https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...82&oe=5C8D08EE
Printable View
http://oi66.tinypic.com/ztygas.jpg
ரசிகர்களுடன் நடிகர் திலகம்
அய்யனின் தங்க மனம்.
----------------------------------------------
அய்யனின் நடிப்பில் கவரப்பட்டவர்கள் தமிழர்களை போல் ஆந்திரா , கர்நாடகா, கேரளம் மாநிலத்தை சேர்ந்தவர்களும் உண்டு. இதில் கேரளம் முதல் இடம். அன்றய திருவிதாங்கூர் சகோதரிகள் லலிதா, பதமினி,ராகினி, பிறகு அம்பிகா, ராதா முதல் இன்றய மோகன்லால், ஊர்வசி வரை அய்யனின் நடிப்பில் மயங்கியவர்களே.
மயங்கியவர்கள் என்றால் ஒரு குடும்ப உறவுபோல் உறவு கொண்டவர்கள் என்பதே. அது இன்றும் தொடர்கின்றது. திருவிதாங்கூர் சகோதரி என்பது பத்மினியின் குடும்பம். ( லலிதா,பதமினி, ராகினி) நடிகை ராகினி அவர்கள் ஒரு நாள் ஐயனை காண வந்தார்கள் அன்னை இல்லத்தில். ராகினி அவர்கள் இனி அய்யனை காண இயலாது என்ற நிலையில் வந்தார்கள்.
தன்னை காண வந்த தங்கை யிடம் உனக்கு என்ன ஆச்சு? என்று அய்யன் கேட்டார்கள். காரணம் , ராகினி அவர்கள் பார்ப்பதற்கு வந்த போது பார்ப்பதற்கு மிகவும் மோசமாக இருந்தார்கள். முகத்திலே அருள் இல்லை. மகிழ்ச்சி இல்லை. முகத்தில் சோகம். அய்யனின் மனைவி கமலா அம்மாவிடம் ரோகினி அவர்கள் பேசும்போது கண்ணீர் விட்டு அழுது கொண்டே பேசுகின்றார்கள். கமலா அவர்கள் என்ன என்று கேட்டபோதும ராகினி அவர்களின் கண்ணில் இருந்து கண்ணீர் வந்ததே தவிர ராகினியிடமிருந்து பதில் இல்லை.
கமலா அவர்கள் அய்யனை அழைத்து, ராகினி எதோ சொல்ல வருகின்றாள். ஆனால் சொல்லாமல் சாராய், சாரையாக கண்ணீர் வடிகின்றராள். என்ன என்று கேளுங்கள் என்றார்கள். ஐயன் ராகினி அவர்களிடம் என்னம்மா என்று சிறிது சினத்துடன் கேட்க, ராகினி அவர்கள் கதறி கொண்டே அண்ணா எனக்கு தீர்க்க முடியாத புற்று நோய் வந்துள்ளது. மருத்துவர்கள் கை விட்டு விட்டார்கள்.கடைசியாக அண்ணனையும், குடும்பத்தையும் பார்க்கவே வந்தேன் என்று அண்ணனான அய்யன் மீது சாய்ந்து அழுதார்கள்
ஐயன் பதறி விட்டார்கள். எம்மா என்னம்மா சொல்கிறாய்? எப்படி? எத்தனை காலமாய் உள்ளது? என்று கேட்டு அய்யனின் நண்பர்களாகிய அனைத்து மருத்துவர்களையும் அழைத்து,ராகினி அவர்கள் பரிசோதிக்கப்படுகின்றார்கள். அய்யன் கேட்டார்கள் மருத்துவர்களிடம் வெளி நாட்டிற்கு கொண்டு சென்று பார்க்க வேண்டும் என்றாலும் பார்க்கலாம், பணம் ஒரு பொருட்டே இல்லை என்று உடன் பிறவா தன் சகோதரிக்காக பதறி விட்டார்கள்.
அனைத்து பரிசோதனைகளும் செய்து முடித்து மருத்துவர்கள் கை விரிக்கின்றார்கள். இனி எதுவும் செய்வதற்கு இல்லை என்று. இவர்களுக்கு நாட்கள் எண்ணப்படுகின்றது என்பதே மருத்துவர்கள் கொடுத்த பதில்கள். அன்று ராகினி அவர்கள் அய்யனின் வீட்டிலே இருந்தார்கள். ஐயனும், கமலா அம்மையும் துடித்தார்கள். எல்லாம் இறை செயல் என்று பெரு மூச்சு விட்டார்கள்.
சரியாக 13ம் நாள் அய்யனின் காதிலே, சகோதரி ராகினி நம்மை விட்டு சென்றாள் என்ற செய்தி. பதைபதைத்து அய்யன், துடிதுடித்த அய்யன் ராகினி அவர்களின் இறுதி சடங்கு முடியும் வரை அவர்களின் வீட்டிலே இருந்தார்கள்.
