக்ரம் பிரபு தமிழக வெள்ள நிவாரண நிதியாக ருபாய் 5 லட்சம் நடிக்க வந்த புதிதிலயே கொடுக்க முன்வந்து...அதை உரியவரிடம் கொடுத்துள்ளது மிகவும் பாராட்ட தக்கது !
அதை விட பாராட்ட தக்கது ....போட்டோ எடுத்து ..இந்த விஷயத்தை இனைய தளம் மற்றும் உரிய முறையில் ஒரு ஆதாரத்திற்காக பதிவு செய்துள்ளது!
மிகவும் புத்திசாலித்தனம் மட்டும் அல்ல...
.....தான் மட்டும் அல்ல...தம்முடைய தந்தை மற்றும் பாட்டனார் வழியில் தாமும் நல்ல காரியங்களை நடிக்க வந்த புதிதிலேயே செய்ய துவங்கி உள்ளதை தெளிவு படுத்திய விதம் மெச்ச தகுந்தது !
Jaihind !!
Rks