https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...44&oe=5E6C0EFFhttps://scontent.fyyz1-2.fna.fbcdn.n...dd&oe=5EAEF8DD
Printable View
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...ab&oe=5E6CA88B
நன்றி Vijaya Rai Kumar
நம்மை போல் ஒருவர் !
ஆகா! நீங்களாவது இந்த உண்மையை புரிந்து வைத்துள்ளீர்களே. உங்கள் உரை உண்மை.உங்களுக்கு என் நன்றிகள்!
சொன்னவர் கேட்டார்.இதற்கு நீங்கள் ஏன் எனக்கு நன்றி கூற வேண்டும்?
நான் ஒரு நடிகர்திலகத்தின் ரசிகன்.அவரின் கலை தாண்டி பெரும் குணம் கொண்ட மனிதர் என்பதாலும் நான் போற்றிக் கொண்டிருப்பவன்.என்னைப் போல் தமிழ்நாட்டில் லட்சம் பேரின் கருத்தும் இதுதான்.இப்படி இருப்பவனிடம் உங்கள் சொல் எனக்கு இனிக்கிறது. அதனால் தான் நன்றி என்றேன்....
அப்படி என்ன சொன்னார் அவர்?
நடிகர்திலகத்தின் படங்களை விரும்பிப் பார்ப்பவராம்.அது தன் தந்தையின் ரசனையிலிருந்து தன்னை பிடித்துக் கொண்டதாம்.நடிகர்திலகத்தின் நடிப்பை, சிறு அசைவுகளை தந்தையும் மகனும் சேர்ந்து ரசித்து பார்ப்பார்களாம்.அவரது தந்தைக்கு காமராஜரின் மேல் பற்று அதிகமாம்.மேலும் ,நடிகர்திலகம் காமராஜரின் மேல் வைத்த பற்றை சொல்லி சொல்லி வியப்பாராம்.
புதிய வாடிக்கையாளராக ,இன்று கடைக்கு வந்தவர் ஏதேச்சையாக பொருளாதார நிகழ்வுகளை பேசப் போக, அது தொடர்பாக பல பிரச்சினைகளின் அரட்டைகளுக்கு பின் நடிகர்திலகம் தொடர்பான விஷயத்தில் வந்து நின்றது.அப்போதுதான் இந்த உரையாடல்.
பேச்சின் ஆரம்பத்தில் ,நான் நடிகர்திலகத்தின் ரசிகன் என்பதை
முதலில் சொல்லாமல் அவரிடம் உரையாற்றத் தொடங்கினேன்.
அவரின் உரையாடலில் இருந்து: பழையபடங்கள் என்றால் நடிகர்திலகத்தின் படங்களைதான் பெரும்பாலோர் வீடுகளில் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.நடிகர்திலகத்தை பற்றி மற்றவர்களோடு உரையாற்றும்போது ஒரு ஆர்வத்துடனும், ரசிப்புடனும் கூர்ந்து கேட்கிறார்கள்.சினிமா என்ற சொல்லின் ஏளனத்தை சிவாஜியின் நடிப்பை பற்றி பேசும்போது ஏளனமில்லாமல் ஒரு கௌரவம் கிடைப்பது நன்கு புலனாகிறது என்றார்.
அரசியல் பற்றி இடையில் கேட்டேன்.
காமராஜர் நடிகர்திலகத்தை அரசியலில் பகிரங்கப்படுத்தியிருந்தால் தமிழகத்தின் சாபக்கேடு நம்மை துரத்தி வந்திருக்காது.
அன்றெல்லாம் நடிகர்திலகத்தின் ரசிகர் படை இதையெல்லாம் சாதித்திருக்கும். என்ன செய்ய? நம் தலை விதி! என்று
பொருமித் தள்ளினார்.
நடிகர்திலகம் தீவிர அரசியலில் இறங்கி இருப்பாரேயானால் அது சுலபமாக முடிந்திருக்கும்.இது அன்று இருந்த நிலை.
