A write up on Shanti Theatre and my views on the silverscreen website:
Printable View
From Vikatan by Panju Arunchalam,
பவநாராயணாவைச் சந்திக்கப் போனேன். ‘செப்பன்டி குட் ஸ்டோரி’ - தெலுங்கு, ஆங்கிலம், தமிழ் என மும்மொழி கலந்து பேசினார். ‘நிறையக் கதைகள் வெச்சிருக்கேன் சார். யார் ஆர்ட்டிஸ்ட்?’ - எனக்கு அவர் அறிமுகம் இல்லாதவர் என்பதால், எந்தவித பயமும் இல்லாமல் பேசினேன். தவிர, அவர் பெரிய ஆள் என்பது அப்போது எனக்குத் தெரியாது. ‘நுவ்வே... அதெல்லாம் உனக்கு எதுக்கு. இட்ஸ் மை ப்ராப்ளம். யூ ஆர் தி ஸ்டோரி ரைட்டர். டெல் த ஸ்டோரி’ என்றார்.
‘யார்னு சொன்னீங்கன்னா, அவங்களுக்கு தகுந்த கதை சொல்வேன்’ என்றேன்.
`எம்.ஜி.ஆர்., சிவாஜி ரெண்டு பேரும் பெத்தவாடு. பட் சிவாஜி ஈஸி அப்ரோச். அதனால அவருக்கே செப்பு’ என்றார். எனக்கு சந்தோஷம். காரணம், எந்த நடிகருக்கு எப்போது வேண்டுமானாலும் கதை கேட்கலாம் என்பதால், நான் சிவாஜிக்கும் கதை பண்ணிவைத்திருந்தேன். அதைச் சொன்னேன்.
பிறகு, அவர் சிவாஜி வீட்டுக்குப் போய் அவரின் தம்பி சண்முகத்தைப் பார்த்துப் பேசியிருக்கிறார். சிவாஜியின் கால்ஷீட், சம்பளம் உள்ளிட்ட விஷயங்களை சண்முகம்தான் கவனிப்பார். ‘யார் பஞ்சுவா? நல்லா தெரியுமே, நம்ம பையன். வரச்சொல்லுங்க, கேட்ருவோம்’ எனச் சொல்லியிருக்கிறார். இதற்கு இடையில் படத்தின் இயக்குநராக கே.எஸ்.பிரகாஷ்ராவை முடிவுசெய்தனர். அவர் தெலுங்கில் மிகப் பெரிய இயக்குநர். (நடிகை ஜி.வரலட்சுமியின் கணவர். பிரகாஷ் ஸ்டுடியோ உரிமையாளர். அவர், மகன்கள் அனைவரும் இயக்குநர், ஒளிப்பதிவாளர் என சினிமா குடும்பம். சிவாஜி, வாணிÿ நடித்த ‘வசந்தமாளிகை’யை இயக்கியவர்.)
கதை சொல்ல சிவாஜி வீட்டுக்குப் போனேன். சிவாஜி புரொடக்*ஷனில் அப்போது கதை கேட்க சண்முகம் உள்பட நான்கைந்து பேர் இருந்தனர். எனக்கு என்றைக்கும் இல்லாத பதற்றம். காரணம், பவநாராயணா பெரிய தயாரிப்பாளராக இருந்தாலும் அறிமுகம் இல்லாதவர். அவரிடம் பயம் இல்லாமல் கதை சொல்லிவிட்டேன். ஆனால், கவிஞருடன் செல்கையில் சண்முகம் எனக்கு நல்ல அறிமுகம். என்ன சொல்வாரோ என்ற தயக்கம். உதவியாளராக இருந்த பையனை திடீரென கதாசிரியனாக உட்காரச் சொன்னால்? கதை கோர்வையாக வரவில்லை. நான் நினைத்ததுபோலவே உணர்ச்சியுடன் என்னால் கதையைச் சொல்ல முடியவில்லை. ‘இல்லண்ணே இதுக்கு அப்புறம்தான் அது, அதுக்கு அப்புறம்தான் இது’ - நான் சொதப்பியது எனக்கே தெரிந்தது.
‘சரி பஞ்சு, நான் புரொடியூசர்கிட்ட பேசுறேன்’ என்ற சண்முகம், பிறகு பவநாராயணாவிடம் பேசியிருக்கிறார். ‘நீங்களும் முதன்முதல்ல தமிழுக்கு வர்றீங்க. ஹெவி சப்ஜெக்ட்டா எடுத்து பண்ணலாம். பஞ்சு சொன்ன கதை, அண்ணணுக்கு சரியா வருமானு சந்தேகமா இருக்கு’ எனச் சொல்லியிருக்கிறார். பின்நாட்களில் நான் வளர்ந்த பிறகு, அந்தக் கதையின் ஒரு பகுதியை ஜெய்சங்கரையும் ÿகாந்தையும் வைத்து ‘உன்னைத்தான் தம்பி’ எழுதினேன். இன்னொரு பகுதியைக் கொஞ்சம் மாற்றி ரஜினியை வைத்து ‘ராஜா சின்ன ரோஜா’ எழுதினேன். ஏவி.எம் தயாரித்த அந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனது. இன்று உள்ள அனுபவத்தில் சொல்கிறேன்... அன்று அந்தக் கதையை சிவாஜி பண்ணியிருந்தால் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும்.
அய்யா நடிகர் திலகத்தின் புகழ் காக்கும் ஆவணங்களைத் தான் காக்கும் ஆருயிர் நண்பர்
திரு.செந்தில்வேல் அவர்களின்
சந்தோஷ நல்வாழ்வை கடவுள்
காக்கட்டும்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
Happy Birthday wishes Senthilvel!
