மந்திரிகுமாரி - 1950
http://i66.tinypic.com/msloxy.jpg
Printable View
மந்திரிகுமாரி - 1950
http://i66.tinypic.com/msloxy.jpg
நேற்று இன்று நாளை .
ஜூலை -1954
மக்கள் திலகத்தின் மலைக்கள்ளன் படத்தில் இடம் பெற்ற
''எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ''
ஜூலை - 1963
மக்கள் திலகத்தின் ஆனந்த ஜோதி படத்தில் இடம் பெற்ற பாடல்
''ஒரு தாய் மக்கள் நாமென்போம் ''
ஜூலை - 1964
மக்கள் திலகத்தின் தெய்வத்தாய் படத்தில் இடம் பெற்ற பாடல்
'' மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் '''
ஜூலை - 1970
மக்கள் திலகத்தின் தலைவன் படத்தில் இடம் பெற்ற பாடல்
''நான் பாதை மாறாதவன் ''
ஜூலை - 1974
நேற்று இன்று நாளை படத்தில் இடம் பெற்ற பாடல்
தம்பி ..நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று ...
ஜூலை - 1975
மக்கள் திலகத்தின் நாளை நமதே படத்தில் இடம் பெற்ற பாடல் .
''நான் சபை ஏறும் நாள் வந்தது ''
என்ன ஒரு பொருத்தமான பாடல் வரிகள் .
JULY - 1977
http://i66.tinypic.com/jhvo7o.jpg
July - 2016
Delhi and Tamil Nadu
AIADMK Mp's strength in Parliment is 50 .
Puratchi Thalaivar MGR's AIADMK party is ruling in Tamil Nadu - 7th term.
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரைப்படங்களுக்கு திரைக்கதை - வசனம் எழுதிய திராவிட இயக்கத்தின் முன்னோடிகள் .
பேரறிஞர் - அண்ணா
புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
கலைஞர்
கவியரசு - கண்ணதாசன்
இளங்கோ
ரவீந்திரன்
நாஞ்சில் மனோகரன்
காளிமுத்து
தென்னரசு
ஏ.கே .வில்வம்
ஆர். கே .சண்முகம்
முரசொலி சொர்ணம்
தமிழ் திரைப்பட ரசிகர்களையும் , திரை உலகை சேர்ந்தவர்கள் அனைவரையும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளை தந்து பிரமாண்ட வெற்றிகளை குவித்து சாதனை படைத்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
நாடோடி மன்னன் - 1958
திருடாதே - 1961
தாய் சொல்லைத்தட்டாதே - 1961
தாயை காத்த தனயன் - 1962
பெரிய இடத்து பெண் - 1963
படகோட்டி - 1964
எங்க வீட்டு பிள்ளை - 1965
அன்பே வா - 1966
காவல்காரன் - 1967
ஒளிவிளக்கு - 1968
அடிமைப்பெண் & நம்நாடு - 1969
மாட்டுக்கார வேலன் - 1970
ரிக்ஷக்காரன் - 1971
இதய வீணை - 1972
உலகம் சுற்றும் வாலிபன் - 1973
உரிமைக்குரல் & நேற்று இன்று நாளை - 1974
இதயக்கனி - 1975
நீதிக்கு தலை வணங்கு - 1976
மீனவ நண்பன் - 1977
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - 1978
PARAKKUM PAVAI - FIGHTING SCENES.
https://youtu.be/G7D8zIIf6x0
திரு முத்தையன் அவர்களுக்கு,
தாங்கள் பதிவிட்டு வரும் மக்கள் திலகத்தின் நிழற்படங்கள் அருமை.
தினத்தந்தி -13/07/2016
http://i67.tinypic.com/b7kzrk.jpg
இன்று (13/07/2016) நண்பகல் 12 மணிக்கு மெகா டிவியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "குடும்ப தலைவன் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i67.tinypic.com/155t84p.jpg
தினச்செய்தி -13/07/2016
http://i68.tinypic.com/2hzqd2.jpg
14.7.1961
மக்கள் திலகம் எம்ஜிஆரின் ''சபாஷ் மாப்பிளே '' திரைப்படம் இன்று 56 ஆண்டுகள் நிறைவு தினம் .
மக்கள் திலகத்துடன் நடிகர் எம் .ஆர். ராதா இணைந்து நடித்த முதல் படம் .