இப்படி இருந்த நடிகர்திலகத்திற்கு அந்த தேர்தல் முடிவு அளித்த ரிசல்ட் வேறு! உண்மையாக இது நடந்திருக்க முடியுமா என்பதை ஏற்றுக்கொள்ளாத நம்ப முடியாத தால் தான் இன்று வரை இந்த புலம்பல்கள்!
வேறு பெரிய தலைவர்களின் தோல்விகள் கூட இந்தளவுக்கு பிரஸ்தாபிக்கப் பட்டதில்லை? நடிகர்திலகம் தோற்றார் என்பதை விட, எப்படி தோற்கலாம்? என்பதுதான் எல்லோருக்கும் கேள்வியாக உள்ளது.
அவ்வளவு ஏன் விடாமல் ஜெயித்த ஒருவர் அவர் தோற்றிருந்தால் கூட அது மக்களுக்கும் மீடியாக்களும் பெரிதாக இருந்திருக்காது .ஏனெனில் அந்தளவு ஊழல்களும் சுரண்டல்களும் செய்திருக்கிறார்.
மக்களெல்லாம் நடிகர்திலகத்திடம் பெரும் மதிப்பு வைத்துள்ளனர்.இந்த காளான் அரசியல்வாதிகள் தான் தங்களின் நேர்மையின்யை மறைப்பதற்காக இதை அடிக்கடி கையில் எடுத்துக் கொள்கின்றனர்.
இவையெல்லாம் தெரிந்தோ ,தெரியாமல் இந்த மீடியாகள் தான் பரபரப்புக்காகவும் பப்ளிசிட்டிக்காகவும் தேவையில்லாமல் ஒரே புலம்பலையே ஊதித் தள்ளுகின்றன.
நீங்கள் எல்லாம் நினைப்பது மாதிரியில்லை நடிகர்திலகத்திற்கு அன்றிருந்த பாசத்தை காட்டிலும் இன்று பக்தியாக பெருமளவு பெருகித்தான் உள்ளது, என்று நீள் பிரசங்கம் செய்து முடித்தார்.
இப்போது தான் நான் அவருக்கு நன்றி சொன்னேன்.
நன்றி Senthilvel Sivaraj (Sivaji Group)
படித்ததில் - ரசித்தது
***************************************
சிவாஜிகணேசன், என்றாலே, ஏன்? சில பேருக்கு மிளகாய் தின்றதை போல் எரிகிறார்கள்.!
அவர் ஒரு நல்ல தமிழ் மனிதர் என்பதாலா!, இல்லை என்றால் ஒரு நல்ல நடிகர் என்பதாலா!, கிள்ளி கொடுத்தவர் எல்லாம் வள்ளல் ஆகி விட்டார்கள்.!
... யாருக்கும் தெரியாமல் அள்ளிக் கொடுத்து வாழ்ந்ததற்காகவா!, இல்லை, காமராஜர் பக்தனாக கடைசி வரை இருந்ததற்காகவா.!
பெரியார், சிவாஜி என்ற பட்டம் தந்ததற்காகவா, இல்லை, யாருக்காவது துரோகம் செய்தரா!, யார் குடியாவது கெடுத்தாரா!, தனக்கு துரோகம் செய்தவர்களை மன்னித்து தட்டி கொடுத் தாரே அதற்காகவா.!
இவ்வளவு ஆண்டுகள் கழித்து இவரின் படம் ரிலீஸ் ஆனாலும் வெற்றி நடைப்போடுகிறதே, அதற்காகவா!, எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் எங்கள் மனதில் தெய்வமாய் வாழ்கிறாரே அதற்காகவா?.
நன்றி Jeyavelu Kandaswami
அமெரிக்காவில் இருந்து, மார்த்தா கிரஹாமின், 'மாடர்ன் அமெரிக்கா' நடனக்குழு சென்னைக்கு வந்து, நிகழ்ச்சிகள் நடத்தினர். அந்த நிகழ்ச்சியை உன்னிப்பாக கவனித்த சிவாஜி, 'எங்கே நிம்மதி எங்கே நிம்மதி...' பாடல் காட்சியில், மாடர்ன் அமெரிக்கா நடனத்தை, நினைவில் கொண்டு, சில புதுமையான, நளினமான மூவ்மென்ட்ஸ் களை செய்திருப்பார். அந்த பாடல் காட்சிக்கு, தியேட்டர்களில் பலத்த கரகோஷம் எழும்.
