சிவாஜியை இப்படிக் கொண்டாடணும் -வழக்கறிஞர் சுமதி | SRI MEDIA TAMIL | #sivaji | #advocatr_sumathi |
https://youtu.be/orQHUxMnFZA?si=zWAUF28cIOhmPqfT
Thanks
SRI MEDIA TAMIL
Printable View
சிவாஜியை இப்படிக் கொண்டாடணும் -வழக்கறிஞர் சுமதி | SRI MEDIA TAMIL | #sivaji | #advocatr_sumathi |
https://youtu.be/orQHUxMnFZA?si=zWAUF28cIOhmPqfT
Thanks
SRI MEDIA TAMIL
சிவாஜியின் நடிப்பைப் புரிந்து கொள்ளவே வளர வேண்டியிருக்கிறது! | SRI MEDIA TAMIL | #sivaji | #sumathi
https://youtu.be/E5uGXu6ZIdM?si=KzF4LA8olx9guhHI
Thanks
SRI MEDIA TAMIL
அக்டோபர் 01 2024 .
கள்ளம் கபடம் இல்லாத, களங்கம் ஏதுமற்ற,
வெள்ளைமனம்கொண்ட வெள்ளைரோஜா வின்
96 வது பிறந்தநாள்.
சிவாஜி ஜெயந்தி 96.
வெள்ளைமனம் கொண்ட அனைத்த உள்ளங்களுக்கும்
சிவாஜி ஜெயந்தி தின வாழ்த்துக்கள்.
Attachment 6148
எதுக்குங்க பொம்பளை வேஷம் போடுற பசங்களையெல்லாம் ஹீரோவா புக் பண்ணுறீங்க!?..ஏ.வி.எம் செட்டியாரிடம் அந்த இயக்குநர் கேட்கும்போது தான் செட்டியார் யோசித்தார்.அவர் அப்படிச் சொன்னதில் ஒரு நியாயமிருக்கு.சினிமா என்பது ஒரு கலை மட்டுமல்ல.அது ஒரு தொழில்.அதை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கு.போட்ட பணத்திற்கு நஷ்டம் வந்தால் தயாரிப்பாளர் பாதிப்பார்.அதனால் பல குடும்பங்கள் பாதிக்கும் என்கிற எண்ணத்தில் தான் அந்த இயக்குநர் அப்படிப் பேசினார்.ஆனால் அந்த பொம்பளை வேஷம் போட்ட பையனை அவர் எளிதாக எடை போட்டுவிட்டார்.பிற்காலத்தில் அந்தப் பையனை அவர் இயக்கவும் செய்தார்.உள்ளத்தில் நெருப்பைச் சுமந்து இல்லத்தில் உடமைகள் இழந்து எல்லை எதுவென தெரியாத ஏக்கத்தில் திரிந்த அந்தக் கலைஞனுக்கு அந்த முதல் படம் தான் வாழ்வா சாவா பிரச்சனை என அந்த இயக்குநருக்கு அப்போது தெரியாது.வெறும் பொம்பளை வேஷம் போடுற பையன் தான் இந்த திரையுலகையே பிற்காலத்தில் புரட்டிப் போடப் போகிறார் என்றும் அப்போது அவருக்குத் தெரியாது.இன்னொரு இணை தயாரிப்பாளர் காட்டிய உறுதி அந்தப் பையனையே ஹீரோவாக்கியது.ஊரெங்கும் தீபாவளி கொண்டாடும் உற்சாகத்தில் வெளியான அந்தத் திரைப்படம் தான் பராசக்தி.அதன் ஹீரோவிற்கு இன்று பிறந்த நாள் கொண்டாடி மகிழ்கிறது நம் இசைக் குழு!..நடிகர் திலகத்தின் பெயரைச் சொன்னாலே தமிழ் கூறும் நல்லுலகம் ஏன் அதிருது?...
புறங்களில் தீ வைத்தால் அணைந்து விடும்.ஆனால் அகங்களில் வைத்த தீ ஆண்டுகள் கடந்தாலும் கொளுந்துவிட்டு எரியும்.சிவாஜி எனும் மகா நடிகன் அகத்தில் வைத்த நெருப்பு!..உழைத்துக் களைத்தவன் ஓய்வினை விரும்பி திளைக்க வரும்போது இனிக்க இனிக்க* விருந்து வைத்தவர் நமது நடிகர் திலகம்.கன மழை பெய்திட கார்முகில் கரைவது போல் .வெண் திரையில் திலகத்தின் முகம் கண்டாலோ அவரது ரசிகனின் கவலைகள் குறைந்தது.நம் அன்னை மொழியை அரியணையில் ஏற்றிய அந்த செம்மொழிப் பாவலனுக்கு இன்று பிறந்த நாள்.சிவாஜி எனும் மூன்றெழுத்து மந்திரத்தை இங்கே எவ்வளவோ பாடியாச்சு.இந்த எல்லையில்லா வானத்தை எத்தனையோ முறை அளந்தாச்சு!..இருந்தாலும் பேசுவதற்கு இன்னும் ஏராளமாக இருக்கிறது..எத்தனையோ கலைஞர் இங்கே தழைத்தனர்.மாண்புறவே பலரும் இங்கே நிலைத்தனர். அத்தனை பேரிலும் அதிசயப் பிறவி நடிகர் திலகம்.யாமறிந்த மொழிகளிலே இனிதாவது ஏதாவது இருக்கிறதா?..தமிழைத் தவிர!..யாமறிந்த நடிகர்களில் வியப்பிற்கு உரியவர் யாராவது இங்கு உண்டா?..திலகத்தைத் தவிர!..எல்லோரும் தான் நடிக்கிறார்கள்.ஆனால் இது தான் நடிப்பு என்கிற இலக்கணத்தை யாராவது வகுத்திருக்கிறார்களா!?..இனிய தமிழில் இப்படிப்பட்ட ஏற்ற இறக்கங்களை நமக்குக் காட்டியிருக்கிறார்களா?..
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வரும் கலை தான் நடிப்புக் கலை.நாடகம் கூத்து என பல வடிவங்களில் வந்தாலும் சினிமாத் தொழில் சமீபத்திய நூற்றாண்டு கலை.நாடகத்திலும் கூத்திலும் பார்க்க முடியாத நெருங்கிய அருகாமையை இதில் மட்டுமே பார்க்க முடியும்.தொழில் நுட்பத்தின் வளர்ச்சியில் திரைக் கலைஞனின் செவ்வரியோடிய கண்களைக் கூட மிக அருகிலேயே ஒரு ரசிகனால் தரிசிக்க முடியும்.கருப்பு வெள்ளை கலராகி இப்போது டிஜிட்டலில் வந்து நிற்கும் இன்றைய சினிமா வரை இங்கே கோலோச்சியவர் ஏராளம்.அவர்கள் அனைவரும் உச்சரிக்கும் ஒரே பெயர் நடிகர் திலகம்.காரணம் அவர் விளையாடிவிட்டுப் போன திரைப்படங்கள்!..அதில் அவர் கலக்கிவிட்டுப் போன காவியங்கள்.சிவாஜி என்றதும் முதலில் நம் நினைவிற்கு வருவது அந்த சிம்மக் குரல்.நவ ரசங்களை முகத்தில் காட்டலாம்.ஆனால் குரலிலும் காட்ட முடியும் என நிரூபித்தவர் இந்தக் கோமகன்.இரண்டாவது அவரது நினைவாற்றல்.பத்து இருபது பக்கமானாலும் எழுத்துக்கள் சிதையாமல் கருத்துக்களை கோர்வையாக நினைவில் நிறுத்தும் அற்புதம்.மூன்றாவது அவரது மொழி ஆளுமை!..வல்லினமும் மெல்லினமும் தடுமாறும் இந்தக் காலத்தில் இடையினத்தைக் கூட இம்மி பிஸகாமல் உச்சரிக்கும் நேர்த்தி.குரலும் நினைவும் இயற்கை தந்தது.மொழி ஆளுமை அவராக கற்றுக்கொண்டது.கல்வியறிவே இல்லாத ஒரு கலைஞன் தனது தாய் மொழியில் இவ்வளவு ஆளுமையைக் காட்ட முடியுமா?..ஒரு மொழியை எப்படிக் கையாள வேண்டும் என்கிற இலக்கணத்தை நாம் இவரிடம் படிக்கலாம்.எத்தனையோ உதாரணங்கள்.சேரன் செங்குட்டுவனின் ஓரங்க நாடகம்.உட்கார்ந்த இடத்கிலேயே எழுதித் தள்ளிய ஒரு எழுத்தாசான்.அதை உச்சரிப்பில் வானளாவ உயர்த்திய நடிப்பாசான்.சங்கத் தமிழுக்கு சான்றாக கொட்டிக் கிடக்கும் பல வசனங்கள்.எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் நின்று கொண்டு அவர் எடுத்து வீசிய வசனங்கள்.வட்டாரத் தமிழுக்கு வாகாக வந்த பல வசனங்கள் .இதழ்களின் மோதலில் மலர்ந்த இனிமையான பல கச்சேரிகள்.ஆதி சிவன் ஆடை தரித்து அவர் ஆடிய ருத்ர தாண்டவங்கள்.அவரது கோபக் கனலால் பொற்றாமரைக் குளத்தில் வீழ்ந்த நக்கீரன்கள்.அந்த வேய்குழல் வேந்தனின் குழலோசையில் மயங்கிக் கிறங்கிய கோகுலத்துக் கோதைகள்.அந்த கொங்கணப் பார்வையில் கிறங்கிக் கிடந்த கொக்குகள்!..எத்தனை!.. எத்தனை!..