Greetings for your continued service to NT's documentations
Wish you many more happy returns of the day Mr Senthilvel
S Vasudevan
இன்று (21-05-2016) பிறந்தநாள் காணும் திரு.செந்தில்வேல் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
From Dinamani,
http://media.dinamani.com/2016/05/21...original/8.jpg
பாலும் பழமும் நினைவினில் ஏந்தி சரோ கூறியவை-
‘பாலும் பழமும் படத்தில் நடிகர் திலகம் டாக்டராகவும், நான் அவரது காதல் மனைவியாகவும் நடிச்சோம். படப்பிடிப்பு முடிஞ்சதுக்கு அப்புறம் சிவாஜி என்னிடம், ‘சரோஜா... இந்தப் படத்துல நீ என்னை விட நல்லா நடிச்சிருக்கே’என்றார். நான் சிலிர்த்துப் போயிட்டேன்.
அவர் நடிப்புக்கு முன்னாடி நானும் கொஞ்சம் நடிச்சிருந்தேன். ஆனா என் நடிப்பை அவர் நடிப்புக்கும் மேலா வெச்சு சொன்னார் பாருங்க. அதுதான் அவரை மத்தவங்கக் கிட்டயிருந்து வித்தியாசப்படுத்துது.
அந்த கேரக்டருக்காக நானும் கொஞ்சம் கஷ்டப்பட்டுருக்கேன். அதில் நான் இரண்டு விதமாத் தெரிவேன். அதாவது டி.பி. பேஷண்டா இருக்கிறப்ப ரொம்ப வற்றி உலர்ந்து காணப்படுவேன். மத்த சீன்கள்ள வழக்கம் போல் தெரிவேன்.
டி.பி. பேஷண்ட் சீன்ல நான் அப்படி மெலிவா தெரியறதுக்கு காரணம் நான் கிடந்த கொலைப்பட்டினிதான். சாப்பாடு நேரத்துல கொஞ்சம் ஜூஸ் மட்டுமே சாப்பிட்டு உடலை இளைக்க வெச்சிருக்கேன்.
ஒரு வேளை என் கேரக்டர் மேலே நான் காட்டின அக்கறை சிவாஜி சாரை இப்படிச் சொல்ல வெச்சிருக்கலாம்’.
பாகப்பிரிவினையைத் தொடர்ந்து சரவணா பிலிம்ஸ் தயாரித்த படம் பாலும் பழமும். செப்டம்பர் 9ல் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியானது. சென்னையில் 20 வாரங்களைக் கடந்து ஓடியது.
1961ல் ஜனாதிபதி பரிசுக்காகச் சென்ற நாலு படங்களும் சிவாஜியுடவை. அவற்றில் மூன்று பீம்சிங் இயக்கியவை.
அவை மொத்தமாக மோதியதில், பாலும் பழமும் பரிசைத் தவற விட்டது.
அகில இந்தியாவிலும் பாவமன்னிப்பு மிகச் சிறந்த படம் என்கிற விருதையும், பாசமலர் சான்றிதழையும், கப்பலோட்டிய தமிழன் வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றது.
நான் தவழ்ந்த என் தாய் வீடு
=====================
“சாந்தி” நினைக்கும்போதும் சொல்லும்போதும் சொல்ல முடியாத பரவசத்தை ஏற்படுத்தும் ஒரு மந்திர சொல். நான் வாலிபனாக பதினைந்து ஆண்டுகள் தவழ்ந்து திரிந்த என் தாய் வீடு. அது ஒரு அரங்கம் மட்டுமல்ல ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் இதயத்துடிப்பு. ஒவ்வொரு நாள் மாலையின் சந்தோஷம். மறக்க முடியுமா அதன் மணியான நாட்களை. பள்ளி, கல்லூரி, அலுவலகம் இவற்றுக்கு கூட வாரம் ஆறு நாள், ஐந்து நாள் என்று போனது உண்டு. ஆனால் வாரத்தில் ஏழு நாட்களும், மாதத்தின் முப்பது நாட்களும் தவறாமல் ஓடிசசென்ற, தேடிசசென்ற, நாடிசசென்ற ஒரே இடம் அது “சாந்தி” மட்டுமே. பெயர் வைத்தவர் தீர்க்கதரிசி. அங்கே சென்றால் மட்டுமே எங்களுக்கு சாந்தி என்று உணர்ந்து வைத்திருக்கிறார்.
அங்கு பார்த்து மகிழ்ந்த திரைக் காவியங்கள்தான் எத்தனை, எத்தனை. அதை விட பல மடங்கு அதிகமாக சாந்தி வளாகத்தில் நின்று, அமர்ந்து பேசிய, பகிர்ந்துகொண்ட, சுகமாக உரையாடிய, சூடாக விவாதித்த விஷயங்கள்தான் எவ்வளவு. அங்கு எத்தனை மணி மணியான நண்பர்கள் கிடைத்தனர். அவர்களுடன் பேசித் தீர்த்த விஷயங்கள் எவ்வளவு, தகவல் பரிமாற்றங்கள், ஆவண பரிமாற்றங்கள், வரப்போகும் படங்களுக்கு எந்த எந்த மன்றங்கள் சார்பில் என்ன என்ன அலங்காரங்கள் செய்வது என்று எங்களுக்குள் பணிகளை பிரித்துக்கொண்ட பாங்கு. (பெரும்பாலும் மெயின் கட் அவுட்டுக்கு ராட்சத மாலை போடும் உரிமை எங்கள் மன்றத்துக்கே கிடைக்கும்).