இந்த பதிவின் தகவல் என்ன? திருவிதாங்கூர் குடும்பத்திற்கும், ஐயனின் குடும்பத்திற்கும் இருந்த உறவு. அய்யன் மீது அவர்கள் வைத்திருந்த பக்தி, பாசம், அளவற்ற அன்பு, தங்களின் குடும்பத்தில் அய்யன் ஒரு முக்கிய சகோதரன் என்ற உயர்ந்த எண்ணம் திருவிதாங்கூர் குடும்பத்தில் இருந்ததின் காரணமே, தான் இறக்கும் முன்பு என் சகோதரனையும் , சகோதரனின் குடும்பத்தையும் பார்க்கவேண்டும் என்ற ஒரு மாபெரும் பந்தம்.
இப்படிதான் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் எங்கும் அய்யனை தன் சகோதரனாக , குடும்ப உறவாக என்று கொண்டுள்ள நட்புகள் ஏராளம்,ஏராளம். இதற்கு காரணம் அய்யனின் தன்னிகரில்லா , அபிநயமும், நடிப்பும், நடிப்பின் துடிப்பும். மற்றவர்களுக்கு உதவும் மனது, அனைரிடமும் மனித நேயத்துடன்பளகும் பண்பு. அய்யனே நீ எங்கும் நிறைந்தவன் சூரியனை போல். வாழ்க உன் புகழ்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...ec&oe=5CBF9216https://scontent.fyto1-1.fna.fbcdn.n...f8&oe=5C8DA176
நன்றி Selvaraj Fernandez
ஏவிஎம் சரவணன் அவர்கள் திலகத்தை பற்றி கூறியவை.
ஒரு முறை சிவாஜியிடம், ‘உங்களுக்கு என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கப் பிடிக்கும்?’ என்று கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில், ‘நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு இருக்கும் கதாபாத்திரங்களில் நடிக்கவே எனக்குப் பிடிக்கும்’ என்றார்.
அவர் அப்படி நடிக்க வாய்ப்பிருக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்ததன் காரணமாகத்தான், இன்றைக்கும் அண்ணன்– தங்கை பாசத்திற்கு உதாரணமாக ‘பாசமலர்’ சிவாஜி நினைவுக்கு வருகிறார். தாய்– மகன் சந்திப்பின் எமோசன் இ...லக் கணத்திற்கு ‘பாவமன்னிப்பு’ திரைப்படத்தை சுட்டிக் காட்டுகிறோம். ஒரு கடமை தவறாத போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் என்றால், ‘தங்கப்பதக்கம்’ தான் நினைவில் நிற்கிறது. ‘தெய்வமகன்’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘கம்பலோட்டிய தமிழன்’ இப்படி நடிப்புக்கு இலக்கணமே நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான்.
‘திருவிளையாடல்’ திரைப்படத்தில் தருமியாக நடித்த நாகேஷ் அவர்களின் நடிப்பு பெருமளவில் பேசப்பட்டது; இன்றும் பேசப்படுகிறது. அப்படியொரு கதாபாத்திரம் தன்னைவிட அதிகம், பெயரைத் தட்டிச் செல்லும் என்பதை உணர்ந்தும், அந்த கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுக்க பெருந்தன்மையுடன் ஒப்புக்கொள்ள இப்போது நடிகர்கள் இருக்கிறார்களா? என்பது சந்தேகமே. ஆனால் ‘திருவிளையாடல்’ படத்தில் சிவாஜிகணேசன் அதைச் செய்திருந்தார்.
எல்.வி.பிரசாத் இயக்கிய ‘இருவர் உள்ளம்’ படப்பிடிப்பு தளத்தில் கூட ஒரு சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்தது. அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, திடீரென எல்.பி.பிரசாத் ‘கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டு பின்னர் படப் பிடிப்பைத் தொடரலாம்’ என்று கூறினார்.
அவர் அப்படிக்கூறியதும் சிவாஜிக்கு ‘எதற்காக திடீரென்று இடைவெளி?’ என்ற எண்ணம் வந்தது. அப்போது அவர் அருகில் வந்த எல்.வி.பிரசாத், ‘கணேசன்! அடுத்து நாம எடுக்கப்போற சீன் சரோஜாதேவிக்கும், உங்களுக்கும் இடையிலானது. அந்த காட்சியை எடுக்கும்போது சரோஜாதேவியின் நடிப்புதான் ரசிகர்களுக்குத் தெரியவேண்டும். அந்தக் காட்சி அப்போதுதான் திரைப்படத்தை வலுவாக்க துணைபுரியும். அந்த பிரேமில் நீங்க உங்களின் நடிப்பைக் காட்டக் கூடாது. சும்மா நின்று கொண்டிருந்தால் போதும். அப்போதுதான் சரோஜாதேவி பளிச்சிடுவார்’ என்றார்.
அதைக் கேட்டதும் ஒரு நடிகர் என்பதைத் தாண்டி, தான் நடிக்கும் படம் நல்ல முறையில் வரவேண்டும் என்று சிவாஜி ஒப்புக்கொண்டார்.
