https://i.postimg.cc/BZVbN8bP/1567757963499.jpg
Printable View
M.G.R. பெண்களை தெய்வமாக மதிப்பவர். பொதுக்கூட்டங்களில் பேசும்போது, ‘‘என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தாய்மார்களே…’ என்று குறிப்பிட்டுவிட்டுத்தான் பேசத் தொடங்குவார். கூட்டங்களில் அவரை நாடி உதவி கோரும் பெண்களுக்கு உதவிகள் செய்வதுடன், பெண்களின் பாதுகாப்பிலும் மிகுந்த அக்கறை செலுத்துவார்.
நாகை மாவட்டம் மாயவரத்தில் எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட ஒரு பொதுக்கூட்டம். அவரது ஆட்சியில்தான் 1982ம் ஆண்டு மாயவரத்தின் பெயர் மயிலாடுதுறை என்று மாற்றப்பட்டது. இந்த சம்பவம் நடக்கும்போது அந்த ஊர் மாயவரம் என்றுதான் அழைக்கப்பட்டது. எம்.ஜி.ஆரைப் பார்த்து உதவி கோர, இரண்டு இளம் பெண்கள் மிகுந்த சிரமத்துடன் மேடை அருகே வந்து காத்திருந்தனர். அவர்கள் இரட்டையர்கள். ஒரே மாதிரி தோற்றம் கொண்டவர்கள். இதில் கொடுமை என்னவென்றால், இருவரும் ஒரே மாதிரி குறை உடைய மாற்றுத் திறனாளிகள்.
இரு பெண்களுக்கும் கால் ஊனம். கைகளை ஊன்றி தவழ்ந்தபடியே, மேடை அருகே வந்துவிட்டனர். மக்களின் வாழ்த்துக்களை ஏற்றவாறு, கையசைத்த படியே மேடைக்கு எம்.ஜி.ஆர். வந்தார். கூட்டம் முண்டியடித்து மேடை அருகே வர முயற்சித்தது. அந்த நெரிசலில் இரு பெண்களும் சிக்கிக் கொண்டனர். இதை எம்.ஜி.ஆர். கவனித்துவிட்டார். உதவியாளர்களிடம் சொல்லி அவர்களை அழைத்துவரச் சொன்னார். அந்தப் பெண்கள் இருவரும் எம்.ஜி.ஆரிடம், ‘‘ஐயா, உங்களிடம் உதவி கோர வந்திருக்கிறோம்’’ என்றனர். அவர்களை மேடையின் ஓரத்தில் காத்திருக்கச் சொன்னார்.
கூட்டத்தில் பேசி முடித்ததும் அந்த சகோதரிகளை எம்.ஜி.ஆர். அழைத்தார். அவர்களது நிலைகண்டு பரிதாபப்பட்டு, ‘‘உங்களுக்கு என்ன உதவி வேண்டும்? சொல்லுங்கள்’’ என்றார். அந்தப் பெண்கள், ‘‘ஐயா, வறுமையால் கஷ்டப்படுகிறோம். எங்களுக்குத் தையல் மெஷின் வாங்கிக் கொடுத்தால் நாங்க தொழில் செஞ்சு பிழைச்சுக்குவோம். அதுக்கு உதவி பண்ணுங்க’’ என்று கெஞ்சும் குரலில் கேட்டனர். உடனே, இரண்டு தையல் மெஷின்களை எம்.ஜி.ஆர். வாங்கி வரச் சொன்னார்.
தன்னிடம் உதவி கோருபவர்கள் தெளிவாகச் சொல்லாவிட்டாலும் அவர்களது தேவை என்ன என்பதை சரியாகப் புரிந்துகொண்டு உதவுபவர் எம்.ஜி.ஆர்.! தையல் மெஷின்கள் வாங்கி வருமாறு சொன்ன மறுவிநாடி ஓடோடிச் சென்ற உதவியாளர்களை அழைத்து, ‘‘காலில் தைக்கும் மெஷின் இல்லை. கையில் தைக்கும் மெஷின்’’ என்று தெளிவாகச் சொல்லி அனுப்பினார். அடுத்த அரை மணி நேரத்தில் இரண்டு புது தையல் மெஷின்கள் காரில் வந்து இறங்கின. அதுவரை காத்திருந்து தன் கையாலேயே அந்தப் பெண்களுக்கு தையல் மெஷின்களை எம்.ஜி.ஆர். வழங்கினார்.
அதைப் பெற்றுக்கொண்ட சகோதரி கள் இருவரும் கண்ணீருடன், ‘‘ஐயா, நீங்க தெய்வம்யா’’ என்றனர். அவர்களது கண்ணீரைத் துடைத்த எம்.ஜி.ஆர்., ‘‘நான் மனுஷன்தாம்மா; தெய்வம் இல்லே. இந்த நிலைமையிலும் உழைச்சுப் பிழைக்கணும்னு நினைக்கிற நீங்க நல்லா இருக்கணும்!’’ என்று சொல்லி வாழ்த்திவிட்டு, அவர்களுக்கு தலா ரூ.2,000 அன்பளிப்பாகக் கொடுத்தார்!......... Thanks...
அருமை !! கழக !! மன்ற !!தொழிற்சங்கம் !! மகளிர் !! மாணவ !!மாணவிகளே !!
இளஞர்களே !! அனைவருக்கும் !! நமது வாழும் கண்கண்ட தெய்வம் அவர்களும் !! அன்னை ஜானகி ராமசந்திரன் !! அவர்களின் நல்லாசிகளோடு !! அனைவருக்கும் !! பணிவான வணக்கங்கள் பல !! நண்பர்களே !! கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் அதாவது 06-9-1984ல் எனது திருமண நாள் நமது மக்கள் திலகம் !! பொன்மனச்செம்மல் !! கண்கண்ட தெய்வம் !!பாரதரத்தினா !! மாண்புமிகு டாக்டர் புரட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் !! வடசென்னை மாவட்தில் வசிக்கும் !! நினைத்ததை முடிப்பவன் திரு. எம். ஜி. ஆர். மன்ற செயளாளர் !! ஒம்பொடி ,சி.பிரசாத் சிங் ஆகியஎனக்கும் !! வடஆற்காடு மாவட்டம் !! !! வாலாஜாபேட்டை கழக ஆரம்பகாலம் !! 1972ல் கழக நகர அமைப்பாளர் காலம் சென்ற தெய்வதிரு.J.லோகநாதன் சிங் அவர்களின் இளைய தங்கை செல்வி J. ஜோதி பாய்க்கும்!! நமது கண்கண்ட தெய்வம் அவர்களும் !! பெரியோகளின் ஒப்புதலோடும் !! நடைபெற்ற எனது திருமணம் பற்றிய சில சுயரசமான பசுமையான!! பொண்ணான !!நிகழ்வுகள் உங்கலோடு !! கலந்துக்கொள்ள விரும்பி !! என் நினைவுகளின் இந்த பதிவு !!
அருமை கழக மன்ற மறவர்களே !!
எனது வாழ்கையின் வழிகாட்டியும்!!
அன்னையும் !! அண்ணியாரும் !! மான ஜானகி ராமசந்திரன் அவர்களின் !! உடன் பிறந்த தம்பியும்மான !! தற்பொழுது காலம் சென்ற அண்ணன் !! தெய்வதிரு .P. நாராயணன் ( எ ) மணி அவர்களுடன்தான் !! பெரும்பாலமும் !! இருந்து கழகபணிகள் !! மிக !! மிக !! மிக !! சுறுசுறுப்பாக !! நான் செயல்படுவதை !! நேரில் பல முறைகள் !! பல இடங்களில் !! கழக பணிகள் ஆற்றுவதை பார்த்து !! 1973 முதல் !!ஒம்பொடி சி, பிரசாத் சிங் ஆகிய என்னை !! திரு.அண்ணன் அவர்கள் !!என்னை அவர்களுடன் இணைத்துக்கொண்டார் ,!! அன்றுமுதல் இன்றுவரை !! திரு . அண்ணன் அவர்களின் குடும்பத்தில் !! உள்ள அனைவருடனும் !! நல்லபெயர் பெற்று !! விஸ்வாசியாகவே இருந்து வருகின்றேன் !! திரு. மணிசார் அவர்கள் !! நமது கண்கண்கண்ட தெய்வம் அவர்கள் !! செல்லும் அனைத்து மாவட்டங்களுக்கும் !! என்னையும் அழைத்து செல்வார் !! மேலும் என்னை !! கேரளாவில் உள்ள !! நமதுகண்கண்ட தெய்வம் அவர்களின் முதல் மனைவி !! அண்ணியார் இல்லத்திற்கு !! என்னை அழைத்து சென்றார் !! மேலும் அன்னை ஜானகி ராமசந்திரன் அவர்களின் இல்லத்திற்கும் !! அடியேனை அழைத்து சென்றார் !! தந்தை பெரியார் அவர்கள் !!வைக்கத்தில் முதல் போராட்டம் நடைபெற்ற இடம் !! மிக பெரிய நாலுமூலைகள் கார்னர் சந்திக்கும் இடமாகும் !! இந்த நாலு கார்னர்கள் இடமும் அன்னை ஜானகி ராமசந்திரன் அவர்களுடையது !! அந்த இடத்தில் தந்தை பெரியார் அவர்களின் !! கம்பிரமான முழுஉருவ சிலை வைக்க !! இந்த இடத்தை அன்னை ஜானகி ராமசந்திரன் அவர்கள் !! அந்த நாளிலில் இலவசமாக !! கொடுத்தார் நண்பர்களே !!
நண்பர்களே !! எனது திருமண விழா
வை பற்றிய !! . நிகந்த செய்திகள் !! வாழ்கையில் மறக்கமுடியாத நிகழ்வுகளை !! உங்களோடு நானும் கலந்துக்கொள்ள விரும்புகின்றேன் !!
நண்பர்களே !! முதன் முதலில் திரு.மணிசார் முலம் !! அன்னை ஜானக்கி ராமசந்திரன் அவர்களிடம் !!எனது திருமணம் செய்தி தெரிவித்தேன் !! அன்னை ஜானகி ராமசந்திரன் அவர்கள் மிகவும் சந்தோஷ பட்டு !! ( செச்சா ) என்றால் நமது கண்கண்ட தெய்வம் அவர்களிடம் !! கூறி 06-9-1984 திருமணதேதியை தெய்வம் அவர்களிடம் தெரிவித்தேன் !! உடனே திருமணத்தை நடத்து !! நான் வருகின்றேன் !! என எனது கண்கண்ட தெய்வம் ஒப்புதல் தந்துவிட்டார் !! எனக்கு அணையை உடைத்துக்கொண்டு வரும் !!வெள்ளம் போல் !! மனதில் ஒரே குஷிதான் !!. உடனே என் விட்டிற்கு வந்து எனது தாயாரிடமும் !! ,அண்ணன்களிடமும் !! எனது அக்காவிடமும் !! நடந்த விஷ்யத்தை தெரிவித்தேன் !! எனது விட்டில் யாருமே முதலில் நம்பவில்லை !! எனது தாயார் மட்டும் நம்பினார் !!மறுநாள் மிண்டும் திரு,மணிசார் இல்லம்சென்றேன் அவர்மனைவி திருமதி சாந்திஅம்மா என்னசந்தோஷாமா என என்னை கேட்டார்கள் !! எனக்கு ஆனந்த கண்ணிர் வந்துவிட்டது !! அவர்களின் இல்லத்தில் காலை டிபின் !!,பகல் சாப்பாடும் !!சாப்பிட்டேன் !! அன்று மாலையில் !! "தோட்டத்தம்மா " இங்கு வருவார்கள் !! அந்தசமயம் வரும்படி திருமதி சாந்தி நாராயணன் அவர்கள் கூறினார்கள் !! அவர்கள் கூறியபடியே மாலையில் !! நூங்கம்பாக்கத்தில் உள்ள திரு,நாராயணன் சார் அவர்களின் இல்லம் சென்றேன் !! சிறிது நேரத்தில் !! அன்னை ஜானகிராமசந்திரன் அவர்கள் அங்கு வந்தார்கள் !! நான் ஒய்வுஅறையில் அமர்ந்திருந்தேன் !! 1/2 மணி நேரம் கழித்து !! என்னை அழைத்து திருமணம் என்ன ஏற்பாடுகள் செய்தாய் !! என " தோட்டத்தம்மா " கேட்டார்கள் !! எனக்கு யார் இருக்காங்க அம்மா என்று தயங்கியவாறு கூறினேன் !! நான் ( செச்சா ) அவர்களிடம் கூறுகின்றேன் என்றுகூறியவாறே காரில் புறப்பட்டார் !!
மறுநாள் என்னை திரு. மணிசார் அவர்கள் !! ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து சென்றார் !! முக்கிய மத்திய மாண்புமிகு அமைச்சர் ராமாவரம் தோட்டத்திற்கு வந்ததால் !! தெய்வதரிசினம் அன்றுகிடைக்க வில்லை !! திருமதி.அன்னை ஜானகிராமசந்திரன் அம்மா அவர்களை பார்த்து பேசிவிட்டு திரு,மணிசார் அவர்களின் இல்லம் வந்தோம் !! திரு,மணிசார் அவர்கள் நமது கண்கண்ட தெய்வம் அவர்களும் தோட்டத்ம்மா அவர்களும் !! இருவரும் உள்ள கருப்பு வெள்ளை புகைப்படம் வழங்கினார் !!
உடனே நான் சினிமா போஸ்டர்கள் டிசைன்கள் செய்பவர் !! Dr,உபால்டு அவர்களிடம் T நகர் அவரது அலுவலகத்தில் சந்ந்தித்து எனது திருமணத்திற்கு முதலமைச்சர் வருவதால் உடனே டிசைனை செய்து அப்புரூல்க்கு ( அனுமதிக்காக ) செய்துகொடுக்கும்படி தெரிவித்த இதோ இப்பவே என்ற வாறு " கண்கண்ட தெய்வங்கள் தலைமையில் மணவிழா அழைப்பிதழ் " என மிக சிறப்பாக டிசைன் செய்து கொடுத்தார் !!
அந்த திருமணம் பத்திரிகையின் முகப்பு அட்டையை !! நான் நூங்கம்பாகத்தில் உள்ள திரு,மாணிசார் இல்லம் சென்று எனது திருமணம்பத்திரிகையின் முகப்பை காட்டினேன் !! அவரின் மகள்கள் திருமதி.லதாராஜேந்திரன் அவர்களும் !! திருமதி,கீதா மதுமோகன் அவர்களும் !! திருமதி ,சுதா விஜெயகுமார் அவர்களும் !! ராமசந்திரன் என்கின்ற நடிகர் திபன் அவர்களும் !! செல்விபானு அவர்களும்!! திருமதி சாந்திநாராயணன் அவர்களும் !! திருமண பத்திரிகையின் டிசைனை பார்த்து !! அச்சரியபட்டு !! ஆனந்தபட்டு !! சந்தோஷாபட்டார்கள் !!
அன்று மாலையில் மைலாபூர் உட்லண்ஸ் HOTEL ல் !! நடைபெறும்!! நடிகர் திரு ராமராஜன் நடிகை நளினி அகியோரின் !!
திருமணவரவேற்ப்பில் !! கலந்துக்கொண்ட !! நமது கண்கண்ட தெய்வம் அவர்களிடம் !! என்னை திரு,மணிசார் அவர்கள் அழைத்துசென்றார் !! நமது தெய்வய் அவர்கள் என்னை பார்த்த வினாடியே !! அங்கு இருந்தபுல்தரையில் !! திரு, தெய்வம் அவர்களிடம் !! திருமண முகப்பு டிசைனை முதலில் காட்டினேன் !!திரு,தெய்வம் அவர்கள் அந்த டிசைனை பார்த்து என்னைபார்த்து என்னது இது என என்னிடம் கேட்டார் !! தாமதம் செய்யாமல் உடனே !! நான் பதராமல் தைரியமாக அண்ணே இது எனது திருமணபத்திரிகை வாழ்நாள் முழுவதும் நிங்கள் இருவரும் எனக்கு கண்கண்ட தெய்வங்கள் !! ஆகவே இதற்கு அண்ணன் அவர்கள் ஒப்புதல் தரவேண்டும் என வேண்டினேன் அதர்கு திரு, தெய்வம் அவர்கள் என்னை பார்த்து இது அவசியம் தேவையா ?? என கேட்டார் உஎனக்கு உள்ளத்தில் உதறல் ஏற்பட்டு விட்டது அதைகண்ட திரு,தெய்வம் அவர்கள் !! எனது தோல் பட்டையில் கைவைத்து சர் போட்டுக்கொள் என்றார் !! உடனே பதற்றத்துடன் நன்றி கூறி நானும் திரு,மணிசாரும் திரு,தெய்வம் அவர்கள் கிளம்பியபின் !!
நாங்களும் சென்றோம் !!
மறுநாள் திரு,தெய்வம் அவர்கள் !!காலையில் கோட்டைக்கு செல்லும் முன்பே !! ராமாலரம் தோட்டத்திற்கு என்னை திரு,மணிசார் அவர்கள் அழைத்து சென்றார்கள் !! தோட்டத்தம்மா அவர்களை சந்தித்து திருமணமண்டபத்தை பற்றி பேசினோம் !!உடனே திரு,தெய்வத்திடம் !!தோட்டத்தம்மா திருமணமண்டபம் பற்றி தெரிவித்தார் !! திரு, R M V அவர்களை பார்க்க ச்சொன்னார் நமது திரு,தெய்வம் அவர்கள் !!
அன்றுமாலையில் !! நான் மட்டும் !! அண்ணன் மாண்புமிகு R M V அவர்களை !! சந்தித்து !! நமது திரு,தெய்வம் அவர்கள் கூறியதை !! திருமணமண்டம் பற்றி !! திரு,தெய்வம் அவர்கள் !! ஐயா அவர்களை பார்க்க சொன்னார் என்றேன் !! தலைவர் என்னிடம் பேசினாராய்யா !! நான் திரு. A V M சரவணன் அவர்களிடம் பேசியபிறகு !! தலைவர் அவர்களிடம் கூறுகின்றேன் !! என்றார் மாண்புமிகு அண்ணன் R M V அவர்கள் !! சரிஎன்று திரு,மாணிசார் அவர்களிடம் கூறிவிட்டு எனது இல்லம் சென்றேன் !!
இதற்கிடையில் நடந்த சம்பவங்களை !! எனது உறவினர்களிடமும் !! நண்பர்களிடமும் !! தெரிவித்தேன் !! எனது உறவினர்களும் நண்பர்களும் !! நம்ம ஏரியாவுக்கு வந்தால் !! சிறப்பாக இருக்கும் !! என என்னை உசுபேற்றி விட்டார்கள் !! மாறுநாள் மாலையில் மாண்புமிகு அண்ணன் R M V அவர்களை சந்தித்தேன் !! அப்போழுது மாண்புமிகு அண்ணன் R M V அவர்கள், மைலாபூரில் உள்ள A V M ராஜேஸ்வரி திருமணமண்டபம் ஒதிக்கியதாகவும் நான் மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் தெரிவித்தேன் என என்னிடம் அண்ணன் ஆர் எம் வி அவர்கள் கூறினார் !! இந்த விஷ்யத்தை திரு.மாணிசார் அவர்களிடம் கூற நூங்கம்பாகம் சென்றேன் !! அதற்குள் திரு,மணிசார் அவர்களுக்கு தோட்டத்த்மா முலம் விஷ்யம் தெரிந்துகொண்டார் அதை என்னிடம் கூறினார் !! எனக்கு எது தேவை என்றாலும் !! முதலில் திரு,மணிசார் அவர்களிடம்தான் கூறுவேன் !!
நான் முதலில் எனது உறவினர்களும் !! நண்பர்களும் !! கூறிய விஷ்யத்தை திரு, மணிசார் அவர்களிடம் தெரிவித்தேன் !! மேலும் அண்ணன் அவர்களிடம் நான் கூறியது !! நான் வசிக்கும் வார்டில் உள்ள !! ஸ்ரீதாதாவாடி என்கின்ற !! மார்வாடிகளின் கோயில் உள்ள இடத்தில் !! மிக பெரிய திருமணமண்டபம் உள்ளது என்றேன் !! அந்த திருமணமண்டபம் எனக்கு கிடைத்தால் !! நமது திரு, தெய்வம் அவர்கள் வந்தால் !! எனக்கும் பெறுமையாக இருக்கும் என்றும் !! நான் வசிக்கும் பகுதியில் உள்ள பாமரபொதுமக்களும் !! நமது திரு, தெய்வம் அவர்களை கண்குளிர பார்பார்கள் எனகூறினேன் !! அதற்கு திரு,மணிசார் அவர்கள் நான் இந்த விஷ்யத்தை தோட்டத்தும்மா அவர்களிடம் கூறுகின்றேன் என்றார் !!
மறுநாள் காலையில் திரு, மணிசார் அவர்களை பார்த்தேன் !! மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு C.பொன்னையன் அவர்களைபார்க்கும்படி ராமவரம் தோட்டத்திலிருந்து திரு மணிசார் அவர்கள் முலம் தகவல் அறிந்த நான் மாண்புமிகு அண்ணன் C,பொன்னையன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தேன்!! அப்பொழுது தனது இலாக லேட்டர்பேடில் !! சென்னை மானகர காவல்த்துறை திரு,ஆணையாளர் அவர்களுக்கு !! ஒரு சிபாரிசு கடிதம் என்னிடம் கொடுத்து அனுப்பிவைத்து !! தொலைபேசியிலும் !! பேசியதால் மூன்றுநாள் கழித்து !! எனக்குநான் வசிக்கும்பகுதியில் உள்ள !! ஸ்ரீதாதாவடி கோயில் திருமணமண்டபத்தில் !! எனது திருமணம் செய்ய அனுமதிபெற்றுத்தந்தார் !! எனகோ மிகவும் சந்தோஷம் !! எனக்கு தகவல் கிடைத்த உடன் நான் திரு,மணிசார் முலம் ராமாவரம் தோட்டத்திற்கு சென்று நன்றிகள்பல தெரிவித்தேன் !!
பிறகு தாமதம் செய்யாமல் !! கண்கண்ட தெய்வங்கள் தலைமையில் மணவிழா அழைப்பிதழ்கள் முதன் முதலாக பலவர்ணங்களில் மல்டிகலரில் அச்சிட்டு முதல் ( Profe ) பிரதியை ராமாவரம் தோட்டத்தில் திரு,தெய்வம் அவர்களிடம் காட்டி ஒப்புதல் வாங்கினேன் !!
திருமண பாதிரிகைகள் அனைவருக்கும் முறைபடி நேரில் கொடுத்தேன் !! முதல் திருமணபத்திரிகையை எனது கண்கண்ட தெய்வம் அவர்களிடம் முறைபடி கொடுத்தேன் !! திரு,தெய்வம் அவர்கள் பார்த்து திருப்தியடைந்து சிறித்தவாறே தலையை அசைத்தார் !! என கைகால் !! நடுக்கம் !! கலந்த !! எதோ ஒரு விதமான !! பயம் கலந்த பக்தி!! என்றே சொல்லலாம் !!