வேறு அரங்குகளில் நடிகர் திலகத்தின் படங்கள் ரிலீஸாகி இருந்தாலும் அவற்றைப்பற்றி கருத்து பகிர்வுகள், விவாதங்கள், வெளியூர் நிலவரங்கள் குறித்த அலசல்கள் அனைத்தும் நடைபெறும் இடமாக விளங்கியது சாந்தி வளாகம். அந்த அளவுக்கு ரசிகர்களின் சந்திப்பு கேந்திரமாக, சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் ஒன்று கூடும் இடமாக இருந்து வந்தது. தற்போது மூடப்பட்ட வண்ணமுகப்பு கொண்ட சாந்தியைவிட, உடலெங்கும் “சந்தனவண்ணம்” பூசிக்கொண்டு கம்பீரமாக நின்ற அன்றைய சாந்திதான் எங்கள் மனதில் நிறைந்திருக்கிறது. அந்த வளாகத்தில் எங்கள் கால்கள் படாத இடமே இல்லையெனலாம். அங்கு ‘இருந்த’ தண்ணீர் பவுண்டன் தொட்டியின் ஓரம் அமர்ந்து கலந்துரையாடிய அந்த பதினைந்து வருடங்களும் பசுமையானவை. கல்வெட்டாக மனதில் பதிந்து விட்டவை.
அங்கு கிடைத்த அற்புதமான நண்பர்களை மறக்க முடியுமா?. கோவை சேது, தி.நகர் வீரராகவன், மந்தைவெளி ஸ்ரீதர், திருவான்மியூர் சங்கர், நமது ராகவேந்திரன் சார், வடசென்னை வாத்தியார் ராமன், பாம்குரோவ் சந்திரசேகர், மாரீஸ் சந்திரசேகர், குருஜி, சிவா, பல்லவன் விஜயகுமார், கும்பகோணம் ஸ்ரீதர், கவிஞர் கா மு ஷெரீப் அவர்களின் மகன் சீதக்காதி, புரசைவாக்கம் ஆனந்த் என்று இன்னும் எத்தனை எத்தனை நண்பர்கள் (1971 முதல் 1984 வரை) தினமும் மாலை 5 மணிக்கு உற்சாகத்துடன் ஒன்று கூடுவதும் 9 மணிக்கு மேல் பிரிய மனமில்லாமல் பிரிவதும், இடைப்பட்ட நேரத்தில் நடிகர்திலகத்தின் சாதனைகளை அலசோ அலசென்று அலசுவதும் மறக்க முடியுமா அந்த நாட்களை.
இதோ நாங்கள் கூடிக்குலாவிய எங்கள் தாய் வீடு மூடப்பட்டு விட்டது. இன்னும் சிறிது நாட்களில் இடிக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
அழியாத சுவடுகளாக நினைவுகள் மட்டுமே இதயங்களில் தங்கியிருக்கும் மண்ணறைக்கு செல்லும் வரை.
Dear senthilvel sir,
many many happy returns of the day
டியர் கார்த்திக் சார்,
நீண்ட நாள் கழித்து தங்களுடைய பதிவைக் காண்பது மகிழ்ச்சி.
தங்களின் சாந்தி தியேட்டர் அனுபவங்கள், எல்லா ரசிகர்களுக்கும் உள்ள ஏக்கங்கள் ஆகியவற்றை அழகாகக் கூறியிருக்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரை, சிறுவயதில் விடுமுறையில் சென்னைக்கு, என்னுடைய சகோதரர் வீட்டிற்கு வரும்போது, சாந்தி திரையரங்கை வந்து பார்த்துவிட்டுச் செல்வதையே ஒரு பாக்கியமாகக் கருதினேன். அப்போது அங்குள்ள யாரும் எனக்குத் தெரியாது. அப்போதெல்லாம், திரையரங்கிற்குள் சென்று திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அங்கு சுவற்றில் எழுதப்பட்டிருந்த, நடிகர்திலகத்தைப் பற்றிய சாதனைத் தகவல்களையெல்லாம் ஆச்சர்யத்தோடு பார்த்துச் சென்றிருக்கிறேன்.
தாங்கள் மற்றும் திரு.ராகவேந்திரன் சார் போன்ற ஜாம்பவான்களின் சாந்தி தியேட்டர் அனுபவங்களை பார்க்கும்போது நான் மிகவும் குழந்தை. ஆனால், உங்களின் அனுபவங்களைப் படிக்கும்போது ஏற்படும் பிரமிப்பே, என்னையும் உங்கள் அனுபவங்களோடு பயணிக்க வைக்கிறது. தாங்கள் சாந்தியில் பயணித்த நாட்களாக 1971 முதல் 1984 வரை என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் முதன் முதலில் சென்னை வந்தபின், 1985-ல் முதல் மரியாதை படத்தைத்தான் முதன் முதலாக பார்த்து மகிழ்ந்தேன். அதன் பிறகுதான் எனக்கும் சாந்தி திரையரங்கத்திற்கும் நெருக்கம் அதிகமானது. தியேட்டரோடு மட்டுமல்லாமல், தியேட்டர் உரிமையாளரான எனது கனவுலக நாயகனாகத் திகழ்ந்த நடிகர்திலகத்தொடு நெருங்கிப் பழகி, பணியாற்றக்கூடிய வாய்ப்பும் கிடைக்கும் என்று கனவில்கூட நினைக்காத நிலையில், கடவுள் அருளால் அந்த பாக்கியமும் எனக்குக் கிடைத்தது.
அதன் உரிமையாளர்களாக இருந்த சண்முகராஜா பெயரின் முன்பாதியையும் (san), உமாபதி பெயரின் பின்பாதியையும் (thi) இணைத்து இப்பெயர் வைக்கப்பட்டதாகவும், பின்னாளில் இத்திரையரங்கை வாங்கிய நடிகர்திலகம், தன் மகளுடைய பெயராக இருப்பதால் அதனை மாற்றாமல் அப்படியே வைத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. (சாந்தி திரையரங்கின் முந்தைய உரிமையாளர்களில் ஒருவரான சிவகங்கையைச் சேர்ந்த திரு.சண்முகராஜாவிற்கு நெருக்கமான திரு.மாரி சேர்வை என்பவர் என்னிடம் தெரிவித்த தகவல் இது) இந்தத் தகவல் உண்மையா என்பதுகுறித்து தெரிந்த நண்பர்கள் பதிவிடவும்.