நடிகர் திலகத்திற்கு மட்டும் இவ்வளவு திறமை எங்கிருந்து வந்தது!?..யோசித்துப் பார்த்தால் அவர் தொழில் மீது வைத்திருந்த பக்தி தான் முழு முதற் காரணம்.பராசக்தி நாயகனில் தொடங்கிய தொழில் பக்தி.பலரும் காதுபடப் பேசிய ஏளனப் பேச்சுக்கள் அவரது நடிப்பிற்கு உரமானது.கொடுத்த பாத்திரத்தை எப்படியெல்லாம் மெருகேற்றலாம் என உள்ளுக்குள்ளேயே போட்டு ஓட்டும் டெடிகேஷன்.தளம் வேறாக இருக்கலாம்.நடிப்பு தான் எனது தொழில்.புகழின் உச்சியில் நின்று கொண்டு சிவாஜி ஒரு அமெச்சூர் நடிகனைப் போல் சபாவில் நடித்துக்கொண்டிருப்பார்.அவரது ஒவ்வொரு மணித் துளியும் பணமாகும் நேரத்தில் அதை நாடகத்தில் கொண்டு போய் விரயமாக்கிக்கொண்டிருப்பார்.பட முதலாளிக்கு அது விரயம்.நடிகர் திலகத்திற்கு அது தான் மூலதனம்.அவருக்காக பல கார்கள் காத்துக் கிடக்கும்.ஆனால் அவரோ திரைச் சீலை விலகாதா என ஏங்கிக்கொண்டிருப்பார்.எப்போதோ கிடைக்கப் போகும் அப்ளாஸை விட அப்போதே கிடைக்கும் அப்ளாஸூக்காக ஆர்வமாக இருப்பார்.தொழில் மீது கொண்ட பக்தி.எமக்குத் தொழில் நடிப்பு.கௌரவத்தில் பாரிஸ்டர் ரஜினிகாந்த் அறிமுகமாகும் கட்டம்.ஒரு கையில் பியர் மக்கோடு மறு கையில் டெலிஃபோன்.அந்தப் பக்கத்து ஆசாமிக்காக இந்தப் பக்கத்தில் சீறும் சிங்கமாக சிவாஜி!.தொழில்ல மோதினா நான் தான் ஜெயிப்பேன்.இது ஆணவமோ அகம்பாவமோ இல்லை.தொழில் மேல நான் வெச்சிருக்கிற பக்தி!..அசைக்க முடியாத தன்னம்பிக்கை!..புரியறதா?..யாருக்கோ விடும் எச்சரிக்கை!..காஃபியோடு கண்ணன்.வேண்டாம்!..என பைப்போடு ஒரு போராட்டம்.இருங்கோ!..நான் நெருப்பு வெக்கிறேன்.பைப்புக்கா?.. எனக்கா?..ரெண்டுக்கும் நான் தானே பெரிப்பா!..ஒரு சின்ன காட்சி தான்.ஆனால் சிவாஜி எனும் மகா கலைஞன் அந்தக் காட்சியை கொண்டு போன விதம் நமக்கெல்லாம் ஆச்சர்யமா இருக்கும்.
உயர்ந்த மனிதனின் ஒரு பகுதி ஊட்டியில் சூட்டிங்.கருப்பு பேண்ட் வெளிர் மஞ்சளில் நடிகர் திலகம் ஒரு காதல் காட்சிக்கு ரெடியாக அமர்ந்திருக்கிறார்.வெதர் சில்லுன்னு இருக்கு.சரவணன் வருகிறார்.அருகே சேரைப் போட்டு அமர்கிறார்.ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க!.?.உடம்புக்கு ஏதாவது?.சரவணன் கையை எடுத்து கழுத்தில் வைக்கிறார் திலகம்.அய்யோ!..கொதிக்குதே!..வாங்க ரெஸ்ட் எடுக்கலாம்.இந்த ஜூரம் வேற சரவணன்!.நாளைக்கு வியட்நாம் வீடு அரங்கேற்றம்!.அதில ஒரு பிராமணக் கேரக்டர்.அதை சிறப்பா செய்யணுமேன்னு டென்ஷன்.அதனால தான் இந்த ஜூரம்!..சரவணன் ஆச்சர்யமானார்.பிராமணர் கேரக்டர் உங்களுக்கு புதுசு இல்லையே! .என்ன !.தமிழ் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்.அதை மேனேஜ் பண்ணீட்டா சுலபமாயிடுமே!..இல்லைய்யா!..அது சாதாரண பிராமணன் ரோல் இல்ல!.ப்ரஸ்டீஜ் பத்மநாபன்கிற எமோஷனலான ரோல்.பாஷையிலும் கவனமா இருக்கணும் எமோஷனலிலும் கோட்டை விட்டுறக் கூடாது.சீரியஸான கேரக்டரில் நடிக்கும்போது ஏதாவது தப்பா போயிட்டா ஜனங்க காமெடியா சிரிச்சிடுவாங்க!.இது நடந்தது 29_11_-68.சிவாஜி எனும் இமயம் திரையுலகில் கொடி கட்டிப் பறந்த வருஷம்.நாளைக்கு நடக்கப் போகிற நாடக அரங்கேற்றத்துக்கு இன்னைக்கு ஜூரம்.அடுத்த நாள் அந்த நாடகம் பார்த்த சரவணன் மிரண்டுவிட்டார்.அங்கே சிவாஜி இல்லை.இருந்தது ப்ரஸ்டீஜ் பத்மநாபன்.அப்படியொரு டெடிகேஷன் எந்த நடிகரிடத்தில் இருந்தது?.அதே ஜூரத்தோடு தான் அவர் சித்திர விழிகள் என்ன மீனோ மானோ என்றார் என்றால் நம்மால் நம்ப முடிகிறதா?..இப்படி ஒவ்வொரு பாடலிலும் அவருக்கு ஒவ்வொரு அனுபவம்.
காட்டுக் குருவி ஒண்ணு காத்தாடப் போனதுன்னு நாட்டுக் குருவி ஒண்ணு நடை பார்த்து ஏங்குதடி!..அந்த வெள்ளி மலை மான் குட்டி தொகையறாவில் ஒரு வெட்டு வெட்டி அவர் தரும் எக்ஸ்ப்ரஷனுக்குப் பின்னாலும் ஒரு கதையிருக்கும்.பாலிலும் வெண்மை பனியிலும் மென்மை பச்சை இளம் கிளி மொழி நீ சொல்வது உண்மை பாடலில் அவர் காட்டும் க்ளோஸப் பாவனைகளுக்குப் பின்னாலும் ஒரு கதையிருக்கும்.நினைவு தராமல் நீ இருந்தால் கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்!..ஸீத்ரூ ப்ளாக் பூப்போட்ட சட்டையில் மடித்துக் காட்டிய புஜங்களில் செம க்யூட்டா அந்த மேடையிலிருந்து லாவகமா ஒரு குதி குதித்து விசில் அடிச்சுக்கிட்டே தேவிகா பக்கமா வரும்போதும் உள்ளே ஏதோ ஒன்று ஓடிக்கொண்டிருக்கும்.நதி நீரில் மௌனமா நகரும் போட்டில் அதே பூப்போட்ட முழுக்கை சட்டை..மேல் பட்டன் இரண்டு திறந்திருக்க இரு கட்டை விரலை மட்டும் இரு பாக்கெட்டில் விட்டபடி நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சிம்மா!..அது தான் உண்மைக்கு சாட்சியம்மா!..ஸ்டைலா எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக தியாகத்தின் திரு உருவமாக சிவாஜி!..பாடும்போது உள்ளே என்ன நினைத்துக்கொண்டிருப்பார்?..கண்களால் பேசுதம்மா பாசத்தின் அழைப்பு!..பெண்ணோடு பேசுதம்மா பெற்றெடுத்த வயிறு!..பாதி இருளில் சிதைந்த முகத்தை மறைத்தபடி கோயில் தூணுக்கு அந்தப் பக்கத்திலிருந்து எட்டிப் பார்க்கும் நடிகர் திலகம்..பெற்றெடுத்த வயிறை கண்ணாறக் காண முடியாத சோகம்!..பாசத்தில் தடுமாறும் வேதனையா?..சூழ்நிலையின் விரக்தியா?..அந்த க்ளோஸப் காட்சியில் அவர் மனம் எதை எடை போட்டதோ?..அட்டகனா நான்?..கூட்டத்தோடு கூட்டமாக நின்று போர் புரியும் கோழைகளில் ஒருவனா நான்!?..பீஷ்மரே!..நீங்கள் நியமித்த கேவலம் இந்த அர்த்தரதனோடு அதிரனும் தளபதியுமாக வீற்றிருக்கும் நீர் தைரியமிருந்தால் நேருக்கு நேர் நின்று போர் புரியும்!..உருவிய வாளோடு கொந்தளிக்கும் அந்த கோபத்தின் வெப்பம் தாளாமல் பீஷ்மர் தள்ளாடுவாரே இந்தக் கர்ணனிடம்.சுற்றி நிற்கும் சேவகர்கள் பதற்றமாக சூழும்போது அவர் மனம் எதை நினைத்ததோ?..என்ன சார் உங்க ஊட்டு கதவு கோழ மாதிரி பின்னாடி இருந்து தாக்குது!..பலே பாண்டியாவில் வந்த உடல் மொழியும் அந்த கர்ணனின் உடல் மொழியும் ஒரே நபரிடமிருந்து வந்தது தானா?..எத்தனை எத்தனை பாத்திரங்கள்.எவ்வளவு உணர்வுகள்.பட்டியல் போட்டால் பக்கம் போறாதே!..இவன் எப்படா விழுவான்னு தானே எல்லாரும் எதிர்பார்க்குறா!..நடக்காதுடீ!..பாரிஸ்டரின் அந்த பைப்பை ஒழுங்காகப் பிடிக்கக் கூட இப்போதைய நடிகர்கள் நாலு நாள் ஒத்திகை பார்க்கணுமே!..ஏன் நடிகர் திலகம் எல்லோருக்கும் ஒரு அகராதி!..?..காரணம் !..விதை அவரு போட்டது!.அது மரமாகி நடிப்புக் கலையின் விருட்சமாகி நிற்கிறது.இதில அவருக்கென்ன பெருமையா?..சத்தியமா அவருக்குப் பெருமை தான்.ஆனால் அவரைப் புகழ்வது?..அது நமது கடமையல்லவா!..