06-9-1984 ல் எனது திருமணத்திற்குஅமைச்சர்கள் மாண்புமிகு அண்ணன் திரு K A K அவர்களும் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் Dr, H. V . ஹாண்டே அவர்களும் திரு.அனகாபுத்துர் ராமலிங்கம் அவர்களும் திரு.நடிகர் S,S,R.அவர்களும் திருமதி சுலோச்சனா சம்பத் அவர்களும் !! திரு. A.C.சண்முகம் அவர்களும் திரு.ஜேப்பியார் அவர்களும்............ Thanks...
*MGR பற்றி இதுவரை வெளியான நூல்கள் பற்றிய தொகுப்பு இங்கே...*
தமிழ் நூல்கள்:
****************
1. முதலமைச்சர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் - டி.வி.சிவப்பிரகாசம்,வெளியீடு - கல்வி உலகம், இளந்தேரி (1977)
2. புரட்சித்தலைவரின் பொன்மொழிகள் (ஆசிரியர் – சாலி.இக்பால், வெளியீடு – நூர் பதிப்பகம், சென்னை (1980)
3. மக்கள் திலகம் இருவரலாற்றுப்படை (ஆசிரியர் புலவர். கே.பெரு.திருவரங்கன்,வெளியீடு - இராமலட்சுமி பதிப்பகம் , சென்னை (1980)
4. அண்ணனுக்குப் பின் மன்னன்,(ஆசிரியர் – அடியார்,வெளியீடு - மல்லி பதிப்பகம், சென்னை (1978)
5. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – வித்துவான் வே.லட்சுமணன்,வெளியீடு – வானதி பதிப்பகம், சென்னை (1985)
6. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்,வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1983)
7. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு - அறிஞர் அண்ணா பதிப்பகம், சென்னை (1979)
8. வரலாற்று நாயகன் (ஆசிரியர் – திருமூலன்,வெளியீடு – கவிதா பப்ளிகேசன்ஸ் , சென்னை (1978)
9. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன்,வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985)
10.எம்.ஜி.ஆர். என் இதயக்கனி (ஆசிரியர் – அறிஞர் அண்ணா, தொகுப்பு- ஆர்.சீனிவாசன்,வெளியீடு – சத்தியத்தாய் பதிப்பகம் , சென்னை (1984)
11. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ் (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்,வெளியீடு – நீரோட்டம் வெளியீடு , சென்னை (1981)
12. அண்ணா தி.மு.க. வரலாறு (ஆசிரியர் – ஆர்.ரெங்காராவ்,வெளியீடு – செவ்வாய் வெளியீடு , சென்னை (1986)
13. நெஞ்சில் ஆடும் தீபம் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் டி.கே.மதியானந்தம்,வெளியீடு – கவிதாபானு, சென்னை (1983)
14. சத்துணவும் சத்துணர்வும் (ஆசிரியர் – கிருஷ்ணகாந்தன்,வெளியீடு – வள்ளி புத்தக நிலையம், சென்னை (1984)
15. அறிஞர் அண்ணா நமக்கு அறிவூட்டுகிற கடவுள் ( எம்.ஜி.ஆர். சொற்பொழிவுகள்) (ஆசிரியர் – தொகுப்பு-கழஞ்சூர் சொ.செல்வராஜ்,வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், சென்னை (1985)
16. தங்கத்தமிழர் எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மாணிக்கம்-சீனிவாசன், வெளியீடு – வெல்கம் பப்ளிகேஷன்ஸ் , சென்னை (1986)
17. எம் தலைவன் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்,வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1987)
18.அமெரிக்காவில் அண்ணா, எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி,வெளியீடு – வித்வான் பதிப்பகம், சென்னை (1975)
19. பொன்மனமே நீடு வாழ்க (கவிதை) (ஆசிரியர் – ராஜவர்மன், வெளியீடு – ஏ.எஸ்.ஆர்.பப்ளிகேசன்ஸ், சென்னை (1984)
20. மக்கள் தலைவருக்கு மன்றத்தலைவர் டாக்டர் பட்டம்- சேலத்தில் எடுத்த விழா மலர் (ஆசிரியர் – தஞ்சை வி.எஸ்.இராசு, வெளியீடு – புரட்சிக்குயில் பப்ளிகேசன்ஸ், சென்னை (1983)
21. சரித்திரத்தை மாற்றிய சத்புருஷர் (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1986)
22. நினைவுகளின் ஊர்வலம் (ஆசிரியர் – கவிஞர் புலமைப்பித்தன், வெளியீடு – திருமகள் நிலையம், சென்னை (1986)
23. எமனை வென்ற எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தஞ்சை தமிழழகன், வெளியீடு - மக்கள் பதிப்பகம், சென்னை (1985)
24. டாக்டர் எம்.ஜி.ஆர் ஒரு பொருளாதார வல்லுநர் (ஆசிரியர் – அ.வசந்தகுமார், வெளியீடு – கண்ணம்மாள் பதிப்பகம், சென்னை (1985)
25. பொன்மனச் செமமலும், புன்னகை மலர்களும் (ஆசிரியர் – எஸ்.குலசேகரன், வெளியீடு - அமிழ்தம் பதிப்பகம், சென்னை (1985)
26. தெற்கு என்பது திசை அல்ல (கவிதை) (ஆசிரியர் – வலம்புரிஜான், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984)
27. சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – பாலாஜி, வெளியீடு – கீதா பிரசுரம், சென்னை (1987)
28. டாக்டர். எம்.ஜி.ஆர் வீரக்காவியம் (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988)
29. அப்பலோ டு அமெரிக்கா (ஆசிரியர் – பா.ஜீவகன், வெளியீடு – மேத்தா பிரசுரம், சிவகாசி (1985)
30. சத்துணவு பாடல்கள் (ஆசிரியர் – புலவர்.பி.வெங்கடேசன், வெளியீடு - அறிவரசி பதிப்பகம், தருமபுரி (1984)
31. இந்தி ஆதிக்கப் போரில் புரட்சித்தலைவர் (ஆசிரியர் – கவிஞர் மணிமொழி-நாஞ்சில் நீ.மணிமாறன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987)
32. நான் ஏன் பிறந்தேன்? (ஆசிரியர் – வேலன், வெளியீடு – வேல் பாண்டியன் பிரசுரம், சென்னை (1988)
33. புரட்சித்தலைவர் அரசின் சமதர்மச் சட்டங்கள், (ஆசிரியர் – கா.சுப்பு, வெளியீடு - அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சென்னை (1984)
34. நான் கண்ட எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985)
35. எம்.ஜி.ஆர் ஒரு குமணன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1988)
36. முப்பிறவி எடுத்த முதல்வர் (ஆசிரியர் – திருப்பூர் வெ.சம்பத்குமார், வெளியீடு - சாயிகீதா பதிப்பகம், சென்னை (1985)
37. சொல்லும் செயலும் (ஆசிரியர் – ஆ.அசோக்குமார், வெளியீடு – நியூ ஸ்டார் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985)
38. செந்தமிழ் வேளீர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – புலவர்.செ.இராசு, வெளியீடு – கொங்கு ஆய்வு மையம், ஈரோடு (1985)
39. எம்.ஜி.ஆர் சரணம் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு - நெய்தல் பதிப்பகம், சென்னை (1988)
40. எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் (ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன், வெளியீடு – தனலட்சுமி பதிப்பகம், சென்னை (1981)
41. 1980-85 சட்டமன்ற நாடாளுமன்ற வேட்பாளர்கள் (ஆசிரியர் – எம்.சுப்பிரமணியம், வெளியீடு – சித்ரா பப்ளிகேசன்ஸ், சென்னை (1986)
42. சாதனைப்பூவின் சரித்திர வசந்தம் (ஆசிரியர் – டாக்டர் ஜெகத்ரட்சகன், வெளியீடு – அப்போலா வெளியீடு, சென்னை (1988)
43. முப்பிறவி கண்ட முதல்வர் (ஆசிரியர் – டி.எம்.சௌந்திரராஜன், வெளியீடு - ரேவதி பதிப்பகம், சென்னை (1985)
44. செம்மலின் பொன்மனம் (ஆசிரியர் – கவிஞர்.ச.பஞ்சநாதன், வெளியீடு – என்.எஸ்.பப்ளிகேசன்ஸ், மதுரை (1988)
45. புரட்சியார் ஒரு காவியம், (ஆசிரியர் – கவிஞர்.தெ.பெ.கோ.சாமி, வெளியீடு - சித்ரா பதிப்பகம், வேலூர் (1987)
46. எம்.ஜி.ஆர்.உயில்களும் உயில் சாசன சட்டங்களும் (ஆசிரியர் – வை.சண்முகசுந்தரம், வெளியீடு – கலைக்கருவூலம், சென்னை (1988)
47. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.உலா (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு – பூம்புகார் பிரசுரம், சென்னை (1983)
48. மக்கள் திலகம் பற்றிய மாணவராற்றுப்படை (ஆசிரியர் – மாருதிதாசன், வெளியீடு - அருள்ஜோதிப் பதிப்பகம், நாமக்கல் (1981)
49. உலா வரும் உருவங்கள் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் இளந்தேவன், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984)
50. அ.இ.அ.தி.மு.க வின் தோற்றமும் வளர்ச்சியும் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1985)
51. சந்திரனைப் போற்றும் நட்சத்திரங்கள் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987)
52. புரட்சித்தலைவர் அவர்களுக்கு அறிஞர்கள் புகழ் மாலை (ஆசிரியர் – கழஞ்சூர் சொ.செல்வராஜி, வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், வேலூர் (1985)
53. வெற்றித்தலைவர் வீர வரலாறு (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988)
54. எம்.ஜி.ஆர். ஒரு காவியம் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லை பதிப்பகம், சேலம் (1987)
55. ஜீவ நதிகள் (ஆசிரியர் – கலைமாமணி மா.லட்சுமணன், வெளியீடு - அன்னை ஜே.ஆர். பதிப்பகம், சென்னை (1988)
56. புரட்சித்தலைவர் புகழ் அந்தாதி, (ஆசிரியர் – மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன், வெளியீடு - தாமரைப் பதிப்பகம், சென்னை (1985)
57. தந்தை பெரியார் முதல் புரட்சித்தலைவர் வரை (ஆசிரியர் – ஏ.கே.வில்வம், வெளியீடு - ரோமா பதிப்பகம், சென்னை (1985)
58. வள்ளலும் உள்ளமும் (ஆசிரியர் – டாக்டர்.எஸ்.தங்கமணி, வெளியீடு - ஆரோம் பதிப்பகம், குமரி (1987)
59. நடிகர் திலகமும் புரட்சித்தலைவரும் (ஆசிரியர் – ரசிகன் அருணன், வெளியீடு - அருணா பப்ளிசிட்டி, சென்னை (1987)
60. திருக்குறள் பாதையில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1984)
61. எம்.ஜி.ஆர் பெயரில் மன்றம் தேவையா? (ஆசிரியர் – திருவை ஆ.அண்ணாமலை, வெளியீடு – நெல்சன் பதிப்பகம், சென்னை (1961)
62. தர்மம் வென்றது (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1987)
63. எம்.ஜி.ஆர் கதை பாகம்-1 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு – ஜியோ பப்ளிகேசன்ஸ், சென்னை (1989)
64. மறு பிறவி கண்ட மக்கள் திலகம் (ஆசிரியர் – எம்.ஜி.ஆர் தாசன், வெளியீடு – கன்னிப் பதிப்பகம், சென்னை (1985)
65. சத்தியா மைந்தன் சாதனை (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988)
66. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – மறைதிரு எம்.ஏ.கோலாஸ், சேலம் (1978)
67. சத்துணவு நாயகன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லைநாயகி பதிப்பகம், சேலம் (1987)
68. இதயவானில் உதய நிலவு (ஆசிரியர் – தண்டு குன்னத்தூர் தமிழன், வெளியீடு - இளவளகி பதிப்பகம், வேலூர் (1985)
69. பரிபூரண அவதாரம் (நாடகம்) (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1985)
70. எம்.ஜி.ஆர் கதை பாகம்-2 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு - அருள்மொழி பதிப்பகம், சென்னை (1991)
71. எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படை சரிதானா? (ஆசிரியர் – கி.வீரமணி, வெளியீடு – திராவிடர் கழக வெளியீடு, சென்னை (1982)
72. நிலவை நேசிக்கும் நெஞ்சங்கள் (ஆசிரியர் – இனியவன், வெளியீடு – அவ்வை மன்றம், சென்னை (1986)
73. புரட்சித்தலைவர் பிள்ளைத் தமிழ் (ஆசிரியர் – கவிஞர் அக்கினிப்புத்திரன், வெளியீடு - குறளகம், பழனி (1988)
74. புரட்சித்லைவர் எம்.ஜி.ஆர். வீர வரலாறு (ஆசிரியர் – ஜோதிமணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சிவகாசி (1993)
75. எம்.ஜி.ஆர் நிழலும் நிஜமும் (ஆசிரியர் – மோகன்தாஸ், வெளியீடு – பந்தர் பப்ளிகேசன்ஸ், பெங்களுர் (1993)
76. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பதிப்பகம், நாகப்பட்டினம் (1991)
77. சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர். சாதனைகள் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1991)
78. சரித்திரம் படைத்த எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஏ.கே.சேஷய்யா, வெளியீடு – மயிலவன் பதிப்பகம், சென்னை (1993)
79. மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கு.சண்முகசந்தரம், வெளியீடு – குமரன் பதிப்பகம், சென்னை (1992)
80. எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மு.தம்பித்துரை எம்.ஏ, வெளியீடு – ஞானச்சுடர் பதிப்பகம், சென்னை)
81. தலைவனே எங்களுக்குத் தத்துவம் (ஆசிரியர் – மெய்க்கீர்த்தி, வெளியீடு - அன்னை சத்யா புத்தகப்பண்ணை, சென்னை (1978)
82. எம்.ஜி.ஆர் ஆட்சியும் சிவாஜி ரசிகர்களும் (ஆசிரியர் – எஸ்.வீரபத்திரன், வெளியீடு – புரட்சியார் ரசிகன், சென்னை (1985)
83. அண்ணா கொள்கைக்கு நாமம் (ஆசிரியர் – விடுதலை தலையங்கங்கள், வெளியீடு – திராவிடக்கழக வெளியீடு, சென்னை)
84. வெற்றி நமதே (ஆசிரியர் – ஜோதி மணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சென்னை (1991)
85. அரசும் தமிழும் (ஆசிரியர் – ஒப்பிலா மதிவாணன், வெளியீடு - தமிழ்ச்சுரங்கம், மதுரை (1986)
86. தன்னிறைவுத் திட்டத்தில் தமிழகம் (ஆசிரியர் – குமரிச் செல்வன், வெளியீடு - நாகர்கோவில் (1982)
87. காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தேனி ராஜதாசன், வெளியீடு - மணிமேகலைப் பிரசுரம், சென்னை (2010)
88.வேதநாயகன் (ஆசிரியர் – ரவீந்திரன், வெளியீடு - சென்னை (1993)
89.தர்மதேவன் எம்.ஜி.ஆர் வீரவரலாறு காவியம், வெற்றிச் செல்வர் எம்.ஜி.ஆர் வீர வரலாறு (வெளியீடு - ஸ்ரீ தனலட்சுமி பதிப்பகம், சென்னை)
90.குண்டுக்கும் அஞ்சாத எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கலைமணி, வெளியீடு – தமிழ் நிலையம், சென்னை (1967)
91.ஆயுள் பரிசு (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு - கவிப்பிரியா பதிப்பகம், சென்னை)
92.இதயத்தில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மா.செங்குட்டுவன், வெளியீடு – வண்ணக் களஞ்சியம், சென்னை (1967)
93.தமிழக முதல்வர் (ஆசிரியர் – சிவாஜி, வெளியீடு - அசோகன் பதிப்பகம், சென்னை)
94.எம்.ஜி.ஆர் இதழியல் நோக்கு (வெளியீடு - சேகர் பதிப்பகம், சென்னை)
95.அண்ணாவின் அரசு (வெளியீடு - அன்பு நிலையம், சென்னை)
96.அண்ணாவின் பாதை (வெளியீடு – ராஜா பதிப்பகம், அருப்புக்கோட்டை)
97.அண்ணா வழியில் எம்.ஜி.ஆர் (வெளியீடு – ஜெயா பப்ளிகேசன்ஸ், சென்னை)
98.எதிர்ப்பில் வளர்ந்த எம்.ஜி.ஆர் (வெளியீடு – எம்.ஆர்.வி. பப்ளிகேசன்ஸ், சென்னை)
99.எம்.ஜி.ஆர்.ஆட்சியில் அண்ணா அறிவாலயத்திற்குத் தடையா?
100.வெற்றித்திருமகன் எம்.ஜி.ஆர்.(ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன்)
101.வரலாற்று நாயகன் (ஆசிரியர் – கரு.கருப்பையா)
102.புரட்சித்தலைவர் (ஆசிரியர் – தேவிப்பிரியன்)
103.யுக வள்ளல் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – சக்கரைப்புலவர்)
104.தலைவா உன்னை யாசிக்கிறேன் (ஆசிரியர் – அடியார்)
105. இதயதெய்வம் எம்.ஜி.ஆர்
106.எம்.ஜி.ஆர். பதில்களின் தொகுப்பு-கண்ணதாசன் பதிப்பகம்
107.எம்.ஜி.ஆர். திரைப்படக்கருவூலம்-இதயக்கனி வெளியீடு
108.எம்.ஜிஆரின் வசன முத்துக்கள்-இதயக்கனி வெளியீடு
109.எம்.ஜி.ஆர்.ஒரு சகாப்தம்-தொகுப்பாசிரியர் ஆர்.பி.சங்கரன்
110.கோட்டையும் கோடம்பாக்கமும்-ஆரூர் தாஸ்
111.எம்.ஜி.ஆர். 100-சபீதா ஜோசப்
112.வாத்யார்-ஆர்.முத்துக்குமார்
113.எம்.ஜி.ஆர்-நடிகர் முதல்வரானது எப்படி--அருணன்
114.நான் ஆணையிட்டால்--எஸ்.கிருபாகரன்.
115.இருவரின் கதை-எஸ்.திருநாவுக்கரசு
116.இதய ஒலி-பழனி ஜி.பெரியசாமி
117.எம்.ஜி.ஆர் 100-காலத்தை வென்ற தலைவர்-இந்து வெளியீடு
118.விழாநாயகன் எம்.ஜி.ஆர். -கே.ரவீந்தர்
119.மக்கள் மனதில் எம்.ஜி.ஆர்-மதுரை எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்
120.அதிர்ந்தது பூமி -எம்.பி.உதயசூரியன்
121.என் நினைவுத்திரையில்-பி.நாகிரெட்டி
122.வள்ளல் எம்ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு-எம்.ஜி.ஆர்.முத்து
123.எல்லாம் அறிந்த எம்.ஜி.ர்.-எஸ.விஜயன்
124.மறக்க முடியாத மக்கள் திலகம்--என்.சங்கர்.
125.மக்கள் திலகமும் மனித நேயமும்-எம்.ஜி.ஆர்.முத்து
126.மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்-ரங்க வாசன்
127.எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்-மணவை பொன்.மாணிக்கம்
128.மறக்க முடியாத மாமனிதர்-மணவை பொன்.மாணிக்கம்
129..சுட்டாச்சு சுட்டாச்சு-சுதாங்கன்
130.எம்.ஜி.ஆர். பேட்டிகள்--எஸ்.கிருபாகரன்
131.மனிதப் புனிதர்-எம்.ஜி.ஆர்-கே.பி.ராமகிருஷ்ணன்
132.மக்கள் மனதில் எம்.ஜி.ஆர்-எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்
133.சொக்கத்தங்கம் எம்.ஜி.ஆர்--பா.அங்கமுத்து
134.தரணி கண்ட தனிப்பிறவி எ.
135..மக்கள் திலகம் சினிமாவில் என்னை விதைத்தவர்-இயக்குநர் மகேந்திரன்
136.எனக்குள் எம்.ஜி.ஆர். -கவிஞர் வாலி
ஆங்கில நூல்கள் (English Books)
***********************************
1.Dr.M.G.R.A.Phenomenon (Author- Dr.Jagathrakshakan, Publisher- Appolo Publications, Chennai (1984)
2.All India Anna Diravida Munnetra Kazhagam (Author- Dr.R.Thandavan, Publisher- T.N.Academy of Political Science, Chennai (1984)
3.Poems- I Call M.G.R an Angel (Author- S.Yesupatham, Publisher- Packiam Publications, Chennai (1984)
4.Impact M.G.R.Films (Author- V.Kesavalu, Publisher- Movie Appreciation Society, Chennai (1990)
5.The Dynamic M.G.R (Author- A.P.Janarthanam M.P., Publisher- Chennai (1978)
6.M.G.R.-The Man and Myth (Author- K.Mohndass, Publisher- Panther Publishers, Chennai (1992)
7.The Image Trap (M.G.R Film & Politics) (Author- M.S.S.Pandian, Publisher- Sage Publications India, New Delhi (
8.Dr. M.G.R in Indian News Papers(Author- Dr. Mohanrajan)
9.C.M. Speech's
*வாழ்க புரட்சி தலைவர்*........... Thanks...........
6.09.2019. இரவு வசந்த் தொலைக்காட்சி யில் ஒளிபரப்பப்பட்ட நல்லவன்வாழ்வான் திரை காவியத்தில் புரட்சிமாமன்னர் எம்.ஜி.ஆர்.அவர்களின் அலட்டல்.ஆர்பாட்டம் ...ஓங்கி கத்துதல் எதுவுமில்லாத காட்சிக்குத் தேவையானதும் , ஒருஉண்மையான மனிதன் நிலையையும், இயற்கையாக செய்த நடிகபேரசர் நமதுதலைவர் எம்ஜிஆர் அவர்களின் புகழில் அனைவருக்கும் இன்றைய நாள் நல்லதாக அமையட்டும்.......... மதுரை.எஸ் குமார்........ Thanks...
எம்ஜிஆர் .கண்ணதாசன்..தொடர்ச்சி...
இல்லாத இதயங்களுக்காக இரக்கமோடு கொடுப்பவனே மேல்ஜாதி! இருப்பதை இருட்டறையில் வைத்துக்கொண்டு ஈயாதவனே கீழ்ஜாதி!
சரி! ஜாதியை இரு பிரிவாக வகுத்துக் கொண்டோம்! பாழாய்ப் போன பூமியைப் பண்படுத்த வழி…! இதோ….! புரட்சி நடிகர் செப்பும் புரட்சி கீதம்… கவியரசர் வழி வருவதைப் பார்ப்போமே….!
“நடப்பது யாவும் விதிப்படி என்றால்,
வேதனை எப்படித் தீரும்?