காலத்திற்கு ஏற்ப மாறுதல்களை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதுபோல இப்போதுள்ள சூழ்நிலையில், mallகளோடு கூடிய சிறிய திரையரங்கங்கள்தான் தாக்குப்பிடிக்கமுடிகிறது. இத்திரையரங்கத்தை இடித்து கட்டப்படும் mallல் வரும் தியேட்டருக்கு சாந்தி பெயர் சூட்டப்படும் என்று இளையதிலகம் பிரபு அவர்கள் தெரிவித்துள்ளது நமக்கெல்லாம் ஆறுதல் அளிக்கும் விஷயமாகும். அதோடு, மற்றொரு திரையரங்கிற்கு நடிகர்திலகத்தின் பெயர் சூட்டப்படும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. எதிர்பார்ப்போம்.
நன்றி.
வாழ்த்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
https://scontent.fdel1-2.fna.fbcdn.n...af&oe=57E7B63B
https://scontent.fdel1-2.fna.fbcdn.n...8b&oe=57E60278
https://scontent.fdel1-2.fna.fbcdn.n...fc&oe=579E2B8E
https://scontent.fdel1-2.fna.fbcdn.n...e6&oe=579D3778
The Fountain that existed in the Shanti Theatre. Behind we can see the wall wherein we had painted the list of films of Nadigar Thilagam. This was conceived by myself and the theatre management was so kind enough to immediately concede our request and we almost stayed at the Shanti for almost a month. The preliminary work was started in the end of 1982 and the painting was started around the month of April-May 1983. Due to summer and since we all were employed in our profession, the painting work was carried out in the evenings. We fixed the target and decided to open it on the release of Santhippu movie. Accordingly we completed and opened it on 16.06.1983 with the help of fellow Sivaji fans and celebritiy Sivaji Fans including Ygee Mahendra, CVR Sir, MSV Sir, Jai Ganesh, Prem Anand, and many others.
This was later on translated to a Granite Plaque by our fellow Sivaji Fans for whom we are always thankful.
These images are snapshots from the movie Mannan. The queue system can also be seen in the images.
Long live memory of Shanti.
My sincere thanks to Murali Srinivas for kindly reminding this Scene from Mannan.
கார்த்திக்
தங்களை வரவழைத்த நமது சாந்திக்கு என் உளமார்ந்த நன்றி.
சென்ற ஞாயிறன்று மாலை இறுதி நாளாக சாந்திக்கு சென்றபோது முரளி சாருக்கு இந்த இடத்தையெல்லாம் காண்பித்தேன். டிக்கெட் வாங்கிக் கொண்டு தியேட்டருக்குள் வரும் வழியையும் காட்டினேன். அப்போது அவர் மன்னன் படத்தை நினைவூட்டி, அதில் நீங்கள் பெயிண்டிங் வரைந்த சுவரைக் காட்டுவார்கள் என்று கூறினார். அன்று முழுதும் நினைவுகள் சாந்தியையே சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்தது. இன்னமும் அதிலிருந்து மீள முடியவில்லை. இருந்த போதிலும் சுற்றிலும் மிகச் சிறந்த வடிவமைப்புடன் பல்வேறு புதிய வளாகங்கள் வரும் போது நம்முடைய அரங்கம் இன்னும் பழைய அமைப்பிலிருந்து மீளாமல் இருப்பது ஒருவகையில் வருத்தமாகத் தான் உள்ளது. அதிலும் உள்கட்டமைப்புகள் முற்றிலும் மாற்றப்பட்டே ஆக வேண்டிய நிலையில் தான் அரங்கமும் உள்ளது.
புதிய வளாகத்தில் மூன்று அல்லது நான்கு திரையரங்குகள் வர இருப்பதாகவும் அவற்றுக்கு பெயர்கள் கூட தீர்மானிக்கப்பட்டு செயல் வடிவம் பெறுவதற்கான முதற்கட்ட பணிகள் துவங்க உள்ளதாகவும் கேள்விப்பட்டோம். அதில் நிச்சயமாக ஒரு திரையரங்கம் பழைய தமிழ்த்திரைப்படங்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்கிற என் விருப்பத்தினை என்னிடம் பேட்டி கண்ட நிருபர்களிடம் நான் கூறியுள்ளேன்.
எது எப்படியோ, நம்மால் சாந்தியின் நினைவுகளிலிருந்து மீள்வது என்பது இயலாத காரியம்.
தங்களுடைய பதிவுகள் எத்தனையோ கடந்த கால நிகழ்வுகளை மனதில் அசை போட வைக்கின்றன.
என்றும் மலரும் சாந்தியின் நினைவுகளுடன் வாழ்வதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது...
புதிய பறவையில் தலைவர் சொல்லுவார். நான் உன்னை மனம் ஒப்பியா போகச் சொல்கிறேன். நீ இல்லாத அந்த நாட்களில் உன் நினைவோடு வாழ்ந்து அதில் ஒரு சந்தோஷம் கிடைக்குமே அது போதும் என்கிற எண்ணத்தினால் தான் போகச் சொல்கிறேன் என்பார்.
அது போல் இந்தக் கட்டிடத்திற்கு பிரியா விடை கொடுத்து மனதில் பழைய நினைவுகளை அசை போட்டு வாழ்ந்திருப்போம்...