Thanks Abdul Samath Fayaz (Old is Gold பழைய தமிழ் திரை இசைப் பாடல்கள் ( 1941--1981) face book)
வசந்தமாளிகை கொடுத்த வாழ்வு -சிவசக்தி பாண்டியன்
https://youtu.be/zrfh9MfbNHw?si=V6sEIKnjK6AXkDUv
Thanks Sivaji murasu youtube
sivajiganesan : -பாலிவுட்டைப் பதறவைத்த சிவாஜி! டில்லி ! கதறிய இந்தி வாலா ! -kantharaj
https://youtu.be/sAW3aY76ctQ?si=Trq2grkNHLaz7JG_
Thanks
Jeeva Cinema youtube.
மதுரையில் சிவாஜி கணேசனுக்கு கோயில் கட்டும் ரசிகர்கள்.
பீடம் அமைத்து நலத்திட்ட உதவி வழங்கினர்.
(மாலை மலர் )
Attachment 6149
வள்ளல் நடிகர் திலகத்தின் முதல் படமான பராசக்தி
1952 ஆம் வருடம் தீபாவளிக்கு வெளியடப்பட்டு
தமிழ் திரையுலகில் ஓர் புரட்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை மதுரை சேலம் திருச்சி கோவை மற்றும் பல ஊர்களிலும்
100 நாட்களை கடந்து ஓடி மாபெரும் சாதனை படைத்தது.
திருச்சியில் 100 நாட்கள் கடந்து ஓடிக்கொண்டிருந்த வேளை
பணம் படம் திரையிடுவதற்காக நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும்
அதே தியேட்டரில் திரையிடப்பட்டு வெள்ளிவிழா கண்டு 200
நாட்களுக்குமேல் ஓடி சாதனை படைத்தது.
மதுரையில் மிகப்பெரிய அரங்கம் தங்கத்தில் திரையிடப்படடு
112 நாட்கள் ஓடியபின் சிட்டி சினிமாவில் திரையிடப்பட்டு 126 நாட்கள் ஓடியபது.
பின்னர் ஶ்ரீ தேவி அரங்கிற்கு மாற்றப்பட்டு அங்கு 78 நாட்கள் ஓடியது.
மதுரையில் மொத்தம் 316 நாட்கள் ஓடியது.
தங்கம் மற்றும் சிட்டி சினிமாவிலும் பராசக்தி பெற்ற வசூல் சுமார் 2 38 000.00.
ஶ்ரீதேவி தியேட்டர் வசூல் கிடக்கவில்லை. அதுவம் சேர்ந்தால் கிட்டத்தட்ட 3 லட்சம் பெற்றிருக்கக்கூடிய
சாத்தியம் உண்டு.
சாதனை என்பது அது தானாக உருவாக வேண்டும் அது
வள்ளல் கணேசனுக்கு எப்பொழுதும் நடைபெற்றக்கொண்டிருக்கிறது.
ஆனால் மாற்றுமுகாம் பொய் பொய்யாக பேசி வாயால் வடை சுடுகிறார்கள்.
மதுரையில் மதுரைவீரன் நாடோடி மன்னன் இரண்டும் 3 லட்சம் தாண்டியதாக
பொய்யான வசூல் விபரத்ததை வெளியிடுகிறார்கள்.
மதுரைவீரன் வசூல் தவறானதென மதுரையில் பெற்ற வசூலாக மாற்றுமுகாம் குறிப்பிட்ட மதுரைவீரன் மற்றும்
எங்கவீட்டு பிள்ளை பெற்ற வசூல் விபரங்களை ஒப்பீடு செய்து
நண்பர் சேகர் பரசுராம் அவர்கள் விளக்கம் அளித்திருந்தார்.
அதுமட்டுமா 2012ல் கர்ணன் மறு வெளியீடு கண்டு மாபெரும் சாதனை படைத்திருந்தது.
பொறுக்குமா மாற்றுமுகாம் குழுவுக்கு ஆயிரத்தில் ஒருவனை கையிலேடுத்தார்கள்
கர்ணன் பட விளம்பரம் பிரமாண்டத்தின் அடையாளம் எனவே
ஆயிரத்தில் ஒருவனுக்கு பிரமாண்டத்தின் மகுடமாம் அங்கே பிரமாண்டம் என்ன இருந்தது ?எங்கே இருந்தது?
எம் ஜீ ஆருக்கு சிவாஜி கணேசன் போட்டியே இல்லையாம் அப்புறம் எதற்கு இந்தப் போட்டி?
கர்ணன் திரையிடப்பட்ட தியேட்டர்கள விட ஆயிரத்தில் ஒருவனை அதிக தியேட்டர்களில் திரையிட்டு
பல தியேட்டர்களில் முதல்நாளே ஆளில்லாமல் காட்சிகள் நடைபெறாமலே தூக்கப்பட்டு மூக்குடைபடவேண்டும்.
ஆயிரத்தில் ஒருவன் திரையிடடு 3 வாரம் வரை படத்தை வெளியிட்டவர் விளம்பரம் செய்தார்.
காரணம் 3 வாரங்கள்தான் அப்படத்தின் ஓட்டம்
பின்னர் கோயாபல் கொம்பனி கையிலெடுத்துக்கொண்டது.
துபாயிலிருந்து பணம் பிரான்சிலிருந்து பணம் தமிழ் நாட்டில் ஆங்காங்கே
நாலு பக்கமும் இருந்து பணம் சேகரிக்கப்பட்டு படம் ஓடிய நாட்களுக்கும் ஓடாத நாட்களுக்கும்
தியேட்டருக்கு குத்தகை கட்டி படம் ஓடியதாக பத்திரிகைகளுக்கும் பணத்தை இறைத்து
விளம்பரம் கொடுத்து மொத்தம் ஆயிரத்தில் ஒருவன் தியேட்டரில் திரையிடப்பட்ட நாட்கள் 69 மட்டுமே.
தியேட்டர் நிர்வாகத்திடம் கேட்டே நிங்கள் உண்மையை அறிந்து கொள்ளலாம்.
ஆனால் படம் ஓடியதாக விளம்பரம் செய்யப்பட்ட நாட்கள் 190. இதில் வேடிக்கை என்னவென்றால்
சென்னையில் படம் ஓடுகிறது துபாயிலிருந்து ஒன்லைனில் டிக்கட் புக் பண்ணப்பட்டது.
தங்கள் நடிகருக்கு யாருமே போட்டி இல்லையென்றால் ஏன் இத்தனை பித்தலாட்டம்.
போட்டியே இல்லாத நடிகனென்றால் சாதனை அதுவாக நடைபெற்றிருக்க வேண்டாமா?
இது போன்று பல தேவையேற்படும்பொழுது வெளிவரும்...
Attachment 6150
மதுரை நாகமலை புதுக்கோட்டை திரை அரங்கில்
15-11-2024 வெள்ளிக்கிழமை முதல்
சிவகாமியின் செல்வன்.
Attachment 6151
இதே நாளில் வெளியான திலகம் ஐயா அவர்களின் திரைப்படங்கள்.
அன்னை இல்லம் 15-11-1963.
லட்சுமி கல்யாணம் 15-11-1968.
Attachment 6152
நன்றி C Sundara Moorthy (நடிகர் திலகம் சிவாஜி ரசிக நந்தவனப்பூக்கள்)
சென்னை என்றுமே சிவாஜி கணேசனின் கோட்டை!
சென்னை மாநகரில் முதன் முதலாக 10 லட்சங்களை வசூலித்துக் கொடுத்த படம், வள்ளல் கணேசனின் பாவமன்னிப்பு.இச்சாதனையானது நிகழ்ந்தது 1961 ஆம் ஆண்டு.1964 வரை இச்சாதனையை எந்தப்படங்களாலும் நெருங்க முடியவில்லை.
1965 ல் அதன் வசூலை 13 லட்சங்கள் பெற்று எங்க வீட்டுப் பிள்ளை தாண்டியது.எம் ஜீ ஆர் படங்களில் சென்னையில் 10 லட்சங்கள் பெற்ற முதல் படம் எங்க வீட்டுப் பிள்ளை.எனினும் எ வீ பிள்ளையின் சாதனை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.அதே 1965 ஆம் ஆண்டு வெளிவந்த நடிகர் திலகத்தின் திருவிளையாடல், எங்க வீட்டு பிள்ளையின் வசூலை முறியடித்து முன்நிலைக்கு வந்துவிட்டது.1970 வரை திருவிளையாடல் முன்நிலை வகித்தது.1971ல் வெளிவந்த ரிக்*ஷாகாரன் 16 லட்சங்களுக்கு மேல் வசூலித்து திருவிளையாடல் வசூலை தாண்டியது.
ரிக்*ஷாகாரனாலும் நீண்டகாலம் முன்நிலை வகிக்முடியவில்லை.1972ல் வெளிவந்த வசூல் மாளிகையான வசந்த மாளிகை ரிக்*ஷாகாரனை தாண்டி முன்னேறியது.எனினும் 1973 ல் வெளிவந்த உ சு வாலிபன் வசந்த மாளிகை வசூலை தாண்டி முன்நிலைக்கு வந்தது,ஆனால் வாலிபனாலும் அதிக காலம் முன்நிலையில் நீடிக்கமுடியவில்லை,1974ல் வெளிவந்த தங்கப்பதக்கம் வாலிபன் வசூலை தாண்டி முன்நிலைக்கு முன்னேறியது.அதன் பின்னர் தங்கப் பதக்கத்தின் வசூலை, சம கால நடிகர்களின் எந்தப்படத்தினாலும் இன்றுவரை முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தங்கப்பதக்கத்தின் வசூலை தாண்டியதும், நடிகர் திலகத்தின் திரிசூலம் படம்தான்.சென்னை நகர வசூலாக 33 லட்சங்களுக்கு மேல் வசூலித்து முதலிடத்தில் திகழ்கின்றது.