இந்தப் பாட்டு எழுதும்போது, எம்.எஸ்.விஸ்வநாதனும், கண்ணதாசனும் சேர்ந்து, உட்கார்ந்து ஆலோசித்தனர். ச...ரியான பல்லவி கிடைக்க வில்லை. அருகில் இருந்த சிவாஜி தான், 'எங்கே நிம்மதி எங்கே நிம்மதி' என்ற பல்லவியை, பாடலின் முதல் வரியாக எடுத்துக் கொடுத்தார்.
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், கண்ணதாசனுக் கும் பொருத்தமான வரிகள் என்று படவே, இதுவே, பாடலின் பல்லவியாக ஆயிற்று; தமிழ் சினிமாவிற்கு புதுமையான பாடல் காட்சி கிடைத்தது.
இன்றைக்கும், இப்படம் இளைஞர்களை கவரக்கூடிய படம்.
திரு.Y.G.மகேந்திராவின்
நான் சுவாசிக்கும் சிவாஜி....
நன்றி Ganes Pandian
ஐந்தாம் சந்திப்பு.. சிவாஜியை பேசினால்.. அரசியலையும் பேசித்தான் ஆகவேண்டும்.. அரசியல் பேசாமல் சிவாஜியை பேச முடியாதா? இது இன்னொருவர் கருத்து.. சிவாஜி பங்குகொண்ட அரசியல் எப்படிப்பட்டது.. இன்றைய அரசியலோடு அதை தொடர்புபடுத்தி பார்க்க முடியாது.. கூடவும் கூடாது.. அந்த அரசியல்வாதி யாரையாவது நோகடித்து இருக்கிறாரா? சூழ்ச்சிகள் மூலம் தன்னை தக்க வைத்துக் கொண்டாரா? எதுவுமில்லை.. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்குமான உழைப்பை மூலதனமாக்கிய அரசியல்வாதி.. அந்த பக்குவம் அவருக்கு மட்டுமே வாய்த்தது.. ச...ினிமா படப்பிடிப்பா.. அரசியல் மேடையா? பொது நிகழ்ச்சியா.. குறித்த நேரத்தில் வந்து நின்றவர்.. சொன்ன சொல் தவறாமை கொண்ட மனிதர் எப்படி அரசியல்வாதியாக இருக்க முடியும்.. இப்படி இந்த காலத்திற்கு ஒவ்வாத அத்தனை நல்ல விஷயங்களையும் கொண்டிருந்ததால் அவர் எப்படி அரசியல்வாதியாக இருக்க முடியும்.. அவர் ஒரு தொண்டரணி தலைவர் அவ்வளவுதான்.. அண்ணாவுக்காக தொண்டாற்றினார்.. காமராஜருக்காக பணியாற்றனார்.. அதன் பிறகு அவர் ஏற்றுக் கொண்ட தலைவர்களுக்கு இணங்க விஸ்வாசியாக தொண்டாற்றினார்.. அவரை நோகடித்தது துரோகமே.. கர்ணனை சூழ்ச்சிகள் வீழ்த்தியதுபோல.. தனக்கு கெடுதல் நினைப்பவர்களுக்கும் தன்னை புறக்கணித்தவர்களுக்கும் கூட நல்லது செய்த அரசியல்வாதி சிவாஜிதான்.. சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி நேர் எதிர் துருவங்கொண்ட திரு.எம்.ஜி.ஆரின் இழப்புகூட அவரை வருத்தியது.. அத்தனை மேன்மனிதர் சிவாஜி..