நினைவுகள்
சில மாதங்களுக்கு முன்பு சாந்திக்கு சென்றிருந்தபோது ...
http://i1065.photobucket.com/albums/...pswr7vnusr.jpg
http://i1065.photobucket.com/albums/...psossfmuse.jpg
http://i1065.photobucket.com/albums/...pshkffoxiv.jpg
http://i1065.photobucket.com/albums/...pshqbj1qoh.jpg
http://i1065.photobucket.com/albums/...pshwlhpawu.jpg
http://i1065.photobucket.com/albums/...pscwuegi5c.jpg
http://i1065.photobucket.com/albums/...psemihpczc.jpg
http://i1065.photobucket.com/albums/...psz2fu6epa.jpg
http://i1065.photobucket.com/albums/...psd8fokjna.jpg
http://i1065.photobucket.com/albums/...psfmlq601i.jpg
Written by Mr. Sudhangan,
http://www.dinamalarnellai.com/site/...ews_Nellai.jpg
சிவாஜி எப்படி ஒரு நாதஸ்வர கலைஞனாகவே ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் மாறினார்? படம் வந்தபோது பலர் மனதிலும் எழுந்த கேள்வி இதுதான்! அதற்கு சிவாஜி என்ன சொன்னார்? ‘ஒரு நடிகன் எத்தனையோ வேடங்களைச் செய்ய வேண்டியிருக்கும். அவன் ஏற்றுக்கொண்டது ஒரு வாத்தியக்காரன் வேடனாக இருக்கலாம்.
வீணை வாசிக்க வேண்டியிருக்கும். மிருதங்கம் வாசிக்க வேண்டியிருக்கும். சிதார் வாசிக்க வேண்டியிருக்கும். நாதஸ்வரம் வாசிக்க வேண்டியிருக்கும். அதற்காக அவன் ஒவ்வொரு வாத்தியமாக எடுத்துக்கொண்டு பயிற்சி செய்ய ஆரம்பித்தால் அவன் நடிப்புத் தொழில் என்னாவது? அவன் வாத்தியக்காரனும் ஆகமுடியாது. நடிகனாகவும் இருக்க முடியாது!
நான் செய்ததெல்லாம் நடிப்புத்தான். ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் நான் நாதஸ்வரம் வாசிப்பது போல நடித்தேன். உண்மையில் நான் நாதஸ்வரம் வாசிக்கவில்லை. என்னுடைய முகபாவத்தால் நாதஸ்வரத்தை நானே வாசிப்பது போல், ரசிகர்களுக்குத் தோன்றச் செய்தேன்.
நாதஸ்வரத்தின் மீது விரல்களை வைத்து அசைத்தேன். இடையிடையே மூச்சுப் பிடித்து ஊதுவதுபோல் முகபாவத்தைச் சேர்த்தேன். அங்கே நீங்கள் சிக்கல் சண்முகசுந்தரத்தைப் பார்த்தீர்கள். என்னை ஒரு நாதஸ்வர வித்வானாகவே பாராட்டினீர்கள்.
அதில் நிஜமாக நாதஸ்வரம் வாசித்த மதுரை சேதுராமன் பொன்னுசாமி சகோதரர்கள் என் பக்கத்திலேயே உட்கார்ந்து வாசித்துக்கொண்டிருந்தால் கூட, நான் வாசிப்பதுதான் சரி, அவர்கள் வாசிப்பது தப்போ என்று தோன்றும். இது நடிப்பால் உருவாக்கும் ஓர் இம்பாக்ட் அல்லது மாயத்தோற்றம்.
இந்தப் படத்திற்கு கே.வி. மகாதேவன் அருமையாக இசையமைத்திருந்தார். பத்மினி, பாலையா, மனோரமா, ஏவி.எம்.ராஜன், நாகேஷ், என் நண்பன் பாலாஜி போன்றவர்களும் என்னோடு நடித்திருந்தார்கள். இதையேதான் நான் பல படங்களிலும் செய்தேன். ‘திருவிளையாடல்’ படத்தில் ஒரு காட்சியில் ‘ பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாடலுக்கு பல்வேறு வாத்தியங்களை வாசிப்பது போல் நடித்தேன். ‘மிருதங்க சக்ரவர்த்தி’ படத்தில் சுப்பையா பிள்ளை பாத்திரத்தில் நடித்தபோதும் என்னுடைய முகபாவத்தில் மிருதங்கம் வாசித்தேன். கைவிரல்கள் மிருதங்கத்தை நிரடியது என்னவோ உண்மை. ஆனால், அதுதான் சரியான தாளங்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் என் நடிப்பினாலும், என் முகத்திலுள்ள ஒவ்வொரு தசை அசைவினாலும், கண்களின் அசைவினாலும் அங்கே மிருதங்க நாதத்தை நான் உருவாக்கினேன்.
இதே போல்தான் ‘தெய்வ மகன்’ படத்தில் ‘கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா’ பாடலுக்கு நான் சிதார் வாசித்தேன். அதே போல் ‘தவப்புதல்வன்’ படத்தில் ‘இசை கேட்டால் புவி அசைந்தாடும்’ பாடலுக்கு சிதார் வாசித்துக்கொண்டே பாடுவேன்.