சென்னை என்றுமே எங்கள் கோட்டை.
சென்னை நகரில் 10 லட்சங்களுக்கு மேல் வசூலித்த நடிகர் திலகத்தின் படங்களின் பட்டியல் இது.
பட்டியல் முழுமைபெறவில்லை,வாழ்க்கை ,ஆனந்தக்கண்ணீர் ,ஜஸ்ட்டிஸ் கோபிநாத் ,பசும்பொன்
போன்ற மேலும் பல படங்களின் வசூல் விபரங்கள் கிடைக்கவில்லை.
சிறப்புத் தோற்றங்களில் நடித்த படங்களின் வசூல் விபரங்கள் சேர்க்கப்படவில்லை.
1)பாவமன்னிப்பு.......................3தியேட்டர்கள் ......376 நாட்கள்.....வசூல்.....10,51,697.10
2)திருவிளையாடல்...................3தியேட்டர்கள்... ....537 நாட்கள்.....வசூல்....13,82,022.91
3)சரஸ்வதி சபதம்....................3தியேட்டர்கள்....... .399 நாட்கள்.......வசூல்...11,09,908.29
4)தில்லானா மோகனாம்பாள்...3தியேட்டர்கள்..........355 நாட்கள்....வசூல்....11,82,136.04
5)சிவந்த மண்.........................4தியேட்டர்கள்......... .468 நாட்கள்.....வசூல்....12,32,967.21
6)வுியட்நாம் வீடு.....................3தியேட்டர்கள்..........31 8 நாட்கள்......வசூல்....10,54,276.73
7)எங்கிருந்தோ வந்தாள்..........3தியேட்டர்கள்...........300 நாட்கள்......வசூல்....10,21,084.84
8)சொர்க்கம்...........................3தியேட்டர்கள ்...........304 நாட்கள்......வசூல்....10,73,184.84
9)சவாலே சமாளி....................3தியேட்டர்கள்..........30 7 நாட்கள்.......வசூல்....10,82,288.54
10)பாபு...................................3தியேட்ட ர்கள்..........302 நாட்கள்.......வசூல்....10,11,523.40
11)ராஜா....................................3தியேட் டர்கள்.......278 நாட்கள்......வசூல்.....12,53,558.84
12)ஞான ஒளி.............................5தியேட்டர்கள்..... ..318 நாட்கள்.......வசூல்.....10,35,051.40
13)பட்டிக்காடா பட்டணமா?......3தியேட்டர்கள்.........390 நாட்கள்......வசூல்.....14,87,146.40
14)வசந்த மாளிகை...................3தியேட்டர்கள்....... ..456 நாட்கள்......வசூல்.....17,42,787.65
15)நீதி......................................3தியே ட்டர்கள்.........248 நாட்கள்......வசூல்......10,80,623.62
16)பாரத விலாஸ்.......................3தியேட்டர்கள்........ 314 நாட்கள்.......வசூல்......11,60,312.65
17)ராஜராஜ சோழன்..................4தியேட்டர்கள்........2 00 நாட்கள்......வசூல்......10,69,894.80 (50 நாள் வசூல் )
18)எங்கள் தங்க ராஜா...............3தியேட்டர்கள்.........300 நாட்கள்......வசூல்.....12,26,060.85
19)கௌரவம்............................3தியேட்டர்கள் ..........300 நாட்கள்......வசூல்.....12,79,402.40
20)ராஜபார்ட் ரங்கதுரை.............4தியேட்டர்கள்.........20 7 நாட்கள்.......வசூல்.....10,40,328.17
21)தங்கப்பதக்கம்.....................3தியேட்டர்கள் ..........528 நாட்கள்......வசூல்......23,47,621.05
22)என் மகன்.............................3தியேட்டர்கள்.... .....224 நாட்கள்.......வசூல்......11,11,224.59
23)அவன்தான் மனிதன்.............3தியேட்டர்கள்.........300 நாட்கள்......வசூல்.......13,29,727.37
24)மன்னவன் வந்தானடி............4தியேட்டர்கள்.........346 நாட்கள்......வசூல்.......13,05,340.06
25)உத்தமன்..............................3தியேட்டர் கள்..........203 நாட்கள்.......வசூல்.....10,52,093.65
26)தீபம்....................................3தியேட ்டர்கள்..........335 நாட்கள்........வசூல்......16,68,722.85
27)அண்ணன் ஒரு கோயில்........3தியேட்டர்கள்..........342 நாட்கள்.......வசூல்......19,93,368.25
28)அந்தமான் காதலி.................3தியேட்டர்கள்.........3 00 நாட்கள்.......வசூல்.......13,23,115.50
29)தியாகம்...............................3தியேட்டர ்கள்........319 நாட்கள்........வசூல்.......18,71,590.65
30)ஜெனரல் சக்கரவர்த்தி...........3 தியேட்டர்கள் ......246 நாட்கள்.........வசூல்......14,44,790.69
31)பைலட் பிரேம்நாத்................3தியேட்டர்கள்.........24 3 நாட்கள்........வசூல்......14,77,125.70
32)திரிசூலம்..............................3 தியேட்டர்கள்.......525 நாட்கள்..........வசூல்......33,21,130.55
33)நான் வாழவைப்பேன்............4தியேட்டர்கள்........3 29 நாட்கள்.........வசூல்......12,28,480.00
34)ரிஷிமூலம்............................3தியேட்டர் கள்........317 நாட்கள்..........வசூல்......19,38,872.25
35)விஷ்வரூபம்..........................3தியேட்டர்க ள்........226 நாட்கள்..........வசூல்......11,70,054.85
36)சத்திய சுந்தரம்.....................3தியேட்டர்கள்........ .242 நாட்கள்..........வசூல்.....13,65,670.70
37)கல்தூண்..............................3தியேட்டர் கள்.........277 நாட்கள்..........வசூல்.....12,34,731.70
38)கீழ்வானம் சிவக்கும்.............3தியேட்டர்கள்....... .150 நாட்கள்...........வசூல்.....10,80,675.70 (50 நாள் வசூல் )
39)வா கண்ணா வா...................3தியேட்டர்கள்.........31 2 நாட்கள்...........வசூல்.....20,07,089.30
40)சங்கிலி.................................3 தியேட்டர் ............200 நாட்கள்..........வசூல்.....10,41,795.70
41)தீர்ப்பு...................................3த ிய ேட்டர்கள்.........305 நாட்கள்..........வசூல்......24,08,592.20.
42)நீதிபதி..................................3திய ேட ்டர்கள்.........371 நாட்கள்..........வசூல்......27,32,397.40.
43)சந்திப்பு................................3திய ேட ்டர்கள்.........300 நாட்கள்..........வசூல்.....19,31,148.00
44)மிருதங்க சக்கரவர்த்தி...........4தியேட்டர்கள்......... 302 நாட்கள்...........வசூல்.....18,05,142.80
45)வெள்ளை ரோஜா..................6 தியேட்டர்கள்.........596 நாட்கள்...........வசூல்.....30,88,917.60.
46)முதல் மரியாதை...................சாந்தி............. ..... ....177 நாட்கள்...........வசூல்.....21,36,475.20.( ஏனைய தியேட்டர்கள் வசூல் கிடைக்கவில்லை)
இவ் வசூல் விபரங்கள், நண்பர்கள் மூலம் கிடைத்தவையும் ,நடிகர் திலகத்தின் படங்களுக்கு, நண்பர்கள் வெளியிட்ட சிறப்பு மலர்களிலும்,
பத்திரிகைகளிலும் வெளிவந்த வசூல் விபரஙங்களாகும்.
Attachment 6153
Attachment 6154
Attachment 6155
நநாகர்கோவிலி வள்ளி திரையரங்கில்
25/11/2024 முதல் சிவகாமியின் செல்வன்.
Attachment 6165
சேலம் ஜலகண்டபுரம் செந்தில் திரையரங்கில்
26/11/2024 முதல் (தினசரி 4 காட்சிகள்)
சிவகாமியின் செல்வன்.
Attachment 6166
Attachment 6167
இலங்கையில் 100 நாட்களுக்குமேல் ஓடிய நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்.
இலங்கையில் அதிக 100 நாட்கள் ஓடிய படங்களை கொடுத்தவர் நடிகர் திலகம் மட்டுமே.
நடிகர் திலகத்தின் சம கால நடிகர்களான எம் ஜீ ராமச்சந்திரனின் படங்களோ,
ஜெமினி கணேசனின் படங்களோ நடிகர் திலகத்தின் சாதனையை தாண்ட வில்லை.
அதுமட்டுமல்ல கமல், ரஜனி படங்கள்கூட நடிகர் திலகத்தின் சாதனையை நெருங்கவில்லை.
சாதனை சக்கவர்த்தியின் 100 நாள் ஓடிய படங்களின் பட்டியல்!
தனி அரங்கில் 100 நாட்கள் ஓடியவை.
1)பராசக்தி.
2)தில்லானா மோகனாம்பாள்.
3)ராமன் எத்தனை ராமனடி.
4)பட்டிக்காடா பட்டணமா? *
5)பாபு.*
6)வசந்த மாளிகை.*
7)எங்கள் தங்க ராஜா.*
8)தங்கப்பதக்கம்.*
9)அவன்தான் மனிதன்.
10)உத்தமன்.*
11)பைலட் பிரேம்நாத்.*
12)தீபம்.*
13அந்தமான் காதலி.*
14)ஜெனரல் சக்கரவர்த்தி.*
15)பட்டாக்கத்தி பைரவன்.*
(மேற்கண்ட 15 படங்களும் தனி அரங்கில் 100 நாட்கள் ஓடியவை.)
* இக்குறியீடு கொண்ட 11 படங்கள் இரண்டு அரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியவை.
16) வீரபாண்டிய கட்டபொம்மன்.(ஷிப்டிங்கில் 100 நாட்கள் ஓடியது)
வேறு படங்கள் ஷிப்டிங்கில் ஓடியிருக்க வாய்ப்புண்டு, சரியான தகவல்
கிடைத்தால் பின்னர் இப்பட்டியலில் இணைக்கப்படும்..