மேடையில் பேசவியலாத சிவாஜி அரசியலை விஷயங்களை நாங்கள் கலந்துரையாடலில் பகிர்ந்து கொண்டோம்.. தனக்கு போஸ்டர் ஒட்டும் இளைஞனை பாடசாலைக்கு துரத்திய மனிதன் அவர்.. பிறகு யார் கட்சிப்பணிக்கு வருவார்.. பிறகு எப்படி அரசியல்வாதியாக அவர் இருந்திருக்க முடியும்.. இருந்தார்.. எப்படி.. மக்களை நம்பினார்.. திடமாக நம்பினார்.. நான் மக்கள் மனங்களை வென்றவன் என்ற நம்பிக்கையோடு இருந்தார்.. மனிதன் மாறிவிட்டான்.. அரசியல் என்ற பிணத்தின் மீது ஏறி விட்டான்.. சிவாஜி என்கிற ஔிரும் வைரத்தை தவறவிட்டான்.. இன்று தேடிக் கொண்டு இருக்கிறான்.. சிவாஜி என்கிற வெள்ளை ரோஜா.. ஒருமுறைதான் மலர்ந்தது.. ஒரேயொரு முறைதான் மலர்ந்தது.. இது அரசியல் பதிவுமல்ல நான் இன்றைய அரசியல்வாதியுமல்ல.. நான் சிவாஜிகாலத்து பழைய அரசியல்வாதி...
நன்றி Jahir Hussain
சிவாஜி குறித்து எம்.என்.ராஜம் கூறியதாவது.
சிவாஜியின் முதல் படமான பராசக்தி, திரைப்படமாக எடுப்பதற்கு முன், நாடகமாக பலமுறை மேடையில் நடிக்கப்பட்டது. பராசக்தி திரைப்படமாக வெளி வந்து, வெற்றி பெற்ற பின், 1953ல், சேலத்தில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில், மீண்டும் நாடகமாக நடித்தோம். திரைப்படத்தில் ஸ்ரீரஞ்சனி நடித்த, சகோதரி பாத்திரத்தில் நானும், பண்டரிபாய் நடித்த பாத்திரத்தில், பிரபல பாடகி ரத்னமாலாவும் நடித்தோம்.
அன்று ஏகப்பட்ட கூட்டம். சுமார் ஆறாயிரம் பேர், அந்த நாடகத்தை கண்டு ரசித்தனர். ...
அதில் நீதிமன்றம் காட்சி தான், மிக முக்கியமானதும், சுவாரசியமானதுமான காட்சி. மேடையில், சிவாஜி, வசனம் பேச ஆரம்பித்தவுடன், நாடகம் பார்க்க வந்தவர்களில் பலர், ஏற்ற இறக்கத்தோடு, அவர் கூடவே வசனத்தை பேச ஆரம்பித்தனர். எங்களுக்கெல்லாம் மிகுந்த ஆச்சரியம். இது வரை, தமிழ் மேடை நாடக வரலாற்றிலேயே நடந்திராத நிகழ்ச்சி இது. சிறிது நேரம் பொறுமை காத்த சிவாஜி, பின், இரு கை கூப்பியபடி, ரசிகர்களிடம், 'இந்த நாடகத்தின் மீது உங்களுக்கு இருக்கும் பற்று, எங்களுக்கு நன்றாக புரிகிறது. நீங்கள் அமைதியாக இருந்தால் தான், தொடர்ந்து நாடகத்தை நடத்த முடியும். தயவு செய்து, என்னுடன் சேர்ந்து வசனம் பேசாமல், அமைதியாக இருங்கள்...' என்று கேட்டுக் கொண்டார். அதன்பின், சிறிது நேரம் அமைதியாக இருந்த ரசிகர்கள், மீண்டும் சிவாஜி பேச ஆரம்பித்ததும், பழையபடி கூடவே பேச ஆரம்பித்தனர். இப்படியே, பல முறை நடந்தது. அதனால், அன்று அந்த ஒரு சீனை முடிக்கவே, 45 நிமிடங்கள் ஆனது.
அடுத்த நாளும், இக்கண்காட்சியில் இந்நாடகத்தை நடத்தினர்.
முன்னெச்சரிக்கையாக சேலம் நகரின் பல பகுதிகளில், மாட்டு வண்டியில், ஆட்கள் தண்டோரா போட்டு, மக்களை கூட்டி, 'இன்றைக்கு மாலை, நாடகத்தில் சிவாஜியோடு, சேர்ந்து வசனம் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்...' என்று அறிவிப்பு செய்தனர்.