‘பாசமலர்,’ ‘புதிய பறவை,’ ‘தங்கப்பதக்கம்,’ ‘எங்க மாமா’ போன்ற படங்களில் நான் பியானோ வாசித்திருப்பேன். எந்த வாத்தியம் வாசிப்பது போல் நடித்தாலும் அந்த வாத்தியத்தின் நியதிக்கேற்ப, என்னென்ன செய்ய வேண்டுமோ அதைச் சரியாகக் கேட்டுக்கொண்டு அதன்படி செய்ததனால், நானே மிகத்திறமையாக வாத்தியங்களை வாசிப்பது போல் உங்களுக்கு தோன்றியது. அதுதான் நடிப்பு!’ இப்படித்தான் சிவாஜி, ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் சிக்கல் சண்முகசுந்தரமாகவே மாறினார். அந்த வருடம் வந்த இன்னொரு முக்கியமான படம் ‘திருமால் பெருமை’. ஏ.பி. நாகராஜன் எடுத்த மற்ற புராணப்படங்களை விட இந்தப் படம் அதிகம் பேசப்படாத படம். காரணம், வைணவர்களுக்கு சினிமா ரசனை குறைவோ என்று கூட யோசிக்க வைத்த படம்! அல்லது ‘திருவிளையாடல்’, ‘திருவருட்செல்வர்’ போன்ற சைவ படங்களைப் போல் இந்த படத்தில் ஜனரஞ்சகம் அதிகமில்லை என்று ரசிகர்கள் நினைத்தார்களோ என்பது தெரியவில்லை. ‘திருவருட்செல்வர்’ எப்படி நாயன்மார்கள் வரலாறோ, அதே போல்தான் இது ஆழ்வார்களின் வரலாற்றை தொகுத்த படம்!
வழக்கமாக தன் எல்லாப் படங்களையும் தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜயலட்சுமி பிக்சர்ஸ் என்கிற பெயரில்தான் எடுப்பார் ஏ.பி. நாகராஜன். ஆனால் இந்தப் படத்தை வெங்கடாசலம் செட்டியார் என்பவருக்காக ஸ்ரீ வெங்கடேஸ்வரா மூவீஸ் சார்பில் எடுத்தார் ஏ.பி.நாகராஜன்! படத்தின் ஆரம்பமே திருப்பதி பெருமாளிடமிருந்துதான் ஆரம்பிக்கும். திருப்பள்ளியெழுச்சி பாடலாக பின்னால் சீர்காழியின் குரலில் ‘கதிரவன் குணதிசை சிகரம் வந்தடைந்தான்!’ என்று துவங்கி, ‘பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம்’ என்றுதான் படம் துவங்கும்! அப்படியே அந்தப் பாடல் கதாகாலட்சேப பாகவதரான நாகேஷின் மேல் முடிந்து அவர் பாடுவதாக முடித்து படம் ஆரம்பிக்கும். படத்தை பெரியாழ்வாரிடமிருந்து துவக்குவார்! ஆழ்வார்களிலேயே நம்மாழ்வாருக்கு மிகப்பெரிய பெயர் உண்டு. ஆனால், திருமகளை பெரியாழ்வாரின் மகளாக பூமியில் கண்டெடுத்து வளர்க்க வைத்தார் திருமால்! ஜனகனுக்கு பூமியில் கிடைத்த பெண், ராமாயண சீதை! அதே போல் பெரியாழ்வாருக்கு அவர் தோட்டத்தில் கிடைத்த பெண்தான் கோதை என்கிற ஆண்டாள்! பாண்டியன் சபையிலே பெருமாளின் புகழ் பாடி பெரும் பரிசுகளை பெற்று திரும்பிய பெரியாழ்வார் என்கிற விஷ்ணுசித்தர், தினமும் பெருமாளுக்கு தன் தோட்டத்தில் வளர்த்த பூக்களையே தினமும் சூட்டிவிட்டுத்தான் அடுத்த வேலையை கவனிப்பார்! அந்த நந்தவன கைங்கர்யத்திலேயேதான் படத்தின் காட்சிகள்! சிவாஜி அந்த தோட்டத்து பூக்களுக்கு குடத்தினால் தண்ணீர் ஊற்றுவார்! அப்படியே ஒரு வைணவராகவே காட்சி தருவார்! கொட்டகையில் விசில் பறக்கும்!
பிரபந்தம் படித்துக்கொண்டே சிவாஜி படத்தையும் பார்த்தவர்கள் இருந்தால், இனி பெரியாழ்வார் என்றால் சிவாஜி நினைவுதான் வரும்! அப்போது அந்த தோட்டத்து துளசிச்செடி அருகே திருமகள் வந்து நின்று அப்படியே குழந்தையாக மாறி அங்கே படுப்பாள்! திடீரென்று தோட்டத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டு விஷ்ணுசித்தர் என்கிற பெரியாழ்வார் அழுகுரல் வரும் திசை நோக்கிப் போவார். அங்கே துளசிமாடத்திற்கு அருகே அழுது கொண்டிருந்த குழந்தை இவரைக் கண்டதும் அப்படியே சிரிக்கும்! குழந்தையை கையிலெடுப்பார்! யார் குழந்தை என்று சில விநாடிகள் திகைப்பார்!
பிறகு, இதுவும் நாராயணன் விளையாட்டு என்று முடிவு செய்து குழந்தையை தானே வளர்க்க முடிவு செய்து, அந்தக் குழந்தைக்கு உடனே கோதை என்று பெயர் சூட்டுவார்! அடுத்த காட்சி காமெடிக்கு போகும்! எஸ். ராமராவும், மனோரமாவும் வைணவ தம்பதிகளாக ஒரு காட்சியைக் காட்டிவிட்டு, கதை அப்படியே பெரியாழ்வாரிடம் வரும்! இங்கே மறுபடியும் பாடலில் கண்ணதாசனின் மிகுந்த கற்பனை வளம் மிகுந்த பாடல் துவங்கும்! அந்தப் பாடலும் நந்தவனத்திலேயே ஆரம்பிக்கும்!
‘மலர்களிலே பல நிறம் கண்டேன்! திருமாலவன் வடிவம் அதில் கண்டேன்’ என்ன அருமையான பாடல் அது!
(தொடரும்)
Mr senthilvel sir
please see my pm in the mailbox
"சிவகாமியின் செல்வன்" - 52-வது நாள் விழா
இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆனாலும், நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் மறு மற்றும் மறு வெளியீட்டிலும் சாதனை புரியும், நம் ரசிகனின் ரசனை என்றும் மாறாது என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டுதான் "சிவகாமியின் செல்வன்" மறு வெளியீட்டில் 50-வது நாளைக் கடந்து ஓடிக்கொண்டிருப்பது.