உடைப்பதை உடைத்து, வளர்ப்பதை வளர்த்தால்
உலகம் உருப்படி யாகும்!”
பார்த்தீர்களா?
‘பாரில் நடப்பதெல்லாம் பகவான் விதித்த விதிப்படி என்றால், இப்பாரிலுள்ள பலகோடி ஏழை மக்களின் வேதனைகள் எப்போது, எப்படித்தான் தீரும்? பொறுமை கொண்டோரே! பொறுத்தது போதும்! இனி உடைத்தெறிய வேண்டிய பத்தாம்பசலித்தனமான பழைமைகளை உடைத்தெறிந்து விட்டு, வளர்க்க வேண்டிய புதுமைகளையும், பழைமைகளையும் பாதுகாத்து வளர்த்தால் உலகமே உருப்படியான புத்துலகமாக மாறும்!’
சரிதானா? டி.எம். சௌந்தரராஜன் உணர்ச்சிப் பெருக்கோடு பாடி, புரட்சி மனத்துள்ளலோடு புரட்சி நடிகராம் எம்.ஜி.ஆர் பாடல் காட்சியில் தோன்றி நடித்த, கண்ணதாசனின் இப்பாடல் கருத்துகளை இன்றும் காண்போர், கேட்போர் மெய்சிலிர்த்து, தம்மை மறந்து உணர்ச்சிப் பெருக்கோடு நிற்பர் என்பது உண்மையன்றோ!
நாடு! அதை நாடு!
‘நாடோடி’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான பி.ஆர். பந்துலு மிகச்சிறந்த தேசியவாதி.
போர்மேகங்கள் பெரிதும் சூழ்ந்து நின்ற 1965 ஆம் ஆண்டில் தயாரிக்கப் பெற்ற படமே ‘நாடோடி’.
எனவே இப்படத்தில் தேசிய உணர்வு பெருக்கெடுத்து ஓடும் கவியரசர் பாடல் இடம்பெற்றதில் வியப்பேதுமில்லை. புரட்சி நடிகரும் தேசிய உணர்வும், தேசப்பற்றும் மிகுந்தவர் என்பதை யாரும் மறுத்திட இயலாது.
1962 ஆம் ஆண்டு சீனப் படையெடுப்பின் போது, இந்தியாவிலேயே யுத்த நிவாரண நிதியாக அதிகத்தொகையாம் ஒரு இலட்ச ரூபாயையும்; 110 சவரன் தங்க வாளினையும், எம்.எல்.சி. பதவிக்குக் கிட்டிய சம்பளத்தையும் தந்த தங்கமனம் படைத்த தலைவர் எம்.ஜி.ஆர். ஒருவரே.
இவை தவிர தாம் நடித்த சொந்தப் படங்களை ‘எம்.ஜி.ஆர். வாரம்’ எனத் திரையிட்டு ரூபாய் 17500-ஐயும் 1962-ஆம் ஆண்டு பாதுகாப்பு நிதிக்கு ஈந்த தேசபக்தச் செம்மலே எம்.ஜி.ஆர்.
இதுவுமின்றி முதலிலே கூறிய நன்கொடைப் பட்டியல்படி பண்டிதல் ஜவகர்லால் நேரு நினைவு நிதிக்கு 1964 – ஆம் ஆண்டு ரூபாய் இருபத்தைந்தாயிரத்தை வாரித் தந்த வள்ளலே எம்.ஜி.ஆர்.
பட்டியல் நீளும் வண்ணம் பல மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதி, புயல் நிவாரண நிதி, வறட்சி நிவாரண நிதியெனத் தேசபக்தியுடன், கருணையுள்ளத்தோடு பல இலட்சங்களைப் பாங்குடன் ஈந்த பாரிவள்ளலே எம்.ஜி.ஆர்......
வாழ்க தலைவரின் புகழ் என்றுமே.......... Thanks.........
தமிழ்நாடு வரலாறு தெரியாதவர்கள் பல செய்திகளை சொல்கிறார்கள். திராவிடம், திராவிட கொள்கை, திராவிடத்தை வளர்த்தவர் யார்? என்பதை எடுத்துக் கூறுவது என் கடமை. 1952-ம் ஆண்டு MGR தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் இணைந்த பிறகுதான், தி.மு.க. வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்தது.
1952-ம் ஆண்டு MGR தி.மு.க.வில் இணையும் வரை தேர்தலில் போட்டியிடவில்லை. 1957-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டது. அந்த தேர்தலின் போது MGR குறிப்பிட்ட தலைவர்களுக்காக பிரசாரம் செய்தார். அப்போது 15 இடங்களில் தி.மு.க. வெற்றிபெற்றது.
தி.மு.க. என்ற கொடி பாமர மக்களிடம் சென்றடைவதற்கு காரணம், ‘நாடோடி மன்னன்’ திரைப்படம் தான்.MGR படத்தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கிய போது, அந்த நிறுவனத்தின் ‘லோகோ’வில் தி.மு.க.வின் இருவர்ண கொடியை இடம்பெற செய்தார். அந்த லோகோவை வெளியிட தணிக்கைத்துறை தடைசெய்தது. அந்த தடையை MGR தகர்த்து எறிந்தார்.
60 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க.வின் இருவர்ண கொடியை அடையாளப்படுத்தி பட்டித்தொட்டி எங்கும் MGR கொடி என்று அறிமுகப்படுத்தப்பட்டதுஅந்த இருவர்ணத்திலான 1¼ அடி துண்டை அப்போது கழுத்தில் போடுவதில் பெருமை அடைந்தோம். MGR ரின் திரைப்பட பாடலில் இருவர்ண கொடி, உதயசூரியன் பற்றி எழுதப்பட்டது.
1962-ம் ஆண்டு தேர்தலில் 50 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. 1967-ம் ஆண்டில் ஆட்சி கட்டிலில் ஏறியது. 1967-ல் ஆட்சி பிடித்ததும் பேரறிஞர் அண்ணாவுக்கு மாலை அணிவிக்க எல்லோரும் சென்றனர். அப்போது பேரறிஞர் அண்ணா அந்த மாலையை வாங்க மறுத்துவிட்டார். இந்த வெற்றிக்கு காரணமானவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் இருக்கிறார். அவருக்கு சென்று மாலை அணிவியுங்கள் என்று அண்ணா சொன்னார்.
அண்ணாவே 1967-ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு காரணமானவர் MGR தான் என்று சொன்னதற்கு அடிப்படை காரணம், அவர் துப்பாக்கியால் சுடப்பட்ட கட்டுடல் போடப்பட்ட படம்தான் நாட்டு மக்கள் மத்தியில் அனுதாபத்தை பெற்று வெற்றிக்கு வித்திட்டது. பெரும்பான்மையை பெறுவதற்கு மூலக்காரணமாக MGR இருந்தார்.
பேரறிஞர்அண்ணா தான் MGRரை சரியான முறையில் அடையாளம் கண்டவர். MGRரை இதயக்கனி என்று அழைத்தார். ஒருமுறை தேர்தலுக்காக MGR நிதி கொடுக்க வந்த போது, உன்னுடைய நிதி வேண்டாம், உன் முகத்தை மட்டும் காட்டு, 30 லட்சம் வாக்குகள் கிடைக்கும் என்று பேரறிஞர் அண்ணா சொன்னார்.
பேரறிஞர் அண்ணா பொதுக்கூட்டங்களுக்கு சென்றுவரும் நேரங்களில், அவருடைய காரில் இருக்கும் கொடியை அங்குள்ள பாமர மக்கள் பார்த்து, பேரறிஞர் அண்ணாவிடம், MGR கட்சியா? என்று கேட்கும் அளவுக்கு MGR மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். அதை பேரறிஞர் அண்ணா பெருமையாகவே கருதினார்.
படித்தவர்கள் மத்தியில் என் எழுத்தும், பேச்சும், கருத்தும் சென்றடைகிறது என்றால், படிக்காத பாமர மக்களிடம் என்னுடைய கருத்தை, சிந்தனையை கொண்டு சென்றவர் என்னுடைய தம்பி MGR என்று பேரறிஞர் அண்ணா சொல்வார். தி.மு.க. வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்குகிறவர் MGR என்றும் பேரறிஞர் அண்ணா சொல்வார். அவரால் திராவிட இயக்கம் வளர்ந்தது என்று அண்ணா மிகத் தெளிவாக பதிவு செய்தார்.
1971-ல் கருணாநிதி தலைமையில் ஆட்சி நடந்தபோது, அப்போது தேர்தல் வருகிறது. அவர்களுக்கு ஆதரவாக பட்டித்தொட்டி எங்கும் பிரசாரம் செய்தார். இந்த ஆட்சிக்கு உத்தரவாதம் தருகிறேன், தவறு நடந்திருந்தால் அதை திருத்தியமைக்க போராடுவேன் என்று சொன்னார். என்னை நம்பி வாக்களியுங்கள் என்றும் கேட்டார். அதை தமிழக மக்கள் ஏற்றார்கள் என்பதற்கு வெளிப்பாடு, 183 இடங்களில் தி.மு.க. வெற்றிபெற்றது. அதன்பின்னர், தி.மு.க.வை விட்டு MGR வெளியேறி, 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை தொடங்கினார்.
அதன்பிறகு, 1972-ம் ஆண்டு முதல் 1987 வரை MGRரை யாராலும் வெற்றிபெற முடியவில்லை. எத்தனை சூழ்ச்சிகள், சதிகள் செய்தாலும் MGR உயிரோடு இருக்கும் வரை தமிழக மக்கள் தலைவர் MGR தான் என்று நாட்டு மக்கள் நிரூபித்தனர். திராவிட இயக்கத்தை வளர்த்தவர் MGR தான்.
பேரறிஞர் அண்ணா நாட்டின் முதலமைச்சர் ஆக உட்காருவதற்கு காரணமாக இருந்தார். அதன்பிறகு கருணாநிதி, ஜெயலலிதாவும் ஆட்சியில் அமருவதற்கு காரணம் MGR தான். இப்போது எடப்பாடி.K.பழனிச்சாமி தமிழ்நாடு முதலமைச்சர் ஆக இருப்பதற்கும் MGR தான் காரணம். MGR இல்லை என்றால் திராவிடம் என்ற பேச்சு தமிழகத்தில் இருந்திருக்காது.......... Thanks...
மேற்கல்வி கடவுள் எம் ஜி ஆர்
எந்த முதல்வரும் சாதிக்காத கல்வி புரட்சி புரட்சி தலைவரின் சாதனை ஆதாரம் இதோ
1 பசி இன்றி கல்வி கற்க்க சத்துணவு திட்டம்
2 புத்தகம் வாங்க முடியாதவர்க்கு புத்தகம்
3 மண்ணால் பல் துலக்கிய குழந்தைகளுக்கு பல்பொடி
4 தெருவில் காலணியை கையில் தூக்கிய ஜாதி கொடுமைய நீக்க இளமையில் செருப்பு
5 இலவச பஸ் பயணம் மாணவ மாணவிகளுக்கு
6 கிராமத்தாரும் அனைத்து தரபினரும் மேற்கல்வி கற்க்க பள்ளியிலே ப்ளஸ் டூ
7 மாவட்டம் தோறும் தொழிற்கல்வி
8 உலகதர அண்ணா பல்கலை கழகம் அமைத்தார் எம் ஜி ஆர்
9 பாரதி தாசன்பாரதியார் அன்னை தெரசா தமிழ் போன்ற அரசு பல்கலைகழகங்களை ஏற்ப்படுத்தினார் எம் ஜி ஆர்
10 கோடிகணக்கில் இஞ்சினீர்களை உருவாக்கி உலகம் முழுவதும் தமிழ் இஞ்சினீகளை பரப்ப தனியார் பல்கலைகழகங்கள்
11 கணணியில் தமிழ் வர பெரியார் எழுத்தை அதிகார மொழி ஆக்கினார் எம் ஜி ஆர்
12 மெரிட் முறையில் மருத்துவம் படிக்க வைத்தார்
13 கல்வியை பாமரர்களும் பயிலும் வகையில் எளிமை ஆக்கினார் எம் ஜி ஆர்
மேற்கல்வி எம் ஜி ஆரால் மேன்மை அடைந்தது இன்று இந்தியாவில் அதிகம் இஞ்சினீயர்கள் மற்றும் பட்டதாரிகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம்
மேற்கல்வி கடவுள் எம் ஜி ஆர்
எம் ஜி ஆர் புகழ் வாழ்க........ Thanks...
Tv programme *MGR Movies*
Raj Tv 1.30 Pm *Adimaippen*
Mega Tv 12.00 pm *Panathottam*
Guys Enjoy your movies ! ......... Thanks...
06/09/19 முதல் திருச்சி ஸ்ரீரங்கம் - ரங்கராஜாவில் வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் டிஜிட்டல் "ரிக் ஷாக்காரன் " தினசரி 3 காட்சிகள் ..........நடைபெறுகிறது .........
தகவல் உதவி : நண்பர் திரு.சுந்தர்,மடிப்பாக்கம்.............. Thanks...
அடிமைப் பெண் !
____________________
நடப்பதை நடத்தி காட்டுபவன் சராசரி மனிதன் !
நடக்காததை நடத்தி காட்டுபவன் விந்தைகளுக்கெல்லாம் தந்தை ! ("ராணி சம்யுக்தா" காவியத்தில் மக்கள் திலகம் பேசும் வரலாற்று, இதிகாச வசனம் )
ஐம்பது வருடங்கள் கடந்தும் இப்படம் பேசப்படுகிறது !
வடநாடுகள் மட்டுமல்ல அயல் நாட்டவரும் பிரமித்தபடம் !
விஞ்ஞான வளர்ச்சி அற்ற காலத்தில் உயிரைப் பணயம் வைத்து எடுத்த படம் !
சிங்கத்துடன் போராடும் காட்சியில் தனக்கு ஏதெனும் நடந்து படம் நின்று விடக்கூடாது என்ற எண்ணத்தில் இறுதியில் வரும் வணக்கம் காட்சியை சிங்கத்துடன் மோதும் காட்சிக்கு முன்பே எடுக்கப்பட்டது !
மலைகளிலும் , பாலைவனத்திலும் உழன்று எத்தனையோ தழும்புகளையும் தாங்கித்தான் இப்படம் வெளி வந்தது !
இப்பொழது கூறுங்கள் நடக்காததை நடத்தி காட்டும் விந்தைகளுக்கெல்லாம் தந்தையல்லவா ...நம் மக்கள் திலகம் !........... அப்புறம் இன்னொரு பகிர்வு... "அடிமைப்பெண்" மாதிரியான ரோல் மாடல் பிரமாண்ட காவியத்திற்கு பொன் விழா மலர் போடாமல் சமூகத்திற்கு எந்தவித பயனையும் அளிக்காத வேற புறம்போக்கு படங்களுக்கு படங்களை போட்டு பார்க்கும் ......... பத்திரிகையை என்னவென்று சொல்ல?!... Thanks...
ஹயாத் !
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்” வாழ்ந்த ராமாவரம் தோட்டம்..
காது கேளாத, பேச முடியாதோர் சிறப்பு பள்ளியான கதை
--------------------------------------------------------------------------------------
" அமெரிக்காவில் சிகிச்சை முடிச்சு வந்தப்போ சரியாப் பேச முடியாத காரணத்தினால... அதிகமாக தனிமையை நாடினார்.
அந்த நாட்களில் திடீர் திடீர்னு படுக்கையைவிட்டு எழுந்து... என்னை, இல்லேன்னா மாணிக்கத்தை (எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்டு இன்று ஜானகி அம்மாளுடன் இருக்கும் ஒரே பழைய மனிதர்) அழைச்சு, கையைப் பிடிச்சுக்கிட்டு தோட்டத்தைச் சுத்திச் சுத்தி வந்து பெருமூச்சுவிடுவார்.
அப்போ ஒருநாள், இங்க வேலை பார்த்துட்டு இருந்த ஒரு பெரியவரோட மகள், தன் எட்டு வயசுப் பேத்தியைக் கூட்டிட்டுத் தோட்டத்துக்கு வந்திருந்தா. அந்தப் பேத்தி வாய் பேச முடியாத பொண்ணு. முறையா டாக்டர்கிட்ட காண்பிக்காம - காண்பிக்க வசதி இல்லாமதான் இந்த நிலைமைக்கு ஆளாயிருக்குன்னு சொல்லி அந்தப் பெரியவர் அழுததைக் கேட்டார்.
உடனே தனக்கு ட்ரீட்மென்ட் தந்துட்டு இருந்த டாக்டர்களைக் கூப்பிட்டு, அந்தப் பொண்ணுக் கும் சிகிச்சை செய்யச் சொன்னார். ஆச்சர்யப் படற அளவுல அந்தப் பொண்ணுக்கு எட்டாவது வாரமே ஓரளவு பேச வந்திட்டுது. அன்னிக்கு அவர் பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை.
அதுல இருந்தே அவர் கொஞ்சம் மனசு லேசான உணர்வுல இருந்தார்னு சொல்லலாம். அப்போ தான் சொத்துக்கள் பத்தி இப்படி ஒரு நல்ல முடிவு எடுத்திருப்பார்னு நினைக்கிறேன். இந்த ஏழரை ஏக்கர் நிலத்துல இந்த வீடு இருக்கிற இடம் போக, மீதி இருக்கிற எல்லா இடத்தையும், வாய் பேச இயலாத, காது கேட்கும் திறன் குறைஞ்ச குழந்தைகளுக்கான ஸ்கூல் ஆரம்பிச்சு நடத்தணும்னு உயில்ல எழுதிவெச்சிட்டாரு.
அப்படி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளியையும் இதுல சேர்ந்து படிக்கிற பிள்ளைகளையும் பார்க்கிறப்போ, என் மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்குது.''
(1993-ம் ஆண்டில் தமிழ் வார இதழ் ஒன்றுக்கு அமரர் எம்.ஜி.ஆரின் மனைவி, மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜானகி அம்மையார் அளித்த பேட்டி )......... Thanks...
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்**நீண்ட இடைவெளிக்கு பிறகு திரியில் இணைவதில் மகிழ்ச்சி .அடிக்கடி வெளியூர் பயணம், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றல், சொந்த அலுவல்கள் காரணமாக திரியில் பதிவுகள் மேற்கொள்ள முடியாமல் போனது*
நண்பர் திரு.சுந்தரபாண்டியன், அவர்களுக்கு வணக்கம். மாற்று முகாம் நண்பர்களுக்கு உகந்த பதில்கள் அளித்ததற்கு நன்றி . தொடர்ந்து தொய்வில்லாமல் திரியில் பதிவுகள் மேற்கொண்ட நண்பர் திரு.சுகாராம் அவர்களுக்கும் நன்றி .அவ்வப்போது போதிய இடைவெளியில் பதிவுகள் மேற்கொள்ளும் நெறியாளர்*திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கும் நன்றி .
கடந்த சில வருடங்களாக டிஜிட்டலில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், ரிக்ஷாக்காரன் , அடிமைப்பெண் , நினைத்ததை முடிப்பவன் , எங்க வீட்டு பிள்ளை* ,மற்றும் நாடோடிமன்னன் ஆகிய படங்கள் தமிழகத்தில் வெளியான விவரங்கள்*எனக்கு தெரிந்த வகையில் பட்டியலாக தயார் செய்துள்ளேன் . சில மாவட்டங்களில் வெளியான விவரங்கள் கிடைக்கவில்லை . ஏராளமான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் இதர படங்களும் இடையில் தமிழகத்தில் பல்வேறு அரங்குகளில் வெளியாகி வெற்றி நடையுடன் வசூலை குவிந்துள்ளன .அந்த படங்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை .*
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களின் டிஜிட்டல் மறுவெளியீடு சாதனை பட்டியல் ஒரு வரலாறு, சகாப்தம்.,நண்பர்களின் பார்வைக்கு பதிவிடுகிறேன் .ஆயிரத்தில் ஒருவன் தமிழகத்தில் இதுவரை 52 அரங்குகளில் வெளியாகியுள்ளது .2015/2016 விவரங்கள் மற்றும் இதர மாவட்டங்கள் விவரங்கள்* கிடைக்காததால் பட்டியலில் சேர்க்கவில்லை, விவரங்கள் கிடைத்ததும் பட்டியல் இடப்படும்*
ரிக்ஷாக்காரன்* தமிழகத்தில் இதுவரை 66 அரங்குகளில் வெளியாகியுள்ளது*
நினைத்ததை முடிப்பவன் தமிழகத்தில் 62 அரங்குகளில் வெளியாகியுள்ளது*
அடிமைப்பெண் தமிழகத்தில் 117 அரங்குகளில் வெளியாகியுள்ளது .
எங்க வீட்டு பிள்ளை தமிழகத்தில் இதுவரை 67 அரங்குகளில் வெளியாகியுள்ளது .மேற்கண்ட படங்களின்* பல்வேறு மாவட்ட வெளியீடு விவரம் கிடைக்காததால்*பட்டியலில் சேர்க்கவில்லை . கிடைத்ததும் பட்டியலில் சேர்க்கப்படும்* பட்டியல்*இந்த ஆண்டு இறுதிவரையில் சேர்க்கப்பட்டு தொகுத்து மலராக* பக்தர்கள் /ரசிகர்கள் காண்பதற்கு*வெளியிடப்படும்*
*எந்த நடிகரின் டிஜிட்டல் மறுவெளியீடு படங்களும் இத்தகைய சாதனையை புரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
ஆயிரத்தில் ஒருவன் டிஜிட்டல் படம் தமிழகத்தில் வெளியான பட்டியல் விவரம்*-------------------------------------------------------------------------------------------------------------------------------14/03/14-* சத்யம் காம்ப்ளக்ஸ் -தினசரி* மாலை 6.30 மணி** * * * * * * * * தேவி பாரடைஸ் - தினசரி பிற்பகல் 3 மணி** * * * * * * * * *ஆல்பட் -* தினசரி பிற்பகல் 3 மணி / மாலை 6.30 மணி** * * * * * * * * அபிராமி - தினசரி பிற்பகல் 3 மணி /இரவு 10மணி** * * * * * * * * *பி.வி.ஆர்.-அமைந்தகரை -தினசரி 6.30 மணி** * * * * * * * * *ஏ.வி.எம். ராஜேஸ்வரி - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * *வேளச்சேரி லக்ஸ் - தினசரி மாலை 6.30 மணி** * * * * * * * * *வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ். - தினசரி இரவு* 7 மணி** * * * * * * * * * மாயாஜால் -தினசரி* இரவு 7 மணி** * * * * * * * * கோயம்பேடு ரோகினி -தினசரி பிற்பகல் 3 மணி / இரவு 10 மணி** * * * * * * * * *கொளத்தூர் கங்கா - தினசரி பிற்பகல் 3 மணி / இரவு 10 மணி** * * * * * * * * *திருவான்மியூர் தியாகராஜா - தினசரி பிற்பகல் 3.30 மணி** * * * * * * * * * தாம்பரம் எம்.ஆர். தியேட்டர் - தினசரி பிற்பகல் 3 மணி /இரவு 10 மணி** * * * * * * * * *ரெட் ஹில்ஸ் ராதா மூவி பார்க் - தினசரி பிற்பகல் 3 மணி /மாலை 6.30* * * * * * * * * ** * * * * * * * * *மதுரை -பிக் சினிமா கணேஷ் , அண்ணாமலை , மீனாட்சி, தமிழ் ஜெயா** * * * * * * * * *திருநகர் மணிஇம்பாலா , திண்டுக்கல் ராஜேந்திரா , ராம்நாட் ரமேஷ் ,* * * * * * * * * *பழனி மினிரமேஷ் , கம்பம் யுவராஜா , காரைக்குடி சிவம்,* * * * * * * * * *ராஜபாளையம் மீனாட்சி ,அருப்புக்கோட்டை மகாராணி,** * * * * * * * * * போடிநாயக்கனூர் வெற்றி .