அன்றும், ரசிகர்களால் அரங்கு நிறைந்து காணப்பட்டது. பராசக்தி அவருக்கு முதல் படம். முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய விசிறி படை, அவருக்கு உருவாகியிருப்பது மாபெரும் சாதனை என்று தான் கூற வேண்டும்.
அந்த நாடகத்தில், நடந்த மற்றொரு சுவையான நிகழ்ச்சி... சிவாஜிக்கும் ரத்னமாலாவுக்கும் காதல் காட்சி, 'புது பெண்ணின் மனதை தொட்டுப் போறவரே...' என்ற பாடலில், 'அன்பு கயிரிடுவாய் அறுக்க யாராலும் ஆகாதயா...' என்ற வரிகளின் போது, எதிர்பாராத வகையில், ரத்னமாலா அணிந்திருந்த பூ மாலை அறுந்து விட்டது. ஒரு வினாடி கூட தாமதிக்காமல், தன் கைகளை மாலை மாதிரி, ரத்னமாலா கழுத்தில் போட்டு, தொடர்ந்து அந்த வரிகளை, தன் சொந்த குரலில் பாடி, சமாளித்தார் சிவாஜி.
நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும், சிவாஜியின் சமயோஜித புத்தியை பாராட்டி, கைதட்டினர்.
நன்றி Ganesh Pandian
21-12-19 சனிக்கிழமை டிவிச் சேனல்களில் நடிகர் திலகத்தின் 8 திரைப்படங்கள் ஒளி பரப்பாகிறது,
பின் வரும் நான்கு திரைப்படங்களும் 1:30 மணிக்கு மட்டுமே நான்கு ...சேனல்களில் ஒளி பரப்பாகிறது,
தில்லானா மோகனாம்பாள்- கே டிவி ( 1:00pm)
கருடா சௌக்கியமா. - ராஜ் டிஜிட்டல்
நான் வாழவைப்பேன் - ராஜ் டிவி
சுமதி என் சுந்தரி - வசந்த் டிவி
மேலும் தியாகம் - புது யுகம் 7 pm
பக்த துக்காராம் - சன் லைப் - 11 am
அண்ணன் ஒரு கோயில் - ஜெயா மூவி 1:00 am
ஜல்லிக்கட்டு - பாலிமர் - 4 pm
ஆகியன ஒளி பரப்பாகிறது,
நன்றி சேகர்
22/12/1973 ல் வெளியான செவாலியே சிவாஜி கணேசனின் ராஜபார்ட் ரங்கதுரை
22/12/2019 இன்று 46 ஆண்டுகள் நிறைவு
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...39&oe=5E6DFF7F
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...a1&oe=5E7849D6https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...4f&oe=5E6CB6DE
நன்றி Vcg THiruppathi H O S
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...30&oe=5E702908
நன்றி Gururov Vmurugesan
சிகரம் தொட்ட சிம்மக்குரலோனின் காவியங்கள்..இன்றைய (23.12.19 திங்கள்) தொலைக்காட்சி அலைவரிசைகளில்..
நண்பகல் 1மணிக்கு கே.டிவியில்...#பராசக்தி,
நண்பர்கல் 1.30மணிக்கு வசந்த் தொலைக்காட்சியில்...#எதிரொலி,
... நண்பகல் 1.30மணிக்கு ராஜ் தொலைக்காட்சியில்...#விடுதலை,
மாலை 4 மணிக்கு ஜெ.மூவி தொலைக்காட்சியில்....
#அண்ணன்_ஒரு_கோயில்„
இரவு 7.30 மணிக்கு வசந்த் தொலைக்காட்சியில்....#பந்தம்
அன்பு இதயங்களே ..அன்னை இல்ல நாயகனின் அனைத்து காவியங்களையும் காண்போம்.
அகிலம் உள்ளவரை அணணாரின் புகழ் பாடுவோம் !!
நன்றி Sheik Ali