22-05-2016, ஞாயிறன்று சென்னை சீனிவாசா திரையரங்கில் நடைபெற்ற 52-வது நாள் விழாவில் ஏராளமான ரசிகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் இயக்குனர், திரு.சி.வி.ராஜேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நடிகர்திலகத்தோடு தன்னுடைய அனுபவங்களை ரசிகர்களோடு பகிர்ந்துகொண்டார்.
இயக்குனர் திரு.சி.வி.ராஜேந்திரன், திரு.முரளி சீனிவாஸ், திரையரங்கப் பொறுப்பாளர் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
தென்சென்னை மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் திரு.P .ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரளான ரசிகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இத்திரைப்படத்தின் 100-வது நாள் விழாவும் சிறப்புற நடைபெறும் என்ற நம்பிக்கையுடனும், இதுபோல நடிகர்திலகத்தின் பல திரைப்படங்கள் வெளிவந்து, வெற்றிவிழாக்கள் காணவேண்டும் என்ற நம் ரசிகர்கள் எல்லோருடைய ஆவல், விருப்பத்துடனும்.
http://i1234.photobucket.com/albums/...pswmxpswpv.jpg
http://i1234.photobucket.com/albums/...ps8unsqbl3.jpg
http://i1234.photobucket.com/albums/...psiwmfh1hs.jpg
http://i1234.photobucket.com/albums/...psxs7fzlzn.jpg
http://i1234.photobucket.com/albums/...psnx1caqsx.jpg
http://i1234.photobucket.com/albums/...psjlkvpubz.jpg
http://i1234.photobucket.com/albums/...ps9byj4s5o.jpg
http://i1234.photobucket.com/albums/...psziw5isim.jpg
சாந்தி திரையரங்கம்.
ராகவேந்தர் ,கார்த்திக் எழுத்துகளை படித்து கண்ணீர் திரையிட்ட கண்களை துடைக்க நேரம் தேவை பட்டது. இன்று எனது மணநாள் ஆதலால் சோகங்களை ஒத்தி வைத்து எனது எண்ணங்களை பகிர்கிறேன்.
நான் பிறந்ததிலிருந்தே சிவாஜி ரசிகன். என் சூழல் முழுதும் சிவாஜி காற்றே. 1965 முதலே, சாந்தி என்ற விளம்பரங்களை கண்டால் உடலில் ஒரு இன்ப எழுச்சி ,ஒரு ஆசுவாச உணர்வு எழும். கிட்டத்தட்ட நம் கடவுளின் ஆலயம் போல ,அந்த திசை நோக்கி எண்ணியே தொழுதோம். நான் நெய்வேலியில் வளர்ந்ததால் சாந்தி தியேட்டரை பற்றி கேள்வி ஞானம் மட்டுமே.
சிவந்த மண் போன்ற சில சில முக்கிய படங்கள் சாந்தியில் வெளியாகாத சூழ்நிலை,தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்கள் வெள்ளி விழா வாய்ப்பிருந்தும் தவற விட்ட சோகங்கள் என தூற்றிய தருணங்களும் உண்டு.
ஆனால் தேவி பாரடைஸ் போன்ற திரையரங்குகள் வந்து ஓரளவு சாந்தி மோகத்தை தணித்தது.ராஜா சாந்தியில் வெளியாகாதது ஆத்திரமூட்டவில்லை.நெய்வேலி அமராவதியில் அஞ்சல் பெட்டி காணும் போது கன்னட பைங்கிளியுடன்(Chinna paingili) திராவிட மன்மதனின் கிணற்று விளையாட்டு சாந்தி cutout காணும் போது , பட்டிக்காடா பட்டணமா படத்தை மதுரை சென்ட்ரலில் கண்டு களிக்கும் போது சாந்தி வரும் போது உடம்பு பூரா விசிலடிக்கும்.
நான் சென்னையில் தங்க ஆரம்பித்தது 1974 ஆகஸ்ட் முதலே. ஆனால் தனியே நடமாடும் அளவு தன்னம்பிக்கை வளராததாலும்,ஜெமினி studio colour lab ,பிரத்யேக திரையரங்கில் ,வெளியாக போகும் படங்களை ஒரு மாதம் முன்பே கண்டு களித்து கொண்டிருந்தேன்.
நான் எதிர்பார்த்த பொன்னாள் வந்தே விட்டது. 1975 ஏப்ரல் 20 ஆம் தேதி என் அத்தை மகன் ,28 டிக்கெட் புக் பண்ணி ,கருணை கூர்ந்து என் பெயரையும் பார்வையாளர் வரிசையில் சேர்த்த நாள். நான் சாந்தியில் பார்த்து ரசித்த முதல் படம். என்ன சொல்வது ,அப்படியே சந்தோஷத்தில் ஓவென்று கத்தி, குதிக்கலாமா என்று. என் ஆலயத்தில் மேல் மாடியிலிருந்து என் தெய்வ தரிசனம். பின்பு மன்னவன் வந்தானடி,பாட்டும் பரதமும் ,தீபம்,அண்ணன் ஒரு கோயில்,திரிசூலம்,ரத்த பாசம், என்று பல படங்கள்.
முதல் முதலில் சுவர்களில் சாதனையலங்காரங்கள் இருப்பதை கேள்வியுற்று ஓடி ஓடி போய் பார்த்து களித்திருக்கிறேன்.மன்னனில் சாந்தி வரும் காட்சியில் பழைய த்ரில் எட்டிபார்க்கும்.சென்னையை விட்டு வெளிநாடு போன பிறகு , எப்போது விடுப்பில் வந்தாலும் ,ஒரு முறையேனும் அங்கு வந்து சுற்றி விட்டே செல்வேன். மனம் முழுக்க பரவசம் சூழும். ஆனால் மற்ற நடிகர்களின் படம் அங்கு ஓடுவதோ, அவர்களின் போஸ்டர்கள் இருப்பதோ கடுப்பை கிளப்பினாலும் பொறுத்தே சுற்றி பார்ப்பேன்.