* * * * * * * * * * வெளியூர் இதர* விவரங்கள்* கிடைக்காததால் பதிவிட வில்லை*
* * * * * * * * * சத்யம் காம்ப்ளக்ஸ் -161 நாட்கள் .ஆல்பட் காம்ப்ளக்ஸ் -190 நாட்கள்** * * * * * * * * *ஓடியது*
9/5/14* * * * பாரத் - தினசரி பிற்பகல் 3 மணி / இரவு 10 அணி** * * * * * * * * நங்கநல்லூர் வெற்றிவேலன் - தினசரி 4 காட்சிகள் .
* * * * * * * * * முதல் மறுவெளியீட்டிற்க்கு பிறகு வெளியான அரங்குகள் .* * * * * * * * * * ----------------------------------------------------------------------------------------* * * * * * * * * 2015/2016* விவரங்கள் கிடைக்காததால் பதிவிட முடியவில்லை*
04/11/16* - மதுரை மீனாட்சி - தினசரி 4 காட்சிகள்*09/12/16- நெல்லை -ரத்னா -தினசரி 4காட்சிகள்*03/03/17-சென்னை மகாலட்சுமி - தினசரி 3 காட்சிகள் - 2 வாரம்** * * * * * * * * முதல் வார வசூல் ரூ.1,40,000/-07/07/17-நெல்லை பூர்ணகலா - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * நாகர்கோவில் கார்த்திகை -தினசரி 4 காட்சிகள்*11/07/17- சேலம் அலங்கார -தினசரி 4 காட்சிகள்*25/8/17 -மதுரை -சென்ட்ரல் -தினசரி 4* காட்சிகள்*17/11/17- -சென்னை கிருஷ்ணவேணி - தினசரி 3 காட்சிகள்** * * * * * * * *மதுரை -அரவிந்த் -தினசரி 4 காட்சிகள்*23/02/18 - சென்னை மகாலட்சுமி - தினசரி 3 காட்சிகள்*13/04/18-சென்னை அகஸ்தியா - தினசரி 2 காட்சிகள்*11/05/18-சென்னை ஸ்ரீநிவாஸா - தினசரி 3 காட்சிகள்*28/12/18-காரைக்கால் -பி.எஸ்.ஆர்.டீலக்ஸ் -தினசரி 4காட்சிகள்*10/01/19-சேலம் அலங்கார் -தினசரி 4 காட்சிகள் - -2 வாரம்** * * * * * * * தூத்துக்குடி சத்யா - தினசரி 4 காட்சிகள்*19/07/19-மதுரை சண்முகா - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * *சாத்தூர் இ .பி.எஸ். தியேட்டர் -தினசரி 4 காட்சிகள்*26/07/19-சென்னை அகஸ்தியா -தினசரி 2 காட்சிகள் -வசூல் ரூ.1,06,000/-02/08/19 -பழனி நகரம் சாமி தியேட்டர் -தினசரி 4 காட்சிகள்** * * * * * * *திண்டுக்கல் -என்.வி.ஜி.பி.தியேட்டர் - தினசரி 4 காட்சிகள்*15/08/19-ஸ்ரீவில்லிபுத்தூர் ரேவதி -தினசரி 4 காட்சிகள்*30/08/19-மதுரை ராம் தியேட்டர் -தினசரி 3 காட்சிகள்*06/09/19-பண்ணைபுரம் -தியாகராஜா (தேனீ மாவட்டம் )-தினசரி 4 காட்சிகள்*
ரிக்ஷாக்காரன் டிஜிட்டல் படம் தமிழகத்தில் வெளியான பட்டியல்*------------------------------------------------------------------------------------------------------30/09/16- சத்யம் காம்ப்ளக்ஸ் - தினசரி 6.30 மணி காட்சி .* * * * * * * * *தேவிபாரடைஸ் -தினசரி 6.30 மணி காட்சி** * * * * * * * பி.வி.ஆர். அமைந்தகரை - தினசரி 7 மணி காட்சி** * * * * * * * *உதயம் - தினசரி பிற்பகல் 3மணி காட்சி** * * * * * * * ஐநாக்ஸ் நேஷனல் -தினசரி* இரவு 7 மணி** * * * * * * * *உட்லண்ட்ஸ் - தினசரி மாலை 6.30 மணி** * * * * * * * *மாயாஜால் - தினசரி இரவு 7 மணி** * * * * * * * *வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ். -இரவு 7 மணி** * * * * * * * *அபிராமி - தினசரி மேட்னி / இரவு காட்சிகள்** * * * * * * * * *ஆல்பட் -தினசரி மேட்னி / மாலை காட்சிகள் .** * * * * * * * *தேவி கருமாரி -தினசரி 6.30 மணி** * * * * * * * * எஸ்கேப் -தினசரி 6.30 மணி** * * * * * * * * *அம்பத்தூர் முருகன் - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * *மூலக்கடை ஐயப்பா - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * *போரூர் - ஜி.கே.சினிமாஸ் -தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * *திருத்தணி கமலா -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * *பொன்னேரி வெற்றிவேல் முருகன் -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * *அனகாபுத்தூர் வெல்கோ -தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * * காஞ்சி பாலசுப்ரமண்யா -தினசரி 4 காட்சிகள்*
14/10/16* * *அகஸ்தியா -தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * * ஸ்ரீநிவாஸா -தினசரி 3* காட்சிகள்** * * * * * * * * * மகாலட்சுமி -தினசரி 3 காட்சிகள் - 2 வாரம்*21/10/16* * * பாடி லட்சுமி பாலா - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * * கும்மிடிப்பூண்டி ராஜேஸ்வரி தினசரி 4 காட்சிகள்*04/11/16* * * நெல்லை -கணேஷ் -தினசரி 4 காட்சிகள்*11/11/16* * * *திருவொற்றியூர் எம்.எஸ்.எம்.-தினசரி 2 காட்சிகள்*18/11/16* * * * அனகாபுத்தூர் அருண்மதி - தினசரி 4 காட்சிகள்*02/12/16* * * சென்னை சரவணா -தினசரி 3 காட்சிகள்*09/12/16* * * *திருநின்றவூர் லட்சுமி -தினசரி 4 காட்சிகள்*16/12/16* * * *சங்ககிரி (சேலம் )அரங்கு - தினசரி 4 காட்சிகள்*23/12/16* * * *வேலூர் ராஜா - தினசரி 4 காட்சிகள்*27/01/17* * * *சென்னை கிருஷ்ணவேணி - தினசரி 3 காட்சிகள்*10/02/17* * * *மதுரை வண்டியூர் பழனிமுருகா - தினசரி 3 காட்சிகள்*03/03/17* * * *செங்கோட்டை - ஆனந்த் - தினசரி 4 காட்சிகள்*21/04/17* * * *சென்னை மகாலட்சுமி - தினசரி 3 காட்சிகள்*16/06/17* * * *மதுரை ராம்* தியேட்டர் - தினசரி 3 காட்சிகள்*15/09/17* * * *மதுரை அரவிந்த் - தினசரி 4 காட்சிகள்*13/10/17* * * * மதுரை சென்ட்ரல் - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * * *கோவை ராயல் -தினசரி 4 காட்சிகள்*22/12/17* * * *கோவை - டிலைட் - தினசரி 2 காட்சிகள்*02/03/18* * * *சென்னை கிருஷ்ணவேணி - தினசரி 3 காட்சிகள்23/03/18* * * *கோவை நாஸ் - தினசரி 4 காட்சிகள்**30/03/18* * * *சென்னை மகாராணி - தினசரி மேட்னி காட்சி*13/04/18* * * *மதுரை சரஸ்வதி* தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * சென்னை அயன்புரம் ருக்மணி -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * * சென்னை ஏ.வி.எம்.ராஜேஸ்வரி - தினசரி 2 காட்சிகள்*20/04/18* * * நெல்லை ரத்னா & தூத்துக்குடி ராஜ் -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * *திருப்பதி பிக்ச்சர் பேலஸ் -தினசரி 4 காட்சிகள்*18/05/18* * * சென்னை சரவணா - தினசரி 4 காட்சிகள்*20/07/18* * *சென்னை ஸ்ரீநிவாஸா -தினசரி 3 காட்சிகள்*14/09/18* * *கோவை ராயல் -தினசரி 4காட்சிகள்*21/12/18* * *மதுரை சென்ட்ரல் - தினசரி 4 காட்சிகள்*04/01/19* * * மதுரை ராம் தியேட்டர் - தினசரி 3 காட்சிகள்*10/01/19* * *சென்னை அகஸ்தியா - தினசரி 2 காட்சிகள்*11/01/19* * *மூலக்கடை ஐயப்பா - தினசரி 4 காட்சிகள்*15/03/19* * * வேலூர் பூட்டுத்தாக்கு கணேஷ் - தினசரி 2 காட்சிகள்*07/06/19* * *கோவை சண்முகா - தினசரி 4 காட்சிகள்*28/06/19* * *ரெட் ஹில்ஸ் நடராஜா - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * *திருப்பூர் அனுப்பர்பாளையம் மணீஸ் -தினசரி 4 காட்சிகள்*26/07/19* * *சேலம் அலங்கார - தினசரி 4 காட்சிகள்*02/08/19* * *சேலம் சரஸ்வதி -தினசரி 4 காட்சிகள் இணைந்த 2வது வாரம்*23/08/19* * * மதுரை பழனி ஆறுமுகா -தினசரி 3 காட்சிகள்*01/09/19* * * மதுரை பழங்காநத்தம் ஜெயம் - தினசரி 4 காட்சிகள்*06/09/19* * *திண்டுக்கல் என்.வி.ஜி.பி .- தினசரி 4 காட்சிகள் .06/09/19* * *திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கராஜா - தினசரி 3 காட்சிகள்*
*
அடிமைப்பெண் டிஜிட்டல் படம் தமிழகத்தில் வெளியான பட்டியல்*--------------------------------------------------------------------------------------------------------14/07/17* * எஸ்கேப் - தினசரி மதியம் 12 மணி** * * * * * * * * சத்யம் காம்ப்ளக்ஸ் - தினசரி பிற்பகல் 3 மணி** * * * * * * * * தேவி - தினசரி இரவு 7 மணி** * * * * * * * * ஆல்பட் - தினசரி மேட்னி / இரவு காட்சிகள்** * * * * * * * * அபிராமி -தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * *ஏ.வி.எம்.ராஜேஸ்வரி - தினசரி மாலை /இரவு காட்சிகள்** * * * * * * * * பாலசோ , - தினசரி மதியம் 12 மணி** * * * * * * * * பி.வி.ஆர்.அமைந்தகரை =தினசரி இரவு 7 மணி** * * * * * * * * வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ்.- தினசரி மாலை 6.30 மணி** * * * * * * * * *ஏ.ஜி.எஸ். தி.நகர் -தினசரி மாலை 6.30 மணி** * * * * * * * * ஏ.ஜி.எஸ். ஓ .எம்.ஆர்.- தினசரி இரவு 7 மணி** * * * * * * * * *ஐநாக்ஸ் நேஷனல் - தினசரி பிற்பகல் 3 மணி** * * * * * * * * *பி.வி.ஆர். வேளச்சேரி - தினசரி பிற்பகல் 3 மணி** * * * * * * * * *லக்ஸ் வேளச்சேரி -தினசரி மாலை 6.30 மணி** * * * * * * * * *கோயம்பேடு ரோகிணி - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * * காஞ்சி நாராயணமூர்த்தி - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * மாயாஜால் - தினசரி இரவு 7 மணி** * * * * * * * * போரூர் ஜி.கே.சினிமாஸ் - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * திருவள்ளூர் லட்சுமி - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * *ரெட்ஹில்ஸ் அம்பிகா -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * *திருவொற்றியூர் எம்.எஸ்.எம்.- தினசரி 2 காட்சிகள்** * * * * * * * *** * * * * * * * வேலூர் ராஜா ,குடியாத்தம் லிட்டில் லட்சுமி -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * *திருவண்ணாமலை வி.பி.சி.- தினசரி 4 காட்சிகள்*
* * * * * * * * * நெல்லை கணேஷ் -தினசரி 4 காட்சிகள் - 30 நாட்கள் ஓடியது** * * * *** * * * * * * * * கோவை -சாந்தி - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * [பொள்ளாச்சி நல்லப்பா - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * ஈரோடு ஸ்ரீசண்டிகா - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * தாராபுரம் எஸ்.வி.ஆர். & உடுமலை தாஜ் - தினசரி 4 காட்சிகள்*
21/07/17* * மதுரை வெற்றி & மினிப்ரியா -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * பழனி மினிரமேஷ் ,&திருநகர் தேவிகலைவாணி -தினசரி 4காட்சிகள்** * * * * * * * * *கோவை சாரதா - தினசரி 4 காட்சிகள்*28/07/17* * பாளையங்கோட்டை செந்தில்வேல் -தினசரி 4 காட்சிகள்*04/08/17* * மதுரை அரவிந்த் - தினசரி 4 காட்சிகள்*18/08/17* * சென்னை ஸ்ரீநிவாஸா - தினசரி 3 காட்சிகள்*08/09/17* * ஸ்ரீவில்லிபுத்தூர் ரேவதி & அருப்புக்கோட்டை அரங்கு -4 காட்சிகள்*15/09/17* *தளவாய்புரம் அரங்கு - தினசரி 3 காட்சிகள்*15/09/17* *தூத்துக்குடி -பாலகிருஷ்ணா* -தினசரி 4 காட்சிகள் -முதல் வாரம்*22/09/17* * * * * * * * * * * * * * * * * * * * * கணபதி - தினசரி 4 காட்சிகள்* -2 வது வாரம்*29/09/17* * * * * * * * * * * * * * * * * * * * *சத்யா -தினசரி 4 காட்சிகள்* -3 வது வாரம்*06/10/17* * * * * * * * * * * * * * * * * * * * *ராஜ்* - தினசரி 4 காட்சிகள்* -4 வது வாரம்*
22/09/17* *மதுரை வண்டியூர் கல்லானை - தினசரி 3 காட்சிகள்*13/10/17* கோபிசெட்டிபாளையம் ஜெயமாருதி** * * * * * * * காங்கேயம் ஆனந்த் -தினசரி 4 காட்சிகள்*15/12/17* மேலூர் கணேஷ் பாரடைஸ் - தினசரி 4 காட்சிகள்*22/12/17* மதுரை சென்ட்ரல் தினசரி 4 காட்சிகள் -வசூல் ரூ.1,26,000/-12/01/18* சென்னை அகஸ்தியா - தினசரி 3 காட்சிகள்*02/03/18* சென்னை பாரத் - தினசரி 2 காட்சிகள்*31/03/18* வேலூர் குறள் - தினசரி 3 காட்சிகள்*
02/03/18* *சென்னை பாரத் -தினசரி 2 காட்சிகள்** * * * * * * * *பரங்கிமலை ஜோதி & குன்றத்தூர் பரிமளம் -தினசரி 4காட்சிகள்** * * * * * * * * திருநின்றவூர் வேலா & அனகாபுத்தூர் வெல்கோ - 4 காட்சிகள்** * * * * * * * *நங்கநல்லூர் வேலன் &செங்கல்பட்டு லதா -தினசரி 4காட்சிகள்** * * * * * * * *அம்மையார்குப்பம் பாபு &மதுராந்தகம் எஸ்.ஆர்.- 4 காட்சிகள்** * * * * * * * * காரனோடை கோபாலகிருஷ்ணா* & ஆவடி குமரன் -4 காட்சிகள்** * * * * * * * படப்பை கண்ணப்பா & சுங்குவார்சத்திரம் ராமதாஸ் -4 காட்சிகள்** * * * * * * * திருத்தணி கோல்டன் &மீஞ்சூர் கே.கே.சினிமாஸ் - 4 காட்சிகள்** * * * * * * * திருவண்ணாமலை -அண்ணாமலை &ஆம்பூர் கிருஷ்ணா** * * * * * * * ஆற்காடு லட்சுமி, ஆரணி வெங்கடேஸ்வரா -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * செய்யாறு செல்லம்பாரடைஸ் ,பனப்பாக்கம் சுந்தரம் -4 காட்சிகள்** * * * * * * *திருப்பத்தூர் கலைமகள் & போளூர் அபிராமி - தினசரி 4 காட்சிகள்** * * * * * * *கண்டமங்கலம் வெங்கடேஸ்வரா &விழுப்புரம் முருகா -4 காட்சிகள்** * * * * * * *திட்டக்குடி பெரியசாமி,& அரக்கோணம் சிந்து -தினசரி 4 காட்சிகள்** * * * * * * *திருப்பதி பழனிபிக்ச்சர் பேலஸ் &நகரி ராஜேஸ்வரி -4 காட்சிகள்** * * * * * * *சித்தூர் ஆனந்தா* & திருப்பூர் நடராஜா -தினசரி 4 காட்சிகள்*
31/03/18 திருச்சி சோனா , தஞ்சை விஜயா - தினசரி 4 காட்சிகள்** * * * * * * *குடந்தை காசி & கரூர் கவிதாலயா -தினசரி 4 காட்சிகள்** * * * * * * *நாகை விஜயலட்சுமி ,பட்டுக்கோட்டை அருண் -தினசரி 4காட்சிகள்** * * * * * * புதுக்கோட்டை சாந்தி - தினசரி 4 காட்சிகள்**
* 31/03/18* வேலூர் குறள் - தினசரி 3 காட்சிகள்**
06/04/18 மதுரை ராம் தியேட்டர் - தினசரி 3 காட்சிகள்** * * * * * * *துடியலூர் முருகன் - தினசரி 3 காட்சிகள்** * * * * * * *கிணத்துக்கடவு அரங்கு - தினசரி 3 காட்சிகள்*20/04/18 சென்னை மகாலட்சுமி -தினசரி 3காட்சிகள் - 2 வாரம் ஓடியது** * * * * * * *வேலன்தாவலம்* தனலட்சுமி - தினசரி 3 காட்சிகள்*27/04/18 மதுரை ஷா - தினசரி 4 காட்சிகள்** * * * * * * அவிநாசி சிந்தாமணி - தினசரி 4 காட்சிகள்** * * * * * * சென்னை ஸ்ரீநிவாஸா - தினசரி 3காட்சிகள்*01/05/18 கோவை ராயல் - தினசரி 4 காட்சிகள் -2 வாரம் ஓடியது*22/06/18 போடிநாயக்கனூர் -ஆர் .எஸ். சினிமாஸ் -தினசரி 4 காட்சிகள்*29/06/18 திருச்சி அருணா - தினசரி 4 காட்சிகள்*24/08/18 சென்னை சரவணா -தினசரி 4 காட்சிகள்*31/08/18 கோவை நாஸ் - தினசரி 4 காட்சிகள்*06/11/18 புளியங்குடி கண்ணன் - தினசரி 4 காட்சிகள்*08/02/19 வேலூர் பூட்டுத்தாக்கு கணேஷ் -தினசரி 2 காட்சிகள்*16/02/19 திருச்சி மகாராணி, மரியம், ராமகிருஷ்ணா - தினசரி 3காட்சிகள்*14/06/19-சிவகாசி லட்சம் - தினசரி 4 காட்சிகள்*06/07/19 தென்காசி தாய்பாலா -தினசரி 4 காட்சிகள் -2 வாரம் ஓடியது*19/07/19 செங்கோட்டை ஆனந்த் -தினசரி 4 காட்சிகள் -இணைந்த 3வது வாரம்*12/07/19 கோவை சண்முகா - தினசரி 4 காட்சிகள்*18/08/19 திருப்பரங்குன்றம் லட்சுமி -தினசரி 3 காட்சிகள்*30/08/19 தாராபுரம் வசந்தா - தினசரி 3 காட்சிகள்* * * * **
நினைத்ததை முடிப்பவன் டிஜிட்டல் படம் தமிழகத்தில் வெளியான பட்டியல்*--------------------------------------------------------------------------------------------------------------------------16/06/17* *சத்யம் காம்ப்ளக்ஸ் - தினசரி காலை 9.30 மணி** * * * * * * * *எஸ்கேப்* -தினசரி காலை 10மணி** * * * * * * * தேவிபாலா - தினசரி பிற்பகல் 1 மணி** * * * * * * * ஏ.ஜி.எஸ்.தி.நகர் - தினசரி மாலை 6.30 மணி** * * * * * * * *அகஸ்தியா -&சைதை ராஜ் - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * மகாலட்சுமி - தினசரி 3 காட்சிகள் - -------------------* வசூல் ரூ.1,33,000/-* * * * * * * * *மூலக்கடை ஐயப்பா - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ். -தினசரி இரவு 7 மணி** * * * * * * * *ஜாஸ் -தினசரி காலை 9.30 மணி** * * * * * * * *பூந்தமல்லி பகவதி -தினசரி 2 காட்சிகள்** * * * * * * * *தாம்பரம் நேஷனல் - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * *ரெட்ஹில்ஸ் அம்பிகா - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * *அம்பத்தூர் முருகன் - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * *கொளத்தூர் கங்கா - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * *மாமண்டூர்* சி.3 சினிமாஸ் - தினசரி 2 காட்சிகள்** * * * * * * * *காஞ்சி பாலசுப்ரமண்யா - தினசரி 4 காட்சிகள்*23/06/17* உத்திரமேரூர் சேகர் - தினசரி 4 காட்சிகள்*30/06/17* அனகாபுத்தூர் அருண்மதி** * * * * * * * பொன்னேரி வெற்றிவேல்முருகன்** * * * * * * * விருகை* தேவி கருமாரி* * * * *- தினசரி* 4 காட்சிகள்*30/06/17* *சென்னை ஸ்ரீநிவாஸா - தினசரி 3 காட்சிகள் ---------10 நாட்கள் ஓடியது*18/08/17* *பாடி லட்சுமிபாலா - தினசரி 4 காட்சிகள்*13/10/17* *நாகர்கோவில் தங்கம் &அம்பை கல்யாணி -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * கோவில்பட்டி ஏ.கே.எஸ்.&சங்கரன்கோவில் கோமதிசங்கர்** * * * * * * * *தினசரி 4 காட்சிகள்*20/10/17* சென்னை சரவணா - தினசரி 3 காட்சிகள்*01/12/17* கோவை நாஸ் & ப்ரூக்ளின்* தினசரி 4 காட்சிகள்*22/12/17* புளியங்குடி கண்ணன் - தினசரி 4 காட்சிகள்*29/12/17 கோவை ராயல் - தினசரி 4 காட்சிகள்*31/01/18 மதுரை வண்டியூர் பழனி முருகா - தினசரி 3 காட்சிகள்*09/03/18 சென்னை எம்.எம்.தியேட்டர் -தினசரி 2 காட்சிகள்** * * * * * * *அயன்புரம் ஜி.கே.சினிமாஸ் - தினசரி 4 காட்சிகள்** * * * * * * *திருவள்ளூர் மீரா -தினசரி 4 காட்சிகள்*16/03/18 வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ்.- தினசரி இரவு 7 மணி*31/03/18 வேலூர் பூட்டுத்தாக்கு கணேஷ் - தினசரி 2 காட்சிகள்** * * * * * * *பெரியநாயக்கன் பாளையம் ஜெயந்தி - தினசரி 4 காட்சிகள்** * * * * * * சின்னாளப்பட்டி ஜெ. தியேட்டர் - தினசரி 3 காட்சிகள் - 2 வாரம்*06/04/18 சென்னை கிருஷ்ணவேணி - தினசரி 2 காட்சிகள்** * * * * * * *ஏ.வி.எம்.ராஜேஸ்வரி - தினசரி மாலை 6.30 மணி** * * * * * * *தூத்துக்குடி ராஜ் - தினசரி 4 காட்சிகள்** * * * * * * *குமாரபாளையம் ஏ.ஆர்.எஸ்.தியேட்டர் - தினசரி 4 காட்சிகள்*13/04/18 சென்னை பிருந்தா - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * நெல்லை ரத்னா -தினசரி 4 காட்சிகள்** * * * * * * *(முதல் மூன்று நாள் வசூல் மட்டும் ரூ.1 லட்சம் )* * * * * * * *திருப்பதி பிக்ச்சர்பேலஸ் - தினசரி 2 காட்சிகள்** * * * * * * *கோவை தர்சனா - தினசரி 4 காட்சிகள்*20/04/18 சித்தூர் ஆனந்தா -தினசரி 4 காட்சிகள்*27/04/18 மதுரை மீனாட்சி - தினசரி 4 காட்சிகள்*18/05/18 மதுரை ராம் தியேட்டர் - தினசரி 3 காட்சிகள்*22/06/18 சென்னை மகாலட்சுமி - தினசரி 3 காட்சிகள்*06/07/18 மணப்பாறை இந்திரா - தினசரி 4 காட்சிகள்*28/09/18 கோவை ராயல் - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * சென்னை சரவணா - தினசரி 4 காட்சிகள்*11/01/19 கோவை நாஸ் -தினசரி 4 காட்சிகள்*25/01/19 பழனி நகரம் சாமி தியேட்டர் - தினசரி 4 காட்சிகள்*08/02/19 வேலூர் குறள் -தினசரி 3 காட்சிகள்*31/05/19 திண்டுக்கல் என்.வி.ஜி.பி.- தினசரி 4 காட்சிகள்*21/06/19 சென்னை அகஸ்தியா - தினசரி 2 காட்சிகள்*02/08/19 கோவை டிலைட் - தினசரி 2 காட்சிகள்*16/08/19 ரெட் ஹில்ஸ் நடராஜா -தினசரி 3 காட்சிகள்*31/08/19மதுரை திருமங்கலம் ஆனந்தா - தினசரி 4காட்சிகள்*