கீழ்கண்ட படங்கள் லீவு நாட்கள் உட்பட 100 நாட்கள் ஓடியவை.
17)திருடன்.
18)சிவந்த மண்.
19)சவாலே சமாளி.
20)ராஜா.
21)ராஜ ராஜ சோழன்.
22)சத்தியம்.
23)துணை.
மேலும் ஶ்ரீ வள்ளி 100 நாட்கள் ஓடியதாக தகவல் உண்டு.
ஆனால் சரியான தகவல் இல்லை.
வேறு படங்கள் ஓடியிருந்தால் சரியான ஆதாரம் கிடைக்கும் பட்சத்தில்
பின்னர் இப்பட்டியலில் இணைக்கப்படும்.
மாற்றுமுகாம் தூத்துக்குடி பேர்வழி இலங்கையில் எம் ஜீ ஆரின்
100 நாட்கள் ஓடிய படங்கள் 29 என கோயாபல் பாணியில் அள்ளி விட்டிருந்தார்.
அது அவர்களது விருப்பம் ,எண்ணங்கள் மட்டுமே.
எம் ஜீ ஆரின் 100 நாட்கள் கண்ட படங்களின் சரியான விபரம் இங்கே.
1)என் தங்கை.
2)காவல்காரன்.
3)ஒளிவிளக்கு.
4)அடிமைப்பெண்.
5)மாட்டுக்கார வேலன்.
6)ராமன் தேடிய சீதை.
7)நல்ல நேரம்.
8)உ சு வாலிபன்.
9)இதயக்கனி.
10)நாளை நமதே.
11)நீதிக்கு தலை வணங்கு.
12)மீனவ நண்பன்.
13)ஆயிரத்தில் ஒருவன்.(ஷிப்டிங்கில் 100 நாட்கள் ஓடியது)
கீழ்கண்ட படம் லீவு நாட்கள் உட்பட 100 நாட்கள் ஓடியது.
14)ஊருக்கு உழைப்பவன்.
இவை தவிர அவர்கள் கூறுவதுபோல் எ வீ பிள்ளை, நா மன்னன்,
அன்பே வா, ச திருமகள், தா சொ தட்டாதே,
தர்மம் தலை காக்கும், கு தலைவன், மஹாதேவி, திருடாதே,
அ 40 திருடர்களும், மேலும் அவர்களால் சொல்லப்பட்டிருக்கும்
ஏனைய எந்தப் படங்களுமே 100 நாட்கள் ஓடவில்லை.
அவர்கள் கூறுவது பொய் என்பதற்கான சில ஆதாரங்கள் இவை.
Attachment 6162
Attachment 6163
Attachment 6164
மற்றும் இலங்கையில் 100 நாட்கள் ஓடிய ஏனைய நடிகர்களின் படங்கள்.
(ஞாபகத்தில் உள்ளவரை.)
பணமா பாசமா, சித்தி, தசாவதாரம், திருவருள் ,நீயா, நிறம் மாறாத பூக்கள்,
மூன்று முடிச்சு, குரு ,சகலகலா வல்லவன்,மெளன கீதங்கள்,
வருஷம் 16, ராஜாதி ராஜா, திருவருள் ,அவள் ஒரு தொடர்கதை,
டாக்ஸி ட்ரைவர்,அலைகள் ஓய்வதில்லை
கீழே காணும் இந்தத்தகவல்,(1958 ஆம் ஆண்டு) இலங்கையிலிருந்து வெளிவந்த
ஒரு அரசியல் பத்திரிகையிலிருந்து பெறப்பட்டது.
Attachment 6170
கஷ்ட்டப்படும் எவருக்கு உதவுவதில் என்றுமே நடிகர் திலகம் பின் நின்றதில்லை.
1958 ஆம் ஆண்டு திரைப்பட வில்லன் நடிகர் ஒருவர் காலமானதை தொடர்ந்து,
அவரது குடும்பத்திற்கு உதவுவதற்காக நிதிதிரட்டி கொடுத்திருக்கிறார்.
இவர் செய்த இது போன்ற மேலும் பல உதவிகள் எங்கெங்கு மறைந்து கிடக்கின்றனவோ?
இன்று ஒரு தகவல், நடிகர் திலகம் செய்த உதவி பற்றி திரு வினோ மோகன் அவர்கள் முகநூலில் பதிவிட்டிருந்தார்.
அந்த உதவியானது 1950 காலகட்டத்தில் நடந்திருக்கிறது.அதாவது வெள்ளித்திரையில்
முகம் காட்டுவதற்கு முன், பொது மக்கள் தெரிந்திருக்காத நடிகர், மனிதர்.
தனக்கு பெயர் கிடைக்கவேண்டுமென்றோ, பிரதிபலன் கிடைக்குமென்றோ
என எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் செய்த உதவி அது.
இப்படியான இவரது உதவும் குணம் தெரிந்தும், அவரை கஞ்சன் என அழைத்து மகிழ்கிறது
எவருக்கும் எதுவும் கொடுக்காத ஒரு கூட்டம்.
யார் மறுத்தாலும், மறைத்தாலும்
காலம் கடந்தாவது, செய்த உதவிகள், கொடுத்த கொடைகள், வெளிவந்தே தீரும்.
1951அல்லது 1952 ஆம் ஆண்டாக இருக்கலாம்.
அந்த இளைஞனுக்கு அப்போது ஒரு படப்பிடிப்பு நிறுவனத்தில் வேலை.
மாத சம்பளம் 250 ரூபாய்.
அவர்கள் தயாரிக்கும் படத்தில் கதாநாயகன் வேலை.
அந்த இளைஞனுக்கு டென்னிஸ் விளையாட்டில் ஆர்வம் உண்டு.
ஆட தெரியாது.
அவருடன் கூட அவருக்கு சகோதரர் ஆக நடிக்கும் திரு. S. V. ஸஹஸ்ரநாமம் டென்னிஸ் விளையாடுவார்.
மெட்ராஸ் உயர்நீதி மன்றம் எதிரே 1950 களில் ஒரு டென்னிஸ் விளையாடும் இடம் இருந்தது.
நமது கதாநாயக இளைஞன் அங்கே அவர்கள் விளையாடுவதை ஆர்வத்துடன் பார்த்து மகிழ்வார்.
ஒரு நாள் அங்கே வழக்கமாக விளையாடும் திரு. ராமநாதன் ஒரு கோரிக்கையுடன் அங்கே நண்பர்களை அணுகினார்.
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
1950 களில் திரு.ராமநாதன் டென்னிஸ் ராமநாதன் என்று அறியப்பட்ட படா பிரபலம்.
அவரது கோரிக்கை?
அவரது மகன் கிருஷ்ணன் லண்டனில் ஜூனியர் விம்பிள்டன்னில் விளையாட தகுதி பெற்றிருக்கிறார்.
ஆனால் போட்டியில் கலந்துக்கொள்ள மிகுந்த செலவு ஆகும்.
நண்பர்கள் உதவி செய்தால் நல்லது என்று கோருகிறார் திரு. ராமநாதன்.
அங்கே விளையாட வரும் பிற நண்பர்கள் தங்களால் ஆன உதவி செய்கிறார்கள்..
அங்கே வேடிக்கை பார்க்க போகும் நமது காதநாயக இளைஞனுக்கு தானும் எவ்வகையிலாவது உதவ வேண்டும் என்று ஆவல்.
இங்கே ஒரு இளைஞன்.
டென்னிசில் மிக உயர்ந்த பட்டத்திற்கு இந்தியா சார்பாக விளையாட தகுதி பெற்றவன்..
ஆனால் லண்டனுக்கு போக பணம் ஒரு தடையாக இருக்கிறது. நம்மால் ஆன உதவியை நாம் செய்ய வேண்டும் என்ற ஆவல் நமது கதாநாயகருக்கு.
அன்று காலையில் தான் அந்த மாத ஊதியம் 250 ரூபாயை வாங்கியிருந்தார்.
அவ்வளவு பணத்தையும் அப்படியே டென்னிஸ் ராம நாதனிடம் கொடுத்து விட்டார் நமது கதாநாயகர்..
டென்னிஸ் ராமநாதன் திகைத்து போய், பிறகு பாராட்டியும் இருக்கிறார்.
பிற்பாடு மிக பெரிய நடிகர் ஆக தமிழ் திரை உலகில் உயர்ந்த அந்த திலகம், மாநிலத்திற்கு, தேசத்திற்கு நிதி திரட்ட வேண்டிய சூழல் ஏற்பட்ட நேரங்களில் எல்லாம் தென்னக நட்சத்திரங்கள் அனைவரையும் கூட்டி நட்சத்திர விளையாட்டு போட்டிகள் நடத்தி, நிதி திரட்டி வழங்கி இருக்கிறார்..
அந்த உயர்ந்த மனிதனை,
தெய்வ மகனை,
மனிதருள் மாணிக்கத்தை உங்களுக்கு பேர் சொல்லி தான் அறிமுகம் செய்ய வேண்டுமா என்ன?
அவன் தான் மனிதன் என்று தீர்ப்பு எழுதியவர்கள் அல்லவா நம் தமிழ் திருக்கூட்டத்தினர்.
இங்கே அந்த கதாநாயகன் மற்றும் டென்னிஸ் கிருஷ்ணன். இருவர் படங்களையும் பதிவிட்டு இருக்கிறேன்.
Attachment 6172
Attachment 6173
Thanks Vino mohan (mukthafilims60 face book)
ஜனவரி 3 முதல் தமிழகமெங்கும்.
முற்றிலும் அதிநவீன டிஜிட்டல்,
4k, 7.1 தொழில் நுட்பத்தில்,
நடிகர் திலகத்தின்,
வசந்த மாளிகை.
Attachment 6174
திரிசூலம் வசூல் புள்ளிவிபரம் சொன்ன எம் ஜீ ஆர்.
Attachment 6175
உங்களுக்கு பிடித்தத நடிகர் யார்?