இன்று எங்கள் ஆலயம் இடிக்க படும் சோகம். அங்கு வணிக வளாகம் என்ன , இன்னொரு தாஜ் மகாலே வந்தாலும் கூட எங்கள் சாந்தி எங்களுக்கு தந்த உணர்வையா தர போகிறது?
From FB
Sivagamiyn Selvam 50th day function at Chennai Srinivasa Theatre we all with Our Respected Director Thiru CV Rajendran Sir.
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...51592888_o.jpg
Last day of Our Shanthi Theatre.
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...f4&oe=57CE2BDC
Mr KCS Sir,
Thanks for your writeup on 52 days celebration of SS. Very happy to meet Canada Siva sir in the fumction.
He made his presence inspite of busy schedule. We miss you on that day in Srinivasa Mr KCS.
Mr Neyveliar,
Thanks for uploading the snap from FB.
Regards
வாசு சார்,
நான் முன்கூட்டியே செல்லத் திட்டமிருந்த நிகழ்ச்சிக்காக, திருநெல்வேலி சென்றுவிட்டதால் 22 ஆம் தேதி நடைபெற்ற 52வது நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை.
101-வது நாள் 10-07-2016, ஞாயிறு அன்று வருகிறது. அன்றைய தினம் விழா கொண்டாடத் திட்டமிட்டிருப்பதாக வெளியிட்ட மதுரை சிவா மூவிஸ் சந்திரசேகர் அவர்கள் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் அனைவரும் தவறாது கலந்துகொண்டு கொண்டாடுவோம்.
நன்றி.
http://static.dnaindia.com/sites/def...es/1839429.jpg
இன்று தெய்வீகப் பாடகர், பாடகர் திலகம், டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்களின் நினைவு தினம். அவர் பூவுடலால் மறைந்தாலும் தன் குரலால் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவர் நினைவாக
https://www.youtube.com/watch?v=K4lu758K0uk
Unnai Solli Kutramillai
https://www.youtube.com/watch?v=wVvekJW2omk
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...d4&oe=57C8D0F7
From FB of Murugan Prabhu
மிக மிக துயரமான செய்தி.
நமது அன்பு நண்பர், நடிகர் திலகத்தின் ரசிகர், மதுர கானங்களில் முக்கியப் பங்கு வகிக்கும் நமது ஹப் உறுப்பினர் திரு ராஜேஷ்குமார் அவர்களின் துணைவியார் இறைவனடி சேர்ந்தார். தன் துணையை இழந்து வாடும் ராஜேஷ்குமார் சாருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் திகைக்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் அவரது மனதிற்கு சாந்தியை அளிக்கட்டும். அவரது துணைவியாரின் ஆன்மா சாந்தியடைய கடவுளைப் பிரார்த்திப்போம்.
சாந்தி தியேட்டர் அனுபவங்கள் பற்றிய ராகவேந்தர், கார்த்திக், சந்திரசேகர், கோபால் ஆகியோரின் பதிவுகள் மனதைத் தொட்டன. நடிகர் திலகத்தின் ரசிகர்கள் எல்லோர் மனத்திலும் சோகத்தை தந்த ஒரு நிகழ்வு. என்ன செய்வது. கால மாறுதல்களுக்கு ஏற்ப நாமும் ஓடவேண்டியிருக்கிறது.
கோபால் சார் சொன்னது போல இனி என்ன நவீன வசதிகளோடு இன்னொரு சாந்தி வந்தாலும், பழைய சாந்தியில் கிடைத்த நிம்மதி கிடைக்காது.
இனி நம் பழைய சாந்தியை காண வாய்ப்புள்ள திரைப்படங்கள்:
நீலவானம் (ராஜஸ்ரீ படம் பார்க்க வரும் காட்சி)
அஞ்சல் பெட்டி 520 (சாந்தியில் தங்க சுரங்கம் ஓடிய சமயம்)
பட்டிக்காடா பட்டணமா (நடிகர்திலகத்தை ரவுடிகள் கடத்தும் காட்சி)
தவப்புதல்வன் (தியேட்டரில் கே.ஆர்.விஜயா நடிகர் திலகத்தை எதிர் பார்த்திருக்கும் காட்சி)
எமனுக்கு எமன் (எமனாக நடிகர்திலகத்தின் அலம்பல் காட்சி)
நெஞ்சங்கள் (வா கண்ணா வா ஓடிக்கொண்டிருந்த சமயம்)
மன்னன் (சின்ன தம்பிக்கு ரஜினி, கவுண்டமணி முதல் டிக்கட் காட்சி - இக்காட்சியில் 'மாப்பிள்ளை' வேணுகோபாலும் நடித்திருப்பார்)
இன்னும் வேறு என்னென்ன படங்களில் சாந்தி இடம் பெற்றுள்ளது?.
ஆதிராம் சார்,
இதோ உங்கள் நினைவலைகளை மீண்டும் மீட்ட,
பட்டிக்காடா பட்டணமா (நடிகர்திலகத்தை ரவுடிகள் கடத்தும் காட்சி)
http://i1087.photobucket.com/albums/..._002685652.jpg
http://i1087.photobucket.com/albums/..._002681014.jpg
http://i1087.photobucket.com/albums/..._002679713.jpg
துணைவியாரை இழந்து வாடும் நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
இப்பேரிழப்பை தாங்கும் சக்தியை அவருக்கு இறைவன் அருள்வானாக.