எங்க வீட்டு பிள்ளை டிஜிட்டல் படம் தமிழகத்தில் வெளியான பட்டியல்*----------------------------------------------------------------------------------------------------------------02/02/18 எஸ்கேப் - தினசரி பிற்பகல் 3.30மணி** * * * * * * *தேவிபாலா -தினசரி இரவு 7 மணி** * * * * * * * சக்தி அபிராமி - தினசரி இரவு 10 மணி** * * * * * * * ஜாஸ் சினிமாஸ் - தினசரி பிற்பகல் 3.30 மணி** * * * * * * * வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ்.- தினசரி இரவு 7 மணி** * * * * * * * ஆல்பட் - தினசரி 2 காட்சிகள்* - 2 வாரம் ஓடியது** * * * * * * * *ஸ்ரீநிவாஸா - தினசரி 3 காட்சிகள் -2 வாரம் ஓடியது** * * * * * * *காஞ்சி நாராயணமூர்த்தி -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * திருச்சி பேலஸ் - தினசரி 4 காட்சிகள்*09/02/18 திருச்சி முருகன் -தினசரி 4 காட்சிகள் -இணைந்த 2வது வாரம்** * * * * * * * சேலம் அலங்கார - தினசரி 4 காட்சிகள்*23/02/18 மதுரை சென்ட்ரல் - தினசரி 4 காட்சிகள்*02/03/18 மதுரை அரவிந்த் - தினசரி 4 காட்சிகள்* -இணைந்த 2 வது* வாரம்*09/03/18 மதுரை சரஸ்வதி -தினசரி 3 காட்சிகள் -இணைந்த 3வது* வாரம்*16/3/18 மதுரை சோலைமலை - தினசரி 3 காட்சிகள் -இணைந்த 4வது வாரம்*
02/03/18* பாடி லட்சுமிபாலா -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * ** * * * * * * * திருவொற்றியூர் எம்.எஸ்.எம்.- தினசரி 4 காட்சிகள்** * * * * * * * அனகாபுத்தூர் அருண்மதி & செங்கல்பட்டு எஸ்.ஆர்.கே.தியேட்டர்** * * * * * * * கடலூர் வேல்முருகன் & விழுப்புரம் கல்யாண்** * * * * * * * *விருத்தாச்சலம் டி.வி.ஜி.& திருக்கோவிலூர் தேவி** * * * * * * *சின்னசேலம் ராஜேஸ்வரி* & உளுந்தூர்பேட்டை ஜெய்சாய்ராம்** * * * * * * * காலாட்ப்பேட்டை -ஜெயா & திருக்கண்ணூர் சரஸ்வதி** * * * * * * * கரிக்கலாங்குப்பம் திவ்யா & நெல்லிக்குப்பம் விஜயா** * * * * * * * எங்கும் தினசரி 4 காட்சிகள்*
* * * * * * * *திண்டுக்கல் உமா - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * நெல்லை ரத்னா - தினசரி 4 காட்சிகள் - ஒரு வார*வசூல் ரூ.1 லட்சம்** * * * * * * சத்தியமங்கலம் வீராஸ் - தினசரி 4 காட்சிகள்*30/03/18 திருப்பூர் தமிழ்நாடு சினிமாஸ் -தினசரி 4 காட்சிகள்*
06/04/18 சென்னை மகாலட்சுமி - தினசரி 3 காட்சிகள்** * * * * * * *கோவை சாந்தி - தினசரி 4 காட்சிகள்** * * * * * * *அம்பை பாலாஜி - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * *ஊட்டி ஏ.டி.சி.- தினசரி 4 காட்சிகள்*13/04/18- ரெட் ஹில்ஸ் லட்சுமி - தினசரி 4 காட்சிகள்** * * * * * * * திருப்பதி பிக்ச்சர் பேலஸ் -தினசரி 2 காட்சிகள்*20/04/18 மதுரை ராம் தியேட்டர் - தினசரி 3 காட்சிகள்** * * * * * * * தென்காசி தாய்பாலா ,புளியங்குடி கண்ணன் ,* * * * * * * * விக்கிரமசிங்கபுரம் தாய் சீனீஸ் -தினசரி 4 காட்சிகள்*04/05/18* செங்கோட்டை ஆனந்த் - தினசரி 4 காட்சிகள்*16/05/18 திருச்சி ராமகிருஷ்ணா ,மூலக்கடை ஐயப்பா** * * * * * * * *அம்மையார்குப்பம் பாபு - தினசரி 4 காட்சிகள்*25/05/18* குழித்துறை - லட்சுமி -தினசரி 4 காட்சிகள்*06/07/18 கோவை அன்னூர் விநாயகா -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * நெல்லை கணேஷ் - தினசரி 4 காட்சிகள்*13/07/18* சென்னை சரவணா - தினசரி 4 காட்சிகள்*20/07/18* ரெட் ஹில்ஸ் அம்பிகா - தினசரி 4காட்சிகள்*05/10/18* மதுரை மீனாட்சி -தினசரி 4 காட்சிகள்*26/10/18* கோவை ராயல் - தினசரி 4 காட்சிகள்*15/03/19* புளியங்குடி கண்ணன் - தினசரி 4 காட்சிகள்*21/03/19* நாகர்கோவில் தங்கம் &முக்கூடல் சண்முகா -தினசரி 4காட்சிகள்*
30/03/19* ஆறுமுகநேரி தங்கம் - தினசரி 4 காட்சிகள்*22/03/19* ஸ்ரீவில்லிபுத்தூர் ரேவதி - தினசரி 4 காட்சிகள்*12/04/19* வேலூர் குறள் - தினசரி 4 காட்சிகள்*10/05/19* ஏரல் சந்திரா (தூத்துக்குடி மாவட்டம் ) தினசரி 2 காட்சிகள்*07/06/19* சென்னை அகஸ்தியா - தினசரி 2 காட்சிகள்*21/06/19* பழனி நகரம் சாமி தியேட்டர் - தினசரி 4 காட்சிகள்*12/07/19* திருச்சி முருகன் - தினசரி 4 காட்சிகள்*09/08/19* சேத்தூர் வி.பி.எஸ். தியேட்டர் -தினசரி 4 காட்சிகள்*
18/08/19* போடிநாயக்கனுர் ஓ.ஆர். சினிமாஸ் - தினசரி 4 காட்சிகள்*30/08/19* நத்தம் சென்ட்ரல் - தினசரி 4 காட்சிகள்*06/09/19* கோவை நாஸ் - தினசரி 4 காட்சிகள்*
நாடோடி மன்னன்* 2018 முதல் தமிழகத்தில் வெளியான அரங்குகள் விவரம்** *----------------------------------------------------------------------------------------------------------------------
02/03/18-ஆல்பட் -தினசரி 2 காட்சிகள் -2 வாரம்** * * * * * * * பேபி ஆல்பட் -தினசரி 2 காட்சிகள் -3 வாரம் _ மொத்தம் 5 வாரம் ஓடியது** * * * * * * * *பாரத் -தினசரி* 2 காட்சிகள்** * * * * * * * *வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ். -தினசரி மாலை காட்சி** * * * * * * * * சைதை ராஜ்* -தினசரி 2 காட்சிகள்** * * * * * * * * மணலி மீனாட்சி -தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * ரெட் ஹில்ஸ் அம்பிகா - தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * *திருவொற்றியூர் ஓடியன்மணி -தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * சித்தூர் ஆனந்தா - தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * *23/03/18* * மதுரை -வெற்றி -தினசரி 3 காட்சிகள்*-2 வாரம் ஓடியது** * * * * * * * * *மதுரை தமிழ் ஜெயா & தேவி கலைவாணி -தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * *நெல்லை -ரத்னா -தினசரி 4 காட்சிகள் -13 நாட்கள் -ரூ.3லட்சம் வசூல்** * * * * * * * * * கோவை சென்ட்ரல் -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * * *நாகர்கோவில் கார்த்திகை -தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * அம்பை பாலாஜி,* கோவில்பட்டி சத்யபாமா -தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * *ஆலங்குளம் பி.எஸ்.எஸ்., கடையம் - நியூ பாம்பே - 3 காட்சிகள்** * * * * * * * * * *தென்காசி-பி.ஸ்.எஸ். & தூத்துக்குடி -கிளியோபாட்ரா -3காட்சிகள்*
24/03/18* * * *சென்னை பாரத் -தினசரி 2 காட்சிகள்*
30/03/18* * * * ஈரோடு தேவி அபிராமி -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * * * பொள்ளாச்சி -ஏ.டி.எஸ்.சி.-தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * * * திருப்பூர் சினிபார்க் -தினசரி 4காட்சிகள் -2 வாரம் ஓடியது** * * * * * * * * * * *மேட்டுப்பாளையம் அபிராமி -தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * * சோமனூர் சவீதா, சத்தியமங்கலம் ஜெய்சக்தி , வேலந்தாவலம்** * * * * * * * * * * *தனலட்சுமி,கொழிஞ்சாம்பாறை -விருந்தாவன்* எங்கும் தினசரி 3* * * * * * * * * * * * * * * *காட்சிகள்*31/03/18* * * *வேலூர் ராஜா -தினசரி 3 காட்சிகள்*01/04/18* * * * சென்னை எம்.எம்.தியேட்டர் -தினசரி 3 காட்சிகள்*06/04/18* * * * மூலக்கடை சண்முகா -தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * * *ஆரணி எம்.சி.தியேட்டர் , ஆற்காடு லட்சுமி ,பாக்கம் சண்முகா** * * * * * * * * * * *தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * * * சேலம் கீதாலயா , கௌரி -தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * * * பொன்னேரி -வெற்றிவேல் முருகன் -தினசரி 3 காட்சிகள்*13/4/18* * * * * * சின்னாளப்பட்டி ஜெ அரங்கு -தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * * * *கோபிசெட்டிபாளையம் -ஜெயமாருதி -தினசரி 3 காட்சிகள்*** * * * * * * * * * * * தூத்துக்குடி பாலகிருஷ்ணா -தினசரி 4 காட்சிகள்** * * * * * * * * * * * *ஒரு வார வசூல் சுமார் ரூ.2 லட்சம்* * * * * * * ** * * * * * * * * * * * திருச்சி -சோனா, தஞ்சை ராணிபாரடைஸ் ,கரூர் அமுதா ,* * * * * * * * * * * * பெரம்பலூர் ராம், மன்னார்குடி சாந்தி, முசிறி ஸ்ரீராம்** * * * * * * * * * * * எங்கும் தினசரி 3 காட்சிகள்** * * * * * * * * * * * சிவகாசி பழனியாண்டவர் ( மேலூர் கணேஷ் -தினசரி 3காட்சிகள்** * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * 2 வாரம் ஓடியது** * * * * * * * * * * * *கம்பம் யுவராஜா, மானாமதுரை , காரைக்குடி அரங்குகளில்** * * * * * * * * * * * தினசரி 4 காட்சிகள்*12/08/18* * * * * -சிவகாசி ராசி -தினசரி 4 காட்சிகள்*31/08/18* * * * * *ஈரோடு சங்கீதா -தினசரி 4 காட்சிகள்**14/09/18-* * * * *நெல்லை கணேஷ் - தினசரி 4 காட்சிகள்*21/09/18* * * * * *காவேரிப்பட்டினம் சரோஜா -தினசரி 4 காட்சிகள்*15/01/19* * * * * *புளியங்குடி கண்ணன் -தினசரி 3 காட்சிகள்*05/07/19* * * * * *தாராபுரம் வசந்தா -தினசரி 3 காட்சிகள்*06/09/19* * * * * *அனுப்பர்பாளையம் (திருப்பூர் )மணீஸ் -தினசரி 3 காட்சிகள்*
* * * * * * * * * * * * * * * * * * ** * * * * * * * * * * * * *
.K.Kaliappan has a special place for former Chief Minister M.G.Ramachandran. “I met MGR in the year 1962 and I am grateful to P.S.Veerappa for introducing me to the great man. MGR would always recall his difficult days while traveling with us and used to get sweets and food quite liberally for everyone around. Once I got injured pretty badly while doing a stunt role for the Jaishankar starrer ' Kaalam Vellum ' and was being treated in the Government Hospital. On learning about this MGR visited me in the hospital and helped me by getting me treated at the Sangunni Menon Nursing Home. Ramaswamy and Kadiresan were his main drivers but I used to drive for him regularly. He did not wish to have Government protection in spite of being in office and Gundumani, Ramakrishnan along with myself used to be with him all his life. He never used to ask for details pertaining to money given to us in connection with his expenses and disbursements but he wanted to know the details pertaining to public money later on. Well, that’s a different story altogether.
" My mind is still fresh with regard to the movie ' Maduraiyai Meetta Sundara Pandian '. The Mysore Palace ' Amba Vilas ' was the location for three months and the movie shoots used to take place during the night hours. I cannot forget the moment when MGR took a picture with me in spite of his busy schedule, “added a nostalgic Kaliappan.......... Thanks...
நம் திரியின் நெறியாளர் திரு ரவிச்சந்திரன் திரையுலக வசூல் சக்கரவர்த்தி "நாடோடி மன்னன்" புகைப்படங்கள் அருமை... கடந்த சில நாட்களாக திரு லோகநாதன் பதிவுகள் இடாமல் இப்பொழுது சரியான புள்ளி விவரங்களுடன் புரட்சி தலைவர் காவியங்களின் மறு வெளியீட்டு தகவல்களுடன் வருகை புரிந்திருப்பது சூப்பர்...
சின்னப்பதேவரின் 41 வது நினைவு தினம் இன்று.
__________________________
சாதனைகளால் மிரட்டிய மெத்தப்படிக்காத மேதை.
வளரும்போது ஜூபிடர், மாடர்ன் தியேட்டர்ஸ் போன்ற பெரிய பேனர்களில் நடித்தாலும் வளர்ந்தபிறகு பெரிய தயாரிப்பாளர்களை கூடுமானவரை தவிர்த்தவர் எம்ஜிஆர்.
ஆனால் அதே மக்கள் திலகம், சாமான்யனான தனது நண்பரை தூக்கிவிட்டு தொடர்ந்து அவருக்கு தனது படங்களை அதிக அளவில் தயாரிக்க வாய்ப்பு கொடுத்தார் என்றால் அது சாண்டோ சின்னப்பா தேவர் மட்டுமே.
ஏனெனில் சின்னப்பா தேவர் என்கிற மனிதன் எளிமையானவனாகவும் சமான்யனாகவும் இருக்கலாம் ஆனால் வாக்கு சுத்தமுள்ள, அடுத்து கெடுக்க விரும்பாமல் வாழவைப்பதை மட்டுமே செய்யக் கூடிய குழந்தை உள்ளம் கொண்டவர்.
படத்தை முடிக்க நீண்டகாலம் எடுத்துக்கொள்வார், அனைத்திலும் தலையிடுவார் என்று பீதியோட பேசப்பட்ட எம்ஜிஆர், தயாரிப்பாளர் சின்னப்பா தேவர்முன் அடியோடி மாறி காட்சியளிப்பார்.
பூஜைபோட்ட அன்றே ரிலீஸ் தேதியை அறிவிக்கும் தேவரிடம் கட்டுப்பட்டு எம்ஜிஆர் வருடத்திற்கு இரண்டு படங்கள் என தொடர்ந்து நடித்து குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுத்தார் என்றால் தேவர் எப்பேர்பட்ட கண்டிப்பான பேர்வழியாக இருக்க வேண்டும். நேர்மை இருந்தால்தானே எவரையுமே கண்டிக்க துணிவு வரும்.
சின்னப்பா தேவர் பாணியே தனி. தாய்சொல்லை தட்டாதே, தாயைக்காத்த தனயன், குடும்பத்தலைவன், தர்மம் தலைகாக்கும், நீதிக்கு பின்பாசம் என தேவரின் ஐந்து எம்ஜிஆர் படங்களில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்த சரோஜாதேவி, திடீரென லைட்டா ஸ்டார் பந்தா காட்ட ஆரம்பித்தார். தேவர் அலட்டிக்கொள்ளவேயில்லை.
சரோவுக்கு குட்பை சொல்லிவிட்டு, சாவித்திரியை வேட்டைக்காரனில் எம்ஜிஆருக்கு நாயகியாக்கி வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டே போனார். கே-ஆர், விஜயா, ஜெயலலிதா என அடுத்த கட்ட வரவுகளை நோக்கி போய்க்கொண்டே இருந்தார்
எந்த நேரத்திலும் கலங்காத துணிச்சலான மனதை கொண்டவர் தேவர். முதன் முதலில் தயாரித்த தாய்க்குபின்தாரம் படம் மெகா வெற்றி என்றாலும் தெலுங்கு ரைட்ஸ் விஷயத்தில் எம்ஜிஆருடன் தேவருக்கு மனக்கசப்பு. இத்தனைக்கும்தேவரும் எம்ஜிஆரும் நீண்டகால நண்பர்கள்.
துணை நடிகராக 45 ரூபாய் சம்பளத்திற்கு ராஜகுமாரி படத்தில் எம்ஜிஆருடன் சண்டை போட்டது முதல் அவ்வளவு நெருக்கமாகிப் போனார்கள், இருவருமே வாழ்க்கையில் மிகவும் அடிபட்டுநொந்து நூலாகி உயர்வை சந்தித்தவர்கள்..
அதிலும் பாடிபில்டரான தேவர் ஆரம்பத்தில் பால், சோடா, அரிசி வியாபாரம், உள்பட செய்து பார்க்காத தொழில்களே கிடையாது என்று சொல்லலாம்.
அப்படிப்பட்ட உழைப்பாளியான தேவர், எம்ஜிஆர்இல்லை என்றானவுடன் கலங்கி நிற்காமல் ரஞ்சன், ஜெமினிகணேசன் போன்றவர்களை வைத்து என் வழி தனி வழி என்று போக ஆரம்பித்தவர்.
தீவிர முருக பக்தரான சின்னப்பா தேவர் எப்போது எந்த கல்லை பிள்ளையாராக்கி பணம் கொட்டவைப்பார் என சொல்லவே முடியாது. அதேபோல அந்த மனுஷனால எப்படி இப்படி தைரியமாக இறங்க முடிந்தது என்றும் வியக்கவைப்பார்.
தமிழை மட்டுமே தெரிந்த கோவைவாசி சின்னப்பா தேவர். ஜெமினி, ஏவிஎம் போன்ற பெரிய நிறுவனங்கள் மட்டுமே எட்டிப்பார்த்து வெற்றிக்கொடி நாட்டி இந்தித் திரையுலகில் அவர் நுழைவார் என யாருமே நினைக்க வில்லை.
இந்தியே தெரியாமல் 1970ல் ராஜேஷ் கன்னாவை வைத்து மிகப்பெரிய ஹிட் கொடுத்தவர் தேவர்.
ஆராதனா படத்தின் மூலம் ஒவர் நைட்டில் இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டாராக அவதாரம் எடுத்த ராஜேஷ்கன்னாவே, ஹாத்தி மேரா சாத்தி என்ற அந்த படத்தின் வசூல் வேகத்தை பார்த்துதான், முதன் முறையாக இந்தி திரையுலக ஜாம்பவான் சக்தி சமந்தாவுடன் சேர்ந்து சக்திராஜ் என்ற சொந்த கம்பெனியை ஆரம்பித்து விநியோகஸ்தர் உரிமையை கைப்பற்றும் வியாபார யுக்தியை ஆரம்பித்தார்..