நடிகர் செந்தாமரை கூறியது.
நடிகர் திலகம்தான், மற்றவர்கள் வளர்ச்சி கண்டு
பொறாமைப்படாத பெரு நடிகர்.
Attachment 6176
உலகின் எட்டாவது அதிசயம் கட்டிடம் அல்ல, அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் dhaan-சித்ரா லட்சுமணன் பெருமை
https://youtu.be/BEcz57Oio_0?si=v1C2_i4VendTVu5e
Thanks NADIGARTHILAGAMTV
யாரும் நெருங்க முடியாது. நடந்ததற்கும், பேசியதற்கு கைதட்டல் வாங்கியவர். இயக்குனர் சுந்தர்ராஜன் பெருமை.
https://youtu.be/2ePYmh4vd8Q?si=kAveufOPaFLUpdHD
Thanks NADIGARTHILAGAMTV
சிவாஜி தான் 8வது அதிசயம் ! Sundarrajan, Guhanathan Speech about Sivaji | Vasantha Maaligai Trailer.
https://youtu.be/gmK1lHqzHag?si=g32t47BoJ29KIgPv
Thanks
Thi Cinemas
மையம் நிர்வாகத்தினர், மொடறேற்றர்கள், நண்பர்கள், மற்றும்
இத்தரியினை காணவரும் அனைத்து உள்ளங்களுக்கும் ,
2025 ஆம் வருட இனிய புதுவருட வாழ்த்துக்கள்.
Attachment 6177
நவீன தொழில் நுட்பத்துடன்,
மீண்டும் திரைக்கு வரும் வசந்த மாளிகை.
Attachment 6178
மாலை மலர் பத்திரிகை செய்தி.
இன்று முதல் (3/01/2015) தமிழகமெங்கும் வசந்த மாளிகை மறு வெளியீடு.
Attachment 6179 Attachment 6180
Attachment 6181 Attachment 6182
இன்று மறுவெளியீடு கண்ட வசந்த மாளிகை,
மதுரையில் House full.
Attachment 6183
Attachment 6184
இலங்கையில் என்றுமே சாதனை சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் மட்டுமே.
முதல்முதலாக சாதனையை செய்வதிலாகட்டும், முதல்நாள் குறிப்பிட்ட
நேரத்ததிற்கு முன்னதாக முதல் காட்சி ஆரம்பிப்பதிலாகட்டும்,
ஒரே நாளில் அதிக காட்சிகள் நடைபெற்றதிலாகட்டும், அதிக வசூல் பெற்று சாதனை ஏற்படுத்தியதிலாகட்டும்,
அதிக தொடர் கொட்டகை நிறைந்த காட்சிகள் நடைபெற்று சாதனை ஏற்படுத்தியதிலாகட்டும்,
மொத்தமாக அதிக கொட்டகை நிறைந்த காட்சிகள் நடைபெற்று சாதனை ஏற்படுத்தியதிலாகட்டும்,
அனைத்திலும் நடிகர் திலகமே சாதனையாளராக திகழ்கிறார்.
அந்தவகையில் முதலில் அவரது திரைப்படங்கள் ஏற்படுத்திய வசூல் சாதனைகள் இங்கே.
யாழ்ப்பாணம் என்றுமே வசூல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசனின் கோட்டையாகவே திகழ்கிறது.
யாழ்நகரில் வெள்ளி விழா படங்கள் 3, அந்த 3 படங்களும் நம் சக்கரவர்த்தியின் படங்களே.
அவை (1)வசந்த மாளிகை 208 நாட்கள், (2) உத்தமன் 179 நாட்கள்,(3) பைலட் பிரேம்நாத் 222 நாட்கள்.
இவை தவிர வேறு எந்தப்படமும் வெள்ளி விழா கிடையாது.
யாழ்நகர் வசூல் சக்கரவர்த்தி!
1)பைலட் பிரேம்நாத்......................வின்சர்...... ..... ....222 நாட்கள் வசூல்.................8 70 764.25
2)உத்தமன்....................................ரா ணி. ...............179 நாட்கள் வசூல்..................7 56 435.00
3)பட்டாக்கத்தி பைரவன்................ஶ்ரீதர்................ .100 நாட்கள் வசூல்..................7 05 226.25
4)தீபம்........................................ ..ஶ ்ரீதர்...............114 நாட்கள் வசூல்.....................6 99 108.50
5)ஜெனரல் சக்கரவர்த்தி................ராஜா............. ..... 123 நாட்கள் வசூல்..................5 96 437.00
6)வசந்த மாளிகை........................வெலிங்டன் 208+லிடோ 28..236 நாட்கள் வசூல் ..5 54 419.75
7)அந்தமான் காதலி......................மனோகரா...........1 04 நாட்கள் வசூல்..................4 80 000.00
8)இமயம்.....................................லிட ோ.. ................070+ நாட்கள் வசூல்................4 54 220.00
9)ரிஷிமூலம்................................வின் சர் .................080 நாட்கள் வசூல்..................4 39 390.75
10)தங்கப்பதக்கம்........................ஶ்ரீதர். .. .................114 நாட்கள் வசூல்..................4 20 503.25
11)எங்கள் தங்க ராஜா.................ராஜா.................... 126 நாட்கள் வசூல்..................4 04 077.50
இவை தவிர தியாகம், தர்மராஜா ,விஷ்வரூபம் போன்ற படங்களும் 4 லட்சம் தாண்டியிருக்கவேண்டும்
ஆனால் சரியான தகவல் கிடைக்கவில்லை.
எம் ஜீ ஆர் படங்களில் 4 லட்சங்களுக்கு மேல் வசூல் பெற்ற படங்கள் 3 மட்டுமே.
அவை உலகம் சுற்றும் வாலிபன், நாளை நமதே, மீனவ நண்பன் ஆகிவை.
யாழ்நகரில் ஆகக்கூடுதல் வசூல் பெற்ற எம் ஜீ ஆர் படம் மீனவ நண்பன்.
எம் ஜீ ஆருக்கு யாழ்நகரில் 5 லட்சம் பெற்ற ஒரே படம் மீனவ நண்பன்.
ஜனவரி 11 1973 ல் இலங்கையில் திரையிடப்பட்ட வசந்த மாளிகை
யாழ்நகரில் பெற்ற வசூல் 5 54 000.00. எங்கள் தங்க ராஜா வெளிவந்த பொழுது,
யாழ்நகர் நண்பர்களால் வெளியிடப்பட்ட நோட்டீஸ் ஒன்றில், குறிப்பபொன்று
எழுதியிருந்தார்கள் இவ்வசூல் சாதனையை முறியடிக்க வாத்தியார் படங்களுக்கு
ஆயுட்கால அவகாசம் தருகிறோம் என்று.அவகாசம் முடிந்துவிட்டது, ஆனால் அவர்களால் முடியவில்லை.
அகக்கூடுதல் வசூல் பெற்ற எம் ஜீ ஆர் படமான மீனவ நண்பன், அதிகரிக்கப்பட்ட
டிக்கட் கட்டணத்திலும் ஒடிமுடியப் பெற்ற வசூல் 5 06 000.00 வரைதான்.
இதைவிட மூன்று முடிச்சு, குரு, நீயா, சகலகலா வல்லவன், நி மாறத பூக்கள் உட்பட
மேலும் சில படங்கள் 4 லட்சங்களுக்குமேல் பெற்றிருக்கின்றன.
ஓடிய நாட்களிலாகட்டும் ,கொட்டகை நிறைந்த காட்சிகளிலாகட்டும் ,
வசூலிலாகட்டும் எதிலும் ,என்றுமே ,யாழ்நகர் சிவாஜியின் கோட்டைதான்.
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் இணையற்ற வெற்றி!
வசந்த மாளிகை.
Attachment 6185 Attachment 6186
Attachment 6187 Attachment 6188
வசந்த மாளிகை,
மதுரை அண்ணாமலை திரை அரங்கில்,
2019 ல் 4 ஞாயிறும்,
2023 ல் 3 ஞாயிறும்,
2015 ல் இன்றைய ஞாயிறு மாலை காட்சியிலும் House Full.
எந்த ரீ ரிலீஸ் படத்திற்கும் இது போன்ற அரங்கு நிறைந்த காட்சிகளாக
வந்ததே இல்லை.இனிமேலும் வசந்த மாளிகை வந்தால் மட்டுமே
இந்த சரித்திரம் மீண்டும் நிகழும்.
வசூல் சக்கரவர்த்தி-இவரே!
சரித்திர நாயகனும்- இவரே!!
சாதனை மன்னனும் இவரே!!!
Attachment 6189
Thanks Chandrasekaran Veerachinnu (nadigarthilakam fans Face Book)
வசந்த மாளிகை மன்னன் மலர் மாலைகளுடன்.
Attachment 6190
Attachment 6191
Attachment 6192
தமிழ்நாடெங்கும் ஜனவரி 3ஆம் திகதி ரீ றிலீஸ் செய்யப்பட்ட
வசந்த மாளிகை படத்தினது வெற்றிச் செய்திகள் தமிழ் பத்திரிகைகளில்
வெளிவந்த தகவல்கள்.
Attachment 6193 Attachment 6194
Attachment 6195 Attachment 6196
நெல்லையில் வசந்த மாளிகை.
Attachment 6197 Attachment 6198
Attachment 6199 Attachment 6200
திண்டுக்கல்லில் வசந்த மாளிகை.
Attachment 6201 Attachment 6202
Attachment 6203 Attachment 6204
Attachment 6205
விருதுநகர் அரங்கம் நிறைந்த காட்சிகளோடு அமர்க்களம் வசந்த மாளிகை.