30 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களுக்குப் பிடித்த வகையில் மட்டுமே நடித்து ரசிகர்களைப் பரவசப்படுத்தி தமிழ்த்திரையுலகத்தைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் என்பதுதான் உண்மை.
எம்ஜிஆரின் இன்னுமொரு வலுவான ஆயுதம் பாடல்கள். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக ரசிகர்களைக் கிறங்கடித்தன. அவரின் சமூக நோக்கத்தை வெளிப்படுத்தும் தத்துவப் பாடல்களும், அரசியல் சார்ந்த கொள்கைப்பாடல்களும், திராவிடப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பாடல்களும் ரசிகர்களின் மனங்களில் தங்க சிம்மாசனமிட்டு அமர்ந்தன. அச்சம் என்பது மடமையடா, வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும், தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை, உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால், புதிய வானம் புதிய பூமி, ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை, ஓடி ஓடி உழைக்கணும், கொடுத்ததெல்லாம் கொடுத்தான், கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்று எண்ணிலடங்கா பாடல்கள் இன்றும் ரீங்காரமிட்டுக் கொண்டுள்ளன. தாயில்லாமல் நானில்லை, செல்லக் கிளியே மெல்லப் பேசு, உலகம் பிறந்தது எனக்காக, இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில், திருவளர்செல்வி மங்கையர்க்கரசி, பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த என்று பல பாடல்கள் பாசமழையில் நனைய வைக்கின்றன. உடுமலை நாராயணகவி தொடங்கி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவியரசர் கண்ணதாசன், வாலி, புலமைப் பித்தன் என்று எம்ஜிஆருக்காகப் பாட்டெழுதும் கவிஞர்களுக்கு, வார்த்தைகளும் வரிகளும் அமுத சுரபியாய்க் கொட்டிக் குவித்தன. பாடல்களைத் தேர்வு செய்வதில் அவர் என்றும் சமரசம் செய்துகொண்டதேயில்லை. அதனால்தான், அவரது திரைப்படங்களில் பாடல்களுக்கு தனிச்சிறப்பு இருந்தது. அவரது பாடல்களுக்கு தனி மதிப்பும் இருந்தது.
தன்னுடைய திரைப்படங்களால் யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டினார். அதனால்தான் ஒரு படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் குறைந்த பட்சம் 3 மாத இடைவெளியை அமைத்து வெளியிடச் செய்தார். இடைவெளி அதிகரித்து ரசிகனும் ஏமாந்துவிடக் கூடாது, இடைவெளி குறைவதால், தயாரிப்பாளரும் நஷ்டமடைந்துவிடக் கூடாது என்று சரியான தெளிவான திட்டமிட்டுத் தன் தொழிலை அர்ப்பணிப்புடன் செய்தார்.
வீரம் பாசம் விவேகம் மட்டுமின்றி நகைச்சுவையிலும் எம்ஜிஆர் அவர்கள் குறை வைத்ததில்லை. அலிபாபாவும் 40 திருடர்களும், சபாஷ் மாப்பிளே, மாட்டுக்கார வேலன், பெரிய இடத்துப் பெண், குடியிருந்த கோயில் என்று பல படங்களில் நகைச்சுவைக்குப் பஞ்சமேயில்லை. உருக்கமான நடிப்புக்கு உதாரணங்களாய் பெற்றால்தான் பிள்ளையா, பணம் படைத்தவன், எங்க வீட்டுப் பிள்ளை என்றும், வீரத்துக்கு அடிமைப்பெண், அரச கட்டளை, மதுரை வீரன், மன்னாதி மன்னன், மகாதேவி என்றும் ஏராளமாய்! இப்படி நவரசங்களையும் வெளிப்படுத்தும் நயமான கதாபாத்திரங்களிலெல்லாம் நடித்து தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்து, ரிக்சாக்காரன் திரைப்படத்துக்காக இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருதும் பெற்றார்.
திரைப்பட வாய்ப்புகளுக்காக எந்தக் கொள்கையையும் கட்டுப்பாட்டையும் விட்டுக் கொடுக்கும் மனிதர்களுக்கிடையில், தன் இறுதி மூச்சு வரை எதற்காகவும் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்வதில்லை, கட்டுப்பாடுகளை விட்டுக்கொடுப்பதில்லை என்கிற அசைக்க முடியா உறுதியுடன் வாழ்ந்து காட்டியவர் இந்தப் பொன்மனச் செம்மல்.
courtesy - vallamai