இந்த படத்திற்கு லக்ஷ்மிகாந்த்-பியாரிலால் இசையமைக்க வேண்டும் என்று தேவர் விரும்பினார். ஆனால் பயங்கர பிசியால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
மும்பையில் பேச்சுவார்த்தை நடந்த இடத்தில் லக்ஷ்மிகாந்தின் குழந்தைக்கு அன்று இரவு பிறந்த நாள் பார்ட்டி நடக்கப்போகிறது என்பதை தெரிந்துகொண்டார்.
உடனே ஒரு நகைக்கடைக்கு ஓடிப்போய் தங்ககாசுகளை கை நிறைய வாங்கிக்கொண்டு பார்ட்டி நடந்த இடத்திற்கு அழையா விருந்தாளியாக போனார் தேவர். எல்லாரும் அதிர்ச்சி அடையும் வகையில் தங்ககாசுகளை குழந்தையின் தலையில் கொட்டி வாழ்த்தினார்.
லக்ஷ்மிகாந்தின் மனைவியிடம் தன் படத்திற்கு இசையமைக்க கணவரை வற்புறுத்துங்கள் என்றார். அவ்வளவுதான், ''இதோ பாருங்கள் இங்கே வந்திருப்பவர்களில் பலரும் பார்ட்டியில் குடிக்க வந்தவர்கள். ஆனால் இவரோ நம் செல்வத்தை தங்கத்தால் அபிஷேகம் செய்து வாழ்த்தியுள்ளார். இவர் படத்திற்கு இசையமைக்காவிட்டால் நடப்பது வேறு என்று கணவரிடம் பொங்கினார் திருமதி.
அப்புறமென்ன.. தேவர் படத்திற்கு பொங்கிய லக்ஷ்மிகாந்த், பியாரிலால் ஜோடி இசை, இந்தியாவையே சல்..சல்…மேரே ஹாத்தி என தாளம் போடவைத்தது..
இந்த இசை ஜோடியை புக் செய்யச்சொல்லி முதன் முதலில் ஐடியா தந்த இயக்குநர் ஸ்ரீதரே. தேவரின் இந்த தடாலடியை பார்த்து மிரண்டுபோய்விட்டார்.
இந்த ஹாத்தி மேரே சாத்திதான் தமிழில் எம்ஜிஆர் நடித்த நல்ல நேரம் படமாக ரீமேக்கானது..
ராஜேஷ்கன்னாவை வைத்து மெகா ஹிட் கொடுத்த, தேவருக்கு புகழ்பெற்ற தர்மேந்திரா ஹேமாமாலினி ஜோடி உறுத்தவே அவர்களுக்கு ஒரு கதை தயார் செய்தார்.
ராஜேஷ்கன்னா, ஹாத்தி மேரோ சாத்தி படத்தில் தன்னை குழந்தை பருவத்தில் சிறுத்தையிடம் இருந்து காப்பாற்றிய யானையையும் அதன் கூட்டத்தை வளர்த்தெடுத்து நன்றி காட்டினார் என்றால், தர்மேந்திராவுக்கும் அதே யானை கதையைத்தான் கொடுத்தார் தேவர்,
ஆனால் இம்முறை தாயிடமிருந்த குட்டியானையை பிரிக்கும் ஒருவனே, கடைசியில் இருவரையும் சேர்ந்துவைக்க கடும்பாடுபடவேண்டியிருந்தது. மா என்ற பெயரில் வெளியான படம் அந்த இந்தியா முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வெற்றிபெற்றது.
இதே மா படம்தான் தமிழில் ரஜினியை வைத்து தேவர் குடும்பம் பின்னாளில் அன்னை ஓர் ஆலயம் என எடுத்தது.
பாஷை தெரியாத இந்தியிலே தேவர் இப்படியெல்லாம் சாகசம் செய்தார் என்றால் தமிழில் சும்மா இருப்பாரா?
.
1974ல் ஒருயொரு பாம்பை வைத்து சிவகுமார்- ஜெயசித்ரா காம்பினேஷனில் வெள்ளிக்கிழமை விரதம் என்ற படமெடுத்துவிட்டார். ஒட்டு மொத்த தாய்க்குலமும் பாம்பு செண்டிமென்ட்டுக்கு கட்டுப்பட்டு தியேட்டர் பக்கம் திரும்ப திரும்ப வந்து பணத்தை கொட்டிவிட்டுபோனது.
ஒரு ஆட்டை வைத்து ஆட்டுக்கார அலுமேலு என்று படம் கொடுத்து பணத்தை மூட்டை மூட்டையாக கட்டும் வித்தை தேவருக்கு மட்டும் வசப்பட்ட கலை. அந்த ஆட்டை ஊர் ஊராய் கொண்டுபோய் பார்வையாளர்களிடம் காட்டி இன்னும் வசூலை வாரிக்குவிக்கும் பிரமோட் கலையிலும் அவர் கில்லாடி
எம்ஜிஆர், ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா, ரஜினி,கமல் உள்பட பல டாப் ஸ்டார்கள் யானை, புலி, சிங்கம் பாம்பு, மயில் போன்றவற்றுடன் பேசியே ஆகவேண்டிய கட்டாயத்தை உருவாக்கியவர் தேவர் மட்டுமே.
இன்று உலகநாயகனாக போற்றப்படும் கமல் இளைஞனாக வளர்ந்து முதன் முதலில் பாடல் காட்சியில் குட்டி பத்மினியுடன் கலாட்டா கம் டூயட் என ஆடிப்பாட வாய்ப்பு பெற்றார் என்றால் அது 1970ல் வெளியான தேவரின் மாணவன் படத்தில்தான்
1967ல் எம்ஜிஆர் சுடப்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது அங்கே சென்றவர்களெல்லாம் பீதியோடு இருக்க டிபன்பாக்ஸ் நிறைய பணத்தை எடுத்துபோய் அவரிடம் கொடுத்துவிட்டு சீக்கிரம் எழுந்து வந்து என் படத்தில் நடி தெய்வமே என்று சொன்ன வியப்பின் அடையாளம் சின்னப்பா தேவர்.
ஐந்தாவது வகுப்புவரை மட்டுமே படித்த சின்னப்பா தேவர், நேர்மையான மனதோடு துணிச்சலாய் சாதித்த சாதனைகளை அவ்வளவு சுலபத்தில் சொல்லிமுடித்து விட முடியாது.
_____________________
கட்டுரையாளர் : ஏழுமலை வெங்கடேசன், மூத்த பத்திரிக்கையாளர், காஞ்சிபுரம்.
செய்திதாள் : ஜெயராமன்.ரெ.......... Thanks...
புரட்சிதலைவர் முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் 300 ரூபாய், 7 ஆவது படத்தில் தான் 1000 சம்பளம் வாங்கினார்.
45 ஆவது படத்தில் 1 லட்சம், கடைசி படத்திற்க்கு 11 லட்சம் பெற்றார்...
அவர் வாங்கிய சம்பளத்தில் தான் அவரது அலுவலகத்தில், தோட்டத்தில் உழைத்த அனைவருக்கும் சாப்பாடு. தினமும் 100 பேருக்கு சமைக்கப்படும்,
அதுவும் அவர் முதல்வர் ஆன பின் அலுவலக்தில் இருந்த காரியதரிசிகள், காவலர்கள் என்று எல்லோருக்கும் சேர்த்தே சமைக்கப்படும்...
அனைவரும் மூன்று வேளை சாப்பாடு, சாப்பாட்டை சுற்றி 7 வகை கறியிருக்கும்..
அவர் என்ன உண்ணுகிறாரோ அதுவே அனைவருக்கும்...
கோடி கோடியாக சம்பாதித்து தன் குடும்பத்திற்க்கு சொத்து மேல் சொத்து குவித்து தொண்டர்களிடம் உண்டியல் ஏந்தி கட்சி நடத்தும் சிலருக்கு முன் புரட்சித்தலைவர் "எட்டாவது வள்ளல்".......... Thanks...
காவியத் தலைவனுக்குக் கடைசி வரிகள் – எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் வைரமுத்து
---------------------------------------
ஒரு நாளும் உங்களை நான் தேடி வந்து சந்தித்ததில்லை. ஆனால், அந்த ஒரு கறுப்புப் பகலில் மட்டும் உங்களை ஓடிவந்து பார்க்காமல் என்னால் உட்கார முடியவில்லை.ராஜாஜி மண்டபத்தில் உங்கள் இறுதிப் படுக்கையில் ரோஜா மாலைகளுக்கு மத்தியில் ஒரு ரோஜா மலையாய்க் கிடத்தப்பட்டிருந்தீர்கள்.
உங்களைத் தொட்டுப் பார்க்க நினைத்து, தொட முடிந்த தூரம் வந்தும் தொட முடியாமல் நின்றேன்.
எம்.ஜி.ஆருக்கே மரணமா?
எனக்கு முதலில் மரணப்பயம் வந்தது.
காற்று – சமுத்திரம் – வானம் – எம்.ஜி.ஆர்
இவைகளெல்லாம் மரணிக்க முடியாத சமாசாரங்கள் என்று எங்கள் கிராமத்து மக்களைப் போலவே நானும் நம்பிக்கிடந்த நாட்களுண்டு.
அன்று அந்த நான்காவது நம்பிக்கை நசிந்து விட்டது.
47 முதல் 87 வரை நாற்பதாண்டு காலம் தமிழர்கள் உச்சரிக்கும் ஐம்பது வார்த்தைகளில் ஒரு வார்த்தையாய் இருந்த பெயரை மரணத்தின் மாயக்கரம் அழித்துவிட்டதா?
இமைக்காமல் கிடந்த உங்களை இமைக்காமல் பார்த்தேன்.
நீண்டநேரம் என்னை அங்கே நிற்க அனுமதிக்கவில்லை.
ஜனத்திரள் என்னைப் பிதுக்கியது.
சட்டென்று நகர்ந்து ராஜாஜி ஹாலின் ராட்சதத் தூண் ஒன்றை அடைக்கலம் பற்றி, கூட்டத்தை நோட்டமிட்டேன். அங்கங்கே அரசாங்க விதிகளுக்கு உட்பட்டுச் சிலர் அழுது கொண்டிருந்தார்கள். நிஜக்கண்ணீர் வடித்தவர் பலர் ; நீலிக்கண்ணீர் வடித்தவர் சிலர். வருத்தக் கண்ணீர் வடித்தவர் பலர்.
வாடகைக் கண்ணீர் வடித்தவர் சிலர். உயிரைக் கண்ணீராய் ஒழுக விட்டவர் பலர் ; மிகப் பலர்.
என்னால் அழ முடியவில்லை.
அழுகை வரவில்லை.
மனிதல் மட்டும் சோகப் பனிமுட்டம்.
“நான் ரசித்துக் காதலித்த ராஜகுமாரா ! உனக்கா மரணம்?”என்று உதட்டுக்குத் தெரியாமல் நாக்கு உச்சரித்துக் கொண்டது.
அங்கே கூடியிருந்த அரசியல்வாதிகளில் பலர் நாளைகளைப் பற்றியே தர்க்கித்துக் கொண்டிருக்க- நானோ உங்கள் நேற்றுகளை நினைத்தே விக்கித்துக் கொண்டிருந்தேன்.
கண்டியோ வடவனூரோ எங்ககேயோ பிறந்தீர்கள் ; தமிழ்நாட்டுக்குள் பிழைக்க வந்தீர்கள் ; தமிழ்நாட்டில் பல பேரைப் பிழைக்க வைத்தீர்கள். கும்பகோணம் யானையடிப் பள்ளி வறுமையில் கழிந்த வால்டாக்ஸ் ரோடு முகம் பார்க்க முடியாமல் முதல் மனைவியின் மரணம் – கோடையில் எப்போதாவது படபட வென்று பொழிந்து ஏமாற்றிவிட்டுப்போகும் மேகம் மாதிரி படவுலகில் அவ்வப்போது சின்னச்சின்ன வாய்ப்புகள்.
ஒரே ஒரு’க்ளோஸ்-அப்’ போடக்கூடாதா என்று மூத்த இயக்குனர்களிடம் முறையீடு – கதருக்குள் இருந்து கொண்டு கலைஞர் மீது காதல் – வந்து சேர்ந்த வாய்ப்புகளைச் சிதறாமல் பயன்படுத்திக் கொண்ட செம்மை – முப்பது வயதுக்கு மேல் வாழ்க்கையில் சந்திரோதயம், நாற்பதுக்கு மேல் சூரியோதயம் – படபடவென்று வளர்ச்சி – மனிதநேயம் என்னும் மாட்சி காட்சியிலிருந்து கட்சி – கட்சியிலிருந்து ஆட்சி – அப்பப்பா என்ன வளர்ச்சி உங்கள் வளர்ச்சி !
அயல் வீட்டுக்காரருக்கு அறிமுகமில்லாத ஒரு வாழ்க்கையோடு தொடக்கமானீர்கள்; அரசாங்க மரியாதையோடு அடக்கமானீர்கள்.
அன்று கடைசிப் படுக்கையில் உங்களைக் கண்டபோது – ஒரு சரித்திரம் சரிந்து கிடக்கிறது என்று நினைத்தேன். ஓர் அபூர்வம் முடிந்துவிட்டது என்று நினைத்தேன்.
ஒன்றன் பின் ஒன்றாய் ஞாபக மேகங்கள் …….
இருபது வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தது காதல் ;
எட்டு வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தவர் நீங்கள்.
கதைகளிலும் கனவுகளிலும் நான் கற்பனை செய்து வைத்திருந்த ராஜகுமாரன் நீங்கள் தான் என்று நினைத்தேன்.
உங்களின் இரட்டை நாடியின் பள்ளத் தாக்கில் குடியிருந்தேன்.
உங்கள் முகத்தின் மீது மீசைவைத்த நிலா என்று ஆசை வைத்தேன்.
நீங்கள் புன்னகை சிந்தும் போது நான் வழிந்தேன். வாள் வீச்சில் வசமிழந்தேன். உங்கள் பாடல்களில் நானும் ஒரு வார்த்தையுமாய் ; நானும் ஒரு வாத்தியமாய் ஆனேன்.
ஒரு தாளம் கட்டுமானத்தில் சிரிக்கும் உங்கள் சங்கீதச் சிரிப்பில் வார்த்தைகளில் பிசிறடிக்காத உங்கள் வசன உச்சரிப்பில் நான் கரைந்து போனேன்.
பெரியகுளம் ரஹீம் டாக்கீஸில் “நாடோடி மன்னன்”பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து, தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, சுவரில் நசுக்கப்பட்ட மூட்டைப் பூச்சிகளின் ரத்தக் கோடுகளை அந்தப் படத்தில் வரும் கயிற்றுப் பாலமாய்க் கற்பனை செய்து கொண்டு விடிய விடிய விழித்திருக்கிறேன்.
“மன்னனல்ல மார்த்தாண்டன்”என்று உங்களைப் போல் மூக்கில் சைகை செய்யப் போய் சுட்டுவிரல் நகம்பட்டு சில்லி மூக்கு உடைந்திருக்கிறேன்.
பிரமிக்க மட்டுமே தெரிந்த அந்தப் பிஞ்சு வயதில் எனக்குள் கனவுகளைப் பெருகவிட்டதிலும் கற்பனைகளைத் திருகிவிட்டதிலும் உங்கள் ராஜாராணிக் கதைகளுக்குப் பெரும்பங்கு உண்டு என்பதை நான் ரகசியமாய் வைக்க விரும்பவில்லை.
நூறு சரித்திரப் புத்தகங்கள் ஏற்படுத்த முடிந்த கிளர்ச்சியை உங்கள் ஒரே ஒரு படம் எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பாதிப்பு எனக்கு மட்டும் இல்லை. குடை பிடித்துக் கொண்டவர்களையும் எங்கோ ஓர் ஓரத்தில் நனைந்துவிடுகிற அடைமழை மாதிரி உங்களை விமர்சித்தவர்களைக் கூட ஏதேனும் ஒரு பொழுதில் நாசூக்காக நனைத்தே இருக்கிறீர்கள்.
என்ன காரணம் என்று எண்ணிப் பார்க்கிறேன். நீங்கள் மந்திரத்தால் மாங்காயோ தந்திரத்தால் தேங்காயோ தருவித்தவரில்லை. வரலாற்று ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அகழ்ந்து பார்த்தால் மட்டுமே உங்கள் வெற்றியின் வேர்களை விளங்கிக் கொள்ள முடியும்.
இந்த மண்ணில் எங்கள் மனிதர்கள் சில நூற்றாண்டுகளாக எதை இழந்துவிட்டு நின்றார்களோ அதையே நீங்கள் தோண்டி எடுத்துத் துடைத்துக் கொடுத்தீர்கள் ; விறுவிறுப்பாய் விலைபோயிற்று.
உடலும் உயிரும் மாதிரி காதலும் விரமும் கலந்தே விளைந்த களம் இந்தத் தமிழ் நிலம்.
காதலை ஒரு கண்ணாகவும் வீரத்தை ஒரு கண்ணாகவும் போற்றிய தமிழன், பொருளாதாரத்தை நெற்றிக் கண்ணாய் நினைக்காமல் போனான் என்பதே அவன் முறிந்து போனதற்கு மூல காரணம்.
பொருதாரச் சிந்தனைக்கே வராத தமிழன், காதலையும் வீரத்தையும் மட்டும் கோவணத்தில் முடிந்து வைத்த தங்கக் காசுகளைப் போல ரகசியமாய்க் காப்பாற்றியே வந்திருக்கிறான்.
இடைக்காலத்தில் தமிழன் அடிமைச் சக்தியில் சிக்கவைக்கப்பட்டான்.
அடிக்கடி எஜமானர்கள் மாறினார்கள் என்பதைத் தவிர அவன் வாழ்க்கையில் மாற்றமே இல்லை.
அவனது வீரம் காயடிக்கப்பட்டது ; காதல் கருவறுக்கப்பட்டது.
இழந்து போன ஆனால் இழக்க விரும்பாத அந்தப் பண்புகளை வெள்ளித் திரையில் நீங்கள் வெளிச்சம் போட்ட போது இந்த நாட்டு மக்களின் தேவைகள் கனவுகளில் தீர்த்துவைக்கப்பட்டன.
நீங்கள் கனவுகளைத்தான் வளர்த்தீர்கள் ; ஆனால் கனவுகள் தேவைப்பட்டன.
வீராங்கன், உதயசூரியன், கரிகாலன், மணிவண்ணன், மாமல்லன்
என்றெல்லாம் நீங்கள் பெயர்சூட்டிக் கொண்டபோது தமிழன் தன் இறந்தகால பிம்பங்களைத் தரிசித்தான்.
நீங்கள் கட்டிப்பிடித்து கானம் படித்துக் காதலித்தபோது தமிழன் புதைந்து போன காதல் பண்பைப் புதுப்படித்துக் கொண்டான்.
உங்கள் தாய்மொழி மலையாளம் என்பதை மறக்கடிப்பதற்கும் நீங்கள் தமிழ்க் கலாச்சாரத்தில் கரைந்து போனவர் என்று காட்டிக் கொள்வதற்கும் நீங்கள் எடுத்த முயற்சிகள் முழு வெற்றி பெற்றன.
மலையாள மரபுப்படித் தாயார் பெயரைத் தான் இனிஷியலாகக் கொள்வார்கள். ஆனால் நீங்களோ தமிழ் மரபுப் படி தந்தை பெயரைத்தான் இனிஷிலாகக் கொண்டீர்கள்.
உங்கள் தமிழ் உச்சரிப்பின் எந்த ஒரு வார்த்தையிலும் மலையாளத்தின் பிசிறு ஒட்டாமல் சுத்தமாய்த் துடைத்தெடுத்தீர்கள்.
‘மருதநாட்டு இளவரசி’யின் ஒப்பந்தப் பத்திரத்தின் உச்சியில் ‘முருகன் துண’என்றுதான் எழுதியிருக்கிறீர்கள். (முருகன் அவர்கள் தமிழ்க் கடவுள் என்று கருதப்படுகிறவர் என்பது கவனிக்கத்தக்கது)
நீங்கள் முதன் முதலாய் இயக்கித் தயாரித்த “நாடோடி மன்னனில்” தொடக்கப் பாடலாக “செந்தமிழே வணக்கம்” என்று தான் ஆரம்பித்தீர்கள். இப்படி…..இப்படியெல்லாம் அந்நியத்தோலை உரித்து உரித்துத் தமிழ்த் தோல் தரித்துக் கொண்டீர்கள்.
உங்களைப் பற்றி என் செவிகள் சேகரித்திருக்கும் செய்திகள் ருசியானவை.
ஒரு பாடகர் ஒரு மேடையில் உங்கள் பழைய பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறார். இரண்டு மணி நேரம் கரைந்து போன நீங்கள் இப்போது என் கைவசத்தில் இருப்பது இது மட்டும் தான் என்று உங்கள் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைக் கழற்றி அந்தப் பாடகருக்குப் பரிசளிக்கிறீர்கள் ; அது உங்கள் ஈகைக்குச் சாட்சி.
நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இறந்து போன உங்கள் இரண்டாவது மனைவியின் இல்லம் சென்றபோது படுக்கையறையின் கட்டிலைப் பார்த்துக் குலுங்கிக் குலுங்கி அழுதிருக்கிறீர்கள் ; அது உங்கள் ஈரத்திற்குச் சாட்சி.
தி.மு.க மாநாடுகளில் மாநாடு முடிந்ததும் பந்தலுக்கடியிலேயே படுத்துக்கிடக்கும் வெளியூர் மக்களுக்கு அவர்களே அறியாமல் அதிகாலைச் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்துவிட்டுப் போவீர்களே ! அது உங்கள் மனிதாபிமானத்துக்குச் சாட்சி.
பொதுக் கூட்டங்கள் முடித்துவிட்டு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு வைகை அணைக்கு வந்து பொன்னாங்கண்ணிக் கீரை இருந்தால் சாப்பிடுவேன் என்று நீங்கள் நிபந்தனை விதிக்க, ஆளுக்கொரு திசையில் அதிகாரிகள் பறக்க, பொன்னாங்கண்ணிக் கீரை தயாராகும் வரை சாப்பிடாமல் இருந்தீர்களாமே ! அது உங்கள் உறுதிக்குச் சாட்சி.
தொலைபேசி இணைப்பகத்திலிருந்த உங்கள் ரசிகர் ஒருவர் உங்கள் குரல் கேட்க ஆசைப்பட்டு இரவு பதினொரு மணிக்கு உங்கள் வீட்டுத் தொலைபேசி சுழற்றப்படுகிற சத்தம் கேட்டு ஆசையாய் எடுத்துக் கேட்க’டொக்’என்ற அந்தச் சின்ன சத்தத்திலேயே தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்பது உணர்ந்து கொண்டு “யாராயிருந்தாலும் தயவு செய்து போனை வையுங்கள்” என்று உடனே உத்தரவிட்டீர்களாமே ! அது உங்கள் கூர்மைக்குச் சாட்சி.