Attachment 6206
https://www.facebook.com/reel/495989...e_unit&__cft__[0]=AZXvFEaSgD28IDeGuEGwxB80r7PP9dgTsRgkg7v7iVWPiwHBq neseavkUurmO_A-Fif6e5mS-Poc9a0wAG4G3m041lJIEtX5o3OY02bxNCh1-GKWo5gk8vjdPG0uDxK-dRENYDJEEUAZEg6FrHW2kUiYPZKUk74OCyGx6lTwglYd5lrdS1 fV3zUQbPiZzmIILoY&__tn__=H-R
நன்றி சந்திரசேகரன் வீராசின்னு முகநூல்
14.01.1965 அன்று வெளியாகி (இன்று) 14.01.2025, 60 ஆண்டுகளை நிறைவு செய்து வைரவிழா காணும் காவியம் பழநி திரைப்படம் பற்றி 5 வருடங்களுக்கு முன் (2020ல்) இந்து தமிழ் திசை நாளிதழில்திரு முரளி சீனிவாசன் அவர்கள் எழுதிய கட்டுரை.
வியர்வையின் வாசனை வீசிய காவியம்.
Attachment 6207Attachment 6207
திருநெல்வேலி அருணா திரையரங்கில்
31/01/2025 வெள்ளி முதல்
நடிகர் திலகம் வெற்றி விஜயம்.
சிவகாமியின் செல்வன்.
Attachment 6210
ஜனவரி 31 முதல்
சென்னை மஹாலட்சுமி சினிமாவில்
வசந்த மாளிகை.
Attachment 6211
சிவாஜியை மிகச்சிறந்த நடிகராக மட்டுமே இன்னமும் இந்த உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது .
அவர் மிகச்சிறந்த
ஆச்சரியங்களை
புதைத்து வைத்திருக்கிற ஒரு அற்புத மனிதர் .அவருடன் பல வருடங்களாக பழகிக் கொண்டிருக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் 50 வருடங்களுக்கு மேலாக ரசிகர்களாக இருந்து கொண்டிருப்பவர்களுக்கும் கூட அவரைப் பற்றிய நிறைய விஷயங்கள் தெரிவதில்லை.அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான் இந்த பதிவில் கூறப்போகும் விஷயம்.
சரஸ்வதி சபதம் படத்தில் உச்சகட்ட காட்சி. புலவராக நடித்திருக்கும் சிவாஜியை யானை இடறி கொல்ல வேண்டும் என்று அரச தண்டனை விதிக்கப்படும். இந்த காட்சியில் ஒரு மேடையில் நடிகர் திலகத்தை சங்கிலியால் பிணைத்து வைத்திருப்பார்கள் .யானை பல அடி தூரம் நடந்து வந்து காலை தூக்கி தலையை நசுக்குவதாக பட காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.இந்த காட்சியை படமாக்கும்போது டம்மியை வைத்து படமாக்கிவிடலாம் என்று இயக்குனர் உள்பட பட யூனிட்டும் சிவாஜியிடம் சொன்னது.ஆனால் காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று நடிகர் திலகம் அதை மறுத்துவிட்டார்.நானே அதில் நடிக்கிறேன் என்று உறுதி கூறி விட்டார் .பட யூனிட்டை சேர்ந்தவர்கள் அது வேண்டாம் என்று சொல்ல இன்னொரு காரணமும் இருக்கிறது .படமாக்க ரிகர்சல் பார்த்தபோது யானையானது முரண்டு பிடித்து சரியாக ஒத்துழைக்க மறுத்ததுடன் படப்பிடிப்பில் வைத்திருந்த பொருட்களை காலால் மிதித்தும் ததிக்கையால் அடித்து நொறுக்கியும் கலவரம் செய்ததாம்.இதையெல்லாம் பார்த்துத்தான் பட யூனிட் நடிகர்திலகத்தை நடிக்க வைக்க யோசித்தார்களாம்.நடந்து வரும் யானையையும் சிவாஜியையும் காட்டி பக்கம் வந்து நிற்கும் போது டம்மியை வைத்து விடலாம் என்று யோசித்து அதை சிவாஜியிடம் சொன்ன போதுதான் சிவாஜியவர்கள் மறுத்திருத்கிறார்.சிவாஜியவர்கள் இவ்வளவு உறுதியாக இருப்பதை பார்த்து பட யூனிட்டை சேர்ந்தவர்கள் பரபரப்புடன் பீதியுடனும் நின்றிருக்கிறார்கள்.காட்சி படமாக்கம் தொடங்குகிறது.சிவாஜி அவர்கள் மேடைமீது படுத்திருக்க 200 அடிக்கு அப்பால் இருந்து யானை நடந்து வருகிறது ..யானை நடந்து வர வர நடிகர் திலகம் அவர்கள் வசனங்களை பேசுகிறார். சிவாஜியின் அருகில் வந்து நின்ற யானை காலை தூக்கியது. சூட்டிங் ஸ்பாட்டே பெரிய கலக்கத்துடன் பார்த்தது .உணர்ச்சி பொங்க வசனங்களை பேசிக் கொண்டிருந்த சிவாஜி அவர்கள் கடைசி சொல்லாக ' நில்' என்ற வார்த்தையை தன் சிம்மக் குரலில் பெரிதாக கர்ஜித்தார். அந்த நில் என்ற வார்த்தையை அவர் சொல்லும்போது ஒரு பெரிய மந்திரத்தை சொல்வது போல தான் இருக்கும். என்னாகுமோ? ஏதாகுமோ? என்று பரபரப்புடன் யூனிட்டார்கள் சுற்றிலும் பயத்துடன் நின்று
பார்த்துக் கொண்டு இருந்தார்கள் ..அப்போது பெரிய அதிசயம் நடந்தது என்று தான் சொல்ல வேண்டும். கணேசனாரின் அந்த 'நில்' என்ற வார்த்தையை கேட்டதும் யானையானது காலை தூக்கி அப்படியே நின்றது. இதுதான் பெரிய ஆச்சரியம்!
ஆரம்பத்தில் சொன்ன விஷயத்துக்கும் இப்போது சொல்லப்படுகின்ற இந்த விஷயத்துக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா ? சற்று பொறுங்கள்.
சிவாஜி அவர்களும் யானைகளும் சம்மந்தப்பட்ட காட்சிகள் பல படங்களில் வருகின்றன .தங்கமலை ரகசியம் ,காத்தவராயன் வணங்காமுடி ,அந்தமான் காதலி ...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். சிவாஜி அவர்கள் வேட்டையாடுவதில் பெரும் வீரர் என்று தெரியும். பெரும்பாலும் எல்லா விலங்குகளையும் வேட்டையாடி இருக்கிறார் சிவாஜி அவர்கள் .யானைக்கு முன் துப்பாக்கி தூக்கியது இல்லை. யானை சவாரி செய்து வேட்டைக்கு சென்றிருக்கிறார்.
தமிழ்நாட்டின் பிரபலமான கோவில்களுக்கு யானைகளை கொடையாக கொடுத்திருக்கிறார்.
அமெரிக்காவின் மிருகக்காட்சி சாலைக்கு குட்டி யானையை பரிசாக அனுப்பி வைத்தார் .
இன்னும் ஒரு ஆச்சரியமான சம்பவம். கலைஞர் கருணாநிதி அவர்கள் தஞ்சைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அப்போது சூரக்கோட்டையில் சிவாஜி இருப்பதாக கேள்விப்பட்டு அப்படியே நடிகர் திலகத்தை பார்த்துவிட்டு வரலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார். சிவாஜி அவர்களுக்கு கருணாநிதி தன்னை பார்க்க வருவதாக தகவல் சொல்லபட்டது .என்ன? இப்படி திடீர் என்று சொல்கிறாரே!
முதன் முதலாக வருகிறார்!
என்ன செய்யலாம் என்று யோசித்த சிவாஜி அவருக்கு நன்றாக வரவேற்பளிக்க வேண்டும் என்று முடிவு செய்தார் .
விலை உயர்ந்த மாலையை தயார் செய்தார்.திருவானைக்காவல் கோவிலில் இருந்து யானையை வரவழைத்தார் .
சூரக்கோட்டை வீட்டுக்கு வரும் கருணாநிதியை வாசலில் நிற்க வைத்து யானையிடம் மாலையை கொடுத்து கருணாநிதியின் கழுத்தில் போட ஏற்பாடு செய்திருந்தார் சிவாஜி அவர்கள் .
கருணாநிதி வந்ததும் அவர் கழுத்தில் மாலை போட யானை முரண்டு பிடித்தது. தயங்கி தயங்கி நிற்பது போல் அது நின்றது.இதை பார்த்த சிவாஜி அவர்கள் யானையிடம் ஏதோ சொல்ல உடனே யானையானது முரண்டு பிடிக்காமல் அந்த மாலையை கருணாநிதி கழுத்தில் அணிவித்தது.
இதைப் பார்த்து வியந்து போன கருணாநிதி என்ன கணேசு ,நீ சொன்னபடி எல்லாம் யானை கேக்குது இன்று ஆச்சரியமாக கேட்டாராம்.
யானைகளுடன் படு இயல்பாக நடிப்பார் .ஒன்றல்ல, இரண்டல்ல பல யானைகளை கொடையாக கொடுத்துள்ளார். அந்த யானைகளுடன் படு நேசமாக பழகுவார்.
யானைகளுடன் நடிகர் திலகத்தின் பந்தமானது மிகவும் உணர்வுபூர்வமானது.
யானைகளை கட்டுப்படுத்த பாகன்கள் இருப்பார்கள் .யானைக்கென்று ஒரு பாஷை இருக்கிறது .யானைகள் முரண்டு பிடிக்கும்போது எல்லாம் அந்த பாஷையில் பேசி தான் யானை பாகன்கள் அதை கட்டுப்படுத்துவார்கள். அந்த பாஷையில் ஒரு அன்பு இருக்க வேண்டும். அந்த பாஷைக்கு யானைகள் அடிபணியும்.
யானைகளுக்கும் பாகன்களுக்கும் உண்டான ஒரு சங்கேத பாஷை அது .
பொன்னியின் செல்வன் புதினத்தில் கூட ராஜ ராஜ சோழத் தேவர் அந்த பாஷையை தெரிந்து வைத்திருந்தார் என்று அந்தப் புதினத்தில் சொல்லப்பட்டிருக்கும்.