ஒரு முறை சிவாஜிகணேசன், ‘எனக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தவர்களில் முக்கியமானவர் எல்.வி.பிரசாத். அடிப்படை நடிப்பை அவர்தான் எனக்குக் கற்றுக்கொடுத்தார். ஒரு திரைப்படத்தில் காட்சி நன்றாக வரவேண்டுமானால், நடிக்காமல் இருக்க வேண்டும் என்றால் அதையும் செய்ய வேண்டும். நடிக்காமல் இருப்பதும் கூட ஒருவகை நடிப்புதான் என்பதை அவர்தான் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்’ என்று கூறினார்.
நன்றி. தினத்தந்தி.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...e0&oe=5CC8929D
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...a2&oe=5CCCD98D
நன்றி R Vijaya
"பசியுள்ள இதயத்தைக் குளிர்விப்பதுதான் சிறந்த தானம்! " என்றார் அண்ணல் நபி ( ஸல்) அவர்கள்.
- அப்பெருமகனாரின் வாக்கு மொழிக்கேற்ப பசியுள்ள நெஞ்சங்களின் இதயத்தைக் குளிர்விக்கும் நோக்கத்துடன் நடிகர்திலகத்தின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு ' குரூப்ஸ் ஆஃப் கர்ணன் ' நடத்திவரும் 52 வார தொடர் அன்னதானத்தின் 15ஆம் வார நிகழ்ச்சி இனிதே நடந்தேறியது இன்று.
இவ்வார நிகழ்ச்சியின் உபயதாரர் சென்னை, கொளத்தூரைச் சேர்ந்த திரு. G.நட்ராஜ் அவர்கள். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ...்ச்சியைத் தொடங்கி வைத்தவர் அம்பத்தூரைச் சேர்ந்த திரு.வெங்கடேசன் அவர்கள். அவருக்கு புரசைவாக்கத்தைச் சேர்ந்த திரு. ராஜா அவர்கள் பொன்னாடைப் போர்த்தி சிறப்பித்தார். மேலும், திரு. ML.கான் அவர்களும், திரு. காமராஜ் அவர்களும் இவ்வாண்டிற்கான நாள்காட்டியை அவருக்கு வழங்கினார்கள்.
சென்னை, சிம்மக்குரலோன் சிவாஜி மன்த்தைச் திரு P.ஜெயகுமார் அவர்கள் உபயதாரர் திரு.நட்ராஜ் சார்பாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருக்கு ஆழ்வார்ப்பேட்டையைச் சேர்ந்த திரு.N. பாஸ்கரன் அவர்கள் பொன்னாடைப் போர்த்தி கௌரவித்தார்.
மேலும், அன்னதான உபயதாரர்களுக்கு வாரந்தோறும் வழங்கிவரும் நினைவுக் குறிப்பேட்டினை திரு. ML. கான் அவர்கள் திரு.நட்ராஜ் சார்பாக திரு. P.ஜெயகுமாரிடம் வழங்கினார்.
" நீ எந்தவொரு செயலைச் செய்ய விரும்பினாலும் முதலில் பேசுவதை நிறுத்திவிட்டு செயலைத் தொடங்கு...! " என்னும் ஆன்றோர்களின் வாக்குப்படி, ஒரு நல்முயற்சியை செயல்படுத்தி, அதை எல்லோரும் பேசும்படி செயல்படுத்தி, இன்று பதினைந்தாவது வாரத்தை எட்டியிருக்கும் இவ்வன்னதான நிகழ்ச்சிக்கு ஊக்கமும், ஆதரவும் தொடர்ந்து அளித்துவரும் சென்னைவாழ் நடிகர்திலகத்தின் அன்பு இதயங்கள் திரு. RS. சிவா, திரு. கேசவன், திரு. பாண்டியன், திரு. சங்கர், திரு. ஏழுமலை, திரு. மகாலிங்கம், திரு. நந்தகுமார், திரு.KS. நரசிம்மன் , திரு. மூலக்கடை மணி உள்ளிட்ட நெஞ்சங்களுக்கும், பொதுமக்களுக்கும்
நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் அன்பன்...
வான்நிலா விஜயகுமாரன்.
பின்ணிணைப்பாக...
நிகழ்ச்சி முடிந்தபின் அன்னை இல்லத்தில் திரு. தளபதி ராம்குமார் அவர்களைச் சந்தித்து குரூப்ஸ் ஆஃப் கர்ணன் நண்பர்கள் அளாவளாவிய காட்சிகளும்...
சென்றவாரம் நண்பர் P.நாகராஜா அவர்கள் நிகழ்ச்சிக்காக வாங்கி தந்த மேசை நாற்காலிகளும் நிழற்படங்களாக உங்கள் பார்வைக்கு...
http://oi66.tinypic.com/2vb23cx.jpg
நன்றி Vaannila VijaYaKumar