வெளிநாட்டில் கொடுத்த பணத்தை பி.சுசீலா தமிழ்நாட்டில் திருப்பித் தரவந்தபோது “ஏன் என்னுடைய உறவை முறித்துக் கொள்ளப் பார்கிறீர்களா”? என்று உரிமையோடு மறுத்து விட்டீர்களாமே. அது உங்கள் பெருந்தன்மைக்குச் சாட்சி.
நீங்கள் முதலமைச்சர். அப்போது தான் என் பெயரைத் தமிழ்நாடு மெல்ல மெல்ல எழுத்துக் கூட்டத் தொடங்கியிருக்கிறது.என் நண்பர் க.மூ. அரங்கனின் “வியர்வை முத்துக்கள்”என்ற கவிதை நூலைக் கலைஞர் வெளியிடுகிறார். நான் முதற்பிரதி பெற்றுக் கொள்கிறேன்.கலைஞரின் எழுத்துக்கள் என்னைக் கவிஞனாக்கின என்று அங்கே பேசுகிறேன். இது நடந்தது 18.5.1982 மாலை. 19.5.82 காலை ஐ.ஜி. அலுவலகம் தூள் பறக்கிறது.
“வைரமுத்து கலைஞரோடு ஏன் போனார்? எதற்குப் போனார்? எப்படிப் போனார்? என்று அவசர அவசரமாய் திராவகக் கேள்விகள் வீசித் திணற அடிக்கிறீர்கள்.
என்னைப் பற்றிய கோப்பு ஒன்று உங்கள் பார்வைக்கு வருகிறது. என் ஜாதகம் அறிகிறீர்கள்.
தேசிய விருது வாங்கிய பிறகு முதலமைச்சரான உங்களைச் சந்திக்காமல் கலைஞரைச் சந்தித்து வாழ்த்துப் பெறுகிறேன். கவனிக்கிறீர்கள்.
இத்தனைக்குப் பிறகும் எனக்கு இரண்டு முறை விருது தருகிறீர்கள்.
உங்கள் பெருந்தன்மை கண்டு நெகிழ்ந்து போகிறேன்.
உங்கள் வெற்றியிலிருந்து நாங்கள் கற்றுக் கொள்வதற்கு ஒன்றே ஒன்று உண்டு அது தான்-
நசிந்து போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது.
உங்கள் பாடல்களெல்லாம் தமிழ்நாட்டுக்கு நீங்கள் செய்த ரத்ததானம்.
ஒரு பாடலின் பாடலாசிரியன் காணாமல் போவது பாடலுக்கு வெற்றி ஆகாது என்ற போதிலும், பாடலாசிரியன் முகம் கரைந்து போய் நீங்கள் மட்டுமே முகம் காட்டுவது உங்கள் பாடல்களில் மட்டும் தான்.
உங்களுக்காகப் படைக்கப்பட்ட பாடல்கள் என்னையும் படைத்திருக்கின்றன.
எனக்கு ஒரே ஓர் ஆசை மட்டும். ஆடிக்காற்றில் ஆடும் அகல் விளக்கின் சுடராய் ஆடிக் கொண்டேயிருக்கிறது.
நிகழ்விலிருக்கும் எல்லாக் கதாநாயகர்களும் என் பாடலை உச்சரித்திருக்கிறார்கள். உங்கள் உதடுகளைத் தவிர.
ஒரே ஒரு பாட்டு உங்களுக்கு நான் எழுத ஆசைப்பட்டேன்.
ஆனால்,என்னால் எழுத முடிந்தது உங்களுக்கான இரங்கல் பாட்டுதான்.
உங்களுக்கு என்னால் படைக்க முடிந்தவை – உங்கள் இறுதி ஊர்வலமான “காவியத் தலைவனுக்குக் கடைசி வரிகள்” தான்.
உங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு நான் முதன் முதலாய்ப் போனது உங்கள் அன்புத் துணைவியாருக்கு ஆறுதல் சொல்லத்தான்.
“உங்களைப் பற்றி முதன் முதலில் நான் பேசியது உங்கள் இரங்கல் கூட்டத்தில் தான். அன்று சொன்ன இறுதி வரியே இன்றும் என் இறுதி வரி ;
ஒரே ஒரு சந்திரன் தான் ;
ஒரே ஒரு சூரியன் தான் ;
ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான்...
கரையாத கல்லான உள்ளமும் கரையும்..
உள்ளம் உருகுதை யா..தலைவா...
வணக்கம் அன்புள்ளங்களே...........மீள்பதிவு... Thanks............
புரட்சிதலைவர் முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் 300 ரூபாய், 7 ஆவது படத்தில் தான் 1000 சம்பளம் வாங்கினார்.
45 ஆவது படத்தில் 1 லட்சம், கடைசி படத்திற்க்கு 11 லட்சம் பெற்றார்...
அவர் வாங்கிய சம்பளத்தில் தான் அவரது அலுவலகத்தில், தோட்டத்தில் உழைத்த அனைவருக்கும் சாப்பாடு. தினமும் 100 பேருக்கு சமைக்கப்படும்,
அதுவும் அவர் முதல்வர் ஆன பின் அலுவலக்தில் இருந்த காரியதரிசிகள், காவலர்கள் என்று எல்லோருக்கும் சேர்த்தே சமைக்கப்படும்...
அனைவரும் மூன்று வேளை சாப்பாடு, சாப்பாட்டை சுற்றி 7 வகை கறியிருக்கும்..
அவர் என்ன உண்ணுகிறாரோ அதுவே அனைவருக்கும்...
கோடி கோடியாக சம்பாதித்து தன் குடும்பத்திற்க்கு சொத்து மேல் சொத்து குவித்து தொண்டர்களிடம் உண்டியல் ஏந்தி கட்சி நடத்தும் சிலருக்கு முன் புரட்சித்தலைவர் "எட்டாவது வள்ளல்".......... Thanks...
#இவர்கள் #எதிர்காலத்தூண்கள்
தமிழக முதல்வர் மக்கள்திலகம் கோட்டைக்குச் சென்றுகொண்டிருக்கிறார்...
போகும் வழியில் ராணி மேரிக் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி மாணவியர் கூட்டம்...
டிரைவரிடம் சொல்லி தனது காரை அவர்களருகே நிறுத்துகிறார்... மாணவிகளும் அங்கிருந்த பொதுமக்களுக்கும் இன்பஅதிர்ச்சியில் உறையும் போதே...!
'என்ன கூட்டம் இங்கே? 'என முதல்வர் கேட்க...அங்கிருந்த மாணவிகள்...
'ரொம்ப நேரமா பஸ்ஸே வரலை சார்' எனச்சொல்ல...
உடனே முதல்வர், தனது உதவியாளரை அழைத்து, 'இப்ப உடனே இங்க வந்தாகணும்' னு சொல்ல, உதவியாளர் பல்லவன் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநரை வாக்கிடாக்கியில் தொடர்பு கொண்டு விஷயத்தைக் கூறுகிறார்.
பேருந்து வரும் வரை மாணவிகளுடன் ரோட்டிலேயே நின்று கொண்டு உரையாற்றிக்கொண்டிருந்தார் நம்ம வாத்தியார்...
அடுத்த பத்து நிமிடங்களிலேயே மூன்று பஸ்கள் ஒன்றாக வந்ததும்... மாணவரியரும், பொதுமக்களும் வாத்தியாருக்கு நன்றி சொல்லியும் விசிலடித்தும் தங்களின் நன்றிகளைத் தெரிவித்தனர்...
முதல்வரின் கார் கிளம்பியது...உதவியாளர் தயங்கித் தயங்கி எம்ஜிஆரிடம் கேட்டார்...'ஐயா! நீங்க காரிலேயே உட்கார்ந்திருக்கலாமே! வெயிலில் நின்று அம்மாணவியருடன் பேசிக்கொண்டிருந்தீர்களே...ஏன் ? ன்னு நான் தெரிஞ்சுக்கலாமா ???
அதற்கு புரட்சித்தலைவர், ' இவர்கள் தான் நாட்டின் எதிர்காலத்தூண்கள்... நாளை இவர்களில் பலர் உயரதிகாரிகளாக ஆகலாம்...ஒரு பிரச்சனை வரும்போது தானே அதை முன்னின்று அதை சமாளிக்கணும்...அதற்கு நாம் தான் உதாரணமாக இருக்கவேண்டும்...
மேலும் நான் அவர்களில் ஒருவராக நின்று பேசும்போது மக்களுக்கும், முதல்வருக்குமுள்ள இடைவெளி அகலும்...பிரச்சனகளை நேரடியாக அறிந்துகொள்ள எனக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும்...என்றார்...
வாத்தியாரின் பதிலில் உறைந்தது அந்த உதவியாளர் மட்டுமல்ல...நாமும் தான்........... Thanks..........
புரட்சி நடிகரை வைத்து ஒரே ஒரு காவியம் என்றளவில் இயக்கியவர்கள்..........1) ஜெனோவா ...f. நாகூர் 2) மலைகள்ளன்...ஸ்ரீ ராமுழு நாயுடு 3) மகாதேவி ...சுந்தர் ராவ் நாட்கர்னி 4) தாய் மகளுக்கு கட்டிய தாலி ... R r. சந்திரன் 5) பாக்தாத் திருடன்... T p. சுந்தரம் 6) தெய்வதாய்... P. மாதவன் 7) அன்பேவா... திருலோக சந்தர் 8) ஆசைமுகம்... புல்லையா 9) நம்நாடு... ஜம்பு 10) தலைவன்... தாமஸ் & சிங்கமுத்து..........
1971 ல் தி.மு. க. வென்றது எப்படி ?
இன்று ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது 1971 ல்
தி.மு. க. எவ்வாறு வென்றது என்பது பற்றி பேசினோம். அப்போது என் நினைவுகள் பின்னோக்கி சென்றது.
அண்ணா மறைவிற்கு பின்
எம்.ஜி. ஆரால் கருணாநிதி முதல்வரானார். படிப்படியாக ஆட்சியில் ஊழல் வளர்ந்தது. எம். ஜி. ஆர். மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவித்தார்.
அப்போது காங்கிரஸ் இரண்டாக உடைந்து, தமிழ்நாட்டில் காமராசர் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸாக வலுவாக இருந்தது. அப்போது காமராசர் "தி.மு. க. ஊழல் ஆட்சி" என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
அது மக்கள் மத்தியில் எடுபடத் தொடங்கியது. அதன் பாதிப்பை கருணாநிதி உணர்ந்ததால் அப்போது மந்திரிகளாக இருந்த புதுக்கோட்டை
சுப்பையா, மதியழகன், வேழவேந்தன் ஆகியோரை பதவியிலிருந்து நீக்கினார்
தன்னை யோக்கியராக காட்டிக்கொள்ள.
அடுத்து தான் ஆட்சிக்கு வருவது கடினம் என்பதை உணர்ந்த கருணாநிதி,
1972 ல் நடக்கவிருந்த தேர்தலுக்கு முன்பாக உடனே தேர்தல் நடத்தி தப்பிக்க விரும்பி, சட்டமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் அறிவிக்க செய்தார். தேர்தல் பிரச்சாரம் கடுமையாக இருந்தது. வெற்றி பெறுவது கடினம் என்றுணர்ந்த கருணநிதிக்கு தெரிந்த ஒரே நம்பிக்கை
எம். ஜி. ஆர். மட்டுமே.
அந்த நேரத்தில் கருணாநிதியின் போக்கு பிடிக்காமல் எம். ஜி. ஆர். படப்பிடிப்பு பணிகளில் மட்டுமே கவனம்
செலுத்தினார். கருணாநிதி அவரிடம் சரணடைந்து கெஞ்சி கூத்தாடி மனம் இரங்கச்செய்தார். ஆயிரம் தவறுகள்
செய்திருந்தாலும் நட்பை, கட்சியை வலுவிழக்க செய்ய விரும்பாத
எம். ஜி. ஆர். அசுரத்தனமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அந்த தேர்தலில் எம். ஜி. ஆர். கையாண்ட ஒரு யுக்தி எதிர் பிரசாரங்கள் அத்தனையையும்
தவிடு பொடியாக்கியது. அதை காமராஜரே எதிர்பார்க்கவில்லை.
இப்போது நான் சொல்வது அனைத்தும் அன்றைய நாளிதழ்களில் இடம் பெற்றதை படித்து நினைவில் வைத்திருக்கும் விசயம்.
எம். ஜி. ஆர். பிரச்சாரம் செய்த இடங்களில் எல்லாம் "தி.மு. க. ஆட்சியில் ஊழல் செய்தார்களா ?"
என்றும் "நீங்கள் ஊழல் நடந்தது என்று நம்புகிறீர்களா ?" என்று மக்களை நோக்கி கேள்வி எழுப்ப, மக்கள் அதற்கு
"இல்லை" "இல்லை" என்று பதிலளிக்க,
எம். ஜி. ஆர். கருத்துக்கு மறு கருத்து இல்லை என்பதை 1971 சட்டமன்ற தேர்தல் வெற்றி 184 இடங்களில் அபாரமாக நிரூபித்தது.
ஆனால் கருணாநிதி குடும்பத்திற்கும்,
1972 குப்பின் உள்ள தி. மு. க.விற்கும்
நன்றி கிடையாது, அவர்கள் நம்பிக்கை துரோகிகள் என்பதை இன்று வரை நிரூபித்து வருகிறார்கள்.
அ.தி.மு. க.விலுள்ள எத்தனை பேருக்கு இந்த உண்மை தெரியும். தெரிந்தாலும் என்ன பயன் ?
Ithayakkani S Vijayan........... Thanks..........
நடிகர் அசோகன் மீது எம்.ஜி.ஆருக்கு #மிகுந்த #அன்பு உண்டு.
அசோகன் #நன்றாக #சாப்பிடுவார்.
எம்.ஜி.ஆர். வீட்டில் இருந்து வரும் வித விதமான சைவ, அசைவ உணவுகளை சாப்பிடுவதற்காகவே வேறு படப்பிடிப்பில் இருந்தாலும் மதியம் எம்.ஜி.ஆர். இருக்கும் இடத்துக்கு அசோகன் வந்துவிடுவார்.
அவரை நன்கு சாப்பிட வைத்து பார்ப்பதில் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த விருப்பம்.
யார் எதை விரும்பி சாப்பிடுகிறார்கள்? என்று கவனித்து அதை அவர்களுக்கு அதிகம் போடச் சொல்வார் எம்.ஜி.ஆர்.!
‘நேற்று இன்று நாளை’ திரைப்படம் அசோகன் தயாரித்த படம்.
திமுகவில் இருந்து 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டபோது சத்யா ஸ்டுடியோவில் ‘நேற்று இன்று நாளை’ படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். இருந்தார்.
விஷயம் அறிந்து சத்யா ஸ்டுடியோ முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிவிட்டனர்.
தமிழகம் முழுவதும் பதற்றம் நிலவியது. ‘இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி போல மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது’ என்றும்
‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெரிய இயக்கத்தை தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது’ என்றும் கவியரசு #கண்ணதாசன் பதிவு செய்துள்ளார். ‘
நேற்று இன்று நாளை’ படத்துக்கு வசனகர்த்தா, திமுக தலைவர் கருணா நிதியின் உறவினர் #சொர்ணம்.
கொந்தளிப்பான நிலைமையை அறிந்து சொர்ணத்தை மனிதாபிமானத்தோடு பாதுகாப்பாக காரில் அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர்.!
நீண்ட தயாரிப்பில் இருந்த ‘நேற்று இன்று நாளை’ படம் தாமதமானதற்கு அப்போதிருந்த அரசியல் சூழ்நிலை களும் காரணம்.
சென்னையைச் சேர்ந்த டிமாண்டி என்பவர்தான் படத்துக்கு பைனான்ஸ் செய்தார்.
படம் தாமதமானதாலோ என்னவோ, ஒரு கட்டத்துக்கு மேல் அவர் பைனான்ஸ் செய்ய முன்வரவில்லை. படத்தில் பணியாற்றியவர்களுக்கு சம்பள பாக்கி இருந்தது. இதனால், அசோகன் மன உளைச்சலில் இருந்தார்.
அசோகனின் நிலைமையை அறிந்த எம்.ஜி.ஆர்., அவரை வரச் சொல்லி யார், யாருக்கு எவ்வளவு பணம் பாக்கி என்று கேட்டார். அசோகன் தெரிவித்த தொகை முழுவதையும் எம்.ஜி.ஆர். அவருக்குத் தந்து, பாக்கி வைத்திருந்த எல்லோருக்கும் கொடுத்துவிடச் சொன்னார்.
பணம் கிடைத்த அன்று இரவே ஒவ்வொருவர் வீடாகச் சென்று பணத்தை செட்டில் செய்தார் அசோகன்.
படத்தில் சண்டைக்காட்சியில் நடித்திருந்த எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் ராமகிருஷ்ணன் வீட்டுக்கு இரவு 12 மணிக்குச் சென்று அவருக்கு பணத்தைக் கொடுத்தார்.
எம்.ஜி.ஆரின் உதவியோடு ‘நேற்று இன்று நாளை’ படம் முடிக்கப்பட்டு வெளியாகி வெற்றிகரமாக 100 நாட் களை கடந்து ஓடி வசூலைக் குவித்தது.
இதில் ஒரு முக்கியமான விஷயம்.,
எல்லோருக்கும் சம்பள பாக்கியை கொடுப்பதற்காக அசோகனிடம் பணம் கொடுத்த எம்.ஜி.ஆர்., அவரது நிலைமையை உணர்ந்து தனது சம்பள பாக்கியான லட்சக்கணக்கான ரூபாய்களை #பெற்றுக் #கொள்ளவே #இல்லை என்பது
#வெளியே #தெரியாத #உண்மை......
_தி இந்து......... Thanks.........
#மக்களின் #ரெஸ்பான்ஸ்
நமக்கு கூட்டம் கூடுறதுனால மக்களின் ஆதரவு நிறைய இருக்குன்னு அர்த்தமாகிவிடாது...
நான் நடிகன்கிறதால என் மீது அன்பு வெச்சிருக்கலாம். இப்ப நான் தனிக்கட்சி தொடங்கியாச்சு. இதுக்கு மக்களிடம் எந்த அளவு ரெஸ்பான்ஸ் இருக்குன்னு தெரிஞ்சுக்கிறது தான் நல்லது...அதனால் நீங்களனைவரும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் மனோநிலையை அறிஞ்சிட்டு வாங்க..." என்று தனது உதவியாளர்களிடம் கூறுகிறார் எம்ஜிஆர்.
திருச்சியில் நடந்த கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்...வாத்தியார் பேசும்போதெல்லாம் கரவொலிகள்..."எம்ஜிஆர் வாழ்க" ன்னு ஒரே கோஷம்..
இதையடுத்து திருச்சியில் உள்ள "ஆஸ்பி" ஓட்டலில் தங்கியிருந்த புரட்சித்தலைவர் தன் உதவியாளர்களிடம் மேலே குறிப்பிட்டவற்றை சொல்லிக்கொண்டிருந்தார்...
#மக்களின் #கூட்டத்தைப் #பார்த்த #எம்ஜிஆர் #அவர்களுக்கு #தலைக்கனம் #ஏற்படவில்லை. #உண்மையில் #பயப்படத்தான் #செய்தார்..."ஏனெனில் இது வெறும் சினிமாக் கவர்ச்சியாக ஆகிவிடக்கூடாதே என்று..."
அவர் சொற்படி உதவியாளர்கள் தமிழகம் முழுவதும் சுற்றினர்...மக்கள் எல்லோரும் சொல்லிவெச்ச மாதிரி கேட்ட ஒரே கேள்வி ...
"#எம்ஜிஆர் #எப்ப #ஆட்சியமைக்கப் #போகிறாரு...?"
திமுக கோட்டையாக விளங்கிய ராமநாதபுரத்திலும் கூட மக்களின் கேள்வி இது மட்டுமே ...! உதவியாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். தலைவரும் மகிழ்வாரென அவரிடம் இந்த நல்ல செய்தியைத் தெரிவித்தனர்...
"கட்சியவே இப்ப தான் நாம ஆரம்பிச்சோம்...ஆனா மக்கள் பலபடிகள் மேலே போய் ஆட்சி எப்ப அமைக்கப்போறார்னு கேக்கறாங்கன்னு தெரிஞ்சதும்...மக்கள் தன்மீது வைத்திருக்கும் பாசத்தை நினைத்து எம்ஜிஆருக்கு அழுகை பீறிட்டது...
ஆனால் இதற்காக ஒரேடியாக மகிழவில்லை... மாறாக, இதைத் தன் வாழ்நாள் முழுவதும் தக்கவைக்க வேண்டுமே என்று கவலை தான் பட்டார்...
1965ல் தான் பாடிய பாடலுக்கு உயிர்கொடுத்து அதை மெய்ப்பித்துக் காட்டியவர் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் மட்டுமே...
காலத்தால் அழிக்கமுடியாத அந்த வரிகள்...
"நான் ஆணையிட்டால்
அது நடந்துவிட்டால்..."
மக்களை ரசிகர்களாகவும்,
ரசிகர்களைத்
தொண்டர்களாகவும்,
தொண்டர்களை
பக்தர்களாகவும்
தனது மனிதநேயத்தால் மாற்றிய...
காலத்தால் வெல்லமுடியாத #உலகின் #ஒப்பற்ற #ஒரே #தலைவர் இதயதெய்வம் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் மட்டுமே........... Thanks..........
#பச்சைக்கிளி #முத்துச்சரம்
#மேட்டா #ரூங்ராத் என்ற பெயரைக் கேள்விப்பட்டதுண்டா? அவர் யாரென்று தெரியுமா?’ என இன்றைய தலைமுறையினரைக் கேட்டால், உதட்டைப் பிதுக்குவார்கள். 55 வயதைக் கடந்தவர்கள் சட்டென்று சொல்லிவிடுவார்கள். “என்னங்க? அவரையா தெரியாது? எம்.ஜி.ஆரின் பச்சைக்கிளி ஆயிற்றே!” என்று பளிச்சென்று கூறுவர்கள்.
உலகம் சுற்றும் வாலிபனில் கௌரவ வேடத்தில் நடித்த தாய்லாந்து நடிகைதான் மேட்டா ரூங்ராத். ‘பச்சைக்கிளி.. முத்துச்சரம்.. முல்லைக்கொடி யாரோ? பாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ?’ என்ற பிரபலமான பாடலுக்கு எம்.ஜி.ஆரோடு ஜோடி சேர்ந்து ஆடியவர். 25 வயது இளம் மங்கையான மேட்டா ரூங்ராத் அதே பாடலின் வாயசைப்பில் ‘பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ? மன்னன் எனும் பேரில் வரும் தேவன் மகன் நீயோ?’என்று எம்.ஜி.ஆரை புகழும் வரிகள் வரும்போது, ரசிகர்கள் விசிலடித்து ஆர்ப்பரித்தனர்.