சிவாஜி அவர்கள் ஆரம்ப காலத்தில் இருந்து யானைகளுடன் மிகவும் விருப்பமாக பழகி இருக்கிறார் .
யானைகளுடன் பழக ,நேசத்தை காட்ட ,அதை கட்டுப்படுத்த அதன் பாஷையை தெரிந்து வைத்திருந்தார் என்பது தான் நடிகர் திலகத்தின் இன்னொரு சிறப்பு ..இந்த யானை பாஷையை தெரிந்து வைத்திருந்ததால் தான் சரஸ்வதி சபதம் படத்தில் நடிக்கும் போது யானை ஆனது அவர் பேச்சுக்கு கட்டுப்பட்டது. கருணாநிதிக்கு மாலை போட சொன்ன போது அது பணிந்தது. நடிப்பு தொழிலை மீறி என்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார் இந்த ஆச்சர்ய மனிதர் ! இது போன்ற விஷயங்களை கேட்கும் போது அவர் நடிகர் என்பதைவிட அவர் எவ்வளவு பெரிய ஆச்சரிய மனிதர் என்பதை எண்ணும்போது நாம் ஆச்சரியப்படாமல் இருக்க முடியுமா? கடவுளின் அருளும் ,
ஆசியும் இருந்தால் தான் ஒரு மனிதருக்கு இத்தனை சிறப்புகள் அமையும். அப்படிப்பட்ட ஒரு மாமனிதர் தான் சிவாஜி அவர்கள்.
அவரிடத்தில் இன்னும் எத்தனையோ ?
Attachment 6212
Thanks Senthilvel Sivaraj
ஏறக்குறைய 116 முறை 20 மாதங்களில் நாடகமாக நடத்தி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்து நாடகம் நடிகர் திலகம் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன்.
கெய்ரோவில் எகிப்து படவிழாநடைபெற்ற சமயத்தில் ஒரே நாளில் பதினைந்து அரங்குகளில் திரையிடப்பட்டு 15, 650 அமெரிக்க டாலர்களை வசூலித்த படம் இது .
நாகர்கோவில் பயனியர் பிக்சர்ஸ் பேலஸ் அரங்கில் 100-வது நாள் விழாவின் போது சிவாஜியை காண வருகை தந்த ரசிகர்களிடம் 25 பைசா டிக்கட் 125 பைசாவாக வசூலிக்கப்பட்டது. ஐந்து மடங்கு அதிகமாக வசூலிக்கப்பட்டது. அரங்கம் நிறைந்து வெளியிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிவாஜியை பார்க்காமல் நகர மாட்டோம் என்று அடம்பிடிக்க முடிவில் சிவாஜி அரங்கை விட்டு வெளியே வந்து காரின் மேல் ஏறி நின்று கொண்டு அரை மணி நேரம் உரையாற்றிய பின்னர் சிவாஜி பார்த்த மகிழ்ச்சியில் அவருடைய பேச்சைக் கேட்ட திருப்தியில்ல அனைவரும் கலைந்து சென்றார்கள் .
கேரளாவில் திருவனந்தபுரத்தில் 100 நாட்கள் உள்ள முதல் படமும் இதுதான்.
Attachment 6213
Thanks Senthilvel Sivaraj
சேலம் நகரில் நடிகர் திலகத்தின் முப்பெரும் விழா.
நண்பர்களுக்கு வணக்கம்.
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் மறைந்து 24-ஆண்டுகள் ஆனபோதிலும், தமிழகம் எங்கும் உள்ள சிவாஜி மன்றத்தினர்கள் தங்களால் முடிந்த நலதிட்டங்கள், அன்னதானம் நிகழ்ச்சிகள், பிறந்தநாள் விழாக்கள் செய்து நடிகர் திலகத்தின் புகழ் பரப்பியும், பெருமை சேர்த்தும் வருகிறார்கள். அந்த வகையில் கும்பகோணம் திரு.m.v.சிவாஜிசேகர் அவர்கள் நடத்திய சேலம் முப்பெரும் விழாவின் சில துளிகள்.
01. சேலம் சிவாஜி மன்றத்தினர் மற்றும் கும்பகோணம் திரு.m.v.சிவாஜி சேகர் அவர்கள் இனைந்து நடத்திய முப்பெரும் விழா சிறப்பாக நடந்து நடிகர் திலகத்திற்கு பெருமையும் புகழையும் சேர்த்தது. விழாவை சார்ந்த வரவேற்ப்பு மற்றும் வாழ்த்துக்கள் அடங்கிய வால் போஸ்டர்கள் சேலத்தில் ஒட்டி அழகு படுத்தியிருந்தார்கள் பார்த்து மெய் சிலிர்த்து போனேன்.
02. தமிழகம் மெங்கும் உள்ள நடிகர் திலகம் இளைய திலகம் பிரபு மன்றத்தினர்கள் தங்கள் ஊர் மற்றும் ரசிகர் மன்றத்தின் பெயர்களை பதித்து பிறந்தநாள் வாழ்த்துக்களையும் ரசிகர்களை வரவேற்றும் பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தார்கள் பார்க்க அழகாய் இருந்தது கண்ணை கவர்ந்தது. ஒவ்வொன்றிலும் நடிகர் திலகத்தின் பல வித்தியாசமான படங்களை பதிவிட்டு வைத்திருந்தார்கள்.
03. நடிகர் திலகத்தின் காவல் துறை அதிகாரி கம்பீரமான தோற்றத்தை கட்அவுட் வைத்து அதற்கு பெங்களூரில் இருந்து சிவாஜி மன்றத்தினர்கள் திரு.ரவி அவர்கள் தலைமையில் மாலையிட்டு பூசை செய்தார்கள். அது சமயம் வாணவேடிக்கை தூள் கிளப்பியது. சேலம் அதிர்ந்தது.
04. கட்அவுட்களுக்கு வழக்கமாக பாலாபிஷேகம் செய்வார்கள் . ஆனால் சற்று வித்தியாசமான முறையில் பணத்தை கொண்டு (உணச்சி வசப்பட்டு) இரைத்து அபிஷேகம் செய்தார். அங்கு கூடியிருந்தவர்கள் அதை எடுத்தார்கள். அதை ரசிகர்களை பொறுக்க வைத்து விட்டார் என்று நண்பர்கள் எழுதுகிறார்கள். (பொறுக்குகிறார்கள் என்ற வார்த்தையை தவிர்த்திருக்கலாம்)
05. வெளியூரில் இருந்து வரும் ரசிகர்களுக்கு மதிய உணவும் பறிமாறப்பட்டன. உள்ளூர்வாசிகள் நுழைந்து விடக்கூடாது என்று கருதி டோக்கன் வழங்கப்பட்டது பாராட்டத்தக்கது
06. அரங்கத்தில் உள்ளூர் ரசிகர்கள் இடம்பிடித்து விட்டால் வெளியூரில் இருந்து வரும் ரசிகர்கள் ஏமாற்றம் அடைய கூடாது என்று vip பாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. Vip இடத்தில் எனக்கு இடமில்லையா என்று நண்பர்கள் கோபித்து கொண்டது அங்கங்கே சலசலப்பு ஏற்பாட்டது. பின்னர் அவர்களாகவே சமாதானமாது வரவேற்க தக்கது.
07. திருமண மண்டபம் மூன்று பிரிவாக இருந்ததால் ரசிகர்கள் பார்க்க வசதியாக led தொலைக்காட்சி கள் வைக்கப்பட்டது. இதுவும் பாராட்டதக்கது.
08. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் அணிந்து கொள்ள நடிகர் திலகத்தின் படம் பொருந்திய t சர்ட் வழங்கப்பட்டு ரசிகர்கள் அணிந்து கொண்டு . ஊர்வலத்தில் நடந்து சென்றது மிகவும் அழகாய் இருந்தது. பார்ப்போர் எல்லாம் பிரமித்து போனார்கள்.
09. சரியாக மாலை 3.00- மணிக்கு ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் தொடங்கியது. சென்னை மாம்பலம் திரு.சிவாஜி ரவி அவர்கள் ஏற்பாட்டில் இன்னிசை கச்சேரி இரவு 10.00- மணி வரை நடந்தது.
10. விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு தாம்பூலமாக நடிகர் திலகம் படம் பதித்து அதினுள்ளே எவர் சில்வர் பாக்ஸில் இனிப்பு காரம் வைத்து கொடுத்தார்கள்.
இத்தனை நிறைவான நிகழ்ச்சியில் அங்கொன்றும் இங்கொன்றும் குறைகள் இருக்கத்தான் செய்தது.
எங்களுக்கு சரியான மரியாதை கொடுங்கவில்லை எங்களை வேண்டுமென்றே புறக்கனித்து விட்டார்கள் என்று விமர்சனங்கள் வருகின்றன. நம் வீட்டு சுபகாரியங்களிலும் குறைகள் இருக்கத்தான் செய்யும் உறவினர்களே குறை சொல்லுவது கோபித்து கொள்வது நடக்கிறது. சில காலம் போனால் எல்லாம் சரியாகி போகும்.
நம்ம வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளிலே இப்படி இருக்கும் போது...
தமிழகம்மெங்கும் இருக்கும் சிவாஜி ரசிகர்கள் அதிக அளவில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் குறைகள் இருந்தால் பொறுத்து கொண்டு வழக்கம் போல் நண்பர்களாக நடிகர் திலகத்தின் அன்பு பிள்ளைகளாக இருப்போம்.
நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடத்திய திரு.m.v.சிவாஜி சேகர் அவர்களையும் சேலம் சிவாஜி மன்றத்தினரையும் மனதார பாராட்டுகிறேன்.
வாழ்க சிவாஜி! வளர்க அவர் புகழ்!!
ச.அமரன்.
வேலூர் மாவட்ட சிவாஜி மன்றம்.
Attachment 6214 Attachment 6215
Attachment 6216 Attachment 6217
நன்றி ச.அமரன்.