உலகம் சுற்றும் வாலிபன் வெளிவந்து 46 வருடங்கள் ஆகிவிட்டன. தற்போது மேட்டா ரூங்ராத்துக்கு வயது 71 ஆகிறது. முதுமை என்று சொல்ல முடியாத அளவுக்கு ’சிக்’ என்றிருக்கிறார். அந்தக் குழந்தை முகமும் இன்னும் மாறவே இல்லை. இந்த ‘ரீவைண்ட்’ அந்தக் கால ரசிகர்களுக்காக மட்டுமல்ல!
இணையத்தில் இருந்து தொகுத்து உங்கள் இதயத்திற்கு ஆறுமுகம் சிக்ஸ்ஃபேஸ்........ Thanks.......
ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர்
எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 1
எம்.ஜி.ஆர்! தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்த ஆக்ஷன் ஹீரோ! அண்ணாவின் இதயக்கனி என்று போற்றப்பட்ட இவர் அரசியலிலும் ஹீரோவாகவே இருந்தார். சாதாரண போர் வீரனாக அறிமுகமாகி, சினிமாவுலகின் சக்கரவர்த்தியாக திகழ்ந்த எம்.ஜி.ஆர், ஏழைகளின் காவலனாக நடித்த படங்கள் ஏராளம். வெறும் நடிப்பாக இல்லாமல் நிஜமாகவே ஏழைகளிடம் அவர் காட்டிய அன்பு, அவருக்கு முதலமைச்சர் நாற்காலியை கொடுத்தது. இன்றைய ஜுஜுபி ஹீரோக்கள் கூட முதலமைச்சர் கனவோடு உலா வருவதற்கு இவர்தான் காரணம்.
சதிலீலாவதி எம்.ஜி.ஆருக்குத்தான் முதல் படம் என்றில்லை. படத்தில் வில்லனாக நடித்த டி.எஸ்.பாலையா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் முதல் படம். அமெரிக்கரான எல்லீஸ் ஆர்.டங்கன் தமிழ் படங்களை இயக்க ஆரம்பித்ததும் இதன் மூலம் தான். இயக்குநர் (கிருஷ்ணன்) பஞ்சுவுக்கும் இது முதல் படம்.
ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசனின் சினிமா உலகப் பிரவேசம் இதில்தான் ஆரம்பமானது. அவர் ஆனந்த விகடன் இதழில் எழுதிய சதிலீலாவதி தொடர் நாவல்தான் படமாகியது. பெரும் வெற்றி பெற்ற சதிலீலாவதி மதுவின் மூலம் ஏற்படும் தீமையால் ஒரு பெரிய குடும்பமே நாசமாயிற்று என்பதை கதையின் மூலக் கருத்தாக வைத்து எடுக்கப்பட்ட படம். படம் பார்த்துவிட்டு ஏராளமான ரசிகர்கள் மதுவுக்கு அடிமையாகியிருந்த நாங்கள் இப்படம் பார்த்துவிட்டு திருந்திவிட்டோம் என்று எழுதியிருந்தார்களாம்.
எம்.ஜி.ஆருக்கு இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம். சிறிய வேடம்தான். தட்சயக்ஞம் மகாவிஷ்ணு வேடத்தில் எம்.ஜி.ஆருக்கு மட்டுமன்றி தமிழ் சினிமாவுக்கு முதல் வெள்ளிவிழா படம். சாலி வாகனன் தொடர்ந்து சின்னஞ்சிறு வேடங்களிலேயே நடித்து வந்த எம்.ஜி.ஆருக்கு 12-வது படமான இதில் குறிப்பிட்டு சொல்லும்படியான வேடம். படத்தில் கதாநாயகன் ரஞ்சன்தான் சாலி வாகனன். எம்.ஜி.ஆர். விக்ரமாதித்தனாகவும் அவரது மந்திரி பட்டியாக சாண்டோ சின்னப்பா தேவரும் நடித்தார்கள். படத்தில் ஒரு காட்சியில் ரஞ்சனும் எம்.ஜி.ஆரும் ரஜபுத்திர வாள்களுடன் மோதுவது படமானது.
கதையில் ரஞ்சனின் கை ஓங்கியிருக்க வேண்டும். ஆனால் கேமிரா ஓடிக் கொண்டிருக்கையில் ரஞ்சனை விட எம்.ஜி.ஆரின் வாள்வீச்சு வேகமாக இருந்தது. ரஞ்சனால் எம்.ஜி.ஆருக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அதனால் கேமராவை கட் சொல்லி நிறுத்திய ரஞ்சன், டைரக்டர் பி.என்.ராவிடம் எம்.ஜி.ஆர் வேண்டுமென்றே என்னை அடிக்கிறார் என்று புகார் செய்தார். டைரக்டர் எம்.ஜி.ஆரை அழைத்து விசாரிக்க, எம்.ஜி.ஆர் செய்தது சரி என்பதை விளக்கினார். அதன் பின்னர் ரஞ்சனை விட குறைவான வேகத்தில் வாள் வீசும்படி எம்.ஜி.ஆருக்கு டைரக்டர் யோசனை சொன்னார். எம்.ஜி.ஆர் மனம் நொந்தார். நம் உண்மையான திறமையை எப்படித்தான் வெளிப்படுத்துவது என்று சின்னப்ப தேவரிடம் கூறி வேதனையை வெளிப்படுத்தியபோது அவர் எம்.ஜி.ஆரிடம், உண்மையான திறமைக்கு என்றுமே மதிப்பு உண்டு. உங்களிடமுள்ள திறமை ஒரு நாள் உலகுக்குத் தெரியத்தான் போகிறது என்று சமாதானம் கூறினார். ஸ்ரீமுருகன் சிவனாக எம்.ஜி.ஆர் நடித்து ருத்ர தாண்டவம், ஆனந்த தாண்டவம், இரண்டும் ஆடி புகழ் பெற்றார். பார்வதியாக உடன் நடனமாடிய வி.என். ஜானகி ராஜகுமாரியில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
எம்.ஜி.ஆரின் நடனத்திற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு. அதனால் மாத சம்பளத்திற்கு நடித்து கொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு இதில் கூடுதலாக பணம் தரப்பட்டது. ராஜகுமாரி தனது 15-வது படத்தில் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடிக்க முடிந்தது. படத்தின் இயக்குநர் ஏ.ஏஸ்.சாமி. தொழில்நுட்பம் தெரிந்த கெடுபிடியான இயக்குநர். தான் நினைத்ததை சாதிக்க வேண்டுமென்ற உணர்வுடையவர். படம் வளர்ந்து கொண்டிருந்தபோது, ஒரு காட்சியில் எம்.ஜி.ஆரின் முகம் மட்டுமே நடிக்க வேண்டும். குளோஸ் அப் ஷாட் அது. நடிக்கும்போது முகத்தில் மட்டுமே பாவம் வரவேண்டும். உடல் அசையக்கூடாது என்றார் சாமி. எம்.ஜி.ஆர் முகத்தில் பாவம் காட்டியபோது உடலும் சேர்ந்து அசைந்தது. சாமி அதை கண்டித்தார்.
எம்.ஜி.ஆர் சாமியிடம் வந்து என்னால் முடியவில்லை. நீங்கள் நடித்து காட்டுங்கள் என்று சொல்லிவிட்டார். கடைசியில் எம்.ஜி.ஆர் நடித்தபடிதான் காட்சி படமானது. இப்படித்தான் வளர்ந்த காலத்திலேயே தன் தனித்தன்மையை நிரூபித்தார் எம்.ஜி.ஆர். அதற்கான தைரியமும் அவருக்கு இருந்தது. ராஜகுமாரி 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டது. மருதநாட்டு இளவரசி ராஜகுமாரிக்கு பின் தொடர்ந்து ஐந்து படங்களில் கதாநாயக அந்தஸ்து இல்லாமல் நடித்த எம்.ஜி.ஆருக்கு இதில் மீண்டும் கதாநாயகன் வேடம்.............. Thanks.........
ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர்
எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 2
இதில் அவருக்கு ஜோடி வி.என்.ஜானகி. வாழ்க்கையிலும் இவர்கள் ஜோடி சேரக் காரணமாக அமைந்த படம் இது. படத்தின் வசனகர்த்தா கலைஞர் மு.கருணாநிதி. அவருக்கு அந்த வாய்ப்பை பெற்று தந்தவரே எம்.ஜி.ஆர்தான். படத்தின் பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு (கதாநாயகி உட்பட) யார் நடிப்பது என்ற முடிவை ஏற்படுத்தியவரும் எம்.ஜி.ஆரே. படத்தின் எல்லாத் துறைகளிலும் தலையை நுழைத்து கொடுக்கப்பட்ட சம்பளத்தை விட கூடுதலாக உழைப்பை அவர் தர ஆரம்பித்தது இதிலிருந்தேதான். மந்திரிகுமாரி மாடர்ன் தியேட்டர்ஸ் கோட்டையில் எம்.ஜி.ஆருக்கு இது முதல் படம். அதிபர் டி.ஆர்.சுந்தரத்தை மீறி அங்கு யாரும் எதுவும் செய்துவிட முடியாது.
ஆனாலும் படத்தின் இயக்குநர் எல்லீஸ் ஆர்.டங்கனோடு எம்.ஜி.ஆர் படப்பிடிப்பு சமயங்களில் பலமுறை வாதங்கள் நிகழ்த்தி மோதியுமிருக்கிறார். இந்த படத்தை தெடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் சர்வாதிகாரி, அலிபாபாவும் 40 திருடர்களும் ஆகிய படங்களில் எம்.ஜி.அர் நடித்தார். அனைத்தும் வெற்றி படங்களாக அமைந்தன. மர்மயோகி தமிழில் முதல் ஏ படம் இது. திகில் காட்சிகள் இருக்கின்றன என்பதற்காக ஏ சர்டிபிகேட் பெற்றது. ராபின் ஹ¨ட் போன்ற கதாநாயகன் வேடம். போட்டோகாலன் குறி வைக்க மாட்டான். குறி வைத்தால் தவற மாட்டான் என்று எம்.ஜி.ஆர் பேசும் வசனம் படத்தில் அடிக்கடி இடம் பெற்றது.
இன்றைக்கும் அந்த வசனம் பிரபலம். போஸ்டர்களில் தவறாமல் இடம்பெறும் வசனம் இது. எம்.ஜி.ஆரின் ஹீரோ இமேஜை உயர்த்திக் காட்டும் வசனங்கள் பரவலாக இடம் பெற ஆரம்பித்தது இந்தப் படத்திலிருந்ததுதான். என் தங்கை அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. மீனா (படத்தில் ஈ.வி.சரோஜா நடித்த வேடம்) என்ற தங்கையின் பெயரை மறக்க முடியாமல் இன்னொரு படப்பிடிப்பில் கூட, வசனம் பேசும்போது அதே பெயரை திரும்பத் திரும்பச் சொல்லி- அதனால் அன்றைய படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. சண்டைக்காட்சிகள் இல்லாமலேயே வெற்றி பெற்ற படம் இது. எம்.ஜி.ஆரை மிகவும் கவர்ந்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று.
எம்.ஜி.ஆராலும் உணர்ச்சிகரமாக நடிக்க முடியுமென்பதை நிரூபித்த படம் என் தங்கை. நாம் மேகலா பிக்சர்ஸ் உருவானது இதிலிருந்துதான். இது எம்.ஜி.ஆர்., பி.எஸ்.வீரப்பா, கலைஞர் கருணாநிதி மூவரும் பங்குதாரர்களாக இருந்து பிரிந்த படம். படம் வெற்றி பெறாவிட்டாலும், பார்வையற்றவராக எம்.ஜி.ஆர் நடிக்கும் படத்தின் பிற்பகுதி பார்ப்பவர்களை கண்கலங்க செய்யும். ஒரே ஷாட்டில் நீளமான வசனங்களெல்லாம் இதில் எம்.ஜி.ஆர் பேசி நடித்திருக்கிறார். மலைக்கள்ளன் குடியரசுத் தலைவர் விருது பெற்ற முதல் தமிழ்படம். மலைக்கள்ளன் தமிழ் தவிர ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர்.பானுமதி நடித்த வேடத்தில் தெலுங்கில் என்.டி.ராமராவ்-பானுமதி நடித்தார்கள். படத்தின் பெயர் அக்கி விமுடு. மலையாளத்தில் தங்கர வீரன் (சத்யன்-ராகினி ஜோடி), கன்னடத்தில் பெட்டத கல்லா (கல்யாணகுமார் மைனாவதி ஜோடி), இந்தியில் ஆசாத் (திலீப்குமார்-மீனாகுமாரி ஜோடி) சிங்கள மொழியில் சூரசேனா (காந்தி குணதுங்கா- இலங்கை பேரழகி ஒருவரும் நடித்தார்கள்) என்று ஆறு மொழிகளில் வெளிவந்தது. மலைக்கள்ளன் படத்தில் எம்.ஜி.ஆர். வயோதிக முஸ்லீமாக வேடமிட்டு பானுமதியை குழந்தே….. என்று அழைத்தபடி ஒரு மாதிரியான ஸ்டைலில் நடிப்பார். அந்த ஸ்டைல் மற்ற மொழி படங்களின் ஹீரோக்களுக்கு வரவில்லையாம்.
எம்.ஜி.ஆர். ஹ¨க்கா பிடித்து புகைவிட்டு நடித்தது இந்தப் படத்தில் மட்டுமே. கூண்டுக்கிளி எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இணைந்து நடித்தார்கள். இதற்கு பின்பும் இருவரும் இணைந்து நடிக்க பலரும் முயற்சித்து அவை கைகூடி வந்தபோதும் ரசிகர்களை நினைத்து கைவிட்டார்கள். அலிபாபாவும் 40 திருடர்களும் தமிழில் முதல் வண்ணப்படம் இது. எம்.ஜி.ஆரின் அழகை வண்ணத்தில் காண்பித்தபோது ரசிகர்கள் மகிழ்ந்து போனார்கள். மதுரை வீரன் எம்.ஜி.ஆர் ஆழமாக வேரூன்ற காரணமாக அமைந்த மதுரை வீரன் ஒரே சமயம் 30-க்கு மேற்பட்ட திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி சரித்திரம் படைத்தது. தன் சிறு வயதில் தங்கள் சொந்த ஊரான பரமக்குடியில் ஒரே தியேட்டரில் 100 தடவைக்கு மேல் இந்த படத்தை தினமும் தொடர்ந்து பார்த்ததாக நடிகர் கமலஹாசனே கூறியிருக்கிறார்.
தாய்க்குபின் தாரம் 80-க்கு மேற்பட்ட படங்களை தயாரித்த தேவர் பிலிம்ஸ§க்கு பிள்ளையார் சுழி போட்டு தந்த வெற்றிப் படம் இது. போட்டுத் தந்தவர் எம்.ஜி.ஆர். தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் 16 படங்களில் எம்.ஜி.ஆர் நடித்து சாதனை போட்டோந்திருக்கிறார். அத்தனை படங்களுக்கும் இயக்குநர் எம்.ஏ.திருமுகம் என்பது மற்றொரு சாதனை. சக்ரவர்த்தி திருமகன் ஆட வாங்க அண்ணாத்தே என்ற பாடலில் எம்.ஜி.ஆர், ஈ.வி. சரோஜா, ஜி.சகுந்தலாவுடன் போட்டி நடனம் ஆடுவதும், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுடன் பாடல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதும்- எம்.ஜி.ஆரின் இமேஜை உயர்த்திக் காட்ட உதவின........... Thanks...
ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர்
எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 4
இந்தப் படத்தில் நடித்தது பற்றி முதல்வர் ஜெயலலிதா, 25 வருடங்களக்கு முன் எழுதிய கட்டுரை ஒன்றில் இப்படி குறிப்பிட்டிருக்கிறார். முகராசி படம் போல இதுவரை அவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு தமிழ்படம், அதுவும் எம்.ஜி.ஆர் நடித்த படம் வேறெதுவும் தயாரானதாக எனக்குத் தெரியவில்லை. முகராசிக்காக இரவும் பகலும் விடாமல் படப்பிடிப்பு. சிறிது இடைவெளி மீண்டும் இரவு தொடரும். விடியற்காலை நாலு மணிவரை கூட நடித்திருக்கிறோம். இரவு வீடு திரும்பினால் ஒரு மணிநேரம்தான் ஓய்வு இருக்கும். உடனே காலையில் மேக்கப் போட்டுக் கொண்டு சீக்கிரமே ஸ்டுடியோவுக்கு செல்வேன்.
எனக்கு முன்பே எம்.ஜி.ஆரும் வந்திருப்பார். எனக்காவது படப்பிடிப்பு ஒன்றுதான். ஆனால் எம்.ஜி.ஆர் தீவிரமான அரசியல் தொடர்புடன் படப்பிடிப்பிலும் இரவு, பகல் பாராமல் சோர்வோ, தளர்ச்சியோ காட்டாமல் நடித்ததை ஓர் இமாலய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். படப்பிடிப்பு முடிந்து அடுத்த நாள் டிப்பிங், ரீ-ரிக்கார்டிங் ஆக பன்னிரெண்டே நாட்கள்தான். ஒரு பிரம்மாண்டமான நட்சத்திர படம் (இதில் ஜெமினி கணேசன் எம்.ஜி.ஆரின் அண்ணனாக நடித்தார்) வெற்றிப் படம். பெற்றால்தான் பிள்ளையா தி கிட் என்ற சார்லி சாப்ளின் நடித்த ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்ட படமான இதில் எம்.ஜி.ஆரின் நடை உடை பாவனை எல்லாமே வழக்கத்திற்கு மாறாக அமைந்திருந்தன. எம்.ஜி.ஆரை சிறந்த நடிகராக அடையாளம் காட்டிய இந்தப் படத்தில் அவர் ஒரேயரு சண்டைக் காட்சியில் மட்டுமே நடித்திருந்தார்.
அதையும் மீறி படத்தின் கதையம்சம் வலுவாக இருந்தது. எம்.ஜி.ஆர் படங்களுக்குரிய வழக்கமான அம்சங்கள் இதில் இல்லாவிட்டாலும் படம் வெற்றி பெற்றது. இந்த படத்திற்காகத்தான் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்ட சம்பவம் நிகழ்ந்தது. காவல்காரன் எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்படுவதற்கு முன் ஒரு பகுதி வளர்ந்திருந்த இந்த படம், அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் குணமாகி மீண்டும் நடிக்க ஆரம்பித்தபோது பழைய குரல் வளமில்லை. ஆனாலும் அவர் சத்யா ஸ்டுடியோவின் ஒரு தளத்தில் மைக் சாதனங்களைக் கொண்டு வந்து தினமும் உரக்கப் பேசி பயிற்சி எடுத்துக் கொண்டதால் ஓரளவு பேச முடிந்தது.
இந்த படத்தின் 100-வது நாள் வெற்றி விழாவில் அன்றைய முதல்வர் அண்ணா கலந்து கொண்டு போட்டோசுகள் வழங்கிப் பாராட்டி பேசினார். ரகசிய போலீஸ் 115 எம்.ஜி.ஆர். ஜேம்ஸ்பாண்டு வேடத்தில் நடித்ததோடு, அவரது நகைச்சுவை நடிப்பும், சுறுசுறுப்பான சண்டைக்காட்சிகளும் படத்தின் வெற்றிக்கு துணை போட்டோந்தது. விதவிதமான உடையலங்காரத்தில் எம்.ஜி.ஆர் அழகுபட வந்தார்.
குடியிருந்த கோயில் எம்.ஜி.ஆரின் இரட்டை வேட நடிப்பு சிறப்புக்கு இந்த படமும் ஒரு உதாரணம். இரட்டை வேடமென்றால் அது எம்.ஜி.ஆர் தான் என்ற கருத்தை குடியிருந்த கோயில் வலுவாக்கியது. ஆடலுடன் பாடலைக் கேட்டு என்ற பாடலில் எம்.ஜி.ஆர் பஞ்சாபியைப் போல் பாங்ரா நடனம் ஆடியிருப்பார், அதுவும் எல்.விஜயலஷ்மியுடன். இதற்குபின் வேறு சில முன்னணி நடிகர்களும் இதேபோல் ஆடிப் பார்த்தார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் அளவுக்கு முடியவில்லை.
ஒளி விளக்கு எஸ்.எஸ்.வாசனின் முதல் படம் சதிலீலாவதி எம்.ஜி.ஆருக்கும் முதல் படம். எம்.ஜி.ஆரின் 100-வது படமான ஒளி விளக்கு படத்தினை தயாரித்தவரும் எஸ்.எஸ்.வாசனே. வாசனின் ஜெமினி நிறுவனத்திற்கு இது முதல் தமிழ் வண்ணப்படமாகும். பூல் அவுர் பத்தர் என்ற இந்திப் படத்தினை தழுவி எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது. இதில் இடம் பெற்ற, ஆண்டவனே, உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன் என்ற பாடல் படத்தில் கதையின்படி உயிருக்காகப் போராடும் எம்.ஜி.ஆர். குணமடைய வேண்டி சௌகார் ஜானகி பாடுவது போல் அமைந்திருந்தது.
1984-ல் எம்.ஜி.ஆர். சுகவீனமற்று அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது, அவர் குணமடைய வேண்டி நடத்தப்பட்ட பிரார்த்தனைகளில் ஒளி விளக்கு படத்தில் இடம் பெற்ற இதே பாடல் தமிழகத்தின் எல்லா திரையரங்குகளிலும் காட்டப்பட்டது. எம்.ஜி.ஆர் படமே திரையிடப்படாத சிவாஜிக்கு சொந்தமான சாந்தி தியேட்டரிலும் இந்த பாடல் காட்டப்பட்டது. அடிமைப்பெண் ஜெயலலிதாவை முதன்முதலாக எம்.ஜி.ஆர் இதில் சொந்த குரலில் பாட வைத்தார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் இதற்குமுன் வேறு படங்களில் பாடியிருந்தாலும், அவர் புகழ் பெற்றது இந்த படத்திலிருந்ததுதான். இந்தப் படத்திற்காக எம்.ஜி.ஆர். ஜெய்ப்பூர் சென்று திரும்பியபோதுதான் புஷ் குல்லாவோடு வந்தார். அதிலிருந்ததுதான் குல்லா அணியும் வழக்கம் ஏற்பட்டது. நாடோடி மன்னன் போல் அடிமைப் பெண்ணையும் எம்.ஜி.ஆர் சிங்கத்தோடு மோதும் எடிட் செய்யப்படாத மொத்தக் காட்சிகளையும் பார்த்த காலஞ்சென்ற இந்திப்பட இயக்குநர், நடிகர் ராஜ்கபூர் பிரமித்துப் போய், தொழில்நுட்பத்தில் உங்கள் அறிவுக்கு முன் நானெல்லாம் சாதாரணம் என்று பாராட்டி கடிதம் எழுதியிருந்தார்.......... Thanks...